• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மதியே… உன் மடி சாயவா...??? அத்தியாயம்- 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saranya shanmuganathan

மண்டலாதிபதி
Author
Joined
May 30, 2023
Messages
204
Reaction score
252
Location
Coimbatore
24th episode posted friends...🥰
மதியே… உன் மடி சாயவா...???
அத்தியாயம்- 24

"அ...ம்மா...! p...lease! என்...ன த...தனியா விட்டுட்டு போகாதீங்க நானும் உங்க கூடவே வ...ரேன்மா...!"

தன் காலைக் கட்டிக்கொண்டு அழும் மகனை விழிகளை மறைத்த கண்ணீரோடு பார்த்தவர்...! அவன் கண்ணீர் வழியும் கன்னத்தை வருடி, முத்தமிட்டு தன் காலை இறுக்கி பிடித்திருந்த அவன் கரத்தை எடுத்து விட்டார்.

"அ..ம்மா...! போ... போ... போகாதீங்கம்மா!" என்ற மகனின் கதறல் காதில் விழுந்தாலும், அது நெஞ்சை அறுத்தாலும் திரும்பிப் பார்க்காமல் நடையை எட்டிப் போட்டார் தேன்மொழி.

ஆம்.... தேன்மொழி தான்!!!

சொந்தத்திற்குள் பார்த்து...! பெரியவர்களால் பேசி முடிக்கப்பட்டது தான் இளமாறன், தேன்மொழியின் திருமணம்.

சொந்த ஊரில் சொந்தங்களுக்கிடையில் தங்கள் இல்லற வாழ்வை இனிமையாய்த் தொடங்கினர் இருவரும். அவர்கள் அன்பின் அடையாளமாய்த் தமிழ்எழிலன் வரமாய்க் கிடைக்க, ஆனந்தம் தான் அவர்கள் வாழ்வை ஆட்சி செய்தது.

மாறன் பண்ணிரெண்டாவது வரை படித்திருக்க...! தேனுவின் படிப்பு பத்தாவதுதோடு நிறுத்தப்பட்டிருந்தது.

சைக்கிளில் உடைகளை அடுக்கி ஊருக்குள்ளும், தங்கள் கிராமத்தைச் சுற்றி இருக்கும் ஊர்களுக்கும் எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்த தன் தந்தையைப் போலவே அவரின் ஒரே வாரிசான மாறனும் அதே வேலையை கையில் எடுத்திருந்தார்.

பள்ளிப் படிக்கும்போதே லீவு நாட்களில் தந்தையோடு வியாபாரத்திற்குச் செல்பவருக்கு, தந்தையின் தொழில் நேர்த்தி, சூட்சமம் எல்லாம் தானாய் மூளைக்குள் பதிய, சைக்கிளில் தொழிலை தொடங்கியவர் தேனுவைக் கைப்பிடிக்கும் போது TVS50-க்கு மாறியிருந்தார்.
கையை நிறைக்கும் வருமானம் இல்லாவிட்டாலும்...! வயிறும், வீடும் வாடாத அளவுக்குப் போதுமானதாகவே இருந்தது.
கணவன் மனைவி இருவருமே...!
இருப்பதில் இன்பம் காண்பவர்களாய் இருந்துவிட்டால்...!
இல்லறத்தின் இன்பத்திற்கு குறைவேது...???​

வருடங்கள் வேகமாய் ஓட,

சிறுக... சிறுக சேமித்த கொஞ்சப் பணத்தையும், தன் பூர்வீக சொத்தில் சிலதை அடமானம் வைத்தும், பக்கத்து டவுனில் சின்னதாய் ஒரு ஜவுளிக்கடையை தொடங்கினார் மாறன்.
ஆரம்பத்தில் பெரிதாய் வருமானம் இல்லாவிட்டாலும், போக போக தொழில் சூடுபிடிக்கத் தொடங்கியது.

கொஞ்சம் கொஞ்சமாய்க் கடனை அடைத்து, சொத்தையும் திருப்பிவிட, சொந்தக்கடையும், கடனில்லா வாழ்வும், அன்பானக் குடும்பமும் என நிறைவாய் வாழ்ந்தார் இளமாறன். சிறுவயதிலேயே மனைவியை இழந்து, தனி ஆளாய்த் தன்னை வளர்த்த தந்தையின் மீது அளவு கடந்த அன்பு மாறனுக்கு.

