• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்------ இது ஒரு வாழ்வா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,976
Location
madurai
சோழ மன்னன் செங்கணானுக்கும் சேரமான் கனைக்கால் இரும்பொறைக்கும் நிகழ்ந்த போரில் சோழன் செங்கணான்வெற்றி பெற்றுவிட்டான். தோற்றுப்போனகணைக்கால் இரும்பொறையைச் சிறைசெய்து சோழ நாட்டின் தலைநகரில்இருக்கும் குடவாயில் கோட்டத்துச்சிறைச்சாலையில் அடைத்தும் விட்டான்; பெரு வீரனான சேரமானைக்கைதியாக்கித் தன் சிறையில் கொணர்ந்துஅடைத்ததனால் இணையற்ற பெருமிதம்கொண்டிருந்தான் செங்கணான்.

செங்கணான் கொண்ட பெருமிதத்திற்குக்காரணம் இருந்தது. பிறர் எவருக்கும்அடிபணிய விரும்பாமல் சுதந்திரப்பேரரசனாகத் தன்மானப் பண்பிற்கேஇருப்பிடமாய் வாழ்ந்த சேரனைத்தான்ஒருவனே அடக்கிச் சிறை செய்த திறமைசோழன் பெருமிதம் கொள்வதற்குஉரியதுதானே?

சேரமான் கணைக்கால் இரும்பொறையே‘மானத்திற்காக வாழ்வது, அதற்கு அழிவுவந்தால் வீழ்வது’ என்ற உறுதியானகொள்கையுடையவன். குடவாயிற்கோட்டத்துச் சிறைச் சாலையில்அடைபட்டபின் ஒருநாள் தன்னுடைய அந்தஉயரிய கொள்கையை நிரூபித்தும்காட்டிவிட்டான், அவன்.

‘மானத்தைக் காப்பாற்றுவதற்காக மனிதன்வாழ வேண்டும். மானத்தைப்பறிகொடுத்துவிட்டு வாழ்வதைக் காட்டிலும்சாவதே நல்லது!' இவ்வுண்மையைத் தன்உயிரைக் கொடுத்துத் தமிழ்நாட்டிற்குஅறிவுறுத்திவிட்டுச் சென்றான்இரும்பொறை. அந்த நிகழ்ச்சிதான் கீழேவருகின்ற சிறுகதை,

அன்று ஒருநாள் மாலை! குடவாயிற்கோட்டத்துச் சிறைச் சாலையில் ஒளி மங்கிஇருள் சூழத் தொடங்கியிருந்த நேரம். சேரன் இருந்த சிறையின் வாயிலில்சிறைக் காவலர்கள் கையில் வேலுடன்குறுக்கும் நெடுக்குமாக உலாவிக்கொண்டிருந்தனர். சிறைக்குள்ளே இருந்தசேரமானுக்குத் தண்ணிர் வேட்கைபொறுக்க முடியவில்லை. நாக்கு வறண்டுஈரப்பசை இழந்தது. விக்கல் எடுத்தது. தாகம் கோரமாக உருவெடுத்து அவனைக்கொல்லாமல் கொல்லத்தொடங்கியிருந்தது. சிறைக்குள்ளேதண்ணிர் இல்லை. காவலாளிகளிடம் வாய்திறந்து கேட்கக்கூடாது என்றுநினைத்திருந்தான் அவன். அவர்களிடம்கேட்பது இழிவு;
கேட்டபின் ‘அவர்கள்இல்லை என்று சொல்லிவிட்டாலோ, இழிவினும் இழிவு’ என்றெண்ணிப்பொறுத்துக் கொள்ள முயன்றான் அவன். ஆனால் தாகத்தின் கொடுமை அவனைப்பொறுக்கவிட்டால்தானே?

சிறைக் கதவின் ஒரமாகப் போய்நின்றுகொண்டு, “காவலர்களே! தண்ணிர்வேட்கை என்னை வதைக்கிறது. வேதனைதாங்க முடியவில்லை.பருகுவதற்குக்கொஞ்சம் தண்ணீர் வேண்டும்” என்று வறண்ட குரலில் வேண்டிக் கொண்டான்அவன்.

