• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புதிராய் நீயெனக்கு 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi

மண்டலாதிபதி
Joined
Sep 16, 2019
Messages
273
Reaction score
559
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ் ??? லேட்டா வந்ததுக்கு சாரி ??? அடுத்த புதிர் இதோ ??? இந்த எபில கனவு பத்தி கொஞ்சம் சொல்லிருக்கேன்... அதை பத்தி உங்களுக்கு தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க...???


1585670757556.jpg



புதிர் 16



“டேய் அர்வி கனவு பலிக்குமா டா…” என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கேட்க, அரவிந்தோ வருணின் கேள்வியில் குழம்பிப் போனான்.



“அடப்பாவி, இதக் கேட்குறதுக்கா டா இந்த நடுராத்திரி கால் பண்ண…”



“ஹே நான் சொல்றத ஃபுல்லா கேளு டா…” என்ற வருண் தன் கனவைப் பற்றிக் கூற ஆரம்பித்தான்.



முழுதாக கூறி முடித்ததும், அரவிந்தின் பதிலுக்காக காத்திருக்க, எதிர்முனையில் இருந்து வந்த, “ஹா…ஆ…வ்…” என்ற சத்தத்தில் கடுப்பாகிப் போனான்.



“டேய் நான் இங்க எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்… நீ என்னடானா கொட்டாவி விட்டுட்டு இருக்க…” என்று கத்த...



“சாரி மச்சான்… நீ பேசுனது எங்க அப்பா பேசுன மாதிரியே இருந்துச்சா, அதான் லைட்டா தூக்கம் வந்துடுச்சு… இப்போ பாரு உன் கனவ நான் எப்படி கவனிச்சுருக்கேன்னு சொல்றேன்… ஊருல இருந்து வந்த நீ வர்ஷினிய ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்ல மீட் பண்ற… ஆனா அவ தான் உனக்கு பார்த்திருக்க பொண்ணுன்னு உனக்கு தெரியல… ஆனா உங்க அப்பாக்கு ஏன் தெரியல…”



“டேய்… அப்போ வர்ஷினி எனக்கு பார்த்த பொண்ணு இல்ல...”



“ஓ ட்ரீம் வெர்சஸ் ரியாலிட்டியா… சரி டா வர்ஷினி உனக்கு பார்த்த பொண்ணு இல்ல… ஆனா அவ மேல உனக்கு ஒரு சாஃட் கார்னர் உருவாகுது… அவள ஹாஸ்பிடல்ல சேர்க்குறீங்க… கனவுல வர எங்க அப்பா, ரொம்ப குழப்பாம அவளுக்கு ஏதோ நோய்னு சொல்லிருக்காரு… அவள ஹிப்னாடைஸ் பண்ணதுல அவளுக்கு ‘வினு’ங்கிற பேருல ஏற்கனவே லவர் இருக்கான்னு தெரிய வருது… அவளே அவங்க அப்பா தான் வினு இறப்புக்கு காரணம்னு சொல்லிருக்கா... மேற்கொண்டு அவங்க வீட்டுல விசாரிக்க போற உங்களுக்கு அடுத்த ட்விஸ்ட்டா அவங்க அப்பா அம்மா இறந்துட்டாங்கன்னு தகவல் கிடைக்குது… அப்பறம் அந்த கோவில் சீன்ல கொஞ்சம் தூங்கிட்டேன் மச்சி…” என்றான் இளித்துக் கொண்டே…



பின் வருண் ஏதோ கூற வருவதற்கு முன்பே, “கடைசில அவ உன்ன கடப்பாறையால குத்திட்டா… இது மட்டும் எனக்கு கேட்டுச்சு டா… இதான உன் கனவு…” என்றான்.



“ம்ம்ம்…” என்றான் சற்று இறுகிய குரலில்.



“டேய் மச்சான் கூல் டா… நான் இருக்கப்போ எதுக்கு டென்ஷன்… நாளைக்கு கிளம்பி ரெடியா இரு… ஒரு இடத்துக்கு போகலாம்…” என்றான்.



