• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புன்னகை பூக்கும் பூ(என்)வனம்---2&3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அன்புத் தோழமைகளே... என்னோட முதல் பதிவிற்கு லைக்& கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கும் silent readera படிச்சு ஆதரவு குடுத்தவங்களுக்கும் நன்றி...நன்றி... நன்றி...இன்னைக்கு கொஞ்சம் பெரிய பதிவு... கிராமத்த விட்டு நகர்ந்தா தான் கதை எதை நோக்கி போகுதுனு நமக்கு தெரியும்... அதுவுமில்லாம சென்னையில நம்ம ஹீரோயின் இருக்காங்க... அதுக்காகவே நாம போவோம்.... தங்களின் மேலான லைக் & கமெண்ட்ஸ் எதிர்நோக்கி உங்களுடன் நான்...


பூவனம்---2
ஆரத்தி எடுத்து விட்டு உள்ளே வந்த மீனாட்சி அம்மாளுக்கு மனம் ஆறவில்லை...

“இப்போ நான் என்ன பண்ணிட்டேனு என்கிட்ட முகங்குடுத்து ஒரு வார்த்தை கூட பேசாம போறான்... பெத்த பிள்ளைக்கு ஒரு ஆரத்தி எடுக்குற பாக்கியமும் இல்லாம போயிருச்சா எனக்கு... எத்தன ஆசையா வந்தேன்.. கொஞ்சமாச்சும் ஏறெடுத்து பார்த்தானா அவன்?”” என்று புலம்ப

“விடு மீனாட்சி... ரொம்ப தொலவுல இருந்து வந்துருக்கான் அந்த அசதியா இருக்கும்...அவனுக்கு காபித்தண்ணிய குடுத்தனுப்பிட்டு சாப்பாடு தயாராயிருச்சானு பாரு.” மனைவி வருந்துவதை தடை செய்தவாறே சுப்பையாவின் சிந்தனை மகனின் நடவடிக்கையில் நிலைத்தது...

“நான் மேல தான் போறேன் குடுங்கம்மா...” என்று தன் அண்ணனுக்கு பிரியமாய் வைத்த கருப்பட்டி காபியை கொண்டு சென்ற சின்னத்தம்பியை

தன் அறையின் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்த பெரியதம்பி வரவேற்றான்.. “என்னடா நீயே கொண்டு வந்துட்ட... யார்கிட்டயாவது குடுத்து விட்ருக்கலாமே”...”

“இதுல என்னண்ணா இருக்கு... மேல வரும்போது அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன்...”” என்றவனிடம் இருந்து காபியை வாங்கி பருகியவன் ஒரு மிடறு முழுங்கிக்கொண்டே

“இந்த டேஸ்ட் எங்கே போனாலும் கிடைக்கதுடா”...” என்று சிலாகித்தவாறே மீதியை உள்ளே அனுப்பினான்....

“அதே மாதிரி தானே வீட்டுல உள்ளவங்ககிட்ட பேசுறதும்... ஏன் நீ யார்கூடயும் பேசாம வந்துட்டே?... அம்மா ரொம்ப கவலப்படுறாங்க” என்று தன் அண்ணன் செய்ததில் தனது பிடித்தமின்மையை காட்டியவனிடம்

“நான் பேசினா இன்னும் கொஞ்சம் கவலப்படுவாங்க அதான் வாய இறுக்க மூடிகிட்டு இருக்கேன்... கொஞ்ச நாள் நான் மௌனச் சாமியாரா இருக்குறதுனு முடிவு பண்ணிட்டேன்”...” பெருமூச்செரிந்தவாறே சொன்னவன்

“நீ எப்படி இருக்கே ? சொல்லு” “ என்று நலம் விசாரித்தான்..

“உன்முன்னாடி தானே நிக்கிறேன்... நீயே பார்த்துக்கோ எப்படி இருக்கேன்னு”” என்றவனை கண்களால் அளந்தான் பெரியவன்...

மாநிறத்தை எட்டி பார்க்கும் நிறத்துடன் உழைத்து உரமேறிய தேகமும், புன்னைகை முகமும், கம்பீரத்தை கூட்டிட அவன் கண்களின் மின்னிய ஒளி மகிழ்ச்சியான வாழ்க்கையின் அளவினை காட்டியது...

