• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode பொன்னூஞ்சல் - முன்னோட்டம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
FB_IMG_1577538171135.jpgஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே!

இந்த இனிய ஆண்டில் விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெற்று, சந்தோசமும், மன நிம்மதியும் வாழ்வில் நிரம்பி வழிய மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிதாய் மலர்ந்திருக்கும் இந்த ஆண்டின் துவக்கமே எனக்கு மனமகிழ்ச்சியை தந்து, உற்சாகப்படுத்தி விட்டது.

இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது நாவலும் புத்தகமாக வெளிவந்து, என்னை புதியதொரு உயரத்தை ஏறி பிடிக்க வைத்திருக்கிறது. இதற்கு ஏணியாக இருந்து உதவியவர், இந்த தளத்தின் தலைவர் நமது சசிஜி அவர்கள் என்றால் மிகையில்லை. அவருக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் தீராது. எனது மூன்றாவது கதைக்கு திரி அமைத்து கொடுத்து, இந்த வருட பயணத்தையும் இனிதே துவங்க ஊக்கம் கொடுத்துள்ளார். இந்த சந்தோசத்திற்கும், நெகிழ்ச்சிக்கும் காரணம், என்றும் எனக்கு ஆதரவளித்து வரும் இந்த sm தளத்தின் தோழமைகளே!
இன்று முதல் ஆரம்பமாகும் எனது மூன்றாவது கதையான பொன்னூஞ்சல் நாவலுக்கு, எப்பொழுது போல் தங்களின் கனிவான ஆதரவை தரவேண்டுகிறேன்.


#mspublications_chennaibookfair2020
#புத்தகத்திருவிழா கொண்டாட்டம்
#smtamilnovels
#MSPublications
#chennaibookfair2020
#tamilnovels
#cbf2020
@bapasi
@smtamilnovels
Email @mspublications1@gmail.com
Contact @9677666469/9443337332
Shop online @ www.smtamilnovels.com
Buy @ Priya nilaiyam/ Arun pathippagam/We can shopping/Sivaguru pathippagam/Nathamgeetham
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
பொன்னூஞ்சல் - முன்னோட்டம்

IMG_20191231_181652.jpg

கணவனோடு சேர்ந்து நடந்தாலும், அவளின் பார்வை என்னவோ பின்புறம் திரும்பி, ஒரு சிறுமியை பார்த்த வண்ணமே அவள் நடை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த ஆறுவயது சிறுபெண்ணும், சளைக்காமல் தன்பார்வையை அவளை விட்டு விலக்காமல் பார்த்து வைத்தாள். வெண்பட்டு சட்டையும், அடர்மெரூன் வண்ணப் பட்டுப்பாவடையும் அணிந்து, வரிசைப் பொன்னகைகள் அழகுக்கு அழகு சேர்க்க, வெட்டிவிட்ட பேபிகட்டிங் கூந்தலை, அங்குமிங்கும் அசைய விட்டபடியே, முகத்தை ஏகத்திற்கும் சுருக்கிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள்.
தன் கையை பாசத்துடன் பிடித்து நடந்த பெரியவரின் கைகளில் இருந்து, தன்னைப் பிரித்துக் கொண்டு, மணப்பெண்ணிடம் தாவிச் சென்றிட பிரம்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள் அந்த சின்னச்சிட்டு.
***********************************************************************************


