• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூ 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 78

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
32
Reaction score
39
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!

சென்ற எபிக்கு லைக்குகள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி! கதையின் இராண்டாவது அத்தியாயத்தோடு வந்துவிட்டேன். வாரம் ஒரு எபி என்பது மிகப்பெரிய இடைவெளிதான். வாரம் இரண்டு அல்லது மூன்று எபிகள் தருவது என்பது கொஞ்சம் கஷ்டம். கமிட் செய்துவிட்டு செய்யாமல் போகக்கூடாது அல்லவா? அதனால், வாரம் ஒன்றென்றே வைத்துக்கொள்வோம். அவ்வப்போது சர்பிரைஸ் எபிக்கள் கண்டிப்பாக உண்டு.



மீண்டும் ஒரு அழகான காலைப் பொழுது. இன்று அவசரமானதாக இல்லாமல், நிதானமாக செயல்பட்டால் போதும். ஆம்! இன்று ஞாயிற்றுக்கிழமை. பத்து மணியாயிற்று அம்மாவும் பிள்ளையும் எழுந்து வர. சதுர்மதி ஹாலுக்கு வர, அவளுக்கு முன்னே எழுந்தமர்ந்து அலுவலக லேப்டாப்பை தட்டியவாறு அமர்ந்திருந்தான் ரகு.

‘ஓ… ஐயா சீக்கிரமா எழுந்துட்டாரு போல!’ என்று நினைத்தவாறே சமையலறைக்குள் நுழைந்தவள் கண்டது பாலை பொங்கவைத்து அவை சிந்திக் கிடந்த சமையலறை தான். அதிலேயே தெரிந்தது அவன் குடித்த காபியின் லட்சணம். இருந்தும் ஒன்றும் சொல்லாமல், நேரமாவதை உணர்ந்து, விரைந்து சமையலை முடித்தவள் பிள்ளைக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.

ஸ்ரேயாவிற்கு அம்மா ஊட்டிவிட்டால் தான் பிடிக்கும்; இல்லையேல், இரண்டொரு வாயோடு, “பசிக்கலம்மா; போதும்!” என்றவள் அங்கிருந்து ஓடிவிடுவாள். அதனாலேயே அவள் கேட்கும்போதெல்லாம் எத்தனை வேலைகள் இருந்தாளும் மகளுக்கு தன் கையாலேயே ஊட்டிவிட்டுவிடுவாள். இதைப் பற்றி அவள் தகப்பனிடம் கூறினால், ‘இதை விட உனக்கு எந்த வேலை முக்கியம்?’ என்று முணுமுணுப்பான் என்பதை அறிவாள் என்பதால், பெரியதாக எதுவும் சொல்லமாட்டாள். அவ்வப்போது மட்டும், “ஏன் பாப்பா இப்படி பண்ற? அம்மா பாவம்தான?” என்பதோடு முடிந்துவிடும் அனைத்தும்.

இன்று மட்டும்தான் சூடான உணவு கிடைக்கும் என்பதால் ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய சமையல் மூன்று மணி நேரம் எடுக்கும். இத்தோடு வீட்டை சுத்தப்படுத்துவதும் இருக்கிறதே. விடுமுறை நாள் என்பது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எட்டாக்கனிதான் என்று நினைத்தவளுக்கு கைகள் தன் பாட்டிற்கு செய்யவேண்டியவற்றை செய்ய, அது முடியும்வரை ரகு தன் லேப்டாப்பே கதியென்று இருந்தான். அவனை சிறு உதவி செய்யென்றும் அழைக்கவில்லை அவள். காலையில் கிச்சன் இருந்த நிலையைக் கண்டவளுக்கு அவனை அழைக்கவும் தோன்றுமா? அவன் வந்தாலும் எந்த வேலையும் ஆகப்போவதுமில்லை. அவன் செய்யவும் விடமாட்டான் என நினைத்தவள் இதழோரம் வளைந்தது. இதற்குள் வாஷிங் மெஷின் இசைக்க, அதனை அணைத்தவள், மற்றவற்றை முடித்துவிட்டு துணிகளை அள்ளிக் கொண்டு மேலே செல்ல தடுமாறினாள்.

அவள் தடுமாறுவதைக் கண்ட ரகு, அவளிடம் வந்து, “என்னை கூப்பிட்டிருக்கலாம்ல? ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வெயிட் தூக்கற?” என்றபடியே மாடிவரை தூக்கிவந்தான். அத்தோடு மட்டுமில்லாது, துணியும் காய வைக்க உதவினான். அனைத்தையும் காய வைத்துவிட்டு இருவரும் கீழே இறங்க, அருகில் வசிக்கும் பெண் ‘கொடுத்துவைச்சவள்!’ என்று சிலாகிப்பது தெரிந்தது. தானாக அவள் முகத்தில் சிரிப்பு வந்துபோனது.


