• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பெண் தட்சிணாமூர்த்தி!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
தட்சிணாமூர்த்தியை, அர்த்தநாரீஸ்வரர் போல, ஒரு பக்க மார்புடன் தரிசிக்க வேண்டுமா... கும்பகோணம் அருகே, திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம்.

'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் பிரம்மனுக்கும், முருகனின் தந்தையான சிவனுக்கும் தெரியவில்லை. இதன் பொருள் தெரியாத பிரம்மனை தண்டித்தார், முருகன். சுவாமி மலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஒரு விஷயம் தெரியவில்லை என்பதற்காக, பெரியவர்களை சிறியவர்கள் தண்டிப்பதும், கண்டிப்பதும் எந்த வகையிலும் ஏற்றதல்ல என்று கருதினார், சிவன். எனவே, முருகனை பேச முடியாமல் செய்து விட்டார்.

இந்த இக்கட்டில் இருந்து விமோசனம் பெற, அருகிலுள்ள திருப்பந்துறை சென்றவர், சிவலிங்கத்தை நிறுவி, பூஜை செய்தார், முருகன். மனம் கனிந்து அவருக்கு பேசும் சக்தியை திரும்ப தந்தார், சிவன். சிவ பூஜையால் ஆனந்தம் பெற்றதால், இந்த சிவனுக்கு, 'சிவானந்தேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
சிவன் கோவிலாக இருந்தாலும், இங்கு, முருகன் தான் சிறப்புக்குரியவர். தண்டாயுதபாணி எனப்படும் இவர், சின்முத்திரையுடன் கண்மூடி நின்ற நிலையில், தியானத்தில் இருக்கிறார். காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி உள்ளது. பழமையான சிலை இது.



கோவில் எதிரில், மங்கள தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில், சூரியன் மட்டும், தன் துணைவியர்களான உஷா, சாயாவுடன் இருக்கிறார்; மற்ற கிரகங்கள் தனித்து உள்ளன.

சுவாமி விமானத்தில், கல்லால மரத்தின் கீழ் உள்ள தட்சிணாமூர்த்தி, ஆசனங்கள் ஏதும் இன்றி, வலது கையை ஊன்றி உடலை சற்றே சாய்த்து, சாவகாசமாக அமர்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல, தட்சிணாமூர்த்தியின் ஒரு பக்க மார்பு, பெண்களுக்குரிய அமைப்பில் உள்ளது. அர்த்தநாரீஸ்வரருக்கே இத்தகைய அமைப்பு இருக்கும். இங்கு, தட்சிணாமூர்த்தியின் உடலில் பார்வதியும் இருந்து, பாடம் கேட்பதாக ஐதீகம்.


சுற்றிலும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற அவரது மாணவர்கள் இருக்கின்றனர். இவரை, 'சிவசக்தி தட்சிணாமூர்த்தி' என்கின்றனர். கோவில் வாசலில், குக விநாயகர், சாட்சி விநாயகர் ஆகியோர் உள்ளனர். முருகன், சுவாமி மலையில் இருந்து தவமிருக்க வந்த போது, விநாயகர், இரட்டை வடிவில் அவருக்கு பாதுகாப்பாக வந்ததாக, ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
பேச்சு இழந்த முருகனுக்கு, மீண்டும் பேசும் சக்தி வந்ததால், இங்குள்ள தண்டாயுதபாணியை, திக்குவாய் பிரச்னை உள்ளவர்கள் வணங்கி வருகின்றனர். இவருக்கு, தேனாபிஷேகம் செய்து, பேச்சு வர வேண்டிக் கொள்கின்றனர்.



கும்பகோணத்தில் இருந்து, நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில், 20 கி.மீ., துாரத்தில் திருப்பந்துறை உள்ளது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கோயிலின் விமானத்திலுள்ள
கல்லால் மரத்தின் கீழுள்ள
பெண் தட்சிணாமூர்த்தியின்
போட்டோவை இங்கே போட
இயலுமா, ஸ்ரீதேவி டியர்?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அருமை. அறியாதன அறிந்து கொண்டேன். இன்னும் இது மாதிரி நிறையைப் போடுங்கோ.
View attachment 10207
Nichayama kidaicha vittuduvoma inge pottutu than Maru velai enakku???? idhile kidaikkum santhosame thani?????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
கோயிலின் விமானத்திலுள்ள
கல்லால் மரத்தின் கீழுள்ள
பெண் தட்சிணாமூர்த்தியின்
போட்டோவை இங்கே போட
இயலுமா, ஸ்ரீதேவி டியர்?
நான் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. நீங்கள் முடிந்தால் போடுங்கோ
ஸ்ரீதேவி.
Try panren dears???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. நீங்கள் முடிந்தால் போடுங்கோ
ஸ்ரீதேவி.
Try panren dears???
இந்த மெசேஜ் இன்னிக்குத்தான்
எனக்கு வந்தது
இப்போப் பார்த்தால் காணோம்ப்பா
அதான் கேட்டேன், ஸ்ரீதேவி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top