• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பிரம்ம வைவர்த்த புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இப்புராணம் பற்றி….

பிரம்ம வைவர்த்த புராணம் பதினெட்டுப் புராண வரிசையில் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. இது தீவிரமான வைணவ புராணம் என்று சொல்லப்படுகிறது. இப்புராணம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவையாவன: 1. பிரம்ம காண்டம், 2. பிரகிருதி காண்டம், 3. கணபதி காண்டம், 4. ஸ்ரீ கிருஷ்ணஜன்ம காண்டம் முதலியன. நான்காவது காண்டம் பூர்வ உத்திர என்னும் இரு பிரிவுகளைக் கொண்டதாகும். 18000 பாடல்களையும் 266 அதிகாரங்களையும் கொண்டது.

இப்புராணத்தின் முக்கியக் குறிக்கோள், ஸ்ரீ கிருஷ்ணனின் தெய்வீகமான உலகியல் கடந்த திருவிளையாடல்களைக் குறிப்பதும், ஸ்ரீ கிருஷ்ணரின் சக்தியாகிய ராதைக்கும்
கிருஷ்ணனுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பதும் ஆகும். பிரம்ம வைவர்த்தம் என்ற பெயர் வந்ததே அனைத்தையும் கடந்து நிற்கின்றவன் - சக்தியாகிய ராதையோடு கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் அண்டங்கள் அனைத்திற்கும் தலைவனாவான் என்பதைக் குறிப்பிடுவதே ஆகும். "இந்த அண்டங்கள் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணனே நிரம்பியுள்ளான் என்பதும், அவன் மனோ வாக்கு, காயம் கடந்த மெய்ப்பொருள் என்பதும், அவனுள் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காணலாம் என்பதும் உணரப்பட வேண்டும் என்று இப்புராணத்தி லுள்ள ஒரு பாடல் கூறுவதால், இப்பொருள் அனைத்தையும் உள்ளடக்கிப் பிரம்ம வைவர்த்தம் என்ற பெயரால் இப்புராணம் குறிப்பிடப்படுகின்றது.

"வாக்கு மனம் கடந்தவனும், நிர்க்குன பிரம்மத்தின் வடிவாக உள்ளவனும், எவ்வித மாற்றமும் இல்லாதவனும், எவனிடமிருந்து பிரகிருதி பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய அனைவரும் தோன்றுகின்றனவோ அந்தக் கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று இப்புராணத்தில் உள்ள மற்றொரு பாடல் அவனுடைய துணையாகிய ராதை என்பவள், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி சாவித்திரி, காளி ஆகிய பல்வேறு சக்திகளின் உறைவிடமாவாள் என்தையும் இப்புராணம் வலியுறுத்துகிறது. பல பெயரிட்டு அழைத்தாலும், தெய்வங்கள் அனைத்தும் ஒன்றே என்பதை வலியுறுத்துவது இப்புராணம், ஸ்ரீகிருஷ்ணன் மகாதேவரைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும், மகாதேவர் கிருஷ்ணனைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும் இப் புராணத்தில் பல இடங்களில் வருவதால் "ஏகம்சத் விப்ர பகுதாவதந்தி’' என்ற வேத வாக்கியம் நிரூபிக்கப் படுகிறது.

முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய முனிவர்கள் ஒய்வெடுத்துக் கொண் டிருந்தனர். அந்த நேரத்தில் மிக நீண்ட யாத்திரைக்குப் பிறகு லோமஹர்ஷனர் மகனாகிய செளதி முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டவுடன் செளனகரும் மற்ற முனிவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “முனிவனே! ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையால் நாங்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாப் புராணங்களையும் அறிந்தவ ராகிய தாங்கள் எங்களுக்கு ஞான வழியைக் காட்டும் ஏதாவ தொன்றை அருளிச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.

செளதி முனிவர், "தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாப் புராணங்களையும் விட மிக உயர்ந்ததும், எல்லாப் புராணங்களின் சாரமாக இருப்பதும் ஆகிய பிரம்ம வைவர்த்த புராணத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் புராணத்தைக் கேட்பவர்கள் உலக இன்பத்தை விரும்பினால் அதைத் தரும். மெய்ஞ்ஞான வழியை நாடுகின்றவர்கட்கு விடுதலையைத் தரும். இப்புராணம் வந்த வரலாற்றை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனுடைய வரலாற்றைக் கிருஷ்ணன் கூறி, அதை முதன்முதலில் பிரம்மனுக்கு உபதேசித்தார். பிரம்மன் இதைத் தர்மனுக்கு புஷ்கர நதிக்கரையில் கூறினார். தர்ம தேவதை நாராயணனுக்குக் கூற, நாராயணன் நாரதருக்குக் கூற, நாரதர் வேதவியாசருக்குக் கூறினார். வேதவியாசர் இப்புராணத்தைச் செளதி முனிவருக்குக் கூற, செளதி முனிவர் நைமிசாரண்ய வனத்தில், செளனக முனிவருக்கும், மற்றும் குழுமியிருந்த முனிவர்களுக்கும் கூற ஆரம்பித்தார்.

இப்புராணம், நான்கு பாகங்களை உடையது. முதல் பாகம் உலக உற்பத்தி, தெய்வங்கள் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது பாகம் இந்த ஆண் பெண் தெய்வங்களின் இயல்புகள், அவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. இதே பாகம் சுவர்க்கம், நரகம் ஆகியவைகளின் பல்வேறு பகுதிகளைக் கூறுவதுடன் பல்வேறு நோய்கள், அவற்றைப் போக்கிக் கொள்ளும் வகைகள் ஆகியவற்றைக் கூறுகிறது. மூன்றாவது பாகம் கணேசர் என்ற தெய்வத்தின் தோற்றம், அவரைப் போற்றும் பாடல்கள், பிருகு முனிவருடன் கணேசன் நடத்திய உரையாடல் என்பவற்றைப் பற்றிப் பேசுகிறது. நான்காவது பாகம் கிருஷ்ணனுடைய பிறப்பு லீலைகள் என்பனவற்றை முக்கியமாகப் பேசுகிறது.

பிரளய காலத்தில், எல்லாம் அழிந்து ஒரு ஒளிப்பிழம்பு ஒன்று மட்டுமே இருந்தது. இந்தப் பேராற்றல் மூன்று உலகங்களையும் விழுங்கி வைத்திருந்தது. இந்த ஒளிப் பிழம்பின் மேலே வைகுந்தம், சிவலோகம், கோலோகதம் ஆகிய மூன்று மட்டுமே இருந்தன. பிரபஞ்ச உற்பத்தியின் பொழுது, வைகுண்டம் நாராயணன், லட்சுமி என்பவர்கள் வாழுமிடமாக இருந்தது. பிரளய காலத்தில் வைகுந்தம் காலியாக இருந்தது. சிவலோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்திக் காலத்தில் காலியான நரகம், பிரளய காலத்தில் சிவன் பார்வதி என்பவருடன் சிவ கணங்களும் இருந்தனர். கோலோகம் என்று சொல்லப்படும் மூன்றாவது உலகம் கிருஷ்ணன் இருப்பிடமாகும். இந்த லோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்தி, பிரளயம் என்ற இரண்டு நேரங்களிலும் அது நிறைந்தே இருந்தது.

ஏனைய புராணங்களைப் போல் அல்லாமல், கிருஷ்ணனைப் பரப்பிரம்மத்துடன் ஒன்றாக்கும் முயற்சியில் வைகுண்டத்தையும், கோலோகத்தையும் வேறு வேறு என்று சொல்லி, இந்த வேறுபாட்டைக் கற்பிக்கின்றது. கோலோகம் முழுவதும் ஒளியாய் நிரம்பி இருப்பதுடன், அந்த ஒளியினுள் ஆபரணங்கள் அணிந்திருப்பது போன்ற பல வடிவுகளைக் கொண்டது. இந்த வடிவம் மஞ்சள் உடையுடுத்து, கையில் குழலுடன் காணப்படுகிறது. இந்த வடிவம் சந்தனம் பூசிய உடலுடன் கெளத்துப மணியை மார்பில் பதித்திருப்பதோடு, ஸ்ரீவத்ஸ் முத்திரையும் மார்பில் பெற்றுள்ளது. இவ்வடிவம் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. ம்ணிகள் பதித்த கிரீடத்தையும் அணிந்துள்ளது. காட்டுப் பூக்களால் கட்டப்பெற்ற மாலையை அணிந்திருக்கிறது. இந்த வடிவமே பரப்பிரம்மம் என்று சொல்லப்படும்.

பிரபஞ்ச உற்பத்தி பின்கண்டவாறு நடைபெற்றது. தொடக்கத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. தண்ணீர், காற்று எதுவுமில்லை. தன்னைச் சுற்றி ஒருமுறை பார்த்த கிருஷ்ணன் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தார். இந்நினைவு வேறு எந்த வெளித் தூண்டுதலும் இல்லாமல் அவருள் எழுந்தது. கிருஷ்ணனின் வலப்புறத்தில் இருந்து நாராயணன் தோன்றினார். சத்தியம், நேர்மை என்பவற்றின் வடிவமாக அவர் இருந்தார். அவர் சங்கு சக்கரம், கதை, நீண்ட தடி, தாமரை, கெளஸ்துபம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தாங்கி இருந்தார். காட்டுப் பூக்களின் மாலையை அணிந்திருந்தார். நான்கு கரங்களுடன், ஸ்ரீவத்தவம் அணிந்த மார்புடன் காணப்பட்டார். கிருஷ்ணனின் புகழ் பாடிய நாராயணன், கிருஷ்ணனின் ஆணைக்குட்பட்டு எதிரே இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.

கிருஷ்ணனின் இடப்புறமிருந்து, தாமச குணத்தின் வடிவுடையவராய், இருண்ட நிறமுடையவராய் சிவன் தோன்றினார். கையில் திரிசூலத்துடன், சடையில் பிறைச் சந்திரனையும், மூன்று கண்களையும் உடையவராய் இருந்தார். கிருஷ்ணனின் கொப்பூழில் இருந்து நீண்ட தாமரை வெளிப்பட, அத் தாமரையில் வெண்மையான உடையணிந்த முதிர்ந்த தோற்றத்துடன் ராஜச

குணத்தின் வடிவாய் பிரம்மா தோன்றினார். நான்கு முகங்களும், கையில் கமண்டலமும் இருந்தன. பிரம்மனும், சிவனும் கிருஷ்ணனின் புகழ்பாடி, கிருஷ்ணனுக்கு எதிரே உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்தனர். கிருஷ்ணனின் மார்பிலிருந்து தர்மதேவதை தோன்றினாள். கிருஷ்ணனின் வாயிலிருந்து, வெள்ளை நிற உடையுடுத்தி ஒரு கையில் புத்தகமும், ஒரு கையில் வீணையும் கொண்டு கல்வித் தெய்வம் சரஸ்வதி அவதரித்தாள். கிருஷ்ணனின் மனத்திலிருந்து, தங்க நிறத்துடன், செல்வத்தின் அதிபதியான லட்சுமி தோன்றினாள். சொர்க்கத்தில் அவளுக்குச் சுவர்க்க லட்சுமி என்றும், அரசர்களிடையே ராஜலட்சுமி என்றும் பெயர் வழங்கப்படுகின்றன. கிருஷ்ணனின் நினைவுகளிலிருந்து, போர்த் தெய்வமான துர்க்கை தோன்றினாள். எல்லா தெய்வங்களும் கிருஷ்ணனைப் பற்றிப் பாடிவிட்டுத் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

கிருஷ்ணனின் நாக்கிலிருந்து தோன்றியவர் சாவித்திரி. சாவித்திரி மந்திரம் மிகப் புண்ணியமானதும், சக்தி வாய்ந்ததும் ஆகும். கிருஷ்ணனின் உணர்வு நிலையில் இருந்து மன்மதனும், மன்மதனின் இடப்பக்கமிருந்து ரதியும் தோன்றினர். பிறகு பஞ்ச பூதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

