• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பொ.போ | சி.சி.கதை | விளக்கம் (கிட்டத்தட்ட!)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஷஷி அக்கா வேற நம்ம கதைக்கு நிறைய விளம்பரம் கொடுத்திருக்காங்க...
ஆர்வமா வந்து படிக்குறவங்க காண்டாகி அவங்களைத் தப்பா நினைச்சுடக் கூடாதுல...

அதனால, நான் ஒரு சின்ன விளக்கம் தரேன்:

[10 நிமிட டைம் டிராவல் செய்து வந்தவர்களுக்கான எச்சரிக்கை: வந்தனம்! இதை மேற்கொண்டு படிக்காதீர்கள் - இல்லையேல் மறுபடி பத்து நிமிஷம் பின்னால் வர வேண்டியிருக்கும்! நன்றி!]

கவனிக்க -1: இது ஒரு கோடிக்காட்டல் / இப்படி யோசிச்சுப் பாருங்களேன்னு ஒரு க்ளுதான்!
கவனிக்க -2: இது எனக்குப் புரிஞ்சது - உங்க மனசையும் பார்வையையும் திறந்து வைங்க, உங்களுக்கு வேற மாதிரி புரியலாம்!


சரி கதைக்கு வருவோம்:

கதை என்ன காட்டுது?

நட்சத்திரங்களை உருவாக்கும் ஒரு சிறுவன்.
அவனைப் பாதி விளையாட்டில் சாப்பிட அழைக்கும் அவனது அம்
மா.

1. இந்தச் சிறுவன் யார்?

அ. இவன் உண்மையிலேயே சிறுவனாக இருக்கலாம். நட்சத்திரங்களை உருவாக்கல் அவனது கற்பனையிலாக இருக்கலாம். அவனுக்கு வானியற்பியலில் ஆர்வம் இருப்பதால் அவன் அவற்றைப் பற்றிப் படித்து அவ்வாறு கற்பனையில் உழல்பவனாக இருக்கலாம். அதை அவனது அம்மா தொந்திரவு செய்கிறார்.

ஆ. இவன் நட்சத்திரங்களை உருவாக்கும் ஒரு குட்டி தேவன். இவனுக்கு மேல் பெரிய கடவுள் ஒன்று இருக்கிறது. எனவேதான் இவன் அம்மா அழைக்கையில் ‘கடவுளுக்குனா அம்மாவே இல்லை’ என்று அலுத்துக்கொள்கிறான்!

--

அ. கால்வின் அண்ட் ஹாப்ஸ் என்று ஒரு ஹிந்துவில் ஒரு காமிக் ஸ்டிரிப் வரும் படித்திருக்கின்றீர்களா? (இல்லை என்றாலும் பாதகமில்லை! ஆர்வமுள்ளவர்கள் Calvin and Hobbes என்று கூகுள்க!)

சிறுவர்கள் அதீத கற்பனை வளமும் சிந்தனைத் திறனும் உள்வாங்கும் திறனும் வாய்ந்தவர்கள். பெரியவர்கள் அதைக் கெடுத்துவிடுவதில் வல்லவர்கள். கதை இதை சூசகமாகக் குத்திக் காட்டுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்!


ஆ. கடவுள் என்பவர் யார்? அவர் ஒருவர்தானா? அவர் ஒருவரே இந்தப் பேரண்டத்தை முழுவதும் உருவாக்கினாரா? எதற்காக?

பூமி என்ற ஒரு கோளைத் தவிர இவ்வளவு பெரிய அண்டத்தில் வேறெங்கும் உயிர்களே இல்லையா? (Fermi's paradox என்று கூகுளிப் பாருங்களேன்...)

பூமியைத் தவிர உயிர்கள் இல்லாத இந்தக் கோள்களையும் விண்மீன்களையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன் - ஏதோவொரு குக்கிராமத்தின் வார நாளின் மதியம் 2 மணிக்கு ஒரு பேருந்து நிறுத்தம் போல அசுவாரசியமாய் இருக்கும்!

எனில் கடவுளுக்கு என்னதான் சுவாரசியம் இந்த நூற்றுக்கணக்கான கேலக்சிகளையும், ஆயிரம் கோடி கணக்கான விண்மீன்களையும் கோள்களையும் உருவாக்குவதில்?

ஒரு வேளை அவர் உபகடவுள்கள் நியமித்திருப்பாரோ?

இப்படி எல்லாம் இந்த அண்டத்தைப் பற்றியும் இதன் ‘எக்ஸிஸ்டன்ஷியல்’ கேள்விகளைப் பற்றியும் கதை பேசுகிறதா?


