• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூந்தேனில் கலந்து -1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 64

நாட்டாமை
Author
Joined
Nov 11, 2021
Messages
72
Reaction score
89
ஹாய்

நான் உங்கள் அனாமிகா64 எனது கதையின் முதல் அத்தியாயத்தை பதிவு செய்துள்ளேன் படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்❤❤❤.

தேனே -1

அன்றைய இரவின் மடியில் நிலவு தவழ, ஏகாந்த சூழ்நிலை மனதை மயக்கிய போதும், இமைமூட முடியாமல் தவித்து தத்தளித்தது இரு மனம்.

மண்டபத்தில் இருந்த அத்தனை பேரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் கடுப்பாக அமர்ந்திருந்தான் எழிலமுதன்.

துளிகூட விருப்பமே இல்லாமல் தாயின் வற்புறுத்தலால் தன்னை விட்டு பறக்க காத்திருந்த பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு இருந்தவனை சோதிக்கும் வண்ணம் அவனின் கைபேசி அழைக்க, மூச்சு முட்டுவது போல இருந்த அந்த அறையை விட்டு போனுடன் வெளியே வந்தவனை மீண்டும் கத்தி தன் இருப்பை உணர்த்தியது அவன் கைகளில் இருந்த அந்த நவீன வஸ்து.

கடுப்புடன் போனை எடுத்தவன், அழைத்தவனை பேச விடாது உலகில் உள்ள சிறந்த வார்த்தைகளை கொண்டு அவனை அர்ச்சனை செய்ய “அடப்பாவி! அடேய் நல்லவனே! இதற்கு மேல திட்டுறதுக்கு இனி தான் ஒரு குழு அமர்த்தி வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்டா.. பிளீஸ் என்னை விட்டுட்டுடா தெய்வமே!” என்று காலில் விழாத குறையாக கேக்க மெல்ல அடங்கியவனின் குரல் “எப்போ வந்து தொலைப்ப ரவி?” என்ற போதும் சிறு கோபத்தை காட்டியது.

ரவிக்கு அமுதனை பற்றி நன்கு தெரியும். கர்வம், ஆணவம், பணதிமிர்... எல்லாம் கலந்து செய்த கலவை அவன்.
நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் சிலசமயம் நல்லவனுக்கும் கெட்டவனாக மாறுவான், அவனுக்கு தேவை என்றால் மட்டுமே ஒருவரை தூக்கி வைத்து கொண்டாடுபவன் தேவையில்லை என்றால் தூக்கி கடாசவும் தயங்க மாட்டான்.
அவனிடம் பேசுபவர்களுக்கு கூட தகுதி இருக்க வேண்டும் என்று நினைப்பவன். பணம் அந்தஸ்து பார்ப்பவன்.
அவன் மனது விட்டு உண்மையாக அவர்கள் நட்பு வட்டத்தில் பழகுவது ரவியிடம் மட்டும் தான்.

“ஒரு அர்ஜென் மீட்டிங்டா அதுதான் என்னால முன்னாடியே கிளம்ப முடியல, இப்போதான் இந்தியா வந்து இறங்கினேன், இன்னும் டூ ஹவர்ல மண்டபம் வந்துடுவேன்” என்றவன் அமுதன் மேலே பேசும் முன் போனை கட் செய்து மெத்தையில் விழுந்தான்.


“யாப்பா சாமி, நம்மலையே இந்த ப்பாடு படுத்துறான், பாவம்டா அந்த பொண்ணு” என்று அமுதனின் வருங்கால மனைவியை நினைத்து வாய்விட்டு சொன்னவன் மண்டபத்திற்கு கிளம்ப தயாரானான்.
ரவி, பாவம் என்று பரிதாபப்பட்ட... நந்தினி, எண்ணெயில் விழுந்த கடுகு போல பொரிந்து கொண்டு இருந்தாள் தன் தங்கையிடம்.

