• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாரிஜாத வாசம் 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,124
Reaction score
4,621
Location
Coimbatore
8

தன் கழுத்தில் இருந்த தங்கத் தாலிக் கொடியை ஆசையோடு தடவிப் பார்த்தாள் வாணி.
பல போராட்டங்களுக்குப் பின், அவள் கழுத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் ஏறிய தாலி. போராட்டம் அவள் அம்மாவிடம் மட்டும் அல்ல. இதோ இந்த தாலி கட்டிய மகரசனிடம் கூடத்தான். அதுவும் தாலி கட்டத்தான்.
அன்று ஸ்கூட்டியில் இருந்து விழப் போனவளைக் காப்பாற்றியவன் மறுநாள் மதியம் வந்து நின்று விட்டான் இவள் வேலை செய்யும் பெயிண்ட் கம்பனிக்கு.
முதல் நாள் கல்யாணப் பேச்சை ‘ தலை வலிக்குது ‘ எனத் தவிர்த்திருக்க ‘ இனி என்ன சொல்வது ? ‘ என்ற யோசனையில் இருந்தாள் அப்போது.
கடைக்கு வந்தவன் இவளிடம் நேரே போய் பேச மாலைச் சந்திரன் கவனித்து விட்டான்.
என்னவென விபரம் கேட்டவன் அதிர்ந்து போனது சில கணங்களே. அதன் பிறகு இந்தத் திருமணத்திற்கு முழு உதவியாய் இருந்தவர்களில் அவனும் ஒருவன்.
வாணி மீண்டும் உதய் பற்றி சொன்ன போது அதிர்ந்த லதா “ இல்லை உன்னை மாலைச்சந்திரன் தம்பி கல்யாணத்துக்கு கேட்டு வந்தாரே? “ என சொல்லி மாய்ந்தார்.
“ உளறாதிங்க அம்மா. அவர் எங்க ஓனர். அவ்ளோ தான் மரியாதை. சும்மா 'புளு புளு ‘ங்காதிங்க. “ என்றவள் மூச்சை இழுத்துக் விட்டாள்.
“ என் கல்யாணத்தைப் பத்தி நானே பேச வேண்டி வரும்னு நினைக்கலை. ஆனா எனக்கு என் உதயைத் தவிர வேற ஒரு லைஃப் இல்லை. அது முடியாதுன்னு சொன்னா எனக்கு கல்யாணம் வேண்டாம் “
மகளின் உறுதியில் லதா திகைத்தால், பூங்குருவி ஆச்சரியப்பட்டாள். ‘ இந்த அக்காகுள்ள இப்டி ஒரு லவ்வாங்கியா?’
குருவியையும் வைத்துக் கொண்டு இந்த காதல் கண்றாவி எல்லாம் பேச அசூயையாகத்தான் இருந்தது. அதற்குப் பார்த்தால் பெரியவள் வாழ்வு என்னாவது? சில வருடங்களுக்கு முன் வந்து பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து விட்டு ஓடிப் போனவன் மீண்டும் வந்து குட்டையை ஏன் குழப்ப வேண்டும்?
ஆனால் உதய் அதன் பிறகு நேரே வந்து பேசினான்.
தங்கை பவித்ராவுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக நான்கு வருடங்கள் முன் இது குறித்துத் தொடர்ந்து பேச முடியவில்லை என்றான். அப்போது தான் அவன் பெற்றோரும் ஒரு விபத்தில் தவறி இருக்க, அதோடு தொடர்ந்து தங்கையும் பாதிக்கப் பட அவனால் வேறு யோசிக்க முடியவில்லை என்பதைச் சொன்னவன் தங்கைக்கு என்ன என்று சொல்லவில்லை.
லதா கேட்க வேண்டும் என கேட்டு வைத்தார்.
“ பாப்பாவுக்கு என்ன?”
கசப்பாகப் புன்னகைத்தான் உதய்.
