• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூவிதழ் தீண்(தே)டும் வண்டாய் - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் டியர்ஸ்,

பூவிதழ் தீண்(தே)டும் வண்டாய் - 14 பதிவுடன் உங்களை சந்திக்க வந்திருக்கும் நான் உங்கள் அனாமிகா 12. உங்களோட தேன்மொழி எப்படி இருக்கிறாள். ஒவ்வொரு பதிவிலும் டிவிஸ்ட் வைக்கிறேன் என்ற கோபத்தில் கமெண்ட் போடாமல் இருக்காதீர்கள் தோழமைகளே. உங்களோட கருத்துகள் தான் என்னை உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் எழுத வைக்கும்.

அத்தியாயம் – 14

இருள் சூழ்ந்திருந்த வானில் மெல்ல வெளிச்சம் பரவியது. கீழ்வானம் செந்நிற கோலம் பூண்டது. அந்த விடியலைக் கண்டு குயில் இதமாக, “கூ.. கூ..” என்று கூவிடும் ஓசை அலைபாய்ந்திரும் மனதினை அமைதிப்படுத்திவிடும். பனியில் நனைந்த மலர்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தது.

அந்த காட்சியை இயல்பாக ரசிக்கும் மனநிலையின்றி கற்சிலைபோல, ஜன்னலின் கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் தேன்மொழி. அவளின் முகத்தில் சோர்வு அதிகமாக இருந்தபோதும், ஏதோவொரு பளபளப்பு அவளைத் தேவதையாக காட்டியது.

அன்றைய நாளுக்குப் பிறகு அவளுடைய தாக்குதல்களுக்கு பயந்தே, கலைச்செல்வன் அவளைவிட்டு விலகி நிற்க தொடங்கினான். அந்த நாள் அவளின் மனக்கண்ணில் படமாக விரிந்தது.

அன்று ஏனோ வெகு உற்சாகத்துடன், “தேன்மொழி” என்று அழைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.

“இப்போ எதுக்காக என் பெயரை ஏலம் விடுற” என்று அவள் எரிந்து விழுக, அவள் குரல் வந்த திசையை நோக்கி சென்றான்.

அவள் சமையலறையில் தோசை வார்த்து கொண்டிருப்பதைப் பார்த்து, “உனக்கு என்மீது எள்ளளவு அக்கறையில்லை என்று தெரிந்தபிறகும், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி போடும் கொழுப்பு! புருஷன் என்று மரியாதையும் தருவது இல்ல, அவனும் நம்மள மாதிரி ஒரு சாதாரண மனிதன்தானே என்று இரக்கத்தின் அடிப்படையில் சாப்பாடு செய்து வைப்பதில்லை” என்று அவளிடம் சண்டைக்கு வந்தான்.

வீட்டுக்குள் இருந்தால் இப்படி ஏதாவது எக்குதப்பாக யோசிக்க தோன்றும் என நினைத்து, அவளை வேலைக்கு போகும்படி கூறினான். அவளுக்கும் அது சரியென்று தோன்றவே அடுத்தடுத்து வந்த நாளில் பழைய நிறுவனத்திலேயே சென்று வேலைக்கு சேர்ந்துவிட்டாள்.

அன்றிலிருந்து அவளுக்கு தேவையான அனைத்தையும் அவளே செய்து கொண்டாள். தனக்கு கணவன் என ஒருவன் இருப்பதை முற்றிலுமாக மறந்து, பழையபடி நடமாட தொடங்கியவளை இப்படி அவன் சில சமயங்களில் வார்த்தைகளால் தாக்குவதும் உண்டு.

“வீட்டில் எலி தொல்லைத் தாங்க முடியாமல் விஷம் வாங்கி வச்சேன். அது சரியாக வேலை செய்யுதா என்று உன்னை வைத்துதான் செக் பண்ணனும்” என்று சொன்னவள் சட்டுகத்தை எடுத்து அடுப்பில் வைத்தாள்.

“ஓ உனக்கு அவ்வளவு திமிர் ஆகிடுச்சா? இங்கே பாரு நானே ஆகாது என்னும்போது நான் வாங்கிப்போடும் மளிகை சாமான்களைப் எதுக்காக யூஸ் பண்றே” என்று அவன் நக்கலாக கேட்க,

“நீ வாங்கித் தந்த அத்தனையும் அதோ அந்த மூலையில் சாக்கில் போட்டு கட்டி வச்சிருக்கேன். அதை எல்லாம் தூக்கிட்டு அப்படியே ஓடிப் போயிரு” என்றவள் தன்னுடைய வேலையைத் தொடர, தான் சொன்ன வந்த விஷயத்தை மறந்து அவளருகே சென்றான்.

