• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே... Anamika 41 அத்தியாயம்28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே...

Anamika 41
அத்தியாயம் 28

வைஷாலி, வானதி, கதிர் தமது தவறுகள் புரிந்தாலும் அமைதியாகத் தான் இருந்தார்கள்..
கதிர் தான் வெக்கித்து போனான் தங்கை மேல் கண்மூடித்தனமான பாசத்தில் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டான்..

இன்றைக்குக் குற்றவாளியாகிப் போனானே ..தங்கையைத் தான் வளர்த்த விதம் தவறு எனப் புரிந்து விட்டாளும் மௌனம் சாதித்து இருந்தான் ..

கதிருக்குக் கயலை விட வைஷு இப்போது பெரிதாகத் தெரிந்தால் அவளிடம் மன்னிப்பு கேட்க அவளது வருகைக்காகக் காத்திருந்தான் ..

வைஷாலியால் தான் அறிந்தவற்றை ஏற்றுக்கொள்ள மனதில் பக்குவமற்று இருந்தாள்.
தாயைத் தேடும் கன்று போலத் தான் அவளும் தன் அன்னையைத் தேடினாள் ..

வானதியோ தான் அறிந்தவற்றை நினைத்துக் கதறினாள் என்ன தான் செய்வது விதியல்லவா

ஆவேசமாய் எழுந்தவள் தன் பலம் முழுவதையும் திரட்டி கௌதம தாக்கி துடி துடித்துக் கதற விட்டிருந்தாள்..

சக்தியும் வேடிக்கை தான் பார்த்தான் ...

கதிரும் எழுந்து வந்தவனோ கௌதமது சேர்ட் கொலரை பிடித்து டேய் பாசம் என்பது உனக்குத் தெரியுமா டா எனக்கு அம்மா அப்பா பாசமே தெரியாது டா எனக்கு எல்லாமே தங்கச்சி தான் அது தாண்டா கண்மூடித்தனமா நீ சொன்னதாலாம் செய்தேன் ஆனால் நீ செய்த தவற மூடி மறைக்க நினைத்து எத்தனை ஈனச் செயலை செய்திருக்கிறாய். உனக்கு அம்மா என்ற உலகமே இருந்த தடா அப்போது ஏன்டா போதை போதைனு சிற்றின எனக் கேட்டு அவனது பங்கிற்கும் அடித்தான்..
டேய் நான் பலி வாங்கத் தான் வந்தேன் சக்தியை அதற்கு தான் வைஷுவையும் கஷ்ட படுத்திருக்கிறேன். ஆனால் என் கண் முன்னே வைஷு குழந்தைகளை இழந்து துடி துடித்தபோது எப்படி இருந்தது தெரியுமா அப்போதும் சக்தி மேல் தான் கோவமே வந்துச்ச தவிர உன் மேல் சந்தேகம் கூடே வரலை டா நீ எல்லாம் என்ன மனிதன் டா எனக் கேட்டு அடித்தாலும் கௌதமின் உடலில் உயிர் மட்டுமே தான் இருந்தது சக்தி முழுதும் வடிந்து போயிருந்தன. அதனால் அவனுமே மயங்கித் தான் போயிருந்தான்..

வைஷாலியோ அழுகையை கட்டுப்படுத்த இயலாமல் அழுதே விட்டிருந்தாள்...

யாருமே ஏதுமே சொல்லவோ கேட்கவோ இல்லை

நொடிகள் கடந்தன வைஷாலியின் இல்லம் நுழைந்த சங்கரன் குமாரிடமும் மீனாட்சியிடமும் நல்ல விதமாகப் பேசி தன் பிள்ளைகளை அழைத்துச் செல்ல நினைத்தான் ..

மீனாட்சியோ நல்ல விதமாக உபசரித்திட அவரது பாச வார்த்தைக்குக் கட்டுப் பட்டு அவர் கொடுத்த ஜுசை தண்ணீர் போல மடமடவென குடித்தவனோ குழம்புவதாகக் கூறி விடை பெற எழும்பும் போது மயங்கிச் சரிந்தான் குமாரோ பதற மீனாட்சியோ அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்..

