• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மதியே...! உன் மடிசாயவா...???அத்தியாயம் – 40

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saranya shanmuganathan

மண்டலாதிபதி
Author
Joined
May 30, 2023
Messages
174
Reaction score
208
Location
Coimbatore
hai friends...! 40th episode posed(y)(y)(y)🥰🥰🥰

மதியே...! உன் மடிசாயவா...???
அத்தியாயம் – 40
தமிழின் மனம் ஏமாற்றத்தினால் உண்டான கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.

‘பிசியா இருப்பேன்னுக் கால் பண்ணலயாம்! சரி...! கால் பண்ண வேண்டாம்! அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் பண்ணிருக்கலாம்ல! Free ஆகும்போது பாத்திருப்பேன்ல! ஹிம்...! இதெல்லாம் சும்மா! அவளுக்கு என்கிட்ட சொல்லணும்னு தோணல! இவன்கிட்டயெல்லாம் எதுக்கு சொல்லணும்னு நெனச்சிருப்பா! ஏன்னா அவதான் அடிக்கடி சொல்லுவாளே! அவ என்னோட just roommate மட்டும்தான்னு! அப்புற ஏன் சொல்லப்போறா!’ என அவளை மனத்திற்க்குள் கறுவிக்கொண்டிருத்தவனின் மண்டையில் சட்டென மணியடிக்க, அதுவரை கோபத்தில் அந்த அறையையே நடந்தளந்தவனின் கால்கள்! மெல்ல நடையைத் தளர்த்த, ஓரிடத்தில் அப்படியே நின்றவனின் மனம், நிதானமாய் யோசித்தது.

‘ஆமா! அவ சொல்ற மாதிரி, உண்மையிலேயே அவ என்னோட just roommate தானே! அவளுக்கு நான் வேற யாரும் இல்லயே! அவ என்கிட்ட எதுக்கு சொல்லிட்டுப் போகணும்! எனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வரணும்!’ எனத் தன்னிடமே கேள்விக் கேட்டுக் கொண்டவன், மெல்ல நடந்து சென்றுக் கட்டிலில் அமர்ந்தான்.

‘இல்ல...! இது தப்பு! நான் இப்படி யோசிக்கிறது தப்பு! அவக்கிட்ட உண்டாகுற என்னோட இந்த எதிர்பார்ப்புத் தப்பு! இந்த தேவையில்லாத எதிர்பார்ப்புத்தான் ஏமாற்றத்தக் குடுக்குது! அதுதான் கோபமா மாறுது! என்னோட இந்தப் போக்கு நல்லதுக்கில்ல! எனக்கும் சரி! அவளுக்கும் சரி!’ என நிதானமாய்த் தன்னை சுயபரிசீலனை செய்தவன்,

‘இனி அவள எந்த வகையிலும் நான் தொல்லப் பண்ணக்கூடாது. முக்கியமா என் கோபத்த அவக்கிட்ட காட்டக் கூடாது! நான் இப்படி யார்க்கிட்டயும்.... இல்ல! ஏன் இவக்கிட்ட மட்டும் என்னோட control-ல இழந்து, என் உணர்வுகள காண்பிச்சிடுறேன்!’ என நினைத்தவன், நீண்டப் பெருமூச்சிட்டுக் கொள்ள,

‘இதுவரை நடந்ததெல்லாம் போகட்டும்! இனி இப்படி நடக்காம பாத்துக்கணும்.’ என முடிவெடுத்தவன், ஃபோனை bedside table-லில் வைத்துவிட்டு, கட்டிலில் நன்கு சாய்ந்தமர்ந்தபடி, கண்களை மூடிக் கொண்டான்.

அவன் தன்நிலை உணர்ந்து, தன்னை நிதானித்து, அமைதியாய் அமர்ந்திருந்த ஐந்தாவது நிமிடம்! அவனது அமைதியைப் பொறுக்க முடியாமல், அவனை கத்தி அழைத்தது அவனது ஃபோன்.

மூடிய இமைகளைப் பிரித்தபடி, எட்டி ஃபோனை எடுத்தவன், அதில் அவள் எண்ணைக் காணவும்! அப்போதுதான் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவனின் மனம்! அவனையும் மீறி, அவனுள் உண்டான சந்தோஷத்துடன் படபடத்தது.