“உன்னிடம் இந்த கோபம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொன்னவன் அவளின் பின்னோடு சென்று இரு கரங்களால் அவளின் இடையை வளைத்தவன், அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

அவன் சுவாசம் சூடாக அவள் கழுத்தில் மோதிட, அடுப்பில் வைத்த சட்டுகத்தை கையில் எடுத்தாள். அவளின் இடையில் ஊர்ந்த கரங்களில் ஒன்றைப் பிடித்து விரித்தவள் கொதிக்கும் கரண்டியை அவனது உள்ளங்கையில் வைத்து அழுத்தினாள்.

அந்த கரண்டியின் விளிம்பு நன்றாய் சூடேறி சிவந்திருந்ததால், “அம்மா” என்று அலறியவனின் அணைப்பு இறுகியது. அவள் கொடுத்த அழுத்தத்தில் வலி தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் கசிந்தது.

அப்போது கூட இறுகிப்போய் நின்றிருந்தவளைக் கண்டு, “இன்னைக்கு நீ என்னை வதைக்கும்போது, ஒரு குழந்தை தன்னை அறியாமல் தவறு செய்வதை நினைத்து தாங்கிக்கிறேன். என்னைக்காவது ஒருநாள் என் அன்பை நீ உணரும்போது உன் நெஞ்சில் விழும் அடிகளைத் தாங்கும் மனவலியை உனக்கு ஆண்டவன் தரணும்” என்று நினைத்தவன் அவளைவிட்டு விலகினான்.

சட்டென்று அவன் பக்கம் திரும்பி, “இவ்வளவு அடித்தும் உனக்கெல்லாம் சூடு, சுரணை என்பதே வர மாட்டேங்குது. இது நீயாக தேடிகிட்ட வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். இதுதான் தேன்மொழி. என் பெயரில் மட்டும்தான் தேன் இருக்கே தவிர, நெஞ்சமெல்லாம் வஞ்சம் மட்டும்தான் இருக்கு” என்று எந்தவிதமான சலனமும் இன்றி இறுகிய குரலில் கூறினாள்.

அவள் முகத்தில் எந்தவிதமான உணர்வுகளும் இன்றி இருப்பதைக் கண்டு, “தனக்கு தானே சவக்குழி வெட்டி அதில் விழுந்தவனை பார்த்து இருக்கிறாயா?” என்று கேட்டதற்கு, “நீதான் கண்முன்னாடியே இருக்கியே” என்றவள் எள்ளலாய் நகைக்க, அவன் கண்களில் வலிமட்டுமே மிஞ்சிருந்தது.

அவன் வலது உள்ளங்கையைப் பார்க்கும்போது அது தோள் உரிந்து கொப்புளித்து சிவந்து இருந்தது. அவளோ மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு நின்றிருக்க, மெல்ல அவளருகே சென்றான்.

கலைச்செல்வன் விழிகளில் தன் பார்வையைக் கலந்து, “ஒரு மலரில் தேனைத் திருடிய கையோடு, அடுத்த மலர்களைத் தீண்ட செல்லும் வண்டினத்தை மலரினம் தண்டிக்காது. ஆனால் உன்னைமாதிரி குணம் உடைய ஆண்களைத் தண்டிப்பது தவறு இல்லை என்று நினைப்பது இந்த தேன்மொழியின் கொள்கை” என்று கூறியவள் தன் வேலையைக் கவனிக்க திரும்பினாள்.

அதற்குள் அவளைத் திருப்பி நிறுத்தி, “எந்தவொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வாங்க. ஆனால் உன்னோட ஒவ்வொரு வெற்றியும், இந்த கலைசெல்வனின் தோல்வி தான் படிகட்டுகளாக இருக்கிறது!” என்றவன் மிக மென்மையாக அவள் மலர் முகத்தைக் கையில் ஏந்தினான்.