அவன் வந்ததைத் தெரிவிக்க வைஷாலிக்கு அழைக்கச் சக்தி தான் எடுத்தான் அவரும் விபரம் கூறுகையில் அவனோ பதாறாதீங்க மாமி அவன் நல்லவன் இல்லை நான் சொல்லுவது போலச் செய்து விடுங்கள் எனச் சொல்லி ஜுசில் தூக்க மாத்திரையைப் போட்டுக் கொடுக்க சொல்லிருக்க அவரும் செய்திருந்தார்..

சில மணி நேரத்தில் சக்தி வைஷாலி, வானதி, கதிரோடு அங்கு அழைத்து வந்திருந்தான் ...

குமாரோ தன் மகளது முகத்தைப் பார்த்துப் பதறி செல்லம் என்னாச்சுடா என கேட்டுப் பதறித் துடித்தவரைச் சக்தி வெறுமையோடு பார்த்தான் என்றால் மீனாட்சியோ மகளை அழைத்து அமர வைத்து சேலை முந்தியால் முகம் துடித்து விட்டார்.

சங்கரனைக் காணக் காண சக்தியாலும் அவனைப் பற்றி அறிந்த மற்றவர்களும் முகசுழித்து பார்த்து வைக்க வைஷாலியோ எழுந்து அவன் அருகிலே வந்தவளது கை பற்று அவன் குடித்து வைத்த ஜூஸ் கிலாஸ் வீழ்ந்து உடைத்துப் போக அவனது மயக்கம் தொழிந்ததோ இலேசாகக் கண்களைத் திறந்து மூடினான். வைஷாலியோ உடைந்த கண்ணாடி துண்டை எடுத்துப் பார்க்க மீனாட்சி, வானதி பயத்தோடு பார்த்தார்கள் என்றால் சக்தி அவளது அடுத்த செயலை உணர்ந்து இருந்தான். அவனது எண்ணம் பொய்யல்ல என்பது போல வைஷாலி அவனது கழுத்தில் ஏற்றிருந்தால்.

குமாரோ அதிர்வோடு மகளைப் பார்க்கப் பிள்ளைகளோ அச்சத்தோடு மீனாட்சி கால்களைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள்..

குமாரோ அதிர்விலிருந்து மீண்டு வைஷாலி என்ன பண்ணி வைத்திருக்க நீ உன் புருஷன் மா எனப் பேசுபவரைக் கண்களை நேராகப் பார்த்து

பா இவன் பொய்யா நடித்துக்கொண்டான் என்ன ஒரு பகடைக்காயா நினச்சுட்டான் பா

என்ன மா சொல்லுவ செல்லம்

ஆமா பா இவன் பொய்யன் பா
போதைப் பொருள் கடத்தல் பயின்றவன் பா என்ன நம்ப வைத்து ஏமாத்திட்டான் பா நான் ..நான் கும்பிட்டேனே பா. எனத் தலையிலே அடித்துக்கொண்டு கதறி விட்டாள்..



குமாரோ அதிர்வோடு மகளை பார்த்தவரோ மீனாட்சி அருகிலே வந்து என்ன பண்ணி வச்சுருக்க பார்த்தா புள்ளை வாழ்க்கையே பார் என்ன நிலையிலே இருக்குதுனு உன் புள்ளையா இருந்து இருந்தாள் இவனைப் பொன்னுக்கு பேசுரபோ மருத்தாவது பேச்சிருப்பே தானே
இப்போது பார் என் புள்ளை நிலைமையே அவள் வாழ்க்கையும் போயி அவள் கொலை காரியா மாரிட்டாளே உன் புள்ளையா இருந்திருக்க இப்படி ஆக விட்டிருப்பாயா எனக்கேட்டு வைத்தார் ..மீனாட்சியோ அவரை தான் பார்த்திருந்தார். அதிர்ச்சியில் சிலையா போயிருந்தாள்..

அவர்கள் புள்ளை இல்லை என்றாலும் அவளுக்காக தன் வாழ்க்கையே தியாகம் செய்திட்டு இருக்கிறார்களே!

தன் பெற்ற புள்ளங்களையும் பரி கொடுத்துட்டு இருக்கிறார்களே!!
அது தெரியலையா புள்ளைங்க தவறிட்டுனு நினைத்துக்கொண்டு இருகாங்கே என்று சொல்லும்போது மயங்கிச் சரிந்தார் மீனாட்சி

அதே நேரம் உள்ள நுழைந்தனர். கணேசனும், ராஜேஸ்வரியும்.