“டேய் தமிழ்! இப்போத்தானேடா ஒரு தீர்மானம் எடுத்த! அதுக்குள்ள இப்படித் துள்ளுறியேடா! Control…! Control…!” எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், மீண்டும் கண்களை மூடித்திறந்து, நீண்டப் பெருமூச்சிட்டுக் கொண்டவன், ஃபோனை at tern செய்து காதுக்குக் கொடுத்தான்.

எதிர்முனையிலிருத்து மௌனம் மட்டுமே இவனுக்கு பதிலாய்க் கிடைக்க, அதைக் களைக்கத் தோன்றாமல்! இவனும் மௌனம் காத்தான்.

சில நொடிகள் மௌனத்திலேயேக் கழிய, “பாஸ்...!” என்றவளின் அழைப்பு அவன் காதில் விழுந்தது.

“ம்...!” என்று மட்டும் இவன் பதில் கொடுக்க, மீண்டும் சின்ன மௌனம் அவளிடம்.

அவள் விடும் பெருமூச்சி சத்தம் இவனுக்குத் தெளிவாய்க் கேட்க,
“திருவனந்தபுரம் வரைக்கும் போக வேண்டிய situation! திடீர்னுதான் முடிவாச்சி! அதான் உங்கக்கிட்ட சொல்லிட்டு வர முடியல!” என்றாள் அவன் என்ன சொல்லுவான் என்ற படபடப்போடே.

அவனோ! “ம்ம்... புரியுது! பாத்து கவனமாப் போயிட்டு வா!” என்றவன்,
“வச்சிடவா...?” என்றுக் கேட்க,

அவளே அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அவள் கன்னங்களை நனைத்த, அவள் கண்ணீரின் சூட்டில்தான்! தான் அழுகிறேன் என்பதே தெரிந்தது அவளுக்கு.

அவனுக்கு வாய்த்திறந்து பதில் சொல்ல முடியாமல், அவள் இதழ்கள் அழுகையில் துடிக்க, “ம்ம்...!” என்று மட்டும் சொன்னவள், ஃபோனை வைத்துவிட்டாள்.

அவளைக் காயப்படுத்தி விடக்கூடாது! என தேவைக்கு அளவாய் பேசுவதாய் நினைத்து பேசிவனின் மனம், அவனையும் மீறி அவளிடம் எதையோ எதிர்பார்க்க, அவளது ஒற்றை “ம்ம்..!”-யில் உடைந்து போனதுதான் அவன் நெஞ்சம்.

அவனது உள்ளத்தை உடைத்த அதே எதிர்பார்ப்புத்தான்! மதியின் மனதையும் காயப்படுத்தியது.

அவன் கோபமாய் இருப்பான்! திட்டுவான்! என பயந்தாலும், திட்டிக்கொண்டாவது ஏதாவது பேசுவான்! என எதிர்பார்த்தவளுக்கு, அவனின் இந்த அன்னியத் தன்மை வலியைத்தான் கொடுத்தது.
நேற்றிரவிலிருந்து உண்டான அழுத்தமும், மனபாரமும் தீரும் மட்டும் அழுதவள்,

‘நான் ஏன் இப்படியெல்லாம் அழணும்! இதையெல்லாம் ஏன் அவர்கிட்ட எதிர் பார்க்கணும்! நான் அவரோட just roommate மட்டும்தானே! Relax மதி...! Relax…!’ எனத் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவள், கண்களைத் துடைத்துக் கொண்டு, இருக்கையில் நன்கு சாய்ந்தமர்ந்து, கண்களை மூடிக்கொண்டாள்.

இவர்கள் இருவரும் செய்வது ஒரே தவறைத்தான்! ஆனால் சின்ன வேறுபாடு!!!

இதில் ஒருவர், தன் மனதின் விருப்பத்தை மற்றொருவரிடமிருந்து மறைத்து, just roommate என்ற பொய் முலாமை பூசிக்கொண்டு, அந்த மற்றொருவரை ஏமாற்ற...! அந்த மற்றொருவர், தன் மனதின் விருப்பம் எதுவென முழுதாய் ஆராயாமல், just roommate மட்டும்தான்! எனத் தன்னையே ஏமாத்திக் கொண்டிருக்கிறார்.

காதலை எத்தனைக் காலம்தான் மறைத்து வைக்க முடியும்! இவர்களின் காதலும் வெளிப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.

