• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாரிஜாத வாசம் 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,141
Reaction score
4,644
Location
Coimbatore
சாரி ஃபார் த டிலே ஃப்ரெண்ட்ஸ் 😍( மறுபடியுமா? என்று நீங்கள் திட்டுவது எனக்கு நன்றாகக் கேட்கிறது 😌 .சாரி ஃப்ரெண்ட்ஸ்😍)

இது சின்ன கதை தான். எழுதிட்டு இருக்கேன். சீக்கிரம் முடிச்சிருவேன் ( இப்டி சொல்லி இதுக்கு முன் எழுதிய கதைகளை 24,25 epi ஓட்டி இருக்கேன். பட் இதை சீக்கிரம் முடித்து விடுவேன். Pls support me friends 💐 கதையின் நிறை குறைகளை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்🌺)


4

கடைக்கு முழுத்தேங்காய் குடுமியில் கற்பூரம் காட்டி கடை ஊழியர்கள் அனைவரும் தொட்டு கும்பிட்டு சிதறுகாய் போட்டுவிட்டு புல்லட்டில் ஏறப் போனான் மாலைசந்திரன்.

ஜெயவாணி தன் ஸ்கூட்டியில் கிளம்பிவிட்டாள். இத்தனை நேரம் இருந்தது அவளுக்கு ஓவர் டைம் வேலையில் சேர்த்தி. அவளுடன் இன்னும் சிலரும் உண்டு தான். அந்த தைரியத்தில் தான் அவள் இவ்வளவு நேரம் இருப்பது.

மாலைச்சந்திரனுக்கு அவளைத் தனியே அனுப்ப பிடிக்காதுதான். ஆனால் இவள் சொல் பேச்சு கேட்க மாட்டாள். தன் விசயத்தில் பிறர் தலையிட்டால் பிடிக்காது அவளுக்கு. அவளுக்கு இந்த முறை கொஞ்சம் பணம் அதிகம் தேவை என்று அவள் தோழியிடம் சொன்னதைக் கேட்டு இருந்தான். சும்மா கொடுத்தால் தலைவி வாங்க மாட்டாள். அதுதான் ஓவர் டைம் வேலை போட்டு அதற்கு சம்பளம் தர போகிறான். சம்பளம் மாதக் கடைசியில் தான் போடுவார்கள். அடுத்த மாதம் முதல் தேதி கையில் கொடுத்து விடலாம் என நினைத்து இருந்தான் மாலைச்சந்திரன்.
ஆரம்பத்தில் இவள் இப்படி தனியே இரவு நேரம் ஒ. டி பார்த்துவிட்டு சென்ற போது கடைக்கு கற்பூரம் காட்டுவதை விட்டு விட்டு அதி அவசர வேலைக்கு செல்வதாக கப்சா விட்டு இவள் பின்னால் ஒளிந்து மறைந்து வந்து பார்த்து இருந்தான்.
செம தில்லாக அவள் செல்வதை பார்த்த பின் அவளைப் பற்றிய பயம் இல்லை அவனுக்கு. தவிர காவல் துறையினர் ரோந்து சுற்றி சுற்றி வருவது கூடுதல் நிம்மதி அவனுக்கு.

அவளுடன் ஒ. டி பார்க்கும் அந்த இன்னும் சிலருக்கும் அதற்கான சம்பளம் உண்டுதான். ஆனால் தொகையில் கொஞ்சம் மாறுபாடு உண்டு.

வாணி கூவி கூவி விற்க்கும் வேலையுடன் சம்பளம் போடும் வேலையும் செய்வதால் சம்பளம் கொஞ்சம் அதிகம் கொடுக்கப்பட்டு வருகிறது.

வாணிக்கு சம்பளம் போடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வெண்கலக் கடையில் யானை புகுந்த மாதிரி பேசிக் கொண்டே இருப்பது தான் வேலை. அது மற்றவர்களுக்கு பிடிக்காததாக இல்லாதபடி அவளது குரலும் ஒலிப்புவிதமும் இருக்கும்.

மற்றபடி கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு பணப் பட்டுவாடா மாலைச் சந்திரன் தானே பார்த்துக் கொள்வான்.

ஆனால் அதன் விபரங்கள் ஜெயவாணிக்கு தெரிந்து விடும். அடுத்து அந்தக் கணினியில் கை வைப்பவள் அவள்தான் அல்லவா?

வேலை நாட்களில் எப்போதும் அந்தக் கடையில் மாலை நேரம் டீ காபியுடன் ஏதோ ஒரு பலகாரம் வந்துவிடும். அதில் பஞ்சமெல்லாம் இல்லை. யாருக்கு எத்தனை வேண்டுமானாலும் சாப்பிட்டு கொள்ளலாம். ஆனால் வேலை நேரத்தில் வாடிக்கையாளர் எதிர் இப்படி தனியாகப் போய் சாப்பிடுவது சற்று சிரமமாக உணர்வதால் எல்லோரும் அளவாகவே எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் டீ மட்டும் அவசியம். “ உயிர்த் தண்ணீரே அதுதான் “ என்பது அவர்கள் கொள்கை.