அவள் தத்துக் குழந்தை என்பதையே ஏற்க மாட்டார்களோ எனத் தவித்தான். தங்கை மீது அத்தனைப் பிரியம் அவனுக்கு. அவளை யாரும் மனம் நோக சொல்லி விடக் கூடாது என மிகவும் பயந்தான்.
ஆனால் அதை விடப் பெரும் வேதனையை அவள் சந்திக்க நேரும் என அறிந்திருக்கவில்லை.
யார் குற்றம் என்று தெரியவில்லை_ தெரிந்தாலும் புண்ணியமில்லை _ கேஸ் சிலிண்டர் வெடித்து அவள் தீ நாக்கால் சூழப்பட்டாள்.
கேஸ் குறைவாக இருந்தது, உடனே சிகிச்சை அளித்தது என்று சில காரணங்களால் அவள் உயிர் பிழைத்து விட்டாள். ஆனால் இந்த நான்கு வருடங்கள் அதற்கானப் போராட்டம் எழுத்தில் வடிக்க முடியாது. பெண் துணை இன்றி வயதுப் பெண்ணை இந்த இக்கட்டில் பராமரிக்க படாதபாடு பட்டுப் போனான்.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பிலாஸ்டிக் சர்ஜெரி செய்து இயல்பு நிலைக்கு மீண்டு விட்டாள். ஆரம்பத்தில் அவளைத் தவிர வேறு நினைப்பதே பாவம் என்று இருந்தான்.
பவித்ரா தற்சமயம் தொலை தூர கல்வி மூலம் இளங்கலை வரலாறு படித்து வருகிறாள்.
இவனுக்கு கருணை அடிப்படையில் அரசுத் துறையில் இளநிலை உதவியாளர் உத்தியோகம் கிடைத்து இருக்கிறது.
முதலில் தங்கையின் மருத்துவ காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவன் அதன் பிறகு வேலைக்காக குடி மாற வேண்டி இருந்தது.
தங்கைக்குக் கொஞ்சம் குணமானதும் வாணியைத் துழாவி விட்டான்.
மாலைச்சந்திரன் மன ஓட்டத்தையும் அறிந்தவன் இதற்கு மேல் தள்ளிப் போடமுடியாது என்று வந்து விட்டான்.
மாலைச் சந்திரன் வாணியை மணக்கக் கேட்க முதல் காரணம் பிராயச்சித்தமாக நினைத்துதான்.
அவள் அப்பா கிடையில் கிடந்த போது உதவாமல் போன குற்ற உணர்ச்சி.
அதற்காக கல்யாணம் தான் செய்ய வேண்டுமா என்றால் அதற்கு அவனிடம் பதில் இல்லை. அவன் அடி மனதில் ஆசை இருந்து இருக்குமோ?
எப்போதும் எல்லோராலும் எல்லாமும் செய்ய முடியாது அல்லவா? காரணங்கள் சொல்லி மழுப்புவதை விட அந்த சமயம் செய்ய முடியவில்லை என்பது பின்னாளில் உறுத்துவதைத் தவிர்க்க முடியாது தான். அதற்காக அவளுக்கான வாழ்க்கையை குழப்ப முயலவில்லை யாரும்.
இதோ! உதய் கட்டிய தாலியுடன் அவன் வீட்டின் மகாராணியார் வாணி உப்பரிகையில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கிறாள்.
என்ன ஒன்று? திருமணத்திற்கு வீட்டினர் சம்மதித்த பிறகு திடீரென்று உதய் திருமணத்தை நிறுத்தி விடுவோம் என்றான்.
அவனை அகழ்ந்து விபரம் அறிந்தவள் தன் பிடியில் நின்றாள்.
இயற்கையோ இறைவனோ இதனைத் தீர்க்க மாட்டார்களா?
வாணியின் சிந்தனையைக் கலைத்தது தொலைபேசி. குருவி தான் கூவி இருக்கிறாள்.
“ சொல்லுடி”
“ ஏன்? இந்த ஹலோ லாம் சொல்லி பழகுறது இல்லையா “ குருவி குதித்தால்.