“எத்தன மார்க் போட்டே? தேறுவேனா நான்.. சொல்லுண்ணா”..”

“உனக்கு என்னடா? பர்ஸ்ட் கிளாஸ் தான் நீ... உன்ன இப்படி பாக்குறதுல ரொம்ப சந்தோசம் எனக்கு”...”

“ஆனா எனக்கு சந்தோசம் இல்லன்னா... நீ இப்படி இருக்குறது எனக்கு பிடிக்கல... என்னதான் முடிவு பண்ணிருக்கே”...” அங்கலாய்த்தவனிடம்

“எல்லாம் நல்லதா தான் யோசிச்சு வச்சுருக்கேன்... கொஞ்ச நாள் ஆகும் அத செஞ்சு முடிக்க...

இங்கிருந்து போய் ரொம்ப கஷ்டபப்ட்டு.. இப்ப அத விட பெரிய கஷ்டத்தோட தான் வந்திருக்கேன்...

இங்கே வர்றதுக்கு நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்”...

வெள்ளைக்காரனுக்கு எவ்ளோ வேலை செஞ்சு குடுத்தாலும் பத்தாது ... பணத்த காட்டியே நம்மள எல்லாம் அடிமையாக்கி வச்சுருக்கான்..

இப்பவும் விடுவேனான்னு நோக வச்சுட்டான்... மாசத்துக்கு அரைகோடி குடுக்குறேன் ஒரு கோடி குடுக்கறேன்னு எங்க உடம்புல கொடிபோர்த்துற வரைக்கும் ஆசைகாட்டியே சக்கையா பிளிஞ்செடுத்துடுவான்”...



இப்போதைக்கு பழைய கம்பெனில தான் வேலைக்கு போகப்போறேன்...

என்ன.. சம்பளத்தை வாரிகுடுக்குற வேலைய விட்டுட்டு வந்துட்டான் மடபயனு எல்லோரும் பின்னாடி பேசுவாங்க.. அப்ப மட்டும் காது கேட்காது மாதிரி இருந்துட்டா பழகிரும்...

உன்ன மாதிரி விவசாயத்தையே படிச்சுட்டு இங்கேயே இருந்திருந்தா இவ்ளோ கஷ்டம் எனக்கு வந்துருக்காது...” என்று சிரித்தபடியே சொன்னவன்

“எங்கேடா நண்டுபயல காணோம்... ஸ்கைப்ல(video call) பேசுறப்ப எல்லாம் துள்ளிக்கிட்டு வருவான் எங்கேடா போனான்”...?”

“இப்போ அவனுக்கு தூங்குற நேரம்.. நீ குளிச்சுட்டு சாப்பாட்டுக்கு கீழே வா. துரைக்கு அப்போ முழிப்பு வந்துருக்கும்..

ஒரு ஓட்டப்பந்தயமே நடக்கும் வீட்டுக்குள்ளே பாக்கலாம்”. தன் பிள்ளையின் பெருமை பேசினான் சின்னதம்பி...

“வர்றேன் சின்னா.. போகும்போது இந்த ரெண்டு பெட்டியும் கொண்டு போ.. எல்லோருக்கும் கிப்ட்ஸ் இருக்கு.. நீயே பார்த்து பிரிச்சு குடுத்திடு.. அப்பறோம் இந்த பெரிய பெட்டியில இருக்கறதெல்லாம் நண்டு பயலுக்கு தான்.. இத யாருக்கும் குடுத்திடாதே”. என்று மற்றொரு பெட்டியை சுட்டிக்காட்டியவனின் கண்களில் பிள்ளைக்கான பாசம் அப்பட்டமாய் தெரிந்தது...

உணவு உண்ண கீழே வந்தவனை அந்த வீட்டு இரண்டு வயது நண்டுப்பயலின் அமளி துமளியான குரல் வரவேற்றது...

சோட்டா பீம் டீ-சர்ட்டும் அதற்குரிய சார்ட்சுடன் கால்களில் தண்டைச்சலங்கை சத்தமிட, கண்களில் விழும் சுருட்டை முடியும் பளபளக்கும் பளிங்குக் கண்களும் பார்ப்பவர்களை எல்லாம் வசீகரிக்க பால் பற்களை காட்டிய வண்ணம் அவன் சிரித்துகொண்டு இருந்ததை நாள் முழுவதும் பார்த்தாலும் அலுக்காது....