எங்கும் ஒரே நீர்ப்பரப்பு. அண்டம் என்ற பெயருடைய முட்டை கிருஷ்ணனிடம் இருந்து தோன்றியது. அந்த முட்டை யிலிருந்து ஒரு மாபெரும் வடிவம் தோன்றியது. இந்த வடிவமே விஷ்ணுவாகும். இவ்வடிவம் நீரில் மிதந்து கொண்டிருந்த பொழுது விஷ்ணுவின் இரண்டு காதுகளில் இருந்து மது, கைடவர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். இந்த இரண்டு அசுரர்களும் தாம் தோன்றிய உடனேயே பிரம்மனைக் கொல்ல முனைந்தனர். ஆனால் நாராயணன் அவர்களைத் தன் தொடைகளின் இடையே வைத்து நசுக்கிக் கொன்றார். அந்த இருவரின் சடலத்தின் கொழுப்பிலிருந்து உலகம் உண்டாயிற்று. மேதா என்று சொல்லப்படும் கொழுப்பிலிருந்து உலகம் உண்டானதால், அதற்கு மேதினி என்ற பெயர் வந்தது. (மற்ற புராணங்களில் உலகத் தோற்றம் பற்றிக் கூறியதற்கும், இப் புராணத்தில் கூறப்பட்டதற்கும் திறை வேறுபாடுகள் உள்ளன, )

(இதற்கு அடுத்தபடியாக பிரம்ம வைவர்த்த புராணம் காலம் பற்றிப் பேசுகிறது. இதனை முன்பே பிரம்ம புராணத்தில் கூறியிருக்கிறோம்),


கோலோகாவில், ரசமண்டலத்தில் கிருஷ்ணன் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது அவரது இடப்பாகத்தில் இருந்து, முழு அலங்காரங்களுடன் கூடிய, பதினாறு வயது மதிக்கத் தக்க பெண்ணொருத்தி தோன்றினாள். ரசமண்டலத்தில் தோன்றியதால் இவள் பெயர் ராதை என்றாயிற்று. (பதினெட்டுப் புராணங்களில் இந்தப் புராணம் ராதையைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. அடுத்தபடியாக பத்ம புராணம் போகிற போக்கில் ராதையின் பெயரைச் சொல்விச் செல்கிறது. இவை இரண்டு புராணங்கள் தவிர, வேறு எந்தப் புராணத் திலும் ராதையின் பெயரோ, அவளைப் பற்றிய குறிப்புகளே7 எதுவுமில்லை, டாகவதத்தில் கூட- கிருஷ்ணன் வரலாறு விரிவாகக் கூறப்பட்ட இடங்களில் கூட ராதையின் பெயரே இல்லை என்பது அறியத்தக்கது,) ராதையின் ஒவ்வொரு மயிர்க்காலில் இருந்தும் அழகு வாய்ந்த கோபிகைகள் தோன்றினர். கிருஷ்ணன் உடம்பு மயிர்க்காலில் இருந்து முப்பது கோடி கோபிகைகள் தோன்றினர். இவர்களை அல்லாமல், பசுக்கள், எருதுகள், குதிரைகள், சிங்கங்கள், அன்னப்பறவைகள் முதலியவை கிருஷ்ணனின் உடலிலிருந்து தோன்றின.

கிருஷ்ணன் தன் உடலில் இருந்து வந்த எருதை சிவனுக்கும், அன்னத்தை பிரம்மாவிற்கும், வெண்குதிரையை தர்ம தேவதைக்கும், சிங்கத்தை துர்க்கைக்கும் கொடுத்தார். ஐந்து அற்புதமான ரதங்கள் அவர் உடலினின்று தோன்றின. அவற்றில் ஒன்றை ராதைக்கும் ஒன்றை நாராயணனுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றைத் தானே இருத்திக்கொண்டார். செல்வத்தின் அதிபதியான குபேரன் கிருஷ்ணன் உடலில் இருந்து வெளிப்பட்டு, தானே மனோரமா என்ற பெண்ணை உண்டாக்கி அவளை மணம் செய்து கொண்டான். கிருஷ்ணன் உடம்பில் இருந்து, குபேரன் பணியாளர்கள், சிவன் பணியாளர்கள், நாராயணன் பணியாளர்கள் வெளிப்பட்டனர்.

லட்சுமியும், சரஸ்வதியும் திருமாலை மணந்து கொண்டனர். (சரஸ்வதி நாராயணனை மணந்து கொண்டார் என்ற இந்த விநோதமான செய்தி இந்தப் புராணத்திற்கே உரியது), பிரம்மன் சாவித்ரியையும், ரதி மன்மதனையும், மனோரமா குபேரனையும் மணந்தனர். துர்க்கையை மணந்து கொள்ளுமாறு சிவனை வேண்ட, அவர் தாம் துறவியாக இருக்க விரும்புவதாகவும், தமக்குத் திருமணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். இதை ஒப்புக் கொண்ட கிருஷ்ணன் ஒருகோடி கல்பங்களுக்குப் பிறகு சிவன் துறவியாக இருந்து விட்டுப் பிறகு துர்க்கையை மணந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இப்பொழுது பிரம்மனுக்கு அழகிய மாலை ஒன்றைக் கொடுத்து, ஆயிரம் தேவ வருஷங்கள் தவம் செய்ய வேண்டும்- அதன் பிறகு படைத்தல் தொழிலைச் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு, கோபிகைகளை அழைத்துக் கொண்டு பிருந்தாவனம் போய்விட்டார்.

கிருஷ்ணன் கூறிச் சென்றது போல், பிரம்மன், மது, கைடபர்களின் கொழுப்பினை எடுத்து உலகைப் படைத்தார். அடுத்து மலைகளையும், எட்டு முக்கியமான மலைகளையும் படைத்தார். அவை சுமேரு கைலாசம், மாலயா, இமயமலை, உதயசலா, அஷ்டசலா, சுபேலா, கந்தமாதனா என்பனவாகும். எண்ணற்ற ஆறுகளையும் கிராமங்களையும் படைத்தார். முதன்மை வாய்ந்த சமுத்திரங்களான லவண, இக்ஷி, சுரா, சர்பி, ததி, துக்தா, ஜலா ஆகியவற்றைப் படைத்தார். ஏழு துவீபங்கள் படைக்கப்பட்டன. இவற்றை அடுத்து ஏழு லோகங்களும், ஏழு கீழ் லோகங்களும் படைக்கப்பட்டன. இவை அனைத்தும் சேர்ந்ததே பிரம்மாண்டம் என்னும், மிகப்பெரிய வடிவத்தைக் கொண்ட முட்டை ஆகும். எண்ணிலடங்கா முட்டைகள், நுண்மையான வடிவத்துடன், விஷ்ணுவின் உடலில் உள்ளது. ஆனால் அவ்வுலகங்கள் அனைத்தும் நிலையில்லாத, பொய்யான தோற்றமுடைய கனவுகள் போன்றவையாகும். என்றும் அழிவில்லாத நிலைத்து நிற்கக் கூடிய லோகங்கள் வைகுந்த லோகம், சிவலோகம், கோலோகம் எனப்படும்.

பிரம்மாவின் மனைவி சாவித்திரி. நான்கு வேதங்களையும், முப்பத்தி ஆறு ராகினிகளையும் தாயாக இருந்து கவனித்துக் கொண்டார். இதன் பிறகே காலத்தைக் குறிக்கும் அளவுகள் படைக்கப்பட்டன. பிரம்மனின் கொப்பூழில் இருந்து, தேவ தச்சனான விஸ்வகர்மா தோன்றினார். அவரை அடுத்து அஷ்ட வசுக்கள் தோன்றினர். தன்னுடைய மனவலிமையால் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய முனிவர்களைப் படைத்தார். இவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுச் செய்யும்படிக் கூற அவர்கள் மறுத்து விட்டனர். அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட பிரம்மன் சினம் கொண்டு தன் நெற்றி யினின்று அக்னியை வெளியேற்றினார். அந்த அக்னியில் இருந்து ருத்ரன், அழிக்கும் தொழிலைச் செய்வதற்காகத் தோன்றினார்.

பிரம்மனின் உடம்பில் இருந்து பல்வேறு முனிவர்கள் தோன்றினர். இம் முனிவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுக்கொள்ளும்படிக் கூற நாரதர் மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், நாரதரைப் பார்த்து "துன்மார்க்க குணம் கொண்ட கந்தர்வனாகவும் பரப்பிரம்மம் பற்றிய ஞானம் அற்றவனாகவும், பணிப் பெண்ணின் மகனாகவும் பிறப்பாய்” என்று சாபமிட்டார். இதைக்கேட்ட நாரதர் பிரம்மனைப் பார்த்து "இனி மூன்று கல்பங்களுக்கு பிரம்மனை யாரும் வணங்க மாட்டார்கள்” என்று சாபமிட்டார். மற்ற முனிவர்கள் படைத்தல் தொழிலைச் செய்தனர். மரீச்சி யினின்று காசிப முனிவனும், அத்ரியிடமிருந்து சந்திரனும், பிரசேத்தா, புலஸ்தியர் ஆகியோரிடமிருந்து முறையே கெளதமரும், அகஸ்தியரும் தோன்றினர்.

(இதையடுத்துக் கூறப்பட்டிருக்கும் மனு ஷடரூபாவின் கதை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது).
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
உறவு முறைகள்

இனி, பிரம்ம வைவர்த்த புராணம் உறவு முறைகள் பற்றிப் பேசுகிறது. பிரம்மன் மக்களிடையே சில உறவு முறைகளை வரையறுத்தார். அவை பின்வருமாறு குறிப்பிடப் படுகின்றன.

தந்தை, பிதா, ததா, ஜனகா என்றும், தாய், மாதா, அம்பா, ஜனனி என்றும், தந்தையின் தந்தை பிதா மகன் என்றும், தாயின் தந்தை மாதா மகன் என்றும் அழைக்கப்படுவர்.

தந்தையின் சகோதரி பித்ரிஷ்வசா என்றும், தாயின் சகோதரி மாசுரி என்றும் அழைக்கப்படுவர். புத்ரா, தயதா, தனபகா, வீர்யஜா என்பவை மகனைக் குறிக்கும் சொற்கள். துஹிதா, கன்யா என்பவை மகளைக் குறிக்கும். வது என்பது மகனின் மனைவியையும், ஜமத்ரி என்பது, மகளின் கணவனையும் குறிக்கும். பதி, பர்த்தா என்பவை கணவனை யும், பத்ணி, பார்யா என்பவை மனைவியையும் குறிக்கும். மகனின் மகன் பெளத்ரன் என்றும், மகளின் மகன் தெளஹித்ரா என்றும் கூறப் பெறுவர்.



ஒரு மனிதனுக்கு ஐவகை தந்தையர் பொறுப்பு வகுக்கப் பட்டுள்ளது. அவை 1. ஜன்ம தாதா 2 அன்ன தாதா 3. பயத் ரதா 4 வித்யா தாதா 5. பத்னிபிதா ஆகியவை ஆகும். பதினான்கு வகையான பெண்கள், தாய் எனக் கருதப்படுவர். தாய், தந்தையின் தாய், தாயின் தாய், தந்தையின் சகோதரி, தாயின் சகோதரி எனப் பதினான்கு உறவு முறையினர் குறிக்கப்படுகின்றனர்.

ஒருவன் தன் ஆசிரியனுடைய மகன் அல்லது மகளைத் தன் உடன்பிறந்தவராகக் கருத வேண்டும். பெண்ணின் தந்தையும், மணமகனின் தந்தையும் சகோதரர்கள் போல் நடந்து கொள்ள வேண்டும். இம்முறைக்கு வைவஹிகா என்று பெயர். இவ்வுறவு முறைகள் அன்றி, வேறு உறவு முறைகளும் உண்டு. ஒரு நண்பரிடத்தில் உறவினன் போல் பழகுவது பிரிதிஜா எனப்படும். இப்படிப்பட்ட உறவுகள் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.

உபவர்ஹன

முன்னொரு காலத்தில் கந்தமாதனம் என்ற மலையில், வயது முதிர்ந்த கந்தர்வ தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். செல்வம் நிறையப் பெற்றிருப்பினும், குழந்தைச் செல்வம் வேண்டிச் சிவபெருமானை தியானித்தனர். சிவபெருமான் கொடுத்த வரத்தின்படி நாரதர் இவர்கட்கு மகனாகப் பிறந்தார். வசிட்டர் இக்குழந்தைக்கு உபவர்ஹனா என்று பெயரிட்டார். பெரும் மரியாதைக்குட்பட்டவன் என்ற பொருளில் இப்பெயர் இடப்பட்டது. இக்குழந்தை சிறுவனாக வளர்ந்தபின் தியானம் செய்யத் துவங்கினான். கந்தர்வர்களின் மன்னனாகிய சித்ரசேனாவின் பெண்கள் ஐம்பது பேரும், உபவர்ஹனாவை மணக்க விரும்பினர். வேறு வழியின்றி அவர்களை மணந்து கொண்ட உபவர்ஹனா ஒருநாள் பிரம்மனை தரிசிக்கச் சென்றான். அங்கு ரம்பா என்ற அப்சரஸைக் கண்டு மணம் புரிய விரும்பினான். இதனால் கோபம் கொண்ட பிரம்மன் அவன் இறந்து போகும்படி சபித்தார்.

