• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புதிராய் நீயெனக்கு 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi

மண்டலாதிபதி
Joined
Sep 16, 2019
Messages
273
Reaction score
559
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்...??? அடுத்த புதிர் இதோ...??? படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க... இன்னும் இரண்டு அல்லது மூன்று எபிகளில் கதை முடிந்துவிடும்...??? கதையின் போக்கு உங்களுக்கு பிடிச்சுருக்கான்னு கமெண்ட் பண்ணுங்க... ???


புதிர் 18​

1586073564100.jpg

கனவுகளின் 50% உறக்கத்திலிருந்து விழித்த 5 நிமிடங்களில் மறந்துவிடும்... கனவுகளின் 90% விழித்த 10 நிமிடங்களில் மறந்துவிடும்...


அடுத்த நாள் காலை, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, சிவா வருணிடம், “வரு, இந்த வீக்கென்ட் உனக்கும் வர்ஷினிக்கும் எங்கேஜ்மென்ட் பண்ணலாம்னு பிளான் பண்ணிருக்கோம்… உனக்கு ஓகே தான…” என்று கேட்டார்.

“ப்பா... இன்னும் ஹோட்டல் வேலையெல்லாம் அப்படியே இருக்கு… அதுக்குள்ளயா…” என்றான் வருண்.

“எங்கேஜ்மென்ட் மட்டும் தான் இப்போ வரு… கல்யாணம் ஒன் இயருக்கு அப்பறம் தான்…” என்றார்.

வருணிற்கு ஹோட்டல் வேலைகளை விட, தன் கனவிற்கான முழு காரணத்தை இன்னும் அறியவில்லையே என்பது தான் மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்தது. மேலும் அந்த கனவின் தாக்கம் வர்ஷினியையும் பாதித்து விடுமோ என்று குழம்பினான்.

“என்ன வரு… ரொம்ப யோசிக்கிற… வர்ஷினிய உனக்கு பிடிச்சுருக்கு தான…?”

“ம்ம்ம் பிடிச்சுருக்கு ப்பா… ஆனா…”

“அப்பறம் என்ன… எதுக்கு தேவையில்லாத குழப்பம்… அவகிட்ட பேசுனியா… உன் கரீயர் பத்தி ஷேர் பண்ணியா…?”

சிவா இப்படி கேட்ட பின்பு தான் அவளிடம் இன்னும் பேசவே இல்லை என்பது அவனிற்கு தோன்றியது.

அவன் ‘இல்லை’ என்று தலையசைக்க, “என்ன வரு… அந்த பொண்ணு கூட இன்னும் பேசலையா…? அந்த பொண்ணுக்கும் உன்கூட பேசணும்னு ஆசை இருக்கும்ல… அவளா உனக்கு போன் பண்ணவும் தயங்கிருக்கலாம்… நானும் ஏர்போர்ட்ல ரெண்டு பேரும் பார்த்துகிட்டத வச்சு அதுக்கப்பறம் நீங்க பேசிருப்பீங்கன்னு நெனச்சேன்…” என்று சிவா கூற, வருணும் சற்று கவலையுடன் காணப்பட்டான்.

தன் கனவில் மூழ்கி, அதற்கான விடையைக் கண்டுபிடிப்பதிலேயே நேரம் செலவிட்டவன், தன்னவளை அந்த நேரத்தில் மறந்து தான் போனான். இப்போது தன் தந்தை அதைக் கூறி வருந்தவும் தான் தன் தவறு அவனிற்கு புலப்பட்டது. ஒரு வேளை தன்னவளும் அதற்காக வருந்தியிருப்பாளோ என்று தோன்றி அவனையும் வருந்தச் செய்தது.

“சாரி ப்பா… ஏதோ ஒரு டென்ஷன்ல மறந்துட்டேன்…” என்றான் வருண்.

