• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்------ தோற்றவன் வெற்றி!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
‘வெண்ணிப் பறந்தலை’ என்ற இடத்தில்நிகழ்ந்த அந்தப் பயங்கரமான போரில்கரிகாலன் வெற்றி அடைந்தான். அந்தவெற்றியைக் கொண்டாடும் விழா அன்று அவையில் சிறப்பாக நிகழ்ந்துகொண்டிருந்தது! பாவாணர் பலர் அவன்வெற்றி மங்கலச் சிறப்பைப் பாடல்களாகக் கூறிப் பாராட்டிப் பரிசு பெற்றுச் சென்றுகொண்டிருந்தனர்.


எல்லோருடைய பாடல்களும் அந்தப் போரில் வெற்றிபெற்றவனாகிய கரிகாலனையேசிறப்பித்துப் பாடியிருந்தன. வென்றவனைப் பற்றி வெற்றிமங்கலம்பாடும்போது அப்படிப்பாடுவதுதானே இயற்கையும் ஆகும்?


ஆனால், இறுதியாக வெண்ணிக்குயத்தியார் என்ற ஒரு புலவர், “கரிகால் வளவ! நீ இந்தப் போரிலேவெற்றிபெறவில்லை! தோற்றுவிட்டாய்” என்னும் கருத்தை அமைத்துத் துணிவாகஒரு பாட்டைப் பாடிவிட்டார். கரிகால்வளவன் உட்பட அதைக் கேட்ட அத்தனைபேரும் திடுக்கிட்டனர்.

‘வெண்ணிக்குயத்தியாருக்கு ஏதேனும்சித்தப்பிரமையோ?’ - என்றுகூடநினைத்துவிட்டனர் அவர்கள்.
வெண்ணிக் குயத்தியாரோ, சோழர்குலதிலகமே இந்தப் போரிலே உனக்குத்தோற்று, மார்பிலே பட்ட அம்பு
முதுகிலே ஊடுருவியதற்காகச் சாகும்வரை வடக்குநோக்கி உண்ணா நோன்பிருந்துஉயிர்துறந்தானே
பெருஞ்சேரலாதன், அவன்தான் வெற்றி பெற்றிருக்கிறான். நீவென்றும் தோற்று நிற்கிறாய்!” என்றேமீண்டும் கூறினார்.



கரிகாலனுக்குச் சினம் வந்துவிட்டது: “புலவரே! நீங்கள் சுய நினைவோடுதான்இதனைக் கூறுகிறீர்களா? யார் முன்கூறுகிறோம், என்ன கூறுகிறோம்என்பதைச் சிந்தித்துக் கூறுங்கள்கரிகாலன் சீறி விழுந்தான்.


வெண்ணிக்குயத்தி யாரோ பதறாமல்நடுங்காமல் சிரித்த முகத்தோடு இருந்தார். “அரசனின் சினத்தால் இவருக்கு என்னதண்டனை விதிக்கப்படுமோ? எரிகிறநெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்றமாதிரி இந்த அப்பாவிப் புலவர் மேலும்சிரிக்கின்றாரே” = என்று அங்கேஇருந்தவர்கள் எல்லோரும் அச்சத்தில்மூழ்கி வீற்றிருந்தனர்.

“நீங்கள் பாடிய பாட்டும் கூறிய கருத்தும்உமக்குச் சித்தப்பிரமை என்று எங்களைஎண்ணச்செய்கின்றன.”
“இல்லை வேந்தே! தெளிவான சித்தத்தோடுசிந்தித்துப் பார்த்துத்தான் கூறுகிறேன்.


உன்னுடைய வெற்றி வாளின் வெற்றி. வேறொருவகையிலே பார்த்தால்ஆன்மாவின் தோல்வி. பெருஞ்சேரலாதனின் தோல்வி வாளின்தோல்வி, வேறொரு வகையிலே பார்த்தால்ஆன்மாவின் வெற்றி! வாளின்வெற்றியைவிட ஆன்மாவின் வெற்றிஉயர்ந்தது. வாளாலே வென்ற வெற்றிமாறும், அழியும். ஆன்மாவால் பெற்றவெற்றி என்றும் மாறாது, அழியாது.”