சாப்பாடு ஒரு வாய் வாங்காமால் தன் தாய்க்கு வீட்டை சுற்றிக் காண்பித்துகொண்டிருந்தவன் பெரியப்பனின் கைகளில் வகையாய் மாட்டிகொண்டான்...

“வாடா என் சிங்ககுட்டி உங்கப்பன் சொன்ன மாதிரியே எல்லோரையும் ஓட வைக்குற போல... சித்த நேரம் ஒழுங்கா உக்காருடா”...” என்றவனிடம்

“அவனை கீழே விட்ராதீங்க பெரியத்தான்.. ஒரு வாய் உள்ளே திணிச்சுட்டு இறங்கட்டும்”..” என்று கூறிய படியே வந்த செந்தாமரை சாதாரண காட்டன் சேலைக்கு மாறியிருந்தாள்.

ஒரு கவளம் உணவை திணிக்க “வே...ணாம்..னாம்” என்று மழலையில் மிளிற்றியவாறே தட்டி விட்டவன் கீழே இறங்க முயற்சிக்க இந்த கால சொக்குப்பொடியான கைபேசியை அவன் கைகளில் பெரியப்பன் திணிக்கவும் அமைதியாய் அவன் மடியில் அமர்ந்து ஆராயத் தொடங்கி விட்டான்...

பெரிய தந்தை பேச வைக்க இடையிடையே அவனின் உணவும் உள்ளே போனது...

“உன் பேர் சொல்லுடா குட்டி””

“ச..தி..தர்”...(சசிதரன்)”

“அப்பா பேரு சொல்லுங்க..””

“ப்பா... பே..ரு... சி..த...ம்பி”...” என்று கூற

செந்தாமரையோ “டேய்.. நான் என்ன சொல்லி குடுத்தேன்?”” என்று குரலுயர்த்த

“மு...ல..லி த..ர்..(முரளிதரன்)”” என்று சரியாய் சொன்னான்

“அம்மா பேரு என்ன தங்கம்”..?”.

“ம்மா....பே”...” என்று யோசித்தவன் தன் தந்தையை பார்க்க

“அப்பா சொல்லிருக்கேனேடா... சொல்லு... காலையிலே பிஸ்கி (பிஸ்கட்) சாப்பிடும்போதும் சொன்னியே செல்லம்”...”

“ஹான்”,,,,,” என்ற குரலில் தெரியும் என்று தலையாட்டிவிட்டு

“லோ...த..த..ஸ்” (லோட்டஸ்)” என்று முடிக்க அங்கே உள்ளவர்களின் சிரிப்பால் அந்த வீடே நிறைந்தது..

ஒரு மணிநேரத்திற்கும் முன்னால் இதே வரவேற்பறையில் ஒருவரையொருவர் முகம் திருப்பி சென்ற பெரியவர்களை தன் மழலைப் பேச்சால் ஒன்றிணைத்து விட்டான் அந்த வீட்டின் சின்ன கண்ணன்...
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
“புள்ள முன்னாடி கூப்பிட்றதும் இல்லாம அவனுக்கும் சொல்லிக்கொடுத்து இப்ப என் மானமே போகுது”..” என்று முணுமுணுத்த செந்தாமரையை கண்ட கணவன் சிரித்தவாறே “என்னமோ வெளியே கூட்டிகிட்டு போய் ஏலம் விட்டது மாதிரியே அலுத்துக்குரே”..!!” என்ற இவர்களின் சம்பாஷனை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை...

“எல்லோர் பேரும் தெரியுமா..? எங்கே பாட்டி பேர் சொல்லு”..” என்று மீண்டும் தன் நேர்காணலை மகனிடம் தொடர்ந்தான் பெரிய தந்தை...

“பாத்தி ... பாத்..தி... மீ...னா..த்...தி”” இழுத்தபடியே கூற அந்த பாட்டிக்கு பெருமை பிடிபடவில்லை..

“என் ராசா... என் பேர எவ்ளோ அழகா சொல்லரடா தங்கம்.. பிள்ளைக்கு சுத்தி போடனும்.. ஒரு ஒரு வார்த்தையும் எப்படி சிதறாம பேசுது பாரு”...” என்று சிலாகித்தவாறே...