“ம்ம்ம் எனக்கும் புரியுது வரு… நீயும் அர்வியும் உங்க ஹோட்டலுக்காக அலஞ்சுட்டு இருக்கீங்க… பட் வர்ஷினி பக்கம் இருத்தும் யோசிச்சுருக்கணும் வரு… கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க, முன்னாடியே எல்லாத்தையும் பேசிக்கணும்னு சொல்ல வரல… ஆனா ரெண்டு பேரும் ஃப்ரீயா மனசுல இருக்குறத ஷேர் பண்ணிக்குற அளவுக்கு ஸ்பேஸ் உருவாக்கிக்கோங்கன்னு தான் சொல்றேன்… இனிமே நீ எடுக்குற டெஸிஸின்லாம் அவளையும் கன்சிடெர் பண்ணி தான் எடுக்கணும்…”

“ஸுயர் ப்பா… இன்னைக்கே அவகிட்ட பேசுறேன்… இனிமே நீங்க இப்படி சொல்ற மாதிரி வச்சுக்க மாட்டேன் ப்பா…” என்றான் வருண்.

மனதிற்குள், ‘அந்த கனவ நெனச்சு என் வாழ்க்கைய தொலைச்சுடக் கூடாது… இனி அந்த கனவ தேடி நான் போகமாட்டேன்…’ என்று சொல்லிக் கொண்டான். அவன் அந்த தேடுதலை விட்டாலும், அவன் தேடாமலேயே அவனிற்கான தகவல்கள் அவனிற்கு கிடைக்கும்போது அவனின் எதிர்வினை என்னவாக இருக்கும்…

அவன் தோளில் தட்டியபடி, “எனக்கு தெரியும் வரு… அப்பறம் இன்னைக்கி சேகரும் வரதனும் இங்க வரேன்னு சொல்லிருக்காங்க… எங்கேஜ்மெண்ட் பத்தி பேசுறதுக்காக… அப்போ நீயும் இங்க இருந்தேனா நல்லா இருக்கும்… வரதனும் உன்ன மீட் பண்ணி பேசணும்னு சொன்னாரு…” என்றதும், “ஓகே ப்பா…” என்றான்.

தன் வருங்கால மாமனார் தன்னிடம் பேசப் போகிறார் என்று அறிந்ததில் இருந்து அவனிற்கு சிறிது பதற்றம் எழத்தான் செய்தது. அதற்காக அவன் செய்த அலப்பறைகளை அவனின் மனச்சாட்சியாலேயே தாங்க முடியவில்லை…

எப்போதும் பத்து நிமிடங்களில் நேர்த்தியாய் கிளம்பிவிடும் வருண், இன்று அரை மணி நேரமாகியும் கிளம்பவில்லை. அவனிடம் இருக்கும் ஒவ்வொரு சட்டையாக போட்டுப் பார்த்து அவனிற்கு திருப்தி ஏற்படாததால், அதைக் கழட்டிப் போட்டு என்று இதையே ரிபீட் மோடில் செய்துக் கொண்டிருந்தான். இறுதியில், அவனின் அலமாரியிலிருந்த சட்டைகள் அனைத்தும் வெளியே அவனின் கட்டிலில் தான் குவிந்துக் கிடந்தது.

அதைப் பார்த்தவனின் மனம், ‘பொண்ணோட அப்பாவ பார்க்குறதுக்கே இந்த ஆர்ப்பாட்டமா!!!’ என்று கிண்டலடித்தது.

ஒரு புன்னகையுடன் அதை ஒதுக்கியவன், தான் முதலில் தேர்ந்தெடுத்த எல்லோவ் ஃபுல் ஸ்லீவ் ஷர்ட்டும் க்ரே பேண்ட்டும் அணிந்து கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தான்.

தன் தந்தையின் விழிப்பில், கீழே சென்றான். அங்கு சேகர், வரதன், அரவிந்த் இருக்க, அனைவரையும் வரவேற்றவன், அரவிந்தின் அருகில் சென்று அமர்ந்தான்.

அரவிந்த் சும்மா இருக்காமல், “என்ன டா உங்க வீட்டுல மட்டும் எல்லாம் உல்டாவா நடக்குது… எல்லா வீட்டுலயும் பொண்ணு பார்க்க போனா, உங்க வீட்டுல மட்டும் மாப்பிளை பார்க்க வந்துருக்காங்க… நல்ல வேள, கையில காபிய குடுத்து ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமான்னு கேக்கல…” என்று அவனைக் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

வருணோ வெளியில் சிரித்துக் கொண்டு, அரவிந்திடம், “டேய் அமைதியா இரு டா…” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அரவிந்தோ, “ஹாஹா… டேய் மாப்ள இன்னும் கொஞ்ச நாள் தான் டா உன்ன கிண்டல் பண்ண முடியும்… அதுவரைக்கும் நல்லா என்ஜாய் பண்ணிக்குறேன் டா…” என்று வருணைப் பார்த்து கண்ணடித்தான்.

