பூர்வ - ஜென்மம். — episode 12 & 13

அன்று காலைதான் கோபியின் அக்கா ரித்திகாவை பற்றி பேசியிருந்தாள். அவளை விரும்புகிறாயா திருமணம் செய்துகொள்ள விருப்பமா, அப்படியிருந்தால் எங்களுக்கு எந்த தடையும் இல்லை. ரித்திகா நல்ல பெண். அவள் குடுபத்தினரும் நல்லவர்கள். நீ விரும்பினால் நாங்களே சென்று பேசுகிறோம் என்று அடுக்கி கொண்டே போனாள். கோபி தான் அவ்வாறு பழகவில்லை எனவும் இப்படி பேசுவது சரியில்லை எனவும் அவளுக்கு எடுத்துரைத்தான். அதற்கு அவனுடைய அக்கா ஒரு பெண்ணின் மனது பெண்ணுக்குத்தான் தெரியும் நீதான் புரிந்துகொள்ளவில்லை என்று அவனையே குற்றம் சாற்றினாள். இவன் பதிலுக்கு ரித்திகா இதை கேட்டால் மிகவும் வேதனைப்படுவாள் என்று மட்டும் கூறிவிட்டு கோபித்துக்கொண்டு வந்துவிட்டான். வரும் வழியெல்லாம் நீதான் புரிந்துகொள்ளவில்லை என்ற வார்த்தை மட்டும் திரும்ப திரும்ப ஒலித்து கொண்டிருந்தது. இப்போது கிளம்பும்போது தானும் வருவதாக கூறவும் அவனுக்கு சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது . ஏனென்றால் அவள் அப்படி கூறுபவள் அல்ல . எத்தனையோமுறை வீட்டிற்கு வந்திருக்கிறான். அவளும் அவன் வீட்டிற்கு வந்திருக்கிறாள். ஆனால் இப்படி சொல்லி கொண்டோ அல்லது அனுமதி கேட்டோ அறியாதவன். என்ன எப்படி சொல்லுவாளோ தான் எப்படி சமாளிப்பது, மறுப்பதா அல்லது ஏற்றுக்கொள்வதா, மறுத்தால் தாங்குவாளா, ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தனக்குள் கேள்வியாய் கேட்டுக்கொண்டிருந்தான்.

வீட்டிற்க்கு வந்ததும் அவனுடைய அக்கா தான் நினைத்தது சரிதான் எனவும் உனக்கு தான் புரியவில்லை என்றும் ஜாடை காட்டி கொண்டிருந்தாள். ரித்திகா கொஞ்ச நேரம் குழந்தையுடன் விளையாடிவிட்டு கோபியின் அப்பாவிடம் பேசிவிட்டு வந்தாள். அதற்குள் அவனுடைய அக்கா காபியும் அவளுக்கு பிடித்த ரவா கேசரியும் செய்து வைத்திருந்தாள். அனைவருக்கும் பரிமாறினாள். நேரம் செல்ல செல்ல கோபிக்கு காபிகூட தொண்டையில் இறங்க மறுத்தது. ரித்திகா சாப்பிட்டுவிட்டு கிளம்ப ஆட்டோ பிடிப்பதற்காக வெளியில் சென்றான். அதுதான் வழக்கமும் கூட.ஆனால் அவள் கோபியை அழைத்து போக சொன்னாள். கோபியின் அக்கா முடிவே செய்துவிட்டாள். அது முகத்திலும் தெரிந்தது . கோபியும் ஒரு முடிவுக்கு வந்திருந்தான் எதுவாக இருந்தாலும் அவள் கஷ்டப்படக்கூடாது அவ்வளவே . வீட்டுக்கு போகும் வழியில் உள்ள ஒரு கோவிலில் வண்டியை நிறுத்தச்சொன்னாள்.


