• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புதிராய் நீயெனக்கு 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi

மண்டலாதிபதி
Joined
Sep 16, 2019
Messages
273
Reaction score
559
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ் ??? அடுத்த புதிர் இதோ ??? படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க ???

1584629472088.jpg

புதிர் 8​

வருண் கிளம்பி வெளியே வந்த போது, அவனின் தந்தை சேகரிடம் அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

“சரி சேகர்… நாங்க நேரா அங்க போய் விசாரிச்சுட்டு ஹாஸ்பிடலுக்கு வரோம்…” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த வருண் என்னவென்று சைகையால் கேட்டான்.

அவரோ,”இதோ வருண் வந்துட்டான்… அவன் கிட்டயே குடுக்குறேன்…” என்று அலைப்பேசியை நீட்டினார்.

“குட் மார்னிங் அங்கிள்…”

“குட் மார்னிங் வருண்… நல்லா ரெஸ்ட் எடுத்தியா… ஜெட்-லேக் எதுவும் இருக்கா…”

“நோ அங்கிள்… ஐ’ம் பெர்ஃபெக்ட்லி ஓகே…”

“குட்… இன்னிக்கு காலைலேயே வர்ஷினிக்கு ஒரு செஷன் கன்டக்ட் பண்ணேன்..” என்று அவர் கூறியதும், ‘எப்படி நான் இல்லாம அவளுக்கு ஹிப்னாடிசம் பண்ணலாம். ‘ – இதுவே என் மனதில் முதலில் தோன்றியது.

அதை அவரிடம் கேட்கவும் செய்தான்… கேட்ட பின்பே அவனின் கேள்வியை உணர்ந்து தடுமாற்றத்துடன் தன் தந்தையைப் பார்க்க, அவரிடம் அதே கூர்மையான பார்வையே அவனிற்கு பதிலாகக் கிடைத்தது.

அவனோ ஒரு வித சங்கடத்தில் நெளிய, சேகருக்கோ அப்படி எதுவும் தோன்றவில்லை என்பது போல பேசினார்.

“நீங்க வரவரைக்கும் வெயிட் பண்ணா ரொம்ப லேட்டாகிடும்… அதான் ஸ்டார்ட் பண்ணிட்டேன் வருண். இப்போ அவ வீட்டு அட்ரெஸ் உனக்கு மெசேஜ் பண்ணிருக்கேன்… அங்க போய் விசாரிச்சுட்டு வாங்க…” என்றார்.

“ஓகே அங்கிள்…”

“வருண் போன ஸ்பீக்கர்ல போடு…”

அவன் ஸ்பீக்கரில் போட்டவுடன், சேகர், “வருண், சிவா ரெண்டு பேரும் கவனமா கேளுங்க… அந்த பொண்ணு சொல்றது எதுவும் முழுசா உண்மைன்னு நம்பிட முடியாது…” என்றவுடன்…

“என்ன சொல்ற சேகர்…” என்றார் சிவா சிறு அதிர்ச்சியுடன்…

“ஆமா சிவா… இப்போ வர்ஷினி ரொம்ப டிப்ரெஸ்ஸட்டா இருக்கா… இந்த மாதிரி நிலைமைல அவ கண்டிப்பா ஹாலுசிநேஷனால பாதிக்கப்பட்டிருப்பா...”

சேகர் கூறியதைக் கேட்டதும் வருண் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய, சிவாவோ, “சேகர், ஹாலுசிநேஷன்னா பிரமை தான…” என்றார்.

“எஸ் யூ ஆர் கரெக்ட் சிவா… அவளுக்கே உண்மை எது பொய் எதுன்னு தெரியாத அளவுக்கு அவ ஹாலுசிநேஷனால பாதிக்கப்பட்டிருக்கலாம்னு நினைக்கிறேன்… சோ நம்மளால அவ சொல்றத எல்லாமே நம்ப முடியாது. நான் இத எதுக்கு சொல்றேன்னா, அவ வீட்டுல போய் ‘வினு’வ பத்தி விசாரிக்க வேண்டாம்… ஜஸ்ட் அவ பிரெண்டுங்கிற மாதிரி பேசுங்க… ஏன்னா அந்த ‘வினு’ங்கிற கேரக்டரே இவ உருவாக்கின மாயையா இருக்கலாம்…”

அங்கு சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, சேகரே மீண்டும் தொடர்ந்தார். “அவளோட மத்த டீடெயில்ஸும் உனக்கு மெசேஜ் பண்ணிருக்கேன் வருண்…”

வருணோ என்ன சொல்வது என்று தெரியாமல், “ஓகே அங்கிள்…” என்றான்.

அலைப்பேசியைத் துண்டித்ததும் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘தந்தை ஏதாவது கேட்பாரா’ என்று வருணும், ‘மகன் ஏதாவது சொல்வானா’ என்று சிவாவும் காத்திருக்க, அங்கு இருவருக்கும் இடையே மெல்லிய திரை ஒன்று விழுந்தது.

நேரம் மட்டுமே கழிய, இருவரும் சேகர் அனுப்பியிருந்த முகவரிக்கு சென்று விசாரிக்க கிளம்பினர்.

வரதன் பேலஸ்…

அந்த மிகப்பெரிய சுற்றுச்சுவரில், கருப்பு மார்பில் கல்லின் மேல் பதிக்கப் பட்ட அந்த ‘வரதன் பேலஸ்’ஸின் மீதே இருவரின் கண்களும் இருந்தன.

