• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பேரழிவில் இருந்து சென்னையினை காத்த தமிழன் தளபதி கிருஷ்ணன்- navy day

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
thanks stanley rajan

பேரழிவில் இருந்து சென்னையினை காத்த தமிழன் தளபதி கிருஷ்ணன்

1638767557880.png


இந்திய கடற்படையின் நாள் கொண்டாடபட்டது, இந்த நாளுக்கு பின்னால் இருக்கும் வீரகாவியமும் இந்த நாளின் இந்தியா அடைந்த மிகபெரிய வெற்றியும், அந்த வெற்றிக்கு காரணம் ஒரு தமிழன் என்பதும் யாருக்கும் தெரியாது அல்லது மறைக்கபட்டது

காரணம் அந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் ஒரு இந்துதமிழன் அதுவும் பிராமண தமிழன் பின் எங்கிருந்து வெளியே அவன் புகழ் தெரியும்?

அந்த மாவீரனின் பெயர் கிருஷ்ணன், நீலகண்ட கிருஷ்ணன். அதுவும் தமிழகம் நாகர்கோவிலை சேர்ந்த மாவீரன்

அந்த நாகர்கோவில் அவன் பிறந்த 1919ம் ஆண்டு கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது, அங்கிருந்து படித்து பிரிட்டிஷ் இந்தியாவின் கடற்படையில் சேர்ந்தார் கிருஷ்ணன்

1971 போர் நடக்கும் பொழுது அவருக்கு 50 வயதாகி இருந்தது, அப்பொழுது இந்திய கடற்படையின் வைஸ் அட்மிரலாக இருந்த அவரிடம்தான் அந்த பெரும் பொறுப்பு அதுவும் 1971ல் இந்தியாவினை காக்கும் மிகபெரிய பொறுப்பினை தளபதி மானெக்சா கொடுத்திருந்தார்

அது சாதாரண பொறுப்பல்ல ஒரு மிக கொடிய நகரும் நீர்மூழ்கி கப்பலை கடலில் தேடி அழித்து தேசத்தை காக்கும் மிகபெரிய பொறுப்பு

அதில் கிருஷ்ணன் வென்ற கதை மிக மிக சுவாரஸ்யமும் திகிலும் நிறைந்தது,, அதை நினைத்துபார்க்காமல் இந்திய கடற்படை தினத்தை கொண்டாடுவதில் அர்த்தமில்லை
இந்தியா எக்காலமும் வீரமான நாடு, வரலாற்றில் அது மாவீரன் அலெக்ஸாண்டரையே விரட்டி அடித்து தன் வீரத்தை உலகுக்கு அன்றே சொல்லியிருந்தது

விவேகத்தோடு கூடிய வீரம் இந்தியாவுக்கு எக்காலமும் இருந்தது, இங்குள்ள இதிகாசமும் அதன் தத்துவங்களும் மானுட சக்திக்கு அப்பாற்பட்டு பிரபஞ்ச துணையோடு போராடும் மாபெரும் வீரத்தை கொடுத்திருந்தது

பாபர் மிக நுணுக்கமாக சமரசத்தோடு ஆண்டான் , அக்பர் இந்து பெண்ணையே திருமணம் செய்து சமரசம் பேசினார்

வாள்முனையில் ஒரு காலமும் இந்தியா அடங்காது என்பது அவர்களுக்கு தெரிந்தது, அவுரங்கசீப் அதை மீறினான்

மீறியவனை தன் வாள்முனையில் அடக்கி இந்திய வீரம் காட்டினான் வீரசிவாஜி, அவனுக்கு துணையாக மாவீரம் காட்டி நின்றனர் இந்துஸ்தான இந்துக்கள்
சிவாஜிக்கு பின் இந்து எழுச்சியினை எளிதாக அடக்கலாம் என மீண்டும் வாளேந்திய அவுரங்கசீப்பினை மொத்த மராட்டிய எழுச்சி தொடர் போராக சந்தித்தது
இவர்களின் எழுச்சியில் உள்ளே நுழைந்த வெள்ளையன் முகலாயருக்கும் இந்துக்களுக்கும் நடந்த போரில் கூலிபடையாக நுழைந்து பின் தந்திரங்களாலும் பிரிவினை வளர்த்தும் ஆட்சியினை பிடித்தான்

தெற்கே மருது பாண்டியர்,கட்ட பொம்மனில் இருந்து வடக்கே ரஞ்சித்சிங் வரை பெரும் வீரர்களை கண்டு அஞ்சிய வெள்ளையன் இந்திய போராட்ட குணத்தை மாற்றினான்,
இப்படி இந்தியரின் போர்குணம் அடக்கபட்டாலும் சுதந்திரத்துக்கு பின் இந்தியா தன் வீரத்தை காட்டியது.