உபவர்ஹனாவின் முதல் மனைவியாகிய மாலவதி கோபம் கொண்டு, தன் கணவனின் இறப்பிற்குக் காரணமாகிய பிரம்மன், சிவன், யமன் ஆகியோரை சாபமிடப் போவதாகக் கூறினாள். இதைக் கேட்ட தேவர்கள் விஷ்ணுவிடம் அடைக்கலம் தேடி ஓடினர். விஷ்ணுவும் ஒர் அழகிய பிராமண இளைஞன் உருவமெடுத்து, மாலவதியின் முன் தோன்றினார். தேவர்களைச் சமாதானப்படுத்தி உபவர்ஹனாவிற்கு உயிர் கொடுக்கும்படிக் கூறினார். பிரம்மன் புனித நீரைத் தெளிக்க சூரியதேவன் கண்பார்வை வழங்க, வாயுதேவன் மூச்சுக் காற்றை வழங்கினான். கிருஷ்ணன் உபவர்ஹனாவின் உடலின் உள்ளே புகுந்து உயிர் கொடுத்தார். பிராமண வடிவத்தில் இருந்த விஷ்ணு, மாலவதிக்கு இறப்பு பற்றியும், அதற்கான காரணங்களையும் எடுத்துக் கூறினார்.

சில காலங்களுக்குப் பின் உபவர்ஹனா இறந்துபோனான். மாலவதியும், அடுத்த ஜென்மத்தில் உபவர்ஹனாவே தன் கணவனாக வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு உயிர் துறந்தார். அடுத்த ஜென்மத்தில் சிரின்ஜயா அரசன், மனுவின் வழியில் தோன்றியவனுக்கு மகனாகத் தோன்றினான். இளவரசன் பிறப்பதற்கு முன், நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இக்குழந்தை பிறந்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்ததால், நீரைக் கொடுத்தவன் என்ற பொருள்படும்படி நாரதன் என்று அழைக்கப்பட்டான்.

நாரதர்

நாரதர் மிக இளம்பிள்ளையாக இருக்கும் பொழுதே காட்டிற்குச் சென்று கிருஷ்ணனை தியானம் செய்ய ஆரம்பித்தார். நீண்ட காலம் தியானம் செய்த பிறகு கிருஷ்ணன் எதிரே காட்சி தந்தார். அந்தக் காட்சியில் ஈடுபட்டு நாரதர் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ணன் மறைந்துவிட்டார். குழந்தை நாரதர் மிகவும் துயரம் அடைந்து அழத் துவங்கினார். அப்பொழுது அசரீரி மூலமாக "கவலைப் பட வேண்டாம்; இந்தப் பிறப்பு முடிந்ததும் உனக்கு பிரம்மத்தை அறிந்து கொண்டு அதனிடம் ஒன்றியிருக்கும் நிலைமை ஏற்படும்” என்று வந்தது. அதன்பிறகு பிரம்மா நாரதரை அழைத்து, 'பிரம்மசரியம், கிருஹஸ்தம் முதலிய நான்கு நிலைகளையும் ஒரு மனிதன் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே சென்ற பிறப்பில் மாலவதி என்ற பெயருடன் உனக்கு மனைவியாக இருந்தவள் இப்பொழுது சிரின்ஜய மன்னனுக்கு மகளாகப் பிறந்துள்ளாள். அவளுடன் வாழ்ந்து விட்டுப் பிறகு உன் வாழ்க்கையைத் தொடரலாம் என்று புத்திமதி கூறினான்.

இதன்பிறகு நாரதர், சிவனை தரிசிக்கக் கயிலை மலைக்குச் சென்றார். மிக்க அழகும் வானுயர்ந்த கட்டடங்களும் உடைய கயிலையில் நாரதர் சிவனை வழிபட்டவுடன் இவருக்குச் சில புத்திமதிகளைச் சிவன் கூறினார். குளித்தல், வாய் கொப்புளித்தல் முதலியவற்றை முறையாகச் செய்து விட்டு, கிருஷ்ணனை வழிபட வேண்டும். சிறப்பான வழிபாடு என்பது சந்தனம், பூக்கள், புதிய துணி ஆகிய வற்றை அணிவித்துப் பிரசாதம் படைத்து, கிருஷ்ணனை வழிபட வேண்டும். இன்னின்ன நாட்களில், இன்னின்ன உணவை உட்கொள்ள வேண்டும். இல்லறத்தில் இருப்போர் சோறு முதலியவற்றைக் குறிப்பிட்ட விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில் உண்ணலாம். ஆனால் துறவிகள் காய், கனி, கிழங்குகள் இவற்றை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

இதன்பிறகு நாரதர் பத்ரிகாசிரமம் சென்றார். அங்கே நாராயண முனிவர், பொன்னால் ஆகிய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி அப்ஸரஸ்கள், கந்தர்வர்கள் முதலானோர் அமர்ந்திருந்தனர். தம்மை வணங்கிய நாரதரை அமரச் செய்து கிருஷ்ண லீலைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

நாராயண முனிவர் சொல்லியவை

பிரகருதி என்ற பெயருடன் தலைமை மேற்கொண்டுள்ள ஐந்து பெண் தெய்வங்கள் உண்டு. துர்க்கை, ராதா, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி என்போர் ஆவர். இவர்கள் அதிகாரத்தின் கீழ் ஒருசில சக்திகளை மட்டும் பெற்றுப் பணிபுரிபவர்கள் கங்கை நதி, துளசிச் செடி, மானசா என்ற பெயருடைய பாம்புகளின் அதிதேவதை, ஷஸ்தி என்ற பெயருடைய பிறக்கும் குழந்தைகளின் தெய்வம், மஸ்களச்சண்டி, காளி, வசுந்தரா என்பவர் ஆவர். இவர்களை அடுத்துக் கீழ்ப்படியில் உள்ளவர்கள் அக்னியின் மனைவியாகிய சுவாஹா, யாகத் தலைவனின் மனைவியாகிய தட்சிணாத, சுவதா என்ற பெயருடைய பித்ரிக்களின் மனைவி முதலியோர். எல்லாப் பெண்களும் மூலப் பிரகருதியின் வடிவங்கள் ஆவர். தனிப்பட்ட ஒரு பெண்ணைக் கொடுமை செய்தாலோ, அவமானப்படுத்தினாலோ, பிரகருதியை அவமானப்படுத்திய தாகும். பெண்களை மரியாதையுடன் நடத்துவது, பிரகருதியை மரியாதையுடன் நடத்துவது போலாகும். பிரகருதிக்குரிய வர்கள் நன்னடத்தை, அன்புடைமை, கணவனைப் போற்றுதல் ஆகிய பண்புகளுடன் இருப்பர்.

ராஜசகுணத்தில் தோன்றுபவர்கள், சுயநலம் உடையவர்களாய், உலக இன்பங்களை அனுபவிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களாய் இருப்பர். தாமச குணத்தில் தோன்றுபவர்கள் பிறரிடம் சண்டை இடும் இயல்பினராய். நன்னடத்தை இல்லாதவராய் இருப்பர்.

பிரகருதி பரமாத்மாவினுள் ஐக்கியப்பட்டது. அது தனித்து இயங்குவதில்லை. பொன்னில்லாமல் ஒரு பொற்கொல்லன் எப்படி ஆபரணங்கள் செய்ய முடியாதோ, அதேபோல, குயவன் மண்ணில்லாமல் பானைகள் செய்ய முடியாதோ அதுபோல பிரகருதி இல்லாமல் பரமாத்மா படைத்தல் தொழிலைச் செய்ய முடியாது. தொடக்கத்தில் கிருஷ்ணன் தன்னையே இரண்டாகப் பிரித்துக் கொண்டான். வலப்பகுதி ஆணாகவும், இடப்பகுதி பெண்ணாகவும் வடிவெடுத்தான். இப்பிரகருதியே ராதா என்றும், ராதிகா என்றும் வழங்கப் படுவர்.

(இதன் பிறகு பிரம்ம வைவர்த்த புராணம் சரஸ்வதி கங்கை பத்மாவதி ஆகிய ஆறுகளின் தோற்றத்தையும், கலியுகத்தில் ஏற்படப்போகும் அதர்ம வளர்ச்சியையும் கல்கியின் தோற்றத்தையும், அதன்பிறகு ஏற்படப் போகும் பிரளயத்தையும் விரிவாகப் பேசுகிறது. பிரளயத்தின் முடிவில் மறுபடியும் சத்ய யுகம் வரப்போகிறது என்றும் இப்புராணம் கூறுகிறது).

வகந்தராவின் கதை

அடுத்தபடியாக நாராயண முனிவர் நாரதருக்கு வசுந்தரா அல்லது பிருத்வியின் கதையைச் சொல்லத் தொடங்கினார். இதுவரை மது, கைடபர்களைக் கொன்று அவர்கள் தசையினை எடுத்துக் கிருஷ்ணன் பூமியை உண்டாக்கினார் என்ற கதை வழங்கி வந்தது. இந்தக் கதையை நான் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. மது கைடபர்கள் தண்ணீர் இல்லாப் பகுதியில் தங்களைக் கொல்லவேண்டும் என்று எப்பொழுது வேண்டிக் கொண்டார்களோ அப்பொழுதே தண்ணிர் இல்லாத பகுதியும் உண்டு. அதாவது பூமியும் உண்டு என்பதை அக்கதை ஏற்றுக் கொள்கிறது. என்னைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருந்த பூமி அளவால் சிறியதாக இருந்திருக் கலாம். மது கைடபர்களின் சதையை நீர்ப்பகுதியில் போட்டு அதை உயர்த்தி பூமியோடு சேர்த்திருக்கலாம். அப்படியானால் இவர்கள் வதத்திற்குப் பிறகு பூமியின் அளவு பெரிதாக ஆகியிருக்கலாம். மது கைடபர்கள் சதையில் இருந்து பூமியின் ஒரு பகுதி வந்ததால் அதற்கு மேதினி என்ற பெயர் வந்தது. (மேதா என்றால் சதை என்று பொருள்)

இதன் பிறகு பிரம்ம வைவர்த்த புராணம் பிரபஞ்ச உற்பத்தியைப் பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு வகை உற்பத்தியை அடுத்தடுத்து கூறிக் கொண்டு செல்லுகிறது. இதன்படி முதல்வகை உற்பத்தி வரலாறு இங்கு தரப் பெறுகிறது.

தொடக்கத்தில் எங்கும் நீரே நிறைந்திருக்க, கிருஷ்ணன் மிகப் பெரிய வடிவத்துடன் தண்ணிரில் பல்லாயிரம் வருடங்கள் மிதந்து கொண்டே இருந்தார். எங்கும் இருந்த தூசியும் புழுதியும் கிருஷ்ணன் உடலில் படிந்து படிந்து இறுகிப் போய் அதுவே பூமியாக மாறியது.

இரண்டாவது வகை உற்பத்தி வரலாறு வருமாறு: பிரளய காலத்தில் பூமி நீருக்குள் மூழ்கி விடுகிறது. இத்தகைய பிரளயம் பிரம்மாவினுடைய ஒரு நாளின் இறுதிப் பகுதி ஆகும். பிரம்மாவின் மறுநாள் விடியும் பொழுது, மறுபடியும் உற்பத்தி தொடங்குகிறது. அப்போது தண்ணிருக்குள் மூழ்கிப் போன பூமியை மேலே கொண்டு வருமாறு விஷ்ணுவை வேண்டிக் கொள்கிறார் பிரம்மன். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து நீருக்குள் சென்று பூமியைத் தன் கொம்புகளுக்கிடையே வைத்து மேலே தூக்கிக் கொண்டு வருகிறார்.

