• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பெண் குழந்தை பாதுகாப்பு - கட்டுரை போட்டி முடிவு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
தளத்தில் இருக்கும் சக தோழமைகளுக்கு வணக்கம்...

அரத பழசுதான் .. ஆனாலும் இன்னமும் பேச வேண்டியதா இருக்கே-ன்னு தயக்கத்தோடு ஆரம்பிக்க பட்ட போட்டி .. பெண் குழந்தை பாதுகாப்பு -ங்கிற இந்த கட்டுரை போட்டி... கலந்துக்கிட்டவங்க எல்லாருக்கும் என் முதற்கண் வணக்கம் அண்ட் வாழ்த்துகள்....
இது போட்டியில்லை, சமூக பங்களிப்பு ன்னு சொல்லிதான் முகவுரையை ஆரம்பிச்சிருந்தேன்....

கலந்துக்கிட்ட ஒவ்வொரு தோழியும் அவங்கவங்க கருத்துக்களை/ஆதங்கங்களை/பரிந்துரையை கொட்டிட்டாங்க...ன்னு தான் சொல்லணும்...

அவற்றுள் என்னை கவர்ந்த.. முக்கியமான .. கருத்துக்கள் தொகுத்து இருக்கேன்....

இது

1. மோனிஷா:::

இன்று பெண் சமுதாயம் முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கண்டுவிட்டது .. சாதனையாளர்கள் பெருகி இருக்காங்க...

பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதன் முதல் மூல காரணமே, குற்றத்தை மறைப்பதுதான்... குற்றவாளி தவறு செய்பவன் மட்டுமல்ல. அத்தகைய தவறுகளை கண்டும் காணாமல்விட்ட நாமும்தான்.

தைரியத்தை போதிக்க வேண்டும்.

தற்காப்புக் கலையை கற்பிக்க வேண்டும்.

பிள்ளைகளின் தனிமை களையப்பட வேண்டும்....

ஒவ்வொரு பெண் குழந்தையின் பாதுகாப்பும் சமூக பொறுப்பு..

ரௌத்திரம் பழகு..

2. zainab :::

உத்தமர்கள் வாழ்ந்த இதே பூமியில் பெண்ணைப் போகப் பொருளாகப் பார்க்கும் ஜந்துக்களும் இருப்பது காலத்தின் கோலம்.

ஒரு சின்னஞ்சிறிய பெண் அவளின் தாய் மாமனாலேயே தவறாக நடத்தபட்ட ஒரு துன்பியல் நிகழ்வு ... மனநல சிகிச்சைக்கு பின்னரே .. அந்தப் பெண் பிள்ளை வாக்கு மூலம் கொடுத்திருக்கிறது.

ஆண்கள் மேல் இனி நம்பிக்கை வருமா?-னு கேள்வி..

வீட்டில் வயது வந்தவர்கள்[மத்திம / வயதானவர்கள்] அன்னியோன்யமாக இருப்பது குற்றமில்லை ..

வீட்டில் அனைவரும் மனம் விட்டுப் பேசுங்கள். தவறுகள் குறித்தும்.. பின் விளைவுகளையும் ....

அவர்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள், அது நியாயமான எதுவாக இருந்தாலும்...

சொந்தம், பந்தம், அயலவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் கவனமாக இருங்கள். நம் குழந்தைகள் நமக்குக் கடவுள் கொடுத்த வரம்.‌ அவர்களைப் பாதுகாப்பது நம் கடமை.

3. பிரேமலதா :

குழந்தைகள் நம் மனஅழுத்தத்தை குறைக்க வல்ல அற்புத சக்தி படைத்த தேவதைகள்....

வளர்ந்த/வளர்ந்து வரும் /வறுமை நாடு.. எங்கும் பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளுக்கு மட்டும் வேறுபாடே கிடையாது...

கள்ளிபாலிடம் இருந்து காப்பாற்றி
ஆண்பாலிடம் மாட்டி கசங்கி போகவா
தாய்பால் கொடுத்து வளர்த்தோம்...?

Pedophilia வயதுக்கு வராத குழந்தைகள் மேல் ஈர்ப்பு ... ஒரு வகையான மனநோய். நாயுடைய தன்மை கடிப்பது என்பது போல தான் இவர்களின் நிலையும். வீட்டில் உள்ளவர்கள் இதை கண்டு அறிய வேண்டும்.