தந்தையைக் கட்டாய ஓய்விற்கு வற்புறுத்த, உழைத்துக் களைத்த உடம்பு...! ஓரிடத்தில் ஒடுங்க விருப்பமின்றி அவரோடு கடைக்கு வந்துவிடுவார் மாறனின் தந்தை. தனக்கே என்றாவது தேவையென்றால் ஓய்வாய் வீட்டில் இருந்துக் கொள்வார்.
அவர் மன நிலையை புரிந்துக் கொண்ட மாறனும், அவரை வற்புறுத்தாமல் அவர் போக்கிலேயே விட்டுவிட்டார்.

தேனுவின் முழு நேரமும் தன் மகனோடேக் கழிய, கிடைக்கும் சில நேரங்களில் காட்டு வேலைக்குச் செல்வார். அதற்கே மாறனிடமிருந்து திட்டு கிடைக்கும் அவருக்கு...!

"பிள்ளைய விட்டுட்டு எதுக்குப் போன! காட்டு வேலைக்குப் போய் நீ கஷ்டப்படுற அளவுக்குத்தான் நான் உன்னை வச்சிருக்கேனா???" என்று,

அவர்களின் சொத்தே தமிழ் தான்.

அவன் மழலையில் பேசத் தொடங்கிய போதே வார்த்தைகள் திக்க! வளர வளர சரியாகிவிடும் என இருவரும் விட்டுவிட, அவன் வளர்ந்தும் அப்படித்தான் பேசினான். அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கும், அவன் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்குமென எல்லோருக்கும் கேலிப் பொருளாய் தமிழ் தெரிய,
அவன் வளர்ந்தும் அவனை அடைகாக்கும் கோழியாய்(தாயாய்) மாறிப்போனார் தேன்மொழி.

'எதிர்த்து நில்...! துணிந்துப் போராடு!' என மகனை ஊக்கப்படுத்துவதை விடுத்து, அவனைத் தனக்குப் பின்னால் நிறுத்தி அவர் அவனுக்காய் எதிர்த்து நின்றார்.

விளைவு...!!!

நெருங்கா நட்பும், யாரையும் எதிர்கொள்ள அஞ்சும் தாழ்வு மனப்பான்மையும் என ஆறு வயது சிறுவனாய் வளர்ந்து நின்றான் தமிழ்எழிலன்.

இந்தக் காலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளை விரல் விட்டு என்னும் நிலை இருக்க...! அவன் காலத்தில்... அந்த சின்ன கிராமத்தில் மெட்ரிகுலேஷனில் படிக்கும் தமிழ் தனியாகத்தான் தெரிந்தான்! சிலருக்குப் பொறாமையாகவும் தெரிந்தான்.

ஒரே மகனெனப் பார்த்துப் பார்த்து கவனித்ததில் வனப்போடு இருந்தவனை, அவன் குறையைக் காட்டி,

(எனக்கு குறை என்று எழுத விரும்பவில்லை என்றாலும், வேறு வார்த்தைக் கிடைக்காததால் மனமின்றி எழுதியுள்ளேன்!)

அவனை சீண்டி அழவைத்து அழகு பார்த்தனர் அனைவரும். அவன் வகுப்பு ஆசிரியரின் அறிவுரைப்படி மருத்துவரை அணுகி அவரின் பரிந்துரைப்படி, speech தெரபிக்கு ஏற்பாடு செய்தனர் அவன் பெற்றோர்.

திக்காமல் பேச வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அந்த பிஞ்சு நெஞ்சை நிறைத்திருக்க, சொல்லிக் கொடுக்கும் பயிற்சிகளை சரியாய் செய்து வந்தான் குட்டித் தமிழ்.
அவன் விடாமுயற்சியின், பயிற்சியின் விளைவாய் இரண்டு வருடத்தில் ஓரளவு திக்காமல் பேசத் தொடங்கியிருந்தான்.