வருணோ அவனிடம், “ஏன் அதுக்கப்பறம் கிண்டல் பண்ண மாட்டீயா…?” என்று எதிர்பார்ப்புடன் கேட்க…

விஷம சிரிப்புடன், “அதுக்கப்பறம் நீ எப்படி இருப்பியோ… அந்த குட்டி பிசாச வேற சமாளிக்கணும்… அதான் இப்போவே கிண்டல் பண்ணிக்குறேன்…” என்றான்.

அவன் தலையில் கொட்ட வேண்டும் என்று பரபரத்த கைகளைக் கட்டிக்கொண்டு அவனை முறைத்தான்.

“என்ன அர்வி… மாப்பிள்ளை கிட்ட என்ன பேசிட்டு இருக்க…?” என்று வரதன் கேட்க…

“அது வந்து… வரதப்பா... உங்க ‘மாப்பிள்ளை’, பொண்ண ஏன் கூட்டிட்டு வரலன்னு கேட்டாரு... அதான் அவருக்கு விளக்கம் குடுத்துட்டு இருந்தேன்…” என்றதும், அங்கிருந்த அனைவரும் சிரிக்க, வருணோ அர்வியை முறைத்துக் கொண்டிருந்தான்.

“மாப்பிள்ளை, நாளைக்கு எங்கேஜ்மெண்ட்டுக்கு ட்ரெஸ் எடுக்க, அவளும் வருவா…” என்று கூற, வருணோ சிரித்தே சமாளிக்க வேண்டியதாயிருந்தது.

“எப்படி டா… உனக்கு இன்ஃபர்மேஷன கலெக்ட் பண்ணி குடுத்தேன் பார்த்தீயா…” என்று அர்வி கேட்க…

“வெளிய வா டா… உனக்கு இருக்கு…” என்று வருண் பல்லைக் கடித்துக்கொண்டு கூறினான்.

“ஹலோ, மிஸ்டர். வருண்… இப்போ நான் பொண்ணோட அண்ணன்… அப்படியெல்லாம் என்ன திட்டக் கூடாது…” என்று அரவிந்த கூற…

“நான் எதுக்கு உன்ன திட்டப் போறேன்… இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் தங்கச்சிய கொஞ்சுனத ரெகார்ட் பண்ணிருக்கேன்… அத உன் தங்கச்சிக்கு அனுப்புனேனா அவளே உன்ன வச்சு செய்வா…” என்று வருண் கூறினான்.

“ஏன் டா இந்த கொலவெறி உனக்கு… டேய் மச்சான் நீயே எவ்ளோ அடி வேணும்னாலும் அடிச்சுக்கோ டா… ஆனா அந்த குட்டிப் பிசாசு கிட்ட மட்டும் போட்டுக் குடுத்துடாத டா…” என்று கெஞ்சினான் அரவிந்த்.

“டேய் அர்வி… அங்க என்ன குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க…” என்று சேகர் அதட்ட…

“ஹ்ம்ம் என்னமோ நான் மட்டும் பேசுற மாதிரி கேக்க வேண்டியது… உங்க வருங்கால மாப்பிள்ளையும் தான் பேசுனாரு…” என்று முணுமுணுக்க… சேகரின் முறைப்பில் அமைதியானான் அரவிந்த்.

பின்பு நிச்சயம் பற்றிய பேச்சு அங்கு நடந்தது… சிறிது நேரத்திலேயே பேச்சு வருண் மற்றும் அர்வியின் கனவான ஹோட்டலின் பக்கம் திரும்பியது. அதில் மகிழ்ச்சியுடனே கலந்து கொண்டான் வருண்.

தங்களது திட்டத்தைக் கூறியவன், தற்போது லோனிற்காக காத்துக் கொண்டிருப்பதாகக் கூறினான். பின்னர் அவர்களின் வெளிநாட்டு பயணம், படிப்பு பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.

