• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூந்தேனில் கலந்து -3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 64

நாட்டாமை
Author
Joined
Nov 11, 2021
Messages
72
Reaction score
89
ஹாய் நண்பர்களே. அடுத்த அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன். படித்து கருத்துகளை சொல்லுங்க சாகோ. 😍😍😍

பூந்தெனில் கலந்து-3

திருமண வேலைகளை எல்லாம் முடித்து அப்போதுதான் படுக்கலாம் என்று முற்பட்ட போது கதிரவனின் கைபேசி தன் இருப்பை தெரிவிக்க, எடுத்து வந்த குறுஞ்செய்தியை பார்த்தவர் அடைத்த நெஞ்சத்தை நீவி விட்டு கொண்டு அப்படியே சரிந்து கட்டிலில் அமர்ந்தார்.

'பொண்ணு, மாப்பிள்ளை இருவருக்கும் விருப்பமில்லாமல் நடக்கும் கல்யாணம் நடப்பதை விட நிற்பதே மேல், நிறுத்தி விடுங்கள்.' என்று இருக்க நிமிடங்கள் தளர்ந்து போய் இருந்தவர் சட்டென்று எழுந்து அமுதனின் அறைக்கு வர... யாருமற்ற வெற்று அறையே அவரை வரவேற்றது.
அடுத்து அவரின் அருமை பெண்ணுடைய அறைக்கு வர, அவர் நினைத்தது போலவே அவரது இளைய மகள் நல்ல உறக்கத்தில் இருக்க, நந்தினி அங்கு இல்லை.

நேற்று வரை விருப்பம் இல்லை என்றாலும் அமைதியாக இருந்த மருமகன் இப்படி செய்தி அனுப்ப தான் பெற்ற மகராசி தான் காரணம் என்று யாரும் சொல்லாமலே புரிந்து விட அடுத்து நடக்க வேண்டியதை யோசித்தபடி தன் நண்பனும்‌, தன் தங்கை கணவனுமான கலை செல்வனுக்கு அழைத்தார்.

அழைப்பை எடுத்தவர், “என்னடா இவ்வளவு நேரம் உன் கூட தானே இருந்தேன் இப்போ தான் உன் தங்கச்சி பக்கத்துல வந்தேன் அது பொறுக்கலயா?” என்றார் கிண்டலாக.

செல்வத்தின் வார்த்தைகளில் தெரிந்த நட்பை, அழகான உறவை இன்றைய நிகழ்வுகள் அழித்து விடுமோ என்று தவித்து தான் போனார் கதிரவன்.

கதிருக்கு குறையாமல் கலை செல்வனுக்கும் அவன் மீது அத்தனை அன்பு.
மகனுக்கு விருப்பம் அவ்வளவு இல்லை என்றாலும் அவரின் கதிரின் விருப்பமே முதன்மையாக தெரிந்தது அந்த நண்பனுக்கு.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பே நண்பனின் தங்கையை காதலித்து, அவனின் துணைகொண்டு எதிர்ப்புகளை முறியடித்து திருமணம் முடித்தவர் மனதில் அன்றைக்கும் குறையாத அளவிற்கு இப்போதும் தன் மனைவி மீது காதல் பொங்கி வழிந்தது.

“டேய் மாப்புள!” என்ற போதே கதிரின் குரல் தடுமாறி விட, தன் விளையாட்டை நிறுத்தி சட்டென்று எழுந்த செல்வம், தன் மனைவி எழுந்து விடாதபடி அமைதியாக வெளியே வந்து.
“என்ன கதிர், குரல் ஒரு மாதிரி இருக்கு? எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்டா” என்றான் உற்ற தோழனாக.

பின் தயங்காமல் கதிரவன் அனைத்தையும் சொல்லி விட, சில நொடி கலங்கிய செல்வன் “மொட்ட மாடிக்கு வா... என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம், சரி செய்ய முடியாது என்று உலகத்தில் எதுவுமே இல்லை.” என்றார் குரலில் உறுதியுடன்.