குமாரோ அதிர்வோடு சக்தியைத் தான் பார்த்தார் என்றால்..வைஷாலியோ அதிர்வோடு மேலும் அதிர்வில் உறைந்து போனாள் .ராஜேஸ்வரி தான் மீனாட்சி யை பிடித்து தண்ணீர் கொண்டு கொடுத்தாள் வானதி ராஜேஸ்வரி தான் மீனாட்சி முகத்தில் அடித்து தண்ணீர் பருகச் செய்தார் ..

சக்தியோ அனைத்தையும் நிதானமாய் சலனமின்றி பார்த்திருந்தான்

என்ன நீங்கச் செய்த தவறுகளுக்கு அவர்கள் மேல் பலி போட்டுத் தப்பிக்க நினைக்றிங்களா?

என்னைக்காச்சும் உங்கள் பொன்னிடம் இவர்கள் தனிப்பட்ட முறையில் உரிமை எடுத்துக்கொள்ள விட்டு இருக்கிறீர்களா சொல்லுங்கள்

குமாரோ தலையைக் குனிந்து விட்டார்..
மீனாட்சியோ கணவரைத் தான் மயக்க நிலையிலும் பார்த்திருந்தார். அவரது எண்ணமெல்லாம் தன் கணவர் சொன்னதைச் சுற்றியே தான் இருந்தது ...

என்ன தலையே குனிந்து நின்னா சரியா சொல்லுங்கள்

ஆமா அவர்கள் புள்ளங்களை பரிக்கொடுத்தாங்களா
இல்லை நீங்க பிரித்து கொடுத்துட்டிங்களா

குமாரோ சக்தியை அதிர்ச்சியோடு பார்த்தார் என்றால் மனைவியைப் பயத்தோடு தான் பார்த்தார்..

மீனாட்சி மயக்க நிலையிலே இருந்ததால் சரியாக எதுவுமே புரிய வில்லை ..

வைஷாலி தான் இங்க என்ன தான் நடக்கிறது ஆளாளுக்கு என்ன பேசுறிங்க. நான் யார் அப்பா அம்மா அம்மா என்னாச்சுமா ஏனமா அப்பா என்னமோ சொல்கிறார் ..நான் யார் மா எனக் கேட்கும் போது

ராஜேஸ்வரியைப் பார்த்து கணேசனோ இன்னும் எதற்கு அமைதியா இருக்கிறேன் இதற்கு மேலும் ஏன் மறைக்கவேண்டும்..

ராஜேஸ்வரியுமே பயத்தோடு மீனாட்சியைத் தான் பார்த்திருந்தார்...

உன் அம்மா இவள் இல்லமா அவள் பெயர் தேவகி

தேவகி குமார் இருவருமே காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டார்கள் ..அதன் பரிசாகத் தான் வைஷாலி கிடைத்திருந்தாள். தேவகிக்கு அதிகமாகக் கோபம் வரும் எதையும் முன் யோசிக்காது செய்து வைப்பார்.. அது போல குமாருடன் சண்டை போட்டு விட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றவர் வீட்டுக்கு உயிரில்லா உடலாகத் தான் வந்தார் ஆறு மாத குழந்தை வைஷாலி தான் அழுது தீர்த்தாள் என்றால் உடைந்தே போனார் குமார். இதற்காகவா ஆசை ஆசையாய் காதல் செய்து திருமணம் செய்தது

குமாரோ தனிமை தனிமை என இருக்க வைஷாலி ராஜேஸ்வரி இடமே தான் இருந்தாள் ..வைஷாலியோடு ராஜேஸ்வரியும் கணேசனும் தனது தோழி ஒருத்தியின் மகளது திருமணத்துக்குச் சென்றிருந்தார்கள்.

