• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புதிராய் நீயெனக்கு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi

மண்டலாதிபதி
Joined
Sep 16, 2019
Messages
273
Reaction score
559
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த புதிர் இதோ??? போன எபி போடுறப்போவே கேட்கணும்னு நெனச்சேன்... இங்க எத்தன பேருக்கு கனவுகள் பலிக்கும்னு நம்பிக்கை இருக்கு... யாருயாருக்கு கனவுகள் பலிச்சுருக்கு...☺☺☺ அப்பறம் உங்களுக்கு வந்ததுலயே 'லூசு'த்தனமான கனவு ஏதாவது இருந்தா, அத பகிரணும்னு நீங்க நினைச்சா கமெண்ட்ல சொல்லுங்க...???

IMG_20200326_214006.jpg

புதிர் 14



வருண் வர்ஷினியை மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட அரவிந்த், ‘இவன் எதுக்கு இப்போ பேய பார்க்குற மாதிரி பீதியோட பார்த்துட்டு இருக்கான்… வர்ஷு இன்னிக்கு பேய் மாதிரி கூட மேக்-அப் போடலியே… அளவா தான போட்டுருக்கா…’ என்று யோசித்தவன் வருணை தனியே அழைத்துச் சென்றான்.



அப்போதும் அவன் மந்திரித்து விட்டது போல் இருக்க, “ஹே என்ன டா ஆச்சு… ஏன் அந்த பொண்ண இப்படி பார்த்துட்டு இருக்க…” என்று வினவ…



“அது… கனவு… அவ… கொன்னு…” என்று வருண் உளற ஆரம்பிக்க…



“டேய் நீ தெளிவா பேசுனாலே, எனக்கு சில நேரம் புரியாது… இதுல நீ இப்படி பிட்டு பிட்டா பேசுனா எப்படி டா புரியும்…” என்று அரவிந்த் சொல்லிக் கொண்டிருக்க…



“டேய் அருவி…” என்ற சத்தத்தில் திரும்பிப் பார்த்தான்.



அங்கு வர்ஷினி கோப முகத்துடன் நின்றுக் கொண்டிருக்க, ஒரு வருடத்திற்குப் பிறகு தன்னிடம் பேசியவளையே பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.



அவளின் முறைப்பைக் கண்ட வருணோ, ‘போச்சு… கனவுல எங்க இருந்து முடிச்சாளோ… திரும்பி அங்கயிருந்து கன்டினியூ பண்ண போறாளோ…’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.



“ஒரு வருஷத்துக்கு அப்பறம், போனா போகுதுன்னு நானே உங்கிட்ட பேச வந்தா, நீ என்ன விட்டுட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்க.. “ என்று அரவிந்தைப் பார்த்து பேச ஆரம்பித்தவள், வருணைப் பார்த்தபடி முடித்திருந்தாள்.



வருணோ அவள் பேசுவதைக் கவனிக்காமல், அவளின் கோப முகத்தைப் பார்த்து முழித்துக் கொண்டிருந்தான்.



அரவிந்த், “மேடம் என்ன பார்க்க வந்த மாதிரி தெரியலையே…” என்றான் அவளை மேலிருந்து கீழ் அளவிட்டவாறே… “கொஞ்சம் மேக்-அப் ஓவரா தான் இருக்கோ…” என்றதும், அவனை முறைத்தவாறு சென்று விட்டாள்.



அரவிந்தும் அவனை சமாதானப் படுத்தும் பொருட்டு அவளின் பின்னாலேயே சென்றான். வருணின் நிலை தான் இங்கு மோசமாக இருந்தது. அவர்கள் என்ன பேசினார்கள் என்று புரியாமல், தானும் அதில் சம்மந்தப் பட்டிருக்கிறோம் என்பது கூட தெரியாமல் மனம் குழம்பிய நிலையில் அரவிந்தைப் பின் தொடர்ந்தான்.
 