(இதைத் தொடர்ந்து வரும் கங்கையின் கதை மற்றப் புராணங்களில் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளது,)

குஷத்வஜா என்ற மன்னனுக்கும், அவன் மனைவி மாதவிக்கும் பெண்ணாகப் பிறந்தவள் துளசி, பிறந்தவுடனேயே யாவரும் அதிசயிக்கும் வண்ணம் காட்டிற்குச் சென்று நாராயணனை வணங்கி வந்தாள். நீண்ட காலத்திற்குப் பிறகு பிரம்மன் அவள் எதிரே தோன்றினான். இப்பிறப்பில் நீ நாராயணனை அடைய முடியாது என்றார். ஜதீஸ்மரா ஆற்றல் காரணமாக இதன் காரணத்தை அறிந்துகொண்டார். முன் ஜென்மத்தில் கோலோகாவில் ஒரு கோபிகையாக இருந்த அவள் கிருஷ்ணன் மீது காதல் கொண்டதால், ராதையினால் "பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்கக் கடவாய்" என்று சாபமிடப்பட்டாள். பிரம்மன் துளசியிடம் சங்கதுடனின் கதையைக் கூறினார். சங்கதுடன் ஒரு கோபியை மணக்க விரும்ப, அதனால் கோபம் அடைந்த ராதை அவன் ராட்சச னாகப் பிறக்கச் சாபமிட்டாள். இப்பொழுது ராட்சசனாகப் பிறந்துள்ள சங்கதுடன் தன் முற்பிறப்பினை அறிந்தவன் ஆதலின், இப்பிறப்பிலேனும் துளசியை மணந்து கொள்ள வேண்டி பிரம்மனை வேண்டினான். ராதையிடம் அனுமதி பெறுமாறு கூறினார். அனுமதி பெற்ற துளசி காட்டில் சங்கதுடனைக் கண்டு மணம் புரிந்து இன்பமாக வாழநதாள.

அரக்கனாகிய சங்கதுடன் தேவர்களைக் கொடுமைப் படுத்தினான். பிரம்மன் தலைமை ஏற்று, கிருஷ்ணனைச் சென்று வேண்டினர். அரக்கனுக்குத் தான் கொடுத்துள்ள துளசிமாலை காரணமாக அவனை வெல்ல முடியவில்லை என்றும், தானே சென்று அதனைப் பெற்றுக் கொள்வதாகவும் கிருஷ்ணன் கூறினார். சிவனிடம் ஒரு கோடரியைக் கொடுத்து, அதனைக் கொண்டே, அவ்வரக்கனை அவர் கொல்ல வேண்டும் என்று கூறி, ஒரு பிராமண வடிவம் கொண்டு அவ்வரக்கனிடம் சென்று யாசித்தார். சங்கதுடனின் மனைவி வேறு ஒருவனைத் தன் கணவனாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்தால் மட்டுமே, சங்கதுடனுக்கு இறப்பு நேரிடும் என்று பிரம்மன் தான் கொடுத்த வரத்தினைப் பற்றிக் கிருஷ்ணனுக்குக் கூறினார். பிராமண உருவம் கொண்ட கிருஷ்ணன், அவ்வரக்கனிடம் சென்று துளசிமாலையினை தானமாகப் பெற்று, சங்கதுடன் உருவம் எடுத்து அவன் மனைவியாகிய துளசியிடம் சென்றான். தன் கணவன் அல்லன் என்றறியாத துளசியும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். இத் தருணத்தில் சிவன் சங்கதுடனைக் கொன்றார்.

இதை அறிந்து கொண்ட துளசி கடும் கோபம் கொண்டாள். கிருஷ்ணன் ஒரு கல்லின் உருவம் பெறவேண்டும் என்று சாபமிட்டாள். அதுவே சாலக்கிரமம் என்று வழங்கப் பெறுகிறது. துளசியைப் பலவகையிலும் தேற்றிய கிருஷ்ணன் அவள் தெய்வ வடிவு கொண்டு, வைகுந்த லோகம் சென்று அங்கு கிருஷ்ணனை மணம் புரிவாள் என்றும், மானிட உருவில் உள்ள அவள் மறைந்த கந்தகி என்றும் புனித நதியாகி பரதவர்ஷாவில் ஒடுவாள் என்றும் கூறினார். அவளுடைய தலைமுடி துளசி என்னும் புனிதச் செடியாக வளரும் என்றார். துளசி இலையினைக் கலந்த நீரில் குளித்தால், புனித நதிகளில் நீராடியதால் ஏற்படும் புண்ணியம் கிடைக்கும். துளசிச் செடிக்குப் பல பெயர்கள் உள்ளன. அவை விருந்தா, விருந்தாவனி, விஷ்வபுஜிதா, புஷ்யமயா, நந்தினி, துளசி, கிருஷ்ண ஜீவனி ஆகியவை ஆகும். கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி அன்று, துளசிச் செடியைத் தொழுவது மிகச் சிறப்பானதாகும்.

சாலக்கிரமம் மிகச் சிறப்புடையதாகும். இதனை வணங்குபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும். சாலக்கிரமம் கிடைத்த நதியினில் நீராடுபவர்கள், எல்லாப் புண்ணிய நதிகளிலும் நீராடிய புண்ணியத்தைப் பெறுகின்றனர். சாலக்கிரமம் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்திலிருந்து நீரைக் குடிப்பவர்கள் வைகுந்த லோகம் செல்வர்.

துளசி இறந்த பிறகு வைகுந்த லோகம் அடைந்தாள். அவளுடைய முடி கந்தகி நதியானது. நாராயணன் கந்தகி நதிக்கரையில் ஒரு மலையாக நின்றார். இம்மலையில் வஜ்ரகிதா என்ற பூச்சிகள் காணப்பட்டன. இப்பூச்சிகளின் பற்கள் கூர்மை உடையனவும், கெட்டியானவையும் ஆகும். ஆதலால் இப்பெயர் வழங்கப்பட்டது. இப்பூச்சிகள் அம்மலையில் காணப்படும் கற்களைத் துளையிடுகின்றன. அவையே சாலக்கிரமம் எனப்படும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ங்கசுதாவைக் கொன்ற சிவபெருமான், அரக்கனின் உடலைக் கடலில் வீசி எறிந்தார். அவ்வுடம்பின் எலும்புகளில் இருந்து வெவ்வேறு சங்குகள் உற்பத்தி ஆயின. இவை மிகவும் சிறப்புப் பெற்றவை. சங்குகளில் நீரை ஊற்றி, சிவனைத் தவிர எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு வீட்டில் சங்கு வைத்து ஊதப்பட்டால், இலட்சுமி என்றும் அங்கு வாசம் செய்வாள்.

சாவித்திரி

சாவித்திரி என்றால், பிறப்பைக் கொடுப்பவள் என்பது பொருள். வேதங்கள் தோன்றியது சாவித்திரியிடமிருந்து தான். சூரியனுக்கும், மந்திரங்களுக்கும் தேவதையாக விளங்குகின்றாள்.

தங்க நிறமும், ஆபரணங்கள் அணிந்தும், புன்னகையுடனும் தோற்றம் தருபவள். சந்தனம், நீர், அரிசி முதலியவைகளைப் படைக்க வேண்டும். இத்தேவிக்காக அனுஷ்டிக்கப்படுவது சாவித்ரி விரதம் எனப்படும். ஜேஷ்டமாதங்களில், பதின்மூன்றாம் நாள் திரயோதசி திதியில் பதினான்கு ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். பதினான்கு விதமான பழங்கள் படைக்கப்பட வேண்டும். பராசர முனிவர், மத்ர அரசன் அசுவபதிக்கு, இவ்விரதங்களை எடுத்துக்கூற, அவ்வரசனும் இதனைக் கடைப்பிடித்தான். சாவித்திரி தேவி அவன் முன் தோன்றி, அவ்வரசனுக்கும், அவன் மனைவி மாலதிக்கும் தான் மகளாகத் தோன்றுவதாக வரம் அளித்தாள்.

துயுமத்சேன அரசன் மகன் சத்தியவானுக்கும் சாவித்திரிக்கும் திருமணம் நடந்தது. ஒரு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் காட்டில் பழங்கள் பறிக்கச் சென்ற சத்தியவான் மரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்து போனான். யமன் சத்தியவானின் உடலை எடுத்துச் செல்லும் பொழுது, சாவித்திரியும் யமனைத் தொடர்ந்து சென்றாள். தொடர்ந்து வந்த சாவித்திரியிடம் யமன், ஒருவர் தன்னுடைய பூதஉடலை விட்டுவிட்டே யமலோகம் செல்ல முடியும் என்றும், அவரவர் கர்மவினைப்படி மரமாகவும், பறவையாகவும், மனிதராகவும் பிறக்கிறார்கள் என்றும், அக்கர்மவினைக்கேற்க அவர்கள் உலகில் வாழும் காலம் வரையறுக்கப்படுகிறது என்று கூறிவிட்டு, சத்தியவானின் முன்ஜென்ம கர்மவினையினால் அவன் இப்பிறப்பில் வெகுவிரைவில் இறந்துவிட்டான் என்று கூறி, சாவித்திரியை வீட்டிற்குச் செல்லுமாறு கூறினான்.

சாவித்திரி வீட்டிற்குச் செல்லாமல், யமனிடம் மேலும் மேலும் கர்மவினை பற்றிக் கேட்டாள். இதனால் மனம் மிக மகிழ்ந்த யமன் அவளுக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, சாவித்ரி, தனக்கும் தன் கணவனுக்கும் நூறு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று கேட்டாள். இவ்வரத்தை அவளுக்கு அளித்த யமன், வேறு வழியின்றி சத்தியவானுக்கு உயிர் கொடுத்து இவ்வுலகிற்குக் கொண்டு வந்தான். சாவித்திரி தன் தந்தைக்கு நூறு மகன்கள் பிறக்க வேண்டும் என்ற வரத்தையும், தான் தன் கணவருடன் பல ஆண்டுகள் இப் பூமியில் வாழ்ந்த பிறகு கோலோகம் செல்ல வேண்டும் என்ற வரத்தையும் பெற்றாள். மேலும் யமதர்மன், சாவித்திரிக்கு தானம் செய்வது பற்றியும் சடங்குகள் பற்றியும் கூறத் துவங்கினார்.

நிலம், அரிசி முதலியவற்றை தானம் செய்பவர்கள் விஷ்ணு லோகத்திற்கும், வீடு ஒன்றினை தானமாகக் கொடுப்பவர்கள் தேவலோகத்திற்கும், தங்கம், தாமிரம், கன்று முதலானவற்றை தானமாகக் கொடுப்பவர்கள் சூரிய லோகத்திற்கும், செல்வர்.

சிவராத்திரி அன்று, சிவனை வில்வ இலைகளால் துதிப்பவர்கள் சிவலோகத்திற்கும், ராமநவமி அன்று விரதம் இருப்பவர்கள் விஷ்ணு லோகத்திற்கும், கிருஷ்ணன் கோபியர்களுடன் விளையாடுவது போல் வடிவம் அமைத்து (ரஸ்மண்டல) அதனைக் கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று வணங்கி வந்தால் கோலோகாவில் இடம் பெறலாம். சுக்கில பட்சம் பதினோராம் நாள் ஏகாதசி விரதம் இருப்போர் வைகுந்தலோகம் அடைவர். பதினான்காம் நாள் சாவித்திரியை ஜேஷ்ட மாதத்தில் விரதம் இருந்து அனுஷ்டிப்போர் பிரம்ம லோகமும், மகா மாதம் பஞ்சமி திதி அன்று சரஸ்வதியை வழிபடுவோர் வைகுந்த லோகம் அடைவர்.

ங்கசுதாவைக் கொன்ற சிவபெருமான், அரக்கனின் உடலைக் கடலில் வீசி எறிந்தார். அவ்வுடம்பின் எலும்புகளில் இருந்து வெவ்வேறு சங்குகள் உற்பத்தி ஆயின. இவை மிகவும் சிறப்புப் பெற்றவை. சங்குகளில் நீரை ஊற்றி, சிவனைத் தவிர எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு வீட்டில் சங்கு வைத்து ஊதப்பட்டால், இலட்சுமி என்றும் அங்கு வாசம் செய்வாள்.

சாவித்திரி

சாவித்திரி என்றால், பிறப்பைக் கொடுப்பவள் என்பது பொருள். வேதங்கள் தோன்றியது சாவித்திரியிடமிருந்து தான். சூரியனுக்கும், மந்திரங்களுக்கும் தேவதையாக விளங்குகின்றாள்.

தங்க நிறமும், ஆபரணங்கள் அணிந்தும், புன்னகையுடனும் தோற்றம் தருபவள். சந்தனம், நீர், அரிசி முதலியவைகளைப் படைக்க வேண்டும். இத்தேவிக்காக அனுஷ்டிக்கப்படுவது சாவித்ரி விரதம் எனப்படும். ஜேஷ்டமாதங்களில், பதின்மூன்றாம் நாள் திரயோதசி திதியில் பதினான்கு ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். பதினான்கு விதமான பழங்கள் படைக்கப்பட வேண்டும். பராசர முனிவர், மத்ர அரசன் அசுவபதிக்கு, இவ்விரதங்களை எடுத்துக்கூற, அவ்வரசனும் இதனைக் கடைப்பிடித்தான். சாவித்திரி தேவி அவன் முன் தோன்றி, அவ்வரசனுக்கும், அவன் மனைவி மாலதிக்கும் தான் மகளாகத் தோன்றுவதாக வரம் அளித்தாள்.