நேரு அப்படி உண்மையான இந்திய போர்குணத்துடன் இல்லை, சாஸ்திரி அதில் மின்னினார் ஆனால் ரஷ்ய வலையில் விழுந்தார்

உண்மையான இந்திய வீரம் என்றால் என்ன என்பதை அடிக்கடி பாகிஸ்தானுக்கும் இப்பொழுது சீனாவுக்கும் காட்டியிருக்கும் எழுச்சிமிக்க இந்தியாவின் மிக பெரும் வெற்றி வங்க போர்

அதில் மாபெரும் சாகசங்களை இந்தியா செய்தது, நிலம் வழியாக பாகிஸ்தான் புகமுடியாமல் இரு எல்லையிலும் தடுத்தது முதல் சாகசம் ஏராளம்
அதுவும் டாக்காவினை கைபற்றமுடியாது, சிக்கல் நீடித்தால் அமெரிக்கா தலையிடும் எனும் நிலையில் கேப்டன் ஜேக்கப் எனும் இந்திய யூதன் ஆற்றுவழியே படை நகர்த்தி மின்னல் வேகத்தில் டாக்காவினை கைபற்றி 1 லட்சம் பாகிஸ்தான் ராணுவத்தை மண்டியிட வைத்ததெல்லாம் மாபெரும் சாசகம்.

அந்த வங்கபோரில் குறிப்பிடதக்கது பாகிஸ்தானின் காஜி நீர்மூழ்கி கப்பலை போட்டு தாக்கியது

ஹீரோ கிருஷ்ணனின் சாதனை இங்குதான் தொடங்குகின்றது

அந்த யுத்தத்தில் இந்தியாவின் பெரும் பலம் ஐ.என்.எஸ் விக்ராந்த். இங்கிலாந்திடமிருந்து வாங்கபட்ட‌ விமானம்தாங்கி கப்பல், அதன் பலம் அக்காலத்தில் பெரிது, கிழக்கு கடற்கரை முழுக்க அது கட்டுபடுத்தியது.

இது இந்தியாவின் பலம் என்றால் பலவீனம் எது என்று பார்ப்பதுதானே பாகிஸ்தானும் அவர்கள் கூட்டாளிகள் பழக்கம், அமெரிக்கா மிக சரியாக கணித்தது

இந்தியாவிடம் கப்பல் உண்டே தவிர நீர்மூழ்கி கப்பல் இல்லை என கண்டுகொண்டது, அவ்வளவுதான் ஒரு பெரும் நீர்மூழ்கியினை பாகிஸ்தானுக்கு கொடுத்தார்கள்
1965 யுத்தத்திலே அது பாகிஸ்தானிடம் இருந்தது, அப்போதைய யுத்தம் நிலத்தில் என்றாலும் அது இந்தியாவின் பிரம்மபுத்திரா கப்பலை உடைத்ததாகவும், பல இந்திய கப்பல்களை மூழ்கடித்ததாகவும் பாகிஸ்தான் அறிவித்து கமாண்டருக்கு மெடல் எல்லாம் கொடுத்தது.

அப்படி சம்பவம் நடக்கவே இல்லை எனினும் எங்களிடம் பலம் வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் உண்டு என இந்தியாவிற்கு மறைமுக மிரட்டல் விடுத்தது பாகிஸ்தான்.

அந்த செய்தியினை இந்திய தளபதி பிரம்மபுத்திரா கப்பலில் இருந்தே படித்துகொண்டிருந்தார் என்பது வேறுவிஷயம். பாகிஸ்தானியர் அப்படித்தான் பின்லேடன் இங்கு இல்லை, தாவூத் இல்லை என சொல்லாத பொய் இல்லை.
1965ல் பேட்டர்ன் டாங்க் எனப்படும் நவீன டாங்கிகளை அமெரிக்கா கொடுத்தும் பாகிஸ்தான் மரண அடி வாங்கி இருந்தது, அது தன் அவமானமாக அமெரிக்கா கருதிற்று, விளைவு இம்முறை பல நவீன வசதிகளை மேம்படுத்தி அந்த நீர்மூழ்கி கப்பலை களத்தில் இறக்கிற்று.

