• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூ 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 78

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
32
Reaction score
39
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

சாரி! ரொம்ப நாளா காணாம போனதுக்கு. இதோ அடுத்த அப்டேட் உங்களுக்காக.



பூ 03

மாலை நேரம்.

அந்த அழகிய பூங்காவினுள் அமர்ந்திருந்தாள் சதுர்மதி. இந்த நேரத்தில் வழக்கமாக இங்கே தான் இருப்பாள். பள்ளியிலிருந்து அவள் பிள்ளை வந்ததும் இருவரும் சேர்ந்து பத்து நிமிடம் ஒய்யார நடை போட, அவர்கள் இருப்பிடம் வந்துவிடும். இவள் காத்திருப்பதும், அவள் ஓடிவந்து ‘மம்மி!’ என்று கட்டிக்கொள்வதும் மாநாடு படம் போல் தினமும் நடக்கும். சில நேரம் இவள் தன்னை மறந்து அமர்ந்திருக்கும்போது அவள் பயப்படுத்தி இவளுக்கு மினி ஹார்ட் அட்டாக் வரவைப்பதும் உண்டு.

என்றேனும், அத்தி பூத்தாற்போல் தன் அலுவல்கள் விரைந்து முடிந்துவிட்டால், ராம் இங்கே வந்துவிடுவான். அப்போது மூவரும் சேர்ந்து வெளியில் சுற்றிவிட்டு இரவு உணவையும் முடித்து வீடு செல்வார்கள். அதுபோன்ற சமயங்களில் சதுர்மதி தனியாக இருக்கும் நேரமாக பார்த்து வந்து அவளிடம் சிறிது பேசிக்கொண்டிருப்பான் ராம். என்னதான் மனைவியாக இருந்தாலும், அவளை அவளுக்கே தெரியாமல் சைட்டடிக்கும் சுகம் தேவைப்படும் அவனுக்கு. அதுபோன்ற நேரங்களில் இந்த பூங்காவே அவன் வரப்பிரசாதம்.

இன்றும் அதுபோல அவள் தனியே அமர்ந்திருக்க, பெண்ணவளை சற்று தள்ளி நின்று ரசித்துக்கொண்டிருந்தான் ராம். பின் அவள் அருகே சென்று அவன் அமர, ராமை அங்கே எதிர்பார்த்திராதவள் அதிசயித்தாள்.

“என்ன இங்க வந்திருக்கீங்க?” என்றவள் கேட்க,

“என் பொண்டாட்டியை பார்க்க நான் வந்துருக்கேன். ஏன் வரக்கூடாதா?” என்று அவன் கேட்க, “ம்ம்ம்.. பார்க்கலாம் பார்க்கலாம்” என்று நொடித்துக்கொண்டவள் மறுப்பக்கம் திரும்ப, இதுவரை அவனிடம் காட்டாது வைத்திருந்த வெட்கப்புன்னகை அவளை வந்து ஒட்டிக்கொண்டது.

இருவரும் அங்கிருந்த கடையில் வேண்டியவற்றை வாங்கிவிட்டு அவர்களின் குட்டிமாவிற்காக காத்திருந்தனர்.

வழக்கமான நேரம் தாண்டியும் அவள் வரவில்லை. என்னவாயிற்று என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே சதுர்மதிக்கு ஒரு அழைப்பு வந்தது.

“ஹலோ!”

…..

“ஆமாம்! நீங்க?”

….

“என்ன?” என்றவள் அடுத்த வார்த்தை பேச சுயநினைவோடு இருக்கவில்லை. மதி அதிர்ச்சியில் விழ, அவளை கீழே விழாமல் தாங்கியவன் அருகிலிருந்த பெஞ்சில் படுக்கவைத்தான். அவள் மயக்கத்திற்கு காரணமான அந்த தொலைப்பேசியைப் பார்த்தவன், அதைவிட தன்னவள் முக்கியமென்று நினைத்து அவளை எழுப்பும் முயற்சிகளை மேற்கொண்டான்.