“எங்க டா…”



“ம்ம்ம் அது சர்ப்ரைஸ்…”



“சர்ப்ரைஸ் குடுக்குற நேரமா டா இது…” என்று வருண் சலித்துக் கொள்ள…



“ஏன் டா படுத்துற… உன் கனவ தான் சொல்லி முடிச்சு, அதுக்கு சொல்யுஷனா நாளைக்கு ஒரு இடத்துக்கு போலாம்னு சொல்லிட்டேன்ல… இன்னும் ஏன் டா நொய்யு நொய்யுன்னு கேள்வி கேட்டுட்டே இருக்க… படுத்து தூங்கு டா…” என்றவன் வருணின் பதிலைக் கூட கேட்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டான்.



‘கொஞ்சம் ஓவரா தான் படுத்துறோமோ… படுத்துவோம்… நம்ம அர்வி தான…’ என்று நினைத்தவாறே உறங்கிப் போனான் வருண்.



அடுத்த நாள் காலை, 9 மணிக்கெல்லாம் வருணின் வீட்டில் ஆஜராகி விட்டான் அரவிந்த்.



“அட அர்வி… என்ன அதுக்குள்ள விடிஞ்சுடுச்சா உனக்கு…” என்றார் சிவா.



‘ஹ்ம்ம் எல்லாம் உங்க பையனால தான் அங்கிள்… நைட்டும் தூங்க விடுறது இல்ல… காலைலயும் தூங்க விடாம படுத்தி எடுக்குறான்… போன ஜென்மத்துல இவன் என் கேர்ள் ஃபிரெண்டா இருந்துருப்பான்னு நினைக்கிறேன்…’



இவற்றையெல்லாம் அங்கு டைனிங் டேபிளில், அங்கு நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற ரீதியில் உணவுண்டுக் கொண்டிருந்த வருணைப் பார்த்துக் கொண்டே எண்ணியவன், வெளியில் அதைக் கூற முடியாத காரணத்தினால், “உங்க தங்கச்சி அங்க உப்புமா பண்ணி வச்சு வெறுப்பேத்துறாங்க அங்கிள்… ச்சே பையன் ஒரு வருஷம் கழிச்சு ஊருல இருந்து வரானே, அவனுக்கு பிடிச்சதா பண்ணலாம்னு உங்க தங்கச்சி நெனச்சங்களா… வந்த அடுத்த நாளே உப்புமானா போகப் போக என்னனென்ன கொடுமைகளெல்லாம் பார்க்க வேண்டிவருமோ…” என்று போலியாக சலித்துக் கொண்டான்.



“ஹாஹா அர்வி இவ்ளோ பேசுறியே… இதே பேச்சு நாளைக்கு உன் வைஃப் சமைச்சு போடுறப்போ பேசுவியா…”



“அவ தான் உப்புமாக்கு பதிலா கோந்து பண்ணி என் வாய அடைச்சிடுவாளே… அப்பறம் எங்க வாய தொறக்குறது… ஹ்ம்ம் எந்த ‘டேட்’ஸ் லிட்டில் பிரின்சஸ்’ எனக்குன்னு காத்திட்டு இருக்காளோ…”



அவனின் பேச்சைக் கேட்டு தந்தை மகன் இருவருமே சிரித்துக் கொண்டிருந்தனர்.



“நீ சொல்றத பார்த்தா, எப்போ டா வருவான்னு வெயிட் பண்ற மாதிரி இருக்கே… நீயா யாரையாவது பார்த்து வச்சுட்டியா…” என்று வம்பிழுத்தான் வருண்.



“ஹ்ம்ம் சில பேர மாதிரி அப்பா முன்னாடியே பொண்ண சைட்டடிக்கிற சான்ஸ் எல்லாருக்கும் கிடைக்குமா… எனக்கெல்லாம் எங்க அப்பா பொண்ணு பார்ப்பாரோ மாட்டாரோ… நான் எதுக்கும் சைட்ல யாரையாவது கரெக்ட் பண்ணி வச்சுக்குறது நல்லதுன்னு நினைக்கிறன்…” என்று அரவிந்த் சொல்ல, அவனை டேபிளுக்கு அடியில் கிள்ளினான் வருண். அதைக் கண்டும் காணாமல் சிரித்துக் கொண்டிருந்தார் சிவா.



மூவரும் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர். பின்பு வருண் தான் ஆரம்பித்தான்.



