• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாரிஜாத வாசம் 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,141
Reaction score
4,644
Location
Coimbatore
ஹாய் பிரெண்ட்ஸ் 😊😍
கதை எப்படி போகுது ? நிறை குறைகளை சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்😍🌺


7
“ நீ உன் சவுகரியத்துக்கு மறந்ததை எல்லாம் இப்போ நினைவுபடுத்தி பாரு வாணிமா. கூடவே இதுவும்..” என்று தன் பக்கத்தை சொல்ல ஆரம்பிக்க தடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் வாணி.
நான்கு வருடங்கள் முன்பான இவர்களின் காதல் கண்ணாமூச்சி அவள் கண் முன் விரிந்தது.
அன்று அவள் இவனை முறைத்துச் சென்றுவிட,அதுவரை இருந்த இளமையின் ஈர்ப்பு குறைந்துவிட உரிமையுடன் அவனை முறைத்த அவளை வேறு என்னன்னவோ உணர்ந்தவனாகப் பார்த்துக் கொண்டே நின்றான் உதய்.
அதன் பிறகு தினமும் அவள் வீடு இருக்கும் பகுதிக்கு வரவில்லை என்றாலும் அடிக்கடி வந்தான். அதன் பிறகு திடீரென சிலநாள் காணாமல் போனான்.

வாணி கொஞ்சம் தேடினாள் தான். ஆனால் அவள் குடும்ப சூழ்நிலை அவளை அது போன்ற எண்ணங்கள் இல்லாதவள் மாதிரி மாற்றி விட அவள் தன் பாட்டில் தனது வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்.

அப்போதுதான் திடீரென ஒரு நாள் இவர்கள் பகுதி பேருந்து நிறுத்தம் அருகே மூடி இருந்த கடை ஒன்று திறக்கப்பட்டது.


அன்று வாணி சற்று முன்னதாக கிளம்பி இருந்தாள்.

அவள் நிதானமாக பராக்கு பார்த்துக் கொண்டே நடந்து வந்து பார்த்தால், பேருந்து நிறுத்தம் வழக்கத்துக்கு மாறாக சற்று பொலிவுடன் காணப்பட்டது. முதல் இரண்டு நாட்கள் அவளும் விடுப்பில் இருந்து இருந்தாள். அதனால் சட்டென அந்த மாற்றம் புரிபடவில்லை.

அதன்பிறகு தான் புதிதாக திறந்திருந்த அந்தக் கடையைக் கவனித்தாள். உள்ளே ஒருவரும் இல்லை. ஆனால் அது ஒரு எலக்ட்ரிக் பொருட்கள் விற்க்கும் கடை முக்கியமாக பல்ப் விற்க்கும் கடை என்பதுவரைப் புரிந்தது.
‘ இவ்ளோ நாள் கழிச்சு யாரு இந்தக் கடைக்கு வந்திருக்காங்க ?’ என்ற ஆவலில் வாணி அந்தக் கடையை நின்ற இடத்தில் இருந்து மெதுவாக எட்டிப் பார்த்தாள்.

அந்த சமயம் கடையின் உள்ளிருந்து உதயமானான் உதய்.

அவள் கொஞ்சம் திடுக்கிட்டாள். ஆனால் பெரிதாக ஒன்றும் அதிர்ந்து விடவில்லை.


இவளை எதிர்பார்த்து காத்திருந்த அவன் விழிகள் மின்னி ஒளிர்ந்தது. முகம் பூவாக மலர்ந்தது.

வாணி அவற்றை எல்லாம் கவனிக்கவில்லை. கடைக்கு உரிமையாளர் வந்ததும் இன்னும் இப்படி 'பே'வெனப் பார்ப்பது கேவலமாக இருக்கும் என உணர்ந்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவள் முகம் திருப்பியது கண்டு உதய் வாடிப் போனான். உடனே சமாளித்துக் கொண்டான். இன்னும் அவளிடம் ஒன்றும் சொல்லி இருக்கவில்லை, அதற்குள் அவள் முகத் திருப்பலுக்கு சோர்ந்து போகலாமா?

விரைவில் அவளை அவனை மட்டுமே நினைக்க வைப்பான்! அப்போது இந்த நிகழ்ச்சியை அவளிடம் சொல்லி மகிழ வேண்டும் என சிரித்துக் கொண்டான்.