துயுமத்சேன அரசன் மகன் சத்தியவானுக்கும் சாவித்திரிக்கும் திருமணம் நடந்தது. ஒரு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் காட்டில் பழங்கள் பறிக்கச் சென்ற சத்தியவான் மரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்து போனான். யமன் சத்தியவானின் உடலை எடுத்துச் செல்லும் பொழுது, சாவித்திரியும் யமனைத் தொடர்ந்து சென்றாள். தொடர்ந்து வந்த சாவித்திரியிடம் யமன், ஒருவர் தன்னுடைய பூதஉடலை விட்டுவிட்டே யமலோகம் செல்ல முடியும் என்றும், அவரவர் கர்மவினைப்படி மரமாகவும், பறவையாகவும், மனிதராகவும் பிறக்கிறார்கள் என்றும், அக்கர்மவினைக்கேற்க அவர்கள் உலகில் வாழும் காலம் வரையறுக்கப்படுகிறது என்று கூறிவிட்டு, சத்தியவானின் முன்ஜென்ம கர்மவினையினால் அவன் இப்பிறப்பில் வெகுவிரைவில் இறந்துவிட்டான் என்று கூறி, சாவித்திரியை வீட்டிற்குச் செல்லுமாறு கூறினான்.

சாவித்திரி வீட்டிற்குச் செல்லாமல், யமனிடம் மேலும் மேலும் கர்மவினை பற்றிக் கேட்டாள். இதனால் மனம் மிக மகிழ்ந்த யமன் அவளுக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, சாவித்ரி, தனக்கும் தன் கணவனுக்கும் நூறு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று கேட்டாள். இவ்வரத்தை அவளுக்கு அளித்த யமன், வேறு வழியின்றி சத்தியவானுக்கு உயிர் கொடுத்து இவ்வுலகிற்குக் கொண்டு வந்தான். சாவித்திரி தன் தந்தைக்கு நூறு மகன்கள் பிறக்க வேண்டும் என்ற வரத்தையும், தான் தன் கணவருடன் பல ஆண்டுகள் இப் பூமியில் வாழ்ந்த பிறகு கோலோகம் செல்ல வேண்டும் என்ற வரத்தையும் பெற்றாள். மேலும் யமதர்மன், சாவித்திரிக்கு தானம் செய்வது பற்றியும் சடங்குகள் பற்றியும் கூறத் துவங்கினார்.

நிலம், அரிசி முதலியவற்றை தானம் செய்பவர்கள் விஷ்ணு லோகத்திற்கும், வீடு ஒன்றினை தானமாகக் கொடுப்பவர்கள் தேவலோகத்திற்கும், தங்கம், தாமிரம், கன்று முதலானவற்றை தானமாகக் கொடுப்பவர்கள் சூரிய லோகத்திற்கும், செல்வர்.

சிவராத்திரி அன்று, சிவனை வில்வ இலைகளால் துதிப்பவர்கள் சிவலோகத்திற்கும், ராமநவமி அன்று விரதம் இருப்பவர்கள் விஷ்ணு லோகத்திற்கும், கிருஷ்ணன் கோபியர்களுடன் விளையாடுவது போல் வடிவம் அமைத்து (ரஸ்மண்டல) அதனைக் கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று வணங்கி வந்தால் கோலோகாவில் இடம் பெறலாம். சுக்கில பட்சம் பதினோராம் நாள் ஏகாதசி விரதம் இருப்போர் வைகுந்தலோகம் அடைவர். பதினான்காம் நாள் சாவித்திரியை ஜேஷ்ட மாதத்தில் விரதம் இருந்து அனுஷ்டிப்போர் பிரம்ம லோகமும், மகா மாதம் பஞ்சமி திதி அன்று சரஸ்வதியை வழிபடுவோர் வைகுந்த லோகம் அடைவர்.

அஸ்வமேத யாகம் செய்பவர்கள் இந்திரபதவியில் பாதிப் பங்கினைப் பெற்று, ஒரு குதிரையின் மேல் இருக்கும் ரோமம் விழும் வரை அரசாளலாம். ராஜதுய வேள்வி அசுவமேத யாகத்தைப் போன்று நான்கு மடங்கு சிறப்புப் பெற்றது. இவை அனைத்தையும் விட மிகச் சிறப்புப் பெற்றது விஷ்ணு யாகம். ஒராயிரம் ராஜசூய வேள்வி செய்வதற்கு இணையாகப் பேசப்படும் ஒருமுறை விஷ்ணு யாகம் செய்வது. இவற்றை அடுத்து, சாவித்திரி தேவிக்கு நரகங்கள் பற்றிய விளக்கங்களை யமன் கூறினான்.

லட்சுமி

கிருஷ்ணனின் இடப்பாகத்தில் இருந்து ஒரு தேவதை தோன்றினாள். அவள் தானே இரண்டாகப் பிளந்து, லட்சுமி யாகவும், ராதிகா ஆகவும் ஆனாள். ஆடனன் இடப்புறத்தில் இருந்து நான்கு கைகளுடன் நாராயணனும், வலப்புறத்தில் இருந்து கிருஷ்ணனும் தோன்றினர். ராதிகாவை மணந்து கிருஷ்ணன் கோலோகமும், லட்சுமியை மணந்து விஷ்ணு வைகுந்த லோகமும் சென்றனர்.

லட்சுமியை வைகுந்தத்தில் சொர்க்கலட்சுமி என்றும், இல்லங்களில் கிருகலட்சுமி என்றும், அரசிகளில் ராஜலட்சுமி என்றும் அழைக்கிறார்கள். பிரம்மா, சிவன், விஷ்ணு இவர்களால் வணங்கப்பட்டவள் லட்சுமி.

ஒருநாள் இந்திரன் ஐராவதத்தில் வரும்பொழுது துர்வாச முனிவர் விஷ்ணுவிடம் நேரடியாகப் பெற்ற தெய்வீக சக்தி வாய்ந்த பாரிஜாத மலரை இந்திரனுக்குக் கொடுத்தார். எல்லை மீறிக் குடித்திருந்த இந்திரன் அம்மலரை வாங்கி தான் ஏறி இருந்த ஐராவதம் யானைமேல் வைத்தான். மலரின் அருமை அறியாமல் அதனை அலட்சியப்படுத்திய இந்திரனைப் பார்த்து, லட்சுமி உன்னை விட்டு நீங்கி விடுவாள். நீ ஏறியுள்ள ஐராவதத்தின் தலை வெட்டப்பட்டு, சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த கணேசருக்குப் பொருத்தப்படும் என்று சாபம் கொடுத்தார். மிக்க துயரம் அடைந்த இந்திரன் எல்லா வற்றையும் இழந்த நிலையில் பிரம்மாவிடம் சென்று முறையிட, அவர் நானொன்றும் செய்ய முடியாது. விஷ்ணுவிடம் போகலாம் என்று இந்திரனை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் போனார். விஷ்ணு இந்திரனைப் பார்த்து, நீ இழந்த அத்தனையும் லட்சுமி உள்பட உன்னிடம் வருமாறு செய்கிறேன் என்று கூறிச் சென்றார்.

லட்சுமியைத் திருப்திப்படுத்த தானதருமங்கள் செய்ய வேண்டும். வீட்டில் துளசிச் செடியை வளர்க்க வேண்டும். சங்கு, சாலக்கிரமம் ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும். இதனை அடுத்து பிரம்ம வைவர்த்த புராணத்தில் பாற்கடல் கடைந்த கதை பல முரண்பாடுகளுடன் பேசப்படுகிறது. இந்தக் கதை வேறு பல புராணங்களில் காணப்பட்டாலும் இந்தப் புராணத்தில் பல மாற்றங்களுடன் காணப்படுகிறது. முற் பகுதியில் ஐராவதம் கதையைச் சொல்லிவிட்டு, பிற்பகுதியில் ஐராவதம் பாற்கடலில் இருந்து விழுவதாகக் கூறுவது குழப்பத்தை விளைவிப்பதாகும்.

(அரசன் சுராதாவும், வைசிபன் சமாதியும் தங்கள் குறைகளை முனிவர் மேதாவிடம் கூற அவர் துர்க்கையை வழிபடுமாறு கூறுகிறார். இக்கதை ஏற்கெனவே மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை அறியவும். மார்க்கண்டேய புராணப்படி மேதா முனிவர் துர்க்காசப்தசதி என்ற எழுநூறு மந்திரங்களால் சண்டிஹோமம் செய்வித்தார் என்பதும், அந்த'ஹோமத்தின் இறுதியில் துர்க்கையின் அருளால் சுராதாவிற்கு அவனுடைய ராஜ்ஜியம் திரும்பக் கிடைத்தது என்பதும் அம்பிகையின் அருளில் தோய்ந்த அவன் ராஜ்ஜியம் வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்றான் என்பதும் இப்புராணத்தில் இடம் பெறவில்லை),

பிரபஞ்ச உற்பத்தியின் துவக்கத்தில் தேவர்கள் பிரம்ம லோகம் சென்று தங்கள் உணவை உண்ண ஆரம்பித்தனர். பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க, விஷ்ணு யாகத்தின் பலிப்பொருளாகத் தன்னை மாற்றிக் கொண்டு தீயில் புகுந்தார். அந்த யாகத்திற்குப் படைக்கப்பட்ட பொருள்கள் தேவர்களுக்குக் கொடுக்கப்பட அவை தேவர்களைச் சென்று அடையவில்லை. பிரம்மன் பிரகருதியை வேண்டியவுடன், பிரகருதி, சுவாஹா என்ற பெயருடன் நெருப்பின் சக்தியாக மாறினாள். அக்னியும் சுவாஹாவும் மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளைப் பெற்றனர். அக்னி வளர்க்கும் பொழுது, சுவாஹா என்ற சொல்லைச் சொல்லவில்லையெனில், அம்மந்திரம் விஷம் இல்லாத பாம்பு போலவும், கல்வி அறிவில்லாத மனிதனைப் போலவும், பழங்கள் இல்லாத மரம் போலவும் கருதப்படும்.

பிரம்மன், பிரபஞ்ச உற்பத்தியில் பித்ரி எனப்படும் முன்னோர்களை உருவாக்கினார். முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்யும் பொழுது அது அவர்களைச் சென்று சேரவில்லை. அவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்மனும் ஸ்வதா என்ற தேவதையை உருவாக்கி, சிரார்த்த மந்திரங்கள் கூறும்பொழுது ஸ்வதா என்ற சொல்லையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். அவ்வாறு கூறினால் மட்டுமே முன்னோர்களுக்கு செய்யப்படும் படைப்புக்கள் அவர்களைச் சென்றடையும் என்றும் கூறினார்.

தட்சிணா என்பவள் யக்ஞ தேவனின் மனைவி ஆவாள். யாகம் நடத்துபவர்கள் அதற்குண்டான தட்சினையை உடனடியாக செய்விப்பவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். இல்லையெனில் அந்த யாகத்தினால் ஏற்படும் பலன்கள் பயனற்றுப் போய்விடும்.

பிரகருதி தேவதையின் ஆறில் ஒரு பங்கு உடம்பினைப் பெற்ற சஷ்டி, கார்த்திகேயனின் மனைவி ஆவாள். தேவசேனா என்ற பெயருடன் வழங்கப்படும் இவள் பிரம்மாவின் இச்சா மாத்திர சக்தியினின்று வந்தவள். குழந்தைகளுக்கு தெய்வமாக விளங்குபவள். சுயம்பு மனுவின் மகனாகிய பிரியவரதா, பெரிய யாகம் செய்து ஒரு மகனைப் பெற்றான். இறந்தே பிறந்த அக்குழந்தையை எரித்துவிட்டு, தானும் உயிர் விட நினைத்தான். சஷ்டி தேவதை அக்குழந்தைக்கு உயிர் கொடுத்தாள். ஒவ்வொரு மாதமும் ஆறாம் நாள், சஷ்டியைத் தொழ வேண்டும். குழந்தை பிறந்த ஆறு, இருபத்தியோரு நாட்களில், சஷ்டி தேவதைக்கு மலர், பழங்கள் முதலியன வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

நீலநிறக் கண்களை உடைய மங்கல சண்டி, துர்க்கையின் மற்றொரு வடிவினள். இத்தேவதை பெண்களுக்கு ஆரோக்கியமான உடலையும், செல்வத்தையும் தருபவள் என்பதால் மங்கல சண்டி எனும் பெயர் பெற்றாள். திருப்புராசுர அசுரனைக் கொல்வதற்குச் சிவன் கஷ்டப்பட்ட பொழுது, மங்கல சண்டி தன் சக்தியினைக் கொடுத்து வெற்றி பெறச் செய்தாள். முதன் முதலில் சிவனாலும், அடுத்து செவ்வாய்க் கோளினாலும், மூன்றாவது மனு வழியில் வந்த மங்கல அரசனாலும், நான்காவது பெண்களினால் செவ்வாய்க் கிழமைகளிலும் வணங்கப்பட்டாள்.