அங்குக் குழந்தையோடு ஓரமாக ராஜேஸ்வரி அமர்ந்திருந்தார் பிஞ்சி குழந்தையைப் பார்த்து கண்ணீர் விட தான் முடிந்தது அவசரப் புத்தியால் குழந்தையைத் தவிக்க விட்டுச் சென்று விட்டாளே

அவரது அருகிலே வந்து அமர்ந்தாள் மீனாட்சி தேவதை தான் அவள் ராஜேஸ்வரியிடம் கையை நீட்டி குழந்தையைக் கேட்டாள். அவரும் அந்த அழகு முகத்தினை கண்டவருக்கு இயல்பு போலக் குழந்தையைக் கொடுத்தார் ..அவளோ குழந்தையைக் கொஞ்சப் பிள்ளையும் அவளது தாவணியைப் பிடித்து கிழுக்கி சிரித்தது ராஜேஸ்வரிக்கு மகிழ்ந்தே போனார்...
அதன் பின்னனே நேரம் முழுவதும் அவளிடம் தான் குழந்தை இருந்தது அவர் அங்கிருந்து வந்த பின் தான் பிள்ளையுமே தாய் ஒருத்திக்காக ஏங்கி அழ ஆரம்பித்துக் காய்ச்சலுமே பிடித்து விட்டிருந்தன ..

கனேஷனும் ராஜேஸ்வரியும் பல போராட்டத்தின் பின் குமாரை மறு திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளச் செய்தாலும் ..எதிர் பாராதொரு நாள் மீண்டும் மீனாட்சியைச் சந்திக்க நேர்ந்தது பிள்ளையையும் அவள் கொஞ்சி விட்டுத் தான் சென்றால் அதன் பின் வைஷாலி மீண்டுமே காய்ச்சலில் விழ ராஜேஸ்வரிக்குப் புரிந்தது பிள்ளை தேடுவது தாயாக ஒருத்தியை மற்றுமல்ல தாயின் இடத்திலே மீனாட்சியை தேடுவதைத்தான்.

அதன் பின் மீனாட்சியைப் பற்றி விசாரித்திட அவள் ஒரு ஏழைத் தாய் இல்லை தந்தை மற்றும் அக்கா ஒருத்தியும் தம்பியும் தந்தையோடு அவளும் கஷ்டமாக இருந்தாலும் அன்பாக வாழ்பவர்கள் ..

ராஜேஸ்வரி எடுத்துச் சொல்லி மீனாட்சி குமாரைத் திருமணம் செய்தால் அவளது அக்கா மீனாக்கும் திருமணம் எக்குறையின்றி செய்து வைப்பதாகவும் தம்பிக்கு நல்ல படிப்பைக் கொடுப்பதாகவும் சொல்லி விட்டு யோசித்துச் சொல்லுமாறு சென்றிருந்தார்.

அது போல மீனாட்சி தந்தைக்காக ஒத்துக்கொண்டார் திருமணமும் நடந்தது ..
வைஷாலிகாக செய்த திருமணம் தானே குமாரோ மீனாட்சியை ஒரு ஆலாகவும் மதித்தது இல்லை.

காலம் கடந்தது வைஷாலிக்கு இரண்டு வயதான பின்பு தான். குமார் மீனாட்சியின் மேல் அன்புக்கொண்டு அவரை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
மீனாட்சி பிள்ளை உண்டான பின் உடல் கொஞ்சம் ஒத்துக்கொள்ளா நிலையிலே வைஷாலியை கொஞ்சம் கவனிக்க மறந்தார். அதில் வைஷாலிக்கு காய்ச்சல் வந்தது ராஜேஸ்வரி தான் கண்ட விதமாய் திட்டி விட்டார்..


உனக்கு என்ன அவசரம் இப்போது எதற்குப் புள்ளை அது இதென
பேசி பிள்ளைப் பேறு நடந்தது
எங்க தன் பேத்தி மறுபடி தாய்ப் பாசத்திற்கு ஏங்கி போய்விட போறாளோனு பயந்து பிள்ளை கிடைத்த மறு நொடிய மீனாட்சி விழிக்கும்முன் பிள்ளையைப் பிரித்து எடுத்துச் சென்றிருந்தார்..