Barkkavi

மண்டலாதிபதி
Joined
Sep 16, 2019
Messages
273
Reaction score
559
Location
Bangalore
அங்கு சேகரோ, அரவிந்தை திட்டிக் கொண்டிருந்தார். “ஏன் டா வர்ஷு கோபமா இருக்கா… நீ ஏதாவது சொன்னீயா…” என்று கேட்க…



“நானே அவள எப்படி மலையிறக்குறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்… இதுல இவரு வேற…” என்று வருணிடம் புலம்பினான்.



“நல்லா கேளுங்க சேகரப்பா… அவன் தான் எப்போ பார்த்தாலும் என்ன வம்பிளுத்துட்டே இருக்கான்…” என்று வர்ஷினி சொல்ல, அவனை மேலும் திட்ட ஆரம்பித்தார் சேகர்.



“அடப்பாவி… சும்மாவே திட்டுறவர இவ வேற எத்திவிடுறாளே…” மீண்டும் அவனின் புலம்பல்கள் வருணிடமே… ஆனால் அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் திரும்பிப் பார்க்க, அங்கு வருணோ அவனின் தனி உலகத்தில் இருந்தான்.



‘ஸ்ஸ்ஸ் இவனுக்கு என்ன தான் ஆச்சு… அத கேட்கலாம்னு அவன தனியா கூட்டிட்டு போனா, அங்க அவளும் வந்து சண்டை போட்டு, இப்போ எனக்கு திட்டு வேற வாங்கி குடுத்துட்டா… ஹ்ம்ம் வரு நீ ரொம்ப பாவம் டா… எப்படி தான் இவள சமாளிக்கப் போறீயா…’ என்று உள்ளுக்குள் தன் நண்பனுக்காக வருந்தினான் அந்த பாசமிகு அண்ணன்…



வருணை உலுக்கியவன், “ஏன் டா இன்னிக்கு அடிக்கடி எதையோ யோசிச்சுட்டே இருக்க… என்ன தான் பிரச்சனை…” என்று கேட்டான் அரவிந்த்.



வருண் ஏதோ சொல்ல வருவதற்குள், “லேட்டாச்சு… கிளம்பலாமா…” என்றார் சேகர்…



“ஷப்பா… இவரு வேற… நம்ம ஏதாவது பேசணும்னு நினைக்குறப்போ தான் உலகத்துல இருக்க அத்தன டிஸ்டர்பன்ஸும் ஒன்னா வரும் போல…” என்று மெல்ல கிசுகிசுக்க…



“சேகரப்பா, அர்வி உங்கள டிஸ்டர்பன்ஸ்னு சொல்றான்…” என்று அவன் கூறியதை சரியாக சேகரிடம் போட்டுக் கொடுத்தாள் வர்ஷினி.



“அச்சச்சோ… அவளுக்கு கேட்டுடுச்சா… சரியான பாம்பு காது… ஐயோ இவரு வேற என்ன முறைக்குறாரே…”



அப்போது தான் நிகழ்விற்கு வந்த வருண், முதலில் கண்டது தன் தந்தையும் வர்ஷினியும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை. ஒரு நீண்ட பெருமூச்சுடன், இனி தன் கனவையும் நிஜத்தையும் போட்டுக் குழப்பக் கூடாது என்று முடிவு செய்தான்.



அவனின் யோசனையிலிருந்து வெளிவந்தவனுக்கு அப்போது தான் வர்ஷினி யார் என்ற கேள்வி எழுந்தது. அவள் சேகர், அரவிந்த், சிவா அனைவரிடமும் அன்யோன்யமாக பேசிக் கொண்டிருப்பது அவனிற்கு ஆச்சரியத்தை அளித்தது.



அதை தெளிவு படுத்திக் கொள்ள, அரவிந்திடம் கேட்கத் திரும்பிய போது தான், அவனின் ‘பாம்பு காது’ என்ற உவமை இவனின் காதில் விழுந்தது. தான் கேட்க நினைத்ததை விடுத்து, “ஏன் டா அர்வி… பாம்புக்கு தான் காதே இல்லையே, அப்பறம் ஏன் பாம்பு காதுன்னு சொல்ற…” என்று மிக முக்கியமான சந்தேகத்தை கேட்க…



“அடப்பாவி… இவ்ளோ நேரம் கோமால விழுந்து எழுந்தவன் மாதிரி முழிச்சுட்டு இருந்துட்டு, இப்போ உனக்கு இந்த டவுட் ரொம்ப அவசியமோ…” என்று வருணை முறைத்தான்.



