• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்--------7---நட்பின் கதை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
சோழநாட்டுக் கோநகராகிய உறையூர், அழகும் இயற்கை வளமும் மிக்க காவிரியாற்றின் கரை, மேடும்பள்ளமுமாகத் தென்படுகிற வெண்மணற்பரப்பின் நடுவே பலர் கூடி நின்றுகொண்டிருக்கிறார்கள். அவ்வளவுபேர் முகங்களிலும் சோகம்
குடிகொண்டிருந்தது. அது எத்தகைய சோகம்தெரியுமா? பிரிய முடியாததைப்பிரியும்போது, இழக்க முடியாததைஇழக்கும் போது ஏற்படுகின்ற சோகம்.


கூட்டத்தின் நடுவே அரசர்க்கரசனான கோப்பெருஞ் சோழன், எளிய உடையுடுத்து, வடக்கு நோக்கி
வீற்றிருந்தான். அவனைச்சுற்றிச் சதுரமாக ஒருசிறிது பள்ளம்உண்டாக்கப் பட்டிருந்தது. மணல் மேல் தருப்பைப் புற்கள் பரப்பப் பட்டிருந்தன. எதுவும் பேசத் தோன்றாமல் சுற்றி நின்றவர்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
நேற்றுவரை அரச வாழ்வில் இன்புற்றுமகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த ஒர் அரசன், இன்று வாழ்வை வெறுத்துச் சாகின்றவரை உண்ணா நோன்பு இருக்கத் துணிந்துவிட்டான்!

வடக்கு நோக்கி இருந்தே வாழ்க்கையை முடித்துக்கொள்ளக் கருதிவிட்டான்.
அவனோடு உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள், புலவர்கள் எல்லோரும் பிரியமனமில்லாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள்.

“பொத்தியாரே! நீர் ஓர் ஏற்பாடு செய்யும்...”

கூட்டத்திலிருந்த பொத்தியார் என்ற புலவர்முன்னால் வந்து சோழனுக்கருகேகைகூப்பி வாய் புதைத்து வணக்கமாகநின்று கொண்டு, “என்ன வேண்டும் அரசே! கட்டளை எதுவோ அதை நிறைவேற்றக்காத்திருக்கிறேன்!”

“என் உயிர் நண்பர் பிசிராந்தையார் யான்வடக்கிருப்பதைக் கேள்விப்பட்டுத் தாமும்வடக்கிருந்து உயிர் நீப்பதற்காக இங்கேவருவார். அப்படி வந்தால்...”

“வந்தால் என்ன செய்ய வேண்டும்!” - “வேறுஒன்றும் செய்ய வேண்டாம். இதோ இங்கேஎனக்கு அருகில் அவரும் வடக்கிருப்பதற்கு ஒர் இடத்தை ஒழித்து வைக்க வேண்டும்.”

சோகம் நிறைந்த அந்தச் சூழ்நிலையிலும்கூட்டத்தில் சிலருக்குச் சிரிப்புவந்துவிட்டது.அவர்கள் சிரிப்பிற்குக்காரணம் சோழனுடைய அந்தப்பேச்சுத்தான். பொத்தியாருக்கே சிரிப்புவந்தது. வலிய அடக்கிக் கொண்டுவிட்டார்.

ஆனால் எப்படியோ சோழன் செவிகளில்இரண்டொரு சிரிப்பொலிகள்விழுந்துவிட்டன.

“நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? உங்களுக்குநான் சொல்வது வேடிக்கையாகத்தோன்றுகிறதா?”

“தாங்கள் கூறுவதை எங்களால் நம்பமுடியவில்லை அரசே! பிசிராந்தையார் உங்களுக்கு உயிர் நண்பர் என்று சொல்லுகிறீர்கள்! ஆனால் நீங்களும் பிசிராந்தையாரும் இன்றுவரை ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துக் கொண்டதுகூடஇல்லை. ஒருவரை ஒருவர் காணாமல், கேட்டுவிட்டு மட்டும் பழகியிருக்கும் இந்த நட்புக்காக அவர் உங்களோடு வடக்கிருக்கவருவாரா?”

“ஆம் அரசே! நட்பு வேறு; உயிர் வேறு. மனத்தளவில் நிற்கின்ற நட்பிற்காக உயிரைக் கொடுக்க எவரும்
முன்வரமாட்டார்கள். நெருங்கிப் பழகியவர்களின் நட்பே இத்தகைய தானால் கண்ணால் காணாமலே பழகிய நட்புக்காக யாராவதுஉயிரைக் கொடுக்க முன்வருவார்களா?”