வீட்டைச் சுற்றிப் பார்த்தவளுக்கு நிச்சயமாய் இங்கே தன்னால் பொருந்திக் கொள்ள முடியாது என்ற வலுவான எண்ணம் மனதில் எழ ஆரம்பித்தது. சமீபகாலமாக தன்மகளின் செய்கைகள், தனக்கே வசப்படாமல் இருக்க, அவளது வீம்பும் பிடிவாதமும் எல்லோரையும் இம்சித்து வருவதை கண்கூடாக அறிவாள். சிலசமயங்களில் மகளின் வீம்பு தனக்கும் வந்து, மற்றவர்களை ஒதுக்கி வைத்து, தனிமையில் மகளோடு தவிப்பதும் உண்டு. அந்தக் காரணம் தொட்டே, இந்த ஒட்டாத்தன்மை மனதில் வேர்விட, இங்கு உள்ளவர்களை இனிமேல் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற எண்ணம் வந்தே அவளை ஆயாசப்படுத்தியது.
இதுவரை இந்த வீட்டு மனிதர்களிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. குறிப்பாக கணவனிடத்தில் இரவு மூழுவதும் ஒரே அறையில் இருந்தாலும், ஒருவரையொருவர் ஏறிட்டு பார்க்காமலேயே இரவைக் கடத்தி இருந்தனர்.
***********************************************************************************************


பலமனிதர்களின் குரல்கள்... மிகஅருகில் கேட்ட அருவெறுக்கத்தக்க பேச்சுக்கள்... அடுத்ததடுத்து அவளை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்விகள்... இவையாவும் அவளைப் பந்தாட, என்ன நினைத்தாளோ, கண்களைத் திறந்தவளின் மிகஅருகில் கணவன் அமர்ந்திருக்க, அவன் மடியில் முகத்தைப் புதைத்து, மீண்டும் அழத் தொடங்கினாள்.
“யாரையும் இங்கே வர விடாதீங்க பாவா! புதுசா யார்கிட்டயும் எங்களை அறிமுகப்படுத்தி வைக்காதீங்க! நாங்க இங்கேயே ஒரு ஓரமா இருக்க மட்டும் அனுமதி குடுங்க பாவா!” முன்னிலும் அதிகமாய், அவனில் ஒட்டிக்கொண்டு அடக்கப்பட்ட கேவல்களோடு பேசினாள்.
***********************************************************************************************


“என்னால முடியாத விஷயத்த செய்யச் சொல்றீங்க! பாவா!”
“பிரச்சனை என்னனு சொல்லாம, கோழைத்தனமா பேசினா எனக்குப் பிடிக்காது!”
“என்னோட பிரச்சனை முடிஞ்சு போனது பாவா... இந்த வலி எப்போவும் எனக்கு தீராது ”
“வலிகளோட வாழ நினைக்கிறவன் வாழ்க்கை, எப்பொழுதும் முழுமை அடைஞ்சதில்ல... நம்ம வலிமையால அதை மாத்தி அமைச்சுக்க பழகனும்மா!”
********************************************************************************************


அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகம் வழக்கம் போல் அன்றைய பரபரப்பை தன்னுள்ளே கொண்டு பயணிக்க ஆரம்பித்திருந்தது. ஒருபுறம் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுடன் வழக்கினைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்க, மறுபுறம் குற்றவாளிகள் யாருக்கு வந்த விருந்தோ என்று, அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டும், அருகில் உள்ளவர்களிடம் சலசலத்துக் கொண்டும் இருந்தனர்.
முன்பின் நீதிமன்ற வாதங்களைக் கேட்டோ, மற்றவர் முன் வாதிட்டோ பழக்கமில்லாத, அந்த பேதைப்பெண்ணிற்கு, தான் ஊமையாய் செவிடாய் இருந்திருக்கக் கூடாதா என்றே அந்த நேரத்தில் அவள் உள்ளம் அழுதது.


“போதையில் இருக்கும் பொழுது, சோற்றுக்குப் பதிலாக வேற ஏதாவது கொடுத்தால் சாப்பிடுவானா? போதையில் அம்மா, தங்கை, அக்கா என்று உறவு முறைகள் எல்லாம் தெளிவாகத் தெரிகிறது. அவர்களிடம் முறை தவறி நடக்ககூடாது என்பதும் புரிகிறது. அவனுடைய வீட்டில் மிகவும் அமைதியாக, எந்த அராஜகமும் செய்யாமல் தூங்கப்போகிறான்.
அவன் செய்த குற்றத்திருக்கு அவன் சாப்பிட்ட மதுவின் போதைதான் காரணம் என்றால், அந்த மதுவை தயாரிக்கும் கம்பெனி, விற்கும் கடைக்காரன், அதை விற்பதற்கு அனுமதி அளித்த அரசாங்கம் எல்லோரையும் குற்றவாளியாக நிற்க வைக்க இந்த கோர்ட் ரெடியா இருக்கா?” அடக்கி வைத்திருந்த ஆத்திரங்கள் எல்லாம் ஆதங்கமாய் பேச்சில் பொங்கி விட, தன் பார்வையால் ஆறுதல் படுத்தியே அவளை அடக்கி வைத்தார்.