காசிப முனிவரின் இச்சாமாத்திர உற்பத்தியாக உண்டாக்கப்பட்ட மானச தேவதை மிக அழகான நிறம் உடையவள் என்பதால் ஜகத்கெளரி என்று அழைக்கப்பட்டாள். இவள் சிவனைக் கைலாயத்தில் வணங்கி இறந்தவர்களை உயிருடன் எழுப்பும் கலையினைக் கற்றாள். கிருஷ்ணனைப் புஷ்கராவில் வணங்கி, என்றென்றும் எல்லோராலும் வணங்கப்படுவாய் என்ற ஆசியும் பெற்றாள். ஜரத்கரு உறங்கிக் கொண்டிருந்தான். வெகு நேரமாகியும் அவன் எழுந்திருக்க வில்லை. இதனால் மாலையில் அவன் பூஜை செய்வது தடைப்பட்டுவிடும் என்பதாலும், அவ்வாறு பூஜை செய்யாமல் இருப்பது பெரும் பாவத்தைச் சேர்க்கும் என்ற காரணத்தி னாலும் அவனை எழுப்பினாள். உறக்கம் கலைந்து எழுந்த ஜரத்கரு கடுங்கோபம் கொண்டு, அவள் நரகத்திற்குச் செல்வாள் எனக் கூறிவிட்டு, அவளைப் பிரிந்து சென்று தவம் செய்யலானான். சில காலங்களுக்குப் பிறகு சுஸ்திகா, ஜரதகருவிற்கும், மனசாவிற்கும் மகனாகத் தோன்றியவன் பெரியவனாக வளர்ந்த பின் சிவனை வேண்டி நீண்ட காலம் தவம் செய்தான். மனசாவும், காசிப முனிவரின் ஆசிரமம் சென்று தங்கி இருந்தாள்.

ரிட்சித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பினால் கடிக்கப் பட்டு மாண்டான். இதனால் கோபம் கொண்ட அவன் மகன் ஜனமேஜெயன், பாம்புகளை பலியிட்டு யாகம் செய்தான். இதனால் கலக்கமுற்ற தட்சகன் இந்திரனிடம் சென்று காப்பாற்றும்படி கேட்க, இந்திரன் மனசாவிடம் வேண்டிக் கொண்டான். தன் மகன் அஸ்திகாவிடம் கூறி தட்சகனைக் காப்பாற்றும்படிக் கூறினான். இதற்கு நன்றி தெரிவித்த இந்திரன், மனசாவை மந்தாகினி நதியில் குளிப்பாட்டி, நவரத்தினங்கள் பதித்த அரியணையில் அமரச் செய்தான். மனசாவைத் துதிப்பவர்கள், நாகங்களுக்கு பயப்படத் தேவையில்லை.

பிருந்தாவனத்தில் இருந்த கிருஷ்ணன், திடீரென்று பாலை அருந்த வேண்டும் என்று நினைத்து, தன் இடப்பக்கத்தினின்று சுரபி என்னும் பசுவினைப் படைத்தான். அப்பசுவினின்று பாலைக் கறந்து, அப்பாலைக் குடித்தான் கிருஷ்ணன். அப்பாத்திரத்தில் மீதமிருந்த பால் ஒர் ஆற்றின் அளவு அதிகமாகிப் பெருகியது. சரோவரா என்ற பெயருடைய பாலாறாக ஒடியது. சுரபியின் மயிர்க்கால்களில் இருந்து காமதேனு பசுக்கள் உண்டாயின.

வராக கல்பத்தில், விஷ்ணு மூவுலகத்திலும் பால் இல்லாமல் போகவே, இந்திரன் சுரபியை வேண்டிப் பாலினைப் பெற்றான். கார்த்திகை மாதத்தில் தீபாவளியை அடுத்த நாள் சுரபி என்னும் பசுவைத் தொழுது வணங்குவதற்குச் சிறந்த நாள்.

கணேசன்

கணேசனைப் பற்றி அறிய விரும்பிய நாரத முனிவருக்கு, நாராயண முனிவர் கூறத் தொடங்கினார். தேவர்களின் சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு தட்சன் மகள் சதியாகப் பிறந்தார். தட்சன் யாகத்தில் சிவனை அவமானம் செய்த காரணத்தினால், தீக்குள் பாய்ந்த சதி இமவானுக்கும், மேனகைக்கும் பார்வதி என்ற பெயருடன் மகளாகத் தோன்றினார். புண்யக விரதம் என்ற விரதம் இருந்து, கிருஷ்ணனையும் வணங்கியதால், அக்கிருஷ்ணனே பார்வதிக்குள் குழந்தையாகத் தோன்றினார். குழந்தைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யும் பொழுது, சூரியனின் புத்திரனாகிய சனி அங்கு தோன்றி, தாய், குழந்தை இருவரையும் பாராது, தன் கண்களைத் தாழ்த்தியவாறே நின்றார். அவரைப் பார்த்த பார்வதி தேவி, "நீ ஏன் என் குழந்தையைப் பார்க்கவில்லை?” என்று கேட்க, சனியும் "என் மீது ஒரு சாபம் உள்ளது. நான் எதை நேரிடையாகப் பார்க்க நேரிட்டாலும், அது அழிந்துவிடும். நான் என் மனைவியை உதாசீனப்படுத்தியதால் எனக்கு இச்சாபம் ஏற்பட்டது” என்று கூறினான். இச்செய்தியை சாதாரணமாக எடுத்துக் கொண்ட பார்வதி, தன் மகனைக் காணும்படி சனியை அழைக்க, ஆவலினால் சனி அங்கு சென்று தன் கடைக்கண்ணால் குழந்தையை நோக்கினான். சாபத்தின் காரணமாக, அவன் பார்த்தவுடன் குழந்தையின் தலை தனியே வந்து பார்வதியின் மடியில் விழுந்தது. இதைக் கண்ட பார்வதி மயக்கமுற்றார். கருட வாகனத்தில் சென்ற கிருஷ்ணன், ஐராவத யானையின் தலையை வெட்டி, குழந்தைக்குப் பொருத்தி உயிர் கொடுத்தார்.

இருப்பினும், கோபம் கொண்டிருந்த பார்வதி சனிக்கு, அவன் அங்கஹlனனாக இருக்கும்படி சாபம் கொடுத்தாள். சுற்றி இருந்தோர் அவளைச் சமாதானம் செய்தனர். கணேசனுக்கு பிரம்மா கமண்டலத்தினையும், பிருத்வி ஒரு எலியையும் பரிசாகக் கொடுத்தார். கணேசனுக்கு கஜானனன், லம்போதரன், ஏகதந்தன், விக்னேஸ்வரன் எனப் பல பெயர்கள் உண்டு. தடைகளை நீக்குபவன் என்பதால் விக்னேஸ்வரன் என்ற பெயர் பெற்றார் கணேசன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நாராயணன் கூறத் துவங்கினார்: மாலி, சுமாலி என்ற இரு அரக்கர்கள் சிவனுடைய பக்தர்களாய் இருந்தனர். இவர்களை விரும்பாத சூரியதேவன் அவர்களைக் கொல்ல நினைத்துப் போர் செய்தான். அரக்கர்கள் சிவபெருமானை வேண்ட, அவர் தோன்றி, தன்னுடைய சூலாயுதத்தால் சூரியனைக் கொன்றுவிடவும், இச்செய்கையினால் உலகம் அனைத்தும் இருளில் மூழ்கியது. காசிப முனிவரும் தன் மகனுக்கு ஏற்பட்ட கதியை நினைத்துச் சிவபெருமானுக்கு சாபமிட்டார். "என் மகன் நெஞ்சை உன் சூலாயுதம் துளைத்தது போல், உன் மகனுடைய தலையும் ஒருநாள் வெட்டப்படும்" என்று சாபமிட்டார்.

இதனைக் கேட்ட நாரதர், விஷ்ணு கணேசனுக்கு ஐராவதம் என்னும் யானையின் தலையைப் பொருத்தினார் அல்லவா? அப்படி இருக்க கணேசனுக்கு ஒரே ஒரு தந்தம் மட்டும் இருப்பது எப்படி என்று வினவ, நாராயண முனிவரும் கூறத் துவங்கினார்.

ஜமதக்கினி முனிவரின் மகனாகிய பரசுராமன் வெளியே சென்றிருக்கும் பொழுது, கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் கூடித்ரிய அரசனால் ஜமதக்கினி முனிவர் கொல்லப்பட்டார். இதனால் கடுங்கோபம் கொண்ட பரசுராமன் இருபத்தியோரு தலைமுறை கூடித்ரியர்கள் இவ்வுலகில் இல்லாமல் செய்வேன் எனச் சபதமெடுத்து கூடித்ரியர்களைக் கொன்றான். சிவ பெருமானையே தன் குருவாகக் கொண்ட பரசுராமன் தன் சபதம் முடிந்தபின்பு, சிவபெருமானைக் காணச் சென்றான். வாயிலில் நின்றிருந்த கணேசன், சிவனும், பார்வதியும் ஒய்வெடுத்துக் கொண்டிருப்பதால், அவர்களை இப்பொழுது பார்க்க இயலாது என்றும் கூறினார். பொறுமை இல்லாத பரசுராமன் கணேசனைப் பார்த்து, "நான் இப்பொழுது உள்ளே செல்லப் போகிறேன். நீ குழந்தை. உன்னால் முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்” என்று கூறிக் கணேசனைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றான். கோபம் கொண்ட கணேசன் தன் தும்பிக்கையை நீட்டி பரசுராமனைத் துக்கிக் கடலில் எறிந்து, பின் மீண்டும் அவரை எடுத்து, பூமியில் தூக்கி எறிந்தார். பரசுராமன் சிவனால் தனக்குக் கொடுக்கப்பட்ட பரசு என்னும் ஆயுதத்தை எடுத்து கணேசனை நோக்கி வீச அவ்வாயுதம் கணேசனின் ஒரு கொம்பினை உடைத்தது.

நடந்த கதைகளை அறிந்த சிவனும், பார்வதியும் கணேசனை அருகில் அழைத்து, பரசுராமனைப் பார்த்து பார்வதி தேவி பின்வருமாறு கூறினார்: “பரசுராமா! உன்னைப் போல் பல பரசுராமன்களை அழிக்க இவனால் முடியும். ஆனால் தன்னை மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கணேசன் ஒரு சிறு பூச்சிக்குக் கூட துன்பம் செய்யமாட்டான்' என்று கூறினார். பரசுராமனும் கணேசனை மலர்களால் தொழுது வணங்கினார். கணேசனுக்குத் துளசியைப் போட்டு வணங்குதல் கூடாது என்று கூறிய நாராயண முனிவர் அதற்கான காரணத்தையும் நாரதருக்கு விளக்கினார்.

ஒருநாள் கங்கைக் கரையினில் கணேசன் தவம் செய்து வந்தார். அங்கு வந்த துளசி, கணேசனைப் பார்த்து விருப்பம் கொண்டு தான் தர்மதுவஜா அரசனின் மகள் என்றும், தன்னைக் கணேசன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். கணேசனும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அற்றதாகவே இருக்கிறது என்பதால் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறினார். கோபம் கொண்ட துளசி, 'கணேசன் பிரம்மசாரியாக இருக்க முடியாது என்று சாபமிட்டாள். கணேசனும், துளசியை ‘ஒரு அரக்கனிடம் சிக்கிப் பிறகு செடியாக இருப்பாய் என்று சாபமிட்டார். துளசி அவரிடம் மன்னிக்கும்படி கேட்க, கணேசனும் மனமிரங்கி, எல்லா மலர்களிலும் துளசி சிறப்பு வாய்ந்த இடத்தைப் பெறும் என்றும், விஷ்ணுவுக்கு மிக உகந்த மலராகும் என்றும் கூறி, தனக்குத் துளசியை யாரும் படைக்கக் கூடாது என்றும் கூறிவிட்டார்.