இவ்வாறாக இன்பமாய் அவர்களின் நாட்கள் பறக்க, தமிழின் எட்டாவது வயதில் இடியென அவர்களின் இதயத்தில் இறங்கி, புயலென அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது அந்த சம்பவம்.

யாரையும் நெருங்காதவன், தன்னை யாரும் நெருங்க விடாதவன்...! இன்று அவளிடம் தன் மனம் திறந்து.... அதில் புதைத்து வைத்திருந்த, தன் கடந்தக் கால வாழ்வை சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம் வீட்டில்.....!!!!

"போதும்... நிறுத்துறீங்களா...!!! இதுக்கு மேல யாராவது ஏதாவது பேசுனீங்கன்னா...! அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் பார்த்துக்கோங்க...!" என்றவரின் கர்ஜனையில் வீடே அமைதியாகிப் போனது.

"அவன் இன்னைக்கு இப்படி இருக்க ஒரு வகையில நாங்களும் காரணம்...! நீங்க சொன்ன மாதிரி ஒரு நிலைமை வந்தா... அத எங்களுக்கு கிடைச்ச தண்டனையா எடுத்துக்குறோம்...!" என நிறுத்தியவர்,

"பயப்படாதீங்க சத்தியமா உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னுறமாட்டோம்...!"என நக்கலாய்ச் சொன்னவர்,

"இன்னொரு வார்த்தை என் மகனைப் பத்தியோ இல்ல மருமகளை பத்தியோப் பேசினீங்க... அப்புறம் யாருன்னு வச்சில்லா பாக்க மாட்டேன் ஜாக்கிரதை...!!!" என தன் முன் நின்றிருந்த இருவரையும் பார்த்து விரல் நீட்டி மிரட்டிய இளமாறன் வேகமாய்த் தன் அறைக்குள் சென்று விட்டார். குரலுயர்த்திக் கூட பேசாதவரின் இந்த அவதாரம் புதிதாகவும், வியப்பாயும் இருந்தது தான் அவர் முன் இருந்த இருவருக்கும்.

அன்று ஞாயிற்றுக்கிழமை...! மதியத்தோடு வேலையை முடித்து வீட்டிற்கு வந்த தமிழ், வாசல் வரைக் கேட்டப் பேச்சு குரலில் புருவம் சுருங்க யோசனையோடு வீட்டினுள் நுழைந்தவனை, ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்த கனிமொழியும், தேன்மொழியின் அண்ணன் மனைவி ரஞ்சிதமுமே வரவேற்றனர்.

அவர்களைக் கவனித்தாலும்... கண்டுகொள்ளாமல் அறையினுள் நுழையப் போனவனை,

"என்ன தமிழ்… நல்லா இருக்கியா...???" என்ற ரஞ்சிதத்தின் குரல் இடையிட்டு நிறுத்த,
கண்களை ஒரு முறை மூடித் திறந்தவன்,

"ம்..." என்ற ஒற்றை வார்த்தைப் பதிலை அவர் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு மீண்டும் நகரப் போனவனிடம்,

"ஞாயிற்றுக்கிழமை கூட வேலை இருக்குமோ...???" என்றவரின் அடுத்தக் கேள்விக்கும்,

" ம் ..." என சொன்னவனிடம்,

“பாவம் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் கூட ரெஸ்ட் எடுக்க முடியாமல் ஓட வேண்டி இருக்கு...! ஹும்... என்னப் பண்றது” என மேலும் ஏதோப் பேசத் தொடங்க, அவசரமாய் சமையலறையில் இருந்து வெளியே வந்த மதி,

"அம்மா இந்தாங்க ஜூஸ் எடுத்துக்கோங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு ரெடி ஆயிடும்" என அவர் பேச்சில் இடையிட்டவள் ட்ரேயை அவர்களிடம் நீட்டினாள்.