அடுத்தடுத்து அவன் அனுப்பிய நீர்த்திவலைகளால் அவள் விரைவிலேயே எழுந்துவிட்டாள். ஒரு சில நொடிகள் என்ன நடந்தது என்பது புரியாது விழித்தவள், பின் எதிரிலிருந்தவனை நோக்கி, “ராம்… ராம்…! நம்ம குட்டிம்மா….” என்றவளுக்கு அடுத்த வார்த்தை பேச முடியவில்லை. கேவல் வெடித்தது அவளிடமிருந்து.

“மதி! அழாத. நான் தான் இருக்கேன்ல. எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கறேன். நம்ம குட்டிம்மாக்கு ஒன்னும் ஆகியிருக்காது” என்றவன் கீழே விழுந்திருந்த மொபைலை எடுத்து கடைசியாக அழைப்பு வந்திருந்த எண்ணிற்கு அழைத்திருந்தான்.

இந்த ஒரு அழைப்பும் எதிரில் சொல்லப்படும் செய்தியும் அவர்கள் வாழ்வை 180 டிகிரி திருப்பிப்போடுமென்று இருவரும் அக்கணம் நினைத்திருக்கவே மாட்டார்கள்.

*​
மருத்துவமனையில்

காரிடரில் அமைதியின்றி அமர்ந்திருந்தான் சிவா. உள்ளே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அந்த பெயரறியாத குழந்தை மீது எல்லையில்லா கோபம் வந்தது. இந்த பிள்ளையால் இன்று அவனுக்கு எட்டியிருந்த அவன் எதிரிகளை அவன் விட்டுவிட்டான். அவர்கள் மட்டும் அவன் கையில் கிடைத்திருந்தால், அவனை ஆட்டுவிக்க நினைப்பவனை அவன் ஒரு வழியாக்கியிருப்பான். அது தற்போது முடியாமல் போனதில், அவர்கள் தப்பிக்க ஒரு வகையில் காரணமானவளின் மீது திரும்பியது அனைத்து சினமும். இருந்தும் இருக்கும் இடம் நினைத்து தன்னை கட்டுப்படுத்தியவாறு அந்த உயிர் நலமாக உள்ளதென தகவல் கிடைக்க அங்கே அமர்ந்திருந்தான்.

அது ஒரு தனியார் ஆஸ்பத்திரி தானென்றாலும், அதற்கான சுத்தம் அங்கு இல்லை. கையில் சேருவதை சிறிது செலவு செய்தால் அதற்கும் மேல் லாபம் வரும் என்று தெரிவதில்லை பல முதலாளிகளுக்கு. அதில் இதன் நிறுவனரும் அடக்கம் போல. இங்கே ராம் வருவதென்பது கனவிலும் நினையாதது. ஆனால், விரைவில் வைத்தியம் பார்க்க வேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே இங்கே வந்திருந்தான் அவன்.

அந்த குழந்தையை அப்படியே விட்டு செல்ல மனமில்லை அவனுக்கு. ஒரு செயலை எடுத்தால் முழுதாக முடிக்க வேண்டும் அல்லவா? பெண்ணின் பெற்றோர் வரும்வரை காத்திருக்க முடிவு செய்தவன், அதன்படி குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் வெளியே இருக்கையில் அமர்ந்து தன் கைப்பேசியை ஆராய தொடங்கினான்.

அங்கே அமர்ந்திருக்கும் நேரத்தையும் விரயம் செய்யாமல் தன் கைப்பேசி வாயிலாகவே தன்னால் முடிந்தளவு வேலைகளை முடிக்கப் பார்த்தான். எவ்வளவு நேரம்தான் அதையே பார்த்துக்கொண்டிருப்பதென்று நிமிர்ந்த அவன் கண்களில் விழுந்தது அந்த தளத்தில் பதட்டத்துடன் ஓடி வந்துகொண்டிருந்த இருவரைத்தான்.

அவர்களைப் பார்த்தால் இளவயது தாய் தந்தை போல தெரிந்தது. அப்போதே கண்டுபிடித்துவிட்டான், அந்த குழந்தையின் பெற்றோர் தானென. தன்னருகில் இருந்த ஒருவரிடம் பெற்றோரை அழைத்து விவரம் சொல்ல சொல்லியிருக்க, அவரும் கடமை தவறாது பள்ளி ஐ.டி. கார்டில் கண்டு அழைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

ஓட்டமும் நடையுமாக வந்த அவர்கள் வழியிலேயே ஒரு நர்ஸைப் பிடித்து ஏதோ கேட்க, அவர் இவர்கள் இருந்த திசையைக் காட்டி நகர்ந்துவிட்டார்.