“உங்க பெரியப்பன் பேரு சொல்லு ராசா”...” பேரனிடம் பாட்டி கேட்க

“ஏன்மா... தாத்தா பேர் சொல்லிக் குடுக்கலையா அத கேக்க மாட்டேங்குற...” என்று பெரியதம்பி தன் தாயுடன் சகஜமாய் பேசிக்கொண்டே

“ராஜா... தாத்தா பேர் சொல்விங்களாம் இப்போ”..” என்று சொல்ல பிள்ளையோ தெரியாது என்று தலையை இருபுறமும் ஆட்டி வைத்தான்...

“எங்கப்பாவுக்கு இருக்குற பொறுப்பு உங்களுக்கு இல்லமா .. உங்க பேர எப்படி அப்பா சொல்லிக் குடுத்திருக்கார்... அதே மாதிரி நீங்களும் சொல்லிக்குடுக்க வேண்டியது தானே”...” என்று கேலி பேச

“போடா போக்கிரி.. எந்த காலத்துல உங்கப்பா பேர நான் சொல்லிருக்கேன்...”?”

“உன்ற பேரன் நீ சொல்லிகுடுத்தா தான் தாத்தா பேர் சொல்லுவானாம்”...” என்று தன் சீண்டலை தொடர்ந்து கொண்டிருக்க

“சு...ப்...யா”..” என்று கத்தி விட்டான்...

“அட சீனித்தங்கம்... சரியா சொல்லிட்ட ராசா”” தாத்தனும் மகிழ நண்டுபயலின் தந்தையோ

“இப்ப பெரியப்பா பேர் சொல்லணும் சரியா”...” என்று குழந்தையின் காதில் ஏதோ சொல்ல அந்த தளிரும்

“கி..ளி.. த..ல..ன்”(கிரிதரன்)” என்று அழகாய் சொல்லியது...

இனி மீனாட்சியும் சுப்பையாவும் தவிர்த்து நாம் அனைவரும் சின்னதம்பியை முரளிதரன் என்றும் பெரியதம்பியை கிரிதரன் என்றே அழைப்போம்...

அந்த சின்ன சிட்டின் பேச்சிலும். செய்கையிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து உணவு மேஜைக்கு வந்தமர மருமகள் பரிமாற வந்தாலும் மாமியார் விடவில்லை...

“நீ உள்ள இருக்குறத எல்லாம் இங்கே கொண்டு வந்தச்சானு ஒரு பார்வை பாரு” என்று பரிமாறலை தொடர்ந்தார்...

“வரவர இந்த அத்தைக்கு ஏன்தான் புத்தி இப்படி போகுதோ தெரியல...எனக்கு சொன்ன இந்த வேலைய வேலைக்காரங்களுக்கு சொல்லிட்டு உக்காந்து வேடிக்கை பாக்கலாம்...அத விட்டுட்டு எப்பபாரு இவங்களே எல்லாத்துக்கும் முன்னாடி போய் நிக்கிறது.”...” என்று செந்தாமரை முகத்தை தூக்கி வைத்து கொள்ள அதை கவனித்த சின்னத்தம்பியும்

“நீயும் உக்காரேன்மா.. தாமரை பரிமாறட்டும்...உனக்கும் சாப்பாடுநேரம் தாண்டிப் போச்சுல்ல”..” என்று கூற

“ஒரு நாள் நேரம் தவறுனா ஒண்ணும் ஆகாது... நான் என் பிள்ளைக்கு பரிமாறிட்டு சாப்பிடுறேன்”. என்று மகனின் வாயடைக்க அன்றைய உணவு விழாவின் நாயகனோ தனக்கு பிடித்த உணவினை சாப்பிடாமல் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்தவாறே

“எனக்கு இதெல்லாம் வேணாம்.. இட்லி தேங்கா சட்னி பொடி இருந்தா கொண்டு வரச் சொல்லு”..” என்று மெதுவாய் ஒரு குண்டை தூக்கி போட

“ஏன் தம்பி... உனக்கு பிடிக்கும்னு தானேப்பா எல்லாமே செஞ்சு வச்சுருக்கேன்.. அத எல்லாம் பார்த்தும் கூட இப்படி கேக்குறியே”” தாயும் பதற

“எனக்கு இப்போ பசியில்லம்மா.. வேணாம்”..” என்று தன் பல்லவியை மாற்றவில்லை கிரிதரன்...