டீ குடிக்க அவரவர்க்கு டம்பளர்கள் உண்டு. குடித்துவிட்டு வைத்தால் டீ கடையில் இருந்தே வந்து எடுத்துக் கொள்வார்கள்.

கடை சாற்றுவதற்குள் பெரும்பாலும் இன்னும் ஒரு தடவை டீ விநியோகம் நடந்து விடும்.

சாப்பாடு வாங்கி கொடுக்க நிர்வாகம் தயார். ஆனால் அதற்கு நேரமோ சூழ்நிலையோ இருக்காது.

முடிந்த அளவு வயிறு வாடாமல் பார்த்துக் கொள்வான் சந்திரன்.

மிகவும் தாமதமாகும் சமயங்களில் டிபன் வாங்கி ஒவ்வொருவராக சாப்பிட்டு வருவார்கள்.

அதில் கடைசியாக சாப்பிடுவது வாணி தான். அவளை கல்லாவில் உட்கார வைத்து விட்டு அவளுக்கும் அடுத்து சாப்பிடுவான் சந்திரன்.

கடை ஊழியர்களுக்கு இது தவறாகத் தெரியாது.

அவளுக்கு அவன் கொடுக்கும் வேலை என்பதுதான் அவர்களின் எண்ணமும் கூட.

அவன் அவளுக்கு கொடுக்கும் உரிமை என்பது முனியப்பன் மட்டும் அறிவார்.


இதோ _ செல் போனில் தங்கையிடம் வந்து கொண்டிருப்பதாக சொல்லிவிட்டு கிளம்பி விட்அறிவார்தன் மனதை கிஞ்சிற்றும் அறியவில்லையா என்பது அவனின் மனத் தாங்கல்.
‘ கூறு கெட்டவ! என்னை கவனிக்கவே மாட்டேங்குறா!’ என்று சந்திரனுக்கு மண்டை காயும்.

பொறுத்து பொறுத்துப் பார்த்துவிட்டு அவள் அம்மாவிடம் பேசி விட்டான்.

அதற்கே பெரும் பாடாக போய் விட்டது அவனுக்கு.

ஆனால் அதன் பிரதிபலிப்பு இன்னும் அவள் முகத்தில் இல்லையே?

விசயம் காயோ? கனியோ? ஆனால் கருகிவிடாமல் இருந்தால் சரி என மனதில் உழன்று கொண்டு இருந்தான்.
ஆனால் இவளோ?

ஜெய வாணியின் வீட்டில் வயதுப் பெண்ணை இத்தனை நேரம் கடையில் வேலை செய்ய அனுமதிக்க லதா முதலில் பயந்து மறுத்தார்.

முனியப்பன் லதாவின் கணவருக்கு நன்கு தெரிந்தவர்.

அதில் தான் சில எதிர்பாராத நிகழ்வுகள். போகட்டும் என்று லதா நினைத்தாலும் மீண்டும் அங்கேயே மகள் வேலை செய்யும்படி ஆனது.
தெரியாத தேவதைக்கு தெரிந்த பேயே மேல் என்றுதான் அவர் அவள் இங்கு வேலைக்கு வரவும் கூடுதல் நேரம் வேலை செய்யவும் சம்மதித்து இருந்தார்
“ சந்த்ரு”
கடையின் ஆரம்ப காலத்தில் இருந்து அங்கு பணி புரியும் முனியப்பன் அழைத்தார்.

“ சொல்லுங்க தாத்தா”
அவர் குரல் கேட்டு நின்றவன் மென்னகையுடன் அவரை ஏறிட்டான்.

“ ஒரு விசயம் உன்கிட்ட சொல்லனும்னு நினைக்கிறேன். ஆனா தள்ளி தள்ளி போவுது”

“ அதான் இப்போ என்னை தள்ளிட்டு வந்துட்டீங்களே? என்ன விசயம்? சொல்லுங்க தாத்தா!”
இப்போதும் முகத்தில் மெல்லிய சிரிப்பை இருந்தது.
“ வந்து.. உங்க அப்பா ஃபோன் செய்திருந்தார்…”

கேட்டுக் கொண்டிருந்த அவன் முகத்தில் இலகுத் தன்மை மறைந்து அலட்சியமும் கூடவே ஏதோ ஒரு வலியும் குடியேறியது.

“ என்னவாம்?” கேட்டுக் கொண்டே வண்டியில் ஏறி விட்டான்.

“ உனக்கு பொண்ணு பாக்க போறாராம்”

“ பாக்கட்டும்”

“ தம்பி!” முனியப்பன் அதிர்ந்தார்.