மறுநாள் காலை எப்போதும்போல் விடிந்தது. ஆனால் தமிழுக்கு! வெறுமையாய்த்தான் புலர்ந்தது. ஆம்...! எப்போதும்போல் விடியற்காலையிலேயே விழித்தவனின் பார்வை! வெறுமையாய் இருந்த அவளின் படுக்கையில் விழ, கண்களை ஒருமுறை மூடித்திறந்தவன், எழுந்து சென்றுக் குளித்துவிட்டு, கிட்சனுள் நுழைந்தான். இவன் வரும் முன்னமே! கிட்சனில் உருட்டிக் கொண்டிருப்பவளின் சத்தம் இல்லாமல்! வெறுமையாய், இருட்டாய் இருந்த அந்த அறையின் light-யை போட்டான்.

அவள் இல்லாத அந்த அறையைக் காண விரும்பாத அவன் கண்களை ஒருமுறை மூடித்திறந்தவன், அடுப்பின் அருகில் சென்றான்! தன் வயிற்றிற்க்கு தேவையான வேலையை கவனிக்க.

அன்று முழுவதும் அவன் செய்த ஒவ்வொரு செயலிலும், அவன் கண்ட ஒவ்வொரு காட்சியிலும் அவள் தான் அவன் நினைவிற்க்கு வந்தாள்.

சாலையில் அவனைக் கடந்து, ஸ்கூட்டியில் செல்லும் பெண்ணைப் பார்க்கும்போது, அன்று அவளுடனான அந்த பைக் பயணம்தான் நியாபகம் வந்தது.

ஓடும் பேருந்து, டீ கிளாஸ், வெங்காய போண்டா வாசம், மழலையின் சிரிப்பு, ரோட்டோரம் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருக்கும் அம்மா, கறிக்கடை, கடைத்தெரு என இன்னும் இன்னும் நிறைய, இவ்வளவு ஏன்! இவை அனைத்தையும் கடந்து லேபிற்க்கு வந்தவன் காதில், patient ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த சுஜியின் குரல் கேட்க, ‘நேற்று மதி! இவளிடம் கொடுத்துத் தானே உணவைத் தன்னிடம் கொடுக்க சொன்னால்’ என அப்போதும் அவன் மனம் மதியைத்தான் நினைத்தது. தன் தோளில் கிடந்தப் பையைக் கழற்றி தன்னிடத்தில் வைத்தவன், restroom உள்ளே நுழைந்துக் கொண்டான்.

தண்ணீரால் முகத்தை அடித்துக் கழுவியவன், நிமிர்ந்து தன் முன்னே இருந்த கண்ணாடியைப் பார்க்க, அதில் அவனுக்கு பதில்! அவள்தான் தெரிந்தாள்.

இன்று நாள் முழுவதும், அவள்! இவன் நினைவில் வந்த ஒவ்வொரு முறையும்! ‘அவ என்னோட just roommate மட்டும்தான்! அவ என்னோட just roommate மட்டும்தான்!’ எனத் தனக்குள்ளே உறுப்போட்டுக் கொண்டவன், இப்போதும் அதையேத்தான் செய்தான். ஆம்! அவள் நினைவுகள் அவனைத் துரத்திய ஒவ்வொரு முறையும், கண்களை மூடித்திறந்தவன்! தனக்குள் சொல்லிக் கொண்டது இதைத்தான். ‘அவ என்னோட just roommate மட்டும்தான்!’.

கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டவன், கைகளால் கோதி சிகையை சரி செய்துக்கொண்டான். அதன்பின் தன் வேலையை கவனித்தவனை, பலமுறை அவள் நினைவுகள் வந்து தொல்லை செய்தாலும், அவன் தனக்குள் உறுபோடும் அந்த வார்த்தையால் விரட்டி விட்டான்.

சரியாக இரண்டு மணிநேரம் கடந்திருக்கும். அவளை மறந்து, தமிழ் தன் வேலையில் மூழ்கத் தொடங்கிய சமயம்! System முன் இருந்த அவன் ஃபோன்! அலறி அவனை அழைக்க, அதன் திரையில் தெரிந்த நம்பரை கண்டவனின் இதழ்கடையில் சின்னப் புன்னகைத் தோன்ற, ஃபோனை அட்டெர்ன் செய்துக் காதுக்குக் கொடுத்தவன், எதிர் முனையிலிருந்து வந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்துப் போனான்.

அன்று காலை! மதி வீட்டில் நெருங்கிய சொந்தம் ஒருவரின் மகள் திருமணத்திற்காக, திருச்சிக்கு செல்லவெனக் கிளம்பிக் கொண்டிருந்தனர் மலரும், கீதனும்.

