• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பேருந்து பயணங்களில் - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,110
Reaction score
4,604
Location
Coimbatore
🟡 ஓடும் பேருந்தில் ஒரு வழக்கு🟡


‘தனா’ தனியார் பேருந்து. வெளிப்புறம் நன்கு கவர்ச்சிகரமாக பெயின்ட் அடித்து உள்ளே குஷன் போட்டு இடைவிடாமல் காதைக் கிழிக்கும் பாடல்களையும் போட்டு ஜாம் ஜாம் என்று தன் போக்குவரத்து பிஸினஸை நடத்திக் கொண்டு இருந்தார் அந்தப் பேருந்தின் உரிமையாளர்.

‘ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி’ என்று பாட்டு பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்க சிறுமுகையில் இருந்து கோவைக்குத் தன் பயணத்தை ஆரம்பித்தது அந்தப் பேருந்து.

கட்டணக் கழிவறை மற்றும் குளியலறையில் இருந்து புத்துணர்வுடன் வந்த அதன் ஓட்டுநர் வழக்கம் போல எதிரே இருந்த தன் தொழில் தெய்வமான ஸ்டீயரிங்கைத் தொட்டுக் கும்பிட்டு அன்றைய பயணத்தை இனிதே ஆரம்பித்து வைத்தார்.

“டிக்கெட் டிக்கெட் “ என்ற உள்ளே கூவிக் கொண்டு இருந்த நடத்துனருக்கு முப்பத்தைந்திலிருந்து முப்பத்தெட்டு வயது இருக்கும்.

பார்க்க நல்ல மனிதராக இருந்தார்.

ஆனால் பாவம் அவரையும் கொதிக்க வைப்பவர்களும் இருப்பார்கள் போல!

பஸ் வேகம் எடுக்கும் முன் வயதான ஜோடி ஒன்று பேருந்தை வழிமறிக்க நடத்துனர் இனிய முறுவலுடன் அவர்களை ஏற்றிக் கொண்டார்.

“ரைட் ரைட்” என்று அவர் இரட்டை விசில் கொடுக்க பேருந்து வேகமெடுத்தது.

அனைவரிடமும் பேருந்து கட்டணத் தொகையை வசூலித்து உரிய பயணச் சீட்டையும் கொடுத்து வந்த நடத்துனர் இந்த ஜோடியிடம் வந்தது; இளகி நின்றார்.

இந்த வயதில் எத்தனை அன்னியோன்யம்!

“பாட்டி.. எங்க?”

தாத்தாவிடம் ஏதோ ஆலோசனையில இருந்த பாட்டி-

“மேட்டுப்பாளையம் போகனும் தங்கம்” என்றார்.

“சரி பாட்டி…டிக்கெட் பத்து ரூவா…” என்று சொல்லி முடிப்பதற்குள் பாட்டி பத்து ரூபாயை இடுப்புச் சேலை இருகே சொருகி இருந்த சுருக்குப் பையில் இருந்து எடுத்து நீட்டி இருந்தார்.

உள்ளம் குளிர்ந்து போனது நடத்துனருக்கு.

இரண்டு பயணச் சீட்டுகளை வழங்கி விட்டு - “அப்புறம் வாரேன் பாட்டி” என்று முகம் கொள்ளாப் புன்னகையுடன் அடுத்த பயணியிடம் சென்றார்.

அதற்குள் பாட்டியிடம் தாத்தா பசிக்கிறது என்று சொல்ல -

உடன் கொண்டு வந்திருந்த தூக்கு வாளியில் இருந்து கேப்பை களியும் கீரைக் குழ்பும் பரிமாறிவிட்டார் பாட்டி.

தூக்குவாளியின் மூடியில் கீரைக் குழம்பை வைத்து வக்கனையாகச் சாப்பிட்டார் தாத்தா.

இரண்டு வாய் உள்ளே போனதும் ‘தத்து பித்தெ’ன்று ஏதோ அவர் சொல்ல-

பாட்டியும் அவருடன் ஓடு; பேருந்திலேயே உணவை உண்ண ஆரம்பித்தார்.

அதற்குள் இதுவரை ஏறி இருந்த பயணிகளிடம் பயணச் சீட்டை வழங்கிவிட்ட நடத்துனர்
பாட்டியிடம் வந்து-

“பாட்டி டிக்கெட்” என்றார்.

“தம்பு… நான் சோறு உண்டுட்டு தாரேன்” என்ற அவர் கெஞ்சவும் நடத்துனருக்கு ‘அய்யோ’ என்று ஆக-

“சாப்பிட்டு குடு பாட்டி” என்ற மீண்டும் ஒரு புன்னகையுடன் விலகினார்.