"அட எங்களுக்கென்னமா அவசரம்...! உன் புருஷன்தான் வெயில்ல அலஞ்சுத் திரிஞ்சு கலைச்சுப் போய் வந்திருக்கான்...! அவனுக்குக் கொடு...!!!" என juice glass - ஐ எடுத்தபடி சொன்ன ரஞ்சிதத்திடம்,

"இல்லைமா அவரு குளிச்சிட்டு வந்து தான் எதுனாலும் சாப்பிடுவாரு...!!!" என அவருக்குப் பதில் சொன்னவள்,

"நீங்க போய் fresh ஆயிட்டு வாங்க சாப்பிடலாம்" என்க,
தன்னை நிமிர்ந்து பார்த்தவனைப் பார்த்து, ‘ப்ளீஸ் போங்க’ என்பதைப் போல் விழிகளை சுருக்கி கண்களால் சைகை காட்டியவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,

"உஃப்ப்ப்...." என இதழ் குவித்து ஊதியப்படி தங்கள் அறையினுள் நுழைந்துக் கொண்டான்.

கனி வாய்த்திறக்கவே இல்லை...! ஏற்கனவே மதியிடம் சிறப்பாய் வாங்கியிருக்கிறார் அல்லவா...??? தமிழ் வாய்திறந்து பேசாவிட்டாலும், அவன் உடல் மொழியும், ஒதுக்கமுமே போதாதா அவனை விட்டு எட்டி நிற்க வைக்க...!!!

"என் மாப்பிள்ளைக்கு சனி, ஞாயிறு இரண்டு நாளுமே leave தான்...!!!" ஞாயித்துக்கிழமையானாலே என் பொண்ணையும், பேரனையும் கூட்டிட்டு வெளிய எங்கயாவது போயிருவாரு...!!! அன்னைக்கு வீட்டில சமைக்கவே மாட்டாங்க தெரியுமா???" என ரஞ்சிதம் மீண்டும் பேச்சை வளர்க்க,

அவ்விடம் விட்டு நகரவும் முடியாமல், அவர் பேச்சில் இணையவும் பிடிக்காமல் தவித்துப் போய் நின்றதென்னவோ மதிதான். சமையலறையில் இருந்த தேனுவிற்கு சுறுசுறுவெனக் கோபம் வந்தாலும் வீடு தேடி வந்தவர்களை காயப்படுத்தி விடக்கூடாதே...! எனப் பல்லைக் கடித்துக் கொண்டு வேலையை கவனிக்க,

கவனிக்க கூடாது என எவ்வளவு முயன்றும், அவர் பேசுவது அறையினுள் இருந்தவனின் காதில் விழத்தான் செய்தது...! அது மூளையைத் தொடத்தான் செய்தது.

"எவ்வளவு மரியாதையாப் பேசுவாருத் தெரியுமா...??? சிரிக்க சிரிக்கப் பேசுவாரு...! நாங்கப் பண்ணுனப் புண்ணியம் தான் இப்படி ஒரு மாப்பிள்ளை எங்களுக்குக் கிடைச்சிருக்காரு...!!!" என ரஞ்சிதம் அளவில்லாமல் அளந்து கொண்டே போக,
அமைதியாய் நின்றிருந்த மதியை அதிசயமாய் பார்த்திருந்ததென்னவோ கனிமொழிதான்.

'அன்னைக்கு என்னை என்ன பேச்சு பேசுனா...! இன்னைக்கு இவங்க இவ்வளவு பேசுறாங்க... வாயைத் தொறக்காம எப்படி நிக்கிறாப் பாரு...! ஆளக் கண்டு நடிக்கிறாப் போல திமிரு பிடிச்சவ...!’ என மனதிற்குள் மதியை திட்டி தீர்த்தார்.

அன்று அவர் பேசியது அவள் புருஷனைப் பற்றியல்லவா...? இன்று இவர் பேசுவது என்னவோ அவர் மருமகனைப் பற்றித்தானே...!!!

‘ஹும்... தமிழைப் பற்றி இந்தம்மா பேசியிருந்தால் இந்நேரம் டாராக்கி தொடங்க விட்டுருக்க மாட்டா நம்ம மதி...!!!’

மறைமுகமாய் அவர் தமிழைத் தான் குறிவைத்து தாக்குகிறார் என புரிந்தாலும் இப்போது இவள் ஏதாவது சொன்னால், என் மருமகனைப் பற்றி தானேச் சொன்னேன்...! உன் புருஷனைப் பற்றி பேசினேனா...??? என்று கேட்டு விட்டால்...!!!
அதுமட்டுமில்லாமல் அவர் பேச்சுக்கு இப்போது இவள் பதில் கொடுத்தால்... அவளே தமிழின் தரத்தை தாழ்த்துவதாய் அல்லவா ஆகிவிடும்...!!!

