• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்----- 10--- தலை கொடுத்த தர்மம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
குமணன் காட்டுக்குத்துரத்தப்பட்டான். அவன் தம்பியாகிய இளங்குமணனிடம் அரசாட்சி சிக்கியிருந்தது. காமுகனிடம் அகப்பட்டுக்கொண்ட குலப்பெண்ணைப்போல, குமணன் அரசாண்ட காலத்தில் அடிக்கடி அவனால் உதவப் பெற்று வாழ்க்கையை நடத்தியவர் பெருந்தலைச்சாத்தனார் என்றபுலவர்.

இளங்குமணன் ஆட்சிக்கு வந்ததும் புலவருடைய வாழ்க்கையில் மண்விழுந்தது; தம் துயரங்களை எல்லாம்காட்டிலிருக்கும் குமணனிடம் போய்க்கூறியாவது மனச்சுமையைத் தணித்துக்கொள்ளலாம் என்றெண்ணிக் காடுசென்றார் புலவர். அமைதியாகக் காட்டில் வாழ்ந்த குமணன், தம்பியின்கொடுமையை எண்ணிக்குமுறிக்கொண்டிருக்கவில்லை. அரசாட்சியிலிருந்து துரத்தப்பட்டஅவலத்தை எண்ணி வருந்தவில்லை. வாழவழியில்லாத அனாதைபோல எல்லாமிருந்தும் ஒன்றும் இல்லாதவனாகக்காட்டில் திரிய நேர்ந்ததை எண்ணிக் கலங்கவில்லை.

உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டு மனத்தை அடக்கி வாழ்ந்தான். தமிழ்ப்பாடல்களின் பெருமை நிறைந்த் சுவையைஎண்ணிக் களித்தான். வனத்தின் இயற்கைக் காட்சிகளில் கண்களைச் செலுத்தினான். ஆடும் மயில், பாடும் குயில், ஒடும் ஆறு, வீழும்
அருவி, துள்ளும்மான்கள் எல்லாம் கண்டு இன்புற்றான். ஆனால் இந்த எல்லா வகை நிம்மதிகளுக்கும் இடையே ஒரு கவலையும் அவன் மனத்தை அரித்துக் கொண்டுதான் இருந்தது. அதுதான் தமிழ்ப் புலவர்களைப்பற்றிய மனக்கவலை.

அவன் ஆட்சிக் காலத்தில் எண்ணற்றதமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்தான். கவிச் செல்வர்களாகிய அவர்கள் புவிச்செல்வத்துக்காக ஏங்காமல் பாதுகாத்து வந்தான். ‘அறிவு நிறைந்தவர்களை வாழ்வுக்கு ஏங்கும்படியாக விட்டுவிட்டால் தன் நாட்டிற்கே அது ஒரு பெரிய சாபக்கேடாகப் போகும்?’ - என்பதை அவன்உணர்ந்திருந்ததுதான் இதற்குக் காரணம். தன் தம்பி இளங்குமணனிடம் புலவர்களைஆதரிக்க வேண்டும் என்ற உணர்ச்சிசிறிதும் இல்லை என்பதை அவன்அறிவான். முன்பு தன்னால் பேணிவளர்க்கப்பட்ட தமிழ்ச் செல்வர்களின் கதி இப்போது என்ன நிலைக்குத் தாழ்ந்துவிட்டதோ என்பதுதான் அவனுடையகவலை. இப்படி அவன் கவலைப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில்தான்பெருந்தலைச் சாத்தனார் அவனைத்தேடிக்கொண்டு காட்டுக்கு வந்து சேர்ந்தார்.

குமணன் அவரை ஆவலோடு வணங்கிவரவேற்றான். பெருந்தலைச் சாத்தனர்நாடிழந்து தனி ஆளாக வனத்தில் நிற்கும்அவன் நிலை கண்டு உள்ளம் உருகினார்.