வருணின் மனதிலோ, ‘அவ அப்பாவோட பேரா இருக்குமோ…’ என்ற எண்ணம் தோன்ற தன் தந்தையைப் பார்த்தான்.

சிவாவின் முகமோ இன்னதென்று குறிப்பிட முடியாத பாவனையைக் காட்டியது. அவரின் முகபாவத்தில் குழம்பிய வருண், அவரைப் பிடித்து உலுக்கினான். அதில் கலைந்த அவர் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்றார். அவரைப் பின் தொடர்ந்த வருணிற்கு, நேற்றிலிருந்து தன் தந்தையின் செயல்கள் குழப்பத்தையே தந்தன.

அவன் யோசிக்க யோசிக்க, தலைவலி வந்தது தான் மிச்சம். புருவமுடிச்சுடனே உள்ளே சென்றான்.

அங்கு ஹாலில் வரிசையாக புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றை அலசி ஆராய்ந்தவனுக்கு தன் தந்தையின் கண்கள் ஒரு இடத்தில் நிலைக்குத்தியிருப்பதைக் கண்டான்.

அவன் என்னவென்று கேட்கும் முன், “யாரு வேணும்?” என்ற குரல் அவர்களின் செவியில் விழுந்தது.

அங்கு நடுத்தர வயதுடைய பெண், கைகளைத் தன் சேலையில் துடைத்தவாறே வந்து கொண்டிருந்தார்.

வருணும் சிவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.வருண் ஏதோ சொல்ல வரும் வேளையில், “புஷ்பாக்கா, நம்ம சின்னம்மாவ ரூம்ல காணோம்…” என்றவாறே வந்தாள் ஒரு பெண்.

புஷ்பா என்று அழைக்கப்பட்டவளோ சிறிது அதிர்ச்சியுடனும், ஆயாசத்துடனும், “அச்சோ இந்த பொண்ணு இப்போ எங்க போச்சுன்னு தெரியலையே…” என்று புலம்பினார்.

பின் அப்பெண்ணிடம், வெளியில் இருக்கும் வேலையாளிடம் தெரிவித்து அவளைத் தேடுமாறு பணித்தார். அப்போது தான் வருணும் சிவாவும் அங்கிருப்பதைப் பார்த்தவர், “நீங்க யாரு?” என்று கேட்டார்.

வர்ஷினியின் வீட்டில் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு பின் வர்ஷினியின் இருப்பிடத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம் என்று ஏற்கனவே சிவாவும் வருணும் திட்டமிட்டிருந்ததால், வருண் அவனை வர்ஷினியின் தோழன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

சேகர் அவளின் விவரங்களை அனுப்பியிருந்ததால் அவனிற்கு அது எளிதாகவே இருந்தது. வேலை செய்பவர் என்பதாலேயே அவரும் பெரிதாக வருணைக் குடையவில்லை.

“ஓ சின்னம்மாவோட பிரெண்டா… வாங்க உள்ள வந்து உட்காருங்க…”

பின் காபி கொடுத்து உபசரித்தவர், இடையிடையே அங்கிருந்த மற்ற வேலைக்காரர்களிடம் இரகசியமாகவும் உரையாடினார். வருணிற்கும் சிவாவிற்கும் அது வர்ஷினியைப் பற்றியது என்று புரிந்தாலும் அமைதி காத்தனர்.

சிறிது நேரம் ஆன பின் வருணே வர்ஷினியைப் பற்றி விசாரித்தான். இவ்வளவு நாட்கள் வெளிநாட்டில் இருந்ததாகவும் இப்போது வந்தவுடன் அவளைப் பார்க்க வந்திருப்பதாகவும் கூறினான்.

“அப்போ உங்களுக்கு இங்க நடந்தது எதுவும் தெரியாதா தம்பி?” என்றார் அவர்.

“இல்லங்க… ஃபாரின் போனதும் வர்ஷினி கூட தொடர்புல இல்ல… அதுனால இங்க நடந்தது எதுவும் தெரியாது…” என்று சரளமாக பொய்யுரைத்தான்.

“ஹ்ம்ம் எல்லாம் விதி தம்பி…” என்று புலம்பினார்.

“வர்ஷினிக்கு என்னாச்சு…” என்று வருணும், “வரதன் சாருக்கு என்னாச்சு…” என்று சிவாவும் ஒரே நேரத்தில் வினவினர்.

சிவாவின் கேள்வியில் ஆச்சரியமடைந்த வருண் அவரைப் பார்க்க, அவரின் முகத்திலோ எதையோ அறிந்து கொள்ளும் தீவிரமும் பதட்டமும் காணப்பட்டது.

புஷ்பா இருவரையும் பார்த்துவிட்டு, “எங்க பெரியய்யாவும் பெரியம்மாவும் இறந்துட்டாங்க…” என்றார் சோகத்துடன்…

அதைக் கேட்டு அதிர்ந்த வருண், “வாட்…” என்றான் சத்தமாக…

அப்போது அவனிற்கு வந்த அலைப்பேசி அழைப்பு அவனிற்கு மற்றுமொரு அதிர்ச்சி தரக் காத்திருந்தது.

புதிர் விலக காத்திருங்கள்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top