---
(இப்போது தோன்றும் சில விளக்கங்கள்) :

க. நட்சத்திரங்களையே உருவாக்கக் கூடிய தொழில்நுட்பம் கொண்ட ஒரு குடும்பத்தில் / இனத்தில் / கோளில் சமையல் கட்டில் இருக்கும் தன் அம்மாவிற்குத் தெரியாமல் அப்பாவின் ‘நட்சத்திரம் உருவாக்கும் பெட்டி’யை நோண்டுகிறானோ அந்தச் சிறுவன்? என்று மண்டையை உருட்டலாம்!

க-அ. அது என்ன, நட்சத்திரங்களையே உருவாக்கக் கூடிய தொழில்நுட்பம் கொண்ட கோளில் கூட அம்மாதான் சமையல் கட்டில் சமைக்க வேண்டுமா? அந்த ‘நட்சத்திரம் உருவாக்கும் பெட்டி’ அப்பாவினுடையதாகத்தான் இருக்க வேண்டுமா? என்று ஆணாதிக்கம், பெக்டெல் சோதனைகளையும் ஒரு கை பார்க்கலாம்! (இக்கதையை எழுதிய காலத்தில் எனக்கு, ஏன் எங்கள் தெருவிலேயே யாருக்கும், ஆணாதிக்கம் என்ற சொல் தெரிந்திருக்காது!!)


உ. கடவுள் தானே சிறுவனாய் இருந்து நட்சத்திரத்தை உருவாக்குகிறார், தானே அம்மாவாய் இருந்து தன்னைத் தானே சாப்பிட அழைத்துக்கொள்கிறார், கடவுளாகிய தானேதான் சிறுவனாக இருக்கிறோம் என்பதை மறந்து (அதாவது அந்தக் கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய்) ‘கடவுள்ளுக்குனா அம்மாவே இல்லை’ என்று அலுத்துக்கொள்கிறார் - அந்த அலுப்பில் அவரது அநாதி முழுமையான பரத்துவத்தின் தனிமையின் ஏக்கம் வெளிப்படுகிறது - என்று விட்டத்தைப் பார்த்துக்கொண்டே காலாட்டிக்கொண்டு சிந்திக்கலாம்!

ங. ஏதோ ஒரு பி.எஸ்.சி. பிஸிக்ஸ் படிக்குற விடலைப் பையன் என்னவோ இங்கிலீஷு புக்கப் படிச்சுட்டு தானும் பெரிய எழுத்தாளர்னு நெனச்சுக்கிட்டு அவனுக்கும் புரியாம படிக்குறவங்களுக்கும் புரியாம - புரிஞ்சாலும் புரியாத மாதிரி - என்னத்தையோ கிறுக்கி வெச்சிருக்கான் -அதுலயும் சோம்பேறிப் பைய, ரெண்டாவது பக்கம் எழுத ஈடுபாடு இல்லாம அரைகுறையா முடிசுட்டு அதுக்குச் சின்னஞ்சிறு கதைனு வேறு ஒரு பேர வெச்சுட்டுப் போய் அம்மாகிட்ட ‘யம்மா, பசிக்குதுமா, டிஃபன் ரெடியா’னு கேட்டிருப்பான் - என்று யதார்த்தமாகவும் எண்ணலாம்...

த பால் இஸ் இன் யுவர் கோர்ட்! :):):cool::cool:(y)(y)(y)
---

”அடப்போய்யா... இதுக்கு அந்தக் கதையே பரவால்லனு!” நினைக்குறவங்க டைம் டிராவல் பண்ணி பத்து நிமிஷம் பின்னால போயிடுங்க! உங்களுக்காக நான் தொடக்கத்துலேயே ஒரு எச்சரிக்கை வெச்சுடுறேன்!
---

நன்றி :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,756
Reaction score
35,382
Location
Vellore
??????????? நான் பின்னாடியே போயிறேன் ண்ணா, விளக்கம் அல்லுது ண்ணா ?? அதுவும் வெறுமையான பேரண்டத்திற்கு மதிய வேலை குக்கிராமத்தில் பயணம் செய்யும் பேருந்து ஒப்பீடு செம்ம??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
லிட்டில் ப்ரோ பின்னுற மா..

விம் பாரை வைத்து விளக்கின மாதிரி பளிச்சுனு புரிந்துவிட்டது...

முருகர் மயில் வாகனத்தில் ஏறி இந்த உலகை சுத்தியது்போல அந்த குட்டி பையன் நட்சத்திரங்களை உருவாக்குறான்..
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top