• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்------ ஊசி முனை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அப்போது நகரத்திலே திருவிழாச் சமயம்விழாவின் கோலாகலமும் ஆரவாரமும்நகரெங்கும் நிறைந்து காணப் பட்டன. ஊரே அந்தத் திருவிழாவில் இரண்டறக்கலந்து

ஈடுபட்டிருந்தது. ‘விழா என்றால் மக்களின்உள்ளத்தில் மகிழ்ச்சிக்குக் கேட்கவாவேண்டும்?

ஆனால், இந்த மகிழ்ச்சியில் தனக்கும்பங்கு வேண்டும் என்பதுபோல மழைஇடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது. திருவிழா ஆரவாரத்தின் விறுவிறுப்பைஅதிகப்படுத்தியிருந்தது இந்த மழை.

மழையில் நனைந்து கொண்டும் விழாக்காண்பதற்காக நகர வீதிகளில் பொங்கிவழிந்து கொண்டிருந்தது மக்கள் வெள்ளம். இந்த மக்கள் வெள்ளத்திற்குஇடையிலேதான் நம்முடையகதாநாயகனை நாம் சந்திக்க முடிகின்றது. அவனும் விழாக் காண்பதற்குத்தான்மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தான். அந்தநகரத்தைச் சேர்ந்த படைவீரர்களின்தளபதிகளில் அவனும் ஒருவன். அவன், மனைவியையும் விழாவுக்கு அழைத்துக்கொண்டுவர முடியாமற் போயிற்றே என்றஏக்கத்தோடு நடந்து சென்றுகொண்டிருந்தான்.

வீட்டில் அவன் மனைவிக்கு நிறைமாதம். இன்றோ நாளையோ பேறு காலமாகஅமையலாம். அத்தகைய நிலையில் அவள்எப்படி விழாக் காண்பதற்கு வெளியே வரமுடியும்? அவனை மட்டும் விழாவுக்குச்சென்று வருமாறு கூறி விடை கொடுத்துஅனுப்பியிருந்தாள். அவளை அந்தநிலையில் விட்டுப் பிரிந்துசெல்லஅவனுக்கும்.மனம் இல்லைதான்.ஆனால்அவளே வற்புறுத்தி வேண்டிக்கொண்டதனால் அவன் மறுக்காமல் ஊர்விழாவிலே தானும் பங்குகொள்ளவேண்டியதாயிற்று. வீட்டில் அவளுக்குஎப்படி இருக்கிறதோ? என்ன செய்கிறதே? - என்ற சிந்தனையோடு கூட்டத்தில் மெல்ல, மழையில் நனைந்தபடியே நடந்துகொண்டிருந்தான் அவன். திடீரென்றுவீதியில் காதுகள் செவிடுபடும்படிமுரசொலி எழுந்தது! அவன் திடுக்கிட்டான். ஆம். அது போர் அறிவிப்பு முரசின் ஒலி, யாரோ ஒர் அரசன் திருவிழா நேரத்தைப்பயன்படுத்திக்கொண்டு அந்த நகரத்தின்மேல் உடனடியாகத் தன் படைகளோடுமுற்றுகையிட வந்திருந்தான். அரண்மனையின் முக்கியமானதளபதிகளில்

அவனும் ஒருவனாயிற்றே. உடனே அவன்அரண்மனைக்கு - ஓடோடிச் செல்லஎண்ணினான்.

போர் அறிவிப்பு ஒலியைக் கேட்டவுடன்திருவிழாக்கூட்டம் பரபரப்பாகக்கலைந்துவிட்டது. எங்கும் திகைப்பும்கலவரமும் நிறைந்தன. தளபதிஅரண்மனைக்கு விரைந்தான். எதிரேஅவனைச் சந்தித்த ஒருவர் அவனுடையமனைவிக்கும் பிரசவம் ஆகிவிட்டசெய்தியை அவசரமாக அவனிடம்கூறினார். இந்த இக்கட்டான நிலையில்மனைவியைக் காணப் போவதா? போருக்குவந்த பகைவனுக்கு அறிவுபுகட்டஅரண்மனை சென்று போர்க்களம்புகுவதா? அவன் ஒரு விநாடி தயங்கினான். ஒருபுறம் காதல் மனையாளை, மகப்பேறுற்ற நிலையிற்கான வேண்டும்என்ற ஆசை மறுபுறம், பிறந்து வளர்ந்ததாய் நாட்டைக் காப்பதற்குக் களம்புகவேண்டிய கடமை, தளபதி என்ற பதவிப்பொறுப்பு வேறு அவன் கடமையைவற்புறுத்தியது. இரண்டு முனைகளும்கூர்மையான ஒர் ஊசியின் முனைகளைப்போலப் பற்றுவது எதை என்ற சிந்தனைஅவனுள் எழுந்தது. இருள் சூழும் நேரத்தில்இருட்டுவதற்குள் கட்டிலைப் பின்னிவிடவேண்டும் என்ற ஆத்திரத்தில்கயிற்றையும் கோனுசியையும்வேகவேகமாகக் குத்தி இழுக்கும் கட்டில்கட்டுபவன் கையிலுள்ள ஊசியின்துனிபோல விரைந்தது அவன் மனம்.

ஊசிமுனை பாயும் வேகத்தில் கடமையின்பக்கம் தாவிப் பாய்ந்தது அவன் மனம் என்மனைவியைவிடப் பெரியது நாட்டின்உரிமை, அதைக் காப்பது என் உயிரினும்சிறந்த கடமை’ என்றெண்ணிக் கொண்டேஅரண்மனையை நோக்கி ஓடினான் அவன்!

சாறுதலைக் கொண்டெனப்பெண்ணிற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்றுமாதோ
ஊர்கொளிங்ந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே. (புறநானூறு-8)

(சாறு = திருவிழா, தலைக் கொள்ளல் = தொடங்குதல், பெண்ஈற்று = மனைவியின்பிள்ளைப்பேறு, மாரி ஞான்ற = மழைபெய்ய, நிணக்கும் = உண்டாக்குகின்ற, இழிசினன் = மலைமகன், போழ்துரண்டுஊசி = கயிற்றை இழுத்துத் தைக்கும் கூரியஊசி, பொருநன் = பகைவன், ஆர்புனை = மாலையணிந்த, நெடுந்தகை = வீரன்)


 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
???????? namba soldiers koda ipadi thana irukanga....????
portions completed miss......:)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
???????? namba soldiers koda ipadi thana irukanga....????
portions completed miss......:)
Miss panninatha padichachu ???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top