• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

போகர் சித்தர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
படித்ததில் பிடித்தது 😍😍
பொதுநலபுண்ணியச்சித்தர்போகர்....

போகர் என்ற சித்தரின் சரித்திரம்
நம்மில் பலருக்குத் தெரிந்திராது.
என்றாலும் அவரது புகழ்பெற்ற
ஒருசெயல் பற்றித் தமிழக மக்கள் நன்கறிவார்கள்.........

நவபாஷாணத்தில் முருகப் பெருமானின் விக்கிரகத்தைச் செய்து, அதைப் பழனியில் பிரதிஷ்டை செய்தவர் போகர்தான். இன்றும் நவபாஷாணச் சிலையின் மேனியில் அபிஷேகம் செய்யப்படும் பஞ்சாமிர்தம் பலரது நோயைத் தீர்த்துவருகிறது. பஞ்சாமிர்தத்தின் இறுதிச் சொல்லான அமிர்தமாகவே அது பலரின்உயிரைவாழவைக்கிறது.
மருத்துவ குணமுள்ள கோவில் பிரசாதங்களில் பழனிப் பஞ்சாமிர்தம் தலையாயது. போகர், ஏராளமான தமிழ்ச் செய்யுள் நூல்களை எழுதியவர். போகர் வைத்திய சூத்திரம், போகர் அஷ்டாங்க சூத்திரம், போகர் நிகண்டு, போகர் உபதேசம், போகர் வைத்தியம், போகர் ஜனன சாகரம், போகர் ஞானசாராம்சம் போன்றவை அவற்றில் சில.போகர், திருமந்திரம் எழுதிய திருமூலர் காலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
அவரது வாழ்க்கை வரலாறு, பலவிதமான அதிசயச் செய்திகளை உள்ளடக்கியது. அற்புதங்களின் மொத்த உருவமாகத் திகழ்ந்த போகர், மிகுந்த அறிவாற்றலும் தவ ஆற்றலும் உடையவராய் இருந்தபோதும் அளவற்ற பணிவோடு வாழ்ந்தார் என்பதையும் அவரது சரிதம் தெரிவிக்கிறது.

63 நாயன்மார்கள் இருந்ததாக பெரிய புராணம் குறிப்பிடுகிறதே, அதுபோல போக சித்தருக்கு மொத்தம் 63 சீடர்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள். போகரது அளவற்ற சித்து ஆற்றல்களின் மூலமாகக் கவரப்பட்டு, அவற்றைக் கற்றுக் கொள்வதற்காகவே இந்தச் சீடர்கள் அவரிடம் கல்வி கற்றார்கள். போகரது உயர்ந்த ஆன்மிக நெறியை அவர்கள் வழிவழியாகப் பரப்பிவந்தார்கள்.
போகருக்கு இறந்தவர்களைப் பிழைக்க வைக்கவேண்டுமென்ற ஆசை இருந்தது. இறந்துவிட்ட பல உன்னதமான மனிதர்களை மீண்டும் உயிர்ப்பித்தால், அதனால் உலகம் நன்மை அடையுமல்லவா என்று அவர் கருதினார். அதற்கு என்ன வழியென்று பழைய புராணங்களில் எல்லாம் தேடித்தேடி ஆராய்ந்தார்.
அதன்பலனாக அவர் ஓர்
உண்மையைக் கண்டுபிடித்தார்.
சஞ்சீவினி மூலிகை என்றொரு மூலிகை பற்றி இராமாயணத்தில் குறிப்பு வருகிறதல்லவா? அனுமன் சஞ்சீவி பர்வதத்தில் விளைந்திருந்த அந்த மூலிகைக்காக அந்த மலையையே எடுத்துக்கொண்டு வந்துதானே லட்சுமணன் உள்ளிட்டோரின் உயிரைக் காப்பாற்றினான்?அந்த மூலிகை போலவே இறந்தவர்களைப் பிழைக்கவைக்கும் சஞ்சீவினி மந்திரம் என்ற ஒரு மந்திரம் உண்டு என்பதை போகர் அறிந்தார்.

ஆனால்...