“இந்த அப்பாவுக்கு இருந்தாலும் தங்கச்சி மேல இவ்வளவு பாசம் இருக்க கூடாது. எனக்கு அந்த விஷத்தை பிடிக்கதுன்னு தெரிஞ்சே, எனக்கு தெரியாம நிச்சியம் பண்ணி கதைசொல்லி வரவழைச்சு கல்யாணம் பண்ண நினைக்கிறது ரொம்ப ஓவர்.” என்றவள் மனதில் முகிலனின் மென்மையான புன்னகை ததும்பிய முகம் தோன்றி அழகாய் மனதை அலைக்கழிக்க, அது இன்னும் தந்தை மேல் கடுப்பை வரவழைத்தது.


அவனிடம் இன்னும் தன் மனதை திறந்து காட்டவில்லை என்றாலும், அவனின்றி அவளால் வாழ முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை...

அதற்குள் அவள் தங்கை “அத்தானுக்கு என்ன நல்லா தானே இருக்காரு அவர கல்யாணம் பண்ணுடதுல என்ன கஷ்டம்?” என்றவளுக்கு பதினேழு வயது தான் முடிந்திருந்தது.

“அப்ப நீயே கட்டிக்க “ என்று அவளிடம் வெடுகென்று சொல்ல அவளோ, தன் அக்காவை புரியாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

அழகாக ஐந்தரை அடி உயரத்தில், கோதுமை நிறத்தில் இருந்தவளின் மைவிழிகள் எதையோ தீவிரமாக அவள் சிந்திப்பதை சொல்லாமல் சொல்ல, அதை படிக்க தான் சின்னவளுக்கு தெரியவில்லை.

தெரிந்திருந்தால்... அதற்கு மேல் விடிந்ததும் நடக்க இருந்த பெரிய நிகழ்வுகளை தடுத்திருக்கலாம் தன் தந்தையிடம் சொல்லி.

இருவருக்கும் விருப்பம் இல்லா திருமணம் சொந்தம் விட்டு போய்விட கூடாது என்ற காரணத்தில் நடக்க ஏற்பாட்டு செய்யப்பட... அவர்களின் உறவுக்குள் இதுவரை இருந்த பிணைப்பு உடைய அதுவே ஆரம்பம் ஆனது.

மண்டபத்தில் நடு இரவின் காரணமாக சற்று அமைதி வர அதை சாதகமாக கொண்டு தன் நெருங்கிய நண்பனுக்கு அழைத்தாள் நந்தினி.

வெகு நேரத்திற்கு பின் “ஹாய் அம்மு, என்ன இந்த நேரத்தில் கால் செய்ற, எனிதிங் இம்பாட்டென்” என்றவன் குரலில் தூக்கம் மிச்சம் இருந்தது. அவனுக்கு தெரியாது நாளை காலை அவளுக்கு திருமணம் என்று, எப்படி தெரியும் அவளுக்கே இன்று மாலை வரை தெரியவிடாமல் வைத்திருந்தார் அவளின் குணம் அறிந்த திறமையான தந்தை.

ஆனால் என்ன, இவ்வளவு தெரிந்திருந்தவர் அவளது பிடிவாதத்தை உணராதது விதி என்று தான் சொல்ல வேண்டும்.

“விக்கி என் ரிலேட்டிவ் மேரேஜ்க்கு வந்தேன்டா, இப்போ கொஞ்சம் அர்ஜென்ட்டா நான் ஏர்போர்ட் போகணும் என்ன நீ வந்து பிக் அப் பண்ணிக்கோ” என்றவள் தான் காத்திருக்கும் இடம் பற்றி அமைதியாக சொன்னவள் அவனின் சம்மதத்தை பெற்று வைத்தவுடன் தான் நிம்மதியாக மூச்சு விட்டாள்.

அவளுக்கு யாரையும் சாராமல் வாழ முடியும் அவளுக்கு என்று தனிப்பட்ட முறையில் சொத்துக்களும் தொழில் என்று அனைத்தும் உண்டு பெங்களூரில்.

