• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Exclusive பெண் குழந்தை பாதுகாப்பு - கட்டுரை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அன்பான வாசகர்களே! எழுத்தாளர்களே!

பொழுது போக்குவதற்கு மட்டுமா இந்த தளம்..?
நமக்கு , நம் சமூகத்திற்கு இத்தளம் நல்ல தோழிகளை மட்டுமா கொடுத்தது?
நல்ல பல கருத்துக்களையும், தகவல்களையும், புரிதல்களையுமல்லவா கொடுத்தது?


இங்கே நாம் கற்றுக் கொண்டது அதிகம்.. அடுத்தடுத்த பரிணாமங்கள் , நம் பல்வேறு திறமைகளை வெளிக் கொணர இத் தளம் வாய்ப்பு கொடுத்தது.. அவற்றை சொல்லி முடியாது.. என்பதைவிட சொல்லில் அடங்காது என்பதும் மிகையல்ல....

இது ஒரு payback டைம் .. சைட் டே (SITE DAY ) அன்று...அனைத்து துறையிலும் பரிமளித்தாலும் ் ..பெண்களாகிய நமக்கு / பெண் குழந்தைகளுக்கு... இன்னமும் பாதுகாப்பு கேள்விக்குறியே .. நம்மை காத்துக் கொள்ள அடுத்தவரை நம்பியே இருக்க வேண்டியதுள்ளது என்ற நிலை மாற என்ன செய்யலாம் ? என்ற உங்கள் கருத்துக்கள்/பார்வைகள் கட்டுரையாய் கொடுக்க முடியுமா? இதுவும் ஒரு சமூக பங்களிப்பு.. படிக்கும் ஒரு தோழியாவது, நாம் சொன்ன கருத்தினை செவி மடுத்து , கடைபிடித்து பாதுகாப்பாய் இருப்பதாய் உணர்ந்தால் கூட.. அது ஒரு மகத்தான வெற்றி நமக்கு...

ஆண் பெண் பாலின வேறுபாடு இன்றி அனைவரின் கட்டுரைகவளும் வரவேற்கப்படுகின்றன..

1 .ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.

2 . ஜனவரி 24 ஆம் தேதிக்குள் உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நபரின் கட்டுரையும் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

3. அவ்வாறு எழுதிய கட்டுரைகளை த்ரெட் ஓபன்-ல் இருக்கும் தேதிகளில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

4 . நடைமுறை சாத்தியக் கூறுகளை மனதில் வைத்து, பெண்களின் பாதுகாப்பு குறித்த உங்கள் கட்டுரைகள் அமைதல் வேண்டும்.

5. மேடை நாகரிகமற்ற கருத்துக்கள், விமர்சனங்கள், மற்றவர் மனதைக் காயப்படுத்தும் கட்டுரைகள் ஏற்கப்படமாட்டாது.

6. பெயர்கள் பதிவு செய்த பின், உங்கள் படைப்புக்களை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற விவரத்தைத் தெரிவிக்கிறோம்.

இது ஒரு புது முயற்சி. போட்டி அல்ல. சமூக பங்களிப்பு..

பெண்களுக்காக...
பெண்களால்...
பெண்களுடைய


பாதுகாப்பை உறுதி செய்து மகிழ்ச்சியோடு கலந்து ஆரவாரத்தோடு அனுபவிப்போம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு

‘வயசுக்கு வந்த பொண்ணுங்களை வைச்சிக்கிட்டு இருக்கிறதே வயிற்றில நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கிற மாறி இருக்கு’

இந்த வார்த்தைகளை என் தாய் சொல்லி நான் பலமுறை கேட்டிருக்கிறேன். என் தாய் மட்டுமில்லை. பெண் பிள்ளைகளை பெற்ற தாய்களுக்கே உரித்தான வசனம் அது. ஆனால் இன்று பெண் சமுதாயம் பெரியளவிலான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கண்டுவிட்ட நிலையில்... பயந்து கொண்டிருந்த தாய்மார்களும் கூட தங்கள் பெண்களை சாதனையாளர்களாய் மாற்றிப் பார்க்க வேண்டுமென்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

அதன் விளைவாகவே வீட்டின் வாயிலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கரங்கள் வேற்றுக் கண்டங்களுக்கு சென்று மட்டைகளைத் தூக்கி சிக்ஸராய் விலாசுகின்றன. சமையலறைக்குள் வறுவல் பொரியல் செய்து கொண்டிருந்த கரங்கள் வானுயுற பறக்கும் விமானங்களை இயக்கத் தொடங்கிவிட்டன.

ஆனால் இந்த நிலை நீடிக்குமா? இல்லை .நீடிக்கத்தான் விடுவார்களா? சில காலங்களாகவே பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற பார்வை மாறியிருக்கும் நிலையில் மீண்டும் பின்னோக்கி சென்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற ஒரு வார்த்தை பெண் முன்னேற்றத்திற்குத் தடையாய் பூதாகரமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

பருவ வயது பெண்ணை பாலியல் கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற நிலை மாறி இன்று அவள் பிஞ்சு குழந்தையாய் பிறந்த மறுகணமே பாதுகாக்க வேண்டிய அவல நிலை! பல ஜந்துக்களின் பார்வையில் அவள் பால்மணம் மாறாத குழந்தை என்று தெரிவதில்லை. அது அவள்! ... அவ்வளவே!

இப்படி ஒரு கொடூர நிலையை எதிர்கொள்ளும் பெண் குழந்தைகளை எண்ணும்போது அந்த பாவப்பட்ட பெண் சிசு இந்தப் பூமியில் ஜனிக்காமல் தன் தாயின் கருவிலேயே சிதைந்து போயிருக்க கூடாதா என்று தோன்ற செய்கிறது.

ஆனால் அதோடு எல்லாம் முடிந்து போய்விடுமா என்றால் அதுதான் இல்லை. பெண்ணினங்கள் குறைய குறைய ஆணினங்களின் மனரீதியான வக்கிரம் இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் போகும்.

முளையிலேயே வெட்டி வீழ்த்தியிருக்க வேண்டிய இந்தக் குற்றத்தை ஒரு விதத்தில் வேரூன்றி வளரச் செய்ததே நாம்தான். எந்தக் குற்றம் யார் பார்வைக்கும் வராமல் மறைக்கப்படுகிறதோ அந்தக் குற்றத்தை செய்வதற்குப் பயமோ தயக்கமோ இருக்காது.

பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதன் முதல் மூல காரணமே அதுதான். வாய் பேச முடியாத அந்தப் பிஞ்சு குழந்தைகளுக்கு தனக்கு என்ன நேர்கிறதென்றே தெரியாமல் போய்விடுகிறது. அப்படியே அத்தகைய தவறுகள் கண்டறியப்பட்டால் குடும்ப மானம் கெளரவம் என்று நாமும் அதை மூடி மறைத்துவிடுகிறோம்.

எல்லாத் தவறுகளுக்கும் முதல் மூலாதாரம் என்று உண்டு. அதை அப்போதே நாம் களை எடுத்திருந்தாள் இப்போது அது இத்தனை பூதாகரமாய் வளர்ந்திருக்காது. மேலும் இத்தகைய பாலியல் வன்கொடுமைகளில் குற்றவாளி தவறு செய்பவன் மட்டுமல்ல. அத்தகைய தவறுகளை கண்டும் காணாமல்விட்ட நாமும்தான்.

