• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்------ அடிப்படை ஒன்றுதான்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,523
Reaction score
50,038
Location
madurai
“உலகில் அங்கு இங்கு என்னாதபடி எங்கும்பரந்து வாழும் மனித குலத்திற்குள், வாழும்முறையாலும் துறையாலும்
வேறுபாடுகள் காண்கிறோம். ஆனால் வாழ்க்கை என்ற ஒன்றின் மூலமான அடிப்படையில் வேறுபாடு இருக்கிறதா? ‘மனித வாழ்க்கை’ என்ற ஒரு பொதுவான தத்துவத்தில் வேறுபாடு இருப்பது பொருந்துமா? இருக்கத்தான் முடியுமா? வாழ்க்கையின் சூத்திரக் கயிறு தொடங்கும் இடத்தையே ஆராய்ந்து பார்க்க விரும்பும் இந்தத் தத்துவரீதியான வினா நக்கீரர் என்றபெரும் புலவருக்கு எழுந்தது. இன்றைக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அவருக்குத் தோன்றிய இந்தஎண்ணம், இந்த எண்ணத்தின் விளைவானஉண்மை ஆகிய விவரங்களைத்தானேஇப்போது வாழும் தத்துவ ஞானிகளும்காண முயன்றும் கண்டு பேசிக் கொண்டுமிருக்கின்றார்கள்?

காலம், காலத்தின் மனிதர்கள், இவர்கள்வேண்டுமானால் மாறலாம். ஆனால்அந்தக் காலமும் அதன் மனிதர்களும்வாழ்க்கையை இயக்கிக்கொண்டுசெல்லும் ‘மண்’ ஒன்றுதானே? இந்த ஒரேமண்ணை நிலைக்களனாகக்கொண்டுநேற்று அவர்கள் வாழ்ந்தார்கள். இன்றுநாம் வாழ்கின்றோம். இனி நாளைவருபவர்களும் வாழ்வார்கள். எனவே நக்கீரருக்குப் பயன்பட்ட அதே
ஆராய்ச்சி இன்றையத் தத்துவதரிசிகளுக்கும்பயன்படுவதில் வியப்பதற்கு ஒன்றும்இல்லையே? ஆதார பூமியான மண்ஒன்றாக மாறாதிருப்பதைப் போலவே வாழ்க்கையின் ஆதார சுருதியானதத்துவங்களும் என்றும் ஒரே நிலையில்இருப்பவையே!

அச்சு நாகரிகமும், பேச்சு மேடைகளும், தத்துவத்தை விருப்பப் பாடமாகப்போதிக்கும் பல்கலைக் கழகங்களும்இல்லாத ஒரு காலத்தில் வாழ்ந்த புலவர்இந்த நக்கீரர். ஆனால் இவர் கண்டஉண்மையோ, மேற்கண்ட எல்லாவசதிகளும் நிறைந்திருக்க வாழும் நம்காலத்திலும் பழைமையானதாகஎண்ணமுடியாத புதுமையுடன்இருக்கின்றது. இது விந்தை அன்று. தத்துவத்தின் சரித்திரம் என்றுமேஇப்படித்தான். ‘தத்துவம்’ என்பது ஒருபொன்மலர். அது வாடாது மணக்கவும்மணக்காது. ஆனால் தன் நிலையில்தானாக என்றும் இருந்து கொண்டேஇருக்கும். இல்லையென்றால்காரல்மார்க்ஸ் தொடங்கி, காந்தியடிகள்வரை வாழ்வின்அடிப்படையைப்பற்றி என்னகூறியிருக்கிறார்களோ, அவைகளைமாறுபடுத்தாமல் நக்கீரரின் பழங்கருத்தும்விளங்கிட முடியுமா? அப்படித்தான் எந்தஒரு பெரிய தத்துவத்தை நக்கீரர்கண்டுபிடித்துவிட்டார்? ஆம்! உண்மையிலேயே வாழ்வின் மிகப் பெரியதத்துவம்தான் அது!