இவ்வாறு அவன் வலுவில் வந்து தங்களிடம் தண்ணிர் கேட்டதனால்காவலர்களுக்குக் கொஞ்சம் இறுமாப்புப்பெருகிவிட்டது.

“நேற்றுவரை நீ சேரமன்னனாக இருந்தாய்! பிறரை ஏவல் செய்து, ‘அது கொண்டு வா, இது கொண்டு வா,’ என்று சொல்வதற்குஉனக்குத் தகுதி இருந்தது. ஆனால்இன்றோ, நீ எங்களுக்கு அடங்கிய ஒருசாதாரண கைதி. நீ ஏவினால் அந்த

ஏவலுக்குக் கீழ்ப்படிந்து நாங்கள் உடனே தண்ணீர் கொண்டு வர வேண்டுமா? முடியாது! தோற்றுப்போன உனக்குத் தண்ணிர் ஒரு கேடா?” என்று கூரிய ஈட்டியைச் சொருகுவது போன்றசொற்களை அவனுக்கு மறுமொழியாகக்கூறினர் அவர்கள்.

இந்தப் பதிலைக் கேட்டு இரும்பொறையின்நெஞ்சம் கொதித்தது. கைகள் அவர்களைஅப்படியே கழுத்தை
நெரித்துக்கொன்றுவிடலாம் போலத் துறுதுறுத்தன. ஆனால், அவர்களுக்கும் அவனுக்குமிடையில் ஒரு நீண்ட இரும்புக்கதவு இருந்தது. அவன் ஆத்திரத்திற்குஅந்தக் கதவு தடையாக நின்றது. இல்லையென்றால் அவர்கள் எலும்புகளைநொறுக்கியிருப்பான் அவனுக்கிருந்தகோபத்தில்.

“ஆகா இதைவிடக் கேவலமான நிகழ்ச்சி, என் வாழ்வில் இன்னும் வேறு என்ன நடக்கவேண்டும்? வாய்
திறந்து ‘தண்ணிர்’ என்றுகேட்டேன். தண்ணிர் இல்லை என்று மட்டும்அவர்கள் சொல்லியிருந்தால் பரவாயில்லை. எவ்வளவு அவமானமாகப்பேசிவிட்டார்கள்! கேவலம், சிறைக்காவலர்கள் வாயிலிருந்து இத்தகையசொற்களைக் கேட்கும்படி ஆகிவிட்டதே நம்கதி. இப்படி நாம் வாழ்வதைக் காட்டிலும்சாவது எவ்வளவோ உயர்ந்ததாயிற்றே?”

“இழிந்த நாயைச் சங்கிலியாற்கட்டிஇழுத்துக்கொண்டு வருவதுபோல என்னையும் விலங்கிட்டு இந்தச்சிறைச்சாலைக்கு இழுத்து வந்தார்கள். அப்போதே மானஸ்தனான என் உயிர்போயிருக்க வேண்டும். ஆனால், போகவில்லை, பிச்சை கேட்பது போல
இவர்களிடம் தாகம் தீர்த்துக் கொள்ளத்தண்ணிர் கேட்டேன்.நம்மைவிட எவ்வளவோ தாழ்ந்தவர்களாகிய இந்தச்சிறைக் காவலர்கள் வாயிலிருந்து, “உனக்குத் தண்ணிர் ஒரு கேடா?” என்றவார்த்தையை வாங்கிக் கட்டிக்கொண்டாயிற்று இன்னும் நாம் உயிர்வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?” இரும்பொறையின் மனத்தைக் கசக்கிப்பிழிந்தது ‘வாழ்வதா, இறப்பதா’ என்றஇந்தக் கேள்வி.

இதற்குள் வெளியே இருந்த சிறைக்காவலர்களில் இளகிய உள்ளம் படைத்தஒருவன் மற்றொருவனிடம் கூறினான்; “ஐயோ பாவம் மனிதர் தவித்த வாய்க்குத்தண்ணிரின்றித் திண்டாடுகிறார். நீங்களெல்லாம் நெருப்பை வாரிவீசுவதுபோலக் கொடுஞ்
சொற்களைக் கூறுகிறீர்களே! இதுவா, மனிதப் பண்பு? நீகொஞ்சம் பார்த்துக் கொள் அப்பா. நான்போய்த் தண்ணிர் கொண்டு வருகிறேன்.” இரண்டாவது காவலன், “சரி! உன்விருப்பத்தை நான் ஏன் கெடுக்கிறேன்? போய் அவனுக்குத் தண்ணிர் கொண்டுவந்து கொடுத்துப் புண்ணியத்தைச் சம்பாதித்துக் கொள்” என்றான். முதற்காவலன் புறப்பட்டான்.