சமீப காலத்தில் நான் பார்த்த ஓர் அதிர்ச்சிகரமான கணக்கெடுப்பு சொல்கிறது. 90% சதிவீதமான பெண்கள் தங்கள் பால்ய பருவங்களில் இத்தகைய பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருப்பார்கள் என்று! ஆனால் அது யாரின் பார்வைக்கும் கொண்ட வரப்படாமலே போய்விடுகிறது. ஆதலாலேயே good touch bad touch போதிக்கும் அதே நேரம் அதை வெளிப்படுத்தும் தைரியத்தையும் போதிக்க வேண்டும். ஓர் வயதிற்கு மேல் அத்தகைய பாலியல் சீண்டல்களை எதிர்த்து.... தன்னைத்தானே காத்து கொள்ளும் தற்காப்புக் கலையையும் கற்பிக்க தவற கூடாது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்று சொன்ன அடுத்த நொடி நம் நினைவுக்கு வருவது ஓர் பெண் குழந்தையை ஈன்ற தாய். இன்று அவளே அந்தக் குழந்தையின் பாதுகாப்பில் முதலிடம் வகிக்கிறாள். ஏனெனில் இன்று நாமெல்லாம் நம் சகல சௌகரியங்களுக்காகத் தனி தீவுகளுக்கு குடிபெயர்ந்துதுவிட்டோம். அதாவது தனிக்குடித்தனங்களுக்கு. அங்கேதான் அந்தக் குடும்ப தலைவிக்கு பொறுப்புகள் கூடிப் போகிறது. வேலைக்கும் சென்று வீட்டையும் பார்த்து கொள்ளும் அந்தப் பெண்ணால் எப்படி தன் குழந்தையின் பாதுகாப்பில் கவனம் செலுத்த முடியும். போதையை விடவும் தனிமை தவறான விஷயங்களை அதிகமாய் போதிக்கும். அத்தகைய தனிமைதான் ஓர் ஆணின் தவறான வளர்ப்பில் தொடங்கி பல பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கக் காரணகர்த்தாவாகவும் மாறி விடுகிறது. ஆதலால் பெண் குழந்தைகளோ... ஆண் குழந்தைகளோ... அவர்களைத் தனிமையில் விடாமல் இருப்பதே சாலச்சிறந்தது.

இவையெல்லாவற்றையும் தாண்டி தினம்தோறும் செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் வரும் பாலியல் குற்றங்களைப் பற்றிய செய்திகள் யாவும் எங்கேயோ தூர தேசங்களில் இருந்து வரவில்லை. நம் தெருவிலோ அல்லது நம் வீட்டின் அருகிலோ... ஏன் ? நாம் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் என்று வெகு அருகாமையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. நமக்கேன் பிரச்சனை என்று கண்டும் காணாமல் போகும் அலட்சிய மனநிலைதான் இத்தகைய குற்றங்கள் பெருகக் காரணம். லேசாகத் தவறென்று நம் கண்ணில் ஒரு விஷயம் பட்டால் அடுத்த கணமே அதைத் துணிச்சலோடு தட்டிக் கேட்க முன்வர வேண்டும். குறைந்தபட்சம் அதைக் குறித்த எச்சரிக்கை உணர்வையாவது அந்தக் குழந்தைக்கோ அல்லது அவர்களின் பெற்றோருக்கு ஏற்படுத்த வேண்டும்.

நாம் பெற்ற குழந்தைகள் மட்டுமல்ல. ஒவ்வொரு பெண் குழந்தையின் பாதுகாப்பும் நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். அப்போதே இத்தகைய குற்றங்கள் வெகுவாக குறைக்கப்படும்

கடைசியாய் ஒரு வரி... ‘பெண்ணே ரௌத்திரம் பழகு'
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இன்றைய நவீன உலகம் எத்தனையோ புதுமைகளைக் கண்டிருந்தாலும், இந்த ஒரு விடயத்தில் மட்டும் மனிதன் இன்னும் தரம் தாழ்ந்தவனாகவே வாழுகின்றான். உத்தமர்கள் வாழ்ந்த இதே பூமியில் பெண்ணைப் போகப் பொருளாகப் பார்க்கும் ஜந்துக்களும் இருப்பது காலத்தின் கோலம்.

நண்பர்களே! இதே விஷயத்தோடு 'தாய்மார்களே ஒரு நிமிடம்' என்ற தலைப்பில் உங்களோடு ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். இருந்தாலும், ஓர் உண்மைச் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆவலில் மீண்டும் வந்திருக்கிறேன்.

லண்டனில் உள்ள ஒரு கோர்ட்டில், ஆசியக் குடும்பம் ஒன்றினால் பதியப்பட்ட வழக்கு இது. கூட்டுக் குடும்பமாக, ஒற்றுமையாக வாழ்ந்த குடும்பத்தில் அக்காவிற்கு சில பெண் குழந்தைகள். கூடவே தாத்தா, பாட்டி, தாய்மாமன் என உறவுகள். தாய்மாமனுக்கு அப்போதுதான் புதிதாகக் கல்யாணம் நடந்திருக்கிறது.

இந்த நிலையில், வீடே கொண்டாட்டத்தில் இருக்கும் போது, அக்காவின் பெண்பிள்ளைகளில் ஒன்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறது. இது எப்படியோ பெற்றோருக்குத் தெரிய வர, மற்றக் குழந்தைகளையும் அழைத்து விசாரித்திருக்கிறார்கள். இதில் பரிதாபம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பிள்ளை வாயைத் திறக்கவே இல்லை. விசாரித்துத் தெரிந்து கொண்டது வேறு ஒன்றுமல்ல. இந்த நிலைமைக்குக் காரணம் தங்கள் வீட்டில், தங்களோடே வளர்ந்து, வாழ்ந்து வருகின்ற அதே தாய்மாமன் தான்.

வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. எப்படியோ பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை மனோ ரீதியாக அணுகி பேச வைத்த போது, கேவலமான பல விஷயங்கள் வெளியே வந்திருக்கின்றன.
கொஞ்ச காலமாகவே தன் தாய் மாமன் தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், அவரின் முதலிரவு அன்று கூட தன்னை தவறாக நடத்தியதாகவும் அந்தப் பெண் பிள்ளை வாக்கு மூலம் கொடுத்திருக்கிறது.

சம்பந்தப்பட்டவரின் மனைவி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, கழிவறைக்குச் செல்லும் கணவனை நான் காவல் காக்க முடியுமா? இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? என்று காறி உமிழ்ந்தாளாம்.
நீங்கள் கோர்ட்டுக்குப் போகலாம், சம்பந்தப்பட்ட அயோக்கியர்களுக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால்... அந்தப் பிஞ்சு மனதிற்கு மருந்திட உங்களால் முடியுமா? நாளைக்கு அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்ன? பார்க்கும் ஆண்களையெல்லாம் பசுத்தோல் போர்த்திய புலியாகத்தானே எண்ணப் போகிறது.

இன்று இது போல நடக்கும் பல அவலங்களை எடுத்துப் பார்த்தால், பெரும்பான்மையாக குற்றவாளிக் கூண்டில் நிற்பது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களாக, நெருங்கியவர்களாகத்தான் இருக்கின்றார்கள். நண்பியின் வீட்டிற்கு நம்பித்தான் உங்கள் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறீர்கள். ஆனால் அந்தப் புற்றில் இருப்பது பாம்பா? தேளா? யாருக்குத் தெரியும்? கவனமாக இருங்கள்.
பள்ளிக்கூடத்தில் நெறி தவறி நடக்கும் ஆசிரியப் பித்தர்களும் இருக்கிறார்கள்.