“உன்னை பழைய தேனுவாக பார்க்க வாய்ப்பே இல்லையா?” என்ற கேள்விக்கு உதட்டைப் பிதுக்கி, “நான் எப்பவும் போலதான் இருக்கேன். நீதான் ரொம்ப மாறிட்டே! என்னோட அழகை ஆண்டு அழிக்கவே கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கிற நீ” என்று இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“கொக்குக்கு ஒரே மதி என்று சொல்லுவதுபோல, உன்னோடு வாழவே கூடாது என்ற முடிவில் இருக்கேன். இதோ இன்றைய நிலை அப்படியே நீடித்தால் கண்டிப்பா, நீ தோண்டிய சவக்குழிக்குள் உயிரற்ற உடலால் உன்னைப் படுக்க வைக்கவும் தயங்கமாட்டேன்” என்று கர்வமாகக் கூறிய தேன்மொழியின் விழிதனில் அவனை கொல்லும் வெறி தெரிந்தது.

“அவ தன்னையும் அறியாமல் வெளிப்படுத்தும் கோபம், அவளை சீக்கிரமே குணமாக்கும். தேன்மொழிக்கு இருக்கும் மன அழுத்தத்தை அவள் எப்படி வெளிப்படுத்துகிறாளோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகிக்கோ” என்ற கௌதம் குரல் காதில் கேட்க, அதற்குமேல் எதுவும் பேசாமல் அவளைவிட்டு விலகினான்.

அவன் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிரும்போது வீட்டிற்குள் நுழைந்த தமிழரசன் – இந்துமதியைப் பார்த்து அவனது முகம் மலர்ந்தது.

“என்னன்னே அண்ணி கூட ரொமான்ஸா?” என்று சின்னவன் நடந்தது அறியாமல் குறும்பாய் கண்சிமிட்ட, அதைக் கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி பக்கென்று சிரித்தாள்.

“உங்க அண்ணனுக்கு மத்த பெண்களிடம் தான் தமிழ் ரொமான்ஸ் வரும், என்னிடம் எல்லாம் அவரோட பாட்சா பலிக்காது!” என்று அவள் நக்கலாக கூறிவிட்டு அவள் மீண்டும் சிரிக்க, “உண்மைதான்” என்றவன் விழிகளில் நீர் கசிய, உதடுகளோ புன்னகைத்தது.

கலைச்செல்வன் கண்ணில் கண்ணீரைக் கண்ட தமிழ், “அண்ணா ஏதாவது பிரச்சனையா?” அவன் பதறியபடி விசாரிக்க, மறுப்பாக தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அப்போதுதான் இருவரும் இணைந்து வந்திருப்பதைக் கவனித்த இந்துமதி, “அக்கா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று தொடங்கியவளை கேள்வியாக நோக்கினாள் தேன்மொழி.
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“உங்க தங்கச்சி மலர்விழி யாரோ ஒரு பையனோடு ஓடிப்போய் விட்டாள். இந்த விஷயம் தெரிந்ததில் இருந்து உங்க சித்தி தலை தலையாக அடிச்சிட்டு அழுகிறது அக்கா. அவங்களைப் பார்க்கவே ரொம்ப பாவமாக இருக்கு” என்று நடந்ததை கூறினாள்’

“ஆமா அக்கா என்னதான் கோபம் இருந்தாலும் இந்த சமயத்தில் நீங்க இருந்து ஆறுதல் சொல்வது போல வருமா?” என்று தமிழும் கூற,

“எனக்கு இப்படியொரு கேடுகெட்டவனைக் கட்டி வைத்த அவர்களுக்கு ஆண்டவன் சரியான தண்டனை தான் கொடுத்து இருக்கான். எனக்கு தெரிஞ்சே துரோகம் செஞ்சாங்க அந்த பாவம்தான் அவங்களைப் பழிவாங்குது” என்று சொல்லிவிட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்.

அவளை விநோதமாக பார்த்துவிட்டு, மற்ற மூவரும் அவர்களது வேலையைக் கவனிக்கச் சென்றனர். இப்படி ஒவ்வொரு நாளும் போர்க்களத்தில் நகர்வது சென்றது. எங்கிருந்த கேட்ட கிளியின் சத்தத்தில் தன்னிலைக்கு மீண்டவளின் பார்வை கடிகாரத்தின் மீது படிந்தது.

கடிகாரத்தில் மணி ஏழை நெருங்கிக் கொண்டிருக்க, வழக்கம்போல எழுந்த கலைச்செல்வன் உடல்பயிற்சியை முடித்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.

அவன் குளித்துவிட்டு வரும்போதும் தேன்மொழி அசையாமல் அங்கேயே நின்றிருப்பதைக் கவனித்தவன், “என்ன இன்னைக்கு புலி பதுங்குது. என்னைப் போட்டுத் தள்ள பெருசா ஏதாவது பிளான் பண்றீயா?” என்று சிரிப்புடன் கேட்டான்.