கிருஷ்ணன், ராதை

பிரம்ம வைவர்த்த புராணத்தின் இறுதிப் பகுதி கிருஷ்ண ஜென்ம காண்டம் என்ற பெயருடன் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம், லீலைகள் பற்றிக் கூறுகிறது. இதற்கெனவே இவை பற்றி விஷ்ணுபுர7ணத்திலும், பிரம்ம புராணத்திலும் கூறப் பட்டிருப்பதால், அங்கு கூறப்படாத பகுதிகள் மட்டும் இங்கு இடம் பெறுகின்றன,

கோலோகாவில் ஸ்ரீதமாவினால் (மகளாகப் பிறப்பாய் என) சபிக்கப்பட்ட ராதை, கிருஷ்ணனைப் பிரிந்து இருக்க நேரிடுமே என நினைத்து வருந்தினாள். அச்சமயம் பூமியில் கொடியவர்கள் பெருகி, அவர்கள் தரும் தொல்லையில் உலகம் சிக்கித் தவிக்கிறது. ராதை கிருஷ்ணனிடம், பூவுலகில் அவன் பிறந்து, இக்கொடுமையினின்று மக்களைக் காக்க வேண்டும் என்று வேண்ட, கிருஷ்ணனும் அதனை ஒப்புக் கொண்டான். ராதையும், மற்றும் கோபியர்களும் கிருஷ்ணனைப் போலவே இப்பூவுலகில் பிறப்பெடுத்தனர். கோகுலத்தில் விராஜ மன்னன் மகளாகத் தோன்றினாள் ராதை.

(இதை அடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள வசுதேவர் தேவகி கதை கிருஷ்ணன் பிறப்பு ஆதனை என்னும் அரக்கியின் கதை ஆகியவை முன்பே கொடுக்கப்பட்டுள்ளன),

நலகுபரன் கதை

ஒருநாள் யசோதை குளித்துவிட்டு வரும் பொழுது, தன் வீட்டில் வைத்திருந்த பால், தயிர் அனைத்தும் தீர்ந்து போயிருந்ததையும், வெண்ணெய் வைத்திருந்த மட்பாண்டம் உடைந்து போயிருந்ததையும் கண்டாள். ஒவ்வொரு நாளும் இதே நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. கோபம் கொண்ட யசோதை இதைச் செய்வது யார் எனக் கண்டுபிடித்து, தண்டனை தர விரும்பினாள். முடிவில் கிருஷ்ணனே இதைச் செய்திருப்பதை அறிந்து அவனைப் பிடிக்க முயன்றாள். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பிடியில் அகப்படாத கிருஷ்ணன், தன் தாய் யசோதையைக் கண்டு மனமிரங்கித் தானே வலிய வந்து அவளிடம் மாட்டிக்கொண்டான். யசோதை கிருஷ்ணனை நையப் புடைத்து, ஒரு துணியினால் அவனை மரத்துடன் சேர்த்துக் கட்டி விட்டு, தன் வேலை களைக் கவனிக்கச் சென்றாள். அந்த மிக உயரமான அருச்சுனா மரம், கிருஷ்ணன் தொட்டவுடன் பெரும் சப்தத்தை எழுப்பிக் கொண்டு கீழே விழுந்தது. அதிலிருந்து ஆபரணங்கள் அணிந்த அழகிய உருவம் வெளிவந்து கிருஷ்ணனை வணங்கி நின்றது. தேவல முனிவரை மதியாமல், அவமானப்படுத்தியதால் அவரிட்ட சாபத்தால் மரமாகி நின்றவன் நலகுபரன் என்பவன். இவன் குபேரனின் மகனாவான். முனிவர் கூறியபடி கிருஷ்ணனால் சாப விமோசனம் பெற்று, குபேரன் இருக்கும் இடம் சென்றான்.

(இதை அடுத்து கிருஷ்ணனின் விலைகளில் இடம்பெறும் காளிங்கன் என்னும் பாம்பின் கதை கோவர்த்தனமலை, தேனுகாசரன் கதை முதலியவை முன்பே கொடுக்கப் பட்டுள்ளன.)

துர்வாசர் கதை

நாராயண முனிவர், நாரதரிடம் துர்வாச முனிவர் கதையைக் கூற ஆரம்பித்தார்:

கந்தமாதனம் என்னும் மலையில் துர்வாசர் தியானம் செய்து கொண்டிருந்தார். வலிச்சக்கரவர்த்தியின் மகனாகிய சகசிகா, அப்சரஸ் திலோத்தமை ஆகியோரால் தவம் கலைந்த துர்வாசர் அவர்களுக்குச் சாபம் கொடுத்துவிட்டு, தன் தவத்தையும் அத்துடன் விட்டுவிட்டு அங்குமிங்கும் உலவி வந்தார். அச்சமயம் ஒளர்வ முனிவரின் மகளாகிய கந்தலி என்பவளைக் கண்டு மணம் புரிந்து கொள்ள விரும்பினார். ஒளர்வ முனிவரும், துர்வாசரிடம் தன் மகள் மிகவும் சண்டை போடும் குணமுடையவள் என்றும், மனம் வருந்தும் படியான சொற்களைக் கூறுபவள் என்றும் கூறினார். துர்வாசரும், அவள் கூறும் நூறு கடுமையான சொற்களைப் பொறுத்துக் கொள்வதாகவும், அதற்கு மேல் கூறினால் அதற்குண்டான பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்றும் கூறினார்.

துர்வாசரும், ஒளர்வ முனிவரும் கந்தலிக்குப் பல புத்திமதிகள் கூறியும், அவள் எதனையும் சட்டை செய்ய வில்லை. ஒருநாள், கந்தலியும் நூறு கடுஞ்சொற்கள் கூறி அதை துர்வாசரும் மன்னித்த பிறகு, மீண்டும் கடுமையான சொற்கள் கூறத் துவங்கினாள் கந்தலி. இதனால் கடும்கோபம் கொண்ட துர்வாசர், கரியாகும் வரை எரிய வேண்டும் எனச் சாபமிட்டார். மனைவியை இழந்த துர்வாசர் மனக்கலக்க முற்றார். சிறிய பையனாகத் தோன்றிக் கிருஷ்ணன் அவரைத் தேற்றினான். அடுத்த பிறவியில் அவள் கந்தலி என்னும் கிழங்குச் செடியாகப் பிறந்தாள்.

அஷ்டவக்ர முனிவர்

கிருஷ்ணனும், ராதையும் மாளய மலையின் உச்சியில் அமர்ந்திருக்கும் பொழுது அஷ்டவக்ர முனிவர் அங்கு வந்து அவர்களை வணங்கினார். கூன் விழுந்த உடலை உடையவர். அவரைப் பார்த்த ராதை பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தாள். ஆனால் கிருஷ்ணன் அவளை சிரிக்கவேண்டாம் என்று கூறிவிட்டு, அவருடைய கதையைக் கூறினார்.

அஷ்டவக்ரமுனிவர் முற்பிறப்பில், தேவலா என்ற பெயருடைய பிராமணனாகப் பிறந்தான். தன்னுடைய மனைவி யுடன் நீண்ட காலம் கழித்துவிட்டு, இனிப் பெண்களுடன் தொடர்பே இல்லாமல் இருக்க நினைத்தான். ரம்பை என்னும் அப்சரஸ், தேவலாவை மணக்க விரும்பினாள். தான் எடுத்த முடிவிலிருந்து மாறுபட விரும்பாத தேவலா, ரம்பை கேட்ட வுடன் மறுத்துவிட்டான். இதைக் கேட்ட ரம்பை, உனக்குக் கோணல் புத்தி உள்ளது. அதைப் போலவே உன் உடலும் கோணலாகப் போகட்டும் என்று சபித்தாள். அத்துடன் நீ இதுவரை சேர்த்துள்ள புண்ணியம் அனைத்தும் பலனில்லாமல் போகட்டும் என்றும் கூறினாள். மிகக் கடுமையான இச் சாபத்தைத் தாங்கமாட்டாத தேவலா தன்னை எரித்துக் கொள்ள முயற்சி செய்கையில் கிருஷ்ணன் அவனைத் தடுத்து நிறுத்தினான். அவனுடைய எட்டு எலும்புகளும் கோணலாகிப் போனதால், கிருஷ்ணன் அவனுக்கு அஷ்டவக்ரா என்று பெயரிட்டான். அவனை தியானம் செய்யும்படி கிருஷ்ணன் கூற, மாளய மலையில் அஷ்டவக்ரா முனிவர் அறுபதாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தார். கிருஷ்ணனின் அருளினால், அம்முனிவர் சாபம் தீர்ந்தது.

பிரம்மனின் வீழ்ச்சி

பிரம்மன் அகங்காரத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் இருந்து எவ்வாறு வீழ்ச்சி அடைந்தான் என்பதை கிருஷ்ணன் ராதைக்கும் சொன்னார். படைத்தலாகிய தன் தொழிலில் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைக்கும் ஆற்றல் தன்னிடம் இருப்பதால் தன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்ற அகங்காரம் பிரம்மனின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. இந்த நிலையில் தேவ கன்னிகையான மோகினி பிரம்மன்மாட்டுக் காதல் கொண்டு அவனை மணக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினாள். ஆனால் பிரம்மன் அகங்காரம் காரணமாக மோகினியின் காதலை ஏற்க மறுத்து உதறிவிட்டார். தன்னுடைய உண்மையான காதல் உதாசீனப்படுத்தப்பட்டதைப் பொறுக்காத மோகினி, “உலகில் யாரும் உன்னை வணங்க மாட்டார்கள். கோவிலெடுக்க மாட்டார்கள். பிரம்மனை முன்னிலைப்படுத்திச் செய்யப்படும் சடங்குகள் இல்லா திருத்தல் பயனற்றுப் போய்விடும்” என்ற சாபத்தை மோகினி பிரம்மனுக்குத் தந்தாள். அதிர்ந்து போன பிரம்மன், இச் சாபத்தினின்று எவ்வாறு தப்பிப்பது என்று யோசித்து, விஷ்ணுவிடம் சென்று முறையிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். அப்படியே வைகுந்தம் சென்று விஷ்ணுவின் தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான். அப்படிக் காத்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் கண்ட காட்சி அவனுக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. திசைமுகன் என்ற பெயருக்கு ஏற்பத் தனக்கு நான்கு தலை இருப்பதில் பெருமையும், அகங்காரமும் கொண்டிருந்த பிரம்மன் அங்கே கண்ட காட்சி அவனுடைய மூச்சையே நிறுத்திவிடும் போல் இருந்தது. பத்துத் தலைகள் உடைய பிரம்மன், நூறு தலைகளுடைய

பிரம்மன், ஆயிரம் தலைகள் உடைய பிரம்மன் என்று பல பிரம்மன்கள் விஷ்ணுவின் தரிசனத்திற்காக அங்கே கூடி இருந்தனர். இவனுடைய முறை வந்ததும் அதிர்ந்துபோன பிரம்மன், இவர்களெல்லாம் யார் என்று விஷ்ணுவையே கேட்டான். விஷ்ணு சாவதானமாக விடை கூறினார்: "பிரம்மனே! இங்கே காணப்படுகின்ற சொர்க்க, மத்திய, பாதாளம் என்பவற்றை நீ படைத்தாய். ஆனால் இந்தப் பெரிய அண்டத்தில் இதைப் போன்றனவும், இதைவிட மிகப் பெரியனவும் ஆகிய பல உலகங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்தச் சிறிய உலகைப் படைத்த உனக்கு நான்கு தலைகள் போதுமானது. இதைவிடப் பெரிய உலகம், மிகப் பெரிய உலகம், மாபெரும் உலகம் ஆகிய உலகங்களைப் படைத்த பிரம்மன்களுக்கு அந்தப் படைப்பின் பெருமைக்கு ஏற்ப பத்து, நூறு, ஆயிரம் என்ற தலைகள் உள்ளன. பிரம்மன்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் நீதான் கடைசியில் நிற்கும் சிறிய பிரம்மன், உனக்குக் கீழ் வேறு பிரம்மன்கள் இல்லை ஆதலால் நீதான் கடைசியில் நிற்பவன்” என்று விஷ்ணு கூறியவுடன் பிரம்மனுடைய அகங்கார மெல்லாம் காற்றில் பறந்துவிட தன்னுடைய அறியாமையை நினைந்து வெட்கித் தலைகுனிந்து நின்றான்.