உளவியல் ரீதியான கணிப்பீடுகளின் படி பார்த்தால், இளைய தலைமுறையினரை விட, நடுத்தர வயதினரும், அதற்கு மேற்பட்டவர்களுமே இதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். காரணம், நம் சமூகக் கட்டுப்பாடுகள்.
வீட்டில் வயது வந்தவர்கள் அன்னியோன்யமாக இருப்பதை ஏதோ குற்றமாகப் பார்க்கிறோம். வீட்டிற்கு மருமகனோ, மருமகளோ வந்துவிட்டால், பெரியவர்கள் மனம் விட்டுப் பேசுவது கூட மறுக்கப்படுகிறது.
"இத்தனை வயதுக்கு மேல் இவர்களுக்கு இது தேவைதானா?" என்ற கேள்விக்கும், கேலிக்கும் பயந்து, வக்கிரங்களை மனதில் சேமித்துச் சேமித்து, அது எங்கோ போய் வெடிக்கிறது.
அப்பா, அம்மா ஆகட்டும், அல்லது மாமனார், மாமியார் ஆகட்டும் எல்லோரும் மனிதர்கள் தான். வயது போவதால் மட்டும் எல்லோருக்கும் பக்குவம் வந்து விடுவதில்லை. பக்குவமிருந்தால் பரம சந்தோஷம். இல்லையா? அவர்களை வாழவிடுங்கள். உங்கள் வீட்டுப் பெரியவர்களை ஊர் திருத்து முன் நீங்கள் களையெடுங்கள்.

வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அங்கத்தினரதும் எண்ணம், சிந்தனை ஓரளவிற்கு நமக்குத் தெரிந்திருக்கும். பேசுங்கள், மனம் விட்டுப் பேசுங்கள். நேரடியாகத் தாக்காமல், பின் விளைவுகளை பொதுப்படையாகப் பேசுங்கள். அவர்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள், அது எதுவாக இருந்தாலும்... மனைவியின் மறைவிற்குப் பிறகு அவளை மனதில் வைத்துப் பூஜிக்கும் கணவன் அபூர்வம். பிள்ளைகளுக்குப் பயந்து மறுமணம் செய்யாமல் அவதிப்படுபவர்கள் தான் ஏராளம்.

பிள்ளைகளோடு பேசுங்கள். அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால் பொறுமையாக விசாரியுங்கள். சொந்தம், பந்தம், அயலவர்கள், நண்பர்கள் எல்லாம் இனிதாகவே இருந்தது ஒரு காலம். இது கலிகாலம். நம் குழந்தைகள் நமக்குக் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்.‌ அவர்களைப் பாதுகாப்பது நம் கடமை.
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பெண் குழந்தைகள் பாதுகாப்பு

குழந்தைகள் நம் மனஅழுத்தத்தை குறைக்க வல்ல அற்புத சக்தி படைத்த தேவதைகள்....
வாய்பேச தெரியாத வயதிலும் நம் கவலைகளை மறக்க வைக்கும் அற்புத சக்தி கொண்ட மருத்துவர்கள்...
அந்த பிஞ்சுகளை நசுக்கி கசக்கி எறியும் இராட்சச மனம் கொண்டவர்களை மனிதர்கள் என்று சொல்ல முடியுமா?.....

அரசியான பாஞ்சாளியாகட்டும்
கோடிஸ்வரியான மதுவாகட்டும்
குப்பத்தில் இருக்கும் வீராகாவட்டும்
பள்ளிக்கு செல்லும் சிறுமியாகட்டும்
வயதுவந்த குமரியாகட்டும்
தலை நரைத்த கிழவியாகட்டும்


எந்த பாகுபாடும் இல்லை, எந்த வேற்றுமையையும் இல்லை, எல்லாம் ஒன்றே. எல்லா காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, சுதந்திரமும் இல்லை.
வளர்ந்த நாடு ஆகட்டும், வளர்ந்து வரும் நாடாகட்டும்... இல்லை வருமை நிலையில் இருக்கும் நாடாகட்டும் பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளுக்கு மட்டும் வேறுபாடே கிடையாது...

கள்ளிபாலிடம் இருந்து காப்பாற்றி வந்து
ஆண்பாலிடம் மாட்டி கசங்கி, கிழிந்து போகவா
தாய்பால் கொடுத்து வளர்த்தோம்...


வளர்ந்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பு பற்றியும் சொல்லலாம் பாதுகாப்பு கலையையும் கற்று தரலாம் ஆனால் பால் மனம் மாறப் பச்சிளங்குழந்தைகளுக்கு என்ன செய்ய?
  1. தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டிய தாய் பயத்துடன் பொத்தி பொத்தி வைக்கிறாள்..
  2. தனித்து வெளியே அனுப்புவதற்க்கு பயம் காரணம் பிள்ளையின் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை சுற்றி உள்ள சமுகம் அத்தனை பாதுகாப்பு இல்லை என்கிற அச்சம். அதனால் 24 மணிநேரமும் காவலாளி போல் இருந்து அவள் சுதந்திரத்தை அடக்கி வைக்கிறார்கள் . (மறுபடியும் ஆரம்பத்திற்கே அனுப்ப வழி பார்கிறீர்களே)
  3. பெண்குழந்தைகளுக்கு எல்லாம் தற்காப்புக்கலை கற்றுக்கொடுத்தால் மட்டுமே இந்த உலகத்தில் பாதுகாப்பாக இருக்க முடியுமா?
  4. ஒரு வித பயத்துடன் தான் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் இருக்க வேண்டுமா?
  5. இந்த சமுதாயத்தின் மீது ஒரு நம்பிக்கையில்லா தன்மையை தான் விதைக்க வேண்டுமா?
  6. நீ எப்போதும் யாரையும் நம்பதே பாதுகாப்புடன் இரு, எச்சரிக்கை உணர்வு என்ற Antenna எப்போதும் ஆன் லையே இருக்க வேண்டும் என்று அச்சத்தையும், பயத்தையும் ஊட்டி தான் வளர்க்க வேண்டுமா?

இத்தனை கடுமையான சட்டங்கள் இருந்தும் ஏன் இன்னும் பெண் குழந்தைகள் மேல் வன்கொடுமைகள் நடக்கின்றன, இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன... POCSO act 2012 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தும் இன்னும் ஏன் யாருக்கும் பயம் வரவில்லை. அத்தனை கடுமையான சட்டம், குழந்தைகள் பாலியல் துன்புறுத்துதலுக்கு.

Pedophilia வயதுக்கு வராத குழந்தைகள் மேல் ஈர்ப்பு உடையவர்களை இப்படி தான் சொல்லுவார்கள். அது ஒரு வகையான மனநோய். UK உலகத்திலேயே மூன்றாவது இடத்தில் இருக்கு குழந்தைகள் பாலியல் வன் கொடுமையில். இவர்களுக்கு எத்தனை கடுமையான சட்டம் போட்டாலும் பயம் வராது. நாயுடைய தன்மை கடிப்பது என்பது போல தான் இவர்களின் நிலையும்.

சமீபத்தில் சென்னையில் 11வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை, 7 வயது குழந்தைக்கு நடந்த கொடூரமான மரணம் என்னை புரட்டிபோட்டது என்றால் மிகையில்லை. அதை பார்த்த கண்டிப்பாக சுய அறிவுடைய மனிதர்கள் செய்ய கூடிய விஷயமாக எனக்கு தெரியவில்லை. வீட்டில் உள்ளவர்கள் தான் இதை கண்டு அறிய வேண்டும். நடுவயதில் உள்ளவர்கள் தான் வக்கிர புத்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

இந்த தளத்தில் தேவா என்ற எழுத்தாளர் ரொம்ப அருமையான செக்ஸ் பாடத்தை காதல் நீலாம்பரி என்ற கதையில் சொல்லி இருப்பார் முடிஞ்ச தயவு செய்து படியுங்கள். matured content என்று அபாசமாக நினைத்து ஒதுக்க வேண்டாம். வாழ்க்கை பாடம். அபாசம் இல்லை, அத்தியாவசியமானது. இப்ப நமக்கு சொல்லி தர யாரும் இல்லை அதனால தான் இப்படிபட்ட சூழலில் சிக்கி தவிக்கிறோம்...