கடைச் சங்கத்திலுள்ள புலவர் நாற்பத்தெண்பதின்மர்க்கும் தலைவர் அவர். ‘நக்கீரர்’ என்ற பெயரைக் கேட்டாலேபோவிப் புலமையைக் கருவியாகக்கொண்டு வாழுபவர்கள் நடுங்குவார்கள். சங்கத்தை வளர்த்துவரும் பாண்டியன்உக்கிரப் பெருவழுதியினிடம் அவருக்குநல்ல செல்வாக்கு அவருடையபுலமையாலும் கலைத் திறனாலும்அவனிடம் அத்தகைய செல்வாக்கைப்பெற்றிருந்தார் அவர்.

ஒரு சமயம் சங்கப் புலவர்கள் யாவரும்கூடியிருந்த அவையில் பாண்டிய மன்னன்புலவர்களை நோக்கி ஒரு ஐயத்தைவெளியிட்டான். “குபேரன் முதல் கோவணாண்டிவரை வாழ்க்கைக்கயிற்றில் ஒரே நூலில்கோக்கப்பட்டிருந்தும் அவர்களுக்குள்தகுதியினால் வேறுபாடு ஏன்? அடிப்படையில் ஒற்றுமை என்பதேகிடையாதோ?”

பாண்டியனுடைய இந்த வினாவே அர்த்தமற்ற தாகப்பட்டது, புலவர்களில்அநேகருக்கு ‘என்ன நோக்கத்தோடு இதைஅவன் கேட்கிறான்?' என்பதும்அவர்களுக்கு விளங்க வில்லை. அவர்கள்திகைத்துப் பேசாமல் இருந்துவிட்டார்கள். நக்கீரரால் மட்டும் அப்படி இருக்கமுடியவில்லை. அவர் விடை கூறினார்:

“மன்னர் மன்னவா! ஜீவனம் என்ற ஒரேவரிசையில் உலக நூலில் உயிர் முத்துக்கள் பரம்பொருளால்
தொடுக்கப் பெற்றிருக்கின்றன. அவைகளில் ஏற்றத்தாழ்வு என்பது காணும் கண்களாலேஏற்படும் ஒரு வகை மயக்க
உணர்வே ஒழிய, உண்மையாக நோக்கினால் வாழ்வின் அடிப்படையில் ஒருமை தான்உலகெங்கும் நிலவுகிறது!”

“புலவர் பெருந்தகையே! உங்கள் விடைஎனக்கு மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகின்றது. ஆனால் வாழ்க்கை
அடிப்படையின் 'அந்தஒருமைப் பாட்டை' எனக்கு நீங்களே விளக்கிக் காட்டினிiர்களாயின் நலமாயிருக்கும் என்று எண்ணுகின்றேன்.”

“நல்லது அரசே! என்னால் நிரூபித்துக்காட்டுவதற்கு முடியும். ஆனால் அதற்குத்தாங்கள் என்னுடைய நிபந்தனைஒன்றையும் அங்கீகரித்துக்கொள்ளவேண்டி நேரிடுகிறது”

“என்ன நிபந்தனை? கூசாமல் கூறுங்கள் நக்கீரரே!”

“இந்த அரியணை, இந்த அரண்மனை, வனப்பு வடிவமான இந்த மதுரை மாநகரம்எல்லாவற்றையும் ஒரே ஒரு நாள் நீங்கள்துறந்து என்னோடு புறப்படவேண்டும்அரசே!”

“நக்கீரரே! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கு நீங்கள் சொல்வது ஒன்றும்விளங்கவில்லையே? எங்கே புறப்படவேண்டும் நான்? எதற்காகப் புறப்படவேண்டும்?”

“பொதியமலைக் காடுகளுக்கு என்னோடுபுறப்பட வேண்டும் அரசே! வாழ்க்கையின்அடிப்படை ஒருமையைத் தெரிந்துகொள்வதற்காக”

“வாழ்க்கையின் 'அடிப்படை ஒருமை' என்பது ஏதாவது ஒரு மூலிகையா என்ன, பொதியமலைக்காட்டில் அதுகிடைப்பதற்கு? பொதியமலைக் காட்டுக்குஒரு நாள் உம்மோடு நான் வந்தால் அதுவிளங்கிவிடுமா?"

