• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாரிஜாத வாசம் 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
புதன் கிழமை போடலாம்னு இருந்தேன்😍ஜஸ்ட் மிஸ்😔 சீக்கிரம் அடுத்த எபி போடுவேன்💓 இது சின்ன எபி தான். சாரி🙈
தப்பிருந்தா சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்😍
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் வெயிட்டிங்❤

9

“ பூங்குருவின்னு பேர் வச்சதுக்கு பதில் பூனைக் கண்ணின்னு பேர் வச்சு இருக்கலாம் “ _ இந்த ஒரு வாக்கியம் தான் குருவிக்கும் பெருமாளுக்கும் வாய்க்கா தகராறை ஏற்படுத்திய வாக்கியம்.

முதன் முதலாக லதாவின் வீட்டுக்கு உமா சொன்னதன் பேரில் இனிப்பு வாங்கிக் கொண்டு போன போது வாசலில் வாரியலை வைத்துக் கொண்டு நின்ற குருவியின் கண்களில் ஆழ்ந்து அவன் சொன்னது அது.


“ யாருங்க?” சந்தேகமாய்க் கேட்டுக் கொண்டு இருந்தாள் குருவி அப்போது அவனிடம்.
' சிட்டுக் குருவிக்கு சேலை கட்டி விட்ட மாதிரி இருந்து கிட்டு ஏத்தத்தைப் பாரு ?’
அவள் வீட்டுக்கு வந்த புதியவனை, அவள் யார் என்று கேட்டதில் என்ன தப்பு? என்று அவனுக்கு புரியவில்லை என்றாலும் அவள் நீ யார் என்று கேட்டது பிடிக்கவில்லை.
“ என் வீட்டுக்கு வந்தவங்களை வான்னு கேக்க சொல்லிக் குடுக்கலியா உங்க வீட்ல ?”
“ஓ?”என்று பெரிய எழுத்தில் ஆச்சரியப்பட்டவள் “ எங்க வீட்ல எனக்கு சொல்லிக் குடுத்தது குடுக்காதது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒருத்தர் வீட்டுக்குப் போன இன்னார் வந்துருக்கேன். இன்னாரைப் பாக்கனும்னு சொல்லனும்னு உங்க வீட்ல சொல்லிக் குடுக்கலியா ?”
‘ அடீங்க்! என்கிட்டயா எதுத்துப் பேசற? ஓ போடற உன் வாயை ஒடைக்கிறேன் பாரு ! ‘
இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு லதா வெளியே வந்து விட்டார்.
“ வெங்காயம் நிறைய போட்டு உனக்காக உப்புமா செய்திட்டு இருக்கறதுக்குள்ள இங்கே என்ன பிரச்சனை பண்ணிட்டு இருக்கே பூங்குருவி “
உப்புமா செய்த களைப்பில் முகத்தை சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டே வந்தார் அவர்.

‘ என்ன! உப்புமாவா?’ இவன் அதிர்ந்து போய் குருவியைப் பார்க்க அவள் முகம் ஜொலிக்க அன்னையை பார்த்தாள்.
“ சூப்பர் மா. முன் வாசலைக் கூட்டி விட்டுட்டு சாப்பிடப் போறேன் “ என்று ஜோள் ஒழுக்கினால்.
‘ அட பெருமாளே! உப்புமா ஃபேமிலியா இது?
நடுவே திரு திரு என விழித்துக் கொண்டு நின்ற இவனை வரும் போதே கவனித்து இருந்தவர், “ தம்பி, நீங்க..? “ என்று இழுத்தார். உமாவின் ஜாடை கொஞ்சம் இருந்தாலும் அவன் உயரத்தைப் பார்த்து மலைத்தார் அவர்.
“ அத்தே! நான் அழகிய பெருமாள். உமா பையன். “
தன்னை அவன் அறிமுகப்படுத்தி கொள்ள லதா மலர்ந்தார்.
“ உமா பையனா நீ! நல்லா வளர்ந்திட்ட ! எங்க உங்க அம்மா? உன்னை மட்டும் அனுப்பி வச்சி இருக்கா? உள்ள வாப்பா”
லதாவின் வரவேற்பில் மனம் நிறைந்தவன் பளிச்சென்று புன்னகைத்தான்.
‘ இவனுக்கு லைட் ஹவுஸ் ன்னு பேர் வச்சதுல தப்பே இல்ல ‘ குருவியின் முணுமுணுக்க பெருமாள் காதில் அது துல்லியமாக விழுந்தது.
“ நீ மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சுகிட்டு சத்தமா பேசிட்ட “ என்றான் குருவியிடம்.

