புலாவ் 🍚🍚🍛🍛💟💟😍😍

#1
_20190808_114830.JPG தேவையான பொருட்கள்:-
பாசுமதி அரிசி - 200 கிராம்
காரட் - 2
பீன்ஸ் - 10
முட்டைக்கோஸ்- சிறிதளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
புதினா - சிறிதளவு
ப. மிளகாய் - 2
தேங்காய் பால் - 2 டம்ளர்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - கறிமசாலா
செய்முறை:-
பாசுமதி அரிசியை ஒரு பத்து நிமிடம் ஊறவைக்கவும். காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து மூன்று கரண்டி எண்ணெய் விட்டு கறிமசாலா ஏலக்காய் 2 தாளித்து புதினா சேர்த்து வெங்காயம், தக்காளி, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் தேங்காய் பால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறிய அரிசியை சேர்த்து குக்கரை மூடவும். 12 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.( காரத்திற்கு மிளகாய் மட்டுமே எனவே தேவையான அளவு மிளகாய் சேர்க்கவும்) குக்கர் விசில் அடங்கியதும் வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
 

Advertisements

Latest updates

Top