பெரிய புராணம்

#1
திருச்சிற்றம்பலம்.

தெய்வச் சேக்கிழார்
அவதாரத் தலம்: குன்றத்தூர்.
திருக்கோயில்:வடநாகேசுவரம்
மூலவர்:நாகேசுவரசாமி
அம்பிகை: காமாட்சி அம்மன்.

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்துள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியாரவர் வான்புகழ்
நின்றதெங்கும் நிலவி உலகெலாம்
-திருத்தொண்டர் புராணம்.

பெரியபுராணம் தந்த சேக்கிழார்

தெய்வத் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி "திருத்தொண்டர்புராணம்" என்ற "பெரியபுராணம்" இன்றளவும் நிலைபெற்று விளங்க அவரது அயராத உழைப்பே காரணம். புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்த சேக்கிழார். பிறந்ததும் இடப்பட்ட பெயர்.
அருண்மொழி ராம தேவர் . இவரது சகோதரர் தான் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் ஆகிய அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணிபுரிந்தார். சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவது வழக்கம். சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி யானது. தந்தையைத் தொடர்ந்து அநபாயச்சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராக நியமித்தான். சேக்கிழார் தனது அமைச்சர்பொறுப்பை நல்லமுறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார். ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்ற போது இறைவனைக் கண்ட அவரது கண்கள் பனித்து உடல் இறைசக்தியால் ஆட்டுவிக்கப்பட்ட உணர்வு ஏற்பட்டது. அரசபதவியை துறந்து தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு சீவகசிந்தாமணி என்னும் காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழிக்க சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார். அவன் சேக்கிழாரிடம், சமயநூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக தோன்றவே அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறலானார். நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உயிர்க்கச் செய்தார். அம்மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடுசெய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூற இதையடுத்து மன்னன் திருந்தி சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தர சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். சேக்கிழார் சிதம்பரம் சென்று அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்ட தில்லையம்பல நடராஜர் "உலகெலாம் "என அடியெடுத்துக் கொடுத்தார். அதையே முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார். அதில் 4253 பாடல்கள் இருந்தன. எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்ததை. கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியாராக நின்று கொண்டிருந்தார். அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கிட. விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த வாக்கு இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்லநாளும், திருஞான சம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டு. மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர். பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில்சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்வீதியெங்கும் வாழை, கமுகு தோரணங்களால் அலங்கரித்தனர் இப்படிப்பட்ட குதுகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம் துவங்கியது. அரங்கேற்றம் தொடர்ந்த நிலையில். கதை முடிந்தபாடில்லை. ஒரு வருடம் பெரியபுராணத்தை சேக்கிழார் பாடி. அடுத்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று தனது இனிய கவிதைகளை பாடிமுடித்தார். சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது. விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்து சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு "தொண்டைமான்" என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.

தூக்கு சீர்த்திருத்தொண்டத் தொகை
விரி வாக்கினாற் சொல்லவல்ல பிரானெங்கள்
பாக்கியம் பயனாபதி குன்றை வாழ்
சேக்கிழானடி சென்னி இருத்துவாம்
-காஞ்சிப்புராணம்.
 
Last edited:
#3
திருச்சிற்றம்பலம்.

தெய்வச் சேக்கிழார்
அவதாரத் தலம்: குன்றத்தூர்.
திருக்கோயில்:வடநாகேசுவரம்
மூலவர்:நாகேசுவரசாமி
அம்பிகை: காமாட்சி அம்மன்.

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்துள்ளமும் ஓங்கிட
மன்றுளராடி மாணவர் வான்புகழ்

அருமையான பதிவு...
 
#4
சிறப்பான பதிவு சகோ...

ஒரு சிறிய திருத்தம் தேவை:

தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடலின் மூன்றாமடி

‘மன்றுளார் அடியாரவர் வான்புகழ்’

என்று இருத்தல் வேண்டும் (’மாணவர்’ என்று வராது!) மாற்றிவிடுங்கள் சகோ...

நன்றி... :):)(y)(y)
 
#5

நன்றி சகோ... மாற்றிவிட்டேன்... :):):)(y)
 
Sponsored Links

Top