• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்---30--- இரண்டு பகைகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
அதியமானுக்கு ஒரு புதல்வன் இருந்தான். வாலிபப் பருவத்தினனாகிய அப்புதல்வனுக்குப் பொகுட்டெழினி என்றுபெயர். நல்ல வளர்ச்சியும் உடற்கட்டும்பார்த்தவர்ளை உடனே கவரும் அழகான தோற்றமும் இவனுக்குப் பொருந்தியிருந்தன.

அந்தத் தோற்றத்தை வெறும் அழகானதோற்றம் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. அப்படிச் சொன்னால்
சொல்லியவர்களுக்கே திருப்தி ஏற்படாது. கொஞ்சம்வருணிக்கலாமே என்றுதான் தோன்றும்.

பரந்து விரிந்த மார்பு நீண்ட பெரிய கைகள்உருண்டு திரண்டு பருத்த புயங்கள். எடுப்பான கழுத்து, அதன் மேல் கம்பீரமானமுகத்தோற்றம். நீண்டு வடிந்த நாசி மலர்ந்தவிழிகள். பரந்த நெற்றி, புன்னகை நிலவும் உதடுகள். காதோரத்தில் சுருண்டு சுருண்டுபடியும் சுருட்டை மயிர்.

பார்த்தவர்களை அப்படியே ஒருசிலவிநாடிகள் தடுத்து நிறுத்தித் தன்னைமறக்கச் செய்கின்ற மோகன சக்தி பொகுட்டெழினியின் அழகுக்கு இருந்தது. இவன் வெறும் அழகன் மட்டும் இல்லை. தலை சிறந்த வீரனும்கூட, சிலபோர்களுக்குத் தான் ஒருவனாகவே படைத்தலைமை தாங்கிச் சென்று அமோகமானவெற்றிகளை அடைந்திருக்கிறான்.

‘புலிக்குப் பிறந்தது பூனையாகி விடுமா? தந்தையைப் போலவே இவனும் வீரத்தையே குலதனமாகப் பெற்றிருக்கிறான். ஆனால் வீரத்தைவிடச் சிறந்த வேறொரு சக்தியும் இவனிடம் இருக்கிறது. இவனுடைய மலர்ந்த முகமும் சிரிக்கும் உதடுகளும் எடுப்பான அழகுத்தோற்றமும் பகைவர்களைக்கூட வசீகரித்துவிடுமே.

வில்லும் அம்பும் எடுத்து, வாளும்கேடயமும் தாங்கி இவன் போர்செய்யக்கூடவேண்டாம் எதிரிக்குமுன்னால் போய் நின்று ஒரு புன்முறுவல்செய்தால் போதுமே! தான் எதற்காகவந்திருக்கிறோம் என்பதையும் மறந்துபுன்சிரிப்போடு இவனைக் கட்டிக் கொண்டுவிடுவான் இவனுடைய எதிரி. இதுகந்தர்வர்களுக்கு உரிய தேவலோகத்துஅழகு” என்று அரசவையைச்
சேர்ந்த பெரியோர்கள் அவனைப் பற்றி அடிக்கடிவியந்து பேசிக்கொள்வது வழக்கம்.

இன்னும் ஒரு வேடிக்கை! எப்போதாவது சில சந்தர்ப்பங்களில் பொகுட்டெழினி தன்னுடைய தேரில் ஏறித் தகடூர் வீதிகளின்வழியே செலுத்திக்கொண்டு போவான். அப்படிப் போகும்போது வீதியின் இருமருங்கிலும் உள்ள வீடுகளின் சாளரங்களிலும் ஒருக்கொளித்த கதவின்இடைவெளி களிலும் சில ஆச்சரியங்கள்நிகழும்!