Nuclear weapon நாட்டுக்கு கேடு
Nuclear family சமுதாயத்திற்க்கு கேடு


UK ல ஒரு புல்லியல் கூறுகிறது என்னவென்றால் மூன்றில் ஒரு குழந்தை தனக்கு நடத்த வன்கொடுமையை வாய் திறந்து பெற்றோர்களுக்கோ இல்லை வேறு யாரிடமும் சொல்வது இல்லை... இத்தனைக்கும் ஐந்தாம் வகுப்பிலே செக்ஸ் பாடம் கட்டாயம் உண்டு இந்த நாட்டில். இருந்தும் குழந்தைகள் வாய் திறப்பது இல்லை... வளர்த்த நாடுகளிலேயே இது தான் நிலைமை என்றால் இந்தியா போன்ற நாடுகளின் நிலைமை என்ன... கடுமையான சட்டம் இருந்து என்ன பயன்... counselling கொடுத்து அந்த குழந்தைக்கு ஏற்பட்ட தாக்கத்திற்க்கு வேண்டுமானால் மருந்துயிடலாம் தழும்புகள் அப்படியே தானே இருக்கும்... காலத்திற்க்கும் மாறாதே தழும்பு...

இதற்க்கு தீர்வு தான் என்ன:


பெண்களை அடக்க என்று யாரோ என்றோ வகுத்த சட்டத்தை இன்னும் கண்மூடித்தனமாக நம்பும் பெண்கள் தான் அதில் இருந்து வெளியே வர வேண்டும். ஆம்


  1. மானம் நாம் உடுத்தும் உடையில் இல்லை.. வாழும் வாழ்க்கையில் இருக்கு என்று சொல்லி வளர்க்க வேண்டும் (ரோபோ படத்தில் தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய பின் தன்னை நிருவானமாக எல்லோரும் பார்த்துவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்ளும் பெண் குழந்தை)
  2. நாய் கடிச்சு விட்ட செத்தா போறோம் இல்லையே ஊசி போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்த்து போவது போல் காட்டு மிராண்டிகள் உன்னை கடித்தால் உன் தவறு இல்லை கண்ணே. நீ தேவதை பெண் நீ வீழ பிறந்தவள் அல்ல .. ஆள பிறந்தவள் என்று தைரியம் சொல்லி வளர்க்க வேண்டும்.
  3. இரண்டு கிட்டினி பழுதானாலும் மாற்று கிட்டினி பொறுத்தி வாழமுடியும் என்றால் கற்பு போய்விட்ட என்ன வாழ்க்கையே போய்விட்டதா என்ன என்று துணிச்சல் ஒடு வாழ கற்று தர வேண்டும் ... (எடுத்து காட்டு சுனிதா கிருஷ்ணன். அவர்களுடைய 16 வயதில் கேங்கு ரேப்பு செய்து அவரை திட்டமிட்டு அழிக்க பார்த்தனர் ஆனால் இன்று வளர்ந்து பெரிய விருட்சமாக நிற்கிறார்கள். )
  4. பெண்களை அடக்க ரொம்பவே சுலபமாக கையாளப்படும் யுக்தி தான் இந்த கீழ்தரமான அடக்குமுறை அதற்கு முக்கிய துவம் கொடுக்காமல் நாம் அலச்சியமாக இருந்தாலே இந்த யுக்தி நிறுத்தப்படும். என்னை மானபங்கம் படுத்தின நான் அடங்கி போவேனோ... முட்டாள்களே .... வீறுகொண்டு எழுவேன் என்று வாழ்ந்து காட்டவேண்டும். ஒரு பழமொழி தான் நியபகத்துக்கு வருது “நாயை பார்த்து நாம் பயத்துடன் ஒடினால் அது நம்மை துரத்தும் திரும்பி நின்று முறைத்தால் அது பயந்து ஒடுவிடும்” நாய்களை கண்டு அஞ்சாதே கண்ணே என்று துணிச்சலுடன் வாழ கற்று தரவேண்டும்.
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
பெண்குழந்தைகள் பாதுகாப்பு!

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் இல்லாத தொழில்கள் என்ற ஒன்று இங்கு இல்லை.. விவசாயத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சி வரை எல்லாத்துறையிலும் பெண்கள் சாதனையாளர் என்ற முதல் இடத்தில் இருக்கும் பொழுது அவர்களுக்கு உண்டான பாதுகாப்பு மட்டும் இங்கு இருப்பதே இல்லை..

ஒவ்வொரு பெண் வெளியே சென்று வீடு திரும்பும் பொழுதும் நாம் முகம் காணும் வரையில் பெற்றவர்கள் படும்பாடு வார்த்தைகளில் சொல்ல முடியாது.. அவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிவிட்டுத்தான் நாம் வெளியே செல்கிறோம் என்று புரிதாலும் அதை தடுக்கவும் முடியவில்லை.. இதற்கு எல்லாம் தீர்வுதான் என்ன..?

அன்றைய காலகட்டத்தில் பெண்கள் சமையலறைக்குள் இருந்தாலும் பெண்கள் மிகவும் தைரியமாகவும், அதே அவள் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் போர்களைக்கலைகள் பல கற்று வைத்திருந்தனர்.. வர்மக்கலை,வாள்வீச்சு, சிலம்பம் என்று பலகலைகளைக் கற்று வைத்திருந்தனர்.. அதேபோல அன்றைய காலத்தில் கூட்டுக்குடும்பம் என்ற வழக்கம் இருந்தது.. அது எல்லாம் ஒரு வகையில் பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும் இருந்தது.. அதற்காக நாம் பழைய காலத்திற்கு செல்ல முடியாது.. ஆனால் சின்ன சின்ன திருத்தங்கள் பல கொண்டு வர முடியுமே நம் வாழ்வில்..

ஒவ்வொரு செய்தி தாளை படித்துவிட்டு கீழே வைக்கும் பொழுதும் குழந்தைகள் வன்கொடுமை, பாலியல் சர்ச்சை என்று உயிரை உலுக்கும் செய்திகள் மனத்தைக் கசக்க வைக்கிறது.. ஆனால் அதற்கு எல்லாம் முக்கிய காரணம், ‘அலட்சியம்’ மற்றும் ‘நமக்கு என்ன வந்தது’ என்று நினைக்கும் மனநிலை.. இன்றைய காலகட்டத்தில் ‘ஒற்றுமை’ என்ற ஒன்று உருக்குலைந்து போனதுதான் இதற்கு எல்லாம் பெரிய காரணமாக மாறிவிட்டது.. அதை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்..

அடுத்து ஒவ்வொரு வீட்டில் இருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.. அது நம் குழந்தை என்று மட்டும் இல்லை எந்த இடத்தில் இருந்தாலும், எந்த சூழ்நிலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் அதை தட்டிகேட்க வேண்டும்.. நாம் தினமும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று வரும் பொழுதும் ஆயிரம் பிரச்சனைகளை சமாளித்துதான் வீடு வருகிறோம்.. அது நம்முடைய மனத்தைரியம் என்று சொல்லாம்.. ஆனால் இதே நிலை நீடிக்காமல் இருக்க நம் குழந்தைகளுக்கு நாம் முதலில் அதை கருத்தற வேண்டும்..

அடுத்து பஸ் நிலையம், ஸ்கூல், பார்க் போன்ற இடங்களில் பெண்பிள்ளை தவறு என்று சில தவறுகளைச் செய்யும் பொழுது அவர்களைக் கண்டிக்க பெண்களான நமக்கு முழு உரிமை இருக்கிறது.. ஏன் என்றால் அந்த பெண்ணிற்கு அதை கற்றுக்கொடுக்கவோ இல்லை தவறு என்று புரியவைக்கவோ அவர்கள் வீட்டில் பெரியவர்களுக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம்.. அதை நாம் செய்வதில் எந்த தவறும் இல்லை.. அதனால் அந்த பெண் வீட்டினருக்கு அவள் செய்யும் தவறு தெரிந்து திருத்த முயற்சி ஈடுபடலாம் இல்லையா..?!

