• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாரிஜாத வாசம் 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
ஹாய் பிரெண்ட்ஸ் 🌺🌺
நிறைய இடைவெளி ஆகி விட்டது. சாரி ஃப்ரெண்ட்ஸ்🌺🌺 அப்படியும் என்னையும் மதித்து கதை படிப்பதற்கு மிகுந்த நன்றிகள்🌹
தொடர்ந்து படித்து உங்கள் ஆதரவைத் தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்😍


12
பூங்குருவி மீது விருப்பம் எப்படி வந்தது? ஏன் வந்தது? என்றெல்லாம் ஆராய அழகிய பெருமாளுக்கு நேரமில்லை. ஆனால் இப்போது அவளை தன் உரிமையாக்கிக் கொள்ளும் நேரமும் இல்லை என்பது மட்டும் அவன் அறிவான்.
அவள் இன்னும் படிப்பை முடிக்கவில்லை. மேலும் அவளுக்கு இருபத்தொரு வயது ஆன பின்புதான் மகளுக்குத் திருமணத்திற்கு பார்ப்பார் குருவியின் அம்மா.
இன்னும் இரண்டு வருடம் ஓட்ட வேண்டும் என்ற நினைவே மருட்டியது அவனை.
இருந்துவிட்டு போகட்டும். அதுவரை அவள் மனதை அறிந்து கொள்ளலாம் என்று நினைத்தான். அல்லது அடாவடியாக ஆக்குபை செய்து கொள்ளலாம் என்ற நல்லெண்ணம் வேறு.
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
நீ கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிட தேவையில்லை வெண்ணிலாவே
இது அவள் சொன்ன பாடமடி வெண்ணிலாவே
அவன் இரவெல்லாம் நிலவைப் பார்த்துப் பாடுவது இதுதான்.
பத்தொன்பது வயது பச்சை மண். இருக்கட்டும் இருக்கட்டும். இன்னும் இரண்டு வருடம் போகட்டும். ஆனால் தனக்கே உரியவள் என்று இருக்கட்டும்.
அதற்கு அவளிடம் ஒரு உறுதியும் வீட்டளவில் ஒரு நிச்சயமும் வேண்டும் அவனுக்கு.
அதற்குத்தான் போராடிக் கொண்டு இருந்தான்.

குருவிக்கு அப்படி பெரிய எண்ணங்கள் அவனிடம் மட்டுமல்ல எவனிடமும் வரவே இல்லை.
உப்புமா சாப்பிட்டோமா? தோட்டத்தை சுற்றினோமா? செல்போனை நோண்டினோமா? தோழிகளுடன் அரட்டை அடித்தோமா? எப்பவாச்சும் பாடம் படித்தோமா? குப்புறப் படுத்துத் தூங்கினோமா? – அவ்வளவுதான் அவள் எண்ணம்.
இவனைப் போல காதல் நினைவுகள் ஏதுமின்றி குஷியாக சுற்றிக் கொண்டு இருந்தவளை எப்படி வழிக்கு கொண்டு வர?

“ அத்த! அத்த! உங்க பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் நடுல எதுக்கு இவவளவு வயசு இடைவெளி?”

லதாவிடம் அன்று ஒரு நாள் அங்கலாய்த்து இருந்தான்.
“ ஏன் மருமகனே?”
“ ம்க்கும்! வாய் அச்சு வெல்லமாய் இருந்து என்னத்துக்கு அத்த? கை கருணைக் கிழங்கா இல்ல இருக்கு உங்களுக்கு? “
“ புரியுற மாதிரி சொல்லுங்கப்பா “
“ என்ன புரியனும்? இல்ல என்ன புரியனும்ன்னு கேக்கிறேன்? புரிய வேண்டியவங்களுக்கே புரியலை “
அவன் கண் குருவியை வெளிப்படையாகப் பார்க்க லதாவுக்கு புரிந்தாலும் அச்சானியமாக பேச பயமாக இருந்தது.
‘ சரி வாய் விட்டு கேட்கட்டும். பார்த்துக் கொள்ளலாம் ‘ என்று தள்ளிப் போட்டார்.
இதோ வாணியின் திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.
வீட்டில் விளையாட ஒரு குழந்தை வரம் வேண்டி குடும்பத்தினர் பொழுது நகர்கிறது.