வருணோ லேசாக அசடு வழிந்தவாறே, “இல்ல டா ஒரு ஜெனரல் நாலேட்ஜ்ஜுக்கு…” என்றான்.



“ஒரு மண்ணாங்கட்டி நாலேட்ஜ்ஜும் வேண்டாம்…” என்று அரவிந்த் கூற, அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த வர்ஷினியோ கலகலவென சிரித்தாள்.



அவளைத் திரும்பிப் பார்த்த வருண், பார்த்த விழிகள் பார்த்தபடி உறைந்து நின்று விட்டான். அவன் கனவில் பார்த்த வர்ஷினியோ, ஒன்று அழுகையிலோ இல்லை கோபத்திலோ மட்டுமே இருந்தாள். அப்படி இருந்ததற்கே அவளின் மேல் சலனப்பட்ட வருண், இப்போது குறும்புகளின் சொந்தக்காரியாக, சிரிப்பதற்கே பிறந்திருப்பவள் போல அழகுப் பதுமையாக இருப்பவளைப் பார்த்து தலை குப்புற விழுகாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.



அவன் அவளை நேராகப் பார்க்க, அவளோ அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க, சிவாவும் சேகரும் அவர்களைப் பார்த்தும் பார்க்கமலிருக்க, அரவிந்த் தான் புலம்போ புலம்பு என்று புலம்பி விட்டான்.



“அடப்பாவிங்களா இப்படியா பப்ளிக்கா சைட்டப்பீங்க… அட நம்ம ஃபாதர்ஸ் ரெண்டு பேரும் அத கண்டும் காணாம இருக்குற மாதிரி சீன் வேற… ஹ்ம்ம் இதுவே நான் ஒரு பொண்ண அவங்களுக்கு தெரியாம சைட்டடிச்சா கூட, ‘நீயெல்லாம் என் பையனா’ங்கிற ரேஞ்சுக்கு என்ன திட்ட வேண்டியது… இப்போ அவங்க கண்ணு முன்னாடியே ஒருத்தன் தீவிரமா சைட்டடிச்சுட்டு இருக்கான்… அட கண்டுக்காம என்னமோ அந்த ஸிலிங் விழுகாம இருக்க ஆராய்ச்சி பண்ற மாதிரி போஸ் வேற… கேட்டா அரேஞ் மேரேஜ்ன்னு சொல்றது... ஹ்ம்ம் அர்வி இந்த சேகர நம்புனா நீயெல்லாம் கடைசி வரைக்கும் சிங்கிள் தான் டா…” என்று கேப்பே விடாமல் புலம்பிக் கொண்டிருந்தான்.



அப்போது அவனை கடந்து சென்ற பெண், அவன் தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து சிரித்தபடி செல்ல, ‘ஆஹா நம்ம வேண்டுதல் அந்த கடவுளுக்கே கேட்டுடுச்சு போல… எப்படியாவது இந்த பொண்ண…’ என்று நினைத்துக் கொண்டிருக்க, “அரவிந்த்…” என்ற அவன் தந்தையின் குரல் ஸ்பீட் பிரேக்கர் போல அவனின் நினைவுகளுக்கு தடைப் போட்டது.



“சை மனுசுல கூட நினைக்க விட மாட்டிங்குறாரே..” என்று மனதிற்குள் சொல்வதாக நினைத்து சத்தமாக சொல்லி விட்டான்.



