• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்ட் டைம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
30
Location
Pudukkottai
அடுத்த வாரத்திலிருந்து பார்ட் டைம் வேலைக்குச் செல்ல தொடங்கினான் அரவிந்தன். முகிலனும் , அரவிந்தனும் வா போ என ஒருமையில் பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

கல்லூரி முதலாமாண்டு விடுமுறை தினத்தில் மாலை வேளையில் ஹோட்டல் ஒன்றிற்குச் சாப்பிட சென்றபோது அதே ஹோட்டலில் சப்ளையராக பார்ட் டைம் வேலை செய்துகொண்டிருந்த முகிலனை பார்த்து,

"நண்பா... நீங்க முத்தமிழ் காலேஜ் தானே... உங்கள அடிக்கடி பாத்துருக்கேன்... நீங்க இங்க வேலை செய்றிங்களா..." என்று முகிலனுடன் தனது உரையாடலை தொடங்கினான் அரவிந்தன்.

"ஆமா... பார்ட் டைம் வேலை... மாலை 6 டூ 10 மணி வரைக்கும் சப்ளையர் வேலை... சம்பளம் 200 ரூபாய்..." என்றான் முகிலன்.

"பார்ட் டைம் வேலைக்கு நானும் உங்க கூட வரட்டுமா..." என்று கேட்டான் அரவிந்தன்.

"தாராளமா வாங்க... இந்த ஹோட்டல் முதலாளி அண்ணன் நல்ல மனுசன்... படிக்குற பசங்க மேல ரொம்ப அன்பா இருக்குறவர்... நான் உங்கள சேர்த்துவிடுறேன்..."

"இன்னிக்கே சேர்த்துவிடுங்க..."

"சாப்ட்டு முடிங்க சொல்றேன்..."

அரவிந்தன் தனது கைச்செலவுக்கு ஒருவழி கிடைத்துவிட்டது. இனி அப்பாவை தொந்தரவு செய்ய தேவையில்லை என்று நினைத்து உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு முடித்தான்.

"சாப்டிங்களா... வாங்க..." என்று அரவிந்தனை முகிலன் முதலாளியிடம் அழைத்துச் சென்றான்.

"அண்ணா இவரு எங்க காலேஜ்... நல்ல கேரக்டர்... பார்ட் டைம் வேலைக்கு வரேங்குறாரு..." என்று முகிலன் எடுத்து சொல்ல,

"அடுத்த வாரத்துல இருந்து முகிலன் கூட சேர்ந்து வா தம்பி..." என்றார் முதலாளி அண்ணன்.

"கண்டிப்பா வரேங்ண்ணா... ரொம்ப நன்றி..." என்று சொல்லி முகிலனின் செல் நம்பர் வாங்கிக்கொண்டு கிளம்பினான் அரவிந்தன்.

அடுத்த வாரத்திலிருந்து பார்ட் டைம் வேலைக்குச் செல்ல தொடங்கினான் அரவிந்தன். முகிலனும் அரவிந்தனும் வா போ என ஒருமையில் பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். முகிலன் அலைந்து திரிந்து வேலையை தேடி பிடிப்பவன். அப்படி அவன் தேடி தேடி விசேஷ வீடுகளுக்கு, இன்னும் இதர சிறப்பு விசேஷங்களுக்கு பந்தி பரிமாறுவது என்று வேலை கிடைக்கும் இடத்திற்கெல்லாம் அரவிந்தனை தன்னோடு அழைத்துச் செல்வான் முகிலன்.

அவ்வாறு பார்ட் டைம் வேலை செய்து சேமித்து வைத்த பணத்தில் சொந்தமாய் ஒரு ஆண்ட்ராய்டு போன் வாங்கி அதில் தனக்குப் பிடித்த நாளிதழ்கள், வார இதழ்களுக்கு ஆன்லைன் ஆண்டு சந்தா கட்டிக் கொண்டான் அரவிந்தன்.

இப்படி ஹோட்டலுக்கும் விசேஷ வீடுகளுக்கும் அலைந்து அலைந்து திரிவது பழக்கமாகி போனது. அடுத்த லட்சியம் சொந்தமாய் ஒரு லேப்டாப் வாங்குவது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு குருவி சேர்ப்பது போல் பணத்தை சேகரிக்க தொடங்கினான் அரவிந்தன். அதே சமயம் படிப்பிலும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டான். அவனை நினைத்து அம்மா பெருமிதம் அடைந்தார். "சேர்க்கை நல்லா இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்!" என்று கோவில் வாசலில் கட்டில் கடை வைத்து சூடம் ஊதுபத்தி தேங்காய் பழம் விற்கும் அவனது அம்மா பாராட்டினார். அம்மாவின் பாராட்டு முகிலனின் மீதான நட்பையும் மரியாதையையும் அதிகரித்தது.