இரக்க குணமுள்ள அந்தக் காவலன் ஒருகுவளை நிறையக் குளிர்ந்த நீரைக்கொணர்ந்தான். சிறைக் கதவைத்
திறந்து இரும்பொறையினருகில் சென்று குவளையை நீட்டினான். இரும்பொறை உயிர் வேதனையோடு மகாபயங்கரமாகவிக்கிக் கொண்டிருந்தான். இன்னும் சிறிதுநேரத்திற்குள் அவன் தண்ணிரைக் குடிக்காமலிருப்பானாயின் உயிரே போனாலும் போய்விடும். அவ்வளவு கோரமான நீர் வேட்கை.

ஆனால், அந்த நிலையிலும்கூடக் காவலன்நீட்டிய தண்ணிர்க் குவளையை அவன்வாங்கிக்கொள்ள மறுத்து விட்டான்.

“காவலனே! உன் அன்புக்கு நன்றி. உயிரைவிடமானத்தையே பெரிதாகஎண்ணுகிறேன் நான்.நீ கொடுக்கும் இந்தநீரை வாங்கிப் பருகிவிட்டால் இப்போதுஇந்த மரணவஸ்தையிலிருந்து என் உயிர்பிழைத்துவிடும். ஆனால், என்றைக்காவதுஒருநாள் எப்படியும்போகப் போகிற இந்தஉயிர்மானத்தைக் காப்பதற்காகஇன்றைக்கே போய்விடுவதினால் என்னகுறைந்துவிடப் போகிறது? கேவலம், பிச்சைக்காரன் பிச்சை கேட்பதுபோல, மானமில்லாமல் உங்களிடம் தண்ணிர் கேட்டுவிட்டு நான் பட்ட அவமானம்போதும்...”

“அரசே! தாங்கள் மிகவும் ஆபத்தானநிலையிலிருக்கிறீர்கள். இப்போது நீர்பருகாவிட்டால்...”

"உயிர் போய்விடும் என்றுதானே சொல்லப்போகிறாய்? பரவாயில்லை! பிறரிடம்தோற்று அடிமையாகி மானம் இழந்துவாழும் இந்த வாழ்வும் ஒருவாழ்வா என்றெண்ணி மானத்திற்காக உயிர் நீத்தான் கணைக்கால் இரும்பொறை என்று எதிர்காலம் அறியட்டும்” இரும்பொறை கண்டிப்பாகக் காவலன்கொண்டு வந்து கொடுத்த தண்ணிரைப் பருகுவதற்கு மறுத்துவிட்டான்.
இனிவற்புறுத்துவதில் பலனில்லை என்றுகாவலன் வெளியே சென்றான். சிறைக்கதவு மூடப்பட்டது. கதவு மூடப்பட்டஒலியோடு உள்ளிருந்து ஈனஸ்வரத்தில்விக்கல் ஒலியும் கேட்டது.

அரை நாழிகைக்குப் பிறகுசிறைக்குள்ளிருந்து விக்கல் ஒலி வருவதும்நின்றுவிட்டது. உள்ளேவிளக்கேற்றுவதற்கு வந்த காவலன்ஒருவன் இருளில் கணைக்கால்இரும்பொறையின் சடலத்தை எற்றித்தடுக்கி விழுந்தான்.

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்துஇரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே?(புறநானூறு74)

குழவி = குழந்தை, ஊன்தடி = தசைப்பிண்டம், ஞமலி = நாய், கேளல்கேளிர்=பகைவரின் சுற்றத்தார், வேளாண்=உதவி, சிறுபதம் = சிறிதளவு நீர், மதுகை = மனவலிமை, இரந்து = யாசித்து.

 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
evening padikuren miss?‍♀ appa than enaku nalla deepa puriyuthu...??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,976
Location
madurai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top