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் போராளிகளாக இருப்பதைக் காட்டிலும் புத்திசாலிகளாக இருந்தாலே போதும்.. பெண் குழந்தைகளுக்கு பெற்றதாய் தான் முதல் ஆசிரியை.. மற்றும் நல்ல ஒரு தோழியும் கூட... அவளிடம் நீங்கள் பேசுவதால் அவளின் மனதில் என்ன இருக்கிறது.. அவளுக்கு வெளியிடத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படுகிறதா என்று நீங்கள் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக கூட இந்த பேச்சு வார்த்தை அமையலாம்..

பெண்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பொழுது ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை பாதுகாக்க கற்றுக்கொடுப்பது போல பெண் குழந்தைகள் அவர்களின் பத்து வயதில் இருந்தே அவர்களுக்கு தங்களை காத்துக்கொள்ளும் தற்காப்பு கலைகளைக் கற்றுத்தர வேண்டும். சிறுபிள்ளை என்று அவர்களிடம் சொல்லாமல் நாம் மறைக்கும் விஷயங்களை வெளிப்படையாக சொல்லுங்கள் அதில் தவறேதும் இல்லை..

அப்பொழுதுதான் ஒரு ஆண், ‘தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறான்..’ என்று அவளுக்கு புரியவரும்.. யார் நல்லவர், யார் கேட்டவர் என்று பார்வையில் உணரும் வண்ணம் அவளுக்கு மெல்ல மெல்ல கற்றுக்கொடுக்க முயற்சி செய்யுங்கள்.. அப்படி தங்களால் முடியாத பொழுது போது இடங்களுக்கு போகும் பொழுது குழந்தைகளைப் பாதிக்கும் விஷயம் நடந்தால் அவளாக வந்து நம்மிடம் விளக்கம் கேட்கும் பொழுது அவளுக்கும் புரியும்படி, மற்றவருக்கு தீங்கு வராத வண்ணம் அந்த விஷயத்தை அவளுக்கு புரிய வையுங்கள்..

பெண்குழந்தையுடன் வெளியே செல்லும் பொழுது தங்கள் குழந்தைகளை முன்னே விட்டு நீங்கள் பின்னே செல்லுங்கள்.. அடுத்து பிறர் கண்களுக்கு உறுத்தாத வண்ணம் உடைய அணிவித்து அழைத்துச் செல்லுங்கள்.. அந்த உடைகளின் நிறத்தினால் கூட அவர்களுக்கு ஆபத்து வரலாம்.. பெண் குழந்தைகள் வெளியே செல்லும் பொழுது அவர்களிடம் போலீஸ் நம்பர் கொடுத்து விடுங்கள்.. ஒரு போது இடத்தில் ஒரு பெண் துணிச்சலுடன் தவறைத் தட்டிகேட்கும் பொழுது மற்ற பெண்களும் அவளுடன் சேர்த்து குரல் கொடுங்கள்.. அப்பொழுதுதான் எதிரியின் கண்களில் பயத்தை நாம் பார்க்க முடியும்..

பெண்ணே நீ இதுவரை பொறுமையாக இருந்தது போதுமடி.. தவறு என்றுபட்டால் தட்டிகேள் தவறில்லை.. குழந்தைக்கு நீ தாயாக இருந்தது போதுமடி.. இனிமேல் நீ ஒரு ஆயிரியை ஆக இரு பெண்ணே.. நீ இன்று அவளுக்கு கற்பிக்கும் வேதம்.. நாளை அவளைக் காப்பாற்றிக்கொள்ளும் புதியவேதமாகுமடி...!
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
பெண்குழந்தைகள் பாதுகாப்பு


"மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்றார் கவிமணி, உண்மையில் மாதவம் செய்து வரமாய் பிறந்த பெண்களின் இன்றைய பாதுகாப்பற்ற நிலை பெரும் சாபமே.
பாலியல் வன்கொடுமை, பணியிடங்களில் சந்திக்கும் சீண்டல்கள், படிக்கும் பள்ளியில், பயணிக்கும் பேருந்தில், ஏன் பெண்களை தெய்வமாக வைத்து வழிபடும் கோவிலில் கூட பெண்களை இழிவுபடுத்தும் சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பத்து, பதினைந்து வயது முதல் பெண்களுக்கு இத்தகைய பாலியல் வன்முறைகளைப்பற்றி எடுத்துக் கூறி அவர்களிடம் விழிப்புணர்வை நம்மால் கொண்டு வர முடியும். தம்மை தாமே பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துக் கூற முடியும்.
பத்து வயதிற்கும் குறைந்த குழந்தைகளிடம், குட் டச், பேட் டச் தவிர வேறு என்ன நம்மால் கூற முடியும்?????
தனக்கு என்ன நடக்கிறது என்பதை கூட உணரமுடியாத சிறு குழந்தைகளிடம் கூட அத்துமீறும் கயவர்களை எப்படி இனம் காண முடியும்? ஆறு மாதக் குழந்தைகளைக்கூட விட்டுவைப்பதில்லை இவர்கள்........
இதற்கு உண்மையான தீர்வு பெண்களாகிய நம்மிடம்தான் இருக்கிறது. நம்முடைய பெண்குழந்தைக்கு பாதுகாப்பையும், விழிப்புணர்வையும் போதிக்கும் அதேவேளையில் ,ஆண்குழந்தைகளிடம் பெண்களை பாதுகாப்பது உன் கடமை, பெண்களை மதிக்க வேண்டும், உன் சொல்லாலோ, செயலாலோ அவர்களை காயப்படுத்தக்கூடாது , என்று சொல்லி வளர்க்க வேண்டும்.
இது ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் மாற்றமல்ல......
நான் சிறிது நாட்களுக்கு முன் ஒரு காணொளி பார்த்தேன், அதில் ஒரு பேருந்தில் இரவில் தனியாக பயணிக்கும் ஒரு பெண்ணிடம் நான்கைந்து கயவர்கள் வம்பிழுத்துக் கொண்டிருப்பர், அப்பேருந்தில் பயணிக்கும் மற்ற ஆண்கள் தத்தம் மனைவி, மகள், தங்கையின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு , அங்கு நடக்கும் நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருப்பர். அப்பொழுது அப்பேருந்தில் ஏறும் ஒரு இளைஞன் இதனைக் கண்டு, தன் அண்ணனுடன் பாதுகாப்பாக அமர்ந்திருந்த பெண்ணை சீண்டுவான், உடனே அந்த அண்ணன் அவ்விளைஞனை அடித்து "என் தங்கையின் மீது கை வைக்காதே" என்பான்.
உடனே அந்த இளைஞன் , "உன் அருகில் இருக்கும் இவள் உன் தங்கை என்றால், அக்கயவர்களிடம் சிக்கியிருக்கும் அவளும் நம் தங்கை தானே" என்று கூறி ..... என் ஒருவனால் அவர்கள் அத்தனை பேரையும் எதிர்க்க முடியாது , ஆனால் நாம் அனைவரும் சேர்ந்தால் முடியும் தானே என்கிறான்....
உடனே அங்கே அமர்ந்திருந்த ஆண்கள் அனைவரும் சேர்ந்து அக்கயவர்களை அடித்து விரட்டுகின்றனர்.


இத்தகைய விழிப்புணர்வைத்தான் நாம் நம் ஆண்குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
ஒரு தீய வார்த்தை கூட பேசாதே! அவை அனைத்தும் உன் தாயை, தங்கையை, மனைவியை, தோழியை , மகளை இழிவுபடுத்தும் வார்த்தைகளே என்று சொல்லி வளர்க்க வேண்டும்.
உன்னுடன் படிப்பவர்களும், பணிபுரிபவர்களும், பயணிப்பவர்களும், நீ காணும் அனைத்து இடங்களிலும் உள்ள பெண்கள் அனைவரும் உனக்கு தாயாக, தங்கையாக , தோழியாக, மகளாக தெரிய வேண்டும், அவர்களை பாதுகாப்பது உன் கடமை என்பதை தாய்ப்பாலுடன் சேர்த்து நாம் ஊட்ட வேண்டும்.