“ ஏன் நீ சொல்லிப் பழகறது தானே? “
“ இன்னக்கா? துளிர் விட்டுப் போச்சு போல? “
குரலில் வில்லத்தனத்தை கொண்டு வந்தாள் குருவி.
“ அது துளிர் இல்லடி, குளிர். குளிர் விட்டுப் போச்சான்னு கேக்கணும். எங்கே? கேளு பாப்போம்! இன்னக்கா குளிர் விட்டுப் போச்சு போல? “ என்று ஓட்ட குருவிக்கு வெட்கத்திலும் கோபத்திலும் மூக்கு நுனி சிவந்தது.
“ சரி சரி. என்னை டேமேஜ் பண்ணது போதும். உன் கல்யாணத்துக்கு அந்த அழகிய பெருமாள் வந்து இருந்தான்ல? அவன் பேச்சு ஒன்னும் சரி இல்லக்கா “
குருவி சொல்லவும் வாணி பதறிப் போனாள்.
“ என்னடீ சொல்ற? என்னாச்சு?”
அக்காவின் புலம்பல் கொஞ்சம் அதிகமோ எனத். தோன்றினாலும் ‘ அவன் கொஞ்சம் அதிகம் தானே? அதற்கு இந்த பதற்றம் 'ஒர்த் ' தான் என விட்டு விட்டாள்.

“ என்ன என்னாச்சு? என்னை என்ன செஞ்சாலும் கேட்க ஆள் இல்லனு நினைச்சுகிட்டானா அந்த ஆளு? “ குருவி ஆவேசமாகப் பேசப் பேச வாணியின் பதற்றம் கூடியது.
“ என்னாச்சுனு சொல்லித் தொலைடி எருமை!”
“ பாத்தியா? நீயும் என்னைத்தான் திட்ற “
“ முதல்ல விசயத்தை சொல்லு “ பொறுமை இழந்து அழுத்திக் கேட்டாள் வாணி.
“ அக்கா நீயே சொல்லு சந்த்ரு சார்க்கு அப்புறம் இவன் தன் நம்ம வீட்டு கல்யாணத்துல இழுத்து போட்டு வேலை செய்தது? அந்த நன்றில நான் கூட வாங்க போங்கன்னு மரியாதையா இவனை கூப்பிட்டுட்டு இருந்தேன் தானே? “
“ ஆமா, அதுக்கு என்னவாம்?”
“ உன் கல்யாணத்துல தலையணை போர்வை மச்சான் தான் எடுத்து வரணும்னு சொன்னாங்க தானே? “
வாணியின் நினைவுகள் தாளம் தப்பியது.
“ லைன்ல இருக்கியாக்கா?”
“ ம்? ம்ம்! சொல்லு. அதுக்கு என்ன? “
“ அண்ணன் தம்பி இல்லை. அதால நானே எடுத்துட்டு வர்றேன்னு நான் கொஞ்ச நேரம் அதை எல்லாம் தூக்கிட்டு நின்னேன்ல?”
‘ லூசு லூசு. ‘ மனதில் திட்டினாலும் அந்த சமயம் இதை எல்லாம் கவனிக்காமல் விட்ட தன்னையே காறித் துப்பிக் கொண்டாள் வாணி.
“ இது வேற செஞ்சியா? ஃபோட்டோல நம்ம வீதில இருக்கற வாண்டு ஒன்னு தானே அதைத் தூக்கிட்டு நிக்குது?”
“ அது நவீன். ஃபோட்டோ புடிப்பங்கன்னு அந்த வேலையைச் செய்தான். நான் சொல்ல வந்தது அது இல்லை “
“ சொல்ல வந்ததை சொல்லுன்னு தானே நானும் சொல்றேன்? “
என்ன எழரையை கூட்டி வைத்திருக்கிறாளோ ? என்று வாணிக்கு பயந்து வந்தது குருவியின் பேச்சிலும் த்வனியிலும்.