இதனைக் கூறி முடிக்கும் போது வைஷாலியோ

பாட்டி பாட்டி அப்போது அந்த புள்ளை எங்கே பாட்டி என்ன செய்திங்க என அவரை உலுக்க மீனாட்சி விழிகளோ அழுதது

ராஜேஸ்வரியோ இருக்கா இருக்கா எல்லோருக்குமே தெரியும் அவளை என்கையிலே மீனாட்சியிடம் இருந்து அழுகையோடு கேவல் சப்தமும் வந்தது வாயை கையால் பொத்திக்கொண்டு அழுது விட்டார்

சொல்லுங்கள் பாட்டி என உலுக்கினால் ..

வைஷ்ணவி என சப்தமாய் சக்தியிடமிருந்து வந்தது

வைஷ்ணவி யா? என வானதி, கதிர் மற்றும் குமார் என எல்லோரும் கேட்க

ராஜேஸ்வரியுமே ம்ம் எனப் பதில் தர குமார் தான் தன் தாயையும் தந்தையும் உண்மை தானா எனப் பார்த்திருந்தார்..

மீனாட்சி இடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் குழந்தையை அழிக்கச் சொல்லி அவரோ எப்படி அழிப்பார் யாரோ பெற்ற குழந்தைக்குத் தாயாக வந்தவருக்கு தன் கருவில் உதித்த மொட்டை முலையிலே பிய்த்து எறியச் சொன்னால் யார் தான் செய்வது தாய்மை என்பது வரமல்லவா ஏழ்மையாகப் பிறந்து வளர்ந்தவருக்குப் பணத்தை விடப் பாசம் பெரிதல்லவா

மீனாட்சியிடம் குமார் கூடே எவ்வளவோ சொல்லியும் கேட்க வில்லை ..வைஷாலிக்கு சொல்லி இருந்தார் மீனாட்சி பாப்பா வரும் உங்களோடு விளையாட என்று அதிலிருந்து அவளுமே குழந்தைக்காகக் காத்திருந்தாள் ...

பிள்ளைக்கிடைத்த நொடி ராஜேஸ்வரி பணத்தின் மூலம் குழந்தை வைஷுவை பிள்ளை இல்லாதவர் யாரிடமாவது கொடுத்திடச் செய்தார் குழந்தையின் முகத்தைக் கூட அவர் பார்க்க வில்லை.

அதன் பின் வைஷாலிக்கு மூன்று வயது நெருக்கத்திலே டீவியில் செய்தி ஒன்றிலே பாண்டியன் கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்ட குழந்தை என்று அவளது புகைப்படம் காணொளி என ஒவ்வொரு அலைவரிசையிலும் போய்க் கொண்டிருக்கையிலே தான் ராஜேஸ்வரியும் பார்த்தார்..

அவரது உடலோ அவ்வளவு அதிர்வைத் தந்தது அப்போதே ஓர் அழைப்பு உங்கள் வீட்டு வாரிசு நீங்களா வந்து எடுத்து போங்க இல்ல நீங்கச் செய்ததுக்குப் பல பிரச்சனையே சந்திக்க வேண்டும்..என புது குரல் ஒன்று சொல்லி வைத்தது கணேசன் தான் ராஜேஸ்வரியைச் சமாளித்து புள்ளையை வீட்டுக்கு அழைத்து வந்திருந்ததும் எல்லோரிடம் தன் மகள் குழந்தை என்றும் சொல்லி வைத்தார்கள்..

மீனாட்சி நெருங்கினால் எங்குத் தாய் பிள்ளை நெருக்கம் உணர்த்தி விடுமோ எனப் பயந்து மீனாட்சியை வைஷுவிடம் நெருங்க விடுவது கிடையாது. வைஷாலியை காரணம் காட்டுவதுண்டு
அதனால் தான் மீனாட்சி வைஷாயிடம் மட்டுமே பாசம் எல்லாமே வேறு யாரையுமே அவர் கொஞ்சுவதே இல்லை. அதோடு அவருக்கு சில நேரம் வைஷுவை கொஞ்ச முத்தமிட ஆசை வரும் வைஷு அழும் நேரமெல்லாம் நெஞ்சத்தில் வலியோடு பாலும் சுரக்கும் ..அவரோ படாத பாடு பட்டுப் போவார்.ஆனால் வைஷுவை நெருங்க மறுத்தார் தான் ராசி கெட்டவள் என நினைத்தவர் எதிலுமே தலையிடுவதுக் கூடகிடையாது அவளைக் காண்கையிலே யாரும் திட்டு முன் அவர் திட்டுவது சபிப்பது போல நடப்பார் ஆனால் அவர் யார் கண் பார்வைக்கும் தெரியாமல் சந்திப்பதுண்டு வைஷ்ணவி கூட மற்றும் தான் அவர் பூங்காவில் இருப்பது வைஷுக்கு அவர் தான் பசி எனத் தவித்து இருந்தவளுக்குப் பசி தீர வயிறு நிறைய உணவு ஊட்டினார் அதிலிருந்து அங்கு இருவருமே சந்திப்பதுண்டு
சக்தியும் பல முறை கண்டதும் இவர்களைத் தான்