“பெருஞ்சேரலாதன் தான் வெண்ணிப்பறந்தலைக் களத்திலேயே வடக்கு நோக்கிஉண்ணாதிருந்து உயிர் நீத்துவிட்டானே! அவன் ஆன்மா எப்படி வென்றதாகும்?”


“அவன் உயிர் செத்துவிட்டது என்னவோமெய்தான் அரசே! ஆனால், அவன் புகழ் என்ற உயிர் உன்னாலும் வெல்ல முடியாதஆற்றலோடு இப்போதுதான்பிறந்திருக்கிறது. அது சாகாத உயிர், சாஸ்வதமான உயிர்!”
“ஏதோ, தத்துவப் பித்து ஏறி உளறுகிறீர்கள்புலவரே!”
“கரிகாலா! நீ இன்னும் என்னைப் புரிந்துகொள்ளாமலே பேசுகிறாய். இந்த வெற்றிவிழா நாளிலே உன்னைப் பழித்துப்பாடவேண்டும் என்பதற்காக நான் வரவில்லை. மறைமுகமாகப் பார்த்தால் என் பாட்டும் உன்னைப்புகழத்தான் செய்கிறது.

என் கருத்தை நீஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெற்றி மமதையைத் துறந்து நடுநிலைஉள்ளத்தோடு என் கருத்தை நினைத்துப்பார்”

“நீங்கள் முதலில் உங்கள் கருத்தைவிளக்கமாகக் கூறுங்கள்” சற்றே பதற்றமும்சினமும் குறைந்து அமைதியாகப்புலவரைக் கேட்டான் கரிகாலன்.


“பெருஞ்சேரலாதனும் உன்னைப் போலப்பேரரசன்தான். போர் நடந்துகொண்டிருக்கும்போதே மார்பில் தைத்தஅம்பு முதுகிலே ஊடுருவிநுழைந்துவிட்டதனால், “ஆகா முதுகிலேபுண்பட்ட நானும் ஒரு வீரனா? எதற்காக மானமிழந்த நான் உயிர் வாழ வேண்டும்? வெற்றி விளைந்தாலும் இனி எனக்கு அதுதோல்விதான்” என்றெண்ணி வடக்கிருந்துஉயிர் துறந்தான்.

வெற்றி தோல்வியைவிட, ஏன்? உயிரை விட, மானமே பெரிதாகத்தோன்றியது அவனுக்கு தோற்று இறந்தானில்லை அவன். தன் மானத்தைக்காப்பதற்காகத் தன்னைத்தானே கொன்றுகொண்டான்.

உன் வீரர்களோ, நீயோஅவனைக் கொன்று வெற்றிபெறவில்லை. போரின் வெற்றியை நீஅடைந்துவிட்டாலும் மானத்தின்வெற்றியை உனக்கு விட்டுக்கொடுக்கவிரும்பவில்லை அவன்.

உள்ளத்தால், ஆன்மாவால், உயரிய புகழால், வெற்றிக்கும் மேலான வெற்றியை அவன்தன் உயிரைக் கொடுத்துஅடைந்துவிட்டான். இப்போது சொல்தோற்ற அவனுக்கு வெற்றியா? அல்லதுவென்றுவிட்டதாக இறுமாந்து கிடக்கம்உனக்கு வெற்றியா?” வெண்ணிக்குயத்தியார் ஆவேசத்தோடு பேசினார்.


“ஒப்புக்கொள்கிறேன் புலவரே! ‘நல்லவனை வென்றவன் தான் தோற்றுப்போகிறான். நல்லவனோ தோற்றாலும்வென்று விடுகிறான். இதில் மெய்இருக்கிறது” கரிகாலனுடைய குரல்குழைந்து கரகரத்தது. சட்டென்று அவன்அவையிலிருந்து எழுந்து சென்றுவிட்டான்.

நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே. (புறநானூறு - 66)
(நளியிரு = நீர்செறிந்த, முந்நீர் = கடல், நாவாய் = கப்பல், வளிதொழில் ஆண்ட = காற்றை ஏவல் கொண்ட உரவோன் = வல்லமை மிக்கவன், அமர்க் கடந்த = போரில் வென்ற, கலிகொள் = ஆரவாரமிக்க, யாணர் = பெருகிக வளரும்புது வளம், வடக்கிருந்தோன் = பெருஞ்சேரலாதன்)


 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
Nalla iruku...srikka.... Nan daily padikuren.... Habit ta mathikiten....?????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top