அந்த மந்திரம் எதுவென்று அவரால்
அறிய இயலவில்லை.
அந்த மந்திரத்தை உபதேசமாகப் பெறவேண்டி அவர் மேருமலை நோக்கி நடந்தார். மேருமலையில் தான் நவநாத சித்தர்கள் என்ற ஒன்பது சித்தர்களின் சமாதி உள்ளது என்பதை அவர் அறிவார்.
சித்தர்கள் இறப்பதில்லை; என்றும் வாழ்கிறார்கள். சமாதிக்குள் அந்த ஒன்பது சித்தர்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை போகர் அறிவார்.
சஞ்சீவினி மந்திரம் அவர்களில் ஒருவருக்குகட்டாயம்தெரிந்திருக்கும். எனவே தனக்கு அவர்கள் காட்சி தரவேண்டுமென்று அவர் நெடுநேரம் மேருமலைமுன் அமர்ந்து தியானம் செய்யலானார். அந்தத் தியான ஆற்றல் சித்தர்களை உயிரோடும் உணர்வோடும் அவர் முன்னிலையில் தோன்றச்செய்தது. தியானத்தின் வலிமைக்கும் தவத்தின் வலிமைக்கும் பதில்சொல்ல சித்தர்கள் கடமைப்பட்டவர்கள்தானே?
கனிவுபொங்க போகரைப் பார்த்த அவர்கள் தங்களைப்போல் உருவாகிவரும் இன்னொரு மனித ஜீவன் என்ற வகையில் அவரைப் பெரிதும் மதித்தார்கள். அவருக்குத் தாங்கள் என்ன வகையில் உதவவேண்டும் என அன்போடு வினவினார்கள்.இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தைத் தனக்கு உபதேசம் செய்யவேண்டும் என போகர் பிரார்த்தித்தார். அப்படிச் செய்வதன் மூலம், ஏற்கெனவே காலமான பலரை மீண்டும் உயிர்ப்பித்து மனித குலத்திற்கு நன்மை செய்யலாம் என்ற தன் திட்டத்தைத் தெரிவித்தார்.
இதைக்கேட்டு ஒன்பது சித்தர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் மென்மையாகச் சிரித்தார்கள். மிகுந்த கனிவோடு
போகரிடம் பேசலானார்கள்:

""மகனே!

இறந்தவனை உயிர்ப்பிப்பதால் என்ன பயன்? ஏற்கெனவே எத்தகைய பாவ வாழ்க்கை வாழ்ந்தானோ, அதே பாவ வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்வான் அவன். அவ்வளவுதானே?
பூமிக்கு பாரம் என இயற்கை அவன் வாழ்வை முடித்துவைத்தது. அந்த பாரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து நாம் இயற்கையைத் துன்புறுத்து வானேன்? அதைவிட இப்போது நல்வாழ்க்கை வாழ்பவர்களின் ஆயுளை நீட்டிப்பதுதான் நல்லது. அப்படியானால் எப்படியும் கொஞ்சம் நல்லவர்கள் நீண்ட ஆயுளோடு இந்த உலகில் தொடர்ந்து வசிப்பார்கள். அவர்கள் தங்கள் பழுத்த அனுபவத்தின் காரணமாக மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்குவார்கள். உலகம் மேன்மையடையும். ஆகையால் சஞ்சீவினி மந்திரம் உனக்கு வேண்டாம். அந்தத் தேவையற்ற ஆசையை விட்டுவிடு. காயகல்ப முறையைக் கற்பிக்கிறோம்! அதன்மூலம் நீண்ட காலம் நீயும் உயிர்வாழலாம். இதைக் கற்பித்து மற்றவர்களையும் நீண்ட காலம் உயிர்வாழச் செய்யலாம்!''
அவர்களின் கட்டளைக்குப்
பணிந்தார் போகர். மன ஒருமைப்பாட்டோடு அந்த நவசித்தர்கள் கற்பித்த காயகல்ப முறையை பூரணமாகக் கற்றுக் கொண்டார். பின் அவர்களை வணங்கி விடைபெற்று கால்போன போக்கில் நடக்கலானார். சித்தம் போக்கு சிவன் போக்கு என்கிறார்களே? சித்தர் போக்கும் அப்படித்தானே? போகிற வழியில் பிரம்மாண்டமான ஒருபுற்றைக்கண்டு வியந்தார் போகர். அத்தகைய மாபெரும் புற்றை அவர் அதுவரை பார்த்ததில்லை. அதைச் சுற்றிவந்து உற்று உற்றுப் பார்த்தார். அந்தப் புற்றின் மேற்புறத்திலிலிருந்து பொன்னிற ஒளி மெலிதாய்க் கசிந்துகொண்டிருந்தது. அது சாதாரணப் புற்றல்ல என்பதையும், யாரோ ஒரு சித்தர் அதன் உள்ளே வாழ்ந்து வருகிறார் என்பதையும், அதனால்தான் அதன் உள்ளிருந்து பொன்னிற ஒளி புறப்படுகிறது என்பதையும் போகர் ஊகித்தறிந்தார்.
அந்தச் சித்தரிடம் ஏதேனும் ஓர் உபதேசம் பெற்றுவிடவேண்டும் என நினைத்த போகர், புற்றின் அருகிலேயே கண்மூடி அமர்ந்து தொடர்ந்து தியானம் செய்யலானார். அவர் தியானம் செய்யச் செய்ய, அந்தத் தியான அலைகள் புற்றின் உள்ளிருந்த சித்தரை விழிப்புறச் செய்தன. தன் புற்றின் முன் அமர்ந்து தன்னைக் குறித்துத் தியானம் செய்பவர் யார் என்றறிய அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தார்.
வெளியே வந்து தரிசனம் தந்த
சித்தரை வணங்கினார் போகர்.