உறவை கொண்டு உருவான நட்பில்லவே உடைந்துவிட, நட்பை கொண்டே தான் எதுவும் அவர்களுக்கு.

*****************


ஒரு வாரமாக கிடப்பில் போடப்பட்ட வேலைகள் தலைக்கு மேல் இருக்க, வேண்டாத விஷயங்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் செயல்பட்டாள் எழில்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆரம்பிக்கப்பட்ட தொழில் என்றாலும், கம்பெனி தொடங்கியது முதல் அவள் அங்கு பணியாற்ற அடி முதல் நுனி வரை அவளுக்கு தெரியாதது எதுவுமே இங்கு இல்லை. அவளது எம். டியின் முழு நம்பிக்கை எழிலை அங்கு தனித்து செயல் பட வைத்தது.

அவள் வரும் வரை வீண் பேச்சு பேசிக்கொண்டிருந்த கூட்டம் எழிலின் வரவை அறிந்த நொடி கலந்து தத்தம் வேலைகளை கவனிக்க சென்றது.

வீணாக அதிகாரம் செலுத்த விட்டாலும், அன்றைய நாளில் வேலைகளை முடித்தால் மட்டுமே யாராலும் வீட்டிற்கு செல்ல முடியும்.

அருகில் இருந்த தொலைபேசி அழைக்க அதை எடுத்தவள் முகத்தில் எதிர் முனையில் யார் பேசுகிறார்கள் என்று அறிந்ததும் கவனமும் முழுவதுமே அந்த பேச்சில் தான் அவளுக்கு நிலைத்து நின்றது.

ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்து நின்றாள் எழில்.

ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அத்தனையும் வீணாகிவிட்டது என்றாள் அதிர்ச்சியாக இருக்காதா?

எங்கே தவறு நடந்தது என்று அவளுக்கு புரியவில்லை சட்டென அவரிடம் உரிய பதில் சொல்லிவிட்டு, மாற்று ஏற்பாடுகளையும் செய்து விட்ட பின் அழைப்பை துண்டித்தவள் அடுத்த அழைத்தது அவளது எம் டி நந்தினிக்கு தான்.


கதிரவனும், கலைச்செல்வன் இணைந்து பல தொழில்கள் செய்தார்கள். அவர்கள் முதலில் தொடங்கியது மீன் கமிஷன் ஏஜென்ட் தொழில்தான் அதன்பின்பு ஆரம்பித்த பல தொழில்கள் வளர்ந்து, கேகே சாம்ராஜ்யம் அனைத்து துறைகளிலும், வியாபாரங்களிலும் தனது கால்களை பதித்து வெற்றியை தன்னுள் தக்க வைத்திருந்தது.


அவர்களுடைய எல்லா தொழிலையும் அமுதன் கவனித்துக் கொண்டாலும், மீன் கமிஷன் ஏஜென்ட் மட்டும் தனது தந்தை மற்றும் மாமன் வசமே விட்டு வைத்திருந்தான்.

அதன் மீது அத்தனை பெரிய நாட்டமெல்லாம் அவனுக்கு ஏற்படவில்லை, மற்ற கேகே கன்ஸ்ட்ரக்ஷன், கார்மெண்ட்ஸ் என அனைத்தும் அவன் வசத்தில் முன்பை விட பன்மடங்கு பெருகி தன் முத்திரையை தனித்து பதித்திருந்தது அந்தந்த துறைகளில்.

நந்தினி பெங்களூரில் உள்ள கேகே டிராவல்ஸ் முழுவதையும் தானே பார்த்துக் கொண்டாலும், வீட்டுப் பெரியவர்கள் போல அவளுக்கு மீன் சார்ந்த துறையில் ஆர்வம் அதிகமாக இருந்தது.
அதன் வெளிப்பாடே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தானாகவே ஒரு மீன் ஏற்றுமதி நிறுவனத்தை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்திருந்தாள். அதில் சிறுக சிறுக வளர்ந்து தற்போது தனக்கான தனி இடத்தை ஓரளவுக்கு தக்க வைத்து இருந்தாள்.