“உடலுக்கு மூலிகை மட்டும் மலைகளிலேகிடைக்கவில்லை அரசே! அகண்டாகாரமான இந்தப் பேருலகத்தில்'வாழ்வு’ என்ற ஒரு தத்துவப் புதிருக்குவேண்டிய மூலிகைகள் இரண்டே இரண்டுஇடங்களில்தான் கிடைக்கின்றன அரசே! ஒன்று மலை மற்றொன்று
கடல்”

“வீண் விவாதம் எதற்கு நக்கீரரே? ஒரு நாள்என்ன? ஒரு வாரம் ஆனாலும் உம்முடன்பொதியமலைக் காடுகளில் சுற்று வதற்குநான் தயார்! 'தத்துவம்' எப்படியாவதுவிளங்கினால் சரி.”

2

அரசவையில் இந்த விவாதம் நடந்து முடிந்தஇரண்டு நாட்களுக்குப் பின் எளியஉடையும், தோற்றமும் கொண்டு நக்கீரரைப்பின்பற்றிப் பொதியமலைக் காடுகளில்சுற்றிக் கொண்டிருந்தான் பாண்டியன்உக்கிரப் பெருவழுதி.

காட்டு வழியில் நடந்து சென்று கொண்டேஇருக்கும்போது திடீரென்று நக்கீரர்பாண்டியனுக்கு ஒரு மரத்தடியைச் சுட்டிக்காட்டினார். அவன் பார்த்தான். ஆச்சரியத்துக்குரிய எந்தக் காட்சியும்அங்கே மரத்தடியில் தென்படவில்லை. காட்டுப் பகுதிகளில் சர்வ சாதாரணமாகநடக்கக்கூடிய ஒன்றைத்தான் அவன்அங்கே கண்டான்.

குரூரமான தோற்றத்தையுடைய ஒருவேடன் அங்கே மரத்தடியில் வில்லும்கையுமாகக் காத்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் சுற்றும்முற்றும்வேட்டைக்குரிய மிருகங்கள் எவையேனும்வருகின்றனவா என்று சுழன்று சுழன்றுதுழாவிக் கொண்டிருந்தன. பறவைகளைப்பிடிப்பதற்காகப் பக்கத்திலே அவனேவலையும் விரித்திருந்தான். ஆனால்வலையில் அன்று அதுவரை ஒருபறவைகூடச் சிக்கியதாகத் தெரியவில்லை.

“அது சரி! பார்த்தாகிவிட்டது. இந்த வேடன்மரத்தடியில் வில்லோடு நின்றுகொண்டிருப்பதிலிருந்து என்ன தத்துவம்கிடைக்கிறது நக்கீரரே?”பாண்டியன்கேட்டான்.

நக்கீரர் அவனுக்கு மறுமொழிசொல்லவில்லை; ‘பொறு! பின்புசொல்லுகிறேன்’ என்பதற்கு அறிகுறியாகக்கையால் ஜாடை காட்டிவிட்டு அவனையும்அழைத்துக்கொண்டு அந்த வேடனைநெருங்கினார்.

“ஏன் அப்பா, இப்படி வில்லும் கையுமாகஇங்கேயே காத்திருக்கிறாய்?” நக்கீரர்வேடனை நோக்கிக் கேட்டார்.

“அதையேன் கேட்கிறீர்கள் ஐயா? நேற்றுநடு இரவிலிருந்து காத்துக் கிடக்கிறேன். உறக்கமில்லை. உணவில்லை.இதுவரைஒரு மிருகம்கூட வேட்டைக்குஅகப்படவில்லை. போங்கள்!”

வேடனின் இந்த மறுமொழியைக் கேட்டுநக்கீரர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதியைப் பார்த்து ஒரு இளநகைபுரிந்தார். ஆனால் நக்கீரர் எதற்காகத்தன்னை நோக்கி அப்படி நகைத்தார்என்பதன் விளக்கமே பாண்டியனுக்குஅப்போது தெளிவாகவில்லை.