“என் கையால் இத்தனை அடிவாங்கிய பிறகும் அசராமல் இருக்கிற உன் மனதைரியத்தை உலுக்குவது போல ஏதாவது செய்யணும். உன்னைப் போட்டு தள்ள ஒரு நிமிஷம் போதும். ஆனால் நீ சித்திரவதை அனுபவித்து சாவதைப் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கு. அதுக்கு ஏதாவது வலி கிடைக்குமா என்று யோசிக்கிறேன்” என்றவளின் பார்வையில் இருந்த ஏதோவொன்று அவனை சிந்திக்க வைத்தது.

இத்தனை நாட்களாக இல்லாமல் அவள் முகத்தில் இருந்த பளபளப்பும், சுடர்விடும் விளக்கு போல இருந்த அழகும் கண்டு அவன் புருவங்கள் முடிச்சிட்டது. ஆனால் அதுபற்றி அதிகம் யோசிக்காமல் அதை அப்படியே விட்டுவிட்டு வேலைக்கு செல்ல தயாரானான்.

அவனிடம் எந்தவிதமான பிரதிபலிப்பும் இல்லை என்றவுடன், “எத்தனை அடிச்சும் வலிக்கவும் மாட்டேங்குது, ஒருவேளை அடிவாங்கியதில் அவனுக்கே மரத்துப்போனபோல. இவனை ஏதாவது செய்யணும்” என்று கூறியபடி அறையைவிட்டு வெளியேறியவள், அடுத்த அரைமணி நேரத்தில் குளித்து உடைமாற்றிவிட்டு சமயலறைக்குள் நுழைந்தாள்.

அங்கே அனைத்து பொருட்களும் காலியாகி இருக்க, அவன் வாங்கி வைத்த பொங்கலை கையில் எடுத்து ஒரு கவளம் உண்டது தான் தாமதம் அடுத்த கணமே வாந்தி வந்தது.

அவள் வாந்தி எடுக்கும் சத்தம்கேட்டு ஓடிவந்த கலைச்செல்வன், “ஏய் என்னடி செய்யுது” என்று அவன் பதட்டத்துடன் கேட்க, உடனே வாயைக் கொப்பளித்து நிமிர்ந்தாள்.

“என்ன கருமத்தை வாங்கிட்டு வந்து வச்சிருக்கிற, ஒரு கவளம் பொங்கல் வாய்க்குள் போனதும் அப்படியே கொமட்டிகிட்டு வருது” என்று அதற்கும் அவனிடம் எரிந்து விழுந்துவிட்டு கிளம்பியவள் வாசல்வரை சென்றவளுக்கு தலை சுற்றுவது போல இருந்தது.

அவள் அதை சமாளித்து நிமிரும் முன்பே, வெட்டிப் போட்ட வாழைமரம் போல தரையில் சரிவதைக் கண்ட கலைச்செல்வன் ஓடிவந்து அவளை இரு கரங்களில் தாங்கினான். அவள் கண் திறவாமல் இருப்பதைக் கண்டு மனம் பதறிட, பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்.

தேன்மொழி மெல்ல கண்திறந்து பார்த்தபோது, “இதுக்குதான் சொல்வது தேவை இல்லாத விஷயத்தை அதிகம் போட்டு குழப்பாதேன்னு! எங்கே என் பேச்சைக் கேட்டால்தானே?” என்று அவளை அதட்டினான்.

“என்ன அக்கறையா? அதை எவளாவது ரோட்டில் போவாள் அவளிடம் கொண்டு போய் காட்டு. காலங்காத்தால சோறு திங்காமல் வேலைக்கு கிளம்பினால் இப்படித்தான் மயக்கம் வரும். அதுக்காக அதிக அக்கறை இருக்கிறவன் மாதிரி நடிச்சே மகனே கழுத்தை நெருச்சே கொண்டுவேன்” என்று அவனை மிரட்டிவிட்டு, அவன் மடியில் இருந்து எழுந்தாள்.

அவன் காட்டும் அன்பினை அவள் புரிந்து கொள்ளாமல் இருப்பதை நினைத்து மனம் வலித்தபோதும், “உனக்கு வேற ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டான்.