*
கொடவுண் போன்றதொரு இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தான் அவன். துளி கூட வெளிச்சம் இல்லை அவ்விடத்தில். இன்னும் சில மணித்துளிகளில் தன்னுயிர் பிரியப்போவது உறுதி என்பது புரிந்துபோயிற்று அவனுக்கு. நிறைய பணம் தருவதாக கூறியதால் இதற்கு ஒத்துக்கொண்ட தனக்கு அன்று ஏன் மறுக்க முடியாமல் போயிற்று என்று தன்னையே நொந்தவாறு நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தான் அவன்.

அப்போது அந்த கிடங்கின் வாயில் திறக்க, வெளியே இருந்து சூரிய வெளிச்சம் பளீரென்று உள்ளே தெரிக்க, அதை மறைத்தவாறு வந்தன இரு உருவங்கள். அதில் ஒருவனின் வரிவடிவம் வைத்தே அறிந்துகொண்டான் யாரென்று. அவர்கள் அருகே வரவும், மற்றையவரும் யாரென்று தெரிந்தவன், “துரோகி!” என்று அந்த சொல்லையே கடித்து துப்பினான், தன்னால் எதிரிலிருந்தவர்களை எதுவும் செய்ய முடியாத ஆத்திரத்தில்.

“பெட்டர் ஆஃபர் எங்க கிடைக்குதோ அங்க வொர்க் பண்றது தான் புத்திசாலித்தனம் வினோத்” என்றது அந்த இரண்டாம் உருவம்.

“லீவ் இட் அசைட்! உன்னை யார் அனுப்பினான்னு சொல்லு” என்று கேட்டான் முதலாமவன்.

சொல்லமாட்டேன் என்னும் விதமாய் தலையாட்டினான் அந்த வினோத் என்றழைக்கப்படுபவன். உடனே தன் பேண்ட்டில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி குறிபார்த்து, “நீ சொல்லலைனா உன் இதயத்தில குண்ட தாங்கறியா இல்ல, மூளைக்கு செண்ட் பண்ணட்டுமா?’ என்று வினோத்தை கேட்க,

“உங்கிட்ட சொன்னா, அவன் கொல்வான். சொல்லலைன்னா நீ கொல்வ. எப்படியும் சாகறதுன்னு முடிவாகிடுச்சு. துரோகியா சாகாம உண்மையானவனா சாகறேன்” என்றவன் பார்வை இரண்டாமவரைப் பார்த்தது.

“சொல்லலைன்னாலும் சாகடிப்பேன். ஆல்ரெடி கொலை செய்தவனுக்கு இன்னொன்று செய்ய ரொம்ப நேரம் ஆகாது!” என்றவன் ட்ரிக்கரை அழுத்த, அதிலிருந்து வெளிப்பட்ட குண்டு சரியாக வினோத்தின் மூளையைத் துளைத்தது.

“வாவ்! சூப்பர் ஹீரோ! உன்னை ஏமாத்த சொல்லி இவன் என்னை கமிட் பண்ணான். ஆனா, அதை எப்படியோ கண்டுபிடிச்சு அவனை போட்டுத் தாள்ளிட்டியே! செம்ம டேலண்டட்தான் நீ!” என்றவள் அவனை தன்னிரு கைகளால் அணைக்க வர, அவளை அணைத்தவன், மிச்சமிருந்த புல்லட்டுகளை அவள் உடம்பில் ஏற்றினான்.

“நான் ஹீரோ இல்ல, வில்லன்!” என்ற சிவா விகாரமாகச் சிரிக்க, அவன் முன்னே சடலமாக கிடந்தாள் சில நாட்களுக்கு முன் அவன் தோளில் தொங்கிய பைங்கிளி.


*
“சீஃப்! அவன் நம்ம ஆள போட்டுட்டான்!” என்று ஒருவர் வந்து கூற, அதில் தன்னருகே இருந்த மேஜையை காலல் எட்டி உதைத்து தன் ஆத்திரத்தை காட்டினான் அந்த தலைவன்.

“எப்படி மாட்டினான்?” என்று கேட்க, அதற்கும் தயாராக வைத்திருந்த பதில் கூறப்பட்டிருந்தது.

“பணயம் வைச்சு பண்ணாம பணத்தைக் குடுத்து ஏதாவது செய்யப் பார்த்தா இப்படி தான் ஆகும். அது தெரியல அந்த முட்டாளுக்கு! இவன் நம்ம கூட இருந்தா நமக்கு தான் ஆபத்து. களை எடுக்கற வேலைய கச்சிதமா முடிச்சுட்டான் அந்த சிவா” என்றவன் தன் முன்னிருந்த கண்ணாடியை நோக்க, அதில் தெரிந்த தன் முகத்தைக் காண முடியாமல் அதையும் உடைத்தான்.