பேருந்து மேட்டுப்பாளையத்தில் தாலுக்கா ஆபீஸ் நிறுத்தத்தில் நிற்க அங்கும் பயணிகள் ஏறினர். இறங்கினர்

நடத்துனர் தன் அனைத்துப் பணியிலும் பாட்டி தாத்தா மீது ஒரு கண் வைத்துதான் இருந்தார்.

உட்கார இடம் இல்லாததால் அங்கு ஏறியவர்கள் அனைவரும் நின்று கொண்டு வந்தனர்.

அங்கருந்து பேருந்து நகரத் தொடங்கவும் பாட்டிக்கும் நடத்துநருக்கும் பேச்சு முற்றியது.

பாட்டியும் தாத்தாவும் இன்னும் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை.

அப்போது ஏறியவர்களிடமும் டிக்கெட்டை கொடுத்து மீதிச் சில்லறைகளையும் கொடுத்து முடித்த நடத்துநர் முகத்தை கொஞ்சம் விரைப்பாக வைத்துக் கொண்டு-

“பாட்டி “

“சொல்லு தங்கம்”

“இன்னும் நீ பாத்து ரூவா தரணும்”

பாட்டி வாயில் வைத்த களியை சட்டியில் போட்டு விட்டார்.

“என்ன தங்கம் இது? டிக்கெட் பத்து ரூவான்னுதானே சொன்னீங்க தங்கம்” என்று பதறினார்.

நடத்துனருக்குக் கோபம் வந்துவிட்டது. இந்த பாட்டி நம்மை ஏமாற்ற நினைக்கிறாரோ என்று சந்தேகப்பட்டவர்

“ஒரு டிக்கெட் பத்து ரூவா கிழவி.. நீயும் தாத்தனும் ரெண்டு டிக்கெட் ஆவுதுல்ல. “

“சரி தங்கம். சரி. உண்டுட்டு தாரேன் தங்கம்” என்று பாட்டி தன்மையாகப் பேச நடததுனருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“சரி பாட்டி . உண்டுட்டு குடு” எனறு இறங்கும் படிக்கருகில் போய் நின்று கொண்டார்.

பாட்டியும் தாத்தாவும் அதற்கு அடுத்த சீட்டில்தான் இருந்தார்கள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் டிக்கெட் பணத்தை வசூல் செய்யும் பொருட்டு உஷாராக நின்றார் அவர்.

பாட்டி சும்மா இராமல்…

“ஏந் தங்கம்…ரெண்டு பேருக்கு பத்து ரூவா தரணுமா?” என்று கேட்க.. அதில் இன்னும் என்ற வார்த்தையை பாட்டி விட்டுவிட்டதால் நடத்துனரின் இரத்த அழுத்தம் கூடியது.

“கிழவி நீ இருவது ரூபா தரணும்” என்று சத்தமாகச் சொன்னார்.

அவர் மொத்தமாகத் தர வேண்டிய பணத்தைப் பற்றி சொல்ல பாட்டியோ…

“அய்யயோ தங்கம் ..பத்து ரூவாதான் தங்கம்” என்று பதறியவாறே இடது கையால் சுருக்குப் பையைப் பிடித்துக்; கொண்டார். இப்போது பாட்டி மீதம் தர வேண்டிய பணத்தைப் பற்றிக் குறிப்பிட –

அது புரியாத நடத்துனருக்கு கோபம் கொதிநிலையை எட்டியது.

“கிழவி நீ பத்து ரூவா குடுத்த. பத்து ரூவா உண்டுட்டு தர்ரேன்னு சொல்லல?” என்று கர்ஜிக்க -
;

“பத்து ரூவா தான் தம்பு தரணும்” என்று கிழவி சொல்ல- நடத்துனரோ ‘மீதி பத்து ரூபாய் தர மாட்டேன்’ என்னும் அர்த்ததில் பாட்டி சொல்வதாக நினைத்து கோபத்தில் குதிக்க ஆரம்பித்தார்.

“நீ உண்டுட்டு இருக்கம் போது டிக்கெட்னு கேட்டதுக்கு உண்டுட்டு தாரேன்னு சொன்னல்லோ? என்ன கிழவி ஏமாத்த பாக்கிறயா?” என்று துள்ளினார்.

“தங்கம் நான் நீங்க குடுத்த டிக்கெட்டதான் கேக்கீங்கன்னுதான் சொன்னேன் தங்கம்” அப்போது நடந்ததற்கு இப்போது விளக்கம் அளித்தார் பாட்டி.

இதன் நடுவே பாட்டி கையைத் துடைத்துக் கொண்டு சுருக்குப்பையில் இருந்து பத்து ரூபாயை எடுத்திருந்தார்.