இருவரும் இவனை நோக்கி வர, அப்போதுதான் அந்த தாயைப் பார்த்தான். அவர்கள் அங்கே வர எடுத்துக்கொண்ட அரை மணி நேரமும் எவ்வளவு தவித்திருப்பாள் என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. ஆனால், அந்த வட்ட முகம் கண்ணீர்க் கரைகளையும் தாண்டி அவனை ஈர்த்து தனக்குள் செக்கு மாடாய் சுற்ற வைத்தது.

அவன் தன்னைப் பார்க்கும் பார்வை யாவும் புதைக்குழி என்று அறியாதவளோ, கணவன் முகம் பார்த்தாள், அவனிடம் ஏதேனும் கேட்பானா என்று.

“ஸார்! இங்கே ஸ்ரேயான்னு?” என்று ரகு கேட்க, ஒரு அறையை காட்டியவன் அவர்கள் இருவரும் விரைந்து உள்ளே செல்வதைக் கண்டான். அங்கே இனியும் இருக்க வேண்டுமா என்றிருந்தது அவனுக்கு. ஆனால், செல்ல மனம் வரவில்லை அவனுக்கு. கண்ணாடிக் கதவுகளுக்கு மறுப்பக்கம் தெரிந்த அவள் பிம்பத்தைப் பார்த்தவாறே இருந்தான் அவன். யாரவள்? ஒரு நொடியில் அவனை சலனப்படுத்தியவள்?

சிவா யோசித்துக்கொண்டிருக்கையிலேயே அவளை மட்டும் உள்ளே குழந்தைக்கு துணைக்கு வைத்துவிட்டு அந்த ஆண் மட்டும் வெளியே வந்தான்.

“சாரி சார். ஸ்ரேயாவைப் பார்க்கற அவசரத்துல உள்ள ஓடிட்டேன். நான் ரகு, ரகுராம், ஸ்ரேயாவோட அப்பா. என்ன நடந்துது சார்? எப்படி இப்படி?” என்று கேட்டவன் கண்கள் சிறிது கலங்கியிருந்தாலும் அதை தனக்குள் மறைத்தவாறு கேட்டான். அவனிடம் ஸ்ரேயாவை ஒரு கார் இடித்துவிட்டதென்று மட்டும் கூறியவன், அது யாரென்பதை சொல்லவில்லை. இது அவன் பகை, அவன்தான் சரி செய்வான். இடையில் யாரும் தலையிடுவதை அவன் விரும்பவில்லை.

ஏதேனும் உதவியென்றால் தன்னை தயங்காமல் அழைக்குமாறு கூறி தன் கார்டை அளித்தவன், மீண்டும் ஒரு முறை தன் விழிகளை உள்ளே செலுத்தினான். அங்கே ஸ்ரேயா இன்னும் மயக்கத்திலேயே இருக்க, அவளருகே ஒரு இருக்கையில் மெலிதாக கண்ணீர் வடித்தவாறு அவள் குழந்தையை தடவிக் கொடுத்தவாறிருந்தாள். அவளை தன் கண்களில் படம்பிடித்தவன், ரகுவிடம் ஒரு சின்ன தலையசைவோடு விடைபெற்றுவிட்டான்.

*

அல்லி மலர்கள் மணம் பரப்பிக்கொண்டிருக்கும் வேளை. ஊரே உறங்கிக்கொண்டிருக்க, ஒருவன் மட்டும் தன் முன்னிருந்த மதுக்கோப்பையை பார்த்திருந்தான். இன்று ஏனோ அவன் வழக்கமான அளவையும் தாண்டிவிட்டும் அவனுக்கு போதை ஏறவே இல்லை. மாலை கண்ட முகமே அவன் கண் முன்னே நிற்க, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அந்த கோப்பையை விசிறியடித்திருந்தான்.