கோபிக்கு என்னவோ ரித்திகாவின் செய்கைகள் வித்தியாசமாகப்பட்டது. அவன் எதற்கும் துணிந்து விட்டான் சரியென்று அவளுடன் கோவில் உள்ளே சென்றான். ஸ்வாமியை பார்த்துவிட்டு வந்து வெளிப்புற பிரகாரத்தில் அமர்ந்தனர்.


பிறகு ஆரம்பித்தாள். நான் சொல்லப்போவதை எப்படி எடுத்துக்கொள்வாய் என்று தெரியவில்லை ஆனால் சொல்வதை பொறுமையாக கேட்கவேண்டும் என்று உறுதி வாங்கி கொண்டாள். வீட்டிலும் தான் இதுவரை எதுவும் கூறவில்லை அந்த பொறுப்பையும் உன்னிடமே ஒப்படைக்க விரும்புகிறேன் என்று வேறு சொன்னாள். அவன் இதயம் துடிப்பது அவனுக்கே கேட்டது.

அதற்கப்புறம் கல்லூரியில் ஆரம்பித்து திறப்பு விழா, கட்சி அலுவலகம், ஆசிரம அலைச்சல், கட்சி பொறுப்பேற்பு கூட்டம் அதன்பிறகு நடந்த தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் கூறினாள். இது அவன் எதிர்பார்த்ததைவிட பெரிய விஷயமாக பட்டது . இதயத்துடிப்பு இன்னும் அதிகமானது போல் தோன்றியது. பேச வார்த்தையே வரவில்லை. ஒரே ஒரு கேள்வி கேட்டான். இது சரியாக வரும் என்று நினைக்கிறாயா. உன்னை அவன் அல்ல அவரால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறாயா. அதற்கு அவள் தெரியவில்லை ஆனால் அவர் இருக்கும் இடத்தில நான் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறேன் என்றாள். உடனே அவன் புது அலுவலகத்துக்கு சென்றவுடன் நன்றாக பேச கற்று கொண்டாய் என்றான் . சிரித்து கொண்டே இருவரும் எழுந்தனர். ரித்திக்காவிற்கு மனபாரம் குறைந்தது போல் இருந்தது. அவனும் ஜெய்ப்பூர் போய் வந்து ஆகவேண்டியதை பார்க்கிறேன் என்றான்.

Thodarum... 12

அவளை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவன் அவனுடைய அறைக்கு சென்று படுத்துவிட்டான். ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டான். அதற்குமேல் அவனிடமிருந்து ஒரு விஷயமும் வராது என்பதால் இரவு உணவிற்கு தயார் செய்ய கிளம்பினாள். சிறிது நேரம் கழித்து அவனே எழுந்து வந்து சமையல் அறை மேடைமீது அமர்ந்தான். அவள் குழந்தையை வைத்துக்கொண்டு போராடிக்கொண்டிருந்தாள். இவன் வந்தமர்ந்து குழந்தையை வாங்கிக்கொண்டான். பிறகு அவனே ஆரம்பித்தான். அவள் விரும்புபவனை பற்றியும் அவன் யார் என்பது பற்றியும் கூறினான். கேட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து அவனுக்கு பெண் பார்க்கப்போவதாகவும் ஏற்கனவே இரண்டு மூன்று சொல்லி வைத்துள்ளதாகவும் கூறினாள். அவன் அதிர்ச்சியுற்று காலைதானே சொன்னாய் ரித்திக்காத்தான் எனக்கு பொருத்தமான பெண் என்று உடனே உங்களால் பேச்சை மாற்ற முடிகிறது என்றான் கோபத்துடன். உடனே அவள் என்ன செய்வது அவள் தான் உன்னை விரும்பவில்லையே என்று கூறி விட்டு இரண்டு சப்பாத்தியும் குருமாவும் வைத்து கொடுத்தாள். அவனும் ஆம் அவள்தான் என்னை விரும்பவில்லையே என்று சாப்பிட்டுவிட்டு நாளை ஊருக்கு கிளம்பவேண்டிய வேலையை பார்க்க ஆரம்பித்தான்.