செழியனுக்கு இன்று ஆபிஸில் முக்கியமான மீட்டிங் ஒன்று இருப்பதால், leave எடுக்க முடியாது என்று சொல்லிவிட, அவரைத் தவிர மற்ற நால்வரும் திருச்சிக்குக் கிளம்புவதாய்த்தான் பிளான். ஆனால்! கடைசி நேரத்தில் சிதம்பரம், ‘உடம்பு ஏனோ அசதியாய் இருப்பதாகவும்! தான் வரவில்லை! வீட்டில் ரெஸ்ட் எடுப்பதாகச் சொல்லிவிட,

அவர் வேண்டாம் என எவ்வளவு மறுத்தும் கேளாமல் வேணியும்! தானும் திருமணத்திற்க்கு செல்லவில்லை என்றும்! அவருடனே வீட்டிலேயே இருப்பதாய் சொல்லிவிட,

“அட இப்ப போனா! Night வந்திட போறீங்க! அதுவரைக்கும் தனியா என்னால இருக்க முடியாதா? போயிட்டுவாம்மா!” என எவ்வளவு சொல்லியும் வேணி கேட்கவில்லை. பிடிவாதமாய் இருந்துவிட, கீதனும், மலரும் மட்டும் கிளம்பினர்.

“தாத்தா ஒன்னு பிரச்சன இல்லயே! ஏதும் முடியலனா சொல்லுங்க தாத்தா hospital போயிட்டு வந்திடலாம்!” என இதோடு முப்பதாவது முறையாய்க் கேட்டுவிட்டான் கீதன்.

“டேய் விட்டா நீயே hospital-ல போய் படுக்க வச்சிருவ போலயே! நான் நல்லாதான் இருக்கேன்! இப்போ உன் கண்ணு முன்னாடித் தானே pressure மாத்திரப் போட்டேன். கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரிச்சா எல்லா சரி ஆயிரும்!” என அவனை சாமாதனப் படுத்தி, அவர்களை வழியனுப்பி வைத்தவர், வேணியிடம் சொல்லிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றுப் படுத்துக் கொண்டார்.

அவர் நன்கு ஆழ்ந்துத் தூங்கிக் கொண்டிருக்க, படார்...! எனக் கேட்ட சத்தத்தில், படக்கென விழித்துக் கொண்டவர், வேகமாய் எழுந்தமர்ந்தபடி,
“வேணி...!” என அழைக்க, அவருக்கு பதில் வரவில்லை!!!

அவசமாய் எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தவர், “வேணி...! வேணி...!” என அழைத்தபடி வீடு முழுவதும் தேட, வேணி அங்கு எங்கேயும் இல்லை. முன்வாசல் கதவு சாத்தப்பட்டிருக்க, வேகமாய்த் துடித்த இதயத்தைப் பிடித்தபடி, புறவாசல் பக்கமாய் ஓடியவர், அங்குக் கண்டக் காட்சியில் “வேணி...!” என அலறியே விட்டார்.

அவர்கள் வீட்டில் பாத்திரம் கழுவவென சமையலறையில் சின்கெல்லாம் இருக்காது. வீட்டின் பின்புறம் அதற்கென ஒதுக்கிய இடத்தில், கழுவ வேண்டிய பாத்திரம் அனைத்தையும் மொத்தமாய் எடுத்துவந்துப் போட்டு, கீழே அமர்ந்துதான் விழக்கிக் கழுவுவார்கள். பாத்திரம் கழுவி முடித்தபின், அந்த இடத்தை நன்கு தேயித்துக் கழுவி விடுவார்கள்.

எப்போதும்போல கழுவவேண்டிய பாத்திரம் அனைத்தையும், எடுத்துப் போட்டு கழுவிக்கொண்டிருந்த வேணிக்கு, மனம் பாரமாய் இருந்தது. அவர் நினைவெல்லாம் தன் கணவரைச் சுற்றித்தான் வந்தது. இப்போதெல்லாம் சிதம்பரம் சற்று சோர்ந்துப்போய் அமர்ந்தால்கூட, மனம் படபடத்தது வேணிக்கு.

சமீபத்தில் சிதம்பரத்தின் நண்பர் ஒருவர் தவறிவிட, அவர் இறப்பிற்க்கு சென்று வந்ததிலிருந்து வேணியின் மனதினுள் ஒரு அழுத்தம். இறந்த அவரது உடலை, அவர் மனைவி கட்டிக் கொண்டுக் கதறியதைப் பார்த்ததிலிருந்து ஒரு பயம்.