“என்ன சாத்தனாரே! யாவும் நலம்தானே? முன்பு பார்த்த உம்முடைய தோற்றம் இப்போது இளைத்திருக்கிறாற்போலத்தோன்றுகிறதே”

“இளைக்காமல் என்ன செய்யும் குமணா! அன்பு செலுத்த நீ யில்லை. ஆதரவுகொடுக்க உன் கைகளில்லை.
வாழ்க்கை இளைத்துவிட்டது. நானும்இளைத்துவிட்டேன். வீட்டு அடுப்பு எரிந்துபல நாட்களாகிவிட்டன. குழந்தைபாலுக்காகத் தாயின் மார்பைச் சுவைத்துப்பாலின்றி ஏமாற்றமடைந்து தாயின்முகத்தைப் பார்க்கிறது. தாய் என்முகத்தைப் பார்க்கிறாள். நான் வேறு யார்முகத்தைப் பார்ப்பது? உன் முகத்தைக்காண வந்தேன்?"

கூறிவிட்டுக் குமணனின் முகத்தைப்பார்த்தார் புலவர். அவன் கண்களில்உணர்ச்சியின் இரண்டு முத்துக்கள்திரண்டிருந்தன.

“குமணா! நான் ஏதோ சொல்லி உன் மனம்நோகும்படி செய்துவிட்டேன். என் துயரம்என்னோடு போகட்டும். நீ வருந்தாதே?”

“அப்படி இல்லை சாத்தனாரே! நீர்இளைக்கிறபோது குமணன்இளைக்கிறான். உம்முடைய குழந்தைபாலில்லாமல் தாயின் முகத்தை நோக்கிஅழுகிறபோது குமணன் அழுகிறான்.”

“குமணா! நீ பெருந்தன்மை மிக்கவன். அதனால் அப்படி எண்ணுகிறாய்! அதற்குநான் என்றும் நன்றி செலுத்தக்கடமைப்பட்டவன்.”

“சாத்தனாரே! இதற்கு முன்னால்உங்களுக்கு நான் கொடுத்ததெல்லாம் கொடை அல்ல. இப்போது உமக்கு ஏதாவதுஉதவி, உம்முடைய வறுமையைப் போக்க முடியுமானால், அது என் நற்பேறாக இருக்கும். ஆனால், நான் என்னசெய்வேன்? விதி என் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது. நான் அரசாளும்குமணனாக இல்லை. காடாளும்குமணனாக இருக்கிறேன்.”

“எனக்காக வருந்தாதே, குமணா! நான்கொடுத்து வைத்தது அவ்வளவுதான். நீதான் என்ன செய்வாய்? நான்தான் என்னசெய்வேன்?”

“நான் நாடிழந்ததைவிடக் கொடுமையானதுநீங்கள் என் உதவியை இழப்பது.”

“என் குமணனின் அன்பை நான் இன்னும்இழக்கவில்லை, குமணா அது ஒன்றுபோதும் என் நிறைந்த வாழ்வுக்கு”

“இல்லை சாத்தனாரே! உங்களுக்கு நான்ஏதாவது கொடுத்து உதவினாலொழிய என்மனம் திருப்தி அடையாது.”

“இப்போதிருக்கும் நிலையில் நீ ஒன்றும்கொடுக்க முயற்சிக்காமல் இருந்தாலேநான் அதைப் பெரிய கொடையாகக்கொண்டு விடுவேன்!”

“முடியாது! யாராலும் எவருக்கும் கொடுக்கமுடியாத பொருளை உங்களுக்கு நான்கொடுக்கப் போகிறேன்.”

“என்ன பொருள் அது?”

“அந்தப் பொருள் என் தம்பியின் விலைமதிப்பின்படி ஆயிரக்கணக்கான பொற்கழஞ்சுகள் பெறுமானமுடையது. உம்மைப் போன்ற புலவர்களின்மதிப்பீட்டில் விலை மதிக்க முடியாதது அது.”

“பொருள் என்னவென்ಐ! நீசொல்லவில்லையே, குமணா?”

“சொல்லுகிறேன்.இந்த உடைவாளைக் கொஞ்சம் கையிலே பிடித்துக்கொள்ளுங்கள்.”

பெருந்தலைச் சாத்தனர் எதுவுமேபுரியாமல் அவன் கொடுத்த உடைவாளைவாங்கிக்கையிலே பிடித்துக்கொண்டார்.

குமணன் தலையைக் குனிந்தான்.