பாலியல் கல்வி அத்தியாவசியமானது.

Nuclear weapon நாட்டுக்கு கேடு
Nuclear family சமுதாயத்திற்க்கு கேடு

மானம் நாம் உடுத்தும் உடையில் இல்லை.. வாழும் வாழ்க்கையில் இருக்கிறது...

தைரியம் சொல்லி வளர்க்க வேண்டும்.

கற்பு போய்விட்டால் என்ன வாழ்க்கையே போய்விட்டதா என்ன? என்று துணிச்சலோடு வாழ கற்று தர வேண்டும் ...

பிரேம்ஸ் கூறிய எடுத்து காட்டு சுனிதா கிருஷ்ணன்.

4. சந்தியா ஸ்ரீ::

விவசாயத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சி வரை .. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் இல்லாத தொழில்கள் என்ற ஒன்று இங்கு இல்லை..

கூட்டுக்குடும்பம் .. எல்லா வகையிலும் பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருந்தது..

மற்றவர்களுக்கு நடந்தால்.. ‘அலட்சியம்’ மற்றும் ‘நமக்கு என்ன வந்தது’ என்று நினைக்கும் மனநிலை, மாறி ஒற்றுமை உணர்வு மேம்பட வேண்டும்..

பெண்பிள்ளை தவறுகளைச் செய்யும் பொழுது அவர்களைக் கண்டிக்க பெண்களான நமக்கு முழு உரிமை இருக்கிறது.. [ ஆனா.. நடைமுறை சாத்தியம் இல்லையே?.. நீ யார் என்னை கேட்க? ன்னு குழந்தை /பெண் /சமூகம் கேட்குமே??]

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் போராளிகளாக இருப்பதைக் காட்டிலும் புத்திசாலிகளாக இருந்தாலே போதும். [ சபாஷ்]

ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை பாதுகாக்க கற்றுக்கொடுப்பது [சபாஷ் ] ..

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளைக் கற்றுத்தர வேண்டும்.

யார் நல்லவர், யார் கேட்டவர் என்றும் , ஒரு ஆண் ‘தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறான்' என்பதையும் .. பார்வையில் உணரும் வண்ணம் அவளுக்கு கற்றுக்கொடுங்கள்.. [ சபாஷ்.. அருமை....]

கண்களுக்கு உறுத்தாத உடை/காவல் துறை அலைபேசி தொலைபேசி எண் தெரியப்படுத்துதல்..

தவறு என்றுபட்டால் தட்டிகேள் தவறில்லை..
உன் குழந்தைக்கு நீ ஒரு ஆசிரியையாக இரு பெண்ணே..

5. செல்வ சங்கரி

"மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்றார் கவிமணி, ஆனால் பெண்குழந்தைகள் பாதுகாப்பு????

இதற்கு உண்மையான தீர்வு பெண்குழந்தைக்கு பாதுகாப்பையும், விழிப்புணர்வையும் போதிக்கும் அதேவேளையில் ,ஆண்குழந்தைகளிடம் பெண்களை பாதுகாப்பது உன் கடமை, பெண்களை மதிக்க வேண்டும், உன் சொல்லாலோ, செயலாலோ அவர்களை காயப்படுத்தக்கூடாது , என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

ஆனால், இவை உடனடியாக நிகழும் மாற்றமல்ல....
மெதுவாக நிகழ்ந்தாலும் இதுவே நிரந்தரமான, நாளைய சமுதாயத்திற்கு தேவையான மாற்றம். [சபாஷ், அருமை ]

இத்தகைய மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பு பெண்களாகிய நம் கைகளில்தான் உள்ளது.

6.கனிஷ்கவர்னா::

பெண்கள் நாட்டின் கண்கள்”.

குழந்தைகளுக்கு தொடுகைகளில் உள்ள வித்தியாசங்களை சொல்லி.. அதை தடுக்க கொடுக்க வேண்டும். [கத்தி சத்தம் போட்டு...]

பெற்றோர்கள் உற்ற தோழர்களாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கு தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஆண் குழந்தைகளின் பெற்றோரும் சிறு வயதில் இருந்தே பெண்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். [சபாஷ்]

நம் கண்ணே நமக்கு மிகப் பெரிய ஆயுதம் தான்..[பத்ரகாளி ??]

எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பயப்படாமல் தைரியமாக, சமாயோசிதமாக சிந்தித்து....கையாள வேண்டும்.