இப்போது தான் வளர்ந்து வரும் நிலையில் இப்படி ஒரு அடி ஏற்படும் என்று அவள் நினைக்கவில்லை. அந்தப் பணம் ஒன்றும் அத்தனை பெரிய மாற்றத்தை அவள் தொழிலில் கொண்டு வந்து விடாது. ஆனால் நாளில் ஒரே நாளில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் வீண் என்றால், ஏதோ காரணம் கண்டிப்பாக உண்டு என்று அவளுக்கு தோன்றியது.

“எப்பவும் போல தானே எல்லா வேலையும் நடந்தது, பிறகு எப்படி மீன் வீணாபோகும்?” என ஙதலெழிலிலை கேட்டவளுக்கு அவள் மேல் துளி கூட நம்பிக்கை தளரவில்லை.

“எஸ் மேடம், நம்ம டெய்லி ரொட்டீன் போல தான் எல்லாத்தையுமே ஃபிரோசன் (frozen) பண்ணி பக் பண்ணியிருக்காங்க, பட் அது எப்படி ஷிப் பண்றதுக்கு முன்னாடி வீணா போச்சுன்னு தெரியல!” என்றவளின் குரல் சந்தேகமாக ஒலித்தது.

“நீங்க என்ன நினைக்கிறீங்க நுதலெழில்?” என்ற நந்தினியின் கேள்விக்கு வினாடி கூட தயங்காமல்.

“இதுவரைக்கும் நமக்கு யாருமே போட்டி கிடையாது மேடம், இப்ப ஏதோ தப்பா தெரியுது. இது யாரோ வேண்டும் என்று செஞ்ச மாதிரி இருக்கு... ஆனா யாருன்னு தெரியல?

கதிர் சார் மூலமா, தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணி அனுப்ப சொல்லிட்டேன், டோன்ட் வொர்ரி மேடம். பட் இது யாரு பண்ணுனது என நம்ம கவனிக்கவேண்டும்.” என்றவள்.
“இன்னும் கூட நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கேன்.” என்று உறுதியான குரலில் சொன்னவளின் வார்த்தை மேல் அளவு கடந்த நம்பிக்கை இருந்தது நந்தினிக்கு.

நுதலெழில் இங்கு வந்து சேர்ந்த, இந்த இரண்டு வருடங்களில் வேலையில் அணு அளவு கூட குறை கூற முடியாது.
இவ்வளவு சிறப்பாக நந்தினி, டிராவல்ஸ் மட்டும் அல்லாது இங்கு செயல்படும் மீன் ஏற்றுமதி தொழிற்சாலையும் சிறப்பாக அவளால் கொண்டு செல்ல முடிகிறது என்றால் அது எழிலின் அயராத உழைப்பை கொண்டு தான்.

எழிலிடம் பேசி முடித்த நந்தினிக்கு இதை யார் செய்திருக்க கூடும் என்று யோசனை ஓடினாலும், யார் என்று அவளுக்கு பிடிபடவில்லை.

கதிரவனுக்கு தன் மகள் மேல் அளவுகடந்த கோபம் இருந்தாலும் தொழிலுக்குள் குடும்பத்தை கொண்டுவராமல், அவளுக்கு தேவையான அத்தனையையும் இரண்டே மணி நேரத்தில் சிறப்பாக செய்து கொடுத்திருந்தார்.

அவருக்கு மட்டும் இதற்கான காரணம் யார் என்றது ஓரளவுக்கு கணிக்க கூடியதாக தான் இருந்தது.

செல்வனும், கதிரவனும் முடிவு செய்து, கதிரவனின் மனைவிக்கு திடீரென்று மாரடைப்பு வந்தது போல் காரணம் காட்டி, அந்த திருமணத்தை நிறுத்தியது போல் செய்வதற்குள் அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்.

மேலும் கதிரவனுக்கு தன் காதல் மனைவி நிலவழகி மேல் அளவு கடந்த அன்பு.
தன் மனைவிக்கு அது நடிப்புக்காக என்றாலும் கூட மாரடைப்பு என்று சொல்லும்போது நேசம் கொண்ட நெஞ்சம் ஒரு நொடி துடித்தது ஆனாலும் வேறு வழியில்லாத காரணத்தால் அதை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தார்.