அங்கே உணவு மேஜையில் பதார்த்தங்கள் வரிசை கட்டி நின்றது.. இடியாப்பத்துடன் தேங்காய்பாலும் பாயாவும் சேர , கேசரியும் வடையும் வெண்பொங்கலுக்கு சாம்பாருடன் ஜோடி சேர்ந்திருந்தது.... பூரியும் கிழங்கு மசாலும் மணக்க அதற்கு இணையாக கோழி பல வண்ணங்கள் கொண்டு எண்ணெயில் மூழ்கடிக்கப்பட்டும், மாசலாவில் மிதந்தபடியும் மேஜையை நிறைத்திருந்தது...

சுப்பையாவின் மையம்மான லட்டுவும் ஜாங்கிரியும் பருப்பு பாயசத்தோடு கடை பரப்பி இருக்க இவையனைத்தையும் வேண்டாம் என்று சொல்பவனை வேண்டுமட்டும் முறைக்க தோன்றினாலும் சற்று குரலைத் தணித்து

“ஒருவாய் சாப்பிட்டாச்சும் பாக்கலாமே”...” என்று தாயும் தன் சரணத்தை ஆரம்பித்தார்...”

“சாப்பிட்டா பசிக்க ஆரம்பிச்சுரும்.. எல்லாத்துலேயும் கொஞ்சமா எடுத்துக்கோ”” என்று மீண்டும் வலியுறுத்த

“பசிக்கலன்னு சொல்றேனே கேக்கலையா உனக்கு.. உன்னோட விருப்படிதான் எல்லோரும் இருக்கணும்னு நினைக்கிற பழக்கத்த இன்னும் விடலையாம்மா நீ... ஒரு சாப்பாட்டு விசயத்துல கூட உன்னோட தலையீடு இருந்தா யார் தான் இங்கே இருக்க ஆசைப்படுவா?”” என்று சற்றே பூடகமாய் பேசினான்...

“பெரிய தம்பி இந்த சின்ன விசயத்துக்கு நீ ஏன் வேற ஏதோ அர்த்தம் பண்ணிக்கிட்டு பேசுறே.. பையன் விரும்பி சாப்பிடறத கண் குளிர பாக்கணும்னு ஆசைப்பட்டு தானே இதெல்லாம் செஞ்சுருக்கா.. அதையாவது நினைச்சு பாக்கலாமே.. ஏன் இப்படி ஒரேடியா வேண்டாம்னு சொல்லி அவ மனச கஷ்டப்படுத்துற..”” என்று மனைவியை பரிந்து கொண்டு சுப்பையா சற்றே குரலுயர்த்த...

“நீங்க ஏன் சொல்ல மாட்டிங்க... உங்க பொண்டாட்டி செய்றத என்னைக்கு தப்புனு சொல்லிருக்கீங்க.. எல்லாத்துக்கும் அமைதியாவே இருந்து சாதிக்கிறவராச்சே எங்கப்பா”” என்று பல்லைக் கடித்தவாறே கோபத்துடன் மேல செல்ல விரைந்தவனை

“பெரியத்தான்... சாப்பிட வந்துட்டு சும்மா போககூடாது.. உக்காருங்க.. உங்களுக்கு என்ன வேணுமோ என்கிட்டே சொல்லுங்க.. நான் தயார் பண்ணி குடுக்குறேன்.. பேச்ச வளர்த்து பெரியவங்க மனச சங்கடப்படுத்த வேணாம்...”” நிமிடத்தில் சூழ்நிலையை கையில் எடுத்துகொண்டு அனைவரையும் சகஜமாக்கினாள்...

இதுதான் செந்தாமரையின் குணம் மாமியாரிடம் என்னதான் முறைத்துக் கொண்டாலும் அவரை எந்த இடத்திலும் விட்டுகொடுக்காமல் பேசுவதால் தான் மீனாட்சியின் மனதில் அசையா நம்பிக்கையாய் இடம் பிடித்துள்ளாள்

அனைவரும் அமைதியாய் உண்டு முடிக்க இனிப்பு அந்த மேஜையில் “நான் இன்னும் இருக்கிறேன்”” என்று சிரித்து வைத்தது..
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
பூவனம்---3
காலை உணவை முடித்த கிரிதரனுக்கு அங்கே முள் மேல் நிற்கும் நிலை தான்... தன் தம்பியை போல் ஏன் தன்னால் மகிழ்ச்சியாய் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியவில்லை என்ற எண்ணம் மனதினை அழுத்த ஏதோ ஒரு பாரம் வந்தமர்ந்து கொண்டது... இருதலை கொல்லி எறும்பாய் தன்னை தவிக்க வைத்த நினைவை அறவே வெறுக்க நினைத்தவனுக்கு அங்கு இருக்க மனம் இடம் தரவில்லை...