மறுநாள் மதிய இடைவேளைக்கு பிறகு ரித்திக்காவின் வீட்டிற்கு நேத்ரனை அழைத்து செல்ல வந்தான். ஒரு வர கால பிரயாணம் என்பதால் 3 பெட்டிகளை அடுக்கிவிட்டான். செருப்பு முதல் தலையில் போடும் cap வரை மூன்று ஜோடிகள். பார்த்தவுடன் கோபியே பயந்து விட்டான். பிறகு ஆராய்ச்சிக்காக சுற்றுலா செல்லும்போது இவ்வளவு பொருட்களை எடுத்துச்செல்ல கூடாது என்று சொல்லி இவனே தேவையானவற்றை எடுத்துவைத்தான். ஒரே பெட்டியில் அடங்கிவிட்டது. ரித்திகா வீட்டில் இல்லை. ஒரு வகையில் நிம்மதியாகவும் அதே நேரத்தில் வருத்தமாகவும் இருந்தது. இருவரும் புறப்பட்டனர். அங்கிருந்து அலுவலகத்திற்கு சென்று கேமரா மற்றும் இதர பல பொருட்களையும் எடுத்துக்கொண்டு வரவும் வண்டி ரெடி என்று அழைப்பு வந்தது. கீழே இறங்கிவந்தனர். வண்டி ஜீப் போன்ற மாடல் கொண்டது. தொலைதூர பிரயாணத்திற்கு ஒழுங்கற்ற சாலைகளிலும் பிரச்னையின்றி செல்லவும் ஏற்றது. இருவரும் ஏறி அமர்ந்து வண்டியை கிளம்பினர். கோபியே வண்டியை ஓட்டினான். நேத்ரனுக்கு இந்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது. அதிலும் கோபியுடன் செல்வது மிகவும் பிடித்திருந்தது. கோபி விதித்த ஒரே ஒரு கண்டிஷன் தூங்க கூடாது என்பதே.


சிலுசிலுவென காற்று, நகரத்தின் எந்த இரைச்சலும் இல்லாத சாலை, ஒரே சீராக செல்லும் வண்டியின் வேகம், இரவு நேரத்திற்கே பொருத்தமான பாடல்கள், மனதிற்கும் உடம்பிற்கும் உற்சாகத்தை கொடுத்தது. இருவரும் நாளை என்று ஒன்று இல்லை என்ற அளவிற்கு மகிழ்ச்சியாக பயணித்தனர். கோபிக்குமே நேத்ரனுடன் வந்தது மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. ரித்திகா வந்திருந்தால் இன்னும் சந்தோஷமாயிருக்கும் என்று நேத்ரன் கோபியின் மனதை பிரதிபலித்தான்.


தனஞ்செயனின் தங்கைக்கு திருமணம் நிச்சயம் செய்ய முன்வந்தனர். திருமணத்தை தேர்வு முடிந்த பிறகு நடத்திக்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தனர். அதன்படி அடுத்த ஞாயிறன்று வீட்டிலேயே நிச்சயத்தை வைத்துக்கொள்ளலாம் என்று இருதரப்பும் முடிவெடுத்தது. இன்னும் 6 நாட்கள் இருந்த நிலையில் நிச்சயதார்த்த வேலைகள் தலைக்குமேல் இருந்தது. ரித்திகாவை அழைத்து சொன்னான். வீட்டிற்கு அழைக்கலாமா என்று யோசித்தான். ஒன்று சென்னையில் இருந்து வரவேண்டும் மற்றோன்று இதுவரை யாரிடமும் இதைப்பற்றி கூறவில்லை. வந்தால் யாருக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்று அந்த எண்ணத்தை கைவிட்டான். ரித்திகாவிற்கும் வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கு தன்னை அழைக்கவில்லையே என்று இருந்தது. கோபி கேட்ட கேள்வி - பொது வாழ்க்கை பயணம் - இது சரி வருமா.
 

Advertisements

Advertisements

Top