ஆழி போல் குணம் கொண்டவளை தடை போட முட்டாள்தனமாக நினைத்தது, அவளின் தந்தை கதிரவனின் எண்ணம்.

அறையை விட்டு வெளியே வந்து நண்பனுக்காக காத்திருந்த அமுதனின் செவிகளில் அவளது வார்த்தைகள் ஒன்று கூட குறையாமல் விழுந்து விட , தாயிற்காக மட்டுமே தன்னை அடக்கிக் கொண்டிருந்தவனின் கர்வம் தலைதூக்க, 'அவ என்ன என்னைய வேண்டாம்னு சொல்லுறது, அதுக்கு முதல எனக்கு அவ வேண்டாம்' என்று மனதிற்குள் சொன்னவன் தன் மாமனுக்கு மட்டும் கைபேசியில் ஒரு குறுச்செய்திஅனுப்பி விட்டு, அவளுக்கு முன்பாகவே வெளியேறிவிட்டான், அப்போதுதான் மண்டபத்திற்குள் நுழைய முற்பட்ட தன் நண்பனுடன்.

கர்வம் என்னும் ஆயுதம் ஏந்திய , அன்பெனும் அஸ்திவாரம் இட்டு அழகாக உருவான உறவு என்னும் கோட்டை விரிசல் விட்டது விதியின் செயலோ! இருமதியின் மடமையோ!

**************************


செங்கதிரான் தன் பணியை செவ்வனே துவங்கிவிட, வேலைக்கு செல்லும் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்க, எப்போதும் போலவே அன்றைய பொழுதும் புலர்ந்தது.

காலை நேர பரபரப்பை சென்னை அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்யும் போது தான் முழுமையாக உணர முடியும் என்று எண்ணிக்கொண்டே பயணிகள் குடையின் கீழ் நின்று அவளது பஸ்சுக்காக காத்திருந்தாள் எழில்.

அவளது தந்தை ஒரு தமிழ் ஆசிரியர் மகள் பிறந்ததும் ரோஜா நிறத்தில் நெற்றியில் சிறிய மச்சம் இருக்க சின்ன கண்களை மூடி சிப்பி இதழ்கள் அசைய மனதை கவரும் அழகுடன் திகழ்ந்த அவரது மகளுக்கு நுதலெழில் என்று உடனே மனதில் மின்னிய பெயரை வைத்து விட நம் சிங்காரச் சென்னை வாசிகள் வாயில் அது படாதபாடு பட்டது.

அதற்குள் அவள் ஏற வேண்டிய பேருந்து வந்து விட, எப்போதும் போல வண்டி நிறைமாத கர்ப்பிணியாக கூட்டம் பிதுங்கி வழிய வந்து நிற்க, இதை விட்டால் அலுவலகத்திற்கு நேரத்தில் செல்ல முடியாது என்றதை உணர்ந்தவள் அவசரமாக
ஏறிக்கொள்ள ஒற்றைப் பாதத்தை தான் ஊன்றி நினைக்க முடிந்தது அவளுக்கு.

“ஏய் இந்தா, என்ன எரும மாதி உரசிகிணு நின்னினுக்கிற... அறிவு இல்ல... வந்துட்டான் சனியன், ஊட்டு ஊருமேய பெத்து போட்டங்க போல உன்னைய... நகரு அந்தாண்ட” என்ற பெண்ணின் பெருத்த குரலுக்கு தலையை முயன்ற அளவு திரும்பி பார்த்தவளின் கண்களில் விழுந்த பெண்மணி அவர்கள் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள்.

அலுவலக உணவகத்தின் மொத்தப் பொறுப்பும் அவரது தான். பார்ப்பதற்கு அழகாக, மத்திய வயதில் தோன்றும் நதியா மிகவும் திறமை கொண்ட ஒருவர் கோபம் என்பது அத்தனை எளிதாக வந்து விடாது, வந்தால் அவ்வளவு தான்.

வேலைக்கு செல்வதற்காக, நெரிசலான பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு முதலில் எரிச்சல் தருவது இந்த இடி மன்னர்கள் தான்.