“ அவரு பார்த்தா எனக்கு கல்யாணம் முடிஞ்சுருமா? அவருக்கும் பொழுது போகணும்ல? போய் நாலு வீடு ஏறி இறங்கி பொண்ணு பாக்கட்டும்”

“ இது விளையாட்டு காரியம் இல்ல தம்பி. நீங்க சாதாரணமா நினைச்ச மாதிரி பொண்ணு வீட்டுக்காரன் நினைக்க மாட்டான். படியேறி பொண்ணு கேட்டியேனு சட்டை காலரை பிடிப்பான்”

“ அது அவரைச் சேர்ந்தது. வேற பொண்ணு பாக்காதீங்கனு படிச்சு படிச்சு சொல்லியாச்சு. மீறி செஞ்சா வாங்கி கட்ட வேண்டியதுதான் “

“ அப்படி இல்ல தம்பி. பொண்ணு பாவம் பொல்லாதது “

“ ஆஹான்!” அவன் குரலில் எதுவும் இருந்ததா?
அலட்சியம்? வேதனை? நக்கல்?

“ எந்த பொண்ணுக்கும் உங்களை கல்யாணம் செஞ்சு வைக்கிறதா சொல்லி ஆசை காட்டி அப்புறம் நீங்க மறுத்து சொல்லிட்டா அது பெரிய சங்கடம் தம்பி “

“ இது உங்க மொல்லாலிக்கு தெரியாதாக்கும்?”
கேட்டுக் கொண்டிருந்தவன் வண்டியில் சாவியைப் போட்டு விட்டான்.
“ அது.. அவர் உங்களை சம்மதிக்க வச்சிடலான்னு நினைச்சு செய்துட்டு இருக்கார் போல “

“ அப்போ என்னை சம்மதிக்க வைக்க முடியாதுன்னு உங்களுக்கு தெரியும்?”

முனியப்பன் அமைதியாக நின்றார். இவன் தான் சொல்வதை முழுமையாக கேட்பானா என்ற சந்தேகத்தை வேறு அவன் வண்டியில் ஏறி அமர்ந்திருந்த பாங்கு உணர்த்த இப்படியே ஓடிப் போய் விடலாமா என்றும் யோசித்தார்.

“ அது முடியாதுன்னு அவருக்கும் தெரியும். சும்மா ஃபிலிம் காட்டிட்டு இருக்கார். அவரால ஆனதை செய்யட்டும். நீங்க ஃப்ரீயா இருங்க “

“ இல்ல தம்பி. நீங்க நினைச்ச பொண்ணையும் கல்யாணம் செய்ய ஒரு ஏற்பாடும் செய்ய மாட்டன்றீங்க. அதான்.. “

“ ஏற்பாடு செய்யாமலாம் இல்லை! “ கொஞ்சம் வெட்கத்துடன் சொன்னான் மாலைச்சந்திரன்.

“ என்ன சொல்றீங்க தம்பி?” ஆனந்த அதிர்ச்சியுடன் வாயைப் பிளந்தார் முனியப்பன்.


“ அட போங்க தாத்தா. சும்மா நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டு! அதுலாம் ஏற்பாடு எல்லாம் நடந்துட்டு தான் இருக்கு. “
மெல்லிய கீற்றாக சிரிப்பு ஓடியது அவன் உதட்டில்.

“ அப்போ அப்பாகிட்ட என்ன சொல்றது தம்பி?”
பெரியவர் சந்தோஷமாகக் கேட்டார்.
“ ஒன்னும் சொல்ல வேண்டாம் தாத்தா. என்கிட்ட சொன்னதை மட்டும் சொல்லுங்க போதும். நான் புரிஞ்சுக்கிட்டேன்னு அப்பா புரிஞ்சுக்குவார்.”

“ என்ன கண்ணாமூச்சி தம்பி இது?”
முனியப்பன் ஆயாசமாக கேட்க _
அவன் புன்னகைத்தவாறே கிளம்பிவிட்டான்.

போகும் முன்னர் அவன் கண்கள் வாணியின் ஸ்கூட்டி நின்று இருந்த இடத்தையும் கிளம்பிச் சென்ற வழியையும் ஏக்கமாகப் பார்த்தன.

'அப்பா என் கல்யாண விசயம் என்னாச்சுனு என்னை அவசரப் படுத்துறாராம்’
மனதுக்குள் சடைந்து கொண்டு வண்டியை ஓட்டினான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டு இருந்த முனியப்பன் மூச்சை இழுத்து விட்டார்.

அப்போது சரியாக அவரின் செல்ஃபோன் இசைத்தது.

மாலைசந்திரன் அப்பா பூர்ணசந்திரன் தான் பேசினார்.