எப்பொழுதும் முடிந்த அளவுக்கு ஆள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். [எப்பொழுதும்.?? ....சாத்தியமில்லை .. ]

வெளியே செல்லும் பொழுது தற்காப்புக்காக கையில் பெப்பர் ஸ்ப்ரே வைத்துக் கொள்ள வேண்டும். [உபயோகிக்க நேரம் வேண்டுமே?.. ஆனாலும் சரியே...]

ஒரு ஆணிடம் பேசும் பொழுது அவர் நம் கண்ணை பார்த்து பேசுகிறாரா இல்லை பார்வை தப்பானதாக இருக்கிறதா என்பதை வைத்து அவரிடம் பழகும் முறையை தீர்மானிக்க வேண்டும். [சபாஷ்]

7. தனுஜா ::

இன்று பெண்களுக்கு வாய்ப்புகள் கூடி உள்ளது..

நம் பெண் பிள்ளைகள் யாருடன் பழகுகின்றனர் என்பதைக் கண்காணிக்க வேண்டும்,

நம் செயல் எந்த வகையிலும் அவர்குளுக்கு மன இறுக்கத்தைக் கொடுத்து விடக் கூடாது,

எந்த விதமான தோல்வியையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நாம் இக்காலத்தில் உள்ள குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்.

பேருந்தில் செல்லும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்று சொல்லி தர வேண்டும்...

குழந்தைகள் பார்க்கும் ஊடகங்களை கண்காணிக்க வேண்டும்.

வீரத்தை.. விதைக்க வேண்டும்...
எப்போதும் ஒரு ஊசி,மிளகாய் பொடி.. கைப்பையில் தயாராய்.. இருக்க வேண்டும்.மேலும் தற்காப்பு கலைகள் கற்று கொள்ளுவது கூடுதல் பலம்.

முக்கியமாக எது சரியான /தவறான அணுகுமுறை என்பதைப் பிரித்தறிய கற்றுக் கொடுக்க வேண்டும்.

எது நடந்தாலும் தைரியமாக வீட்டில் தெரிவிக்கும் தோழமை வேண்டும்..

8. Jaa Sha ..:

சார்ந்து வாழ்தல்... சக மனிதரில் நேசம்....இதற்கு தீர்வு... [சபாஷ்]

பெண்பிள்ளை தனித்திருக்க கண்டால் தயங்காமல் துணையிருத்தல் ...
என் வீடு என் மக்கள் என்றில்லாமல் ...
என் வீட்டைச்சுற்றி என் மக்கள்... என்று நம்பிக்கை விதைத்து நல்ல உள்ளங்களோடு உறவாடல் அவசியம்...

சார்புக்கொள்கை கொண்டு சக மனிதரில்
நேசம் கொள்வோம் ...

நல்லவைகளை மட்டும் பகிருவோம் ... அல்லவைகளை புறந்தள்ளுவோம்..[சபாஷ்]

ஆண்பிள்ளை வளர்த்தலும்....அவர்களிடம் பெண்பிள்ளை மதிப்பை உணர்த்துதலுமே அவசியமான ஒன்று...[ நச்... & சபாஷ்]

9. ஈஸ்வரி : கையால எழுதியாவது கட்டுரை எழுதணும்-ங்கிற உங்க முயற்சிக்கு ஒரு பெரிய வணக்கம்....

பெண் குழந்தியின் போராட்டம் கருவறையில் இருந்து ஆரம்பம்..

முதலில்.. பூப்பெய்தும் வரை ஆடி பாட சுதந்திரன் இருந்தது.. இப்போது அதுவுமில்லை..

படிப்பு பண்புகளை விதைக்கலை..

வீடு பாதுகாப்பானதா ? -ன்னு கேள்விக்குறி இருந்துகிட்டே இருக்கு...

பெண்கள் மட்டுமல்ல... திருநங்கைகளும் பாதிக்க படறாங்க...[good ]

கண்ணை கவரும் உடை தவிர்த்து.. தைரியம் .. தன்னம்பிக்கை....போதிக்கணும் ..

தற்காத்து கொள்ள தயாராய் .. சில உத்திகள்.. பயன்படுத்த தயங்க கூடாது..

ஆன் குழந்தைகளுக்கு பெண்களை சமமா மதிக்க கற்று தர வேண்டும்..

அச்சம் தவிர் ..