மதியத்தில் இரண்டு வீட்டு சாவிகளுடன் கிரிதரனை எதிர்கொண்டான் முரளிதரன்.. “அண்ணா நீ சொன்ன மாதிரி சென்னை வீட்டுல எல்லாத்தையும் மாத்தி வச்சுட்டேன்...பக்கத்து போர்ஷன் விலைக்கு வந்தது அதையும் பேசி வாங்கியாச்சு.. நான் வரும்போது இருக்க சௌரியமா இருக்கும்”..

“ஏன் சின்னா... என் வீட்டுல இருக்க மாட்டியா.. உனக்கு இல்லாத இடமாடா அங்கே”.. என்று மனம்வலிக்க பேச

“ஐயோ அப்படீல்லாம் இல்லன்னா.. இன்னும் ரெண்டு வருசத்துல தாமரையும் அங்கே தான் வரணும்னு ஆசைப்படுறா.. புள்ளைய சென்னைல தான் படிக்க வைப்பேன்னு இப்போ இருந்தே சட்டமா பேசிகிட்டு இருக்கா..



இதுலே என்னோட அபிப்பிராயம்னு எதுவும் இல்ல.. நான் இங்கே இருப்பேன் அங்கே வாரத்துல ஒரு தடவை வந்துட்டு போவேன்னு நினைக்கிறேன்.. அதான் இப்பவே வீடு பேசி முடிச்சுட்டேன்.. பார்த்துக்குற ஆள் பக்கத்துல இருந்தா நானும் தைரியமா இருப்பேன்”.. என்று தன் நிலையை விளக்க..சரி என்று தலையாட்டியவன்



“நான் நாளைக்கு கிளம்பலாம்னு இருக்கேன்டா.. கொஞ்சம் வேலை இருக்கு வீட்டுல சொல்லாதே அப்பறோம் எதையாவது சொல்லி போக விட மாட்டாங்க” என்று கூற முரளியும் சம்மதித்தான்...


யாருடனும் பேசாமல் குழந்தையுடன் பொழுதைக் கழித்தவனை பார்க்க உறவினர் ஒருவர் வருகை தர சலசலத்தது வீடு...

“தம்பி சுகமா இருக்கீகளா” என்று கேட்டவருக்கு வேண்டா வெறுப்பாய் பதில் சொல்லி வைத்தான்..



“நான் உங்க அம்மாக்கு தம்பி முறை வேணும் .. உங்க அம்மாவோட சின்ன தாத்தாவும் எங்க சின்ன தாத்தாவும் ஒண்ணு விட்ட அண்ணன் தம்பிங்க.. அந்த முறையில நான் உனக்கு மாமன் முறை ஆகணும் மாப்ளே.. என்று உறவுமுறை பாடம் நடத்திட ஆபத்பாந்தவனாய் வந்தமர்ந்தார் சுப்பையா...



“என்ன மாப்ளே இந்த பக்கம் காத்து பலமா வீசுது ... என்ன விஷயம்..”



“எல்லாம் நல்ல விஷயம் தான் மாமா.. அக்கா தான் தம்பி இன்னைக்கு வர்றான்னு சொன்னாப்புல.. அதான் வந்து ஒரு எட்டு பார்த்து பேசிட்டோம்னா அடுத்து நடக்க வேண்டியதுக்கு ஏற்பாடு பண்ண வசதியா இருக்கும்னுதான் வந்தேன்” என்று பொடி வைத்து கூற...



