பூர்வ - ஜென்மம் - episode 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

rekhamuralinathan

New member
Joined
Jan 30, 2020
Messages
14
Reaction score
20
Points
3
Location
Chennai
சிறைக்கு சென்ற பினாமியின் மகன் ஜாமினில் வெளியே வந்திருந்தான். அவனுடைய நண்பனை ஜாமினில் எடுக்கவில்லை. அதற்கு காரணம் இருந்தது. ரித்திகாவின் தோழியின் கணவனே இவன் நண்பன் . தன் நண்பன் அஜாக்கிரதையாக இருந்ததால் தான், தானும் கம்பி என்ன வேண்டியதாய் போயிற்று என்ற ஆத்திரம். அதுவும் இல்லாமல் ஒரு பெண் தன்னை காட்டிக்கொடுத்து பேர் வாங்கிவிட்டாள். சிறையில் இருந்து வந்ததிலிருந்து இவற்றை நினைத்து நினைத்து எப்போதும் குடி போதையில் இருந்தான். நண்பனை முதல் குற்றவாளியாக்கி, தன்னுடைய பார்ம் ஹவுசில் நடந்தவைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை மேலும் நண்பனை நம்பித்தான் வீட்டை ஒப்படைத்ததாக கேஸ் கொண்டுசெல்லப்பட்டது.

தந்தை சொல்லியிருந்த விஷயங்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். முதலில் கட்சி அலுவலகத்தில் இருந்து படிப்படியாக விசாரித்து கொண்டு வந்தான். விசாரணையில் தன்னுடைய கைதுக்கு பிறகு இவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்ததாக தெரிந்தது.

அவனுக்கு தான் சிறைக்கு சென்றதைவிட தந்தைக்கு கட்சி பதவி போனது பெரும் குறையாக பட்டது. காரணம் பணம் சம்பாதிப்பது கடினம், ஊர் சுற்றுவது கடினம், எதாவது பிரச்சனையில் அகப்பட்டுக்கொண்டால் யாரையும் மிரட்டி பணிய வைக்க முடியாது. வக்கீலும் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லியிருந்தார். எதாவது பிரச்சனை ஏற்பட்டால் ஜாமீன் பறிபோகும் அபாயம் உள்ளது என்று. அதனால் அடக்கி வாசித்தான்.

ரித்திகாவிற்கு இவன் வெளியே வந்து தப்பிக்க கேஸை இவனுக்கு சாதகமாக கொண்டு செல்வது கோபத்தை உண்டாக்கிற்று. தன் தோழியின் மரணத்திற்கு காரணமானவன் ஆயிற்றே. இவன் வெளியே எதனை பேர் வாழ்வில் இடியை இறக்குவான் என்று சொல்லமுடியாது. உடனே chief இடம் பேசினாள். அவரோ அவளை நேரிடையாக தலையிடவேண்டாம் என்றும் தான் department மூலமாக action எடுப்பதாக கூறவும் பொறுமை காத்தாள். தனஞ்செயன் அவன் பங்குக்கு எச்சரித்தான். கோபியும் எச்சரிக்கையாக இருக்கச்சொல்லி அறிவுறுத்திவிட்டு நாளை வந்துவிடுவதாக கூறினான்.

நிச்சயதார்த்தமும் முடிந்தது. இன்னும் மூன்று நான்கு நாட்களில் ஊரில் உள்ள அனைத்து வேலைகளும் ஓரளவு முடிந்து விடும். அதற்கு பிறகு Chennai சென்று வரலாம் என்று எண்ணினான். தேதி முடிவு செய்துவிட்டு ரித்திக்காவிற்கு சொல்லலாம் என்று நினைத்தான்.

கோபியும் நேத்ரனும் வந்திறங்கினர். நேத்ரனுக்கு பேசி பேசி மாளவில்லை. இடங்களை பற்றியும் அங்கு வாழும் மக்களை பற்றியும், கலாச்சாரம், நாகரீகம் அனைத்தையும் பற்றி பேசினான்.கோபியை பற்றியும் சொல்ல தவறவில்லை. புகழ்ந்து தள்ளிவிட்டான். உடனே ரித்திகா அவனை பற்றி உனக்கு தெரிந்ததை விட எனக்கு பல மடங்கு தெரியும் என்று அவளும் பங்கெடுத்துக்கொண்டாள். கிட்ட தட்ட 10 வருட பழக்கம். கோபி நினைத்துக்கொண்டான் இவ்வளவு என்னை பற்றி தெரிந்தும் நீ என்னை விரும்பவில்லை என்கிறார்களே. பிறகு தன்னையே திட்டி கொண்டான். அவளிடம் இருந்து அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை. மனைவியாக நிச்சயம் நினைத்து பார்க்க முடியவில்லை தான், இருந்தாலும் இந்த உணர்வை பிரித்தறிய முடியவில்லை.


தன்னைவிட நன்றாக ரித்திகாவை யாராலும் பார்த்துக்கொள்ளமுடியாது என்று தோன்றிற்று. முக்கியமாக ஏனோ தனஞ்செயனை பிடிக்கவில்லை. அதே நேரத்தில் அவளுடைய சந்தோஷத்திற்கு குறுக்கே நிற்கவும் மனமில்லை. இதில் தான்தான் அவளின் பெற்றோரிடம் பேசவேண்டும் என்ற வேண்டுகோள் வேறு.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top