10. க்ருஷ்ணப்ரியா நாராயணீ

முழு உடல் வளர்ச்சி அடையும் வரை எந்த விலங்குகளும்... பெண் விலங்குகளை பாலியல் தொல்லைகள் செய்வதில்லை... [ நச் ]

அரசியல் சாடல்.. [ நன்று...]

தாயோ அல்லது தகப்பனேதான் தனது குழந்தைகளை...பாதுகாக்க வேண்டும்...

குழந்தைகளின் எண்ண அலைகளை ஒரு தாயால்தான் அதிகம் உணர முடியும்...

குழந்தைகளுக்கு... உடல் பலம் மற்றும் மனோ பலம் இரண்டையும்... உருவாக்கும் கடமை பெற்றோர்களுக்குத்தான் இருக்கிறது...

வீர வசனங்களெல்லாம் வாய் வலிக்கும் வரை பேசலாமே ஒழிய... நிதர்சனம் மிகக் கொடுமையானது.. [நச்.. நிஜம்...]

BEWARE OF HUMEN BEINGS... [ வருத்தப்பட வேண்டிய உண்மை..]

11.கார்த்திகா மனோகரன் ::

பாரதி இக்காலகட்டத்தில் இருந்திருந்தால்" மாதர் தம்மை வண்கொடுமை செய்யும் மாந்தரை கொளுத்துவோம்" என பாடியிருப்பார்.

ஓடி, ஆடி துள்ளித்திறிய வேண்டிய மழழைப்பருவம் இன்று......good touch , bad touch பற்றி விளக்கம் கேட்கிறது.... [வருந்த வேண்டிய விஷயம்]

பெண்குழந்தைகளுக்கு " நிமிர்ந்த நன்னடையுடனும் , நேர்கொண்ட பார்வையுடனும் வாழ கற்றுக்கொடுங்கள்.

கையை விட்டு பின்னால் நில்லுங்கள்...விழட்டும் ... தானாக எழுந்து நடப்பார்கள். [சூப்பர்]

பெற்றோர் தோழமையுடன் இருக்க வேண்டும்..

தைரியத்தை நெஞ்சில் விதையுங்கள்.வெறும் தற்காப்பு கலைகள் மட்டும் போதாது சூழ்நிலையை தைரியமாகவும், புத்திசாலிதனமாகவும் கையாள கற்றுகொடுங்கள்.

தற்காத்துக்கொள்ள சிறு சிறு ஆயுதங்கள்.. வைத்திருக்கலாம்.

ஆபத்து நேரத்தில் உங்கள் எதிரிலிருப்பவரை காலில் தாக்குங்கள்..அதனால் எதிராளியை தாமதிக்க வைக்கலாம்.
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
12. ஜெயலக்ஷ்மி கோமதி::

பெண்களுக்கு அணிகலன்களால் இருந்த ஆபத்து போய் அவள் உடல் அமைப்பே ஆபத்தாக மாறியிருக்கிறது...

உங்கள் அருகாமையை உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

குழந்தைகளிடம் தோழமையுடன் இருங்கள்..

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை, தைரியத்தை, நேர்மையை, சமூக சிந்தனையை,
தற்காப்பு கலை, புத்தகங்கள் வாசிக்க கற்று கொடுங்கள்...

கண்கள் பார்த்து பேச கற்று கொடுங்கள்...[சபாஷ்]

டிவி, கணினி உபயோகம் பெற்றோர் முன்னிலையில் மட்டுமே என்ற முறையை ஏற்படுத்துங்கள்... [சபாஷ்]

உங்கள் கருத்தை பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள்... [நச்..]

தவறை கண்டியுங்கள் தண்டிகாதீர்கள்..

இவற்றையல்லாம் தாண்டி இந்த சமூகம் அவர்களுக்கு கற்பிக்க நிறைய பாடங்களை வைத்திருக்கிறது. அதை அவர்கள் கற்கும் போது உற்ற தோழனாக
துணை நின்று வாழ்க்கை பாதையில் பயணிக்க துணை புரியுங்கள்.. [ரைட்]

பணத்தை மட்டுமே தேடிச் செல்லாதீர்கள் .. [நச்..]

13. மஹாலக்ஷ்மி ::

சமூக சாடல்....

அருமையா தன்னுடைய வாழ்க்கையை மேற்கோள் காட்டி இருக்காங்க..

