• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பால் கொழுக்கட்டை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
View attachment 8152
தேவையான பொருட்கள்:-
புழுங்கலரிசி - 1 ஆழாக்கு ( 200 கிராம்)
வெல்லம் - 200 கிராம்
தேங்காய் - அரை மூடி
க.பருப்பு - 50 கிராம் (கால் ஆழாக்கு)
ஏலக்காய் - 2
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை :-
1 ஆழாக்கு புழுங்கலரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனை இட்லி மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ( அடுப்பில் வைக்கும் முன்பே) ஊற்றி கொள்ளவும். பின்னர் அடுப்பில் வைத்து வதக்கிக் கொள்ளவும் ( இடியாப்ப மாவு பதத்தில்) . பின்னர் அந்த மாவை நன்கு பிசைந்து குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். குக்கரில் கடலைப் பருப்பை 2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். 3/4 பதம் வேக வைத்தால் போதும். உருட்டிய உருண்டைகளை நான்கு பாதியாக பிரித்து கொள்ளவும். உருண்டைகளை ஒரு பத்து நிமிடம் ஈரம் உலர காய விடவும்பின்னர் அந்த கடலைப்பருப்பு பாத்திரத்தில் முதல் ஒரு பங்கு உருண்டையை போடவும் ( அதில் தண்ணீர் 2 டம்ளர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்) உடனே கிண்ட கூடாது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து லேசாக கிண்ட வேண்டும். இன்னொரு ஐந்து நிமிடங்கள் கழித்து நன்றாக கிண்டி விட்டு இன்னொரு பாதி உருண்டையை போடவும். உடனே கிண்டாமல் ஐந்து நிமிடங்கள் கழித்து லேசாக கிண்டி அடுத்த ஐந்து நிமிடத்தில் நன்றாக கிண்டி அதே போல் மற்ற உருண்டைகளையும் வேக வைத்து கொள்ளவும். பின்னர் வெல்லத்தை வேறு பாத்திரத்தில் 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு லேசாக கொதிக்க வைத்து இந்த உருண்டைகளோடு சேர்க்கவும் ( அப்போது தான் வெல்லத்தில் மண் இருக்காது) இனிப்பு கம்மியா வேண்டும் எனில் வெல்லம் கம்மியா சேர்த்துக் கொள்ளலாம். ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளலாம் ( எல்லா ஸ்வீட் டிஷ் லயும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் ரொம்ப தித்திப்பாக இருக்காது) பின்னர் தேங்காயை அரைத்து நன்கு கெட்டியாக 1/2 டம்ளர் பால் எடுத்து கொள்ளவும். பின்னர் தேங்காய் பாலை கொழுக்கட்டை பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின்னர் அதனை வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.




Paarthale saapidanum pola iruke... yummy recipe
 




Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,364
Reaction score
13,909
Location
CDM
Nan try panni irukean ka. Bt ella urundaiyum onna koatti kindiduvean adhula bathi karaicgudum.. intha tips super, ini ipd seirean??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top