“ஆமாம்; நீ ஏன் காட்டிலுள்ள மிருகங்களைவேட்டையாடுகின்றாய்? வேறு வகையில் நீவாழ முடியாதா?” நக்கீரருடைய இந்தஇரண்டாம் கேள்வி அந்த வேடனைச் சற்றேதிடுக்கிடும்படியாகச் செய்தது. ஆயினும்சமாளித்துக்கொண்டு விடை கூறினான்அவன்.

“ஐயா! உண்டு, உடுத்து வாழ வேண்டியமனிதன்தானே நானும்? மிருகங்களைவேட்டையாடுவது இழிதொழில்தான். ஆனால், நான் இந்தத் தொழிலைவிட்டுவிட்டால் உண்ண இறைச்சிக்கும், உடுக்கத் தோலுக்கும் எங்கே போவேன்? கல்வியறிவற்ற காட்டுப்பயலான எனக்குவேறு எந்தத் தொழிலும் தெரியாதே ஐயா!”

வேடன் இந்த விடையைக் கூறி முடித்ததும்நக்கீரர் மீண்டும் பாண்டியனை நோக்கிப்பொருள் பொதிந்த சிரிப்புஒன்றை வெளியிட்டார். பாண்டியனுக்கோஅதன் பொருள் இப்போதும்விளங்கவில்லை. 'தன் சிரிப்பின்பொருளை உக்கிரப் பெருவழுதி இன்னும்சரியாக உணர்ந்து கொள்ளவில்லை' என்பதை அவனுடைய முகக்குறிப்பிலிருந்தே நக்கீரர் அனுமானித்துக்கொண்டார்.

“அரசே! போகலாமா?” நக்கீரர் பாண்டியன்காதருகே மெல்லிய குரலில் கேட்டார். இருவரும் அந்த வேடனிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டனர். சிறிது தொலைவுவந்ததும், “இந்த வேடன் மறுமொழி கூறியபோதெல்லாம் என்னைப் பார்த்துநகைபுரிந்தீர்களே, அதற்கு அர்த்தமென்ன?” பாண்டியன் கேட்டான்.

“அதற்கு அர்த்தம் இருக்கத்தான்இருக்கிறது! அந்த அர்த்தத்தைச்சொல்லுவதற்கு முன்னால் உன்னிடமும்சில கேள்விகளை நான் கேட்கவேண்டியிருக்கிறது. தயவு செய்து சினமோஆத்திரமோ அடைந்துவிடாமல் தவறாகவும்புரிந்து கொள்ளாமல் என்னுடைய அந்தக்கேள்விகளுக்கு அமைதியாக நீ பதில்கூறவேண்டும்.”

“சரி நக்கீரரே! கேளுங்கள், பதில்கூறுகிறேன்.”

“அரசே! உங்களுக்கும் இந்த வேடனுக்கும்ஏதாவது ஒற்றுமையைக்காண்கின்றீர்களா? இல்லையா?”

“என்ன நக்கீரரே! இப்படிக் கேட்கிறீர்கள்? நான் பாண்டி நாட்டுப் பேரரசன், இவன்வெறும் காட்டு வேடன், படிப்பறிவற்றவன்; நாகரிகமற்றவன்.இவனுக்கும் எனக்கும்என்ன ஒற்றுமை இருக்க முடியும்? நீங்கள்என்னைக் கேள்வி கேட்கிறீர்களா? அல்லதுகேலி செய்கிறீர்களா?”

“நீங்களும் ஒரு மனிதன்! நானும் ஒருமனிதன்! இந்த வேடனும் ஒருமனிதன்தான்; இந்த ஓர்ஒற்றுமையையாவது நீங்கள் ஒப்புக்கொள்ள முடியுமா இல்லையா?”

“சரி! இவனையும் ஒரு மனிதன் என்றேவைத்துக் கொள்வோம்! அப்புறம். மேலேகூறுங்கள்...”

“பாண்டிய மன்னா! உனக்கும் எனக்கும்இந்த வேடனுக்கும் இன்னும் எண்ணற்றஎல்லா மனிதர்களுக்கும்
உயிர்வாழ உணவும், மானத்தை மறைக்கத் துணியும் என்ற இந்த இரண்டு தேவையும் அவசியம்தானே? இதில் ஏதும்
வேற்றுமை கற்பிக்க முடியாது அல்லவா?”

