• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூர்வ - ஜென்மம். — Episode 8 & 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

rekhamuralinathan

புதிய முகம்
Joined
Jan 30, 2020
Messages
14
Reaction score
20
Location
Chennai
அந்த box இல் ஒரு மெமரி கார்டும் ஒரு டைரியும் இருந்தன. மெமரி கார்டை கைபேசியில் போட்டு பார்த்தனர். ஒரு சில விடீயோக்களிலும், போட்டோக்களும் இருந்தன.அந்த டைரியில் பாண்டிச்சேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வழியில் ஒரு பார்ம் ஹவுஸ் இருப்பதாகவும் அதில் சில விதமான மூலிகைகள் ஏற்றுமதிக்காக வைக்கபற்றிப்பதாகவும், அவையெல்லாம் அரசால் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டவை என்பதும் தெரியவந்தது.



ரித்திக்காவின் தோழி சித்தமருத்துவம் பயின்றவள். மேலும் மூலிகைகளை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவள். திட்டம் போட்டு தன்னை ஏமாற்றியதாக கூறியிருந்தாள். அந்த கூட்டணியில் உள்ள நபர்களை பற்றியும் அவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் வைத்திருந்தாள். அதில் அந்த அரசியல் பிரமுகரின் வீட்டில் பார்த்த மனிதனும் இருந்தான். அனைத்து விவரங்களையும் chief க்கு தெரியப்படுத்தினர்.



உடனடியாக அவர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு அந்த பார்ம் ஹௌசை அதிரடி சோதனை செய்ய கேட்டுக்கொண்டார்.



நகருக்கு ஒதுக்கு புறமாக இருந்த அந்த பார்ம் ஹௌசை முற்றுகை இட்டனர்.உள்ளே ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த box களை உடைத்து பரிசோதனை செய்தனர். அழகாக அடுக்கி வைக்கப்பட்ட ஜெர்கின் உடைகளில் மறைத்து வைத்து தைத்திருந்தனர். அனைத்தையும் பறிமுதல் செய்து அங்கு இருந்தவர்களையும் கைது செய்தனர்.



ரித்திக்காவின் தோழி விட்டு சென்ற ஆதாரங்களை கொண்டு அவளுடைய கணவன் மற்றும் அவனின் கூட்டாளிகளை கைது செய்தனர். அதில் அந்த மனிதனும் ஒருவன்.



தாரா detective agency , கேசில் வெற்றிபெற்றதற்காக அனைவருக்கும் வாழ்த்து கூறினார் chief . மற்றவர்களும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் .



இந்த கைதின் பின்னால் இருந்து வேலை செய்தது இவர்களின் நிறுவனம் என்று வெளியில் செய்தி பரவ ஆரம்பித்தது. அனைத்து மீடியாக்களிலும் தங்கள் நிறுவனத்தின் பெயர் வர ஆரம்பித்தது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு புறம் அரசியல் பழிவாங்கலுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. ஆனால் இதற்கெல்லாம் பயப்பட ஆரம்பித்தால் டிடெக்ட்டிவ் ஏஜென்சியும் நடத்த முடியாது ஜௌர்னலிசமும் படிக்க முடியாது என்று தங்களையே தைரியப்படுத்தி கொண்டனர்.



மீடியாவிலிருந்து நேர்காணலுக்காக அழைத்திருந்தனர். Chief மற்றும் அங்கு பணிபுரியும் 5 பேரும் சென்றனர். நேர்காணலின் போது இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி இந்த கேசில் பெரும்பங்கு வகித்தது இவர்கள் தான் என கௌரப்படுத்தினார்.



அதன் பிறகு பல டிவி சேனல் கலிருந்தும் செய்தித்தாள் நிறுவனத்திருந்தும் இவர்கள் இருவருக்கும் அழைப்புகள் வந்தன.



Chief அவர்களுக்கு உகந்த செய்தித்தாள் துறையை பரிந்துரைத்தார் . அவர்களும் அவ்வாறே ஏற்று கொள்ள முடிவு செய்தனர். இரண்டு பேர் வீட்டிலும் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.



தனஞ்செயனுக்கும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இதனால் எதுவும் பிரச்சனை வர கூடாதே என்று யோசித்தான். நேரில் தன் மகிழ்ச்சியை தெரிவிக்க எண்ணினான். முதன்முதலில் தனக்கு விருப்பமானவளிடம் பேச இதைவிட சந்தோஷமான சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால் இதை தவற விட மனதில்லை.



ஆனால் அவனால் பார்க்கிலோ பீச்சிலோ சந்தித்து பேச முடியாது. பொது வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் சில சில விஷயங்களை தியாகம் செய்யத்தான் வேண்டும். யோசித்து யோசித்து கைபேசியை எடுத்தான். அவள் வேலை செய்யும் செய்தித்தாள் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு ரித்திக்காவின் கைபேசி எண்ணை வாங்கினான். அவளை நேருக்கு நேர் பார்த்து பேச வேண்டும் என்ற மனதின் ஆசையை மறுக்க முடியவில்லை. எங்கேயாவது நட்சித்திர ஹோட்டலுக்கு வர சொல்லி பேசலாமா என்று யோசித்தான். பிறகு இதுவரை ஒரு வார்த்தை பேச வில்லை எப்படி அவளை வரச்சொல்ல முடியும் என்று அந்த எண்ணத்தை கைவிட்டான்.



மறுநாள் கட்சியில் அவனுக்கு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்போவதாக அனைவரும் முடிவெடுத்தனர். அந்த பதவி தற்போது கேசில் அகப்பட்டு சிறைக்கு சென்ற மனிதனின் தந்தை வகித்தது. அவர் அந்த அரசியல் பிரமுகரின் பினாமி ஆவார்.