ஆனால் முகிலன் அந்த மாதிரி பொருட்கள் எதுவும் வாங்காமல் பணத்தை சேமித்து மட்டுமே வைத்துக் கொண்டிருந்தான்.

"டேய்... நீ எதுக்காக டா பார்ட் டைம் வேல செய்ற... கைல தான் காசு இருக்குள்ள... எதாவது பொருள் சேர்க்க வேண்டியதுதான..." என்று அரவிந்தன் கேட்க,

"என்னோட லட்சியத்த கேட்டு நீ சிரிக்க கூடாதுடா..."

"நான் ஏன்டா சிரிக்க போறேன்..."

"எங்க வீட்டுல பாத்ரூம் வசதி இல்லடா... அம்மாவும் தங்கச்சியும் அவதிபடுறாங்க... எங்கம்மாவும் குப்பை அள்ளுற வேலைக்குத் தான் போயிட்டு இருக்கு... அம்மா ஒரு ஆளா எங்க ரெண்டு பேரையும் படிக்க வைக்கிறதே பெரிய விஷியம்... இதுல பாத்ரூம் கட்டுறது, வீடு கட்டுறதுனு அவங்களால முடியாது... நான் மேல ஏறி வந்து தூக்கிவிடனும்... வீடு கட்டுறத கூட அப்புறம் பாத்துக்கலாம்... முதல்ல பாத்ரூம் கட்டனும்... தங்கச்சி இன்னும் கொஞ்ச நாள்ல வயசுக்கு வந்துடுவா... குளிக்கறதுக்கு சிரமப்படுவா..." என்றான் முகிலன்.

முகிலனின் வலி புரிந்தது.

இருவருடைய லட்சியத்திற்காகவும் இருவரும் சேர்ந்து ஓடத் தொடங்கினார்கள்.

திடீரென முகிலன் ஒருநாள் விசேஷ வீட்டில் பந்தி பரிமாறிவிட்டு ஒரு மூலையில் மறைவாக குந்த வைத்து அமர்ந்தான். அப்படியே சுருண்டு விழுந்தவன் தான். அதற்குமேல் மேலே எழவில்லை. சிறுவயது முதலே அவர்கள் வசிப்பிடம் அருகே உள்ள இடத்தில் அந்த ஊர் தொழிற்சாலை குப்பைகளை கொட்டி எரிப்பதால் சிறுவயதிலயே உடல்நலம் பாதிக்கப்பட்டவன் முகிலன்.

முகிலனின் இறப்பு அரவிந்தனுக்கு பெரும் இடியாய் இருந்தது. அதற்குப் பிறகு அரவிந்தன் தனியாக பார்ட் டைம் வேலை செய்து முகிலனுடைய வீட்டில் ஒரு பாத்ரூமும் படிப்பறையும் கட்டி கொடுத்துவிட்டு முகிலனின் ஆன்மாவை சாந்தி அடைய வைத்து பார்ட் டைம் வேலைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான்.

Pay Day Offer 1 year @ 899 Hurry ! Buy Now
x
Vikatan
Literature
Story
Published:07 Sep 2023 4 PMUpdated:07 Sep 2023 4 PM
பார்ட் டைம்! - சிறுகதை | My Vikatan
மா. யுவராஜ்

அடுத்த வாரத்திலிருந்து பார்ட் டைம் வேலைக்குச் செல்ல தொடங்கினான் அரவிந்தன். முகிலனும் அரவிந்தனும் வா போ என ஒருமையில் பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

Representational Image
Literature
Representational Image
Share

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கல்லூரி முதலாமாண்டு விடுமுறை தினத்தில் மாலை வேளையில் ஹோட்டல் ஒன்றிற்குச் சாப்பிட சென்றபோது அதே ஹோட்டலில் சப்ளையராக பார்ட் டைம் வேலை செய்துகொண்டிருந்த முகிலனை பார்த்து,

"நண்பா... நீங்க முத்தமிழ் காலேஜ் தானே... உங்கள அடிக்கடி பாத்துருக்கேன்... நீங்க இங்க வேல செய்றிங்களா..." என்று முகிலனுடன் தனது உரையாடலை தொடங்கினான் அரவிந்தன்.