“சீஃப்!” என்று அவன் அடியாள் வர, “மூவ் அவுட்!” என்றவன், அவன் வெளியேறியதை உறுதி செய்துகொண்டு “ஆஆஆஆஆ!” என்று கத்தினான்.

“இத்தனை வருஷமா உன்னை ஒன்னுமே பண்ண முடியலையே சிவா! உன்னை கட்டுப்படுத்த என்ன செய்யனும்!” என்று காற்றில் விடை தேடியவனுக்கு அந்த காற்றைப் போல விடையும் சிக்கவில்லை.


*
அந்த பரபரப்பு மிக்க சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது கார் ஒன்று. அதை துரத்தியபடி மற்றொரு கார். இரண்டும் ஒன்றை ஒன்று விரட்டியவாறு செல்ல, அதன் வேகத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் அனைவரும் தெறித்து ஓரத்தில் விழுந்தனர். விழுந்தவர்களையும் சேதத்தையும் பொருட்படுத்தாமல் இரண்டு மகிழுந்துகளும் தங்கள் வழியில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்ற பாதையில் இந்த கலவரம் எதுவும் தெரியாமல் வந்து கொண்டிருந்தன அந்த சின்னஞ்சிறு சிட்டுகள். அவர்கள் வருவது தெரிந்தும் வேகத்தை சிறிதும் குறைக்காமல் அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்தது. கடைசி நேரத்தில் கண்டுகொண்ட அந்த பிஞ்சுகள் ஓரத்தில் ஒதுங்கிவிட, அதில் ஒரு குழந்தை மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் மருண்டு விழித்துக்கொண்டிருந்தது.

அந்த பால் வடியும் முகத்தைக் கண்டுகூட நிறுத்தத் தோன்றவில்லை அந்த கல்நெஞ்சக்காரனுக்கு. அதிவேகத்தில் செலுத்த, தூக்கி வீசப்பட்டு மீண்டும் சாலையிலேயே விழுந்தது அந்த குழந்தை.

தப்பிக்கும் ஒரு மார்க்கமாக அந்த விபத்தை எண்ணிய அந்த கார்க்காரன் அங்கிருந்து விரைந்து செல்ல, அவனை துரத்தி வந்த இரண்டாமவன், அதாவது சிவா, குழந்தைக்கு அடிப்பட்டதை உணர்ந்து வண்டியை நிறுத்தினான். அதற்குள் அங்கே கூட்டம் கூடிவிட, அவனால் அவர்களைத் தாண்டி செல்ல முடியாமல் போயிற்று.

“சே!” என்று தன் ஸ்டியேரிங்கில் குத்தியவன், அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கும் முன்பே, அவன் கார் கண்ணாடியை இறக்கச் சொல்லிக் கேட்டவர்கள், “தம்பி! உசிரிருக்குப்பா! சீக்கிரம் போனா காப்பாத்திடலாம். கொஞ்ச தூரத்துல ஹாஸ்பிட்டல் இருக்கு. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க!” என்று கேட்க,

“சரி! ஏறுங்க” என்றவன், அந்த குழந்தையோடும் அவர்களோடும் அருகிலிருக்கும் மருத்துவமனை நோக்கி விரைந்தான்.

அவன் அறிவானா, இந்த ஒற்றை விபத்து இங்கே பலரின் வாழ்வை மாற்றப்போகிறதென?
WhatsApp Image 2021-12-11 at 00.16.11.jpeg
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ரகு & சதுர் ஃபேமிலி அழகு🥰🥰🥰🥰, ஆன எனக்கு என்னமோ இவங்க உண்மையான கணவன் மனைவி இல்லையோனு தோணுது...

உனக்கு பார்த்த பெண்ணா அது, ஏண்டா கொண்ணுட்டா🤐🤐🤐🤐, சிவா வெரி டேன்ஜரஸ் பெல்லோ டா நீ😳😳😳

அது யாரு உன் முகமே உனக்கு பார்க்க பிடிக்கலையா, அதுக்கு காரணம் சிவா போல, நீ அணுப்பினது தான் அந்த வினோத் & கிளி....

யார் அந்த பாப்பா, அடேய் பாவி பயலே இப்படியா பண்ணுவா😤😤😤, சிவா நீயாவது காப்பத்தா கூட்டி போறியே...

அந்த பாப்பா ஒரு வேளை சதுர் பொண்ணா இருக்குமோ🥺🥺🥺

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சதுரோட பொண்ணா அடிபட்டது...

ரகு அண்ட் சதுர் கணவன் மனைவி மாதிரி தெரில அட் த ஷேம் டைம் போன எப்பில அவன் அவளை எள்ளி எடுத்துக்கிட்டு போனது சந்தேகப்படத் தோனல...

சம்திங் பிஷ்ஷி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top