""உமக்கு என்ன வேண்டும்?'' என்று வினவினார் வந்த சித்தர். ""தங்கள் அருள்வேண்டும்'' என வேண்டினார் போகர். அவரது பண்பான பதிலில் மனம்மகிழ்ந்த அந்தப் புற்றுச் சித்தர், அருகே அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு விந்தையான மரத்தைச் சுட்டிக்காட்டினார். "என்ன மரம் இது!' போகர் வியப்போடு அந்த மரத்தைப் பார்த்தார். அதுபோன்றதொரு மரத்தை அவர் எங்கும் கண்டதில்லை. "இந்த மரம் ஏற்கெனவே இங்கேயே இருந்ததா? இல்லை இவரால் இப்போதுதான் தோற்று விக்கப்பட்டதா?'""பல்லாண்டுகளுக்கு ஒருமுறை இந்த மரத்தில் ஒரு கனி பழுக்கும். இப்போதும் அப்படி ஒரு கனி பழுத்திருக்கிறது அதை உடனே போய்ச் சாப்பிடு. பிறகு இங்கு வா.''
புற்றுச் சித்தர் அறிவுறுத்தியபடி அந்த மரத்திலிலிருந்த கனியைப் பறித்து உண்டார் போகர். அவர் மனம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. அத்தகைய சுவையுடைய கனி ஏதொன்றையும் அவர் இதுவரை சாப்பிட்டதில்லை. மிக அபூர்வமான இந்தக் கனியைப் புற்றுச் சித்தர் ஏன் தம்மை உண்ணச்சொன்னார்? அவரிடமே கேட்டுவிடுவோம். போகர் சித்தரது புற்றை நோக்கி நடந்தார். புற்றுச் சித்தர் இப்போதும் புற்றுக்கு வெளியே தான் நின்று கொண்டிருந்தார். அவரது அகன்ற பெரிய விழிகளிலிலிருந்துதான் அந்தப் பொன்னிற தெய்வீக ஒளி புறப்பட்டுக்கொண்டிருந்தது.

""அந்தக் கனியை ஏன் என்னை சாப்பிடச் சொன்னீர்கள் சுவாமி?'' என பணிவோடு வினவினார் போகர்.
""அந்தக் கனி பழுப்பதே அபூர்வம். அது பழுத்த நேரமும் நீ வந்த நேரமும் ஒன்றாக அமைந்திருப்பதே இறைவன் அருள் உனக்கு உண்டு என்பதைப் புலப்படுத்துகிறது.
மகனே! அந்தக் கனியை ஒருமுறை உண்டவர்களுக்கு வாழ்நாள் முழுதும் உணவே தேவைப்படாது. அவர்களின் முடி ஒருபோதும் நரைக்காது. பார்வை என்றும் மங்காது. என்றென்றும் இளமைதான் அந்தக் கனி தரும் பலன்!'' புற்றுச் சித்தர் சொன்ன அருள்மொழிகளால் பரவசப்பட்ட போகர் அவரின் பாதங்களில் தன் தலைவைத்து அவரை மீண்டும் வணங்கினார். காற்றில் கையை நீட்டிய புற்றுச் சித்தர் ஓர் அழகிய புலித்தோலை வெட்ட வெளியிலிலிருந்து கையிலெடுத்தார். அதைப் பரிவோடு போகரிடம் அளித்த அவர் மேலும் சொல்லலானார்: ""குழந்தாய்!
இந்தப் புலிலித்தோலில் அமர்ந்து தியானம் செய்வாய். உனக்கு இன்னும் பலவகையான ஆன்மிக விஷயங்களை நான் உபதேசம் செய்யவேண்டும். ஆனால் அதில் என் தவத்திற்கான நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை. என் சார்பில் என் உபதேசங்களை இனி இந்தப் பதுமை நிகழ்த்தும்!'' என்ற புற்றுச் சித்தர் கையைத் தட்டினார். அடுத்த கணம் காற்று வெளியிலிலிருந்து அழகிய ஒரு பதுமை தோன்றியது. புற்றுச் சித்தர் புற்றின் உள்ளே மறைந்தார். போகர் வியப்போடு அந்தப் பதுமையைப் பார்த்துக் கொண்டிருந்தார். பதுமை கனிவோடு அவருக்குப் பல உபதேசங்களைச் செய்யத் தொடங்கியது.

அவையனைத்தும் யாரும் அறியாத
பிரபஞ்ச ரகசியங்கள்.

உயிர் என்றால் என்ன?
அது எப்படி உடலை வந்தடைகிறது?
இந்த உடல் பஞ்ச பூதங்களாக அமைந்த நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவற்றாலேயே எப்படி உருவாக்கப்படுகிறது?

உடலைவிட்டு உயிர் பிரிந்தபின் அந்த உயிர் மீண்டும் எங்கு செல்கிறது? -என்றிப்படி இதுவரை விடைதெரியாத எண்ணற்ற கேள்விகளுக்கு அந்தப் பதுமை விடைசொல்லிலிற்று.
தன் உபதேசங்கள் முடிந்ததும் அந்தப் பதுமை அவரின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து காற்றுவெளியிலேயே கலந்து மறைந்தது....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top