குடும்பத்து இளவரசி..

பொத்தி பொத்தி வழங்கப்பட்ட பொக்கிஷம்...

அடக்கமா வளந்தாங்க... அறிவோட .. நிறைய கலைகளை தெரிஞ்சுகிக்கிட்டாங்க..
காரணம் நல்ல குடும்பம் ..

அருமையான வாழ்க்கைத் துணை அமைந்ததால்... குடத்து விளக்கு.. மாடத்தை அலங்கரிக்க வந்துள்ளது.. [வந்துள்ளார்]

14.ஆர்த்தி :::

அக்டோபர் 11 - சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.-ங்கிற தகவலோட ஆரம்பிச்சிருக்காங்க..

குழந்தை திருமணம் அதிக அளவில் நடக்குது இந்தியாவில்....

பாலியல் கல்வியின் அவசியம் சொல்லி இருக்காங்க..

பாலின வேறுபாடு குறித்த அறிவு தெளிவு வேண்டும்-னு வலியுறுத்தி இருக்காங்க..

சுயமா சிந்திக்க... பாதுகாப்பில்லாத நிலை உணர்ந்தால் ... பெற்றவர்கள் உதவி செய்து .. பிள்ளைகளின் மன அழுத்தம் களையனும்-னு சொல்லி இருக்காங்க...

ஆணின் தவறு - சம்பவம்..
பெண்ணின் தவறு - சரித்திரம்..

பெண்கள்/ பெண் குழந்தைகள் பாதுகாப்பு .. ஆண் , பெண் இணைந்த சமூக கடமை.. [சபாஷ்]

15. வித்யா நாராயணன்.::

பெண்கள் புவியில் பிறந்தபின் பெரும்தவம்செய்யணுமோ அவங்களைபாதுகாக்க.?
[ சபாஷ்]

முன் காலத்தில் பெண் சிசு கொலை.. தற்போது சிறு குருத்துக்களிடமும் பாலியல் வன்முறை...

பெற்றோர் பிள்ளைகளுடன் தினமும் பேச/மாற்றம் உள்ளதா என பார்க்க .. வேண்டும்.. குழந்தையிடம் பழகுபவர்களை, அவர்களின் பின்புலன்கள் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம்.

குழந்தைகளை தற்காப்பு கலை கற்க.. / ஆபத்தில் எதிர்க்க/ கத்தி கூச்சல் போட கற்றுக்கொடுக்கலாம்.

பயத்தை நீக்கி பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கையை ஊட்டவேண்டும்.

இணைய தல பயன்பாடு வரன்முறை தேவை..

நம் உடைகளில் கவனம் தேவை.

ஆண்பிள்ளைகளிடம் பெண்களுக்கான மரியாதையை சிறுவயதுமுதல் அளிக்க கற்றுதர வேண்டும்.

வீட்டில்பெரியவர்கள் இருக்கும்போது பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கு பஞ்சமே இருக்காது.
முக்கியமாகஇப்போதுஉள்ளசூழ்நிலையில் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோர் தங்களுக்கு தனிமைஅளிக்கமறுக்கிறார்கள். அதை தவிர்த்து.. துணையின் தேவையை புரிந்துகொள்ள மனைவிமார்கள் முன் வர வேண்டும்.[சபாஷ்]

தனிமனித ஒழுக்கம் ரொம்பவே முக்கியம். யோகா, மெடிடேஷன் .. எண்ணங்கள் நேர்மறையா இருக்க வழி.

அரசு..கடுமையான சட்டத்தைஉருவாக்கி இருக்கிறது.. பின்பற்றவும் வேண்டும்..

குடும்பங்களில்..அலுவலகங்களிலும்.. ,பொதுஇடங்களிலும் மரியாதையாக பெண்களை நடத்த வேண்டும் .

ஊடகங்களில் பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கப்படுவது அறவே நிறுத்தப்பட வேண்டும் [ நச்..]

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது ஆப்கானிஸ்தான். 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.

இந்தவரிசையில், 4வதுஇடத்தில்இந்தியாவும், 5வதுஇடத்தில்சோமாலியாவும்உள்ளன.

பாரதி கண்ட புதுமைப்பெண்களைத் தவறாக புரிந்துகொண்டு, போட்டியாக பாவித்து இதுவரை அடக்கி ஆண்ட சமூகம் சமமாக நடத்த தெரியாமல் தவிக்கிறது.