“ ஆமா, எப்போ எனக்கு அப்படி பேர் வச்சே?”
குருவி தன் தாயைப் பார்த்து ‘ யம்மா என்னைக் காப்பாத்து ‘ என்று முழித்தால்.
சட்டென சிரித்து பின் சுதாரித்த லதா “ வீட்டுக்குள்ள வா தம்பி “ என்று பெருமாளை அழைத்தார்.
“ இல்ல அத்தே. நான் போகணும். அம்மா உங்களைப் பார்த்து இந்த ஸ்வீட் குடுத்துட்டு வர சொன்னாங்க. அதான் வந்தேன். டியுட்டில ஜாயின் பண்ணிட்டேன். “
பெருமாள் மறுக்க, என்ன ஸ்வீட் என்று எட்டிப் பார்த்தாள் குருவி.
மைசூர் பாகைப் பார்த்து அவள் விழிகள் இரண்டும் விரிய,
“ அத்தே நீங்க பூங்குருவின்னு பேர் வச்சதுக்கு பதில் பூனைக் கண்ணின்னு பேர் வச்சு இருக்கலாம் “ என்றான் சிரித்துக் கொண்டே.

சத்தமாக சிரித்த லதா “ அவளுக்கு உங்க பாட்டி கண்ணு “ என்றவர் அவன் நீட்டிய இனிப்பு பாத்திரத்தை வாங்கிக் கொண்டார்.

அதற்கு மேல் அடங்காத குருவியின் கை மைசூர் பாகை எடுத்து வாயில் போட்டு சுவைத்தது.

அவளை லட்சியம் செய்யாத லதா “ ஸ்வீட் சின்னதா இருக்கே? இந்த சைஸ் ல எந்த கடையில தற்றாங்க ?” என வியந்தார்.
“ இது வீட்ல அம்மா செய்தது அத்தே. எனக்கு ரொம்ப பிடிக்கும். அதான் பெரிய சை ல செய்தா நிறைய சாப்பிட்டு எனக்கு சுகர் வந்திரும்ன்னு பயந்து சின்னதா கட் செய்து இருக்காங்க.”
பேசிக் கொண்டே அவனை வரவேர்ப்பரைக்கு அழைத்துச் சென்று இருந்தார் அவர்.
“ உட்காருப்பா “ என்றவர் “ குருவிமா அத்தானுக்கு குடிக்கத் தண்ணீர் எடுத்துட்டு வா “ என பணிக்க,
“ எதேய்! அத்தானா? அப்படி எல்லாம் சொல்ல முடியாது. வேணா அங்கிள்ன்னு சொல்றேன் “ சிலுப்பிக் கொண்டே சொன்னதை செய்தாள் குருவி.

லதவுக்கும் அதில் பெரிய கருத்து வேறுபாடு இல்லைதான். பெருமாளுக்கும் பூங்குருவிக்கும் குறைந்தது பத்து வயதாவது வித்தியாசம் இருக்கும். அசலில் பெண் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் அவனுக்குத் திருமணம் முடித்து வைக்கப் போவதாக உமா இவரிடம் ஃபோனில் புலம்பி இருந்தார்.
“ அதென்ன அண்ணி? அசல்லன்னு அத்தனை வைராக்கியம் உங்களுக்கு?” என்று லதா விளையாட்டாக கேட்க,
“ சொந்தத்தில் எந்த சிறுக்கி இருக்கா?” என சலித்தார் உமா.
தன் மக்கள் இருவரையும் உமா தன் மருமகளாக பார்க்கவில்லை, தன் குழந்தைகளாக பார்த்தார் என்பது அந்தக் கணத்தில் புரிந்து மிகவும் மகிழ்ந்து போனார் லதா.