“ என்னம்மா?” என்று லதா கேட்டால்,

“ இன்னும் கொஞ்ச நாள் கழித்து “ என்ற பதிலுடன் பெரிய மகள் உரையாடலை கத்தரித்து விடுவதால் லதா இந்தப் புலம்பலே வேலையாக வைத்துக் கொண்டார்.
அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. மதியம் இரண்டு மணி. சிக்கன் பிரியாணி தின்றுவிட்டு தாயின் அருகில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள் குருவி.
லதா,
“ இது என்ன கலர் குருவிமா? நேவி புளுவா? கருப்பா?”
நூல் கண்டை காட்டிக் கேட்டார்.
“ ம்ம்? கரும்பச்சை “ குருவி சொல்லவும் ஆரம்பித்து விட்டார்.
“ வர வர இந்த கண்ணு எழவும் தெரியமாட்டேங்குது. வயசு வருதா? போவுதா? உங்க அக்கா ஒரு புள்ளய பெத்து போட்டா கை கால் திறமா இருக்கும் போதே என்னால முடிஞ்ச வரை பிள்ளைப் பேறு பார்த்து அனுப்புவேன். அடுத்து அடுத்தது அவ புருசன் பார்த்துக்க வேண்டியதுதான். நான் பாக்கேனு சொன்னா கேக்கவா போறாங்க. ஏதோ என்னால முடிஞ்ச ஒத்தாசை செய்வேன். சும்மாவே நான் காசு பணம் செலவில்லாமல் பெரியவ கல்யாணத்தை முடிச்சிட்டனு ஊரும் உறவும் அத்தனை பேசுறாங்க. இவ பிள்ளைபேறும் என்னை பாக்க விடுவாளோ என்னவோ “

“ ம்மா. புலம்பாதிங்கமா. எனக்கு கல்யாணம் ஆகட்டும். உடனே பெத்து தர்றேன் “ என்று உளறினாள் குருவி.
“ வாயை மூடு. யார்கிட்ட என்ன பேசணும்னு ஏதாவது தெரியுதா பாரு. இதெல்லாம் எங்க உருப்பட போகுது ?”

“ இதென்னடா வம்பா இருக்குது? நீங்க கவலைப் பட்டத்துக்கு நான் ஆறுதல் சொன்னேன். அது குத்தமா? “ என முறைத்தவல்
“ யார் பெற்ற மகளோ இவள் யார் பெற்ற மகளோ
இந்த ஊர் கும்பிடும் …” அவள் முடிப்பதற்குள்
“ அடிங்க “ என்று வாரியல் கட்டையைத் தூக்கினார் லதா.
“ ஓகே ஓகே. ஒன்னும் சொல்லலை “ சமத்துப் பிள்ளையாக அறைக்குள் செல்லும் சின்ன மகளை ஆசையாகப் பார்த்தார் லதா.

“ வாய்தான் ஒயறதில்ல. மத்தபடி தங்கமான பொண்ணு “
“ கேட்டுச்சு. கேட்டுச்சு “ குருவி திரும்பி வந்து லதா கன்னத்தில் முத்தமிட்டு விட்டு மீண்டும் அறைக்குள் ஓடி விட்டாள்.
ஏதோ கொஞ்சம் படிப்பாளாக இருக்கும். படிக்கட்டும். சந்தோஷமாக நினைத்துக் கொண்டார். விளையாட்டாக படித்தாலும் நல்ல மதிப்பெண்கள் வைத்து இருக்கிறாள்.
“ குருவிமா. நீ படிச்சு முடிச்சிட்டு என்ன வேலைக்கு போகப் போற?”
வரவேற்பறையில் இருந்து ஆர்வமாக மகளிடம் சத்தமாக கேட்டார்.