இருந்தாலும் அவனால் முடியவில்லை. அவன் நினைத்தால் நடக்காத காரியம் எதுவுமில்லை. அவனுக்காக பல பெண்கள் தவமிருக்க, அவர்களை எளிதாக கடந்து போக முடிந்தவனால் இன்று பார்த்தவளை மறக்க முடியவில்லை. அவள் ஏதோ ஓர் வகையில் தன்னை பாதித்ததை உணர்ந்தவனுக்கு அவள் மாற்றான் மனைவி என்பதும் ஒரு பிள்ளைக்கு தாய் என்பதும் புரிந்தாலும், மீண்டும் அவள் வேண்டும் என நினைக்கும் மனதை என்ன செய்வது?

வெகுநேரம் தனதறைக்குள்ளேயே நடை பயின்றவன், தன் உதவியாளனுக்கு அழைத்தான்.

தூக்க கலக்கத்தில் யாரென்று பார்க்காமல் அதை எடுத்தவனோ, “எந்த எருமை பேசினாலும் காலைல பேசு!” என்றவன் என்ன பதில் வருகிறதென்பதைக் கூட கேட்காமல் துண்டிக்கப்போக,

“உனக்கு சம்பளம் குடுக்கற எருமை!” என்றான் மறுபுறம் இருந்த சிவா, பல்லைக் கடித்தவாறு.

“ஐயோ! பாஸ்! நீங்களா? சாரி பாஸ்!” என்று பல தரம் சொன்னவன், இன்னும் பல்வேறு வழிகளில் மன்னிப்பை வேண்டிக்கொண்டிருந்தான். அவனுக்கும் உயிர்மேல் ஆசை உண்டல்லவா?

“நிறுத்து!” என்ற சிவா, அவன் உதவியாளன் தற்போது நிறுத்த மாட்டான் எனப் புரிய, “ஜஸ்ட் ஷட் யுவர் மவுத் அப்!” என்று கத்தியிருந்தான்.

அதில் வாயை மூடியவன், ‘சொல்லு!’ என்னும் விதமாய் மௌனம் காக்க, “**** ஹாஸ்பிட்டல்ல, ரூம் நம்பர் ***-ல ஒரு பொண்ணு அட்மிட் ஆகியிருந்துச்சு, இன்னைக்கு. அந்த பொண்ணோட ஃபுல் ஃபேமிலி டீடைய்ல்ஸ் வேணும், நாளைக்கு காலைலயே! ஃபுல் இன் த சென்ஸ், கம்ப்ளீட் டீட்டெய்ல்ஸ்” என்றவன் கட் செய்துவிட,

சிவாவின் உதவியாளனோ, தன்னை அவனிடம் கோர்த்துவிட்டு ரசிக்கும் அந்த இறைவனைப் பார்த்து கைக்கூப்பிவிட்டு எழுந்து சென்றான், ‘இந்த சிவாவுக்காக நான் விடிய விடிய வேலை பார்த்ததுக்கு அந்த சிவனுக்கு விடிய விடிய விரதம் இருந்திருந்தா இன்னேரம் டைரெக்ட் சிவலோகப் பதவியாவது கிடைச்சுருக்கும்!’ என்று தன்னை நொந்தபடியே சென்றான்.

இங்கே சிவாவோ, காலையில் கிடைக்கும் தகவல்களைப் பொறுத்து அவளை அடைவது எப்படி என முடிவு செய்துகொள்ள நினைத்து உறங்கச் சென்றான்.

மறுபுறம், தன்னை சிறைபிடிக்க ஒரு ராவணன் திட்டம் வகுப்பது தெரியாமல் நிர்சலனமாக உறங்கிக்கொண்டிருந்தாள் சதுர்மதி.WhatsApp Image 2021-12-11 at 00.16.11.jpeg
 




PAPPU PAPPU

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
412
Reaction score
778
Location
india
"உனக்கு சம்பளம் கொடுக்கும் எருமை" 🤣🤣🤣🤣🤣🤣எபி சூப்பர்
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
சூப்பர் சூப்பர்🥰🥰🥰

சிவா என்ன தான் நீ ஆன்டி ஹீரோவா இருந்தாலும் இப்ப நீ செய்ய நினைக்கும் செயல் ரொம்ப தப்பு டா🙄🙄🙄🙄

மதி பாவம், ரகு & மதி இவங்க நிஜமாவே கணவன் மனைவி தானா 🤔🤔🤔🤔, இந்த டவுட் எனக்கு இருந்துட்டே இருக்கு🧐🧐🧐

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top