வயது வித்தியாசம் பார்க்காமல் சிறு பெண் முதல் வயதானவர்கள் வரை இந்த தொல்லை கொடுக்கும் எருமைகள் பல பூமிக்கு பாரமாய் சுற்றி திரிகிறது இந்த பறந்து விரிந்த உலகத்தில்.

அவளும் பல இடிகளை வாங்கி இப்போது ஊசியை வைத்து அவர்களுக்கு சரியாக வைத்தியம் பார்க்க, இடிக்க வழியில்லாமல் வேறு இடத்தில் மேய போய் விட்டன அதுகள்.

எழிலை நதியாவும் பார்த்து விட, மெல்ல புன்னகைத்தார். அவர்களின் நிறுத்தம் வந்ததும் அவர்கள் இறங்கி விட... தனது பயணத்தை தொடர்ந்தது அந்த அரசு பேருந்து.

“எழில்! நல்லா இருக்கியா? ஊருக்கு போய்ட்டு வந்தியே, பொழுது நல்லபடியா போச்சா? அம்மா, அப்பா நல்லா இருக்காங்களா?” என்று அவர் கேட்டுக்கொண்டே இருக்க...

பெற்றோரின் கட்டாயத்தில் விடுமுறை பெற்று மனதை ரணமாகி கொண்டு திரும்பி வந்ததை நினைத்த நொடியில், அதுவரை சிறு புன்னகையை ஏந்தி இருந்த அவளது இதழ்கள் இறுக்கமாக மூடிக் கொள்ள, வினாடியில் முகத்தில் சொல்ல முடியாத அளவிற்கு வருத்தம் தோன்றியது எழிலுக்கு.

அவளின் மௌனமான அந்த முகம் அவருக்கு என்ன உணர்த்தியதோ, ஒன்றும் பேசாமல் அவளின் முதுகை லேசாக தட்டிக் கொடுத்தவர், அலுவலகம் வந்தவுடன் சிறு புன்னகையுடன் அவளுக்கு விடை கொடுத்தார்.

அலுவலகத்தில் தனது அறைக்குள் செல்லும்போது, என்னவோ அன்று அலுவலகத்தில் எல்லாரும் தத்தமது வேலையை கவனிக்காமல், எதையோ தீவிரமாக அதுவும் மிக மெதுவாக பேசிக்கொண்டிருந்தனர், அது சற்று வித்தியாசமாக இருந்தாலும் எதிலும் அனாவசியமாக தலையிடாத அவளின் குணம் தனது வேலைக்குள் அவளை முழுவதும் ஈர்த்து கொண்டது.

புயலானவனும், புதிரானவளும் சந்திக்கும் நேரத்தில் பூகம்பம் தோன்றிடுமோ!

***
 




Last edited:

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Super intro

Niraiya characters varanga yaaru hero and yaaru heroine

Nice name but andha pera konnutanga polave 😜

Ezhil nu pera maathita iva daan heroine ah

So ponnu paiyan rendu perume odipoitangala?

Inime enna aagum nice 😍
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அமுதன் & நந்தினி ரெண்டு பேரும் ஓடிட்டாங்க மண்டபத்தை விட்டு, நந்துக்கு முகிலன் மேல லவ் போல, இன்னும் அவன் வரல🧐🧐🧐

நுதல், நைஸ், என்ன பிராப்ளம் ஆ இருக்கும்🤔🤔🤔. இவ தான் அமிதனுக்கு ஜோடியா....
 




Anamika 64

நாட்டாமை
Author
Joined
Nov 11, 2021
Messages
72
Reaction score
89
Super intro

Niraiya characters varanga yaaru hero and yaaru heroine

Nice name but andha pera konnutanga polave 😜

Ezhil nu pera maathita iva daan heroine ah

So ponnu paiyan rendu perume odipoitangala?

Inime enna aagum nice 😍
🙏நன்றி சகோ இனி வரும் பதிவுகளில் தெரிந்து விடும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top