நவீனம் என்றால் டார்பிடோ எனும் நீர்மூழ்கி ஏவுகனைகளை ஏவும் வசதி, கடல் கன்னிவெடிகளை விதைக்கும் வசதி, சுருக்கமாக சொன்னால் கடலின் அடியிருந்தே இந்தியாவின் எந்த நகரத்தையும், கப்பலையும் அழிக்கும் எமன் அது.

நீர்மூழ்கி கப்பல்களின் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் திறன் தனித்துவமானது இன்றும் ஓசை எழுப்பாமல் செல்லும் மிகசிறந்த நுட்பம் அவர்களுடையது சீனாவினை இப்பொழுது அச்சுறுத்திகொண்டிருப்பதும் அந்த தொழில்நுட்பம்தான்
அந்த கப்பல் அப்படித்தான் இருந்தது, கடலை நாம் பார்த்துகொண்டிருக்கும் பொழுதே திடீரென ஏவுகனை எழும்பி நம் நகர் மீது விழுந்தால் எப்படி இருக்கும்? அந்த நீர்மூழ்கி அந்த ரகம் தான்.

அதற்கு காஜி அல்லது கோஜி என பெயரிட்டு மகிழ்ந்தது பாகிஸ்தான். அது என்னமோ தெரியவில்லை இந்திய எதிர்ப்பு கருவிகளுக்கு எல்லாம் கோரி,கஜினி என அக்கால ஆப்கன் மன்னர்கள் பெயரினை இடுவதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
ஹாஜி என்றால் மிகபெரியவர் என பொருள், அப்படி பெரியவரோடு களத்துக்கு வந்தது பாகிஸ்தான்

1971 யுத்தம் தொடங்கும் முன்னமே ஐ.என்.எஸ் விக்ராந்தை அழிக்க உத்தரவிடபட்டது, எனினும் யுத்தம் தொடங்கி இனி அதனை அழித்தே ஆகவேண்டும் என வெறியோடு கிளம்பிற்று அது.

இந்தியா வங்க எல்லையில் போரில் இறங்கினாலும் அதன் பலம் கடற்படை, காஜி அவர்களின் தூக்கத்தை கெடுத்தது, அதனை அழிக்காமல் இந்திய வெற்றி சாத்தியமில்லை என்பது ராணுவ பாடம். காரணம் திடீரென நடுக்கடலில் இருந்து வரும் ஏவுகனைகளை எப்படி தடுப்பது? கப்பலை எப்படி அழிப்பது?

கடல்மேல் மிதக்கும் விக்ராந்தினை, கடலுக்குள் அலையும் காஜியிடம் இருந்து காப்பாற்றுவது எப்படி என்று மானெக்ஷாவும், கிருஷ்ணனும் சிந்தித்தார்கள், பொறுப்பினை ஏற்றார் கிருஷ்ணன்

மிக தந்திரமான திட்டமது, அதில்தான் பாகிஸ்தானின் ஹாஜி சிக்கியது.
இஸ்ரேலின் புகழ்பெற்ற 6 நாள் போருக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த இந்தியாவின் 13 நாள் போர்.

இன்றளவும் உலக ராணுவ திட்டங்களில் பாராட்டதக்கதும், மானெக் ஷா மங்கா புகழ் அடைவதற்கும் அதுதான் காரணம். வங்கதேசம் சுதந்திரமடையவும் அதுதான் காரணம்.
ஒரு பாகிஸ்தானையே சமாளிக்க பெரும் பாடென்றால் இரு பாகிஸ்தானை சமாளிக்க என்னபாடு பட்டிருக்கவேண்டும்?

யுத்தம் தீவிரமாக காஜி கிளம்பிற்று, கப்பலில் 100 ராணுவத்தார், 50 ஏவுகனைகள், மிக ஆபத்தான கடல்கண்னிவெடிகள் ஏராளம்.
கடல்கண்ணிவெடியும் அப்படித்தான் சாதுவாக மிதக்கும் ஆனால் அருகில் கப்பல்வந்தால் ஓடிசென்று வெடிக்கும்.