“ப்பா, பிரெண்ட்ஸ் கொஞ்ச பேர மீட் பண்ண போறோம்…” என்றான். முதல் முறை தந்தைக்கு தெரியாமல் ஒரு காரியம் செய்யப் போவதால் உண்டான பதற்றம் அவன் முகத்தில் தெரிந்தது.



“ஏன் வரு, இன்னைக்கே ஸ்ட்ரைன் பண்ணிக்கிற… ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு போகலாம்ல…” என்றார்.



வருணோ அரவிந்தைப் பார்க்க, அவன் தான் பார்த்துக் கொள்வதாய் தலையசைத்தான்.



“அங்கிள், நாளைலயிருந்து லோன் வாங்குறது, இடம் தேடுறதுன்னு பிஸியாகிடுவோம்… அதான் இன்னைக்கே போறோம்…” என்று பேசி அவரை சமாளித்தான்.



காரில் ஏறி சிறிது தூரம் சென்றதும், “ஏன் டா இவ்ளோ லேட்டு?” என்றான் வருண்.



“அடேய் ஏன் டா கேட்கமாட்ட… நீ ஈஸியா வர சொல்லிடுவ… அங்க அந்த குட்டிப் பிசாச சமாளிச்சுட்டு வரதுக்குள்ள எனக்கு தான் போதும் போதும்னு ஆகிடுது…” என்று அரவிந்த் சலித்துக் கொண்டான்.



இதழில் தோன்றிய மென்முறுவலுடனே , வண்டியை செலுத்தினான் வருண்.



“ஹே இப்போவாவது சொல்லேன் டா எங்க போறோம்னு..?” என்று வருண் கேட்க…



“**** ஹாஸ்பிடல்…” என்றான் அரவிந்த்.



“டேய் அது சேகர் அங்கிள் ஒர்க் பண்ற ஹாஸ்பிடல் தான…”



“ஏன் டா எங்க அப்பாவ பார்த்தா நல்ல சைக்கியாட்ரிஸ்ட் மாதிரி தெரியலையா…?”



“அடப்பாவி என்ன பைத்தியம்னே முடிவு பண்ணிட்டியா…?” என்றான் வருண் அதிர்ச்சியுடன்…



“ப்ச்… உன் கனவுக்கான மீனிங் உனக்கு தெரியணுமா வேணாமா… கொஞ்ச நேரம் அமைதியா வா டா…” என்று வருணை அடக்கினான் அரவிந்த்.



அடுத்த அரை மணி நேரத்தில், சேகரின் முன் அமர்ந்திருந்தனர் இருவரும். சேகரோ இருவரையும் குழப்பத்துடன் பார்க்க, அரவிந்த் வருணிடம் சொல்லுமாறு தலையசைத்தான்.



வருணிற்கு தான் எதிலிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.



“அங்கிள்… நான் இப்போ சொல்றத அப்பா கிட்ட சொல்ல வேண்டாம்…” என்று வருண் கூறியதும் சேகரின் பார்வை கூர்மையாக…



“இத நெனச்சு அவரு வீணா டென்ஷன் ஆக வேண்டாம்னு தான் அவரு கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்றேன்…” என்றான் வேகமாக.



“வருண், நேத்துலயிருந்தே நீ சரி இல்ல… நானும் ‘ஜெட்-லேக்’கா இருக்கும்னு நெனச்சு விட்டுட்டேன்… ஆனா இப்போ தான் தெரியுது எதையோ நெனச்சு குழம்புறன்னு… என்னாச்சு எங்கிட்ட சொல்லு… உன் பிரச்சனைக்கான சொல்யூஷன் ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம்…” என்றார்.



அப்போதும் கூட, சிவாவிடம் கூற மாட்டேன் என்று அவர் சொல்லவில்லை, வருணும் அதைக் கவனிக்கும் நிலையில் இல்லை. அதைக் கண்டுக்கொண்ட அரவிந்தையும் தன் பார்வையால் அடக்கினார் சேகர்.



ஒரு பெருமூச்சை வெளியிட்டு, தன் கனவை கூற ஆரம்பித்தான் வருண். அவன் கூறுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டார் சேகர். ஒரு வழியாக அனைத்தையும் கூறி முடித்ததும், சேகரின் முகம் பார்த்தான்.