சாளரங்களிலும் கதவின்இடைவெளிகளிலும் திடீர் திடீரென்று தாமரை மலர்கள் மலரும் முழு மதிகள் உதயமாகும்! ‘என்ன இது? சுத்தப்பிதற்றலாக இருக்கிறதே? தாமரைப்பூவும் சந்திரனும் விட்டு வாசலிலும் பலகணியிலும் மலர்கிறதாவது?’ என்று
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

ஆம் தாமரை மலரைப் போலவும் முழுமதியைப் போலவும் முகங்களை உடைய கன்னிப் பெண்கள் பலர் பொகுட்டெழினியைக் காண்பதற்காகத் தங்களுக்குள்ளே போட்டிபோட்டுக்கொண்டு வருவார்கள். எழினியின் அழகைப் பார்க்க அவ்வளவுஆர்வம். அதை வெறும் ஆர்வமென்றுகூடச்சொல்வதற்கு இல்லை. ‘ஆர்வவெறி’ என்றே சொல்லலாம்.

காதற் கடவுளாகிய மன்மதனே தேரில் ஏறிவீதியில் செல்வதாகத் தோன்றும்அவர்களுக்கு. ஒரே நாளில், ஒரேசமயத்தில், ஒரே பார்வையில் கண்டு, கண்களையும் மனத்தையும்திருப்திபடுத்திக்கொண்டுவிடக்கூடியஅழகு அன்று அது. இவன் தேரேறி வீதியில்போகின்றபோதெல்லாம் வீதியில்இவனைப் பார்த்தாலும் இவன் புதியஅழகனாகவே தெரிகிறான். இரஸத்தேர்ச்சியும் காவிய ஞானமும் உள்ள மகாகவி ஒருவன் சிருஷ்டித்த காவியம் எத்தனை தடவை படித்தாலும் புதிய அழகும்புதிய நயமும் உடையதாகவே தோன்றுகிறது பாருங்கள்!

பொகுட்டெழினியின் இளமை அழகும் அவ்வூர்க் கன்னிப் பெண்களுக்கு இப்படிஒரு காவியமாகத்தான் இருந்தது. எனவேஅழகைக் காண்பதில் அவர்களுக்கிருந்தஆர்வம் குன்றவில்லை.

தெருவில் இவன் செல்லுகிற போதுகளிலே வழக்கமாக நடக்கும் இந்த மறைமுகமான‘தரிசன நாடகத்’தை ஒளவையார் ஒருநாள்பார்த்துவிட்டார். ‘பொகுட்டெழினியின் அழகு இளம் பெண்களை என்ன பாடுபடுத்துகிறது?’ என்பதை அவரால்புரிந்து கொள்ள முடிந்தது. ‘தன் ஆருயிர்நண்பனாகிய அதியமானின்புதல்வன்தான் இந்த அழகன்’ என்றஎண்ணத்தினால் அவருக்குப்பெருமிதம்ஏற்பட்டாலும்,மற்றோர் பக்கம் இது பெரியஆச்சரியமாகவே தோன்றியது.

‘மனித நியதிக்கு மேற்பட்ட அழகுஆணுக்கோ, பெண்ணுக்கோ இருந்தால்அதன் விளைவு மகா விரலமாக இருக்கும் என்பதை அறிந்தவர்அவர். பொகுட்டெழினிக்கு விரைவில் திருமணம் செய்யுமாறு அதியமானிடம் சொல்லிவிட வேண்டுமென்றுஎண்ணினார் அவர்.


எழினி தனக்குநிகரில்லாத அழகன் மட்டுமின்றிப் பகைவர்கள் தன் பெயரை எண்ணிய மாத்திரத்திலேயே அஞ்சி
நடுக்கம் கொள்ளும்படியான நிகரற்ற வீரனும்ஆவான் என்பதை ஒளவையார் நன்கு அறிவாராகையினால் அவனைப்பற்றி
அதியமானிடம் கூறும்போது சாமர்த்தியமாகக் கூறவேண்டும் என்றுநினைத்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த அன்றைக்கு மாலையிலேயே ஒளவையார் அதியமானைச் சந்திக்க நேர்ந்தது. அவனைக் கண்டதுமே தலைகால் இல்லாமல் மொட்டையாக ஆரம்பித்தார் தம்முடைய பேச்சை!