“ ஹலோ”

“ஹலோ”

“ இப்ப என்ன டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்லயா வேலை பாக்குறம் ரெண்டு பேரும்? என்ன விசயம்? அதை சொல்லுங்க சின்னையா முதல்ல”

முனியப்பன் தாத்தாவை தந்தைக்குச் சமமாக மரியாதை கொடுத்து சின்னையா என அழைப்பது பூர்ணசந்திரன் வழக்கம்.

“ நல்லா இருக்கீங்களா தம்பி? “

“ அதுக்கென்ன குறை? நல்லாத்தான் இருக்கேன்”

“ ராஜிமா நல்லா இருக்குதுதா தம்பி?”

ராஜி – பூர்ணசந்திரனின் மனைவி_ மாலைச் சந்திரனின் தாயார்.

“ எல்லாரும் நல்லா இருக்கறம். அந்த குசலம் விசாரிக்கிற பேச்சை விட்டுட்டு அடுத்ததுக்கு வாங்க”

பூர்ணச் சந்திரன் சொன்னதும் பட்டென விடயத்துக்கு வந்தார் முனியப்பன்.


“நானும் நீங்க சொன்னதை சொன்னேன் பூர்ணம்”

“ என்னவாம்?”

“ என்கிட்ட சொல்லிட்டேன்னு அப்பாகிட்ட சொல்லிடுங்கனு சொல்லிடுச்சு சந்த்ரு தம்பி”

“ இவரு பெரிய சுவரு! இப்படி இப்படி சொடக்கு போடுறதுக்குள்ள காரியம் சாதிச்சிக்குவாராமா ? இப்படி வெறும் வாயா மூனு நாலு வருஷமா பேசிக்கிட்டு திரியுறான். “

நெடுமூச்சு விட்டார் பூர்ணம்.

“ எல்லாம் சரியா வரும் பூர்ணம்”

“ வந்தா சரிதான்”


“ இவனுக்காக நானே அந்தப் பொண்ணை கேட்கலாமான்னு யோசிக்கிறேன்”

“ இல்ல பூர்ணம். ஏதோ சிக்கல் இருக்கும் போல. அதான் தான் பார்த்து முடிவானதுக்கு அப்புறம் உங்களை வரச் சொல்லுது சந்த்ரு தம்பி. நீங்க அதுக்குள்ள அவசரப்படுறது பிள்ளைக்கு பிடிக்கலை”

“ அவன் இஷ்டம் போல கல்யாணம் பண்ணிக்கனு சொல்லியாச்சு. நானே வந்து பொண்ணு கேட்கிறேன்னும் சொல்லியாச்சு. வேற எந்த பிரச்சனைனாலும் சொல்லுன்னு சொல்லியாச்சு. பின்னும் எத்தனை நாள் இப்படி ஓட்டுவான்?

அதான் வேற பொண்ணு பார்க்கிறேன்ன்னு பிட்டை போட்டு பார்த்தேன். அதை பொட்டுன்னு போட்டு ஒடைச்சிட்டு போய்கிட்டு இருக்கான். அப்போ எனக்கு என்ன மரியாதை?”

“ பூர்ணம் நீங்க வேற குட்டய குழப்பாதீங்க. அந்த பொண்ணை கட்டிக்க ஏதோ ஏற்பாடுலாம் செய்திட்டுதான் இருக்காராம் தம்பி”

,” ஓ! கல்யாணத்துக்காச்சும் கூப்பிடுவானாமா?”

“ அந்த தம்பி கூப்பிடலைனா நீங்க வராம விட்ருவீங்களா?”
நமுட்டாக சிரித்தார் முனியப்பன்.

“ மொதல்ல அவன் கூப்பிடாம இருந்துதான் பாக்கட்டுமே?” மீசையை முறுக்கியவர் _

“ இவன் இப்படி வந்து நிப்பான்னு தெரிஞ்சிருந்தா நான் அப்படி விட்டிருக்க மாட்டேன் தான் “ என்றார்.

“ உங்களுக்கு இதுல வருத்தம் தான். இல்லிங்களா?” குரலில் சங்கடத்துடன் கேட்டார் முனியப்பன்.

“ எனக்கு வேற என்ன வருத்தம் இருக்கப் போவுது? உங்களுக்கு தெரியாததா சின்னையா?”

பெருமூச்சு விட்டார் பூர்ணசந்திரன்.

“ சரி சின்னையா. நான் வைக்கிறேன். நாம அப்புறம் பேசலாம் “ என்று போனை வைத்து விட்டார் அவர்.

முனியப்பன் கடந்த கால நினைவுகளை மனதுக்குள் மெல்ல அசை போட்டவர் அங்கிருந்து கிளம்பினார்.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
Ava kaathula than innum visayathai sollavey illaiye🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Reaction illainu feel panravan revit vaangama irunthaa sari🙄🙄🙄

Nalla irukku sister update 👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top