நடத்துனரின்”ஏமாத்தப் பாக்கிறாயா?” என்ற பதம் மிகவும் அவரைப் பாதித்துவிட -

“என்ன தங்கம் இது! எங்க குடம்பத்துல யாரும் யாரையும் ஏமாத்தினதில்ல தங்கம். நாங்க அப்படிப்பட்ட ஆளு கிடையாது” என்று படபடத்தார். அதில் உணர்ச்சி வேகத்தில் குரலும் நடுங்கியது அவருக்கு. தாத்தா ஒன்றும் புரியாமல் பாட்டியையும் நடத்துனரையம் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தார்.

இதற்குள் பேருந்து மேட்டுப் பாளையம் வந்திருக்க அங்கே இறங்க வேண்டிய பயணிகள் இறங்க அந்த அவசர சூழ்நிலையில் நடத்துனர் கொதிநிலையின் உச்சத்தை அடைந்தார்.

“பத்து ரூவாக்கு ஏமாத்துற கிழவி நீ” என்ற பற்களைக் கடிக்க-

“இந்தா தங்கம் . உங்கிட்ட ஏமாத்தனும்னு எனக்கு என்ன தங்கம் அவசியம்? இந்தா நீ கேட்ட பத்து ரூவா” என்று பத்து ரூபாயைக் கையில் கொடுக்க முயல-

அது அவர் அந்தப் பாட்டியை ஏமாற்றி வாங்குவதாகத் தெரிய அவர் பெரிய ஆரம்பித்தார்.

“கிழவி உன்ன வண்டியில நிப்பாட்டி ஏத்துனத்துக்கு பெனாலிட்டினு நெனச்சுக்கறேன். நீ காசே தர வேண்டாம். இறங்கு மொதல்ல” என்ற கூவ-

பாட்டி பணத்தைக் கொடுப்பதா தாத்தாவை எழுப்புவதா கொண்டு வந்த பொருட்களை பேக் செய்வதா என்று குழம்பிக் கொண்டு நிற்க -
நடத்துனர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கத்தினார்.

“இறங்கப் போறியா இல்லியா கிழவி “ என்ற அவர் கூக்குரலில் பாட்டி தன் பொருட்களை எடுத்தும் எடுக்காமலும் அவசர அவசரமாக அள்ளிக் கொண்டு தாத்தாவை இடது கையில் பிடித்துக் கொண்டு இறங்க ஆயத்தமானவர் மனம் தாளாமல் -

“நாங்க யாரையும் ஏமாத்துனதில்ல தங்கம். பத்து ரூவா….”பாட்டி சொல்லி முடிப்பதற்குள் -

“அண்ணா . இங்க டிக்கெட் ஏத்தலைனாலும் பரவாயில்ல... வண்டிய எடுண்ணா” என்று ஓட்டுநரை விரட்டிய நடத்துனர் காலியாக இருந்த ஆண்கள் சீட்டில் உட்கார -இத்தனை நேரம் கத்தியதில் தண்ணீர் தாகம் எடுத்தது அவருக்கு.

முன்னே போய் ஓட்டுநரின் பின்னால் இருக்கும் தண்ணீர் பாட்டில்களை வாங்கும் அளவு பொறுமை இல்லாமல் கண்களை சுழற்ற- பாட்டி விட்டுச் சென்ற தண்ணீர் பாட்டில் கண்ணில் பட எடுத்துக் குடித்தார்.

“அந்தக் கிழவன் கிழவிய வண்டியில ஏத்துனதுக்கு இதுதான் மிச்சம் “ என்று வாய் விட்டுச் சிரித்தார்.
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,110
Reaction score
4,604
Location
Coimbatore
வணக்கம் தோழமைகளே, பேருந்துகளில் நான் சந்தித்த நபர்கள் நிகழ்வுகள் ஆகியவற்றை வைத்து இந்த தனித் தனி சிறுகதைகளை எழுத ஆரம்பித்துள்ளேன்.

உங்கள் ஆதரவை மறவாமல் அளிக்குமாறு உளமாரக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி❤
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Yes akka puriyama namma evlo idathula misunderstanding pannikirom illa adhu nala evlo troubless oru 10 rupees ku ivlo akkaporaa
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
@Nanthalala இந்த மாதிரி சின்னச்சின்ன நிகழ்வுகள் தான் வாழ்க்கையை சுவாரசியமாக மாற்றும், வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,110
Reaction score
4,604
Location
Coimbatore
@Nanthalala இந்த மாதிரி சின்னச்சின்ன நிகழ்வுகள் தான் வாழ்க்கையை சுவாரசியமாக மாற்றும், வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
Thank you sis❤❤❤

Keep supporting sis❤❤❤❤
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,757
Reaction score
35,405
Location
Vellore
நடத்துனர், பாட்டி டையலாக் எல்லாம் செமயா இருக்கு சகி... அந்த ஸ்லாங் ரொம்ப அழகா தந்திருக்கீங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top