மிக பெரும் ஆயுதமாக ஹாஜி களத்திற்கு வந்தது பாரத அஸ்வத்தாமன் போல, இந்திரஜித்தன் போல கந்தபுராண பானுகோபன் போல‌ அது அச்சுறுத்திற்று
காஜியினை சிக்கவைக்க இந்திய திட்டம்

செயல்படுத்தபட்டது, பாகிஸ்தானோ இந்தியாவின் பெருமை ஐ.என்.எஸ் விக்ராந்தை அழித்த செய்தியினை உலகிற்கு விரைவில் சொல்வோம் என கொக்கரித்தது.
இந்திய கடற்படை மிக பரபரப்பாகவும், கொஞ்சம் அச்சத்துடனம் ஆனால் விவேகத்துடனும் செயல்பட்ட நேரமது, துப்பாக்கி படத்தின் வில்லனும் ஹீரோவும் ஒருவரை ஒருவர் தேடிகொண்டிருப்பது போல, இரண்டும் ஒன்றையொன்று தேடிகொண்டிருந்தனர்

ராமாயணத்தில் லட்சுமணனும் இந்திரஜித்தனும் மோதியது போல கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பமாயிற்று

ஆனால் இந்தியா முந்திகொள்ளும் பெரும் கட்டாயம் இருந்தது, காரணம் காஜி அப்படியான பெரும் நாசகாரி. அதனிடம் இருந்து தப்புவது சுலபமல்ல.
அன்று இந்தியாவிடம் செயற்கைகோள் கிடையாது, நீர்மூழ்கிகளை கண்காணிக்கும் நுட்பம் கிடையாது, ராணுவ பலத்தில் பெரும் நுட்பம் என ஏதுமில்லை. ஆனாலும் தன்னை நம்பி நின்றது தேசம்.

இந்தியாவின் விக்ராந்த் ஏதும் துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்தாலும், யுத்த தர்மத்தை மீறி அந்த ஊரே அழிந்தாலும் (அதனால் அழிக்கமுடியும்) விக்ராந்தை விடகூடாது என்ற வெறியோடு காஜி வங்ககடல் பக்கம் வந்தது.

அதன் இலக்கில் சென்னையும் இருந்தது.

காஜி விக்ராந்தை தேடிகொண்டிருக்க, இந்திய படைக்கோ அவகாசமில்லை, காரணம் அது நீர்மூழ்கி பரந்த கடலில் எங்கு சென்று தேடுவது?

அதனால் தளபதி கிருஷ்ணன் அட்டகாசமாக திட்டமிட்டார்.
தளபதி கிருஷணனின் திட்டம் என்னவென்றால், எங்கோ சுற்றிகொண்டிருக்கும் காஜி நீர்மூழ்கியினை குறிப்பிட்ட இடத்திற்கு தந்திரமாக வரவைப்பது, வந்ததும் போட்டு தள்ளுவது.

அதற்காக கோவளம் பீச், கோல்ட்ன் பீச் கடற்கரைகளை சொல்லமுடியாது,அது மிக குறிப்பிடபட்ட இடமாக இருக்கவேண்டும், இல்லாவிட்டால் ஹாஜி காலத்திற்கும் சிக்காது.
அவர்கள் குறிப்பிட்ட இடம் விசாகபட்டினம், இயற்கை துறைமுகம். ஆழமான கடல். அப்படியே அங்கு பரபரப்பினை கிளப்பிவிட்டார்கள், பரபரப்பு என்றால் 500 மூட்டை அரிசி, 200 கிலோ ஆடு, 2000 லிட்டர் டீசல் எல்லாம் 2 நாளுக்குள் வேண்டும் மிக அவசரம், என பெரும் கொள்முதல் செய்வதாக இந்திய உளவுதுறையினர் சத்தம்போட்டு வியாபாரம் பேசினர்.