பிறந்ததிலிருந்து என்னுடன் வளரும் இவள் என் தங்கை என்றால், என்னுடன் சிறுவயது முதல் படிக்கும் சகவகுப்பு மாணவிகள் அனைவரும் என் தங்கைகளே.....
என்னுடன் பணிபுரியும், நான் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளும் இவள் எனது தோழி என்றால், குடும்ப சூழ்நிலை காரணமாக பணிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் எனது தோழியே......
எனது தாயின் வயதை ஒத்த அனைத்து பெண்மணிகளும் எனக்கு தாயை போன்றவர்களே......
என் உதிரத்தில் உருவான இவள் என் மகள் என்றால் , இப்பூவுலகில் வாழும் அனைத்து பெண்களும் எனது மகளைப் போன்றவர்களே.....
இவர்களை எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், பாதுகாப்பது என் கடமை என்று ஒவ்வொரு ஆணும் உணரத் துவங்கிவிட்டால், இதனை விட வேறு என்ன பெண்கள் பாதுகாப்பு இருந்துவிட முடியும்.
ஆனால், இவை உடனடியாக நிகழும் மாற்றமல்ல....
மெதுவாக நிகழ்ந்தாலும் இதுவே நிரந்தரமான, நாளைய சமுதாயத்திற்கு தேவையான மாற்றம். இத்தகைய மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பு பெண்களாகிய நம் கைகளில்தான் உள்ளது.



நன்றி.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
முன்னுரை:
“பெண்கள் நாட்டின் கண்கள்”. எந்த நாட்டில் பெண்கள் போற்றப்படுகிறார்களோ அந்த நாடு எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக இருக்கும்.”எப்பொழுது ஒரு பெண் இரவு 12 மணிக்கு தனியாக எந்த பயமும் இல்லாமல் நடந்து போகிறாளோ அன்று தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்” என்று காந்தியடிகள் கூறியுள்ளார்.ஆனால் இன்றைய அவநிலையில் ஒரு பெண்ணால் பகல் நேரத்தில் கூட பயம் இல்லாமல் செல்ல முடியவில்லை...எங்கும் காமக் கொடூரர்களும்,கயவர்களும் நிறைந்து இருக்கிறார்கள்.அவர்களில் இருந்து நம்மை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி இங்கு காண்போம்.

குழந்தைகள் பாதுகாப்பு:
இப்பொழுது குழந்தைக் கற்பழிப்பு மிகவும் அதிகமாக நடந்து கொண்டு வருகிறது.குழந்தைகளை பக்கத்து வீட்டில் விளையாட அனுப்புவதற்குக் கூட பயமாக உள்ள காலக்கட்டம் இது.தன்னிடம் ஒருவர் தப்பாக நடந்து கொள்கிறார் என்பது கூட புரியாத பருவம்.
குழந்தைகள் பள்ளிகூடத்திற்கு செல்ல ஆரம்பிக்கும் பொழுதே அவர்களுக்கு தொடுகைகளில் உள்ள வித்தியாசங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்.தனக்குப் பிடிக்காமல் ஒருவர் தன்னை தொட்டால் பயப்படாமல் கத்த வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.சிறு வயதில் இருந்தே அவர்களை மிரட்டி உருட்டி கோழைகளாக வளர்க்காமல் தைரியசாலிகளாக வளர்க்க வேண்டும்.எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ள அவர்களைத் தயார் படுத்த வேண்டும்.

பெற்றோர்கள் எல்லா விஷயங்களிலும் குழந்தைகளை கண்டிக்காமல் கண்டிக்க வேண்டிய விஷயங்களில் மட்டும் கண்டித்து மற்ற நேரத்தில் குழந்தைகளின் உற்ற தோழர்களாக இருக்க வேண்டும்.அப்பொழுது தான் அவர்கள் தங்களின் பிரச்சனைகளை உங்களிடம் மனம் விட்டு பகிர்ந்து கொள்வார்கள்.
சிறு வயதில் இருந்தே பெண்களுக்கு குறைந்த பட்சம் தங்களைக் காத்துக் கொள்வதற்காகவாவது தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஆண் குழந்தைகளின் பெற்றோரும் சிறு வயதில் இருந்தே பெண்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பருவ மங்கையரின் பாதுகாப்பு:
ஒரு வயது குழந்தைகளிடம் தொடங்கி முதியவர்கள் வரை பெரும்பாலனோர் ஏதாவது ஒரு வகையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள்.பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் என்பது உடலுறுவு சார்ந்தது மட்டும் அல்ல ஒரு பெண்ணை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பது,அவளின் உடம்பின் பாகங்களை கேலி செய்வது,தப்பான இடங்களில் தொடுவது போன்றவையும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தான்.

பெண்கள் மென்மையானவர்கள் தான்.ஆனால் பெண்களின் மனவலிமையை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது.ஒன்பது மாதம் ஒரு குழந்தையை சுமந்து பெற்று எடுக்கும் மனவலிமை எந்த ஆணுக்கும் வராது.

பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல.நின்னால் குற்றம்,நடந்தால் குற்றம் என்பது போல வாழ்வில் ஆயிரம் தடைகள்.ஒரு ஆண் மனிதனைப் போல பெண்ணிற்கு கேட்டது எல்லாம் உடனே கிடைத்துவிடாது.அத்தனை போரட்டங்களையும் தாண்டித் தான் அவள் தனக்கு வேண்டியதை சாதிக்கிறாள்.

அவ்வளவு மனவலிமை கொண்ட நாம் ஏன் ஒருவன் நம்மை கேலி செய்யும் பொழுது தலை குனிந்து அதை கண்டும் காணாமலும் நடந்து போக வேண்டும்?தப்பு செய்யும் அவனே தலை நிமிர்ந்து இருக்கும் பொழுது...எந்தத் தப்பும் செய்யாத நாம் ஏன் தலை குனிந்து அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்?நம் கண்ணே நமக்கு மிகப் பெரிய ஆயுதம் தான்..நாம் அவனைப் பார்த்து முறைப்பதில் அவன் அந்த இடத்தை விட்டு ஓடி விட வேண்டும்.அவ்வளவு சக்தி நம் கண்களுக்கு இருக்கின்றது.
பெண்கள் மென்மையானவர்கள் மென்மையானவர்கள் என்று சொல்லி சொல்லியே நம்மிடம் இருக்கும் வலிமையை நமக்கே தெரியாமல் இந்த உலகம் மறைத்துவிட்டது.நம்மை நாமே பாதுகாப்பது பற்றி சில குறிப்புகளை இங்கு காண்போம்..

எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பயப்படாமல் அதை தைரியமாக கையாள வேண்டும்.நாம் தைரியமாக இருந்தாலே நமக்கு வரும் பிரச்சனையில் ஐம்பது சதவிதம் சரி ஆகிவிடும்.

சூழ்நிலைக்கு ஏற்ப சமாயோசிதமாக சிந்தித்து செயல் பட வேண்டும். சூழ்நிலையை கிரகித்து அதற்கு ஏற்றது போல் செயல் பட வேண்டும்.

நம்மிடம் ஒருவர் தப்பாக நடந்து கொள்ள வருகிறார் என்று தெரிந்த உடன் கத்தி அங்கு இருப்போரின் கவனத்தை நம்மை நோக்கி திருப்பி விட வேண்டும்.

எப்பொழுதும் முடிந்த அளவுக்கு ஆள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.

