• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்--- 25-- ஒரு தயக்கம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,883
Location
madurai
அது ஒரு வேடனின் குடிசை. காட்டின் இடையே அமைந்திருந்தது. குடிசையின் முன்புறம் முசுண்டை என்ற ஒரு வகைக்கொடி படர்ந்திருந்தது. வீட்டிற்கு முன்புறம்பசுமைப் பந்தல் போட்டு வைத்தாற் போல்அடர்ந்து படர்ந்து நிழலையும் குளிர்ச்சியையும் அளித்துக் கொண்டிருந்தது அது.


காட்டில் அங்கும் இங்கும் அலைந்துவேட்டையாடி அலுத்துப்போய் வந்த வேட்டுவன் முசுண்டைக் கொடிபடர்ந்திருந்த நிழலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான்.உள்ளே வெட்டுவச்சி அடுப்புக் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

குடிசையின் வாயிலில் உரலில் இட்டு இடித்த தினையரிசி ஒரு மான் தோலின்மேல் உலர்வதற்காகப் பரப்பப்பட்டிருந்தது. குடிசையைச் சுற்றியிருந்த புல்வெளியில் மான்கள் இரண்டு மேய்ந்து கொண்டிருந்தன. ஒன்றுகலைமான், மற்றொன்று பெண்மான்.


காட்டுக் கோழிகளும் ‘இதல்’ என்னும் ஒருவகைப் பறவைகளும் உலர்ந்து கொண்டிருந்த தினையரிசியைக் கொத்தித்தின்றுகொண்டிருந்தன. ஏதோ காரியமாக வாயிற்புறம் வந்த
வேட்டுவச்சி முசுண்டைக்கொடியின் நிழலில் கணவன்அயர்ந்து உறங்குவதையும், பறவைகள்தினையைக் கொத்தித்தின்று கொண்டிருப்பதையும் கண்டாள்.

அவளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டுவந்தது. கோழிகளும் இதல்களுமாக அவள்உலர்த்தியிருந்த தினையில் பெரும்பகுதியை உண்டுவிட்டன; இன்னும் உண்டுகொண்டிருந்தன.
சட்டென்று கையைத் தட்டி ஓசைஉண்டாக்கிப் பறவைகளை ஒட்டஎண்ணினாள் அவள்.


பெரிய ஓசையைஉண்டாக்குவதற்காகக் கைகளை வேகமாகஓங்கினாள். கண்ணிமைக்கும் நேரத்தில்வேறோர் எண்ணம் வந்ததால் ஓங்கிய கைதயங்கியது. அவள் மனத்தில் மின்னலைப்போலக் குறுக்கிட்ட அந்த எண்ணம் என்ன? ஓங்கிய கைகளைத் தடை செய்த அந்தஉணர்வுதான் யாது?


அவளுக்கு வலப் பக்கமும் இடப் பக்கமுமாக அமைதி ஒன்றிலேயே நிகழ முடிந்த இரண்டு காரியங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. அவள் கைகள் ஓசையைஉண்டாக்குமானால் அந்த இருகாரியங்களும் குலைந்து போவது உறுதி. அந்த இரண்டு செயல்களும் குலைந்துபோவதை அவள் விரும்பவில்லை.


வலப்பக்கம் புல் வெளியில் மேய்ந்துகொண்டிருந்த ஆண் மானும், பெண்மானும் ஒன்றையொன்று நெருங்கிச்சொல்லித் தெரியாத கலையைக் கேளிக்கை மூலம் தெரியவைத்துக்கொண்டிருந்தன. அன்பு என்ற உணர்வுகாதலாகிக் காதல் என்ற உணர்வுஇன்பமாகி உடலும் உள்ளமும் சங்கமமுற்றிருக்கும் ஒரு நிலை.


இடப் பக்கம் கணவன் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தான். விழித்திருக்கும் போது ஒரு சில அம்புகளைக் கொண்டே யானையைக்கூட வேட்டையாடிவிடும்அவ்வளவு வலிமை அந்த
உடம்பிற்குஉண்டு. உறங்கிவிட்டாலோ தன்னை மறந்தஉறக்கம்தான்.


ஓங்கிய கை நின்றது! வெளியேஉலர்த்தியிருந்த தினை முழுவதையும்கோழி தின்றுவிட்டாலும் அவளுக்குக்கவலை இல்லை. அந்த மான்கள்துணுக்குற்றுப் பிரிந்துவிடக்கூடாது. ஆழ்ந்து உறங்கும் தன் கணவனின்
உறக்கம் கலைந்துவிடக்கூடாது. அவ்வளவுபோதும் அவளுக்கு.


பேசாமல் உள்ளே மெல்ல நடந்து சென்றாள் அந்த வேட்டுவச்சி, மான் தோலை விரித்துஅதன்மேல் உலர்த்தியிருந்த தினையைக்கோழிகளும் இதல்களும் சிறிது சிறிதாகஉண்டு தீர்த்துக் கொண்டிருந்தன.


வேடனின் உறக்கமும், மான்களின் இன்பமும், கோழி முதலிய பறவைகளின் வயிறும் நிறைந்து கொண்டிருந்தன. மான்தோலில் உலர்த்தியிருந்த தினைமட்டும்குறைந்து கொண்டே இருந்தது.
மறுபடியும் அவள் வெளியே வந்தபோதுகணவன். உறங்கி எழுந்திருந்தான். மான்கள் ‘பழைய நிலை’யிலிருந்து பிரிந்துதனித்தனியே மேய்ந்து கொண்டிருந்தன. தினை உவர்த்தியிருந்த மான் தோலைப்பார்த்தாள்.அதில் ஒன்றுமேஇல்லை.ஆனாலும் அவள் மனம்என்னவோ நிறைந்திருந்தது.



முன்றில் முஞ்ஞையொடுமுசுண்டைபம்பிப்
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனைதுயின்மடிந்தெனப்
பார்வை மடப்பினை தழிஇப் பிறிதேர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளையாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
இல்வழங்காமையிற் கல்லென ஒலித்து
மானதள் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியோடிதல்கவர்ந் துண்டென! (புறநானூறு-320)
முன்றில் = வீட்டு வாயிலின் முன், முசுண்டை = ஒரு கொடி, பம்பி = படர்ந்துகைம்மான் = யானை, துயில் = தூக்கம், பிணை = பெண்மான், கலை = ஆண்மான், மானதள் = மான்தோல், உணங்குதினை = இடித்த தினை, வல்சி = இரை, கானக்கோழி= காட்டுக் கோழி, இதல் = ஒருவகைப்பறவை.


 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top