அதே நேரம் ரகசியமாக மீணவர்களுக்கு எல்லாம் பயிற்சி அளித்தது கடற்படை, விநோத நீர்குமிழி கண்டாலோ, அசாதாரண அலைகளை கண்டாலோ உடனே தகவல் தெரிவிக்க சொல்லி இருந்தார்கள். மீணவர் வேடத்தில் வியாபாரி வேடத்தில் உளவாளிகளும் உயிரை கொடுத்து தகவல் திரட்டினார்கள்)

மிக மிக பரபரப்பான காலங்கள் அவை

விசாகபட்டினததில் இருந்த பாகிஸ்தான் உளவாளிகள் இதனை வழக்கம்போல பாகிஸ்தானுக்கு அனுப்பினர், இந்திய உளவுதுறையினர் மிக அவசரம் என துரிதபடுத்தியதையும், பெரும் பொருள் வாங்குவதையும் மறக்காமல் அனுப்பினர்,
அவ்வளவுதான் துள்ளிகுதித்து பாகிஸ்தான் கடற்படை, சிக்கியது விக்ராந்த் என மகிழ்ந்தார்கள்.

(அந்நேரம் ஹாஜி இலங்கை ராணுவத்தின் துணையோடு அப்பக்கம் பாதுகாப்பாய் இருந்தது, பின்னாளில் இலங்கை எரிய இம்மாதிரி சம்பவங்கள்தான் காரணம் )
இலங்கை அருகே சுற்றிகொண்டிருந்த கொடூர ஹாஜிக்கு தகவல் அனுப்பினார்கள், பட்சி விசாகபட்டினத்தில் இருக்கின்றது இன்றே சென்று உடையுங்கள், மறக்காமல் பின்குறிப்பினையும் எழுதினார்கள்,
அதாவது ஏதும் சண்டை நடந்தால் அந்த நகரமே அழிந்தாலும் பரவாயில்லை, கப்பல் தப்ப கூடாது.

உற்சாகமாய் வந்தது காஜி , வந்ததும் சும்மா இருந்திருந்தால் சிக்கல் இல்லை, ஆனால் டாக்காவுக்கு (கிழக்கு பாகிஸ்தான்) சில தகவல்களை அனுப்பியது, அதனை வழிமறித்து படித்து நிலமையினை புரிந்துகொண்டது இந்தியபடை.

அதாவது நாங்கள் விசாகபட்டினத்தில் இருக்கின்றோம், இந்த விக்ராந்தை கடலுக்குள் மூழ்கடித்துவிட்டு, அது மூழ்குவதை ஆசைதீர பார்த்துவிட்டு சிட்டகாங்( வங்க துறைமுகம்) வந்து மேல் எழுவோம், எம்மை வரவேற்க தயாராகுங்கள் என்ற செய்தி அது.
உற்சாகமான இந்திய தரப்பு மேலும் தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் படிக்குமாறு பேசி அவர்களை நம்ப வைத்தது

அதாவது கப்பலின் விமானங்களின் ஒன்று பழுது, பாதுகாப்பு கப்பல்களில் பிரச்சினை என ஏதோதோ அனுப்பி விக்ராந்த அங்கேதான் இருக்கின்றது என பிம்பத்தை உருவாக்கியது.

அது டிசம்பர் 3 நள்ளிரவு. விசாகபட்டினத்தை அடைந்தது ஹாஜி. வந்த இடம், தாக்கு ஆயுதம் எல்லாம் உறுதி செய்யபட்டபின் மெதுவாக வெளிவந்து கப்பலை குறிபார்க்க தேடியது, அதன் கண்களில்பட்டது ராஜ்புத் எனப்படும் இன்னொரு கப்பல்.
அதனை கண்டதும் நீருக்குள் படக்கென்று மூழ்கியது ஹாஜி எனினும், ராஜ்புத் கப்பல் அந்த அசாதாரண கடல் அலைகளை இனங்கண்டது, ஆனாலும் அது ஹாஜி என அதற்கு தெரியாது.

பொதுவாக பெரும் விமானம் தாங்கி கப்பல்கள் பல கப்பல்கள் துணையோடுதான் பயணிக்கும், அப்படி ராஜ்புத் கப்பலை விகராந்தின் துணைகப்பலாக எண்ணி விட்டுவிட்டது ஹாஜி, அதன் முதல் தவறு இது. தவறு என சொல்லமுடியாது. புலிவேட்டைக்கு செல்லும் பொழுது எலியினை கொல்வது யார்? அப்படித்தான் அது புலியினை தேடியது.

