• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பேருந்து பயணங்களில் _ 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,532
Reaction score
6,742
Location
Salem
அவனா இவன்



முதலிலேயே அதிக மக்களை தன்னுள் அடைத்திருந்த அந்த நகர பேருந்தில்
மேலும் பலர் முண்டியடித்து கொண்டு உள்ளே ஏறினர். அதில் அவளும் ஒருத்தி.
முட்டிமோதி உள்ளே நுழைந்து கிடைத்த சிறு இடத்தில் தன்னை பொருத்தி கொண்டு கம்பியை பிடித்து நின்றவளுக்கு நிம்மதி பெருமூச்சு.
'அப்பாடி, பஸ் கிடைச்சிடுச்சு இன்னைக்கு டைமுக்கு இன்டர்வியூக்கு போயிடலாம். கண்டிப்பா இந்த வேலை கிடைச்சிடும் கிடைக்கனும்' அவளுக்குள் நம்பிக்கை. வேண்டுதல்.
பாதி வழியில் பெரிய குலுக்கலுடன் பேருந்து‌ நின்று விட்டது. என்னவென்று பார்க்க, பேருந்து பிரேக் டவுன்!
அவளுக்கு 'அய்யோ' என்றானது. பிறகு...
அனைவரும் ஓட்டுனரை குற்றம் சாட்டிய தங்கள் பார்வையை தாங்களே முயன்று மாற்றிக் கொண்டனர்.
“ தள்ளனும்” என்றார் ட்ரைவர் கண்டக்டரைப் பார்த்து லேசாக சிரித்தவாறு.


அந்த பஸ் கண்டிசன் அவருக்கு அத்துப்படி அல்லவா?

“ லேடீஸ் எல்லாரும் இறங்கி நில்லுங்க.
ஜென்ஸ் எல்லாரும் இறங்கி பஸ்சை தள்ளுங்க. பெருசுங்க வண்டியிலேயே இருங்க “ படபடவென அடுத்த நடவடிக்கை மேற்கொண்டார் நடத்துநர்.

அதன்படி இறங்கியவர்களில் ஒருத்தி நம் நாயகி பவித்ரா.

இன்டர்வியூ போகும்போதே அவள் அம்மா வாயை விட்டிருந்தார்.

“ இந்தாடி பவி! நீ படிச்சு பாட்டை தொலைச்ச வரை போதும்.

சீக்கிரம் உன்னை கட்டி குடுக்கணும்னு அப்பா சொல்லிட்டு இருக்காங்க.

இப்போ வேலைக்கு போறேன் , வெட்டிக்கு போறேன்னு நீ ஆரம்பிச்சா அந்த மனுஷன் என்னை வெட்டிருவாரு.

நமக்கு வேலைக்கு போகனும்னு என்ன தலை எழுத்து?

பொண்ணா பிறந்தமா… சோறு பொங்க கொழம்பு வைக்க கத்துகிட்டமானு இருக்கணும்.

சுத்து வேலைக்கு ஆளுங்களை வச்சு அதுங்களை மேய்க்கணும்.

அதை விட்டு நீ பள்ளிக்கூடம் முடிச்சதும் மேல் படிக்கிறேன்னு சொன்னதே எனக்குப் பிடிக்கல.

இப்போ வேலைக்கு போறாளாம், வேலைக்கு.

ஒன்னும் வேண்டாம்.

ஒழுங்கா வீட்ல இரு.

நாளைக்கு பொண்ணு பாக்க வந்தாலும் வருவாங்க. அப்பா அப்டிதான் சொல்லிகிட்டு இருக்காங்க.
இன்னும் உறுதியா சொல்லல.

தேவையில்லாத பிரச்சனைய இழுத்துவிடாம ஒழுங்கு பிள்ளையா வீட்ல இருக்ற வழிய பாரு”



வாய் ஓயாமல் பேசிய அன்னையின் பேச்சுக்களை புறம் தள்ளிவிட்டு,
“ அம்மா இந்த ஒரு தடவை ட்ரை பன்றேன்மா. வேலை கிடைச்சா உங்க விருப்பம் என்னவோ அதுபடி செய்றேன்.
இல்லன்னா முயற்சி பண்ண நிம்மதியா வாது இருக்கும்.


“ என்னவோ போ. அப்பாக்கு தெரிஞ்சா சந்தி சிரிச்சிரும்(!)
தோளுக்கு மேல வளந்த பொம்பள பிள்ளை சம்பாதிச்சு நீ சாப்டனுமான்னு என்னை கொலையா கொல்லுவாரு மனுஷன்”
அம்மாவின் முறைப்பில் கம்மென்று வீட்டை விட்டு முறைப்படி கிளம்பினாள்.


அதாவது இன்டர்வியூக்கு தேவையான ஆவனங்களுடன்.

அவள் வீட்டில் இருந்து வரும்போது ஸ்கூட்டி ரிப்பேர்.

“ பார்த்தியா? சகுனம் சரியில்ல.” என்ற தாயை பரிதாபமாக பார்த்துவிட்டு ஆட்டோவில் ஏறி பஸ் ஸ்டண்ட் வந்து சேர்ந்தாள்.

இதுக்கு மேலே ஆட்டோவில் போக மனமின்றி அந்தசமயம் பஸ் வந்ததால் அதில் ஏறியும் புண்ணியமில்லாமல் பஸ்சும் பிரேக் டவுன்.