மீனாட்சி அதனையுமே கேட்டு விட்டு பலகீனமான உடலைக் கஷ்டமாக இருந்தும் எழுந்து நடந்தவரை ராஜேஸ்வரி கையை பிடிக்க அவர் முகம் பார்க்காது கையை பிரித்து விட்டவர் தன் அறை நோக்கிச் சென்று கதவடைத்து கதவிலே சாய்ந்து வாய் பொத்தி அழுதார்..

கண் முன் சின்ன சிட்டாய் துள்ளி ஓடிச் சிரித்த வைஷு வந்து போனால்..

அவர் புள்ளை இறந்து விட்டது என்று தோட்டத்திலிருந்து அழும் சமயம் எல்லாம் தூரமாய் நின்று அவரை பார்க்கும் வைஷு நினைவில் வந்தாள் ..
ஒரு முறை அவரது கண்ணீரைத் துடைத்து விட்டும் சென்றிருந்தாள் அந்நேரம் அவர் பட்ட வலிகள் கூட ஒன்றுமே இல்லாமல் போயிருக்கும்

ஏன் எத்தனை முறையோ கணவரிடம் சொல்லிருப்பார் நமக்கு பொண்ணு தான் பிறந்தது என்று குமார் தான் ஆண் பிள்ளை என்று சாதித்திருந்தார்..

கணவன் பணக்காரன் என்று அவர் ஆடம்பரமாய் இருந்ததே கிடையாது ..

வெளியில் இருந்த அத்தனை பேருமே அவ்வறைக் கதவைத் தான் பார்த்திருந்தார்கள்..

சக்தி தான் மீண்டும் குமாரைப் பார்த்து நினச்சு பார்த்திருக்கிறீர்களா வைஷு உங்கள் பொன்னா இருப்பாளா என்று கேட்க

குமாரோ தாயையும் தந்தையும் தான் பார்த்தார்..

சக்தியோ உங்கள் பங்கிற்கு மீதியும் சொல்லிடுங்க எனக்கூனான்

குமாரோ நான் நான் தவறு செய்திருக்கிறேன்..

வைஷாலிகாக தான் என்றாலும் என்னிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று மீனா கேட்டதே கிடையாது அவள் வைஷாலிகூடே நிறைய பாசமாகத்தான் இருந்தாள் நான் தான் புள்ளை வந்தாள் மாறி போய்விடுவாள் என்று பயந்துகொண்டேன் ..அவள் என்விடம் கேட்டது வயித்துல உள்ள பிள்ளையைத் தான் ..ஆனால் நான் நான் தாமதமா தான் ஹாஸ்பிடல் போயிருந்தேன் ஆப்போ அவள் பக்கத்தில் ஆண் குழந்தை தான் இருந்தது அதை நான் தூக்கிட்டு போயி எனும் போது

நிறுத்துங்கள் பிலீஸ் நான் எதிர் பார்கல என்னை இப்படி முட்டாளா நினைத்து ஏமாற்றுவிங்க எல்லாரும் என்று என் வயிற்றுல வளர்ந்த இரு பிள்ளைகளையும் தொலைத்துக்கொண்டு நான் பட்ட வலி தெரியுமா ஆமா நீங்க ஆண்பில ஆனால் நீங்க பொம்புல தானமா என் வலி உங்களுக்குத் தெரியாமல் போயிடுச்சா நான் பால் கட்டி மார் வலி என்று துடித்தேனே அதே புரிச்சிக்க இந்த மனுஷனுக்கு(குமாரைப் பார்த்து) தான் தெரியவில்லை நீங்களும் (ராஜேஸ்வரியைப் பார்த்து) தெரியாமல் எப்படி எல்லாம் பேசுனிங்க தெரியுமா?