“இதோ! இந்தப் பொருள்தான் புலவரே!” குமணன் தன் தலையைத் தொட்டுக்காட்டினான். சாத்தனாருக்கு அப்போதும்விளங்கவில்லை. வாளைப் பிடித்தகையோடு மருண்டுபோய் அவனைப்பார்த்தார்.

“சாத்தனாரே! ஏன் தயங்குகிறீர்! இந்தத்தலையை இளங்குமணனிடம் வெட்டிக்கொண்டுபோய்க் கொடுத்தால் உம்முடைய வறுமை தீர்ந்துவிடும்.”

“குமண! என்னை என்ன பாதகம் செய்யச்சொல்லுகிறாய் நீ? பெருந்தலைச் சாத்தன் செத்தாலும் அவனுடைய கை இந்தப்பாதகத்தைச் செய்து உயிரைப் பேணிவறுமையைப்போக்கிக் கொள்ளவிரும்பாது...”

“ஒரு தமிழ்ப் புலவரின்வறுமையைப்போக்க இந்தத் தலை தவம்செய்திருக்க வேண்டும். இந்தத் தலைக்குஅந்த மாபெரும் பாக்கியத்தை அளிக்கமறுக்காதீர்கள் சாத்தனாரே!”

“வேண்டியதில்லை! இந்த வாள் போதும், உன் தம்பி இளங்குமணனிடம் இந்தவாளைக் காட்டியே பரிசில் பெறுவேன்.”

“அது முடியாது சாத்தனாரே!”

“இல்லை! என்னால் முடியும் எனக்கு அதற்குவேண்டிய சாமர்த்தியமிருக்கிறது. நான்போய் வருகிறேன், குமணா!”

புலவர் வாளோடு கிளம்பினார். குமணன்அவர் போகின்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றான்.

***

பெருந்தலைச் சாத்தனார் கூறிய செய்தி இளங்குமனின் உணர்வை உருக்கியது. தன் தமையன் அப்படியும் செய்திருப்பானோ என்று எண்ணும்போதே அவன் உடம்பில் மயிர்க் கால்கள் குத்திட்டுநின்றன. தமையன்மேல் ஆயிரம் பகை இருந்தாலும் உடன்பிறந்த குருதி கொதிக்காமல் விடுமா? தான். ஆடாவிட்டாலும் தன் சதை ஆடியது. சாத்தனார் அவன் உணர்ச்சிகளைக் கிளறுவதற்காகக் குமணன் இறந்துவிட்டான் என்று கூறி அவன் வாளைஎடுத்துக் காட்டினார். அவர் எதிர்பார்த்ததுபோலவே அவன் அதிர்ச்சி அடைந்துகலங்கி அழுதுவிட்டான்.

“இளங்குமணா! அஞ்சாதே, உன்தமையனை மீண்டும் உயிரோடுகூட்டிக்கொண்டுவருகிறேன்.எனக்கு என்னதருவாய்”

“இந்த அரசு முழுவதுமே தருகிறேன்புலவரே!” அவர் அவனைக் குமணனிடம்காட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றார். தமக்குக் கிடைக்கும் பரிசுகளைவிடஅண்ணன் தம்பிகளின் ஒற்றுமைஅவசியமாகப்பட்டது. அவருக்கு. அதைஅவர் முதலில் உண்டாக்கினர்.

ஒற்றுமை என்ற பெரும் பரிசைக் குமணசகோதரர்களிடமிருந்து சாத்தனார்பெற்றுவிட்டார்.

“கோடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனென் ஆகக் கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன்பெயர்தலென்
நாடிழந்ததனினும் நனியின் னாதென
வாள்தந் தனனே தலைஎனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன்றின்மையின்
ஆடுமலி உவகையொடு வருவல்
ஓடாப்பூட்கைநின் கிழமையோற் கண்டே” (புறநானூறு -165)

வயமான் தோன்றல் = குமணன், கொன்னே= வீணாக, பாடு பெருமை, வாடிணன் = வருந்தி, இன்னாது = கொடியது, நனிமிகவும், ஆடுமலி = வெற்றி மிகுந்த, உவகை= மகிழ்ச்சி, ஓடாப் பூட்கை = அழியா வலிமை, கிழமையோன் = தமையன்.


 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top