• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பெண்ணின் காதல் தோல்வி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
ஆணின் காதல்
தோல்வியைப் போல
அத்தனை எளிதில்
ஆற்றுப்படுத்தக் கூடியதில்லை பெண்ணின் காதல் தோல்வி...

சோகத்தை மறக்க
குடிப்பதாக சொல்லி
மதுக்குப்பியிடம் தன்னை
ஒப்புவிக்க முடியாது...

மனது சரியில்லை
என்று சொல்லி
சட்டென்று வண்டியை
எடுத்துக் கொண்டு
தூரப்பயணம்
சென்றுவிட முடியாது...

என்னை ஏமாற்றவிட்டான்
என்று சொல்லி
நண்பர்களின் தோளில்
தன்னை சாய்த்துக்
கொள்ள முடியாது....

" Why this கொலைவெறி டா ,
அடிடா அவனை உதைடா அவனை,
இந்த பசங்களே இப்படி தான் புரிஞ்சு போச்சுடா"
என்று தன்னை
சமாதானப்படுத்துவற்காக
பெண்களுக்கான ப்ரத்யேக
சோகப் பாடல்களும் இல்லை...

காதல் தோல்வியைப்
பறைசாற்ற ஆட்டுத்தாடியும் வளர்க்க முடியாது...

அவளால் செய்ய
முடிந்தது எல்லாம்
ஒன்றே ஒன்று மட்டும் தான்
தொண்டையின் இடையில்
சிக்கி இருக்கும்
பெரும் கதறலை
யாரும் அறியாமல்
குளியலறையிலோ இல்லை தலையணை பஞ்சுகளிடமோ
கடத்திவிட்டு போலிப் புன்னகையை ஒட்டிக்
கொள்வதை தவிர
வேறு வழிகள்
எதுவும் இல்லை அவளுக்கு...

ஆக ஆணின் காதல்
தோல்வியைப் போல
அத்தனை எளிதில்
ஆற்றுப்படுத்தக் கூடியதில்லை பெண்ணின் காதல் தோல்வி...

FB_IMG_14650208606064253.jpg
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Athennavo unmaithan. Ithuve aangal na pombalainga kadhalai than nambi vidathe nu paaduvanga,

Namakku enna aambalainga kadhalai than nambi vidathe nu paata iruku🤷🏻‍♀️
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
Athennavo unmaithan. Ithuve aangal na pombalainga kadhalai than nambi vidathe nu paaduvanga,

Namakku enna aambalainga kadhalai than nambi vidathe nu paata iruku🤷🏻‍♀️
Amam akka. Ini oru vithi seivom...

Nan puthusu puthusa girl soup songs ezhuthuran manna🖐🖐🖐
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top