“எல்லாம் சொல்லி முடிச்சுட்டீயா…?” என்று சேகர் வினவ, மெல்ல தலையசைத்தான் வருண்.



“குட்… இப்போ உன் கனவ பார்க்குறதுக்கு முன்னாடி, கனவு எதுனால வருதுன்னு சொல்றேன்… நல்லா கேட்டுக்கோ…” என்று ஆரம்பித்தார்.



“போச்சு… இப்போ உண்மையாவே கிளாஸ் எடுக்கப் போறாரு…” என்று அரவிந்த் கூற, அங்கிருந்த இருவருமே அவனை முறைத்தனர்.



‘அய்யயோ இப்பவும் சத்தமா பேசிட்டோமோ…’ என்று மனதிற்குள் நினைத்து, வெளியில் இளித்து வைத்தான்.



“இப்போ நான் சொல்லப் போறது அறிவியல் மட்டும் சார்ந்த விஷயம் இல்ல… உணர்வு சார்ந்த விஷயம் கூட… ‘கனவு’ – அப்படினா என்ன? எதனால வருது? இதுக்கான பதில் இது தான்னு அறிவியல் சார்ந்த ஆதாரங்கள் நம்ம கிட்ட எதுவும் இல்ல. இன்னமும் இந்த துறைல ஆராய்ச்சி பண்ணிட்டு தான் இருக்காங்க… தினமும் புதுசு புதுசா கண்டுபிடிச்சுட்டு தான் இருக்காங்க…



இப்போ நம்ம பார்க்கப் போறது, இது வரைக்கும் பரவலா எல்லோராலும் ஏத்துக்கப்பட்ட ஒரு தியரி… கனவுகள்னா என்ன…? ஆழ்மனசு ஆசைகளா இருக்கலாம், நிஜத்தில் சந்திக்க பயப்படுற விஷயங்களா இருக்கலாம், ஆழ்மனசுல அடிக்கடி பதியப்பட்ட காட்சிகளா இருக்கலாம்…



சில நேரம் நம்ம மூளை நம்ம கிட்டயே சூழ்ச்சி பண்ணும்… ஃபார் எக்ஸாம்பில், உன்ன ஒரு சிஷுவேஷன்ல நிறுத்தி, அதுலயிருந்து நீ எப்படி வெளிய வரன்னு உன் மூளை டெஸ்ட் பண்ணலாம்…



எனக்கு தெரிஞ்சு இது தான் உனக்கு நடந்துருக்குறது…” என்று கூறி நிறுத்தினார்.



வருணும் அரவிந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



சேகர் தொடர்ந்தார், “அதே மாதிரி நம்ம மூளையால புதுசா ஒரு முகத்தையோ சத்தத்தையோ உருவாக்க முடியாது. இதுக்கு முன்னாடி மூளைல பதிவான முகங்களோ ஒலியோ தான் கனவுலயும் வரும்…”



“ஆனா அங்கிள், நான் இதுக்கு முன்னாடி வர்ஷினிய பார்த்தது இல்லையே…” என்றான் வருண் குழப்பமாக…



“உனக்கு நினைவுல இல்லாம இருக்கலாம் வருண். ஆனா வர்ஷினியோட முகம் கண்டிப்பா உன் ஆழ்மனசுல பதிஞ்சனால தான் கனவுல அவ முகத்த உன் மூளை ரீக்கிரியேட் பண்ணிருக்கு… நல்லா யோசிச்சு பாரு…” என்றார்.



அவன் அன்று தன் தந்தை புகைப்படத்தை அனுப்பியதிலிருந்து யோசித்துப் பார்த்தான். அன்று புலனத்தை திறந்தவுடன் அந்த புகைப்படம் லோடாகிக் கொண்டிருந்தது. அப்படத்தில் அவளின் முகம் முழுதாக தெரிவதற்கும், வெளியில் சத்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது. அவளின் முகத்தை சரியாக பார்க்கா விட்டாலும் மூளையில் பதிந்திருக்குமோ என்ற சந்தேகம் அவனிற்குள் எழுந்தது.



“அப்போ அங்கிள், அப்பாவோட அந்த கேஸ்… அப்பறம் ‘வினு’… இதுக்கெல்லாம் காரணம்…?”