“ தள்ளுமாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ணெய் விலை ஏறி போச்சு.
மாட்ட பூட்டுங்க”


1980ஸ் கிட்ஸ் யாரோ பாட பேருந்து தள்ளப்பட்டது.
அதற்குள் மிக அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மற்றொரு பஸ் வர நின்றவர்களில் பாதி பேர் அந்த பஸ்ஸில் ஏறி போய் விட்டார்கள்.


இதனால் இந்த பேருந்தில் கூட்டம் குறைந்தது.
இப்போது இந்த பேருந்தும் தயாராகி விட மாற்றவர்கள் தாராளமாக உட்கார்ந்து வந்தார்கள்.
பவித்ரா இன்னும் இந்த வண்டியில்தான் இருந்தாள்.


ஓட்டுனரின் - நடத்துநரின் முக பாவனைகளும் இந்த பிரச்சினை விரைவில் சரியாகும் என உணர்ந்து வேறு பஸ்ஸில் ஏறவில்லை அவள்.


தவிர அப்படி செய்வது ஒரு நம்பிக்கை துரோகம் ( ஆத்தாடி )போன்ற உணர்வை அவளுக்கு கொடுத்தது.


இப்போது உட்கார இடம் கிடைத்ததில் நிம்மதியாக மூச்சு விட்டாள்.

அப்போது பக்கத்து இருக்கையில் கைக்குழந்தை யுடன் அமர்ந்திருந்த பெண்
“ பாப்பா. கொஞ்சம் ஃபோன் குடுக்க முடியுமாடா. ஒரு முக்கியமான விசயம் பேசணும்.
பாப்பாக்கு செரிலாக் வாங்கிட்டு வர சொல்லனும் அவங்க அப்பாகிட்ட.”


மறுக்க முடியாமல் ஃபோனை நீட்டினாள்.

“ இந்த குட்டியை கையில வச்சுகிட்டு என்னால ஃபோன் போட முடியாதுடா. நீயே நம்பர் போட்டு தாறியா கண்ணா?”
அந்தப் பெண் கொஞ்சவும்-
இவளும் அந்தப் பெண் சொன்ன எண்களை தன் மொபைலில் தட்ட பஸ் ஸ்பீட் பிரேக்கில் ஏறியதில் ஒரு நம்பர் மாறிப் போனதை அவள் அறியவில்லை.
இதற்குள் குட்டி பாப்பா எதற்கோ நை நை என அழவும் - “பாப்பா நீயே சொல்லிருடா “
என்று அந்த கடின வேலையை இவளிடம் தள்ளி விட்டாள் அந்தப் பெண்.


அதற்குள் அந்தப் பக்கம் ஃபோன் எடுக்கப்பட்டு விட- புதிய நபரிடம் பேசும் பதட்டத்தில் அவசர அவசரமாக
“ வரும் போது உங்க குழந்தைக்கு செரிலாக் வாங்கிட்டு வந்திருங்க…” என அவள் முடிப்பதற்குள்

“ என்னது? குழந்தையா?.....
என் மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. யாரு நீயி?”
என்று படபடத்தது ஒரு வயதான பெண் குரல் மறுமுனையில்.


“ அய்யோ சாரி ராங் நம்பர்” என்று வைத்து விட்டு,

வேறு வழி இன்றி மீண்டும் சரியான எண்ணு க்கு ஃபோன் செய்து செரிலாக் வாங்கி வர சொல்லி விட்டு நிமிர்ந்த பொது அவள் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது.


வேலையும் கிடைத்தது விட்டது.அடுத்த வாரத்தில் இருந்து வேலைக்கு வர சொல்லி விட்டார்கள்.
தோழிகளுக்கு சொல்லி கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வரும் போது மாலை ஆகி விட்டது.


ஆனால் வீட்டில் என்ன சொல்வார்களோ? என தயங்கிக் கொண்டே வந்து தாயிடம் விசயத்தை சொன்னாள் பவித்ரா.


“ சரி சரி. கொஞ்ச நாள் வேலைக்கு போ.
எந்த புத்துல எந்த பாம்போ?
எவனையும் நம்ப முடியாது. பொம்பளைங்க சொந்த கால்ல நிக்கிறதுதான் இனி நல்லது.
அப்பாகிட்ட சொல்லிட்டேன். சரினு சொல்லிட்டாங்க”
தாயின் பேச்சில் ஆனந்தத்தை விட அதிர்ச்சி அதிகம் அவளுக்கு.


வேலைக்கு போக ஆசை காட்டி மோசம் செய்து விட்டால் என்ன செய்வது?
“ காலையில் வேற ஏதோ பொண்ணு பாக்க வர்றதா சொன்னிங்க?”
தயக்கத்துடன் வினவினாள் பவித்ரா.


“ பய ஒழுக்கம் ஒன்னும் சரி இல்ல போல. ஊருக்கு தெரியாம ஏதோ பொண்ணை கட்டி குடித்தனம் நடத்தி பிள்ளையும் பெத்தது இருக்கானாம்.
அவங்க அம்மா கிட்ட அந்த பொண்ணு இவன்னு நினச்சு பேசி இருக்கு.
அந்தம்மா ஒரே அழுகயாம்.
இவன் இல்லனு சாத்திக்கிறானாம்.
அப்பாவுக்கு மனசே விட்டு போச்சு.
அதான் உன் விருப்பப்படி வேலைக்கு அனுப்ப சொல்லிட்டாங்க”


பவித்ராவுக்கு அழவா சிரிக்கவா என்று தெரியவில்லை.

_____________
Nirmala vandhachu 😍😍😍
Pavithra kku therila aana
Nirmala 😄😄😄🤭🤭🤭
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top