தன் கணவருக்கு முன்னால் தான் இறந்துவிட்டால்! அவர் என்ன ஆவார்! நினைக்கவே பயமாக இருந்தது வேணிக்கு. அன்பான மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் என எல்லோரும் அவருடன் இருந்தாலும்! என்னிடத்தை நிரப்ப முடியுமா??? என்னைப்போல் வருமா...???

அதேபோல், எனக்கு முன்னால் அவர்...!!!

அதற்குமேல் நினைக்க முடியாமல், உடல் நடுங்கியது வேணிக்கு. ‘கடவுளே அப்படி ஒரு நிலைய நெனச்சிக்கூட பாக்க முடியாது என்னால!’ என அரற்றியது அவர் நெஞ்சம்.

மனித மனம் ஒரு குரங்கு அல்லவா!!!

எதை நாம் நினைக்கக் கூடாது! எது நம் எண்ணத்தை நிறைக்கக் கூடாது! என ஒதுக்க நினைக்கிறோமோ! அதைத்தான் இந்த மனம் திரும்பத் திரும்ப நினைவூட்டும்.

நம் மனதை அரிக்கும் அந்த விஷயத்தை யாரிடமாவது(நமக்கு நம்பிக்கையான யாரிடமாவது!) சொல்லிவிட்டால்கூட, மனம் சற்று சமாதானமாகி, அந்த பொல்லாத நினைவிலிருந்து வெளிவர முயலும்.

வேணிக்கு அதற்கும் இப்போது வழியில்லை. மலரிடமும், செழியனிடமும் நன்றாக பேசினாலும்கூட, மதி, கீதன் அளவிற்கு நெருக்கமில்லை இவருக்கு.

மதி, இவரிடம் ஃபோனில் அழைத்துப் பேசுகிறாள் தான்! ஆனால், தமிழின் காலில் அடிப்பட்டது! அவனுக்கு துணையாக இருந்தது! அவளின் வேலைப்பளு! இப்போது training கொடுக்கவென சென்றிருப்பது! என busy-யாக ஓடிக்கொண்டிருப்பவளிடம், நிதானமாய்த் தன் மனதில் உள்ளதைப் பேச முடியவில்லை இவரால். கீதனும் இந்த ஒரு வாரமாக, client visit இருப்பதாகச் சொல்லி, அவன் கம்பெனியிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்துவிட, அவனிடமும் மனம்விட்டு பேச முடியவில்லை வேணியால்.

‘ஏம்மா...! மனம்விட்டு பேச இவங்களையெல்லாம் ஏன் தேடணும் வேணி? அவங்க கணவர்கிட்டயே பேசலாம்தானே!!!’ என என்னிடம் நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது எனக்கு!!!

சொல்லப்போனால் இதை அவரிடம் சொல்வதுதான் சரியாக இருக்கும்! அவரது வார்த்தைகள்தான், வேணியை ஆறுதல்படுத்தும்! அவரது மடிதான்! வேணியையும், அவர் மனதையும் அமைதிப்படுத்தும்.

சொல்லியிருப்பார்தான்....! ஆம் சொல்லியிருப்பார்தான்! மதியின் திருமணத்தால் இவர்களுக்குள் உண்டான அந்த விரிசல் மட்டும் விழாமல் இருந்திருந்தால்!!!

கை அதன்பாட்டிற்க்கு தன் வேலையை செய்ய, அவர் மனமோ...! கண்டதையும் நினைத்துக் கலங்கித் தவித்தது.

கழுவியப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே செல்லத் திரும்பியவர், பாத்திரம் கழுவிய சோப்பை அதனிடத்தில் எடுத்து வைக்காமல் மறந்துவிட, அது அங்கேயே இருப்பதை கவனிக்காமல், அதிலேயேக் காலை வைத்தவர், கால் வழுக்கி கையில் இருந்த பாத்திரத்துடன் அப்படியே மல்லாக்காக கீழே விழுந்துவிட்டார்.

அவர் சிதம்பரத்தை திருமணம் முடித்துவந்ததிலிருந்து, இத்தனை வருடங்களாக! இந்த வேலையை இப்படித்தான் செய்கிறார். அவருடைய எண்ணம் எங்கோ இருந்தாலும்! அவரது புலன்கள், அவருக்கு நன்கு பழக்கப்பட்ட இந்த வேலையை, அதனதன்பாட்டிற்க்கு செய்திருக்கும்தான்! ஆனால் எல்லா நேரமும் இது சாத்தியப்படுவதில்லையே...!!!