"ஆமா... பார்ட் டைம் வேலை... மாலை 6 டூ 10 மணி வரைக்கும் சப்ளையர் வேலை... சம்பளம் 200 ரூபாய்..." என்றான் முகிலன்.

"பார்ட் டைம் வேலைக்கு நானும் உங்ககூட வரட்டுமா..." என்று கேட்டான் அரவிந்தன்.

Representational Image
Representational Image
"தாராளமா வாங்க... இந்த ஹோட்டல் முதலாளி அண்ணன் நல்ல மனுசன்... படிக்குற பசங்க மேல ரொம்ப அன்பா இருக்குறவர்... நான் உங்கள சேர்த்துவிடுறேன்..."

"இன்னிக்கே சேர்த்துவிடுங்க..."

"சாப்ட்டு முடிங்க சொல்றேன்..."

அரவிந்தன் தனது கைச்செலவுக்கு ஒருவழி கிடைத்துவிட்டது. இனி அப்பாவை தொந்தரவு செய்ய தேவையில்லை என்று நினைத்து உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு முடித்தான்.

"சாப்டிங்களா... வாங்க..." என்று அரவிந்தனை முகிலன் முதலாளியிடம் அழைத்துச் சென்றான்.

"அண்ணா இவரு எங்க காலேஜ்... நல்ல கேரக்டர்... பார்ட் டைம் வேலைக்கு வரேங்குறாரு..." என்று முகிலன் எடுத்து சொல்ல,

"அடுத்த வாரத்துல இருந்து முகிலன் கூட சேர்ந்து வா தம்பி..." என்றார் முதலாளி அண்ணன்.

"கண்டிப்பா வரேங்ண்ணா... ரொம்ப நன்றி..." என்று சொல்லி முகிலனின் செல் நம்பர் வாங்கிக்கொண்டு கிளம்பினான் அரவிந்தன்.

அடுத்த வாரத்திலிருந்து பார்ட் டைம் வேலைக்குச் செல்ல தொடங்கினான் அரவிந்தன். முகிலனும் அரவிந்தனும் வா போ என ஒருமையில் பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். முகிலன் அலைந்து திரிந்து வேலையை தேடி பிடிப்பவன். அப்படி அவன் தேடி தேடி விசேஷ வீடுகளுக்கு, இன்னும் இதர சிறப்பு விசேஷங்களுக்கு பந்தி பரிமாறுவது என்று வேலை கிடைக்கும் இடத்திற்கெல்லாம் அரவிந்தனை தன்னோடு அழைத்துச் செல்வான் முகிலன்.

Representational Image
Representational Image
அவ்வாறு பார்ட் டைம் வேலை செய்து சேமித்து வைத்த பணத்தில் சொந்தமாய் ஒரு ஆண்ட்ராய்டு போன் வாங்கி அதில் தனக்குப் பிடித்த நாளிதழ்கள், வார இதழ்களுக்கு ஆன்லைன் ஆண்டு சந்தா கட்டிக் கொண்டான் அரவிந்தன்.

இப்படி ஹோட்டலுக்கும் விசேஷ வீடுகளுக்கும் அலைந்து அலைந்து திரிவது பழக்கமாகி போனது. அடுத்த லட்சியம் சொந்தமாய் ஒரு லேப்டாப் வாங்குவது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு குருவி சேர்ப்பது போல் பணத்தை சேகரிக்க தொடங்கினான் அரவிந்தன். அதே சமயம் படிப்பிலும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டான். அவனை நினைத்து அம்மா பெருமிதம் அடைந்தார். "சேர்க்கை நல்லா இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்!" என்று கோவில் வாசலில் கட்டில் கடை வைத்து சூடம் ஊதுபத்தி தேங்காய் பழம் விற்கும் அவனது அம்மா பாராட்டினார். அம்மாவின் பாராட்டு முகிலனின் மீதான நட்பையும் மரியாதையையும் அதிகரித்தது.

Representational Image
Representational Image
ஆனால் முகிலன் அந்த மாதிரி பொருட்கள் எதுவும் வாங்காமல் பணத்தை சேமித்து மட்டுமே வைத்துக் கொண்டிருந்தான்.