அவள் வீடு எங்கே என அறிந்து கொண்டவன் முன்னர் இருந்த கடையை இங்கே மாற்றி இருந்தான். அந்த வேலைகளுக்குத்தான் அவன் இத்தனை நாள் இங்கே வராதது.

ஊடே யாரும் புகுந்து அவன் பைங்கிளியை கவர்ந்து விடுவார்களோ எனும் பயத்தில் இங்கிருந்த பஞ்சர் கடைக்காரர் மூர்த்தியின் செல்ஃபோன் எண் வாங்கி வைத்து அவரிடம் கடலை போட்டான். பேச்சுவாக்கில் சில விசயங்களை போட்டு வாங்கி நிம்மதி அடைவான்.

ஒருவழியாக அவன் தென்றல் வரும் தெருவுக்கு வந்துவிட்டான்.
இனி?

வேறு என்ன? அவளை அவன் வட்டத்துக்குள் சிக்கவைத்து அவளிடம் அடைக்கலமாக வேண்டும்.

அம்மா அப்பா தங்கை ஆகிய மூவரும் இவனுக்கு முழு ஆதரவு. இப்போதும் இந்தப் புதிய கடை போடுவதற்கு அலைச்சல் பண விரயம் நேர விரையம் வாடிக்கையாளர் விரயம் இருந்த போதும் ஒன்றும் சொல்லவில்லை. நிச்சயம் இதில் ஏதோ ஒருமுக்கிய காரணம் இருக்கும் என விட்டு விட்டார்கள். ஆனால் தொழில் பின்தங்கி விடக் கூடாது என்பதை மட்டும் கொஞ்சம் வலியுறுத்தி இருந்தார்கள் அவன் பெற்றோர். அவன் அப்பா பந்தல் அலங்கார வேலை செய்கிறார். அம்மா வெளி வேலைக்குப் போவதில்லை. தங்கை பவித்ரா கல்லூரியில் படிக்கிறாள். பவித்ராவை அவனுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தையில் அத்தனை அழகாக இருப்பாள். அந்தப் புகைப்படம் அவளைத் தத்தெடுத்த ஆசிரமத்தில் கொடுத்து இருந்தார்கள். அவளை நினைத்தால் எப்போதும் அவனுக்கு அவளது சிரித்த முகம்தான் நினைவுக்கு வரும். அதில் கொஞ்சம் வலியும் இருக்கும்.
பவித்ராவைப் பார்த்தால் வாணி என்ன சொல்லுவாள்?
அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது இவனை ஏறுக் கொண்டாள் போதும். முடிவு செய்தவன் தொடர் முயற்சியால் வாணியின் கண்களில் விரைவிலேயே அவனுக்கான தேடலைத் கொண்டு வந்து விட்டான்.
ஆனால் அதற்கு மேல் அவளை அசைக்க முடியவே இல்லை.
அந்த நேரத்தில்தான் அவள் அப்பா இயற்கை எய்தினார்.
இவர்களின் குடும்பத்திற்கு உதவ ரொம்பவே ஆசைதான் அவனுக்கு. ஆனால் எந்த உரிமையில் செய்வது? அதையும் யாரும் தவறாகப் பேசிவிட்டார் என்ன செய்வது என்ற குழப்பம் வேறு. அவனுக்கு அதைப் பற்றி ஒன்றும் இல்லை. ஆனால் அவள் அப்பா வாதன் மாமனாரையே வந்து பார் என்று சொன்ன மானஸ்தனாமே?
இருந்தும் அவள் சென்டரில் பேசி அவளுக்கு ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டான். இவள் தங்கை அரசுப் பள்ளியில் படிப்பதால் பள்ளி மூலம் பஸ் பாஸ் ஏற்பாடு செய்து கொடுத்தான். இதற்கே ஒருவருக்கும் சந்தேகம் வராமல் செய்ய அத்தனை சிரமமாக போய்விட்டது.
அவள் அப்பா விசயமாக ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து கொண்டான். அவருக்கு சிகிச்சை செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர் தன் மாமனார் பணத்தை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவரது முடிவு மிக அருகில் இருப்பதை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டான்.