“எனக்கு எதுவும் வேண்டாம். நீ போய் உன் வேலையைக் கவனி” முகத்தில் அடித்தாற்போல பட்டென்று கூறியவள், நேராக வாசலுக்கு சென்று செருப்பை மாட்டிகொண்டு கிளம்பிவிட்டாள்.

ஒரு பெருமூச்சுடன் எழுந்த கலைச்செல்வன், “இவளை அந்த ரணத்தில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சி தோல்வி மட்டுமே கிடைக்குது. ஆண்டவா எனக்கு பொறுமையைக் கொடு” என்று வேண்டிக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பினான்.

அவன் மணல் அள்ள சென்ற இடத்தில், “டேய் சீக்கிரம் முடிங்க. இன்னைக்கு நிறைய வேலை இருக்கு” என்று கவியரசுவிடம் கூறிவிட்டு ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபடி கொஞ்சம் நகர்ந்தான்.

அவன் நிற்கும் இடத்திற்கு நேர் எதிர் பக்கம் பஸ் ஸ்டாப்பில் தேன்மொழி நிற்பதைக் கண்ட கலைச்செல்வனின் புருவங்கள் முடிச்சிட, “இந்நேரம் இவ ஆபீசில் இருக்கணுமே! எதுக்காக பஸ் ஸ்டாப்பில் நிற்கிறாள்” என்று அவன் தீவிரமாக யோசிக்கும்போதே அந்த வழியாக வந்த பேருந்து ஒன்றில் ஏறிச்சென்றாள்.

“என்ன அண்ணா அண்ணி ஜி. ஹெச். போற பஸ்ஸில் ஏறிப் போறாங்க. அவங்களுக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லையா?” என்று கேட்டவுடன், அவள் காலை மயங்கி விழுந்தது ஞாபகம் வந்தது.

“ஆமாண்டா” என்றவன் அவள் காலை மயங்கி விழுந்ததை மனதில் வைத்து கூறினான்

“உங்ககிட்ட சொல்லாமல் கிளம்பி போற மாதிரி இருக்கே, ஒரு வேளை குட்டிப் பாப்பா விஷயமாக இருக்குமோ?” என்று அவன் தன் சிந்தனையுடன் சொன்னது தான் தாமதம், ‘இவன் சொல்வது உண்மையாக இருந்தால்’ என்று அவன் நினைத்தவுடன் அவன் உடல் சிலிர்த்து அடங்கியது.

“டேய் இந்த வண்டி சாவி. நீ இமையனை ஓட்டிட்டு போக சொல்லு. நான் ஹாஸ்பிட்டல் வரை போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, ரகுபதியின் பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து சென்றான்.

அவன் ஹாஸ்பிட்டல் உள்ளே நுழையும்போது, தேன்மொழி தன்னுடைய ரிப்போட்டை வாங்கிகொண்டு வெளியே வந்தாள்.

அவளின் பின்னோடு வந்த டாக்டர் நர்ஸிடம், “இந்த பொண்ணு பெயர் தேன்மொழி. இவளை ஆப்ரேசன் தியேட்டர் கூட்டிட்டு போங்க. அவங்களுக்கு அபாஷன் பண்ணனும்” அபாஷன் பண்ணனும்னு சொன்னாங்க” என்று கூறியதைக் கேட்டு கலைச்செல்வன் இதயம் அதிர்ந்தது.

அவன் “நோ” என்று கத்திய கத்தலில், அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவன்மீது படிய, அவன் பார்வையோ டாக்டர் பக்கத்தில் நின்றிருந்த மனையாளின் மீது படிந்தது.

அவள் கல்போல நிற்பதைக் கண்டு, “என் குழந்தையைக் கருவிலேயே அழித்துவிடாதே! நம்ம வாழ்க்கைக்கு அஸ்திவாரமே நமக்கு பிறக்க போகும் குழந்தைதான்” அவளிடம் கெஞ்சிட, அவன் துடிப்பதை ரசனையுடன் நோக்கினாள்.
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Me fist ✋😍😍😍 ஏன் தோழி கலைய கதரவிட்டுட்டிங்க..

கலைச்செல்வா கவலை படாத ....
ஆன்ட்டி ஹீரோயின் மனம் இறங்கினால் தானே தோழி... நன்றி சகி!
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஆத்தி.... இந்த தேன் புள்ளைக்கு ஆரம்பத்தில சப்போர்ட் செஞ்ச நம்மளை அடி வாங்க வைக்காம விடமாட்டா போலயே....

ஆத்தரே ஃபிளாஷ்பேக் எப்ப வரும்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top