“ ம்ம்? நான் படிக்கிற லட்சணத்துக்கு கேக்கிரான் மேக்கிரான் கம்பெனிக்கு தான் வேலைக்கு போகணும் “
“ பெரிய கம்பெனியா அது?”
“அந்தக் கம்பெனி துபாய்ல இருக்கு. அப்போ பெரிய கம்பெனி தானே ?”
“ எப்படியோ நீ நல்லா இருந்தா சரிதான். அப்புறம் நம்ம பாரதி இருக்கால்ல? அவ ஏதோ கல்யாண வீட்டுக்கு போகணுமாம். புது பட்டு பிளவுஸ் தைக்க குடுத்தது இருந்தா. இன்னிக்கு வாங்க வர்றேன்னு சொல்லி இருக்கா. இல்லைன்னா ஃபோன் பண்ணுவா. நீ போய் குடுத்துட்டு வந்துருவியா? “ என்றவாறு லதா தன் தையல் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
'ஆமா. இல்லை' என்ற எந்த பதிலையும் அவளிடம் எதிர்பார்க்கவில்லை. அவளும் அதை கண்டு கொள்ளவில்லை. அப்படி கொடுக்க வேண்டும் என்றால் எப்படியும் அவர்தான் போவார். சும்மா சொல்லி வைப்பார். இவளும் கேட்டுக் கொள்வாள்.
அம்மாவும் மகளும் இதை ஒரு காமெடியாக எடுத்துக் கொள்வார்கள்.
விடாமல் வந்த வாட்ஸ்அப் தகவல்களைப் பார்க்க ஆரம்பித்தாள் குருவி.

'படிப்பு? ' – மனசாட்சி கறாராக கேள்வி கேட்டது.
'படிக்கலாம் படிக்கலாம். என்ன மெசேஜ் வந்துருக்குன்னு பார்த்திட்டு படிக்கலாம். ஏதாவது முக்கியமான மெசேஜ் வந்திருக்க போகுது. மிஸ் பண்ணிட்டா அப்புறம் வருத்தப் படுவோம்'

தட்டிக் கேட்ட மனசாட்சியின் முகத்தில் தலையணை வைத்து அமுக்கினாள்.
அவள் எதிர்பார்த்த தகவல் நாளை அரசு விடுமுறை என்பது.
அதற்கு கிஞ்சிற்றும் வாய்ப்பு இல்லை என்று தெரியும். ஆனால் ஆசை விடவில்லை.
அவள் தேடிய தகவல் கிடைக்காததால் அவள் பாட்டுக்கு பாட்டு கேட்கப் போய் விட்டாள்.
' நாளைக்கு லீவுன்னு தெரிஞ்சா நிம்மதியாக படிக்கலாம். அதான் இல்லையே? மெதுவா படிச்சுக்கலாம் '
அவள் லாஜிக்கில் தீயை வைக்க!
ஹெட் செட் எடுத்து மாட்ட நினைத்தவள் வேண்டாம் என்று விட்டு விட்டாள்.
மகள் பாட்டு கேட்டால் கூட சேர்ந்து பாட்டு கேட்கும் அளவு இல்லை என்றாலும் ஒன்றும் சொல்ல மாட்டார் லதா.
பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.



வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இது கால மழை அல்ல காதல் மழை
_


பாடல் அவள் இதயத்தை நனைக்க ஆரம்பித்தது.


ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை
மூன்றாவது ….

.. மொத்தத்தை… ஹே..




பாடலின் இனிமையில் கூடவே பாடியவள் வீட்டில் இருந்த அன்னையை மறந்து விட்டாள்.
ஆனால் அந்த தெய்வமோ தைத்த சட்டையை அவசரமாக கேட்டார்கள் என்று கொடுக்கப் போய்விட்டது.
வீட்டில் வெட்டியாக இருந்த அழகிய பெருமாள் இவள் வீட்டுக்கு வர என்ன காரணம் சொல்லலாம் என்று யோசித்து மண்டை காய்ந்தவன்,
“ பெருமாளு, இதுல பால் கொழுக்கட்டை இருக்கு. குருவிக்கு ரொம்ப பிடிக்குமாம். அந்தப் பக்கம் போனா குடுத்துடுறியா?” என்ற அன்னையின் தயக்க வேண்டுகோள் கேட்டு கண்கள் ஒளிர்ந்தான்.
அவன் கண்களின் பளபளப்பை கோபம் என்று தப்பாக புரிந்து கொண்ட உமா ,
“ உனக்கு பிடிக்கலன்னா விடு. நானே கொண்டு பொய் குடுக்கிறேன். “ சலிப்பாகக் காட்டிக் கொண்டார்.
குளித்து கிளம்பி போக வேண்டும். அதற்குள் ஆறிவிடும். ஹாட் பாக்ஸில் போட்டு கொடுக்கலாம் என அடுத்தடுத்த சிந்தனைக்கு அவர் தாவி விட இதை விட வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா என்ன? பெருமாள் போனால் போகுது என்பதாக 'சரி சரி' என்று ஒத்துக் கொண்டான்.