வரதன், “மாப்பிள்ளை…” என்று ஆரம்பிக்க…

வருணோ, “அங்கிள், என்ன பேரு சொல்லியே கூப்பிடுங்க… நீங்க ‘மாப்பிள்ளை’னு கூப்பிடுறது எனக்கு அன்-ஈஸியா இருக்கு…” என்று கூற…

வரதனோ சிரித்துக் கொண்டே, “நீங்களும் அந்த அங்கிள கட் பண்ணிட்டு ‘மாமா’ன்னு சொன்னா, நானும் உங்கள பேரு சொல்லியே கூப்பிடுறேன்…” என்றார்.

“ஓகே மாமா…” என்றான் வருண் சிரித்துக் கொண்டே…

“மாமா… நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க…” என்றான் வருண்.

“ஆமா வருண்… நாளைக்கு நீங்க ஃப்ரீ தான…” என்று கேட்கவும்…

இவ்வளவு நேரம் அமைதியாக அங்கு நடப்பதை கன்னத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த், “அதெல்லாம் ஃப்ரீ தான் வரதப்பா… அதுவும் வர்ஷு வேற வரான்னு சொல்லிருக்கீங்க…” என்று கூறியதும் மீண்டும் அங்கே சிரிப்பலை எழ, வருணோ அரவிந்தைக் கைப்பிடித்து வெளியே அழைத்துச் சென்றவன், அவனை மொத்தினான்.
 




Barkkavi

மண்டலாதிபதி
Joined
Sep 16, 2019
Messages
273
Reaction score
559
Location
Bangalore
“டேய் டேய்… எதுக்கு டா அடிக்கிற…” என்று அலற…

“நீதான சொன்ன எவ்ளோ வேணாலும் அடிச்சுக்கோன்னு...” என்று மீண்டும் அவனைக் குனிய வைத்து முதுகில் அடித்தான்.

“அடப்பாவி… ஒரு ஃப்லோல சொன்னா, அப்படியே பண்றீயே…” என்று புலம்பினான்.

அன்றைய நாள் வருண் மற்றும் அரவிந்திற்கு சிறப்பாகவே அமைந்தது. அவர்கள் காத்திருந்த லோனும் ஸாங்க்ஷனாக, வீட்டில் அதைத் தெரிவித்து மகிழ்ச்சியுடன், அவர்களின் ஹோட்டலுக்கான இடத்தை தேர்வு செய்தனர்.

இதற்கிடையில், மதியம் உணவிற்காக ஹோட்டலில் அமர்ந்திருக்கும் போது, அரவிந்திற்கு வர்ஷினியிடமிருந்து அழைப்பு வந்தது.

அர்வியோ அதை ஏற்கலாமா வேண்டாமா என்று ‘இன்கி பின்கி பான்கி’ போட்டுக் கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருந்த வருணோ, “ஹே ஏன் டா போனயே வெறிச்சு பார்த்துட்டு இருக்க… அட்டெண்ட் பண்ணி பேச வேண்டியது தான…” என்று கூறி, அதை அட்டெண்ட் செய்து விட… அவன் கைப்பட்டு ஸ்பீக்கரும் ஆனாகி விட்டது…

அரவிந்தோ வருணை முறைக்க, ‘இவன் எதுக்கு இப்படி முறைக்குறான்…’ என்று வருண் யோசிக்க… அவனின் யோசனைக்கான விடையாய், அலைப்பேசியின் மறுபுறமிருந்து வந்த சூடான வார்த்தைகள் அவன் காதை நிறைத்தது.

“டேய் அருவி… உன் பிரெண்டு என்ன நெனச்சுட்டு இருக்கான்… பெரிய அப்பாட்டக்கரா அவன்… அவனா எங்கிட்ட பேசமாட்டானோ… நானா அவன்கிட்ட போய் பேசணும் நெனச்சுட்டு இருக்கானோ… அன்னைக்கு என்னனா போட்டோவே பார்க்கலன்னு சொல்றான்… அப்பறம் ‘ஓகே’ங்கிறத கூட அவன் எங்கிட்ட சொல்லல… நேர்ல வந்து தான் பேசலைனா போன்ல கூடவா பேச மாட்டான்… நாளைக்கு ட்ரெஸ் எடுக்கக் போறது வரைக்கும் தான் உன் பிரெண்டுக்கு டைம்… அதுக்குள்ள அவன் பேசல… அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்ல…” என்று கோபமாக பேசியவள், அரவிந்தின் மறுமொழிக்காகக் கூட காத்திராமல் வைத்து விட்டாள்.