"Kitchen-ல வேலை இருக்குங்ம்மா...! அத்தை தனியாப் பண்ணிட்டு இருக்காங்க!" என நழுவ பார்த்தவளிடம்,

"ஹும்... விருந்தாளிங்க திடீர்னு பத்துப் பேர் வீட்டுக்கு வந்தா கூட அசால்ட்டா சமைச்சு போட்டு அசத்திருவா என் பொண்ணு...!!! அவ மாமியாரையோ, இல்ல என்னையோக் கூட அடுப்படிக்குள்ள விடமாட்டா...! அவளே அத்தனையையும் பாத்துப்பா திறமைசாலி...!" என அவர் முடித்தது தான் தாமதம்...!!!

Kitchen-னில் இருந்து வேகமாய் வெளியே வந்த தேனு,

"அண்ணி...!!!" என தொடங்கும் முன்,

"வானு...!!!" என வீடே அதிரும்படி கர்ஜித்தவனின் கையில் இருந்த டவல் நடு வீட்டில் பறந்து வந்து விழ,

தேனுவின் குரல் அப்படியே அடங்கிப் போக...! மற்றவர்கள் ஆடிப் போயினர். மதி உட்பட,

அறை வாசலில் நின்றிருந்தவனின் அனல் தெறிக்கும் பார்வை ரஞ்சிதத்தை ஆக்ரோஷமாய்த் தாக்க...! அதன் வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவரை உறுத்து விழித்தவன்,

மதியின் புறம் பார்வையைத் திருப்ப,

எப்போதும் விளையாட்டாய், சீண்டலாய், நட்பாய், கோபமாய் என தன்னை பார்ப்பவளின் இந்த பயப் பார்வை அவனுள் ஏதோ செய்தது.

சட்டென முகபாவத்தை மாற்றியவன் அவள் அருகில் நெருங்கி வந்து,

"சீக்கிரம் கிளம்பி வா வெளியே நிக்கிறேன்...!!!" என மென்மையாச் சொன்னவனின் விழிகளிலும் அவளை இதமாய் வருட,

அவளுக்கு முதுகு காட்டி வேகமாய் வெளியே நடந்து செல்பவனையே வெறித்தபடி நின்றிருந்தவளுக்கு, அவனின் மென்மையான பேச்சும், பார்வையும் பயத்தை விரட்டியடித்திருந்தாலும், அவன் சொன்னது மூளையை எட்ட சில நிமிடங்கள் ஆனது அவளுக்கு.
புரிந்ததும் தேனுவைத் திரும்பிப் பார்த்தவளை, தமிழைப் போலவே பட்டெனக் கண் சிமிட்டி, அழகாய்ப் புன்னகைத்தவர் 'கிளம்பு...!' என்பதை போல் தலையசைக்க,
மகனிடம் மட்டுமல்ல...! மாமியாரின் இந்தச் செய்கையிலும் மயங்கி போய் தான் நின்றிருந்தாள் வான்மதி.

தலையை உலுக்கி தன்னை நிதானித்தவள், "வேலை கிடக்கே...!!!" எனச் சத்தமின்றி உதடுகளை அசைத்து, கிட்சனைக் கண்களால் காட்டிச் சொன்னவளை பார்த்து,

"ப்ச்... கிளம்பு!!!" என அவளைப் போலவே உதடசைத்து சொன்னார் தேன்மொழி.

முதன் முறையாய் தன்னை அவனோடு வெளியே செல்ல அழைத்திருக்கிறான்...! என்ற எண்ணம் கூட தோன்ற நேரமின்றி, அவசரமாய் உடைமாற்றி கிளம்பி வந்தவளுக்கு, தலையசைத்து விடை கொடுத்த தேனுவின் உள்ளம் நிம்மதி பெருமூச்சிட்டது.