“நான் சொல்வதை அரசர் நிச்சயமாகநம்பலாம். பிசிராந்தையார் உறுதியாகவடக்கிருக்க இங்கு வரமாட்டார்”

“அதில் சந்தேகமென்ன? பாண்டி நாட்டில், எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒருசிற்றுாரில் வசிக்கம் பிசிராந்தையார் சோழநாட்டுக்கு வந்து அரசர் பெருமானுக்காகத்தம் உயிரையும் கொடுக்க வேண்டும்என்பது என்ன அவசியம்?”

சோழனைச் சுற்றியிருந்த சான்றோர்கள் எல்லோருமே பிசிராந்தையார் வரமாட்டார் என்றே உறுதியாகக்
கூறினர். சோழன்அவர்கள் கூறியதை எல்லாம் மறுமொழிகூறாமலே அமைதியாக இருந்து கேட்டான்.

ஆனால் அவன் மனத்திலிருந்த நம்பிக்கையின் உறுதி மட்டும் குன்றவேஇல்லை. ‘பிசிராந்தையார் வந்தே தீருவார்’ என்று அவன் உள்மனத்திலிருந்து எழுந்துஏதோ ஒருணர்வு அடிக்கடிவற்புறுத்திக்கொண்டேயிருந்தது.

உடல்கள்இறுகக் கட்டித் தழுவுகின்ற நட்பைக்காட்டிலும் கண்ணால் காணாமலேமனங்கள் தழுவுகின்ற நட்புக்கு அதிகவன்மை உண்டென்று அவன் நம்பிக்கொண்டிருந்தான்.

“பொத்தியாரே! பிசிராந்தையார் கண்டிப்பாக வருவார். அவர் மனம் எனக்குத் தெரியும் என் மனம் அவருக்குத் தெரியும். நீர் மட்டும் நான் சொல்கிறபடி அவருக்கு இடம் ஒழித்து வைத்தால் போதும். வேறொன்றும் செய்ய வேண்டாம்”

“இடம் ஒழித்து வைக்கிறோம்! மாட்டேனென்று சொல்லவில்லை. ஆனால்தங்கள் நம்பிக்கைதான் எங்களுக்குவியப்பை அளிக்கிறது.”

“வியப்போ? வியப்பில்லையோ? இன்னும்சிறிது நேரம் பொறுத்துப் பாருங்கள். எல்லாம் தெரியும்.”

“கோப்பெருஞ் சோழனுக்குக் கடைசிக்காலத்தில் சித்தப் பிரமை உண்டாயிருக்கவேண்டும். இல்லையென்றால் இப்படி ஒர்அசட்டு நம்பிக்கை ஏற்படுமா? யாரோபிசிராந்தையாராம்? பாண்டி நாட்டில்இருக்கிறாராம். இவனுக்காக அவர் உயிர்விடுவதற்கு இங்கே வருவாராம்!” புலவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டனர். அவர்களுடையஅவநம்பிக்கை தான் அந்தமுணுமுணுப்பிற்குக் காரணம்.


அரசன் கட்டளையை மறுக்க முடியாமல்பொத்தியார் இடம் ஒழித்து வைத்தார். பிசிராந்தையார் சோழனோடு சேர்ந்துநட்பிற்காக உயிர்விட வருவார் என்பதைஅவரும் நம்பவில்லை.

ஒன்று, இரண்டு, மூன்று என்று நாழிகைகள்கழிந்து கொண்டிருந்தன. புலவர்கள்எல்லோரும் பொத்தியார் உள்படஅங்கிருந்து புறப்பட்டுவிட்டனர்.

சோழன்தான் வடக்கிருந்துசாகப்போகிறான். அவர்களும் அவனோடுஅங்கே அந்த வெயிலில் நின்று வருந்தவேண்டுமா என்ன? எனவேதான் அவர்கள்சோழனிடம் விடைபெற்றுக்கொண்டுபுறப்பட்டு விட்டார்கள்.

கொதிக்கும் வெயிலில் சுடுகின்ற ஆற்றுமணலையும் இலட்சியம் செய்யாமல்யாரோ ஒருவர் எதிரே வேகமாக நடந்துவந்து கொண்டிருந்தார். வெகு தொலைவுநடந்து வந்தவரைப் போலத் தோன்றியஅவரைத் திரும்பிச்சென்றுகொண்டிருந்த புலவர்களும்பொத்தியாரும் கண்டனர். அவர் யார்? அந்தவெயிலில் எங்கே போகின்றார்?’ என்பதைஅவர்களால் உய்த்துணரக்கூடமுடியவில்லை.