“ அக்கா.. அக்கா … “ என்று குருவி தேம்ப, வாணிக்கு மனது பிசைந்தது. என்ன சொல்லி இருப்பான் அந்த பெருமாள்?
“ சொல்லுடி “
“ ஏந் பெருமாள் என்ன காரியம் செஞ்சான் தெரியுமா?”
“ நீ இப்டியே பேசிட்டு இருந்தா நான் போனை வைக்கிறேன் “ என்றாள் வாணி கறாராக.
“ யாருமே என் கஷ்டத்தைப் புரிஞ்சிக்க மாட்டன்றிங்க “
“ சரி. நான் போனை வைக்கிறேன் “
“ அய்யோ அக்கா! அவன் நான் பெட்ஷீட் தலைகாணி வச்சிருக்கிறதை எப்டியோ ஃபோட்டோ எடுத்து இருக்கான். அதையும் ‘ பிறந்த வீடா புகுந்த வீடா ‘ படத்துல கோவை சரளா அக்கா பாய் தலைகாணி வச்சு இருப்பாங்களே? அந்த ஃபோட்டோவையும் சேர்த்து எடிட் பண்ணி எனக்கு வாட்ஸ்அப் அனுப்பி இருக்கான் கா”
குருவியின் குரல் உடைய, வாணி சிரித்து விட்டாள்.
“ இந்த பழைய படம் பெர்லாம் உனக்கு எப்டி தெரிஞ்சுது?”
“ அது இவன் இந்த ஃபோட்டோ அனுப்பவும் யூ ட்யூப்ல தேடி எடுத்தேன். இப்ப அதுவா முக்கியம்? இதை அம்மாகிட்ட சொன்னா உன்னை யார் நீயா முடிவு செய்து கல்யாணத்துல அதைத் தூக்க சொன்னா? என்கிட்ட கேக்க வேண்டியது தானேன்னு ஒரே திட்டு. எப்டி கேட்கிறது? இவங்க தான் நாமளும் மத்தவங்களும் எவ்வளவு சொல்லியும் கல்யாண சமயம் ஒதுங்கி இருந்தாங்க. உமா அத்தை சொல்லி அந்த பெருமாள், சந்த்ரு சார் அவங்க ஃபேமிலி தான் நின்னு செய்தாங்க.
அக்கா, நல்லா யோசிச்சு பாரு? இவங்களை எல்லாம் எனக்குப் பழக்கமே இல்லை. அம்மாவும் முன்னுக்கு வரலை. யாரோடவும் ஒட்ட முடியாம நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டுருப்பேன் தெரியுமா? கல்யாணத்தை
எவ்வளவு சிம்பிளா செய்தாலும் யார் கூடவும் க்ளோஸ்ஸா என்னால மூவ் பண்ண முடியலை.
உன்னைக் கையில பிடிக்க முடியலை. ஏதோ குழப்பத்தில் இருந்த மாதிரி இருந்தே?
உனக்கும் அப்படித்தான் இருந்து இருக்குமோ? ஆனா சடங்கு சம்பிரதாயம்ன்னு உன்னைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அதே காரணத்துக்கு என்னை இந்த பெருமாள், மண்டபத்தில் வேற பக்கம் புடிச்சு வச்சிகிட்டான்.
இப்போ நினைக்கிறேன் க்கா. இப்டி ஒரு ஃபோட்டோ எடுக்க இவன் பிளான் பண்ணிதான் என்னை நிறுத்தி வச்சிருப்பான் போல “
“ போடி லூசு. பொண்ணுக்கு தங்கச்சின்னு தெனவட்டா சுத்திறதை விட்டுட்டு நீ வான்ட்டடா போய் அவன் கிட்ட சிக்கி இருக்க. அவன் வச்சு செய்து இருக்கான். அவன்கிட்ட நீ கொஞ்ச வாயா பேசுன?”
வாணி சிரிப்புடன் கேட்க குருவி அங்கே பல்லைக் கடித்தாள்.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top