“ஆமாம்! உணவு, உடை இவை பொதுவானவைதான்? மேலேசொல்லுங்கள்:”

“மன்னராகிப் பிறருக்குச் சிறிதும்உரிமையின்றிக் கடல் சூழ்ந்த ஒரு நாடுமுழுவதையுமே ஒரு குடைக்கீழ் ஆளும்பேரரசன் நீ! ஆனால் எனக்கும் இந்தவேடனுக்கும் உனக்கும் இறைவன்அளித்திருக்கும் கைகால் முதலியஅவயவங்கள் ‘கூடக் குறையவா’ இருக்கின்றன.”

“இல்லை வேடனுக்கும் உங்களுக்கும்அரசனாகிய எனக்கும் - ஏன்எல்லோருக்குமே இறைவன் கொடுத்தஉடல் ஒரே அமைப்புள்ள உடல்தான்.”

“அரசே செல்வத்தாலும் பதவியாலும், உங்களுக்கும் இந்த வேடனுக்கும்வேறுபாடு இருக்கலாம்! உனக்குச்செல்வத்தைக் கொடுத்த இறைவனும், வேடனுக்கும் உனக்கும் வேற்றுமைகற்பித்துக் காட்ட ஒரு கருவியாக அதை அளித்தானில்லை. பிறருக்கு ஈதல், அறம்செய்தல் முதலிய செயல்களுக்காகவே அந்தச் செல்வத்தை உங்களிடம் அளித்துள்ளான் இறைவன். அதைநீங்களாகவே அனுபவித்து விடவும்முடியாது. அனுபவித்தால் அது உங்களிடம் நிலைக்கவும்
நிலைக்காது. விரைவில்தப்பிச்சென்றுவிடும்.எனவே கடல் சூழ்ந்தஉலகத்தைத் தன் ஒரே வெண்கொற்றக்குடைக்கீழ், பிறரெவர்க்கும்சொந்தமின்றி ஆளும்ஏகச்சக்ராதிபதிக்கும், இரவும் பகலும்தூங்காமல் வில்லால் வயிற்றுக்கு உணவும்உடலுக்கு உடையும் தேடும்படிப்பறிவில்லாத இந்த வேடனுக்கும்வாழ்க்கை அடிப்படை ஒன்றுதான்!” நக்கீரர்கூறி நிறுத்தினார்.

பாண்டியன் உக்கிரப்பெருவழுதிநக்கீரரைக் கைகூப்பி வணங்கினான். “பாவலர் திலகமே! உண்மைபுரிந்துவிட்டது. அடிப்படை ஒன்றேதான்” என்ற சொற்கள் பாண்டியனிடமிருந்துவெளிவந்தன.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஒரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே(புறநானூறு -189)

தெண்கடல் = தெளிந்த கடல், வளாகம் = உலகம், பொதுமை = பிறருக்கும் உரிமை, ஒருமையோன் = ஏகச்சக்ராதிபதி, துஞ்சான்= - துங்காமல், கடுமா = வேகமாக ஒடும்மிருகங்கள், கல்லா ஒருவன் படிப்பறிவற்றவேடன், துய்ப்போம் = அனுபவிப்போம், தப்புந தப்பக்கூடியவை.






 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,048
Location
chennai
akka....sunday post potingala.... ?? number podunga kka.... follow panna easy a irukkum...(enaku?)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,523
Reaction score
50,038
Location
madurai
akka....sunday post potingala.... ?? number podunga kka.... follow panna easy a irukkum...(enaku?)
sunday போஸ்ட் போடலடா என்னோட கொடுமைக்கு ஒரு நாள் லீவ் விட்ட்ருவேன்:love::love::LOL::LOL::LOL:
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,048
Location
chennai
sunday போஸ்ட் போடலடா என்னோட கொடுமைக்கு ஒரு நாள் லீவ் விட்ட்ருவேன்:love::love::LOL::LOL::LOL:
ok akka.... nan padikuren daily.... but eveng than ....?????????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,523
Reaction score
50,038
Location
madurai

Advertisements

Latest Episodes

Advertisements

Top