சங்ககாலத்திலேயே ஔவையார் பெண்களின் பாதுகாப்பைபற்றி கீழ்கண்டவாறு பாடியிருக்கிறார்.

“நிலம் காடாக இருக்கலாம், நாடாக இருக்கலாம்; பள்ளமாக இருக்கலாம் மேடாக இருக்கலாம். ஆண்கள் எங்கே நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்குதான் அந்த நிலமாகிய பெண்ணும் நல்லவளாக இருக்கமுடியும்.” :

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்!
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்”
அப்போதுதான்மானுடம்வெல்லும்.

16. தேவா::

குழந்தைகள் ஆணோ,பெண்ணோ உங்களுடன் கலந்து பேச, தோழமையுடன் பழக... அனுமதியுங்கள்.. செக்ஸ் பற்றியும் ! உங்களை உங்கள் குழந்தைகள் எதற்கும் பயமின்றி அணுக வேண்டும்..

.அவளுக்கு அவளே பாதுகாப்பு ! அவள் பெறும் கல்வி,அதனால் உண்டாகும் செல்வம்,வாழ்க்கை முகத்திலறைந்து சொல்லித் தரும் அனுபவப் பாடங்கள்.. இவையே அவளுக்கு என்றுமே பாதுகாப்பு !

,பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரத்திற்கு கல்வி அவசியம்.. கல்வி உள்ளத்தை விரித்து உலகைச் சுருக்கும்.. மகத்தான தன்னம்பிக்கையைத் தரும்..[/QUOTE]

அனைவரின் கருத்துக்களும்.. மிக அருமை..

இங்கே அணைத்து பங்களிப்பாளர்களும் ..

பெண் குழந்தைகள் பாதுகாப்பு பத்தின கட்டுரைகள்-ல .. ஒருமித்த குரல்-ல சொன்ன விஷயங்கள்::

பெற்றோர் தோழமையுடன் இருத்தல்...
தற்காப்பு கலை அறிதல் ...
தைரியம் ..&, நம்பிக்கை வளர்த்தல்....
அடிப்படை பாலின வேறுபாடு/கல்வி புகட்டுதல்...
போராளியா / புத்திசாலி /சாமர்த்திய சாலியா இருக்கணும்...
சமூக ஒற்றுமை/பறந்து பட்ட பார்வை வேணும்..

துணையின் தேவையை புறந்தள்ளாமை... ன்னு தோழி. Zainab & வித்யா நாராயண் வலியுறுத்தி இருக்காங்க.. [ சபாஷ்]

கற்பு உடல் சார்ந்தது இல்ல.. அது பெரிய்ய விஷயமும் இல்ல - ன்னு ஆணித்தரமா சொல்லி இருக்காங்க நம்ம பிரேமலதா..

பெண்ணுக்கு அவளே பாதுகாப்பு-ன்னு அருமையா தேவா சொல்லி இருக்கார்...

தொகுப்பில் தவறிருந்தால் /பிழையிருந்தால் பொறுத்து அருள்க ...


கடைசியா ஒரு விஷயம்...

ஆணுக்கு பெண் சரிநிகர் -ல்லாம் இல்லை ... இல்லவே இல்லை...

பிறக்கும்போதே கடவுள் ஆண்களுக்கு பிள்ளைக்கு சந்ததிகளை பெருக்கும் அணுக்களை மட்டுமே கொடுக்கிறார்... பெண்களாகிய நமக்கு.... அச்சந்ததிகளை தாங்கும் சக்திவாய்ந்த கருப்பையை மட்டுமல்ல...கருமுட்டைகளையும் தந்து.. அவர்கள் பலம் பெற்று வாழ ... பசி தீர்க்கும் ஸ்தன்யங்களையும் குடுத்து .. அண்ண பூரணியாதான் படைக்க படறா.

எங்கே பெண் போற்றப்படுகிறாளோ... அங்கே சகல வளங்களும் நிறைந்து இருக்கும்....

இன்னும் எழுத விஷயமிருக்கு... நேரம்.... ???

நல்ல வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்...

வணக்கம்....
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
லச்சுக்கா சபாஷ்... ரொம்ப அழகா சொல்லிடீங்க... கட்டுரை எழுதிய அனைத்து தோழமைகளுக்கு என் வாழ்த்துக்களும், வணக்கங்களும் :love:..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top