“அதியா! உன்னிடம் ஒன்று கூறப்போகிறேன். கேட்டால் நீ திடுக்கிட்டுப்போகமாட்டாயே!”

“அது என்னதாயே, அப்படி நீங்கள்கூறப்போகும் திடுக்கிட வைக்கும் செய்தி”

“உன் மகன் பொகுட்டெழினிக்கு இந்தஉலகத்தில் இரண்டு பெரிய பகைகள் உண்டாகியிருக்கின்றன!”

“என்ன பகைகளா?. யாருக்கு?. என்மகனுக்கா? புதிராக அல்லவா இருக்கிறது!”

அதியமான் உண்மையிலேயே இந்தச்செய்தியைக் கேட்டுத் திடுக்கிட்டுப்போய்விட்டான்.

“உண்மையாகத்தான் சொல்கின்றேன்அப்பா! உன் மகனுக்கு இரண்டு பகைகள்உண்டாகிவிட்டன.”

“தாயே! சொல்வதைத் தெளிவாகச்சொல்லுங்கள். என் மனம் பதறுகிறது.”

“கேள், அதியா முதல் பகைவர்கள் இந்தஊரில் இரத வீதிகளிலுள்ள கன்னிப்பெண்கள். இரண்டாவது பகைவர்கள், எழினி படையெடுத்துச்சென்று வெற்றி கொண்ட பகைவர்களின் ஊர் மக்கள்”

“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?”

“ஒன்றும் உனக்குப்புரியாததாக நான்சொல்லவில்லை! இந்த ஊர்க் கன்னிப்பெண்களும் தோற்றுப்போன ஊர்மக்களும் எழினிக்குப் பகைவர்களாய்விட்டார்கள் என்கிறேன்.”

“கன்னிப் பெண்களுக்கும் இவனுக்குமா பகை? அது எதனால்?”

“அப்படிக் கேள் அதியா சொல்கிறேன். மலர்ந்த பூக்களால் தொடுக்கப்பட்ட தும்பைமாலையை அழகிய தன் மார்பில்அணிந்துகொண்டு வீதி வழியே தேரேறிச்செல்கிறான் உன் மகன். இவனுடைய பருத்து நீண்ட புயங்களையும்மார்பையும் முகத்தையும் கன்னிப்பெண்கள் சாளரங்களிலும் கதவிடுக்குகளிலும் நின்று பார்க்கிறார்கள். இவன்அழகைக் கண்டு ஏங்கிக் கண்கள் பசந்துதோள்கள் மெலியவாடி வருந்துகிறார்கள். ஏக்கம் நிறைந்தஅவர்கள் நெஞ்சம் ஒரு பகை!”

அதியமான் சிரித்துவிட்டான். சிரிப்பைஅவனால் அடக்க முடியவில்லை.

“தாயே! என்ன இது? வேடிக்கையா...?”

“வேடிக்கைதான் பொறுமையாக இன்னும்கேள்”

“சொல்லுங்கள்! இன்னொரு பகை?”

“உன் மகன் எழினி படையெடுத்துச் சென்றுதோல்விப் பட்டு அழிவுறச் செய்தஊர்களில், ஆரவாரம்
ஒடுங்கித் திருவிழாக்களெல்லாம் நின்றுபோகின்றன. எழினியின் படைகள்ஆட்டிறைச்சி முதலிய உணவுப்பொருள்களை உண்டு வெற்றியைக்கொண்டாடுகின்றன!