“ஐயா! இங்கே காவேரிக்கரையில்கோப்பொருஞ்சோழன் வடக்கு நோக்கிஉண்ணா நோன்பு இருக்கிறானாமே? அதுஎந்த இடத்தில்? உங்களுக்குத்தெரியுமானால் சொல்லுங்கள். நான் இந்தஊருக்குப் புதியவன், நீங்கள் சொன்னால்எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.”

வெயிலில் நடந்து வந்து கொண்டிருந்தவர்பொத்தியாரை நோக்கிக் கேட்டார். பொத்தியார் அந்த மனிதரை மேலும்கீழுமாக ஏற இறங்கப் பார்த்தார். பின்புமறுமொழி கூறினார். “ஏன்? கோப்பெருஞ்சோழனிடம் உமக்கு என்ன காரியம்? நீர்எங்கிருந்து வருகிறீர்?”

“ஐயா! நான் பாண்டிய நாட்டிலிருந்துவருகிறேன். என் பெயர் பிசிராந்தையார். கோப்பெருஞ் சோழனுக்கு உயிருக்குயிரான நண்பன்.அவனை உடனே பார்க்கவேண்டும்”

பொத்தியாருக்கும் உடனிருந்தபுலவர்களுக்கும் பெருந் திகைப்புஏற்பட்டது. பொத்தியாருக்கு வந்தவரைமேலும் ஆழம் பார்க்கத் தோன்றியது.

“ஓ! நீங்கள்தாம் பிசிராந்தையாரோ? இப்போது சோழனைக் கண்டு என்னசெய்யப் போகிறீர்கள்?”

“அவனோடு சேர்ந்து நானும் வடக்கிருந்துஎன் உயிரைவிடப் போகின்றேன்”

பொத்தியாரும் மற்றவர்களும் அப்படியேபிசிராந்தையாரின் கால்களில் வீழ்ந்துவணங்கினர்.

"பிசிராந்தையாரே! நட்பு என்றவார்த்தைக்கே நீர் ஒரு புதியமதிப்பளித்துவிட்டீர் ஐயா! உம்மால் அந்தப்பதமே ஒரு அமரகாவியமாகிவிட்டது” என்றார் பொத்தியார்.

உடனேஅவரைஅழைத்துச்சென்று சோழனிடம் சேர்த்தார். நட்பின் கதையை விளக்கும் நிகழ்ச்சியாகக்காவிரிக் கரையில் இரண்டு உயிர்கள்ஒன்றாயின. ஒன்றாகிய ஈருயிர்களும்உலகுக்கு ஒர் அரிய உண்மையைக்கொடுத்தன.

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கிதுதுணிதல்
அதனினும் மருட்கை உடைத்தேபிறன்நாட்டுத்
தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி
இசை மரபாக நட்புக் கந்தாக
இணையதோர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றோ!​
(புறநானூறு - 217)​
மருட்கை = வியப்பு, இசை=புகழ், கந்துபற்றுக்கோடு, சான்றோன் = பிசிராந்தையார், கோன் = கோப்பெருஞ்சோழன், பழுதின்றி = பொய்யாகாமல், மரபு = வழக்கம், வியப்பிறந்தன்று = ஆச்சரியம் அளவற்றுப்பெருகுகிறது.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
??‍♀ present miss.....
நம்பர் போட்டுட்டேன் டீச்சர் உங்களுக்காகவே:love::love::love:
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
padichuten miss.....?????????? paarkamale vara natpooo..., parthu pazhagum natpai vida suya nalam illathathu.., unmaiyanathu.., anbanathu..... ??? en visible frnds a vida..., nan site la than unmaiyana anbai unarkiren....??????????
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
நம்பர் போட்டுட்டேன் டீச்சர் உங்களுக்காகவே:love::love::love:
yes..... ???? ??? 7 ah....... ???5 than nan padichuruken......??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
padichuten miss.....?????????? paarkamale vara natpooo..., parthu pazhagum natpai vida suya nalam illathathu.., unmaiyanathu.., anbanathu..... ??? en visible frnds a vida..., nan site la than unmaiyana anbai unarkiren....??????????
:love::love::love::love:சந்தோசம் தீப்ஸ்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top