வெளியே செல்லும் பொழுது தற்காப்புக்காக கையில் பெப்பர் ஸ்ப்ரே வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஆணிடம் பேசும் பொழுது அவர் நம் கண்ணை பார்த்து பேசுகிறாரா இல்லை பார்வை தப்பானதாக இருக்கிறதா என்பதை வைத்து அவரிடம் பழகும் முறையை தீர்மானிக்க வேண்டும்.

பொது இடங்களில் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.தன்னை சுற்றி நடப்பவற்றை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முடிவுரை:

“நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்,
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல்
பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது
கேட்டிரோ!”

எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு பெண் தன் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழக்கா விட்டாள் அவளை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது.எல்லா சூழ்நிலைகளையும் தைரியத்துடன் எதிர்கொண்டு நம்மை யாரும் நெருங்காமல் பார்த்துக் கொள்வோமாக!
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அனைவருக்கும் வணக்கம்,

இது எனது முதல் அனுபவம் பிழை இருப்பின்,இரு கரம் தூக்கி சிரம் தாழ்ந்து மன்னிப்பு வேண்டுகிறேன்,ஈடு இல்ல பல நன்றிகள் சசி முரளி அக்காவிற்கு,என்னையும் இதில் ஒரு அங்கமாகப் பாவித்ததற்கு, மற்றும் என் தோழிகளுக்கும்.

பெண்களின் பாதுகாப்பு

“எங்கடா போகுது இந்த நாடு, அது நாசமா தாங்க போகுது,பெண்களை போற்றும் நாடு என்பது போய்,பெண்களை பலி கொடுக்கும் நாடாக மாறிவிட்டது.

"சங்ககாலத்தில் தொடங்கி இன்று வரை மாறாத ஒன்று என்றால்,பெண்களின் சுதந்திரம் தான்,"உடனே போர்க்கொடி தூக்கி விடாதீர்கள்,பைலட் இல்லையா,விண்வெளியில் கல்பனா சென்று வரவில்லையா என்று,அந்த காலத்திலும் ஜான்சி ராணி என்னும் வீர மங்கை வாழ்ந்து இருக்கிறாள் மறக்க வேண்டாம், இன்று பெண்களுக்கு வாய்ப்பு கூடி உள்ளது அவ்வளவே!

பெண் பிள்ளைகள் பிறந்தால் கள்ளி பால் கொடுத்து கொல்வதும் உண்டு,தனக்கு மஹாலக்ஷ்மியே பிறந்ததாய் எண்ணுவதும் உண்டு,அந்த காலத்தில் கூட கருணை இருந்தது என்றே எனக்குத் தோன்றுகிறது,மனிதர்கள் வாழ்ந்தார்கள்,இன்று காமம் என்ற மிருகம் தான் ஆட்சி செய்கின்றது(மிருகங்கள் கூட அதற்கென்று ஒரு வரையறை வைத்துத் தான் கலவி கொள்ளுமாம்,அதனால் மிருகங்கள் கூட ஒப்பிட முடியாத சில வகை மனித போர்வையில் இருக்கும் ஜந்துக்களை)

ஒவ்வொரு குழந்தைகளும்,பெண்களும் பாலியல் கொடுமையில் சிக்கிய செய்தி கிடைக்கும் போதும் எங்களைப் போன்ற தாய்க்கு நெருப்பில் இட்ட புழுக்கள் நிலை தான்,பெற்றாள் தான் பிள்ளையா,அப்படி நினைத்தாள் பாரத தாய் நம்மை அரவணைத்து இருக்க மாட்டாளே,நம்மைக் காக்க கடவுள் தான் வருவார் என்று எண்ணவா முடியும்,

கலி முத்தி அவருக்குப் புத்தியும் முத்தி போய்விட்டது,அதனால் தன் கையே தனக்கு உதவி,ஒவ்வொரு தாயும் செய்யும் கடமை பட்டியலில் இவற்றையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நம் பெண் பிள்ளைகள் யாருடன் பழகுகின்றனர் என்பதைக் கண்காணிக்க வேண்டும்,நிழலைக் கூட நம்ப முடியாத நிலையில் நாம். படிக்கச் செல்லும் பள்ளியிலும் சரி,சிறப்பு வகுப்பிலும் சரி யாரிடம் பேசுகின்றனர் என்பதை அறியவேண்டும்,அவர்கள் அறியா வண்ணம், நம் செயல் எந்த வகையிலும் அவர்குளுக்கு மன இறுக்கத்தைக் கொடுத்து விடக் கூடாது,எந்த விதமான தோல்வியையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நாம் இக்காலத்தில் உள்ள குழந்தைகளிடம் விதைக்க வில்லை,அதனால் ஒவ்வொரு செயலும் நிதானமாக இருக்க வேண்டும்.

பேருந்தில் செல்லும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்,பல குழந்தைகள் பெண்கள் இதில் தான் பாதிக்கப் படுகின்றனர்.

கையில் எப்போதும் ஒரு ஊசி,மிளகாய் போடி இருக்க வேண்டும்,இயல்பிலே வீரம் கொண்ட பெண்கள் தான் நாம்(வீர தமிழச்சி )அதை இன்னும் ஆழமாக விதைக்க வேண்டும்,மேலும் தற்காப்பு கலைகள் கற்று கொள்ளுவது கூடுதல் பலம்.

முக்கியமாக எது சரியான அணுகுமுறை,எது தவறான அணுகுமுறை என்பதைப் பிரித்தறிய கற்றுக் கொடுக்க வேண்டும்,எது நடந்தாலும் தைரியமாக வீட்டில் தெரிவிக்கும் அளவுக்கு நாமும் அன்பாக நடத்தல் வேண்டும்,

ஏன்,எதற்கு என்ற கேள்விகளை புறம் தள்ளி,அவர்கள் கேட்கும் எல்லா விதமான கேள்விகளுக்கும் அவர்களுக்குப் புரியும் முறையில் விடை அளிக்க வேண்டும்

இதற்கெல்லாம் நீங்கள் முதலில் தயாராக வேண்டும்.

நம்முடைய உலகம் இன்று பணத்தை சுத்தி மற்றுமே,நானும் அதை நோக்கித் தான் ஓடிக்கொண்டு இருக்கின்றேன்,எது வாழ்க்கை? நாமே எப்படி இருந்தால் நம் பிள்ளைகளை,பிழை நம்மிடம் இருந்தான் ஆரம்பம்,வேலை விட்டு வந்தால் முதலில் பிள்ளைகளிடம் தான் கால்கள் செல்ல வேண்டும்,

எத்தனை வேலைகள் இருந்தாலும்,சோர்வுகள் இருந்தாலும்,அலுப்புகள் இருந்தாலும்,அதனைப் புறம் தள்ளி அவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்,நாம் ஒரு நூறு இறுக்கத்தைத் தலையில் சுமந்தாலும்,பிள்ளைகளிடம் அதனை வெளிக் காட்டாது,அவர்களை அணுக வேண்டும்,பிற்காலத்தில் நம்மை விடப் பல நூறு இறுக்கத்தைக் காண போகின்றனர்,அதற்கு மனதளவில் பக்குவத்தை நாம் விதைக்க வேண்டும்.

அடுத்து ஊடகம்... இலை மறைவுக் காய் மறைவென்பது எல்லாம் அந்த காலம்,நாம் அறிய முடியாத பல செய்திகளை அறிய எதுவாக இருந்தாலும்,அறியக் கூடாதா செய்திகளும் உள்ளதே,அவற்றை நாம் தான் கண்காணிக்க வேண்டும்,குழந்தைகள் எத்தனை மணி நேரம் ஊடகத்தில் மூழ்கி இருக்கின்றனர்,எதனைப் பார்க்கின்றனர் என்பதை அறிய வேண்டும்.