“என்ன டா லூசு மாதிரி உளறிட்டு இருக்க…” என்று சேகர் அதட்ட…



‘அய்யயோ சத்தமா சொல்லிட்டோமோ… எதையெல்லாம் இவரு கேட்டாருன்னு தெரியலையே…’ என்று நினைத்தவாறு முழிக்க…



இவர்கள் இருவரைத் தவிர, மற்ற மூவரும் சிரித்தனர். அங்கு வருண் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்தவன், “அது எப்படி டா, நான் திட்டு வாங்கும்போதோ இல்ல பல்பு வாங்கும்போது மட்டும் கரெக்ட்டா தெளிவாகிடுற…” என்றான் சலிப்புடன்…



விமானத்தில் இருந்து இறங்கியதிலிருந்து அலைப்பாய்ந்த வருணின் மனம் அந்த ஒரு நொடி பார்வை பரிமாற்றத்தில் அமைதியடைந்திருக்க வேண்டும்… அவனின் மனம் லேசாகியிருக்க அரவிந்தின் சலிப்பான கேள்விக்கு, அவனின் முதுகில் லேசாக அடித்தவாறு அவ்விமான நிலையத்திற்கு வெளியே சென்றான்.



அப்போது அங்கு தனித்து விடப்பட்டனர் வர்ஷினியும் அரவிந்தும். இப்போதே அவளை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு அவள் அருகில் செல்ல, அவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.



“வர்ஷு, சாரி டா… எனக்கு அப்போ இருந்த சிசுவேஷன்…” என்று அவன் ஆரம்பிக்க…



“என்ன பெரிய சிசுவேஷன்… ஒரு வருஷம் பார்க்காம எப்படி இருப்பேன்னு யோசிச்சியா… ஸ்கூல் காலேஜ் படிக்கும்போது த்ரீ மந்த்ஸ் ஒன்ஸாவது பார்த்துப்போம்… முழுசா ஒன் இயர் எப்படி பார்க்காம இருக்குறதுன்னு நீ யோசிக்கவே இல்லல… அப்போவும் இன்னும் ஒரு டூ டேஸ் இருந்து சமாதானப் படுத்திருந்தா, நானே உங்கிட்ட பேசியிருப்பேன்… ஆனா நீ உன் பிரென்ட் தான் முக்கியம்னு போனீல.. போ இப்பவும் உன் பிரென்ட் பின்னாடியே போ..” என்றாள்.



அவள் சண்டைப் போடுவது, சிறு வயதில் இருவரும் சண்டைப் போட்டதை நினைவு படுத்தியது அரவிந்திற்கு… அதில் சிரித்தவன், “இனிமே நான் எப்படி அவன் பின்னாடி போக… அதுக்கு தான் வேற ஆள் வந்துட்டாங்களே…” என்று அவன் கூற…



வர்ஷினிக்கு வெட்கம் கலந்த சிரிப்பு வந்தாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அரவிந்தை முறைத்தாள்.



அரவிந்தோ அவளின் கன்னத்தைப் பிடித்து அவளின் இதழை விரியச் செய்து, “சிரிப்பு வந்தா சிரிச்சுடணும்…” என்றான்.



அதற்கு பின்பு இருவரும் அடிதடியில் இறங்கி, ஒருவாறு சமாதானம் ஆனார்கள்.



“சரி வா போலாம் ரொம்ப நேரம் ஆச்சு…” என்று அவள் வெளியேற முயல, அவளின் கைகளைப் பிடித்து தடுத்தவன், “இப்போ கேக்குறதுக்கு உண்மைய மட்டும் சொல்லணும்…” என்றான்.



அவன் எதைக் கேட்க நினைக்கிறான் என்று தெரிந்தும், “இப்போ எதுக்கு இவ்ளோ சீரியஸா பேசுற… உனக்கு அது செட்டாகல…” என்றாள்.



“ப்ச்… வர்ஷு… இதுல உன் லைஃப் மட்டுமில்ல அவன் லைஃபும் சம்மந்தப் பட்டிருக்கு… சோ பீ சீரியஸ்…”



“ஓ இப்போ கூட உன் பிரெண்டுக்காக தான் கேக்குற…” என்று அவள் இழுக்க…



அவனின் முறைப்பில், “ஓகே ஓகே... ஜோக்ஸ் அப்பார்ட்… என்ன கேக்கணுமோ கேளு…” என்றாள்.



“உனக்கு அவன பிடிச்சுருக்கா…” என்றான்.



“ம்ம்ம்…” என்றாள் புன்னகையுடன்.