"டேய்... நீ எதுக்காக டா பார்ட் டைம் வேல செய்ற... கைல தான் காசு இருக்குள்ள... எதாவது பொருள் சேர்க்க வேண்டியதுதான..." என்று அரவிந்தன் கேட்க,

"என்னோட லட்சியத்த கேட்டு நீ சிரிக்க கூடாதுடா..."

"நான் ஏன்டா சிரிக்க போறேன்..."

"எங்க வீட்டுல பாத்ரூம் வசதி இல்லடா... அம்மாவும் தங்கச்சியும் அவதிபடுறாங்க... எங்கம்மாவும் குப்பை அள்ளுற வேலைக்குத் தான் போயிட்டு இருக்கு... அம்மா ஒரு ஆளா எங்க ரெண்டு பேரையும் படிக்க வைக்கிறதே பெரிய விஷியம்... இதுல பாத்ரூம் கட்டுறது, வீடு கட்டுறதுனு அவங்களால முடியாது... நான் மேல ஏறி வந்து தூக்கிவிடனும்... வீடு கட்டுறத கூட அப்புறம் பாத்துக்கலாம்... முதல்ல பாத்ரூம் கட்டனும்... தங்கச்சி இன்னும் கொஞ்ச நாள்ல வயசுக்கு வந்துடுவா... குளிக்கறதுக்கு சிரமப்படுவா..." என்றான் முகிலன்.

முகிலனின் வலி புரிந்தது.

இருவருடைய லட்சியத்திற்காகவும் இருவரும் சேர்ந்து ஓடத் தொடங்கினார்கள்.

திடீரென முகிலன் ஒருநாள் விசேஷ வீட்டில் பந்தி பரிமாறிவிட்டு ஒரு மூலையில் மறைவாக குந்த வைத்து அமர்ந்தான். அப்படியே சுருண்டு விழுந்தவன் தான். அதற்குமேல் மேலே எழவில்லை. சிறுவயது முதலே அவர்கள் வசிப்பிடம் அருகே உள்ள இடத்தில் அந்த ஊர் தொழிற்சாலை குப்பைகளை கொட்டி எரிப்பதால் சிறுவயதிலயே உடல்நலம் பாதிக்கப்பட்டவன் முகிலன்.

முகிலனின் இறப்பு அரவிந்தனுக்கு பெரும் இடியாய் இருந்தது. அதற்குப் பிறகு அரவிந்தன் தனியாக பார்ட் டைம் வேலை செய்து முகிலனுடைய வீட்டில் ஒரு பாத்ரூமும் படிப்பறையும் கட்டி கொடுத்துவிட்டு முகிலனின் ஆன்மாவை சாந்தி அடைய வைத்து பார்ட் டைம் வேலைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான்.

இருந்தாலும் முகிலன் அரவிந்தனின் கனவுகளில் அவ்வப்போது வந்துகொண்டு தான் இருந்தான். அரவிந்தனுக்கு எதாவது துன்பம் நேரப்போகிறது என்றால் அதை கனவில் முன்கூட்டியே வந்து குறிப்பால் உணர்த்திவிட்டு செல்வான் முகிலன். இறந்த போதிலும் ஒளியாக, நிழலாக, மழையாக, பறவையாக என்று எதோ ஒரு ரூபத்தில் முகிலன் அரவிந்தனோடு வாழ்ந்துகொண்டு தான் இருந்தான்.

கல்லூரி படிப்பு முடிந்து அரவிந்தன் வெளியே வந்தான். வெளிவந்த சில தினங்களிலயே உறவினர் ஒருவரின் இல்ல திருமண விசேஷத்திற்குச் செல்ல நேர்ந்தது.

மாமா முறையாகும் அந்த பெரியவரை அரவிந்தன் தனியாக அழைத்து "மாமா... பந்தி பரிமாறதுக்கு ஆளுங்க இருக்காங்களா... கேட்டரிங் பசங்கள சொல்லிருக்கிங்களா... இல்ல நம்ம தான் பாக்கனுமா..."

"அதெல்லாம் சொல்லல மாப்ள... நீதான் பாக்கனும்..." என்றார் மாமா.

"சரி விடுங்க நான் பாத்துக்குறேன்..." என்று அரவிந்தன் பந்தி பரிமாறும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

திருமண நிகழ்வு நல்ல படியாக முடிந்து எல்லோரும் பந்தியை நோக்கி வர அரவிந்தனும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து உணவை பரிமாறினார்கள். ஒருபுறம் கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்க, பந்தி பரிமாறிக் கொண்டே இருந்தவர்களில் சிலர் காணாமல் போய்க் கொண்டிருந்தார்கள்.

