General Audience மகா கவியின் பிறந்த தினம் இன்று

#11
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
(ஆசை)

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
(ஆசை)

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி
(ஆசை)

கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி
(ஆசை)
 
#12
வானில் பறக்கின்ற புல்லெல்லாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.

இது பாரதி நான் என்ற தலைப்பில் எழுதிய பாட்டு.. படிக்கும்போதெல்லாம் எனக்கு அவர் பரமசிவனாகவே தெரிகிறார்..
 
#14
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

munnellam neraya songs pidichathu... chennai ku vantha apram intha kavithai yoda artham nalla purinju.., ippa ithu than pidikuthu...
 
Last edited:

Riha

Author
Author
#15
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ
 

Riha

Author
Author
#16
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
காணும் இடம் தோரும் நின்றன் கண்ணின் ஒளி விசுதடி
மானுடைய பேரரசி வாழ்வு நிலையே கண்ணம்மா

பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பி அடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா


வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானம் அடி நீ எனக்கு பாண்டம் அடி நான் உனக்கு
ஞான ஒழி வீசுதடி நங்கை நின்றன் ஜோதி முகம்
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா

வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணு சுத்தி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் என்னமில்லை நின் சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா

வீசு கமழ் நீ எனக்கு, விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு, பேணுமொழி நான் உனக்கு
நேசமுள்ள வான்சுடரே நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா

காதல் அடி நீ எனக்கு காந்தம் அடி நான் உனக்கு
வேதம் அடி நீ எனக்கு வித்தை அடி நான் உனக்கு
போத முற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே நல் உயிரே கண்ணம்மா

நல்லவுயிர் நீ எனக்கு, நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு, சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லைநிகர் புன்னகையாய் மோதுமின்பமே கண்ணம்மா

தாரையடி நீ எனக்கு,தண்மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு,வெற்றியடி நான் உனக்கு
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய் உள்ளமுதமே கண்ணம்மா
 
#17
ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா!

பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.

காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். (ஜய பேரிகை)

இந்த பாட்டு நான் சிறு பிள்ளை யாக இருக்கும் போது கேசட் வடிவில் எங்கள் வீட்டில் உண்டு..
அடிக்கடி கேட்டு கேட்டு..இப்போது கூட நான் பாடும் பாடல்...
நான் பாடுவதைக் கேட்டு எனது பையனும் பாடுகிறான் முதல் வரிகளை...
 
Last edited:
#18
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் — என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் — இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து — மதி
தன்னை மிகத்தெளிவு செய்து — என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
 
#19
பாரதியார் வரலாறுல எனக்கொரு சந்தேகம்

Wikipediaல இப்படி போட்ருக்காங்க:

"1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார்."

ஆனா நிறைய இடத்துல அவர் காசிக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் எட்டயபுர ராஜாவே கூப்பிட்டு வேலை கொடுத்ததாக போட்டிருக்கு ..

எது நிஜம்னு சொல்லுங்க...
 
#20
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்


அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த
மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார்-மிக
துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு)
மந்திர வாதி யென்பார்-சொல்ல
மாத்திரத்தி லே மனக் கிலிபிடிப்பார்
யந்திர சூனியங்கள் -இன்னும்
எத்தனை யாயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டோ- ஜனம்
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை -இவர்
அஞ்சுதரு பேயென்றேண்ணி நெஞ்சமயர்வார்(நெஞ்சு)

3.சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்-
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டோருவன் -வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்
அப்பாலெ வனோசெல்வான்-அவன்
ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிர்பபார்
எப்போதும் கைத்தட்டுவார்-இவர்
யாறிடத்தும் பூனைகள்போலேங்கிநடப்பார் (நெஞ்சு


சாத்திரங்க லொன்றுங் காணார் -பொயச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தாலும் -ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குழைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் -தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்
ஆத்திரங்க்கொன் டேயிவன் சைவன் -இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)
 

Latest updates

Latest Episodes

Top