“நிஜமா…”



இப்போது அவள் முறைக்க, “ஹிஹி… இல்ல சின்ன வயசுல, ரெண்டு பேருக்கும் செட்டாகதே, அதான் கேட்டேன்…” என்று சமாளித்தான்.



“அதுதான் சின்ன வயசுன்னு நீயே சொல்லிட்டீயே… அப்பறம் என்ன… ஓவரா கொஸ்டின் கேக்காத… வா போலாம்…” என்று அவன் கைப்பிடித்து வெளியே அழைத்துச் சென்றாள்.



அங்கு வருண் ஏதாவது சொல்வான் என்று ஆவலுடன் அவனைப் பார்த்திருந்தனர் சிவா மற்றும் சேகர்.



அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தவன், “என்ன ப்பா… ஏன் இப்படி பார்க்குறீங்க… எங்கிட்ட ஏதாவது கேட்கணுமா…” என்றான்.



“அது… உனக்கு பொண்ண பிடிச்சுருக்கா வரு…” என்றார் சிவா…



அப்போது தான் அவனிற்கு அந்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்காதது நினைவிற்கு வந்தது.



‘ச்சே இன்னிக்கு காலைலயாவது பார்த்துருந்துருக்கணும்..’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன், “அது… ப்பா… நான் இன்னும் அந்த பொண்ணு போட்டோ பார்க்கல…” என்றான்.



அதைக் கேட்ட சேகரும் சிவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அங்கு வந்த வர்ஷினி அரவிந்த் காதுகளிலும் இவனின் பதில் சென்று சேர்ந்தது.



‘அடப்பாவி… போட்டோ பார்க்காமலேயேவா இவ்ளோ ஜொள்ளுனான்…’ என்று அரவிந்த் வாய் பிளக்க…



அதற்கு நேர்மாறாக கோபத்துடன் முறைத்த வர்ஷினியோ, “சேகரப்பா நான் கார்ல இருக்கேன்…” என்று கூறிவிட்டு சென்றாள்.



வருணைக் கடக்கும்போதும் அவனை முறைத்துக் கொண்டே கடந்து செல்ல, ‘இவ எதுக்கு இப்படி முறைக்குறா… இவ்ளோ நேரம் நல்லா தான இருந்தா…’ என்ற குழப்பத்துடனே செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.



“க்கும்… போட்டோ பார்க்கலையாம்… ஆனா நேர்ல மட்டும் நல்ல்ல்…லா…ஆ பார்ப்பானாம்… நீ நடத்து டா…” என்று அவன் காதில் கூறிவிட்டு சென்றான் அரவிந்த்.



‘இவன் எதுக்கு லூசு மாதிரி உளறிட்டு போறான்…’ என்று நினைத்தவாறே காரில் ஏறினான்.



அவன் முகத்தைப் பார்த்த சிவா நமுட்டுச் சிரிப்புடன் தானே வண்டியை ஓட்டுவதாகக் கூறினார்.



அவரின் சிரிப்பும் இவனிற்கு குழப்பத்தைத் தர, ‘எதையும் யோசிக்கக் கூடாது…’ என்று நினைத்து கண்களை மூடிக் கொண்டான்.



இதுவே வேறொரு சமயம் என்றால், வர்ஷினியை விமான நிலையத்தில் பார்த்த போதே அவள் தான் தனக்கு பார்த்திருக்கும் பெண் என்று யூகித்திருப்பான்… ஆனால் இன்றோ கனவும் நிஜமும் அவனைப் போட்டு பாடாய் படுத்த, பாவம் குழம்பியே ஒரு வழியாகி விட்டான்.



வருண் குழம்பியிருக்க, சிவாவோ, தன் மகனின் பார்வையிலேயே வர்ஷினியின் மேலுள்ள பிடித்தத்தை அறிந்து கொண்டவர், மகிழ்ச்சியாய் வண்டியை செலுத்தினார்.



சிவாவின் மகிழ்ச்சி நீடிக்குமா… வருண் – வர்ஷினி திருமணம் எந்தவித இடையூறும் இல்லாமல் நடக்குமா… வருணின் கனவு பலிக்குமா…



புதிர் விலகும்... காத்திருங்கள்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top