ஆனால் ராஜ்புத் கப்பல் கேப்டனுக்கு பொறி தட்டியது, எதற்கும் இருக்கட்டும் என கடல் கன்னிவெடிகளை வீசிவிட்டு அவர்கள் கப்பலை கிளப்பினார்.
அடுத்த 30ம் நிமிடத்தில் முடிந்தது பாகிஸ்தான் கனவு.

பெரும் வெடிச்சத்தம், விசாகபட்டின மக்கள் பூகம்பத்தை உணர்ந்தனர். ஜன்னல் கண்ணாடிகள் கூட உடைந்தன, பெரும் வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதை உணர்ந்தாலும் படு ஜாக்கிரதையான இந்திய ராணுவம் முதலில் அதனை நம்பவில்லை.
காரணம் ஹாஜியின் திசை திருப்பும் விளையாட்டாக இருக்கலாம், நாம் முந்தி கொண்டு என்ன சத்தம் என சென்றால் தொலைத்துவிடுவார்கள்.

நிதானித்து டிசம்பர் 5ம் தேதி, இந்திய கடற்படை கடலடி வீரர்கள் சென்று பார்த்தபொழுது பிரமாண்ட ஹாஜி முன்பக்கம் வெடித்து மூழ்கி கிடப்பதையும், 95 பாகிஸ்தானிய வீரர்களின் உடல்களையும் கண்டார்கள், உறுதிபடுத்தினார்கள் ஹாஜி தொலைந்தது.
இந்த களபேரங்கள் நடக்கும்பொழுது அந்தமானுக்கு அப்பக்கம் பத்திரமாக நின்றுகொண்டிருந்தது ஐ.என்.எஸ் விக்ராந்த். அதாவது 10 நாளைக்கு முன்பே அதனை அந்தமானுக்கு கடத்திவிட்டு விசாகபட்டிணத்தில் கண்ணாமூச்சி ஆடியது இந்திய கடற்படை.

பின் பெரும் ஆபத்து நீங்கிய இந்திய கடற்படை தூள் பறத்தியது. ஐ.என்.எஸ் விக்ராந்தை மீறி எந்த பாகிஸ்தானிய கப்பலும் வங்க கடலுக்குள் வரமுடியவில்லை. அதாவது கிழக்கு பாகிஸ்தானுக்கான சப்ளை ரூட்களை முடக்கியது விக்ராந்த்.

போதா குறைக்கு பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை அகதளம் செய்தது இந்தியபடை, ஹாஜி மூழ்கடிக்கபட்டபின் இந்திய கடற்படை எதற்கும் காத்திருக்கவில்லை
தன் நீர்மூழ்கி இந்தியாவால் மூழ்கடிக்கபட்டதை ஜீரணிக்கமுடியாத அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்குவதாக அறிவித்தது, பதிலுக்கு சோவியத் யூனியன் மிரட்ட, பின்வாங்கிய அமெரிக்கா பாகிஸ்தானை முறைத்துவிட்டு அமைதியானது.
பலமிழந்த பாகிஸ்தானிய படைகள், சப்ளை இல்லாததால் சோர்ந்தன, கிட்டதட்ட 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்களை சிறைபிடித்து காட்டினார்

மானெக்க்ஷா, அதோடு பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்தார்.
இவை எல்லாம் இந்திய கடற்படையின் பெரும் சாகசங்கள். இந்திய ராணுவத்தின் தந்திரமான நகர்வுக்கு கிடைத்த வெற்றி, உலகமே வியந்து பார்த்த சம்பவம் இது
இந்திராவும், மானெக்ஷாவும் உலக பிரபலம் ஆனார்கள். மானெக்ஷா மங்கா புகழ்பெற்றார், அவரை அரசியலுக்கு வர எல்லாம் அழைத்தார்கள், அவர் பெயர் அப்படி மின்னியது

ஆனால் அவர் வரவில்லை மாறாக ஊட்டிபக்கம் வந்து ஓய்வெடுத்தார்
இந்திய வரலாற்றில் இந்த டிசம்பர் 4 மறக்கமுடியாமல் ஆனது இந்த சாகசத்தில்தான், ஒவ்வொரு இந்தியனும் மறக்காமல் படிக்க வேண்டிய விஷயங்கள் இவை.
வாய்ப்பு கிடைத்தால் சென்னையினை நொறுக்கும் திட்டமும் ஹாஜிக்கு இருந்தது , விக்ராந்த் கப்பலை தகர்த்த பின் அதன் இலக்கு சென்னையும் போகும் வழியில் மும்பையுமாகவே இருந்தது