தன் மனைவியின் அவசரபுத்தியை நினைத்து சலித்தவாறே “இன்னைக்கு தான் வந்திருக்கான் அதுக்குள்ள உமக்கு என்னய்யா அவசரம்... காலுல சூடு தண்ணிய ஊத்திட்டு வந்து நிக்கிறீரு”... என்று அலுத்தவர்



“நான் ரெண்டு நாள் கழிச்சு சொல்லி அனுப்புறேன் அப்ப வந்தா போதும்”.. என்று கூறி இருந்தது போதும் இடத்தை காலி பண்ணு என்னும் ரீதியில் பேச



“என்ன மாமா... நீங்க இப்படி பேசுறீரு.. அக்கா என்னமோ சீக்கிரமே முடிக்கணும்னு துடிச்சுகிட்டு இருக்கா.. நீங்க ஆறப்போடச் சொல்லறீங்க பையனுக்கும் வயசாயிட்டே போகுது அது நினப்புல இருக்கா” என்று ரகசிய மூட்டையை அவிழ்த்து விட சுதாரித்து விட்டான் கிரிதரன்



“நீங்க எதுக்காக வந்துருக்கீங்க”



“என்ன மாப்ளே ஒண்ணுமே தெரியாத மாதிரியே பேசுறீங்க.. உங்களுக்கு என்னோட ரெண்டாவது பொண்ணத்தான் பேசியிருக்கு.. அதான் உங்கள ஒரு தடவை நேர்ல பார்த்து உங்க வாயார சம்மதம் வாங்கிட்டா நிம்மதியா நானும் கல்யாண வேலைய ஆரம்பிக்கலாம்னு தான் வந்தேன்.. தெரியாத மாதிரியே பேசுறீங்களே..” என்று மிச்ச கதையையும் கூற



தன் தந்தையை முறைத்துப் பார்த்துக் கொண்டே“என் மனசுல கல்யாணங்கிற பேச்சுக்கே இடமில்ல.. இன்னொரு தடவ இந்த பேச்சு பேசிக்கிட்டு இங்கே வந்துராதீங்க”.. என்று கோபமுடன் கூற



வந்தவரோ சுப்பையாவைப் பார்த்து “என்ன மாமா... மாப்ளே இப்படி சொல்றாரு. நீங்க இன்னும் பேசலையா அக்கா கிட்ட கேட்டப்போ எல்லாம் சொல்லி வச்சாச்சுனு சொன்னா.. என்ன நம்ப வச்சு கழுத்தறுக்கிரீங்களா” என்று எகிற



“நீ இப்போதைக்கு போய்யா பொறவு நான் வாரேன்”... என்று தர்ம சங்கடத்துடன் சுப்பையா சொல்லும் போதே மீனாட்சி அம்மாளும் வெளியே வர



வந்த உறவுக்காரர் சற்று குரலுயர்த்தி “என்னக்கா விளையாடுறீங்களா? புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து ரொம்ப பவ்யமா வந்து பொண்ணு கேக்கும் போதே நான் யோசனை பண்ணிருக்கணும்... பெரிய இடத்து சம்மந்தம் தானா வருதேனு சந்தோசப் பட்டுட்டேன்... இப்போ தெரியுது”...என்று மேலே பேசுவதற்குள்

“அதான் அப்பறோமா சொல்லி அனுப்புரோம்னு சொல்றோமில்ல... இன்னும் என்ன தம்பி பேசிகிட்டு”... என்று மீனாட்சி அம்மாளும் தன் பங்கிற்கு குரலுயர்த்தி பேசிட

“எனக்கு இது வேணுந்தான்... என் வீட்டுக்காரி அப்பவே சொன்னா... சொந்தமா இருந்தாலும் பெரிய இடம் கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்கன்னு சொன்னா... நாந்தான் அக்கா அப்படி எல்லாம் கிடையாதுன்னு சொல்லிவச்சேன்...



இப்போவே இந்த மரியாதை எனக்கு கிடைச்சா பொண்ணு குடுத்த பிறகு எனக்கு என்ன மதிப்பிருக்கும்னு இப்போவே தெரிஞ்சு போச்சு.. போதுஞ்சாமி உங்க சங்காத்தமே வேணாம்”... என்று பெரிய கும்பிடு போட்ட வாறே வெறுப்பாய் முணுமுணுத்துக்கொண்டே வெளியேறினார்...

“என்னப்பா நடக்குது இங்கே?.. என்னோட வாழ்க்கை என்ன நீங்க கைல வச்சுகிட்டு விளையாடுற பொம்மைன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா? எந்த நம்பிக்கையில நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சிங்க...அந்த மாதிரி ஏதாவது ஆசை இருந்தா அத இப்பவே அழிச்சுருங்க” என்று கிரிதரன் காட்டமாய் கத்த...