அன்றைய நாளில் ஏகப்பட்ட திருமணங்கள் நடைபெற்றது என்பதால் உறவினர்கள் பலரும் சீக்கிரம் அடுத்த விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்கிற அவசரத்தில் சாப்பிடும் நபர்களின் முதுகுக்குப் பின்னே வந்து நிற்கத் தொடங்கினார்கள். பந்தியில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

அரவிந்தனும் இன்னும் இரண்டு பேரும் மட்டுமே வியர்த்து விறுவிறுக்க பந்தி பரிமாறியதாலும் அவர்களால் அலைந்து அலைந்து சரியாக பரிமாற முடியாததாலும் சாப்பிட அமர்ந்தவர்களின் முகத்தில் கொந்தளிப்பு அதிகமானது.

"ஆளுங்க பத்தல... இன்னும் நாலஞ்சு பேர வர சொல்லுங்க..." என்று அப்பாவை சத்தம் போட்டான் அரவிந்தன்.

"எங்கடா அரவிந்தா.. வந்ததுல பாதி பொண்ணுக்கு மேக்கப் சரியில்ல... அதுநொட்ட இதுநொட்டனு பேசுறதுலயே குறியா இருக்கானுங்க..." என்று சொல்லி அப்பாவும் அரவிந்தனும் அவனுடைய அம்மாவும் இன்னும் மூன்று உறவினர்களுமாக சேர்ந்து பந்தி பரிமாறி ஒருவழியாக எல்லோரையும் வழியனுப்பி வைத்தார்கள். ஆனால் பாதி உறவினர்கள் சரியாக சாப்பிடாமல் அதிருப்தியுடன் தான் சென்றனர்.

சமைத்ததில் பாதி சாப்பாடு அப்படியே இருந்தது. அதை பார்த்ததும் அரவிந்தனுக்கு கோபம் வந்தது.

மாமா அரவிந்தன் அருகே வந்தார். பாதி சாப்பாடு அப்படியே இருப்பதை பார்த்து... "ப்ச்" என்றார்.

"ஏன் மாமா... கேட்டரிங் பசங்க கிட்டலாம் கேட்டு பாத்திங்களா... அழைப்பு அதிகம்ங்கறப்ப அதையும் சேர்த்து பேசிருக்க வேண்டியதான..."

"பேசிருக்கலாம் தான்... ஆனா அதுல பாதி பசங்க கீழத்தெரு பசங்க... அவங்க பரிமாறுனா நம்ம சொந்தபந்தம் எதுவும் முகம் சுளிப்பாங்கன்னு சொல்லல..." என்றார் மாமா.

அரவிந்தனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"இப்ப மட்டும் என்ன வாழுதாம்... வந்த சொந்தத்துல பாதி பேரு வாய்க்குள்ள முனவிட்டே தான் சாப்டானுங்க... கக்கூஸ் கழுவ குப்பை அள்ளுறதுக்கு கீழத்தெரு ஆளுங்க வேணும்... பரிமாறதுக்கு அவங்க பசங்க வர கூடாதாமா... உன் மண்டைய அப்படியே ரெண்டா பொளக்கனும்போல இருக்கு மாமா..." என்று அவன் கடிந்து கொள்ள...

"சரி விடுப்பா... தப்பு என்மேல தான்..." என்று மாமா அவனை சமாதானப்படுத்தினார்.

"சரி இவ்வளவு சோறு மிச்சம் ஆயிடுச்சே... இப்ப இதெல்லாம் என்ன செய்யலாம்..." என்று அரவிந்தன் அதே கடுகடுப்புடன் கேட்டான்.

" கீழத்தெரு ஆளுங்க இருக்காங்க இல்ல... அவங்களுக்கு கொடுத்துறலாம்..." என்று மாமா சொல்ல,

அரவிந்தனுக்கு ரத்தம் கொதித்தது. மாமாவை பார்த்துவிட்டு சாம்பார் அண்டாவை பார்த்தான். மாமாவை அலேக்காக தூக்கி சாம்பார் அண்டாவுக்குள் போட்டு முக்கி எடுக்கனு
ம் போல் இருந்தது அரவிந்தனுக்கு.

எதுவும் செய்ய முடியாத சூழலில் நீண்ட பெருமூச்சு விட்டு அந்தச் சாப்பாட்டை சாப்பிடாமல் பசியோடவே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அரவிந்தன்.
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top