எதிர்கட்சி வக்கீலை விட அதிகமான கேள்விகளை, பத்திரிக்கைகளும், ஊடகங்களும் கேட்டு, அவளை திக்கு முக்காட வைத்தனர். அவளது சூழ்நிலைகளின் தாக்கத்தை சொல்லி, கருத்துக்களைப் பகிர்வதற்கு, அவள் செய்தது என்ன ஆராய்ச்சியா? விளக்கி விவரமாக கூற? யார் புரிந்து கொள்வது இவற்றை எல்லாம்? எந்த சூழ்நிலையிலும் தங்கள் விளம்பரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு ஊடகங்கள் தங்கள் வேலையைத் தவறாமல் செய்து கொண்டிருந்தனர்.
*****************************************************************************************



தினம் தினம்
இதயமும் தானே பாடுதே!
மனம் எதையோ நாடுதே!
காதல் என்பதா? கருணை என்பதா?
நாணம் கொல்லுதே!


உன்ராகம் இன்று என் தாளத்தோடு
பூபாளம் தான் பாடுதே!
பூ மீது வண்டு தேனூற கண்டு
இனிய சுகமும் பெறுதே!
கண்ணாலே என்னோடு நீ பேச,
எந்நாளும் உன்னோடு நான் வாழ
காலம் வரும், நேரம் வரும்
பூவோடு தேனை தரும்!


ஆனந்த வானம் ஏனிந்த நாணம்
என்றென்னைத் தான் கேட்குதே!
காணாத இன்பம் தானே வந்து
கவிதை கோடி தருதே!
பொன்னாலே பூமாலை
தான்போட வந்தாயோ?
உன்னோடு நான் வாழ
மாலை வரும், வேளை வரும்
என் காதல் ஜீவன் பெறும்! (பாடல் வரிகள்)
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
வாழ்த்துகள் ஸ்ரீ க்கா... முதல் பதிவுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.... நீங்கள் மென்மேலும் பல நாவல்களை எழுதி புகழ் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
வாழ்த்துகள் ஸ்ரீ க்கா... முதல் பதிவுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.... நீங்கள் மென்மேலும் பல நாவல்களை எழுதி புகழ் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
ரெண்டு பேரும் பேசி வச்சிட்டு ஒண்ணா கதை ஆரபிக்கிறீங்களா சகிஸ்???
முந்தைய கதைகளையும் உங்க ரெண்டு பேரோட பதிவுகளையும் மாத்தி மாத்தி படிச்சேன்... இப்பவும் அப்படியே ???
வாழ்த்துக்கள் செல்வா, நவி சகி ?????❤❤❤❤???
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ரெண்டு பேரும் பேசி வச்சிட்டு ஒண்ணா கதை ஆரபிக்கிறீங்களா சகிஸ்???
முந்தைய கதைகளையும் உங்க ரெண்டு பேரோட பதிவுகளையும் மாத்தி மாத்தி படிச்சேன்... இப்பவும் அப்படியே ???
வாழ்த்துக்கள் செல்வா, நவி சகி ?????❤❤❤❤???
:LOL::LOL::LOL:
அப்படியெல்லாம் இல்லைப்பா.... நான் நடுவுல கொஞ்சம் கேப் விட்டுட்டு இப்பதான் வந்தேன்.... ஸ்ரீ க்கா தொடர்ந்து எழுதுறாங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top