• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பொன்னூஞ்சலில் என் அனுபவம் ?????❤???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
பொம்மி.... பொம்மி .... பொம்மி .... இந்த பொம்மி, சீனிப்பா வோட தோள்களில் ஆடும் ஊஞ்சல்... இரண்டு தாத்தாக்களின் பாசத்தில் ஆடும் ஊஞ்சல், சின்னாவின் அரவணைப்பில் ஆடும் ஊஞ்சல்...விஸ்வாவின் அளவில்லா காதலில் ஆடும் ஊஞ்சல் ....

என்றைக்கோ, ஸ்ரீக்காவோட disclaimer (part 12) பார்த்திட்டு படிக்க யோசனையாக இருந்தது. ஆனால் , ரொம்ப positive வான ஸ்டோரி... ஸ்டோரி னு சொல்றத விட, அது போன்றதொரு பாதிப்பிலிருந்து, ஒரு பெண் குழந்தையை எப்படி மீட்டு, இத்தனை ஆண்கள் அவளது சந்தோஷதிற்கும், வெற்றிக்கும் காரணமாகிறார்கள் என்று அழகாக, இதமாக சொல்லப்பட்டிருக்கிறது.

அது, அத்தனை எளிதான விஷயமல்ல.,ஒவ்வொரு நாளாக பொம்மியின் மாற்றங்கள் படிப்படியாக கண் முன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்., எதையெல்லாம் அறவே மறக்க, தவிர்க்க வேண்டும் என்று ரிஷபன் மூலமாக புரிய வைப்பது அழகு. அவர் அதை கடைசி வரை சரியாக செய்கிறார். எந்த இடத்திலும் பொம்மியின் மீது நமக்கு அனுதாபம் வராமலிருப்பது, அருமை ..???

பொம்மியோட ஆறு வயது குழந்தைக்குறிய பயம், தயக்கம், குறும்பு எல்லாமே சொல்லும் போது,நமக்கும் குழந்தையாகிவிட்ட உணர்வு. அசலா.., பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அவர் உணர்வுகள் நம்மையும் தவிக்க வைக்கின்றன. படிப்பவர்களுக்கு, அதிக மன அழுத்தம் தராமல் எளிமையாக சொல்லப்பட்டிருந்தாலும், சில இடங்களில் பதற வைக்கிறது.

பெற்றோரின் திருமணத்தில் தொடங்கி, குழந்தைகளின் திருமணத்தில் முடியும் ஒரு நிறைவான முழு வாழ்க்கையும் சொல்லும் கதை ... ஸ்ரீக்கா வின் அழகு தமிழ்., கொஞ்சும் தெலுங்கு கொள்ளை அழகு. இடையில் நிறைய தகவல்கள் மருத்துவம், விவசாயம் பற்றியெல்லாம் வரும் போது., srikka வின் hardwork தெரிகிறது. ஆரம்பத்தில் , மகளுக்காக ஏங்கும் சீனிப்பா ஹீரோ என்றால், சின்னா.. வளர,வளர அவர் ஹீரோவாகிறார், பின் விஷ்வாவும்...

கதை முழுவதும் வரும் dialogues மனதில் நிற்கின்றன

" கோபமும் ஒரு வகையான அன்புதான்
அதை அனைவரிடமும் காட்ட முடியாது..
நெருங்கியவர்களிடம் மட்டுமே
காட்ட முடியும்
"

"உங்கள தாளிச்சு தான் என் வீடு மணக்கிறது ...:rolleyes:??"

விஷ்வாவோட timing டயலாக்ஸ் , பொம்மியோட குறும்பு dialogues , ரிஷபனோட ஷார்ப் டயலாக்ஸ் எல்லாமே அழகு..

இந்த அழகான அனுபவத்தை கொடுத்ததற்கு Thank you so much and love you a lot srikka... ??????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
ரொம்ப சந்தோசம் தீப்ஸ் ?????❤❤❤ உங்க review enakku periya boost... Love you deeps????❤❤ thanks a lot❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top