அந்தத் தனியார் மருத்துவமனையின், அவசர சிகிச்சைப் பிரிவில்! வேணியை டாக்டர்கள் பரிசோதித்துக் கொண்டிருந்த, அந்த அறையின் வெளியே! தன் நெஞ்சிக்குழிக்கிடையில், ஒன்றாய் கூப்பி இருந்த கரங்கள் இரண்டும் நடுங்க, அந்த அறைக் கதவையே பார்த்தபடி நின்றிருந்தார் சிதம்பரம்.

அவரைத் தோளோடு அணைத்துப் பிடித்தத் தமிழ்!

“தாத்தா ஆத்தாக்கு ஒன்னும் ஆகாது! நீங்க பயப்படாம தைரியமா இருங்க!” என்றவனுக்கு பதில் சொல்லாமல் இருந்தவரின் பார்வை, இப்போதும் அந்த அறைக் கதவையே வெறித்தபடி இருக்க, அவரைக் கைத்தாங்களாக அழைத்து வந்து அங்கிருந்த இருக்கையில் அமரவைத்தான் தமிழ்.

வேணியைத் தேடிக் கொண்டு புறவாசல் பக்கம் சென்ற சிதம்பரம்! தரையில் மல்லாக்காக விழுந்து, மயங்கிக் கிடந்த வேணியைப் பார்த்து பதறிப் போனார்.

“வே....ணி...!” என அலறியபடி, அவர் அருகில் ஓடி வந்தவர், தன் மனைவியின் தலையை! தன் மடியில் ஏந்திக் கொண்டார்.

“வேணி....! வேணி...!” என அவர் கன்னத்தைத் தட்டி, அவரை எழுப்ப முயற்சிக்க, அசைவே இல்லை அவரிடம்.

அருகில் இருந்த வாலியிலிருந்து, தண்ணீரை அள்ளி வேணியின் முகத்தில் தெளித்த சிதம்பரத்தின் கை நடுங்கியது.

அப்போதும் வேணியிடம் எந்த அசைவும் இல்லாமலிருக்க, அடுத்து என்ன செய்ய வேண்டுமென மூளை எடுத்துச் சொன்னாலும், அதை செய்யத் தடையாய் உடல் நடுங்கி பலவீணப் படுத்தியது அவரை.

அவர் மடியில் மூர்ச்சையாய்க் கிடக்கும் தன் மனைவியை காப்பாற்றுவது மட்டுமே அந்த முதியவரின் நினைவில் நிற்க, தன்னுடல் நடுக்கத்தைக் கண்டுக்கொள்ளாமல், தன் பலம் கொண்டமட்டும் முயன்று, வேணியை மெல்ல நகர்த்திக் கொண்டுவந்து, ஈரம் இல்லாத இடத்தில் படுக்கவைத்தவர், நடுங்கும் உடலைத் தூக்கிக்கொண்டு முன்வாசல் பக்கமாய் ஓடினார் சிதம்பரம்.

வாசல் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே ஓடிவந்தவரின் பார்வை, முதலில் பட்டது என்னவோ! பூட்டியிருந்த எதிர்வீட்டில்தான்.

இன்று அதிகாலையில்தான்! மோகனும், அவன் தந்தையும் பெங்களூருக்குக் கிளம்பியிருக்க, அவன் தாயும்! அதே ஊரில் சற்றுத் தள்ளியிருக்கும் அவர் அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.

அந்த முற்பகல் நேரத்தில், ஆள் அரவமின்றி தெருவே அமைதியாக இருக்க, வேகமாய்த் துடித்த இதயத்தைத் தட்டிக் கொடுத்தவர், கொஞ்சமும் தாமதிக்காமல், கேட்டைத்திறந்துக் கொண்டு வாசலுக்கு ஓடினார்.

அவர்களது தெருவைக் கடந்து, அடுத்தத் தெருவிற்கு செல்லும் சாலைக்கு ஓடிவந்தவர், பார்வையை நாலாப்புறமும் சுழலவிட, அந்த சாலையில் தூரத்தில் வந்துக் கொண்டிருந்த ஒரு பைக் அவர் கண்ணில் பட, அது வரும் திசையில் கையசைத்தபடி நின்றிருந்தார் சிதம்பரம்.

