• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்----- 8 --வீரக் குடும்பம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
“அதோ அந்தப் பெண்ணைப்பார்த்தீர்களா?” ஒக்கூர் மாசாத்தியார்தம்மிடமிருந்த மற்றோர் புலவருக்குச் சுட்டிக்காட்டினார்.

“அந்தக் குடிசை வாயிலில் தனியாகஉட்கார்ந்து கொண்டிருக்கிறாளே, அந்தப்பெண்ணைத்தானே சொல்லுகிறீர்கள்?”

“ஆமாம் அவளேதான்!”

“அவளுக்கு என்ன?” “சொல்லுகிறேன்! அந்தப் பெண்ணின் வீரத்தையும், துணிவையும் இப்போது நினைத்தாலும்அந்நினைவைத் தாங்க முடியாது என்நெஞ்சு அழிந்துவிடும் போலிருக்கிறது.”

“வெள்ளை உடையும் திலகமில்லாதநெற்றியும், பூவில்லாத கூந்தலுமாகத்தோன்றுகிறாளே! அப்படியானால்.”

“ஆம், அவள் கணவனை இழந்தவள்தான்.”

“ஐயோ! பாவம். இந்தச் சிறு வயதிலேயா?”

“கணவனை மட்டும் என்ன? குடும்பம்முழுவதையும் இழந்தாள் என்று கேட்டிர்களானால் இன்னும் வியப்பு அடைவீர்கள்.”

“சொல்லுங்கள்! புனிதவதியாகத் தோன்றுகிற இவள் வரலாறு முழுவதையும்அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.”

“வீரத்தையே கடவுளாக வணங்குகின்ற பழங்குடியில் தோன்றியவள் இவள், உயிரையும் உடலையும்விட
மானத்தையும்ஆண்மையையும் பெரிதாகக் கருதுகின்ற குடும்பம் அது மூன்றாம் நாள் வேற்றரசன் நம் நாட்டின் மேல் படையெடுத்து வந்தான்அல்லவா? அன்று இவளுடைய தமையன்போர்க்களத்திற்குச் சென்றான்.


இவளும் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் மகிழ்ச்சியோடு வழியனுப்பினர். வெற்றிவாகைசூடித் திரும்பி வருமாறு அவனை வாழ்த்தினர். அவன் யானைகளை எதிர்த்துப் போர்புரிவதில் வல்லவன். போரில் பகைவர்களின் யானைப்படைகளைச் சின்னாபின்னாமாக்கினான். எல்லோரும் வியக்குமாறு போர் செய்துஇறுதியில் போர்க்களத்திலேயே இறந்துபோனான் அவன்.
வீட்டுக்கு வரவேண்டியவன் விண்ணகம்சென்றுவிட்டான்.



வெற்றிமாலை சுமக்கவேண்டிய தோள்கள் போர்க்களத்து இரத்தத்தில் மிதந்தன. செய்தி யறிந்தது வீரக்குடும்பம். வருத்தமும் திகைப்பும் வாட்டமும் ஒருங்கே அடைந்தது. ஆனால்அவையெல்லாம் ஒரே ஒரு கணம்தான். மறுகணம் இவள் தன் ஆருயிர்க்கணவனை அழைத்தாள்.”

“நம் குடும்பத்தைப் பெயர் விளங்குமாறுசெய்ய வேண்டும். நம்முடைய வகையில்யாராவது ஒருவர் போர்க்களத்தில்இருந்தால்தான் அது முடியும்”

“ஆகா! நீ இதைச் சொல்லவும் வேண்டுமா? இதோ, இப்போதே, நான் புறப்படுகிறேன். இந்தக் குடும்பத்தின், வீரப் பெருமையைக்காப்பதில் உன் கணவனாகிய எனக்கும்பெருமை உண்டு”

“நல்லது சென்று வெற்றி வாகை சூடிவாருங்கள்!” கண்களில் நீர் மல்க அவள்விடை கொடுத்தாள். கடமை அவனைப்போருக்கு அனுப்பியது! காதல் ‘ஏன்அனுப்புகின்றாய்?’ என்று கேட்டது. காதலின் கேள்விதான் அந்தக் கண்ணீர்.

அவள் வழியனுப்ப அவன் புறப்பட்டுக்கொண்டிருந்தான். அப்போது வெளியேவிளையாடச் சென்றிருந்த
அவர்கள் புதல்வன், சிறுபையன் குடுகுடுவென்றுஎதிரே ஓடி வந்தான்.