மீனாட்சி அம்மாள் “அப்ப எப்படி தான் இருக்கபோற.. உனக்கு ஒரு நல்லது செஞ்சு பாக்க நினைக்கிறது தப்பா தம்பி.. மனசுல எதையாவது நினைச்சு உரு போட்டுக்கிட்டு நீ நிம்மதி இல்லாம இருக்குறத பாக்குற சக்தி எங்களுக்கு இல்ல.. ஒரு கல்யாணம் பண்ணிகிட்டா காலபோக்குல எல்லாம் மறந்து போயிரும்.. இப்படி ஒத்தையா நிக்குறத பாக்க எங்களுக்கு தெம்பில்ல” என்று கண்ணீருடன் புலம்பியவருக்கு


“உங்க ஆசைக்கு எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது...உங்க சந்தோசத்துக்கு நான் தான் பலியாகணுமா?... எனக்கும் ஒரு மனசிருக்குனு என்னைக்காவது நினைச்சு பார்த்துருக்கீங்களா?.. நீங்க கல்யாணம் பண்ண சொன்னா பண்ணனும்.. அதையே நீங்க தள்ளி வைனு சொன்னா அதையும் செய்யணும் அப்படிதானே.. நீங்க ஆசைபடறதெல்லாம் செய்றதுக்கு நான் மனுசத்தன்மை இல்லாம இருக்கணும் அப்பதான் அது நடக்கும்” என்று குரலுயர்த்த அனைவரின் முகமும் சற்றே கலக்கம் கொண்டது..


“நான் இங்கே வந்துருக்கவே கூடாது... அது தப்பா போச்சு” என்று கோபத்துடன் மேலே சென்றவன் தன் உடமைகளை எடுத்துகொண்டு கீழே வந்து விட்டான்...


“நான் சென்னைக்கு போறேன் அங்கேயும் வந்து எனக்கு இடைஞ்சல் குடுக்கனும்னு நினைச்சா கண் காணாத இடத்துக்கு போகவும் தயங்க மாட்டேன்..”என்று கோபத்துடன் கூற


“ஒரு நாள் கூட இங்கே தாங்காம போறியேன்னா...ராத்திரி நேரம் போகதே நாளைக்கு காலையிலே கிளம்பலாம்” என்று சின்னதம்பி அவனை தடுத்தாலும் கேட்காமல் வெளியேற எத்தனிக்க


“எதுக்காக இவ்வளவு கோபம் பெரியதம்பி.. உன் நல்லதுக்கு நாங்க யோசிக்கிறது தப்பா” என்று சுப்பையா கேட்க


“போதும்... எனக்கு செஞ்சதெல்லாம் போதும்.. இதுக்கும் மேல நல்லது செய்யணும்னு தோணிச்சுனா என் பிணத்துக்கு மாலை போட்டு செய்ங்க” என்று கோபத்துடன் வெளியே வந்தவன் அங்கிருந்த டஸ்டர் காரில் தொலைத்த தன் வாழ்க்கையை தேடி சென்னையை நோக்கி பயணமானான்...



வாழ்க்கை ஒரு விசித்திரமானது... தோ ஒரு கணத்தில் மாறுதல் ஏற்பட்டுஏ மொத்த வாழ்க்கையும் வேறு பக்கம் வேறு திசையை நோக்கித் திரும்பி விடுகிறது..



அப்படி திரும்பிய வாழ்க்கையை தன் பக்கம் பயணிக்க வைக்க கிளம்பி விட்டான்.. அவன் பயணம் கை கூடி விரும்பிய வாழ்க்கை அவன் பக்கம் திரும்பிட நாமும் அவனோடு சேர்ந்து பயணிப்போம்....

தொடரும்.....
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
சின்ன கண்ணன் மழலை மயக்குது மனதை..
தேங்க்ஸ் டியர்... அடுத்த பதிவுகளும் இருக்கு படிங்க ....:love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
????. என்னாச்சு... அடுத்த பதிவுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.....
??
படிச்சாச்சு.... அருமை...
பவர் போனதில நெட் சதி பண்ணிருச்சு... thanks again....:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top