அந்த ஊரிலுள்ள்குளங்களிலும் நீர்நிலைகளிலும்எழினியின் மதநீர் சொரியும்யானைப்படைகள் தண்ணிர் குடிக்கச்சென்று நீரைக் கலக்கிச் சேறாக்கிவிடுகின்றன. மதநீரும் சேறும்கலந்துநீர்தூய்மை இழந்து போகிறது. இதனால்அந்தத் தோற்றவூரின் மக்கள் அங்குவாழ்வதற்கு அஞ்சி எழினியைவெறுக்கிறார்கள். இந்த வெறுப்பு இவனுக்கு ஏற்பட்ட இரண்டாவது பகை!”

“தாயே! என் மகனின் அழகையும்வீரத்தையும் எவ்வளவு சாமர்த்தியத்தோடு ஒரே இணைப்பாக இணைத்துவிட்டீர்கள்?”

அவன் குரலில் ஆச்சரியமும் நன்றியும்தொனித்தன.

“பாராட்டவில்லை அப்பா இந்தப் பகைகள் இரண்டையும் தீர்ப்பதற்கு நீ முயலவேண்டாமா?”

“எப்படித் தீர்க்க முயலலாம்? நீங்கள்தான்ஏதாவது வழி சொல்லி அருள வேண்டும்.”

“நானே சொல்லட்டுமா?”

“நீங்கள்தான் சொல்ல வேண்டும் - சொல்லத் தகுதி உடையவர் நீங்களே, வேறுயாரால் சொல்ல முடியும்?”

“முதல் பகை உள்ளுர்க் கன்னிப்பெண்களின் பகை அதைத் தீர்ப்பதற்குஒரே ஒருவழிதான் இருக்கிறது. அதுஅவ்வளவு கஷ்டமானதும் இல்லை”

“என்ன வழி தாயே!”

“சீக்கிரம் உன் மகனுக்கு ஒரு திருமணம்செய்துவிடு பயிர் வேலிக்குள்அடங்கிவிடும். பாதுகாப்பையும்பெற்றுவிடும்.”

“நல்லது இரண்டாவது பகை”

“உனக்குப் பின் உன் மகன் முடிசூடும்போதுஅது தீர்ந்து போகும் அரசாட்சியில்மக்களின் துன்பங்களை உணரஅனுபவமேற்படும். அப்போது தன்னால்தோற்கடிக்கப்பட்ட ஊரானாலும்மக்களுக்கு வருத்தம் நேராது பாதுகாக்கும்கருணையும் தோன்றிவிடும்.”

“நன்றாகச் சொன்னீர்கள்வேடிக்கையாகவே இரண்டு பெரும்பிரச்சினைகளையும் தீர்ந்து விட்டீர்களே? சீக்கிரமே இவ்விரு பகைகளையும்தீர்த்துவிடுகிறேன்.” அதியமான்சம்மதித்தான். ஒளவையார் மகிழ்ந்தார்.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்னைஇளையோற்கு
இரண்டெழுந்தனவாற் பகையே ஒன்றே
பூப்போல் உண்கண் பசந்துதோள் நுணுகி
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே
விழவின்று ஆயினும் படுபதம் பிழையாது
மையூன் மொசித்த ஒக்கலொடு துறைநீர்க்
கைமான் கொள்ளு மோவென
உறையுள் முனியும்அவன் செல்லும் ஊரே! (புறநானூறு - 96)

பட்டு = அழகிய, என்னை = என்தலைவனாகிய, அதியமான் இன்னயோன்= மகன், உண்கண் = மையுண்ட கண், நுணுகி : மெலிந்து, பிணித்தன்று = ஆசையால் கட்டுப்படுத்தியது. பதம் = சமைக்கும் உணவு மையூன் = ஆட்டிறைச்சி, மொசித்த = உண்ட, ஒக்கல் = சுற்றம், கைமான் = யானை, முனியும் = வெறுக்கும்.




 




devisaran

நாட்டாமை
Joined
Mar 16, 2018
Messages
21
Reaction score
34
Age
48
Location
chennai
நல்ல பதிவு நான் இதுவரை எதிலும் படிக்காதது
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top