• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பைரவி வழிபாடு .. சாக்த்த வழிபாடு .. இறைதன்மையை தாயாக உருவகப்படுத்திய வழிபாடு ..

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
View attachment 25203

நமது சனாதன தர்மம் இறை வழிபாட்டை கொண்டு உருவானது அல்ல .. இது பெயரையோ , இறைவன் ஆணா பெண்ணா என்கிற தன்மையோ அல்லது உருவத்தையோ கொண்ட விசயங்களின் அடிப்படையில் உருவானது அல்ல!!

இங்கே எது சரி என்பதல்லா .. நீ செல்லுகிற பாதையில் நீ எவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் சென்று இருக்கிறாய் என்பதே !!

இந்த பைரவி வழிபாட்டு முறையை பற்றி திருமூலர் சொல்லி இருக்கும் பாடல் ..

#1075. மேதா கலை

பன்னிரண்டாம் கலை ஆதி பயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண்டு ஆதியோடு, அந்தம் பதினாலும்
சொல் நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே.


பன்னிரண்டாவது உயிர் எழுத்தாகிய ‘ஐ’ என்ற எழுத்தால் உணர்த்தப் படுபவள் பயிரவி. அதனுடன் மாயையாகிய ‘ம்’ என்பதை இணைத்தால் ‘ஐம்’ என்னும் வாக்கு தேவியின் பீஜ மந்திரம் கிடைக்கும். பிரணவத்துடன் ‘ம்’ பொருந்தினால் ‘ஓம்’ என்ற மந்திரம் கிடைக்கும். இவற்றை செபித்தால் தேவி வாக்கு வடிவமான தன் பதினான்கு வித்தைகளையும் அளிப்பாள், அத்துடன் தன்னையும் வெளிப் படுத்திக் கொள்வாள்.

#1076.ஆதியும் அவளே அந்தமும் அவளே

அந்தம் பதினாலு அதுவே வயிரவி
முந்தும் நடுவும் முடிவு முதலாகச்
சிந்தைக் கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே.


பதினான்கு வித்தைகளாக விளங்கும் வயிரவியே ஐந்து கர்மேந்த்ரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், நான்கு அந்தக்கரணங்கள் என்னும் பதினான்கினையும் சீவர்களுடன் பொருத்து கின்றாள். அவளே படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய செயல்களைச் செய்கின்றாள். சிந்தையில் உள்ள பெரிய தாமரையில் விளங்குகின்ற தேவியும் அவளே. அவளே ஆதியும், அந்தமுமாக விளங்குகின்றவள் ஆவாள்.

#1077. வயிரவியை வழிபடுமின்

ஆகின்ற மூவரும் அங்கே யடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோர்க்கே!


சீவர்களைச் செலுத்துகின்ற நான்முகன், திருமால், உருத்திரன் என்ற மூவரும் வயிரவியை வழிபட்டால் செயல்திறன் அடங்கி விடுவர். அழிகின்ற இயல்பு உடையது சீவனின் உடல். அது ஐம் பூதங்களால் ஆனது. உடலில் பொருந்திய சீவனை அநாதியான ஆத்மாக்கள் உள்ள இடத்தை அடையச் செய்பவர் யார்? ஆற்றல் மிகுந்த திரிபுரையை வழிபட்ட புண்ணியர்களே அவர்கள் ஆவர்.

இதை படிக்கிற வைணவர்கள் இதை தங்களின் விஷ்ணுவின் மாயை பற்றிய நினைத்து படியுங்க .. எல்லா விதத்திலும் பொருந்தும் ..

இதில் சொல்லப்பட்டு இருக்கிற இந்த மனித உடலின் 14 தத்துவங்கள் எல்லாருக்கும் (சாக்த சைவ வைணவ பிரிவுகளுக்கு )ஒன்றே .. 24 , 96 தத்துவங்கள் வரை இதை ஒவ்வொரு மத பிரிவுகளும் பிரித்து சொல்லுவார்கள் !!

அதாவது ஐந்து கர்மேந்த்ரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், நான்கு அந்தக்கரணங்கள் ..
இது நம்மை - இந்த உலகில் எப்படி பிறக்க வைத்து அதில் அல்லாட வைத்திருக்கிறான் என்பதை அறிய .. இதில் இருந்து தப்பிக்க வழியை மேலே இருக்கும் மூன்று பாடல்களில் திருமூலர் மாஹாமுனி சொல்லி இருக்கிறார் ..

இதெல்லாம் தெரிஞ்சு என்ன பண்ண போகிறோம் என்கிறீர்களா ??

நீங்க தினமும் பயணிக்கும் கார் பழைய பியட் காரா இல்லை மிரட்டலான BMW வா என்று தெரியாமல் போவது போல இருக்கும் உங்கள் வாழ்க்கை !!!

இந்த பாடலில் உங்கள் புரித்தலை சொல்லுங்க .. மிகப்பெரிய மனிதர் எழுதிய பாடல் - சிலர் இதை மந்திரம் போல பல முறை படித்தாலே உயர்வு பெறலாம் என்று பெரியோர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன் .
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top