“எனக்கு தெரிஞ்சு எல்லாமே உன் மூளைல பதிவான விஷயங்கள் தான் வருண். நீ வேணா உங்க அப்பா கிட்ட கேட்டுப் பாரு… ஆனா ஒரு விஷயம்… உனக்கு கற்பனை வளம் ஜாஸ்தி தான்…” என்றார் சிரித்துக் கொண்டே…



வருணோ முழிக்க, “ஹாஹா உங்க அப்பா வேலைய விட்டு நின்னதுக்கு ஒரு காரணத்த உன் கனவுல மேட்ச் பண்ண பார்த்தீயா… உன் மூளை தீயா வேலை செஞ்சுருக்கு…” என்றார்.
 




Barkkavi

மண்டலாதிபதி
Joined
Sep 16, 2019
Messages
273
Reaction score
559
Location
Bangalore
அங்கு சூழல் கொஞ்சம் இலகுவானது. இருவரும் மட்டும் அங்கு பேசிக் கொண்டிருக்க, அரவிந்தின் சத்தம் கேட்க வில்லையே என்று திரும்பிப் பார்க்க, அங்கோ அவன் தியான நிலையில் (!!!) இருந்தான்.



சேகர் அவனைப் பார்த்து முறைக்க, வருணோ சிரித்தபடியே அவனை எழுப்பினான்.



“டேய் எழுந்திரி டா…” என்றான் வருண் அடிக்குரலில்.



“என்ன டா கிளாஸ் முடிஞ்சிசுச்சா…” என்றவாறே எழுந்தமர்ந்தான்.



அவன் எழுந்ததும் பார்த்தது கோபத்தில் இருந்த அவனின் தந்தையையே.



“ஸ்ஸ்ஸ் டேய் வரு, கண்ணத் தொறந்தாலும் எங்க அப்பாவே கண்ணுக்குத் தெரியுறாரு டா… நேத்து டோஸ் கொஞ்சம் ஓவரோ…” என்றவாறே கண்களைக் கசக்கினான்.



வருணோ, ‘விட்டா இவனே எல்லாத்தையும் உளறிடுவான்...’ என்று எண்ணியபடி, அவன் கால்களை மிதித்து, அவன் காதுகளில், “அடேய் நம்ம இந்தியால இருக்கோம். உனக்கு முன்னாடி இருக்குறது உண்மைலேயே உங்க அப்பா தான்…” என்றான்.



வருண் கூறியதைக் கேட்டவன் அடித்துப் பிடித்து எழுந்து, அவர்களைப் பார்த்து கேவலமான சிரிப்பொன்றை வெளியிட்டான்.



சேகரோ அவனை முறைத்துக் கொண்டே, “அங்க போய், கிளாஸ் கவனிக்காம இத தான் பண்ணிட்டு இருந்தீயா…” என்று ஆரம்பித்தவர், அவன் காதுகள் கருகும் வரை அறிவுரை கொடுத்த பின்பே அவர்களை செல்ல அனுமதித்தார்.



வெளியில் வந்த வருண், “ஏன் டா அவரு பேசி பத்து நிமிஷம் தான ஆச்சு… அதுக்குள்ளவா தூங்குன…” என்று கேட்டான்.



“என்ன டா பண்றது… அவரு பேச ஆரம்பிச்சாலே தூக்கம் தூக்கமா வருது… எல்லாம் மேனுஃபாக்சரிங் டிஃபெக்ட் டா…” என்றான் அரவிந்த்.



வருணோ தலையில் அடித்துக் கொண்டு அவனுடன் நடந்து சென்றான்.



வருண் தன் கனவில் நடந்தவைகளை ஏன் என்று கண்டுபிடிப்பானா… ‘வினு’ உண்மையான கதாப்பாத்திரம் தானா… ‘வினு’ வருண்-வர்ஷினியின் திருமணத்தை எவ்விதமாவது பாதிப்பானா…



புதிர் விலகும்... காத்திருங்கள்...
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
"வினு" இந்த பாத்திரம் தான் வில்லனோ:unsure:. வருணுக்கு வில்லன் அவன் கனவு தான் போல:sneaky::sneaky:. அர்வி தான் பாவம், அவனுக்கும் ஒரு கனவு போடுங்க ஆத்தரே:love:.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top