இந்திர கர்வபங்கம்

பிரகருதி ஆகிய பெண்ணை இந்திரன் கவனியாமல் விட்டு அவளுக்கு மனத்துயரை உண்டாக்கினான். சினம் கொண்ட பிரகருதி, உன்னுடைய குரு பிருகஸ்பதியாலேயே நீ உன்னுடைய பதவியை இழப்பாய்’ எனச் சாபம் தந்தாள். அதற்கேற்ப ஒருநாள் அமராவதியில் இந்திரன் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து, தேவமாதர்களின் ஆடல் பாடல்களில் ஈடுபட்டு இருக்கின்ற நேரத்தில் தேவகுருவாகிய பிரகஸ்பதி இந்திரனுடைய சபைக்குள் வந்தார். பதவி கர்வமும், கேளிக்கை மோகமும் கொண்ட இந்திரன் சிம்மாசனத்தை விட்டு எழுந்திருக்காமலும், குருவுக்குச் செய்ய வேண்டிய வணக்கத்தைச் செய்யாமலும் இருந்துவிட்டான். அவனுடைய அகங்காரத்தை அடக்கக் கருதிய பிரகஸ்பதி, உன் பதவி முதலியவற்றை இழந்து அனைத்துச் செல்வங்களையும் இழந்து உழல்வாயாக என்ற சாபத்தைத் தந்தார். சாபமிடப்பட்டவுடன் இந்திரன் தலைநகராகிய அமராவதி தன் அழகை இழந்தது. அங்குள்ள கட்டடங்கள் இடிந்து விழலாயின. இந்தப் பரிதாபமான காட்சியைப் பார்த்த இந்திரன் தேவதச்சனாகிய விஸ்வகர்மாவை அழைத்து இழந்தவற்றைப் புதுப்பித்து மறுபடியும் அமராவதியைப் பழைய நிலைக்குக் கொண்டு வருமாறு ஆணையிட்டான். விஸ்வகர்மா எவ்வளவு முயன்று புதுப்பித்தாலும் இந்திரன் விஸ்வகர்மாவின் வேலையில் குறைசொல்லிக் கொண்டே வந்தான். எப்படிச் செய்தாலும் இந்திரன் திருப்தி அடைவதாக இல்லை. இந்திரனை விட்டு விட்டுப் போய்விட வேண்டும் என்று விஸ்வகர்மா பலமுறை முயன்றும் இந்திரன் அவனை விடுவதாயில்லை. இறுதியாக மனம் நொந்துபோன விஸ்வகர்மா பிரம்மனிடம் சென்று முறையிட்டான். பிரம்மா விஸ்வகர்மாவை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றார். விஸ்வகர்மா நடந்தவை அனைத்தையும் சொல்லித் தனக்கு விடுதலை தருமாறு விஷ்ணுவிடம் வேண்டினான்.

இவற்றையெல்லாம் கேட்டறிந்த விஷ்ணு ஒரு பிராமணச் சிறுவன் வடிவம் கொண்டு, இந்திரனிடம், ஒ இந்திரனே! எத்தனையோ அமராவதிகளையும், இந்திரர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் உன்னுடைய இந்த அமராவதி போல அழகான ஒரு நகரத்தையும், உன்னைப் போன்ற ஒரு இந்திரனையும் பார்த்ததே இல்லை!" என்று சிறுவன் கூறினான். சிறுவனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இந்திரன், மிகவும் ஏளனமாக “பிராமணச் சிறுவனே! நீயோ சிறுவன். எத்தனையோ இந்திரர்களையும் அமராவதிகளையும் பார்த்திருக்கிறேன் என்றும் சொன்னாயே. அப்படி எத்தனை இந்திரர்களைப் பார்த்தாய்?" என்று கேட்டான். சிறுவன் சிரித்துக் கொண்டே இந்திரனே, இந்தச் சிறிய பூமிக்கு மேல் உள்ள தேவலோகத்தில் நீ இந்திரன். ஆனால் இந்தப் பெரிய அண்டத்தில் இதுபோன்ற எத்தனையோ

தேவலோகங்கள் உள்ளன. ஒவ்வொரு தேவலோகத்திலும் ஓர் அமராவதியும், ஒர் இந்திரனும் உள்ளனர். இந்த இந்திரர்களைக் கணக்கெடுத்தால் சமுத்திரத்தில் உள்ள மணலினும் பலராவர். உன்னுடைய விஸ்வகர்மா படைத்த இந்த அமராவதி அந்த அமராவதி களைவிடச் சிறியதாயினும் மிக்க அழகுடன் விளங்குகிறது. இதனைச் சபித்த விஸ்வகர்மா மதிக்கப்பட வேண்டியவன்' என்று சிறுவன் கூறியவுடன் வியப்புத் தாங்காத இந்திரன், 'சிறுவனே, எத்தனை இந்திரர்களை நீ பார்த்திருக்கிறாய்? என்றான். அப்பொழுது சிறுவனின் பாதத்தின் பக்கத்தில் எறும்புகள் சாரைசாரையாகப் போய்க்கொண்டிருந்தன. சிறுவன், இந்திரனே! இந்த எறும்புகளைப் பார். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் இந்திரர்களாக இருந்தவர்களே ஆவர். ஒர் இந்திரனுடைய பதவிக் காலம் எழுபத்தியோரு யுகங்களாகும். இத்தனை யுகங்கள் வாழுகின்ற ஒர் இந்திரனைப் போல இருபத்தி எட்டு இந்திரர்கள் தோன்றி மறைகின்ற அந்த நீண்ட காலம் பிரம்மனுடைய ஒருநாள் ஆகும்.'

சிறுவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்திரன், அண்டத்தின் அமைப்பில் தானும், தனது இந்திரப் பதமும் மலையளவு பெரியது என்று நினைத்திருந்த இந்திரன், கடுகைவிடச் சிறிய அற்பமான ஒருவன் என்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தான். உடனே விஸ்வகர்மாவை அழைத்து அவன் போகலாம் என உத்தரவு கொடுத்து விட்டான்.

அக்னியின் கர்வபங்கம்

ஒருமுறை அஷ்டதிக்குப் பாலர்களில் ஒருவனாகிய அக்னி ஏதோ காரணத்தால் சினம் கொண்டு மூன்று உலகத்தையும் எரித்துச் சாம்பலாக்குகிறேன் என்று சூளுரைத்து, பனை மரத்தை விட உயரமாகத் தன்னுடைய சுடர்களை நீட்டி அனைத்தையும் எரிக்கப் பார்த்தான். அப்பொழுது ஒரு குழந்தை வடிவாக அங்கே வந்த விஷ்ணு, ஒரு சிறிய துரும்பை எடுத்து அக்னிதேவனின் முன்னர் போட்டு, எங்கே இதை எரி பார்க்கலாம் என்றார். சினம் கொண்ட அக்னி அக் குழந்தையையும், துரும்பையும் ஒரே சமயத்தில் எரிக்க முயன்றான். குழந்தையின் தலையில் உள்ள ஒரு முடியைக் கூட அக்னியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிரே இருந்த துரும்பையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கர்வம் அடங்கிய அக்னி தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

(இதனை அடுத்து பிரம்ம வைவர்த்த புராணம் பார்வதி சந்திரன், சூரியன், துர்வாசர் முதலி பலருடைய கர்வ பங்கங்களை வரிசைப்படுத்திச் சொல்விக் கொண்டே போகிறது. அடுத்து இராமாயணத்தையும், கம்வைதத்தையும் பேசுகிறது).

ராதையும், கிருஷ்ணனும் சேர்ந்த கதை

பிரிதமாவின் சாபத்தால் கிருஷ்ணனைப் பிரிந்து ஒர் இடையர் குலப் பெண்ணாக வாழ்ந்து வந்த ராதை, சித்தாஸ்ரமம் சென்று வழக்கம் போல் கணேசனை வழிபடச் சென்றாள். அங்கு சென்ற பொழுது பார்வதி அங்கே தோன்றி. ராதை, நீ கிருஷ்ணனுடன் சேரும் காலம் நெருங்கிவிட்டது. விரைவில் அவனை அடைவாய்!” என்று கூறி மறைந்தார். இதனைக் கேட்ட ராதை தான் முன்பு பழகிய கோகுலத்திற்குச் சென்றாள். இப்பொழுது கிருஷ்ணன் கரிய நிறமுடையவனாக மஞ்சள் பட்டை அணிந்து, மயில் இறகைத் தலையில் அணிந்து, கையில் குழலுடன் ராதையை வந்து சந்தித்தான். கோபிகைகள் அனைவரும் ராதையையும், கிருஷ்ணனையும் வரவேற்றனர். அந்நேரம் கோலோக உலகினின்று பொன் விமானம் வர, நந்தகோபன், யசோதை, அனைத்து கோபிகைகள் ராதை, கிருஷ்ணன் ஆகிய அனைவரும் ஏறிக்கொள்ள அவ்விமானம் கோலோக உலகை அடைந்தது.

அங்கு அனைவரையும் அமரச் செய்து கிருஷ்ணன் பின்வருமாறு பேசினான். 'பிரம்மாவில் தொடங்கி, அற்பப் புல்லின் இதழ்வரை அனைத்தும் மாயை ஆகும். ஆகாயத்தில் தோன்றும் மின்னலையும், ஒரு நீர்க்குமிழியையும், நீரில் இழிந்த கோட்டினையும் போன்றது மேலே சொல்லப்பட்டவை. கிருஷ்ணன் பிறந்ததில் இருந்து, கோலோகம் செல்லும்வரை இந்த பூமியில் அவன் வாழ்ந்த காலம் கோகுலத்தில் பதினேழு ஆண்டும், மதுரா, துவாரகா இரண்டிலும் நூறு ஆண்டுகள், பிருந்தாவனத்தில் பதினான்கு ஆண்டுகள் ஆக நூற்றி இருபத்தைந்து ஆண்டுகளே ஆகும்.

(கிருஷ்ணன் ராதையுடன் விமானம் ஏறிக் கோலோக உலகம் சென்றான் என்று கூறும் இதே பிரம்மவைவர்த்த புராணம் மற்றப் புராணங்களைப் போவ கிருஷ்ணன் வேடனால் கொல்லப்பட்டதாகவும், பலராமன் உடம்பில் இருந்து பெரிய பாம்பு வெளிப்பட்டு கடலுக்குள் சென்ற தாகவும் யாதவர்கள் அனைவரும் போரிட்டுக்கொண்டு மடிந்ததாகவும் கூறுகிறது. இந்த இரண்டுவகை கிருஷ்ணன் பற்றிய கதைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண் பட்டவையாய் இருக்கின்றன. பிரம்மவைவர்த்த புராணத்தின் நான்காவது காண்டமாகிய கிருஷ்ணஜன்ம காண்டத்திலேயே அடுத்தடுத்து முரண்பட்ட கதைகள் பேசப்பட்டுள்ளன. இப் புராணத்தைப் பொறுத்தமட்டில் குழப்பங்கள் நிரம்ப உள்ளன என்பது அறியப்பட வேண்டும்),

நாராயண முனிவரிடம் இப்புராணத்தைக் கேட்ட நாரதர் “இதுவரை எங்கும் நான் கேட்டிராத பல அரிய விஷயங் களைச் சொல்லி என்னைத் தெளிவுபடுத்தி விட்டீர்கள். இனி யான், யாரிடமும் சென்று எதையும் கேட்கத் தேவையில்லை. நான் முழுத்திருப்தி அடைந்து விட்டேன். அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன? நேரடியாக இமயமலை சென்று தவத்தில் ஈடுபடட்டுமா?’ என்று கேட்டார். நாராயண முனிவர் "இன்னும் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன. போன ஜென்மத்தில் உனக்கிருந்த ஐம்பது மனைவியருள் ஒருத்தி, எத்தனை பிறப்பெடுத்தாலும் உன்னையே கணவனாக அடைய வேண்டும் என்று விரும்பி இப்பொழுது சிரிஞ்செய அரசனின் மகளாகப் பிறந்துள்ளார்கள். அவளை மணம் புரிந்து கொண்டு வாழ்வாயாக’ என்று சொல்ல, நாரதரும் அவ்வாறே செய்தார். தாம்பத்தியத்தில் ஈடுபட்ட நாரதர் விஷ்ணுவை அடியோடு மறந்துவிட்டார். இல்வாழ்க்கையின் சுகபோகங்களிலேயே திளைத்துக் கொண்டிருந்த நாரதரை சனத்குமார முனிவர் மெள்ள அவர் மனைவியிடமிருந்து அவரைப் பிரித்து, விஷ்ணுவை தியானிக்கும் வழியில் செலுத்தினார்.

முடிவுரை

எல்லாப் புராணங்களையும் போல இப்புராணமும், இதைக் கேட்போர் இன்னபயன் அடைவார்கள் என்பன போன்ற வழக்கமாகச் சொல்லப்படுகின்ற சொற்களுடன் முடிவடைகின்றது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top