கோபம் வந்தால், மனம் வலித்தால், தவித்தால் தன்னையேத் தனித்துக் கொள்பவன்...! இன்று அவளையும் அல்லவா தன்னோடு இணைத்துக் கொண்டான்...!!! அவன் வாய் திறந்து சொல்லாவிட்டாலும்... அவன் மனம்... அவன் செயலிலேயேத் தெரிந்ததே...!
இந்த மாற்றம் நிச்சயம் என் மகன் வாழ்வை மலர வைக்கும்...! அவனை மகிழவைக்கும்...! என்ற மன நிம்மதிதான் அவருக்கு.

மனதின் மகிழ்வு முகத்தை நிறைக்க...! காம்பவுண்டைக் கடந்து அவர்களைச் சுமந்தபடி செல்லும் பைக் கண்ணிலிருந்து மறைய, விழிகளைத் திரும்பியவரின் முன் ஆங்காரமாய் நின்றிருந்தனர் கனியும், ரஞ்சிதமும்.

அந்த நேரம் மாறன் வெளியேச் சென்றிருக்க...! அவர் வீட்டிற்க்கு வரும்போதே கனியும், ரஞ்சிதமும் தேனுவை வறுத்தெடுத்துக் கொண்டிருப்பதை கவனித்தவர், என்ன விஷயமென்றுக் கேட்க, தேனுவிற்கு முன்னால் முந்திக் கொண்டு, அவரிடமும் தமிழையும், மதியையும் பற்றி அவதூறாய் அளவின்றி ஏகத்திற்கும் அளந்து விட...! அதற்கு மேல் பொறுக்க முடியாமல் தான் பொங்கி விட்டார் இளமாறன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா???

வாழ்க்கை ஒரு அழகானப் புத்தகம். அதிசயமும், அழகும் நிறைந்த மாயப் புத்தகம்! அடுத்த நொடி என்ன நடக்குமென்று திருப்பி பார்த்து அறிந்துக் கொள்ள முடியாத ரகசியப் புத்தகம்! நாம் கடந்து வந்த வாழ்க்கைப் பக்கத்தை திருப்பி பார்த்தால்....! அதில் இன்பம், ஏக்கம், ஏமாற்றம், சிறுபிள்ளைத்தனம், துன்பம் என எத்தனை எத்தனையோ!!! அதில் பலதையும் நம் மனதிற்குப் பிடித்தவர்களிடம் பகிர்ந்து மகிழ்ந்திருப்போம்! சிலதை மறைத்து நம்மோடேப் புதைத்திருப்போம்! இப்போது தமிழ் திருப்பி பார்க்கும் அவன் கடந்தக் காலப் பக்கங்கள் அவனுக்குக் கொடுத்ததென்ன...??? அவனிடமிருந்து எடுத்ததென்ன...???
அடுத்த அத்தியாயத்தில் சந்தித்து அறிந்துக் கொள்வோமா???
நன்றி
- மடி சாய்வான் -​





 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,571
Reaction score
43,484
Age
39
Location
Tirunelveli
Nalla irukku sister update 👍

Last epi kum intha epi kum Continuity correct a irukkaa enna🧐🧐🧐🧐

(Ivanga 2 perum velila vanthatha 1st sollittu,

Apram flash back a continue panniruntha chinna Confusion vanthrukkaathu)
 




Saranya shanmuganathan

மண்டலாதிபதி
Author
Joined
May 30, 2023
Messages
204
Reaction score
252
Location
Coimbatore
Nalla irukku sister update 👍

Last epi kum intha epi kum Continuity correct a irukkaa enna🧐🧐🧐🧐

(Ivanga 2 perum velila vanthatha 1st sollittu,

Apram flash back a continue panniruntha chinna Confusion vanthrukkaathu)
உங்களை இப்படி யோசிக்க வைக்கத் தான் அப்படி எழுதினேன் என்று தான் நினைக்கிறேன் சகோ...! ஆனால் எழுதும் போது தோன்றவில்லை... உங்கள் commend பார்த்தபின்பு தான் தோன்றுகிறது. நன்றி சகோ உங்கள் comments என்னை இன்னும் சிறப்பாக எழுத தூண்டுகிறது. keep supporting:)(y)(y)(y)
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top