• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மதுரை___ கோவலன் பொட்டல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
"மதுரை பாண்டிய குடும்பர்களின், ஓர் நெஞ்சை உலுக்கும் வரலாறு!!!

கோவலன்_பொட்டல்
தேவேந்திரகுல வேளாளர்களின் இடுகாடு பழங்காநத்தம், மதுரை.......

“புலிகளின் வரலாற்றை, புலிகளே எழுதாதவரை, வேட்டையாடிவர்களின் வரலாறே பெரிதாய் பேசப்படும்” - ஆப்பரிக்க பழமொழி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் முக்கிய சாலையில் 4 கி.மீ. தொலைவில் கோவலன் பொட்டல் இருக்கிறது. இப்பொட்டல் 2000 வருடங்களுக்கு முந்தியது என்பதை இவ்வுலகமே அறியும். என்னடா இடுகாட்டில் என்ன விசயமிருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆம் இருக்கிறது “இன்று நான், நாளை நீ” என்று எழுதப்பட்டிருக்கும் எழுத்தின் பின்னால் கோடி வரலாறுகள் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டிருக்கிறது

பழங்காநத்தத்தில் உள்ள “கோவலன் பொட்டல்” என அழைக்கப்படுகின்ற “பாண்டியர் இடுகாடு” உண்மை வரலாற்றை உணர்த்துவதற்குத் தடம் பிடித்து காட்டும் தரவாக விளங்குகிறது. கே.ஆர்.அனுமந்தன் போன்ற வரலாற்று அறிஞர்களால் கூறப்படும் பழங்காநத்தில் உள்ள “பாண்டியர் இடுகாடு” என்பது இன்று குடும்பர்களின்/பள்ளர்களின் இடுகாடாக இருக்கின்றது. அந்த இடத்தில் “தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட மயானம்” இன்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே ஒரு குலத்திற்கான இடுகாட்டை வேறொரு குலத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்துவது இல்லை. இது தமிழரின் மரபு வழக்காறகவே இருந்து வருகிறது.

பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனை சிறைபடுத்தி மரண தண்டனை வழங்கி கொன்றதால் கோவலனின் உடல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் பாண்டியர்கள் தங்களின் இடுகாட்டிலேயே அடக்கம் செய்து விட்டதாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே “பாண்டியர் இடுகாடு” “கோவலன் பொட்டல்” என்று அழைக்கப்பட்டுகிறது. இந்த வரலாற்றின் அடிப்படையில் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோவில் கட்டுவதாக கூறி மு.கருணாநிதி தலைமையிலான அரசு பலமுறை முயற்சித்தும், அம்முயற்சியினை நம்மக்கள் முறியடித்துவிட்டனர். இம்மரபு வழிச் செய்திகளையும், நடப்பியியல்புகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது குடும்பர்களே / பள்ளர்களே பாண்டியர் மரபினர்கள் என்னும் வரலாறு உறுதி செய்கிறது.

இடுகாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் வடக்குப் பார்த்துக் கோவலனுக்கும் கண்ணகிக்கும் கோவில் கட்டியிருக்கின்றனர். உருவமில்லாமல் கல் பீடமாக வைத்து வழிபட்டு வருகின்றனர். இவ்வழிபாடனது அன்றுமுதல் இன்றுவரை நடைபெற்றுவருவது வியக்கத்தக்கது. கோவலனின் மரபினர்கள் இன்றைக்கும் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் பழனி மலைக்குப் பக்கத்திலுள்ள ஊர்களில் வசித்து வருவதாகவும் வருடம் ஒரு முறை கோவலனைத் தங்கள் குலதெய்வமாக எண்ணி மயானத்திற்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

பழங்காநத்தம் குடும்பர்கள் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பௌர்ணமி இரவு கோவலன் பொட்டல் இடுகாட்டிலுள்ள குழிமேட்டிற்கு வந்து தங்களுடைய மூதாதையர்களின் சமாதியை அலங்கரித்துப் பொங்கல் வைத்து வழிபட்டு வந்திருக்கின்றனர், கடந்த 5 வருடமாக இந்நிகழ்வானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

1980ம் ஆண்டில் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற சமயத்தில் தொல்லியல் துறை கோவலன் பொட்டலை ஆய்வு செய்திருக்கிறார்கள். மயானத்தின் தெற்குப் பக்கம் பூமியின் கீழே தோண்டும் போது முதுமக்கள் தாழிகள், மண் கலயங்கள், ரோமானிய பாசிகள், இரும்பு, பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள், செம்புக் காசுகள், வளவளப்பான பானைகள், ஓவியம் வரைந்த ஓடுகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன. அப்படிக் கிடைத்த போதும் கூட மேலும் ஆய்வை மேற்கொள்ளாமல் நிறுத்திவிட்டனர். ஆராய்ச்சியின் போது கிடைத்தவற்றில் ஒரு சில மண் குடுவைகளை மட்டும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைத்திருக்கின்றனர். மகாலுக்கு சென்றால் நீங்களும் அதைப் பார்க்கலாம்.

கோவலன் பொட்டலின் ஒரு பகுதியில் ஊரணி ஒன்று இருக்கிறது. இது பள்ளர் ஊரணி என்றே அரசு ஆவணங்களில் பதியப்பட்டிருக்கிறது. ஊரணியின் உள்-மேற்குபக்கம் அரசு நீரேற்றும் நிலையம் ஒன்றைக் கட்டி வைத்துவிட்டது. வடக்குப் பகுதியில் புதிதாக ஒரு மேம்பாலப் பணிக்கு சிறிது இடத்தை எடுத்துக்கொண்டனர்.

பழங்காநத்தம்- பாண்டிய மன்னர்களின் ஒரு பட்டம் “பழையர்” என்பதாகும். ஆக இதன் அடிப்படையில் பார்த்தால் இவ்விடம் “பழையர் நத்தம்” என்றிருந்து காலப்போக்கில் பேச்சு வழக்கில் பழையர் நத்தம் “பழங்காநத்தம்” ஆகியிருக்கலாம்.

இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவலன் பொட்டல் இன்றிருக்கும் நிலைமை படுமோசம்...

குடும்பர்களின்/பள்ளர்களின் வரலாற்றை அழிக்கிறேன் என்று எண்ணிக்கொண்ட மடையர்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் வரலாற்றை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், அதை சக தமிழனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்!!

பிடித்ததை பகிர்ந்தேன்!!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top