அந்த கால கட்டத்தில் எப்படி போய் பெண் கேட்பது? என்ற தயக்கத்தில் விழி பிதுங்கி நின்றான்.
அதற்கு ஒரு முடிவாகத்தானோ என்னவோ வாணியின் அப்பா தன் வாழ்நாளை முடித்துக் கொண்டார்.
இதற்கு மேலும் தாமதிக்க முடியாமல் ஏதோ பொருள் வாங்க சாலையோரக் கடைகளுக்கு வந்த வாணியிடம் சொல்லி விட்டான்.
அவள் வலது கையைப் பிடித்துத் துடிக்கும் தன் இதயப் பகுதில் வைத்து மெல்ல அழுத்தியவன்,
“ வாணிமா. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் தங்கம். நம்ம ரெண்டு பேர் சேர்ந்து இருக்கலாம் “ எனக் கேட்டு முடித்தான்.
தனக்கான பதில் உடனே கிடைக்கும் என்று அவனே முதலில் நம்பவில்லைதான்.
அவள் சம்மதம் சொல்லிவிட்டால் பெற்றோருடன் அவள் வீட்டில் போய் பேசுவதாக இருந்தான்.
அவளோ வீட்டில் முதலில் கூறியவள், வேண்டாம் என்ற முடிவையும் எடுத்து வந்து அவனிடம் சொல்லிச் சென்றாள், கூடை நெருப்பை இவன் தலையில் தள்ளிச் சென்றாள்.

அதற்கு மேலும் அவளைச் சுற்றிவர அவன் குடும்ப சூழல் தடுக்க மனதைப் பூட்டிக் கொண்டு எழுந்த நெஞ்சுவலியை விழுங்கிக் கொண்டான்.
“ நீ என் பொண்டாட்டி. நீ மட்டும் தான் என் பொண்டாட்டி. இப்போ என்னால உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் அவ்ளோ செல்பிஷ் இல்ல. ஆனா என் மனசெல்லாம் நீ ரணமா இருப்பே. கண்டிப்பா திரும்பி வருவேன்னு சொல்ல முடியாது.“
என்ன அர்த்தம் அதற்கு என்று புரியாமல் இத்தனை காலத்தை ஓட்டி விட்டாள். கல்யாணம் காட்சி என்ற நினைப்பே அவளுக்கு வரவில்லை.
இப்படியே இருக்கும் நாட்களைக் கழித்து விடலாம் என நினைத்துக் கொண்டு இருக்கும் போதோ?
வாணியிடம் அவள் கண்களை நேருக்கு நேர் ஆழ்ந்து பார்த்துக் கேட்டான் உதய்,
“ இப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? “
இப்போதும் அவள் கைகளை எடுத்துத் தன் நெஞ்சக்கூட்டின் மீது வைத்துப் பிடித்து இருந்தான்!

ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள் தான். பின்பு சட்டென சுதாரித்து வண்டியை எடுத்தவள் நேரே தன் வீட்டுக்கு வந்துதான் நிறுத்தி இருந்தாள். ‘ இந்த ரோந்து படை ஏன் நம்மளைக் கண்டுக்கல? இவனைப் பார்த்தா அம்புட்டு நல்லவனாவாத் தெரியுது? கலி முத்திடுச்சுடா, கலி முத்திடுச்சு ‘
முனகிக் கொண்டே வீட்டினுள் நுழைந்த பெரிய மகளை இன்முகத்துடன் வரவேற்ற லதா கையில் சர்க்கரைப் பொங்கலை வைத்துக் கொண்டு அவள் பின்னாலேயே சுற்றினார்.
அதைக் கண்டும் காணாமல் ரெஸ்ட் ரூமினுள் நுழைந்து கொண்டாள் வாணி.

“ இனிப்பை ஒதுக்கி வச்சா எர்நிங்க்ஸ் கம்மி ஆகுமாம். குடுங்கம்மா. நானே சாபிடுறேன் “ நல்ல பிள்ளை நவின்றது.
“ தின்னுத் தொலை. நான் என்ன சொன்னேன் உன்கிட்ட? அவ வந்ததும் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்க சொன்னேன் தானே? “ என்று முறுக்கிக் கொண்டவர் கையில் இருந்த இனிப்பை குருவியின் கையில் தினித்துவிட்டு ஒரு ஓரமாக சோபாவில் அமர்ந்தார் லதா. முகத்தில் ஏதோ ஒரு இயலாமை தெரிய குருவிக்கு நிஜமாகவே சங்கடமாகப் போனது.