நடந்ததை அறிந்த நிலவலகி, வசந்தா இருவருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை.
நிலாவுக்கு தான் தன் மகளால் தான் இத்தனை துன்பம் என்பது, அப்படி ஒரு குற்ற உணர்ச்சியை கொடுக்க வசந்தாவின் மடியில் சாய்ந்து அடக்க முடியாமல் அழுது தீர்த்து விட்டாள்.
வசந்தாவிற்கு கஷ்டமாக இருந்தாலும் அவருக்கு திருமணமாகி வந்த போது பதினைந்து வயதே நிரம்பிய நிலா இன்னொரு மகள் போல தான். அதுவும் அமுதன் கிட்டத்தட்ட கலைச்செல்வன், வசந்தாவிற்கு திருமணமாகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்துதான் பிறந்தான். அதுவரை அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் நிலா மட்டும் தான்.

அமுதன் மீது உள்ள அன்பு சிறிதும் குறையாமல் நிலாவின் மீதும் வசந்தாவிற்கு உண்டு. ஆனால், பெற்றோர் அனைவரின் மனதையும் பிள்ளைகள் இருவரும் நோகடித்து இருந்தனர்.

எல்லாரையும் விட நந்தினியின் மேல் அதிகமான கோபம் இருந்தது கதிரவனுக்கு. அவர் ஒன்று அவளின் நல்லதுக்காக செய்ய அதைக் கூட உணராமல் தன் வரட்டுப் பிடிவாதமே சரி என்று முடிவு செய்தவள் மீது அத்தனை ஆத்திரம் வந்தது.

எழிலமுதனை விட சிறந்த திறமை, அழகு, பணம், குணம் என அனைத்தும் கொண்ட ஒருவனை தேர்ந்து எடுக்க முடியாது என்பது அவருக்கு நன்கு தெரியும்.

எதிலும் சிறந்ததையே மகளுக்கு தர நினைக்கும் ஒரு சிறப்பான தந்தையாக செயல் பட அவர் நினைக்க, அது அடக்கு முறையாக மட்டுமே நந்தினிக்கு தெரிந்தது தான் கொடுமை.


அந்தக் கோபமே நந்தினியிடம் மீண்டும் அவருக்கு தோற்ற அவளிடம் அதன் பிறகு ஒரு வார்த்தை கூட பேசவில்லை கதிர். அதேசமயம் அமுதன் மூலமாக தான் அவளுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று தெரிந்தும் கூட , உதவி செய்தாரே தவிர, அதை மீண்டும் ஏற்படாமல் தடுக்க எதுவுமே அவர் செய்ய முற்படவில்லை.

பிள்ளைகளின் நடவடிக்கை பிடிக்காத போதும் வேடிக்கை பார்க்க மட்டுமே அவரால். ஆனால் எல்லாம் தெரிந்த அடுத்த நொடி கலைச்செல்வன் தன் மகனுக்கு அழைத்து விட்டார்.

“என்னடா நினைச்சுட்டு இருக்க! வாழ்க்கை வேற, தொழில் வேற. இரண்டையும் போட்டு ஒரே இடத்தில குழப்பக் . அவ என்ன பண்ணி இருந்தாலும், நந்தினி உன்னோட மாமா பொண்ணு. துணையா நிக்க வேண்டியவன். தொல்லை கொடுக்கலாமா?” என்று முதலில் கோபமாக ஆரம்பித்தவர் பின் ஆற்றாமையுடன்கேட்டு விட்டார்.

“ஆமாம் உண்மைதான்! அவளுக்கு நான் தொல்லை கொடுத்திருக்கக் கூடாது, ஆனால் கல்யாணத்தில் விருப்பமே இல்லாத அவள எனக்கு கட்டி வைக்க நினைச்ச உங்களுக்குத்தான் தொல்லை கொடுத்து இருக்கணும்.