அதனால் வீட்டிற்க்கு வந்த அந்த வயதுப் பையனைப் பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
“ தண்ணீர் குடிப்பா “ என உபசரித்தார்.
“ காபி போடுறேன். உப்புமா இருக்கு. இப்போதான் சூடா செய்தேன். சாப்புடுப்பா “
“ அதெல்லாம் வேணாம் அத்தே. இன்னொரு நாள் சாப்பிடுறது மாதிரி அம்மாவையும் கூட்டிட்டு வர்றேன். “ என்று தன்மையாக மறுத்தாலும்,
குருவி தன்னை அங்கிள் என்று சொன்னதில் பெருமாள் கொதித்துப் போய் இருந்தான்.
லதாவிடம் நல்ல பிள்ளையாகப் பேசியவன் குருவியிடம் சிரித்துக் கொண்டே சீறினான்.
“ யாருடி அங்கிள்? ஒழுங்கு மரியாதையா அத்தான்னு கூப்பிடு! நாளைக்கு உங்க அக்கா கல்யாணத்துக்கு நான் சீர் செய்ய வேண்டாமா?”
சீர் என்றதும் லதா முகம் விகசித்தது. அவர் அப்பா தவறிய பின் இதுவரை லதாவுக்கோ அவர் பிள்ளைகளுக்கு யாரும் எந்த சீரும் செய்ததில்லை.
வாணியின் திருமணம் இழுபறியாக இருக்கிறது. அது நல்ல முறையில் முடிவான பின் சீர் என்று ஒத்தை பைசாவை பெருமாள் கொடுத்தாலும் கோடி பெறும் அவருக்கு.
பதிலுக்கு ஏதோ சொல்ல வாயெடுத்த குருவியை அடக்கியவர்,
“ உன் விருப்பம் போல செய் அப்பு “ என்றார் நெகிழ்வுடன்.

“ சாய்ச்சுபுட்டா மச்சான் சாய்ச்சுபுட்டா “
குருவி தன்னை மறந்து சொல்லி சிரித்தாள்.
வாயில் இனிப்புடன் சிரித்த அவளை ரசனையாக பார்த்தான் பெருமாள்.
“ இதுவே நல்லா இருக்கே? இனி ‘மச்சான்’ன்னு கூப்பிடு “ _ சொன்னவன் பெண்கள் இருவரின் பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டான்.
“ லைட் ஹவுஸ் பேச்சை விடுங்க மீ . லைட் டா பசிக்குது. வாங்க உப்புமா சாப்பிடுவோம் “ அழைத்த மகளை ஆயாசமாகப் பார்த்தார் லதா.
“ இப்போ தான்டி ஸ்வீட் சாப்பிட்ட?”
“ சாப்பாடு சாப்பிட முன்பே ஸ்வீட் சாப்பிடுவோம்ல? இதை சாப்பிட்ட அப்புறம்தான் இன்னும் நல்லா பசிக்குது “
“ யூன்னைப் பாக்குற யாரும் நீ இவ்வளவு திம்பெண்ணு சொன்னா நம்ப மாட்டாங்க “
“ அப்புறம் எதுக்கு வேலை மெனக்கெட்டுப் போய் அவங்ககிட்ட சொல்றிங்க?”
“ ம்? எனக்குப் பைத்த்தியம் !”
“ அதான் எனக்கு முன்னமே தெரியுமே?”
“ கடவுளே! எவன் இவகிட்ட கிடந்து சீரழியப் போறானோ? அவனை எப்டியாச்சும் காப்பாத்து. சீக்கிரம் வாசளைக் கூட்டிட்டு உள்ள வாடி “ என்றவர் தான் உள்ளே போக அக்காவுக்கும் அம்மாவுக்கும் ஆளுக்கு இரண்டு துண்டு இனிப்பை வைத்துவிட்டு மீதியை காலி செய்து இருந்தாள்.

வீட்டுக்குள் போனதும் சுவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த வாணியை பார்த்து மனம் இளகியவர் “ சரி சரி. உன் விருப்பம். நீ அந்த உதையையோ மிதியையோ கட்டிக்கோ. “ என்று சொல்லி விட்டார்.
மனதில் இருந்த இலகுத்தன்மைதான் அதற்கு காரணமாக அமைந்திருந்தது.

அதன் பின் நிற்கவில்லை. விறுவிறுவென வாணி உதய் திருமணம் நடந்து முடிந்து இருந்தது.

இவர்கள் திருமண சமயத்தில் குருவியை பெருமாள் ஓட்டி இருப்பது இப்போதுதான் தெரிகிறது.
ஆனால் அதற்கு முன்பும் அப்படித்தான் என்பது வாணிக்கு தெரியும்.
உறவு நட்பு என்ற வகையில் யாரும் அதை பெரிதுபடுத்த வில்லை.
ஆனால் எவ்வளவு கொளுத்திப் போட்டாலும் ஒன்னும் வெடிக்க மாட்டேங்குது என்று பெருமாள் சலித்துக் கொண்டது இதுவரை ஒருவருக்கும் தெரியவில்லை.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Payapulla kuruvikku valai virikraano🧐🧐🧐🧐

Peru than kuruvi Aana vettukkili mathri da🙄🙄🙄

Aththai ponna ippo than kavanuthula vanthalaama🤷‍♂️🤷‍♂️

Nalla irukku sister update 👍 👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top