• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புன்னகை பூக்கும் பூ (என் ) வனம் .-என் பார்வையில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இவ்வளவு அழகான குடும்ப நாவல் எழுதிய தோழி ஸ்ரீநவீக்கு ஒரு ஹாட்ஸ் ஆப் .:love::love::love:

சைலன்ட் ரீடர்ராக வாசித்து மகிழ்ந்து கொண்டு இருந்தேன்.கதை முடிந்து விட்டதே என்று ஏங்க வைத்து விட்டார்.

அடுத்த கதை தித்திக்க கிடைக்கும் என்பது இன்னொரு ஆறுதல் .

குடும்ப பின்னணி வைத்து அருமையான கதை களம் தருவதில் அடுத்த வைரமாய் ஜொலிக்கிறார் தோழி ஸ்ரீ.

AWESOME,WODERFUL,MARVELLOUS ---இன்னும் தமிழ்,ஆங்கிலத்தில் இன்னும் சிறப்பு ,மிக அருமை என்ற வார்த்தைகள் என்ன எல்லாம் வருமோ அவை எல்லாம் கொண்டு பாராட்டினாலும் போதாது என்றே சொல்ல தோன்றுகிறது.

பாதகாணிக்கை படத்தில் வரும் பாடல்

ஆஹா ..காதல் என்பது எது வரை
கல்யாணம் காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எது வரை
கழுத்தினில் தாலி விழும் ..வரை

என்ற பாடலுக்கு அழகான விளக்கமாய் கிரி -ரம்யா ஜோடியின் வாழ்க்கையை அருமையாக படைத்து விட்டார்.

இன்று டைவோர்ஸ் என்பது மிக சர்வ சாதாரணமான நிலையில் அதுவும் காதலித்து மணந்தவர்களின் காதல் எங்கு காணாமல் போகிறது என்ற உண்மையை தெளிவாக காட்டி உள்ளார்.

"ரௌத்திரம் பழகு" என்ற வார்த்தைக்கு ஏற்ப காட்ட வேண்டிய இடத்தில் வெளிப்படுத்தாத படாத கோபமும் பயன் அற்றது.ஆரம்பத்தில் அனைத்திற்கும் வாய் மூடி அமைதி காத்து விட்டு பின்னர் மன அழுத்தம் தாங்காமல் வெடிக்கும் ரம்யா இன்று குடும்பத்தில் உள்ள பல பெண்களின் நிழல்.

தாய்மை ஒரு பெண்ணிற்கு வரம்.அந்த வரத்தின் போது உடன் இருக்கும் குடும்பம்,உற்றம்,சுற்றம் எப்படி எல்லாம் இருக்க கூடாது என்று மிக அழகாய் சொல்லி விட்டார்.

கிரி -வேலைக்காக நாடு விட்டு நாடு சென்று பல இன்னல்களுக்கு நடுவே குடும்பத்தை கவனிக்க முடியாத ஆண்களின் பிம்பமாய், முழு தவறு தன் தாயின் மேல் இருந்தாலும் தாயையும் விட்டு கொடுக்க முடியாமல்,மனைவி மகளையும் விட்டு கொடுக்க முடியாமல் வெளிநாட்டில் இரு பக்கமும் மத்தளமாய் மாட்டி விழிக்கும் நிலை அந்தோ பரிதாபம்.


எது காதல்,எது குடும்பம்,எது உண்மையான தாம்பத்யம்,எப்படி எல்லாம் ஒரு குடும்பம் பிரிந்து விடும்,என்ன எல்லாம் செய்ய கூடாது என்று ஒவ்வொரு பாத்திரத்தின் மூலமும் "வாழ்க்கைக்கான பாடத்தை" வெகு இயல்பாய் கொடுத்து இருக்கிறார்.

இயல்பான குடும்ப கதை.மனதை மயில் இறகாய் வருடி செல்கிறது.

இது வாழ்க்கை பாடம் .

மிக தேர்ச்சியாக கையாண்ட பட்டு இருக்கும் கதைக்களம்.பல ஜோடிகளின் நிழல்.

நம்ம வீட்டில்,அக்கம் பக்கம் வீட்டில் நடப்பதை அப்படியே படமாய் காட்டி இருக்கும் விந்தை அருமை.இந்த கிரியும் -ரம்யாவும் வாழ்க்கையில் நாம் வாழ்க்கையில் கடந்து சென்றவர்களே.

இது போல் இன்னும் தரமான குடும்ப கதைகளை,வாழ்வியல் போதனைகளை படைக்கும்மாறு தோழியை கேட்டு கொள்கிறேன்.

இந்த புன்னகை பூ மனம் வீசும் பூந்தோட்டம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை .

பலரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.

வாழ்க்கை விட்டு கொடுத்து செல்வதிலும்,மற்றவர்களை புரிந்து கொண்டு ஈகோ,கோபம்,சின்னத்தனம் எதுவும் இல்லாமல் அன்பு,காதல்,புரிதல் கொண்டு வாழ்ந்தால் எல்லா இல்லறமும்,குடும்பமும் புன்னகை பூ பூக்கும் வனம் தான்

ALL THE VERY BEST AND COME BACK WITH ANOTHER MAJIC DEAR
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
ரொம்ப சந்தோசம் அனிதா டியர்... என்ன சொல்ல , எப்படி சொல்லன்னு தெரியல எனக்கு... அப்படி ஒரு பீல் தான் வருது.... மிகவும் நன்றி honey டியர்...

உங்களுடைய வாழ்த்துக்கள் என்னை போன்ற கத்துக்குட்டிகளுக்கு ரொம்பவே உற்சாகப்படுத்தும் விஷயம். மகிழ்ச்சி டியர்... தேங்க்ஸ் again:love::love::love::love:
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
? ????????? முழு நாவலையும். .... நாவலில் வரும் கதாபாத்திரங்களின் குணங்களையும். ... ஒரே பகுதியில் அழகா அருமையா சொல்லிட்டிங்க. ...??
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,504
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
அருமையான விமர்சனம் அனிமா. கதையை அழகாக அதன் சாரத்துடன் சுருக்கமாக எடுத்துரைத்து விமர்சனம் அழகாக இருக்கிறது.
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Nice review
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,421
Location
Vellore
அருமையான விமர்சனம் சகி ???? கதையை அப்படியே கண்முன் நிறுத்திவிட்டது தங்கள் விமர்சனம் ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top