ராஜேஸ்வரி என்ன சொல்லி தன் தவற்றை மறைப்பது காலம் கடந்த தவறல்லவா

எனக்குத் தெரியும் என் வயிற்றில் இரண்டு உயிர் இருந்தது ஒன்று என்றே அழி அழி என்று சொல்றவங்க இரண்டு என்று தெரிந்தால் விடுவங்களா? பிள்ளை கிடைக்கும்போது முகம் பார்த்தால் மனசா மாத்திடுவிங்க என்று நினைச்சன்..
ஆனால் இப்படிச் செய்து வலியே பரிசளிப்பிங்க என்று நினைக்கவே இல்லை

என் மகன் எங்க என்றாவது தெரியுமா அழுகையோடு தான் கேட்டார் மீனாட்சி

தெரியாது என்று கூறியவரது சேர்ட் கொலரை பிடித்து நான் என்ன பாவம் செய்தேன் சொல்லுங்களேன் நா பாவி யா ஐயோ நம்பினேனே நான் ஏழையா பிறந்தது தவறா நான் என்ன செய்வேன் காலம் போச்சுதே என்னையே சந்தேகபட்டிங்களாங்கே எனக் கேட்ட போது குமாரோ மனைவியைப் பயத்தோடு பார்த்தார் ..அவர் மனைவியை சந்தேகம் கொண்டதே இல்லையே அவர் இவ்வாறு கேட்ட போது அவரது இதயம் நின்று துடித்தது

மீனாட்சியோ அழுகையோடு தன் அறைக்குள் சென்று விட்டார்..

ராஜேஸ்வரி குமாரிடம் நிஜமாக மீனாட்சிக்கு இரண்டு புள்ளங்களா?

தெரியாதமா நான் பார்த்த போ ஒரு புள்ளைத் தான் இருந்தது ..

நான் பார்த்த போதுமே வைஷு மற்று தா இருந்தாள்..

மீனாட்சிக்குப் பிரசவம் நடந்தபோது வேதா எனும் தாதி இருந்தாள் அவளைப் பணத்தைக் காட்டி ராஜேஸ்வரி தான் வைஷுவை கொடுக்க சொல்லிருந்தார்..
வைஷு பிறந்து அறை மணித்தியாலம் பின்னே ஆண் புள்ளைக் கிடைத்தது அதைத் தான் குமார் எடுத்துச் சென்று வேறொரு தாதி மூலம் யாருக்காவது கொடுக்கச் செய்திருந்தார்..

சங்கரன் உயிர் சிறுக சிறுக பறந்தது சிறிது நேரத்தில் சில ஆட்கள் வந்தார்கள் அவர்கள் சங்கரனையும் அவனோடு வைஷாலியையும் அழைத்துச் சென்று விட குமார் தடுக்காமல் இருந்தார்..

எந்த பிள்ளைக்காக இரு பிள்ளைகளைத் தொலைத்தாரோ அந்த பிள்ளை இப்போது வாழ்க்கை இழந்து கொலைகாரி என்ற பட்டத்தோடு நிற்கிறாள்

வீடு அமைதியாக இருந்தது
குமார் கண்ணில் மூன்று வயதுடைய வைஷுவும் பிறந்த ஆண் குழந்தை முகமுமே தான் வந்து போனது அவரது விழிகள் அழுதது ..

செய்தது மகா தவறல்லவா மன்னிப்பு உண்டோ

சக்தியோ வந்த வேலை முடிந்தது போல வானதி, கதிர் உடன் சென்று விட

கணேசன் தான் என்ன இருவரும் இப்படியே இருந்தால் எல்லாம் சரி ஆயிடுமா?

மீனாட்சியையும் பார்க்கவேண்டும் வைஷாலியையுமே பார்க்கவேண்டும் என்ற போது தான் மீனாட்சி நினைவு வந்தது ..

மீனாட்சி அறைக் கதவை மூடி வைத்திருந்தார்..

சக்தியோ காரில் பயணமானான் அவனது கையில் அந்த மோதிரம் இருந்தது அது தானே அவனுக்கு உண்மை சொன்னது...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top