இதைச் செய்தால் என்ன ஏன் செய்ய கூடாது?செய்து தான் பார்ப்போமே !என்பது குழந்தைகளின் இயல்பு ,அவர்களின் இயல்பைத் தொலைக்காமல்,அதனைச் செய்தால் என்ன விளைவுகள் என்பது மனதில் பதியவைக்க வேண்டும்.

அவர்கள் சுதந்திரத்தில் ஒரு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. பெண்கள் என்பதால் கூடுதல் கவனம் வேண்டும்.

அடுத்து உடை எந்த விதமான உடைகளையும் அணியலாம் அதிலும் நாகரிகம் வேண்டும் அவ்வளவே!,யாரு கண்ணிலும்,கருத்திலும் படு வதற்கு இல்லை,கண்ணியம் என்பதை எடுத்துக் காட்ட தான் உடை என்பது இல்லை,உடையும் அதில் ஒரு அங்கம்.

உடைகூட உடுத்தச் சுதந்திரம் இல்லையா என்ன...அதற்கும் ஒரு அளவு இருக்கின்றதே,பார்க்கும் பார்வையில் கண்ணியம் இல்லை எனும் போது நாமும் கொஞ்சம் சுதாரிப்பாகத் தான் இருக்க வேண்டும்,எத்தனை போர் கோடி பிடித்தாலும் நியாயம் கிடைக்கவில்லையே.

"இனி ஒரு விதி செய்வோம் பெண்ணே விழித்தெழு".

இனி வரும் காலமாவது இவற்றைக் கடை பிடித்து,நம் வேர்களைக் காப்போம்,ஒவ்வொரு பெண்ணும் ஒரு குடும்பத்தின் அணி வேர்கள்,அவை இல்லையென்றால் நாம் இல்லை என்பதைப் புரிந்து கொள் சமுதாயமே!......

DHANUJA SENTHILKUMAR
 




Jaa sha

மண்டலாதிபதி
Joined
Jul 28, 2018
Messages
301
Reaction score
1,103
Location
Karaikudi
பெண்குழந்தைகள் பாதுகாப்பு....


வலிமையோடு ஆண்களும்...
வலிகளோடு ...
பெண்களும் ...
கொண்ட சமூகத்தில் சிதறும் சின்னஞ்சிறு மலர்கள் பெண்பிள்ளைகள்....
இப்படியான ஒரு நிலையில் அவர்கள் பாதுகாப்பு என்பது பெற்றோரை மட்டும் சார்ந்தவை அல்ல...சமூகத்தில் சாக்கடையாய் சில குணங்களை ஒழிக்கவும் ... அழிக்கவும் எண்ணம் கொண்ட எல்லா தரப்பினரும் செவ்வனே செய்ய கடமையானதும் ஆகும்....

இது எவ்வகையில்.. எங்கனம் ..என்பது நம் அறிந்து கொள்ளும் ஆற்றலை பொருத்து....

அதாவது சார்ந்து வாழ்தல் சக மனிதரில் நேசம்...இது எந்த வகையில் பயன்பாடு..இதற்கு தீர்வு என்றால்...

தனிக்குடும்ப வாழ்முறையில் அடுத்துள்ள வீட்டில் அழிந்தாலும் என்ன உயிர் பிரிந்தாலும் என்ன என்ற போக்கில் ... நாம் என்றால்...நம் பிள்ளைக்கு காவல் நாம் மட்டும் அல்ல இந்த சமூகம் ...அடுத்த வீட்டிலும் அன்னை உண்டு அவளுக்கு இவள் பெண்ணாவாள் என்று சார்ந்து இருத்தல் .... அவசியமான ஒன்று...

பெண்பிள்ளை தனித்திருக்க கண்டால் தயங்காமல் துணையிருத்தல் ... நம் தலையாய கடமை என்பது பொறுப்பில் யாரும் சொல்லித்தெரிய தேவை இல்லை...

தனித்திருக்கும் நேரம் துணை இருப்போரை எங்கனம் நம்புவது...
சார்ந்து வாழ்தல் சகமனிதரோடு சேர்ந்து வாழுதல்...
என் வீடு என் மக்கள் என்றில்லாமல் ...
என் வீட்டைச்சுற்றி என் மக்கள்... என்று நம்பிக்கை விதைத்து நல்ல உள்ளங்களோடு உறவாடல் அவசியம்...

ஒரு பொண்ணு தனித்திருக்கும் போது அவள் பெற்றோர் அருகில் இல்லாத அல்லது வீட்டினர் துணையில்லாத தருணம் தேடிதான் பேடிகள் செல்வதுண்டு...
அது போன்ற ஒரு நிலையை கயவர் கண்ணுறும் போது...
அடுத்த வீட்லயோ இல்ல அடுத்த தெருவுலயோ இருக்க நாம ஏன் அந்த பொண்ணு தனிமைய உணர்ந்து உதவ க் கூடாது... அதுக்கு முக்கிய தேவை அறிந்து கொள்ளும் அவசிய தேவை நம்மை சுற்றியுள்ள வீடுவரையாவது நம்ம அறிந்து வைப்பது அவசியமா செய்யனும்...
ஒரு வருடமா ஒரு சிறுமலர் சிதைக்கப்படும்போது ..
அண்டை வீட்டிலும் அந்நியமாய் சில பொம்மை மனிதர்கள் இருந்திருப்பாங்க.... எங்க தவறு ....
கூடுகள் பிரிக்கப்பட்டு...
காடுகளாய் மிருகமாகும் மனித இனம்....

சார்புக்கொள்கை கொண்டு சக மனிதரில்
நேசம் கொள்வோம் ...

பகிர்வது ...எதையும் பகிரும் போது சில விதையும் விழுந்து வளருது ...
அதனால் கெட்டவை நடந்தவை எல்லாம் நம்மளால தடுக்க முடியாத தவிர்க்க முடியாத ஒன்று....
இதுபோன்ற வெறிச்செயல் அதிகரிக்க காரணம் கூட ஒரு வகையான பகிரும் செய்திகளாலும் தான்...
அதாவது விழுந்தது விதையாகுது...
இங்கே விழுந்தது நல்லவையா இருந்தா நன்மைகள் கதையாகும்...
அறிவியல் வளர்ச்சி அனைத்தும் நம் கைவசம்... ஒரு தவிர்க்க முடியாத தீயசெயல 10 பேரு பார்த்திட்டு தூற்றுவார்கள்னு பகிரும்போது... 2 பேரு மனசுல அது விதையாகுது...இப்ப கணக்குபடி 10 பேரு சேர்ந்து தூற்றுவது முக்கியமில்லை அதை விதையா வினையா எடுத்துக்கொள்ளும் 2 கணக்கில் ரொம்ப கொடிய ஆபத்தான விளைவு...

அதுனால நல்லவைகளை மட்டும் பகிருவோம் ...
தீயவை பகிரதேவையும் இல்ல பகிர்ந்தாலும் அதுக்கு எந்த பலனும் நாம செய்ய முடியாது...
...
...
உதாரணம் ஜல்லிக்கட்டு பகிர்ந்து பலமாச்சு நல்லவை...அவசியமும் ஆனவை...

ஆசிபா...அழிந்த கதை பகிர்ந்தோம் பலனில்லை...
தாங்கும் நம்மிடம் மனமும் இல்லை...

என்னோட எண்ணம் தெரியாத சில வினோத எண்ணங்களும் இதுபோன்ற பகிர்வுகளில் சில மிருகங்களுக்கு விதையாகுது...

பெண்பிள்ளை பாதுகாப்பது எப்படி என்பதைவிட...
ஆண்பிள்ளை வளர்த்தலும்....அவர்களிடம் பெண்பிள்ளை மதிப்பை உணர்த்துதலுமே அவசியமான ஒன்று...
 




Last edited:
Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top