‘ என்னடா இது? அதிசயமா இருக்கு? இந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய மாட்டானே? சரி நம்ம நடிப்பு அப்படி போல. இத்தனை வருஷம் கழிச்சி இப்பதான் இவன் மனசு மாறுற மாதிரி பேசத் தெரிஞ்சு இருக்கு நமக்கு! அப்பாடா! கொஞ்ச நேரம் உக்காந்து செலிப்ரிடி ஷோ பாக்கலாம். இவன் நியூஸ் சேனல்ல இருந்து தப்பிக்கலாம் ‘ உமா தெளிவாக கணக்கு போட்டார்.
எப்படியும் இவன் கிளம்பி போய் விட்டு வர ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள் நிகழ்ச்சி முடிந்து விடும். 'எப்டியாவது இன்று முழு நிகழ்ச்சியும் பார்த்து விட வேண்டும்' என்ற வைராக்கிய வேண்டுதலில் உமா உருகிக் கொண்டு இருந்தார்.
அவர் முகத்தில் அந்த திருட்டுத்தனம் வெளிப்பட்டாலும் அதை விட திருட்டு வேலைக்கு ஆலாய்ப் பறந்து கொண்டு இருந்தவன் கண்டு கொள்ளவில்லை.

கிளம்பியதும் உமாவிடம் பால் கொழுக்கட்டை பாத்திரத்தை வாங்கியவன், “ சீக்கிரம் வந்துருவேன் “ பொடியைத் தூவிச் செல்ல, உமா விழித்தார்.
அன்னையின் முகம் பார்த்து சிரித்தவன் அவர் கன்னத்தில் பட்டும் படாமல் செல்லமாக தட்டிவிட்டு புன்னகை முகமாக வெளியேறினான்.
“ கண்டுபுடிச்சிட்டான் போலயே? சரி அவன் வர்ற வரை புரோகிராம் பார்ப்போம் “
தனது கடமையை ஆற்றச் சென்றார்.
பால் கொழுக்கட்டை உடன் குருவி வீட்டில் கேட் தாண்டி அவன் நுழைய அவள் குரல் கேட்டது. அவன் கால்கள் அவன் பேச்சைக் கேட்காமல் வீட்டினுள் சென்றது. குரல் வந்த அறையினுள் சென்றது.


நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்
உன்னைக் காணாத நேரம் என்னைக் கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி



ஏதோ வித்தியாசம் உணர்ந்து குருவி படுக்கையில் இருந்து நிமிர்ந்து பார்க்க, அவள் அறைக்குள் வாயிலுக்கு அருகில் இருந்த சுவற்றில் சாய்ந்து அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அழகிய பெருமாள்!
அவள் அதிர்ச்சியில் பாடுவதை நிறுத்தி விட
பாடல் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.


முதல் பெண்தானே நீதானே
எனக்குள் நானே ஏற்ப்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
 




Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
எப்படி தான் குருவிய கூட்டுக்குள் கொண்டு வரப் போறானோ😂😂😂😂

நல்லா இருக்கு சிஸ்டர் அப்டேட் 👍 👍 👍
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
எப்படி தான் குருவிய கூட்டுக்குள் கொண்டு வரப் போறானோ😂😂😂😂

நல்லா இருக்கு சிஸ்டர் அப்டேட் 👍 👍 👍
மிக்க நன்றி சகோ 🌺🌺🌺🌺😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top