“அப்பா! நீ எங்கேப்பா போறே? சீக்கிரமா, திரும்பி வந்துடுப்பா, வராம இருக்கமாட்டியே!”

அவன், அவள், இருவர் கண்களையுமே கலங்கச் செய்து விட்டது சிறுவனின்மழலை மொழிக் கேள்வி.

“ஆகட்டுண்டா! கண்ணு, சீக்கிரமாகத்திரும்பி வந்துவிடுகிறேன்.”

“நீ வல்லேன்னர நானும் ஒன்னெ மாதிரிகத்தி, வேலு எல்லாம் எடுத்திக்கிட்டுச்சண்டை நடக்கிற எடத்துக்குத்தேடிவந்துடுவேன்!”

பிரியும் வேதனையை மறந்து ஒரிருவிநாடிகள் அவர்களைச் சிரிப்பில்ஆழ்த்தியது குழந்தையின் அந்தப் பேச்சு.

அவன் சிறுவனிடமும் மனைவியிடமும்விடைபெற்றுக் கொண்டு போர்க்களம்நோக்கிச் சென்றான். அமைதியை வாழவைக்கும் பூமியிலிருந்து ஆத்திரத்தை வாழவைக்கும் பூமிக்கு நடந்தான். அன்பை வணங்கும் பூமியிலிருந்து ஆண்மையை வணங்கும் பூமிக்குச் சென்றான். என்னசெய்யலாம்? அதுதானே கடமை!

போர்க்களத்தில் வரிசை வரிசையாக நின்ற பகைவர் படைகளின் இடையே ஆண்சிங்கத்தைப் போலப் புகுந்து போர்செய்தான் அவன். அதுவரை அந்தக்களத்தில் யாருமே கொன்றிருக்க முடியாதஅத்தனை பகைவர்களைத் தான் ஒருவனாகவே நின்று அழித்தான். இறுதியில். இறுதியில் என்ன? முதல்நாள்அவள் தமையன் போய்ச்சேர்த்த இடத்துக்குஅவனும் போய்ச்
சேர்ந்தான். வீரர்கள் வாழவேண்டிய உலகம் இது இல்லையோ? என்னவோ?


கணவனின் மரணச் செய்தி அவளுக்குத் தெரிவிக்கப்பட்டது. சிறிதுநேரம் என்னசெய்வதென்றே
தெரியவில்லை. அவளுக்கு. உணர்வுகள் மரத்துப் போயின. உடலும் மரத்துப் போய்விட்டது. அழக்கூடத்தோன்றாமல் சிலையென நின்றாள். தன்நினைவு வந்தபோதுகூட அவள்அழவில்லை. கணவனை இழந்தவள் செய்யவேண்டிய காரியங்களை மட்டும்அமைதியாகச் செய்தாள்.


நெற்றியில் திலகம் அழிந்தது.கழுத்தில்மங்கலத்தின் சின்னம் நீங்கியது. கூந்தல்பூவைப் பிரிந்தது. குண்டலங்கள்செவியைப் பிரிந்தன. தண்டைபாதங்களைப் பிரிந்தன. வளைகள்கையைப் பிரிந்தன, அவளைப் பிரிந்தஅவனைப் போல,

அவனை விதி பிரித்துவிட்டது. இவைகளைஅவளாகவே பிரித்துவிட்டாள். இதுதான்இதில் ஒரு சிறு வேறுபாடு. சிறுவனைஅழைத்தாள். அவன் ஓடி வந்தான். அவள்அவனை அனைத்து உச்சி மோந்தாள்.

“ஏம்மா! ஏதோ மாதிரி இருக்கே? கையிலேவளே எங்கேம்மா? காதுலே குண்டலம்எங்கேம்மா?”

“எல்லாம் இருக்குடா கண்ணு!”

“அப்பா ஏம்மா இன்னும் வரலே!”

“இன்னமே ஒங்கப்பா வரவே மாட்டார்டா கண்ணு; வர முடியாத எடத்துக்குப்போயிட்டார்டா” அவள் குழந்தையைக்கட்டிக் கொண்டு கோவென்று கதறியழுதாள். சிறுவனுக்கு எதுவும்விளங்கவில்லை. அவன் மிரள மிரளவிழித்தான்.

“இரும்மா! வரேன்” குழந்தை வேகமாகவீட்டிற்குள் போனான்.