அவர் அருகில் வந்து பைக்கை நிறுத்திய அந்த இளைஞர், “என்னாச்சிங்தாத்தா...?” எனக் கேட்க,

குரல் நடுங்க, வாய் குளற! தன் மனைவியின் நிலையை சொன்னவருடன் ஓடி வந்த அந்த இளைஞர், வேணியைத் தூக்கிவந்து கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, ஆம்புலன்ஸிற்க்கு ஃபோன் செய்தார்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள் இருந்த அந்த சின்ன இடைவெளியில், “வீட்டுல நீங்க ரெண்டுபேர் மட்டும்தான் இருக்கீங்களா...? உங்கக் கூட இருக்குறவங்க நம்பர் இருக்கா...?” என அந்த இளைஞர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், நடுங்கும் குரலை சமன்செய்தபடி சொன்ன சிதம்பரத்தின் ஃபோனை எடுத்துவந்த அந்த இளைஞரிடம், தமிழ் என save செய்திருக்கும் நம்பருக்கு ஃபோன் பண்ண சொன்னார் சிதம்பரம்.

அந்த அவசர சிகிச்சைப் பிரிவின் உள்அறைக்கு, வேணியை அழைத்து செல்லவும், தமிழ் அங்கே வந்து சேரவும் சரியாக இருந்தது.

ஆம்புலன்ஸில் அவர்களை ஏற்றிவிட்டதோடு, தன் கடமை முடிந்ததென ஒதுங்கிவிடாமல்,

நடுங்கும் உடலும், பறிதவிக்கும் விழிகளுமாய் தன் மனைவியின் கையை பிடித்தபடி, ஆம்புலன்ஸில் அமர்ந்திருக்கும் அந்த முதியவரை, அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட தோன்றவில்லை அந்த இளைஞருக்கு.

சிதம்பரத்திற்க்குத் துணையாக, அவருடனே hospital வரைக்கும் வந்த அந்த இளைஞர்! யார், எவரென்று முன்பின் கூட தெரியாத அந்த இளைஞர்! தமிழ் வந்தவுடன், அவனிடம் சொல்லிவிட்டு, எந்தத் தேவையென்றாலும் தனக்கு அழைக்கும்படி அவன் ஃபோன் நம்பரையும் கொடுத்துவிட்டு, கிளம்பப் போனவனைக் கையெடுத்துக் கும்பிட்டார் சிதம்பரம்.

அவர் கூப்பியக் கையைத் தன் கரங்களால் மூடி, இறக்கிவிட்டவன், “தைரியமா இருங்க! பாட்டிக்கு ஒன்னும் ஆகாது...!” என்றான்.
விவரம் அறிந்த செழியனும் அடித்துப் பிடித்து hospitalக்கு ஓடிவர, அதுவரைப் பிரம்மைப் பிடித்தவர் போல், வேணி இருக்கும் அந்த அறையையே வெறித்திருந்தவரின் கண்கள், செழியனைக் கண்டதும்! மடைத்திறந்து மலமலவெனக் கண்ணீர் சிந்தியது. சட்டென தன் மாமனாரை நெருங்கி, அவரை அப்படியேத் தன் வயிற்றோடுக் கட்டிக் கொண்ட செழியனின் விழிகளையும் கண்ணீர் நிறைத்தது.

கலங்கி நின்றவரின் தோளை ஆதரவாய்த் தொட்ட தன் மருமகனைத் திரும்பிப் பார்த்த செழியனின் கரங்கள், தான் அணைத்திருந்த தன் மாமனாரின் முதுகை ஆறுதலாய்த் தடவிக் கொடுத்தது.

சிதம்பரத்தை சமாதானப்படுத்தி, தன்னையும் சற்று நிலைப்படுத்திக் கொண்ட செழியன், தமிழைத் தனியே அழைத்து,

“டாக்டர் என்ன சொன்னாங்க...?” எனக் கேட்க,

“CT, MRI எல்லாம் எடுத்து பாத்துட்டாங்க! Brain and Skull-ல எந்தப் பிரச்சனையும் இல்ல...! வெளியில தான் சின்னதா blood clot ஆயிருக்கு!” என்றவனை பார்த்திருந்த செழியனின் கண்ணில் தோன்றியப் பயத்தைக் கண்டுக் கொண்ட தமிழ்,

“அதையும் மருந்துலயே சரி பண்ணிடலாம்னு சொல்லிட்டாங்க! பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லங்மாமா! ஆத்தா நல்லா இருக்காங்க! இப்போ மயக்கத்துல இருக்காங்க அவ்வளவுதான்! இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிரும்! தைரிதமா இருங்க!” என்றார் செழியனின் கரத்தைப் பிடித்து.