ஆனா, அவ விருப்பம் இல்லைனா நேர்ல வந்து என்கிட்ட சொல்லியிருந்தா, நான் எல்லாத்தையும் நிறுத்தி இருப்பேன். நந்தினிக்கு எல்லா விதத்திலயும் நான் துணை இருந்திருப்பேன். எனக்கும் அவளை கட்டிக்க எல்லாம் விருப்பம் கிடையாது.

யார்கிட்டயும் சொல்லாம கல்யாண மண்டபத்தை விட்டு கிளம்பி போயிட்டா... நல்லவேளை நான் அவ பேசினது கேட்டேன் இல்லை என்றால், எல்லார் முன்னாடியும் எனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் அது உங்களுக்கு தெரியுமா?” என்று பொறிந்து தள்ளியவன் அடுத்து பேச முன்பாகவே தொடர்பைத் துண்டித்தான்.

அவனுக்கு கோபம் தான் அவள் மீது மட்டுமல்ல பெரியவர்கள் மீது. ஏன் அவன் மீது கூடத்தான். எல்லாமே அவர்களுடைய பணம் தான். அவர்களுடைய தொழில் தான் அப்படி இருந்தும் தனது தொழிலையே தானே இறக்கி விட்டது போல் தான் தோன்றியது அவனுக்கு.

அவனுக்கு நன்றாக தெரியும் நந்தினியால் வீணான மீன்களை ஒரு சில மணி நேரத்தில் புதியவற்றை கொண்டு மாற்றி ஏற்றுமதியை தடை இல்லாமல் செய்துவிட முடியும் என்று இருந்தாலும் தனது கோபத்தை காட்ட என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை செய்திருந்தான்.

அவனது கர்வம், கோபம் அனைத்தும் அவனை சிந்திக்க விடாமல் செய்திருந்தது.இவை அனைத்தையும் செய்து முடித்தபின்பு யோசித்த போது அவனுக்கு தன் மீதே கோபம்.

இங்கோ மகன் சொல்வதில் உள்ள உண்மை கலைச்செல்வன் நன்கு புரிந்து தான் இருந்தது. இருந்தாலும் தான் தூக்கி வளர்த்த பெண்ணுக்கு ஒன்று என்றால் அத்தனை எளிதில் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவளையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை.
அவனையும் கண்டிக்க முடியவில்லை.
அடுத்தடுத்து நடப்பதற்கு யாரை குறை சொல்வது விதியை தவிர.
 




Last edited:

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
கதிர் & நிலா, கலை & வசந்தா - இவங்க தானே ஜோடி....

கதிர் பொண்ணு தான் நந்து , கலை பையன் அமுதன்.....

இப்ப என்ன டவுட் நா, வசந்தா கல்யாணம் ஆகி வந்தப்பா நிலாக்கு 15 வயசு தானா???? வசந்தா கதிர்க்கு தங்கை தானே, அவளோ சின்ன பென்னையா கதிர் கல்யாணம் பண்ணிநாங்க????? புரியல sis அந்த இடம், இல்ல பேரு ஏதும் மாத்தி வரும் ஆ?????

அத கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ரைட்டர் ஜீ....
 




Anamika 64

நாட்டாமை
Author
Joined
Nov 11, 2021
Messages
72
Reaction score
89
கதிர் & நிலா, கலை & வசந்தா - இவங்க தானே ஜோடி....

கதிர் பொண்ணு தான் நந்து , கலை பையன் அமுதன்.....

இப்ப என்ன டவுட் நா, வசந்தா கல்யாணம் ஆகி வந்தப்பா நிலாக்கு 15 வயசு தானா???? வசந்தா கதிர்க்கு தங்கை தானே, அவளோ சின்ன பென்னையா கதிர் கல்யாணம் பண்ணிநாங்க????? புரியல sis அந்த இடம், இல்ல பேரு ஏதும் மாத்தி வரும் ஆ?????

அத கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ரைட்டர் ஜீ....
Kathirukkum nilaavukkum 10 varuda idaivel daa... Ippo koda antha difference la marriage nadakkuthu... Unkalai antha idam kasta paduththi irunkaa sorry daa 😔
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top