“ஒரு மனுஷி வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தா ரெஸ்ட் ரூம் கூடப் போக விடாமத் தடுக்கிறது எந்த விதத்துலங்க நியாயம்ங்க மச்சான்? அக்கா வரட்டும். நான் பேசுற பேச்சில் அடுத்த முகூர்த்தத்தில் எப்படிகல்யாணம் செய்துக்க போறான்னு மட்டும் பாரு “

உள்ளே அடைத்த கதவின் பின் சாய்ந்து நின்று உதய் பிடித்து வைத்த, அவன் நெஞ்சத் துடிப்பை மீண்டும் கேட்ட தன் கைகளை முகத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள் வாணி.
நான்கு வருடங்கள் எங்கே போனான்? ஏன் வந்தான்? எந்த நம்பிக்கையில் மறுபடியும் கேட்டான்?
அவ்வளவு தூரம் அவளைத் தெரியுமா அவனுக்கு? எப்படி? மீண்டும் எப்போது, எப்படி பார்ப்பது? பதட்டத்தில் ஓடி வந்து விட்டாளே? மறுபடியும் மாயமாகி விடுவானோ?
முகத்தில் இருந்த கரங்களை இதயத்துக்கு கொண்டு வந்தாள். ஏனோ இனி தங்கள் இருவரையும் பிரிக்க முடியாது என்று தோன்றியது.
எப்படி அவன் மீது இத்தனைப் பிடித்தம் வந்தது?
அவளைச் சுற்றி சுற்றி வந்து அவள் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்து விட்டானோ?
அப்போது அவள் சின்னஞ்சிறு பெண்தான். ஆனால் அவன் கண் சொன்ன செய்தியில் இருந்த உண்மை புரியாமல் இல்லை. இது சரியா? என்ற பயம் இருந்தது. பின்பு அது முடிந்ததும் போனது.
அப்படித்தான் அவள் நினைத்தாள். எங்கிருந்தோ மீண்டும் வந்து விட்டானே?
“ அக்கா” கதவுக்குப் பின் இருந்து வந்த குருவியின் குரலில் நிதானத்துக்கு வந்தாள் வாணி.

விரைந்து தயாராகி வெளியில் வர தாய் மற்றும் தங்கையின் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏன் எனப் புரியாமல் பார்த்தாள். வீட்டுக்குள் நுழைந்த போது இவர்களை அவள் கவனிக்கவே இல்லை அல்லவா?
“ என்னம்மா?” தலை முடியைப் பிரித்துக் கொண்டையிட்டுக் கொண்டே கேட்டாள் வாணி.
அவள் கொண்டையிட்டு முடிக்கும் வரை பொறுத்தவர் குருவியிடம் ஆரம்பிக்குமாறு கண் காட்டினார்.
குருவிக்கு ‘ ஸ்டார்ட் மியூசிக் ‘ நினைவு வர உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கினாள்.
“ அக்கா.. வந்து… உன் கல்யா…”
‘ என்ன! ‘ என்பதாக வாணி உறுத்து விழிக்க, லதா பிடித்துக் கொண்டார்.

“ சும்மா முறைக்காதே வாணி. பொண்ணு புள்ளையைப் பெத்தா நாலு பேர் பொண்ணு கேட்டு வரத்தான் செய்வாங்க. இப்போ ஒரு நல்ல இடத்தில இருந்து உன்னை பொண்ணு கேட்கிறாங்க. நீ என்ன சொல்ற? உனக்கு அப்புறம் உன் தங்கச்சிக்கு பாக்கணும். ஆம்பிளை பிள்ளை இல்லாத வீடு. எடுத்து செய்ற மாதிரி மூத்த மருமகன் வேணும்னு நான் நினைக்கத்தான் செய்வேன். இப்போ வந்து இருக்கற சம்பந்தம் அப்படி ஒரு நல்ல இடம். வேற யாரும் இல்லை. உங்க கடை ஓனர் தான். மாலைச்சந்திரன் தம்பிக்கு தான் உன்னைக் கேக்குறாங்க. அவங்க அப்பா கொஞ்சம் சுணங்குத மாதிரி தான் இருக்கு. ஆனா கல்யாணம் நடந்தா சரி ஆகிடுவாரு. “ அவர் பேசிக் கொண்டே போக வாணி சிலையானாள்.
“ அவருக்கா?” என்ற குருவியை முறைத்தத் தாய் வாணியின் சிந்தையில் பதியவே இல்லை.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,610
Age
38
Location
Tirunelveli
நல்லா போகுது சிஸ்டர் 👍👍👍👍

Vaanikku Morning than ishtam nu theriyuthu🙄🙄🙄
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top