தன் கரம் பிடித்திருந்த, அவன் கரத்தைத் தன் மறுகரம் கொண்டு அணைத்துப் பிடித்தவர், கண்களை மூடி நீண்ட பெருமூச்சிட்டுக் கொண்டார்.

வேணி விழித்திறக்கவென, வெளியே அவருக்காகக் காத்திருந்த மூவருக்கும், டீ வாங்கி வந்தான் தமிழ்.

வேண்டவே...! வேண்டாம்! என அடம்பிடித்த சிதம்பரத்தை சமாதானப்படுத்திக் குடிக்கவைத்தார் செழியன். சிதம்பரத்தின் அருகில் செழியன் அமர்ந்திருக்க, அவர் அருகில் அமர்ந்திருந்த தமிழ்!

“மாமா...! அத்த, கீதன்கிட்ட விஷயத்த சொல்லிட்டீங்களா?” என கேட்டான்.

“இல்லை தமிழ்! இப்போ இத சொன்னம்னா! என்னவோ ஏதோன்னு பயந்து, பதறிப் போய் அடிச்சிப் பிடிச்சி ஓடிவருவாங்க! அவங்களே இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருந்து கிளம்பிருவாங்க! இத நாம சொன்னாலும், சொல்லாட்டியும் எப்படியும் நைட் வந்து சேந்துருவாங்கத்தான். இதுல இத சொல்லி ஏன் பயமுறுத்தி, பதற வைக்கணும்! வரட்டும், கோயம்புத்தூர் reach ஆனதும் சொல்லிக்கலாம்!” என்றவர் சொன்னதும் சரியெனத் தோன்ற,

“ஓகே மாமா!” என்றவனிடம்,

“அப்பா அம்மாக்கிட்ட சொன்னீங்களா?” எனக் கேட்டார் செழியன்.

“ம்ம் சொல்லிட்டேங்மாமா! ரெண்டுப் பேரும் வந்துட்டு இருக்காங்க!” என்றவன்,

“ம…திக்கிட்ட...!!!” என இழுக்க,

“சொல்லிட்டீங்களா...?” என அவசரமாய்க் கேட்டார் செழியன்.

“இன்னும் இல்லங்மாமா...! அவக்கிட்ட எப்படி சொல்றதுன்னுத் தெரியல! அதான்” என்றவன் கைகளைப் பிசைய,

தொலைவாய், தனியாய் இருக்கும் அவளிடம் இதைச் சொன்னால்! என்ன செய்வாளோ...! ஏது செய்வாளோ...! என அவன் மனம் பதறுவது செழியனுக்குப் புரிய,

அவன் தோளைத் தட்டிக் கொடுத்தவர், “நான் மதிக்கிட்ட சொல்லிக்கிறேன் தமிழ்! நீங்கக் கவலைப்படாதீங்க!” என்றார்.

அவளிடம், இவர் பேசுவதுதான் சரியாக இருக்குமெனத் தமிழுக்கும் தோன்ற, சரி எனத் தலையசைத்தான்.

வேணி இருந்த அறையிலிருந்து, வெளியே வந்த நர்ஸ் ஒருவர் இவர்களை நோக்கி வர,

“பேஷன்ட் கண் முழிச்சிட்டாங்க...! அவங்கள ரொம்ப disturb பண்ணிடாம போய்ப் பாருங்க...!” என்ற சிஸ்டருக்கு, தமிழும், செழியனும் நன்றி சொல்லிவிட்டு திரும்புவதற்குள், அந்த அறைக் கதவைத் திறந்திருந்தார் சிதம்பரம்.-மடி சாய்வான்-
 
KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
வழுக்கி விழனும்னே வயசானவங்களை வச்சிருப்பாங்க போலயே 🤣🤣🤣🤣


நல்ல இருக்கு சிஸ்டர் அப்டேட் 👍🏼👍🏼👍🏼👍🏼

இந்நேரத்துக்கு கிளம்பி போய் அவளை கூட்டிட்டு வந்திருக்க வேணாமாடா 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️
 
Saranya shanmuganathan

மண்டலாதிபதி
Author
Joined
May 30, 2023
Messages
174
Reaction score
208
Location
Coimbatore
வழுக்கி விழனும்னே வயசானவங்களை வச்சிருப்பாங்க போலயே 🤣🤣🤣🤣


நல்ல இருக்கு சிஸ்டர் அப்டேட் 👍🏼👍🏼👍🏼👍🏼

இந்நேரத்துக்கு கிளம்பி போய் அவளை கூட்டிட்டு வந்திருக்க வேணாமாடா 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top