இந்த பிரச்னையால் பினாமியின் பதவி பறிபோனது. கட்சியில்

இருப்பவர்கள் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்த தனன்ஜெயனை அதிகாரபூர்வமாக அறிவிக்க எண்ணினர். அதன்படி அந்த வார இறுதியில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டி கொடுக்க முடிவெடுத்தனர். தனஞ்செயனுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஒன்று முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது மற்றொன்று பத்ரிக்கைக்காரர்களை சந்திப்பது. அவளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் அல்லவா.



அந்த நாளும் வந்தது. வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருந்தான்.



Thodarum ...8



அவளும் வந்தாள் . புடவை அணிந்து வந்திருந்தாள் . Grey நிறத்தில் எலுமிச்சை வண்ண பூக்களை கொண்ட புடவை . சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட அதே வண்ண கலவையில் இருந்த அணிகலன்கள் . மிக பொருத்தமாக இருந்தது. இதுதான் முதல் முறை அவளை அவன் புடவையில் பார்ப்பது. அவனால் அவள் மேலிருந்த பார்வையை விலக்க முடியவில்லை. இவள் இவ்வளவு அழகா என பெருமிதம் கொண்டான். அதற்குள் அவள் உள்ளே வந்து ஒரு இடமும் பார்த்து அமர்ந்தும் விட்டாள். இவன் கனவுலகில் இருந்து வெளியே வரவில்லை. கட்சி தொண்டர் ஒருவர் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்து அருகே வந்து தட்டி எழுப்பிவிட்டார். அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவளும் அவனை தான் தேடி கொண்டிருந்தாள். ஆனால் வெளிப்படையாக அல்ல . அவளும் பெண் தானே அச்சம், மடம் , நாணம் , பயிற்பு இருக்கத்தானே செய்யும் . அனைவரும் ஒரே நிற ஆடையில் வேறு இருக்கிறார்களா

கண்டுபிடிப்பது கடினம் . மேடை பக்கம் எப்படியும் வந்துதானே ஆகவேண்டும் என்று மேடையை பார்த்தவாறு அமர்ந்து இருந்தாள். பேட்டியும் ஆரம்பித்தது. அவளும் அவனை நோக்கினாள். அவனுக்கோ அவளிடமிருந்து பார்வையை விலக்கி மற்ற அனைவரையும் பார்க்க அரும்பாடுபட்டான். அப்படி செய்தாக வேண்டிய கட்டாயம். பொது வாழ்வில் இருக்கும் போது நம்முடைய பலவீனங்கள் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில் எங்கே ஆரம்பித்தோமோ அதே இடத்திற்கு அனுப்பி விடுவார்கள். இருவருக்கும் இன்று எப்படியாவது பேசிவிடவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பேட்டி முடிந்தது. அனைவரும் மதிய உணவுக்காக பக்கத்தில் இருந்த அறைக்கு விரைந்தனர். இல்லையெனில் வரிசையில் நிற்க வேண்டி வருமே . அவள் கூட்டம் கொஞ்சம் விலகட்டும் என்று நின்று இருந்தாள் கூடவே அவனையும் காண கண்ணும் அலைபாய்ந்தது.



இந்த சமயத்தை தனஞ்செயன் பயன்படுத்தி கொண்டான். இரண்டு தட்டுகளில் உணவை கொண்டு வர வேலையாளுக்கு பணித்தான். அப்படியே வந்தது. எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தான். முதன் முதலில் தன் மனம் கவர்ந்தவளிடம் பேசப்போகும் வார்த்தை, வாழ்த்துக்கள் ரித்திகா என்றான். குரல் கேட்டு ரித்திகா திரும்பினாள். கண்கள் சந்தித்து கொண்டன. சில வினாடிகள் பிறகு நிகழ் காலத்திற்கு வந்தனர். அவளும் வாழ்த்துக்கள் என்றாள்.



அதற்கு மேல் என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை.ஒரு தட்டை அவளிடம் கொடுத்தான். இருவரும் உண்ண ஆரம்பித்தனர். ஆசிரமத்தை தேடி அலைந்த கதையை சொன்னான். அவள் கேள்வியாக பார்த்தாள். அது நீங்கள் ஏன் அலைய வேண்டும் என்றது. எனக்கு அந்த உரிமையும் கடமையும் இருப்பதாக நினைக்கிறேன் இல்லையென்று நீ மறுத்தால். பேச்சை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான். உடனே அவள் நான் அப்படி சொல்லவில்லை என்னிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாமே என்றுதான். அப்போது தான் அவனுக்கு மூச்சே வந்தது.



ஒருவழியாக இருவரும் தங்கள் மனதிலிருப்பதை வெளிப்படுத்திவிட்டனர் அவர்களை அறியாமலேயே. உணர்ந்த பிறகு சிறிது மௌனம். தனஞ்செயன் புரிந்துகொண்டு பேச்சை வேறு திசைக்கு மாற்றினான். அவள் ஆராய்ந்த கேஸை பற்றி கேட்க ஆரம்பித்தான். பிறகு பேச்சு சாதாரண நிலைக்கு வந்தது. உண்டு முடித்தனர். விடை பெரும் நேரம். கட்சி தொண்டர்களும் இவனிடம் சொல்லி விடைபெற வர ஆரம்பித்தனர். வலுக்கட்டாயமாக இருவரும் விடைபெற வேண்டியிருந்தது. அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். இங்கே இருவருக்கும் ஒரு வித்தியாசம். அவனுக்கு அவள் தன்னுடைய பலமா பலவீனமா என்ற குழப்பம். அவளுக்கு அவன் தான் தன்னுடைய பலம் என்பது புரிந்தது.



Thodarum ...9
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top