நண்பர்கள் இருவரும் அவளின் பேச்சில் அதிர்ந்திருக்க… பேரரின் குரலிலேயே நிகழ்விற்கு வந்தனர்.

பேரர், “சார் ஆர்டர் ப்ளீஸ்…” என்க…

“ஃபர்ஸ்ட் ஒரு ஐஸ் வாட்டர்…” என்றான் அரவிந்த்…

அதைக் குடித்தவன், வருணிடம் நீட்ட அவனும் அதைப் பருகி சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டான். பின்னர் தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்தனர்.

வருண் அர்வியைப் பார்க்க, “இதுக்கு தான் டா அத அட்டெண்ட் பண்ணாம வச்சுருந்தேன்...” என்றான்.

“ஹிஹி சாரி மச்சான்…” என்றான் வருண்.

சிறிது நேரத்தில் அரவிந்த் சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க, “டேய் உன் தங்கச்சி திட்டுனதுல பைத்தியம் ஆகிட்டியா என்ன…?” என்று வருண் கேட்க…

“ஹாஹா மச்சான்… கல்யாணத்துக்கு முன்னாடி அண்ணனுக்கே இந்த நிலைமைனா… கல்யாணத்துக்கு அப்பறம் உன் நிலைமைய நெனச்சு பார்த்தேன்… அதான் சிரிப்பு வந்துடுச்சு…” என்று கூறி மீண்டும் சிரிக்க, வருண் அவனை முறைத்தான்.

“டேய் மாப்ள… எப்போ அவகிட்ட பேசப் போற…” என்று அரவிந்த் கேட்க…

“ஹ்ம்ம் பேசணும் டா… போன்ல பேசுறத விட நேர்ல பேசுறது தான் கரெக்ட்னு தோணுது… அதுவும் இத்தன நாள் பேசாம… இப்போ பேசுறது கொஞ்சம் தயக்கமா தான் இருக்கு…”

“ஹே நீ என்ன வேணும்னேவா பேசாம இருந்த… நீயே உன் கனவால டிஸ்டர்ப்டா இருந்த…” என்று அரவிந்த் கூற…

“ம்ம்ம் அது உனக்கு புரியும்… ஆனா அவளுக்கு…” என்று வருண் இழுக்க…

“எனக்கென்னமோ உன் கனவ அவகிட்ட சொல்றது தான் சரின்னு படுது மச்சான். மே பி அந்த ‘வினு’ யாருன்னு அவளுக்கு தெரிஞ்சுருக்கலாம்ல…”

“இல்ல டா… சப்போஸ் அவளுக்கு யாருன்னு தெரியலைனா அது பிரச்சனையாக கூட சான்ஸ் இருக்கு… அவளையும் இன்னொருத்தனையும் சேர்த்து வச்சு கனவு கண்டேன்னு எப்படி டா அவகிட்ட சொல்றது…” என்று வருண் கேட்க… அவனின் கூற்றும் ஏற்கும்படியாகத் தான் அரவிந்திற்கு தோன்றியது.

“ஓகே மச்சான்… உனக்கு எது சரின்னு படுதோ அதையே பண்ணு… உன்னோட எந்த முடிவுக்கும் உன்கூட நான் இருப்பேன்…” என்று அரவிந்த் கூற… அவனை அணைத்துக் கொண்டான் வருண்.

கனவைப் பற்றி வர்ஷினியிடம் கூற வேண்டாம் என்று வருண் எடுத்த முடிவு சரியா… வருண் – வர்ஷினி சந்திப்பு சுமூகமாக முடியுமா… வினு என்கிற வினோத் யார்…

புதிர் விலகும்... காத்திருங்கள்...
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
?‍♂?‍♂?‍♂??

??????Enna innum 2 epi Thana,
Lovers engayachum love pannathaa Neenga padichinga?????

Varshu oda voice mattum than padichruken sister intha epi la?

Varun ipdiya vaaitha vaangitu povan, seekram poi punch dialogue a pesi Rod punch vanga vendaama ????

Interesting sister ??
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top