பெரும் ஆபத்து நீங்கியது

இவ்வளவு சாகசங்களை இந்திய கடற்படை செய்துகொண்டிருந்தபொழுது உலகமே அதிசயமாக பார்த்த இந்தியாவின் வெற்றி இந்திராவின் பெயரை உச்சத்துக்கு கொண்டு சென்றது

சீன போரின் தோல்விக்கு பின் பாகிஸ்தானை இரண்டாக பிளந்து சீறி நின்ற இந்திய ராணுவத்தின் பலம் பெரிதாக சிலாகிக்காப்ட்டது மானெக்சா அடுத்த பிரதமராகும் வாய்ப்பும் இருந்தது

இந்த பெருமையினை தமிழகம் உணர்ந்துவிட கூடாது என்றுதான், தேசியமும் தேசபெருமையும் வளர்ந்துவிட கூடாது என்றுதான் அந்த படுபாதக செயல்கள் நடந்தன‌
அதையும் தாண்டி அந்த மாவீரன் மானெக்சா ஊட்டியில்தான் வாழ்ந்து இறந்தார்,
இஸ்ரேலின் 6 நாள் போரை போலவே பிரசித்திபெற்ற போரை நடத்தி இந்தியாவுக்கு பெரும் வெற்றி கொடுத்த அந்த மாவீர தளபதிக்கு திராவிட தமிழகம் கொடுத்த மரியாதை அவ்வளவுதான்

கலாமுக்கு நிகழ்ந்ததை விட மோசமான அவமானம் இங்கே மானெக்சாவுக்கு நிகழ்ந்தது
எவ்வளவு பெரிய தேசவிரோதம் ன்பதற்கான எடுத்துகாட்டுகள்
அதே மானெக்ஸா ஊட்டியில் ஓய்வில் இருக்கும்பொழுதுதான் ஈழத்தில் இந்திய ராணுவம் புலிகளால் கொல்லபட்டது,

டிசம்பர் 4 இந்திய வரலாற்றின் மாபெரும் பொன்னாள்.
யோசித்து பாருங்கள், நீங்களே உணர்வீர்கள்.

நிச்சயம் அந்த போரில் தளபதி கிருஷ்ணனின் சாகசம் மிகபெரிது, ஹாஜி கப்பலை ஒழித்து போரை முடிவுக்கு கொண்டுவந்தவர் அவர்தான்
ஆனால் அவரை தமிழனுக்கு தெரியாது, அவர் பிறந்த நாகர்கோவிலில் அவருக்கு ஒரு சிலை கூட கிடையாது , ஒரு நினைவுசின்னமும் இல்லை

அந்த நீலகண்ட கிருஷ்ணனின் சிலை நாகர்கோவிலில் நிறுவபட்டு கடற்படை நாளான டிசம்பர் 4ம் தேதி அந்த வீரதிருமகனுக்கு மாபெரும் அஞ்சலி செலுத்தபட வேண்டும்
நாகர்கோவில் பக்கம் அதை மத்திய அரசும் இந்திய ராணுவமும் அதை செய்யும் என தேசாபிமானிகள் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றோம்

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்

அந்த கப்பல் சென்னையினையும் குறிவைத்து நின்றது, பேரழிவில் இருந்து சென்னையினை காத்த தமிழன் தளபதி கிருஷ்ணன், அந்த நன்றியினை ஒவ்வொரு தமிழனும் நினைவில் வைத்து கொள்ளவேண்டும்

சென்னையினை அந்த நிஜதளபதிதான் காத்து கொடுத்தான்,

சென்னையின் அச்சுறுத்தலை முடித்த பெரும் சரித்திரம் அந்த தமிழனுக்குத்தான் உண்டு
(படத்தில் இடபுறம், அதாவது பாகிஸ்தான் தோல்வியினை ஒப்புகொண்டு கையெழுத்திட்ட அந்த சரித்திர முக்கியத்துவமான படத்தில் இடபுறம் இருக்கின்றார் ஹீரோ கிருஷ்ணன்

மாய வேலையில் அமெரிக்க கப்பலையே அழித்து இந்தியாவினை காத்த மாயாவி கிருஷ்ணன்)

1638767681609.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top