“எங்கேடா போறே?” சிறுவன்உள்ளேயிருந்து கையில் எதையோஎடுத்துக்கொண்டு திரும்பி வந்தான்.

அவள் பார்த்தாள். அவன் கையில் ஒருநீண்ட வேல் இருந்தது.துக்க முடியாமல்தூக்கிக்கொண்டுவந்தான்.அவள் நீர்வடியும் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“எதுக்குடா இது?”

“நான் போர்க்களத்துக்குப் போறேம்மா! அப்பாவெத் தேடப் போறேன்.”

அவள் உள்ளம் பூரித்தது. புலிக்குப்பிறந்தது பூனையாய் விடுமா? என்றுஎண்ணிக் கொண்டாள். தொலைவில்அன்றைய போர் தொடங்குவதற்குஅறிகுறியாகப் போர்ப்பறை முழங்கிக்கொண்டிருந்தது.

“கொஞ்சம் இருடா கண்ணு!” அவன்கையில் இருந்த வேலை வாங்கிக் கீழேவைத்தாள். உள்ளே போய் ஒரு வெள்ளைஆடையை எடுத்துக்கொண்டு வந்தாள். போருக்குச் செல்கிறவர்கள் கட்டிக்கொள்கிற மாதிரி அதை அவனுக்குக்கட்டிவிட்டாள். கருகருவென்றுசுருட்டைவிழுந்து எழும்பிநின்ற அவன்தலைமயிரை எண்ணெய் தடவி வாரினாள். அவனால் தூக்க முடிந்த வேறு ஒரு சிறுவேலை எடுத்துக் கொண்டுவந்து அவன்கையில் கொடுத்தாள்.

“நான் போயிட்டு வரட்டுமாம்மா?”

“போயிட்டு வாடா கண்ணு!”

வாயில் வழியே போருக்குச் சென்றுகொண்டிருந்த வேறு சில வீரர்களுடன்அவனையும் சேர்த்து அனுப்பினாள். சிறுவன் தாயைத் திரும்பித் திரும்பித் தன்மிரளும் விழிகளால் பார்த்துக் கொண்டேசென்றான். கணவன் இறந்த செய்தியைச்சிறுவன் அறிந்துகொள்ளாமல்அவனையும் தன் குடும்பத்தின் இறுதி வீரக்காணிக்கையாக அனுப்பிவிட்ட பெருமிதம்அவள் மனத்தில் எழுந்தது.

அந்தப் பெருமிதத்தோடு அவள் வீட்டுவாயிலிலேயே இன்னும் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள்!"ஒக்கூர் மாசாத்தியார்கூறிமுடித்தார். அதுவரை கேட்டுக்கொண்டிருந்த புலவரிட மிருந்து ஒரு நீண்டபெருமூச்சு வெளிவந்தது.

ஒரு வீரக் குடும்பத்தின் புகழ் அந்தப்பெருமூச்சு வழியே காற்றுடன் பரவிக்கலந்தது!

கெடுக சிந்த கடிதிவன் துணிவே
மூதில் மகளிர் ஆதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை
யானை எறிந்து களத்தொழிந் தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப்பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்றுமயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்துடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே. (புறநானூறு -279)

மூதில் மகளிர் = பழங்குடி மகளிர், மேனாள்= மூன்றாம் நாள், செரு=போர், உற்ற=நடந்ததன்னை = தமையன், எறிந்து= கொன்று, நெருதல்=நேற்று, கொழுநன் = கணவன், பெருநிறை = பெரிய படை வரிசை வெளிது= வெள்ளையுடை உடீஇ = உடுத்து, பாறு = பறட்டை, நீவி = தடவி, செருமுகம்= போர்க்களம்.
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
intha post last week poda arambichen ippo than unga commentsa pakkurenu ninaikkiren :love::love::love:dailyum oru oru pattukku oru kutty story
Yeppo lam kannula paduthu appa yellam padipen dear, apadi padichuranum aparom miss panniruven, aparam yeppo time kidakko appa padikatha yellathaiyum padipen dear adhukku kojam ella romba time yedukkum:love::love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
Yeppo lam kannula paduthu appa yellam padipen dear, apadi padichuranum aparom miss panniruven, aparam yeppo time kidakko appa padikatha yellathaiyum padipen dear adhukku kojam ella romba time yedukkum:love::love::love:
:love::love::love:(y)(y)(y)
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
என்ன ஒரு மன திடம் ! என்ன ஒரு தேசப்பற்று !
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top